Loading

அத்தியாயம் – 38

 

“இஸ்கு” “இஸ்கு” என வந்த முனகல் சப்தத்தில் மெல்ல மெல்ல மயக்கம் தெளிந்த வர்ஷூவிற்கு தான் எங்கிருக்கிறோம் என்றே ஒரு நிமிடம் தெரியவில்லை.

 

பின் தான் வீட்டை விட்டு கிளம்பியது, அதன் பின் எந்த பன்னாடையோ ஒரு பாழாய் போன சாக்ஸை வைத்து தன்னை கொல்லப் பார்த்தது நினைவில் வர, இது என்ன இடம் “இஸ்கு” “இஸ்கு”னுலாம் கேட்குது , ஒருவேளை அந்த முண்டம் என்னை கொன்னதுல எனக்கு முக்தி கிடைச்சு சொர்க்கத்துக்கு வந்துட்டேனோ என வாய்விட்டே புலம்ப,

 

அருகில் இருந்த ஸ்ரீக்கு ‘இவள் தலையில் கல்லைப் போட்டு கொன்றால் என்ன என்று தோன்றியது’.

 

பின் தான் அந்த இடத்தை ஆராய்ந்த வர்ஷூ தன் பார்வையை சுழலவிட, தனக்கு அருகில் இருந்த ஸ்ரீயைக் கண்டு ஆனந்தமாக அதிர்ந்தாள்.

 

வர்ஷூவைக் கட்டி வைத்த பி.ஏ அவசரத்திற்கு கயிறு இல்லாமல் அங்கிருந்த ஒரு இத்துப்போன துணியை எடுத்து கையை மட்டும் கட்டி வைத்திருந்தான்.அவளிற்கு வாயும் காலும் ஃப்ரீயாக தான் இருந்தது.

 

எனவே “ஸ்ரீ குட்டி” என சந்தோஷத்தில் கூச்சலிட ,

 

“ஷ் ஷ்” என ஸ்ரீ மூடியிருந்த வாய்க்குள் இருந்து முனகினாள்.

 

“நீ எப்படி டி இங்க வந்த..ஆமா நான் எப்படி டி இங்க வந்தேன் எனக்கு ஒன்னுமே புரியலையே ஐஸ்க்ரீம் தான உன்னை சந்து வாங்கிட்டு வர சொன்னா நீ என்னடான்னா எங்க கூட ஐஸ்பாய் விளையாண்டுட்டு இருக்க எல்லாரும் எப்படி பயந்துட்டோம் தெரியுமா .. என்னையை தேடிட்டு இருக்க சொட்டை மண்டை தான் உன்னை கடத்திருச்சுன்னு நான் கில்டியா ஃபீல் பண்ணி வீட்டை விட்டே வந்துட்டேன் தெரியுமா??? இந்நேரம் அந்த குரங்கு கார்த்திக் நிம்மதியா இருப்பான் ..ஆனா ஹரி மாமா பாவம் தெரியுமா ” என்று செய்தி வாசிப்பவள் போல் நிறுத்தாமல் பேசிக் கொண்டே போக, அப்போது தான் ஸ்ரீயிடம் இருந்து பதிலில்லை என உணர்ந்தாள்.

 

அவள் வாய் கட்டியிருந்தாலும் அவள் பேசப் போராடுவதை உணர்ந்து கொண்ட வர்ஷூ வேகமாக எழ, அதற்கே பொறுக்கமாட்டாமல் அவளின் கையைக் கட்டியிருந்த அந்த இத்துப்போன துணி அவள் கையோடே வந்துவிட்டது.

 

அதைக் கண்டு வர்ஷூவிற்கே சிரிப்பு வந்துவிட்டது .

 

“நல்லா கடத்துனான் போ..அவன் அந்த நாத்தம் பிடிச்ச சாக்ஸை யூஸ் பண்ணும் போதே தெரியும் எவனோ சோத்துக்கு செத்தவன் தான் கடத்திருக்கான்னு.. இப்போ பாரு கயிரு வாங்க கூட அந்த கஞ்சூஸ்க்கு காசு இல்லாம கந்தல் துணியில கட்டி வச்சுட்டு போய்ருக்கு” என சிரித்துக் கொண்டே கூறியவள் ஸ்ரீயின் கட்டுகளை விடுவித்தாள்.

 

வாய்ப்பூட்டு அவிழ்ந்ததும் ஸ்ரீ வர்ஷூவை திட்டித் தீர்த்து விட்டாள் ,”ஹேய் மென்டல் எதுக்கு டி வீட்டுல இருந்து ஓடி வந்த?? உனக்கு அறிவே இல்லையா?? என் மாமன் மகன் பாவம் உன்னை வச்சுக்கிட்டு.. அவன் உன்னை எவ்ளோ லவ் பண்றான் , இப்போ நிம்மதியா இருப்பான்னு சொல்ற..தத்தி தத்தி என் கூட சேருறது எல்லாம் என்னை மாதிரியே லூசா இருக்கு..” என ஸ்ரீ திட்டிக் கொண்டே போக,

 

“ஓவரா தான் திட்டாத டி.. உன் கொழுந்தனாரு என்னை லவ் பண்றேன்னு உன்கிட்ட சொன்னானாக்கும் ம்க்கும்” என அவள் சலித்துக் கொள்ள,

 

“அடியேய் இதெல்லாம் ஓவரா இல்லை..அவன் உன்னை பார்த்து விடுற ஜொல்லுலயே உனக்கு தெரியலையா அவன் உன்னை எவ்ளோ லவ் பண்றான்னு.. உன்னை தவிர ஊருக்கே தெரியும் அவன் உன்னை லவ் பண்றது” என ஸ்ரீ கடுப்புடன் மொழிந்தாள்.

 

“ஆமா நீதான் மெச்சிக்கனும் அவனை..இன்னும் ஒரு நாளாச்சும் என் கிட்ட ஐ லவ் யூன்னு சொல்லிருப்பானா??” எனக் கேட்க, அவள் மனசாட்சியோ ,”அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட்ல சொன்னானே டி” என இடித்துரைத்தது.அதை சட்டை செய்யாதவள் மீண்டும் ஸ்ரீயுடன் முறுக்கிக் கொண்டு நிற்க,

 

“இதெல்லாம் ஒரு ரீசனா.. ஹரி பக்கி கூட தான் பல வருஷமா என்கிட்ட லவ்வை சொல்லாம சுத்தவிட்டுச்சு..ஆனா அவன் லவ் பண்றதை நான் தெரிஞ்சிக்கலையா” என ஸ்ரீ பாயின்டைப் பிடிக்க,

 

சற்று யோசித்த வர்ஷூ ,”இல்லை ஸ்ரீ அவன் என்கிட்ட லவ் பண்றேன்னு ஓரே ஒரு முறை சொன்னான், ஆனா அடுத்து அவன் நடந்துகிட்டதுக்கும் அவன் சொன்னதுக்கும் சம்பந்தமே இல்லை.. ஃபர்ஸ்ட் நைட்ல ஒரு வேளை என்னை மயக்க சொல்லிருப்பானோன்னு தோணுது.. ஹரி மாமா உன்னை பார்க்குறப்போவே அவர் கண்ணுல அவ்வளவு லவ் தெரியும் ஆனா இவனோட பார்வையில எப்போ பாரு சேட்டை குறும்பு இதான் இருக்கு” என வர்ஷூ தன் குழப்பத்தைக் கூற,

 

ஸ்ரீக்கு அய்யோ என்றிருந்தது ,”ஆமா உன்னை மயக்க அவன் மேனகை நீ விஸ்வாமித்திரர் பாரு..சரி நம்ம வாக்குவாதத்தை அப்பறம் வச்சுக்கலாம் முதல்ல அந்த சிந்தியா பேய் வரதுக்கு முன்னாடி இங்க இருந்து எஸ்கேப் ஆவோம் வா” என கூறியவள் அங்கிருந்து எப்படி தப்பிப்பது யோசித்தாள்.

 

“சிந்தியான்னா உன் சக்காலத்தி அவ தான?? அந்தப் பக்கி இன்னும் உயிரோட தான் இருக்கா??? அவ எதுக்கு டி இங்க வரா?” என வர்ஷூ புரியாமல் கேட்க,

 

அங்கிருந்த ஜன்னலை திறந்து கொண்டே ,”அவளை சக்காலத்தின்னு சொன்ன என் கொழுந்தனார் விதவை ஆனாலும் பரவாயில்லைன்னு உன்னை கொன்றுவேன் டி .. அந்த சிந்தியா பன்னி தான் என்னை கடத்துச்சு..சரி சரி சீக்கிரம் வா இந்த ஜன்னல்ல இருந்து அந்த பைப்பை பிடிச்சு இறங்கு” என உத்தரவிட,

 

 

“சிந்தியா உன்னை கடத்துனாலும் ஒரு நியாயம் இருக்கு என்னை ஏன் டி கடத்தனும் ஒருவேளை உன் கொழுந்தனார் மேலயும் அந்த கொள்ளிவாய் பிசாசுக்கு ஒரு கண்ணோ” என யோசித்துக் கொண்டே வந்தவள் அந்த ஜன்னலில் இருந்து கீழே எட்டிப்பார்க்க, அவளுக்கு தலை கிறுகிறுத்தது.

 

“அடியே பாவி உங்க குடும்பம் என்ன குரங்கோட கொளபரேஷன் பண்ணி பிறந்த வாரிசுகளா நீங்க.. அன்னைக்கு அந்த கார்த்திக் என்னடான்னா பால்கனில இருந்து குதிக்க சொல்றான், இன்னைக்கு நீ இங்க இருந்து குதிக்க சொல்ற,என்னை பார்த்தா என்ன கயித்துல நடந்து வித்தை காட்டுறவ மாதிரியா இருக்கு உங்களுக்கு.. மவளே கீழே விழுந்தா குடல் குந்தாணியெல்லாம் தெறிச்சு போய்ரும் டி..இந்த விளையாட்டுக்கு நான் வரலைப்பா” என அவள் பயந்து பின்வாங்க,

 

“அப்போ நீ இங்கேயே இருந்து அந்த சிந்தியா கூட ‘சங்கி மங்கி அடங்கோ’ன்னு ஒப்பாரி வச்சுட்டு இரு, உன்னை கட்டிப் போட்டுட்டு போனானே அந்த பாடிசோடா அவன் வந்து உன்னை கொல்லட்டும் நான் என் ஹரிக்கு ஒரே பொண்டாட்டி நான் போறேன் பா” என அவள் அந்த ஜன்னல் பக்கம் ஒற்றைக்காலைப் போட்டு பக்கத்திலிருந்த பைப்பைப் பிடிக்க,

 

வர்ஷூவிற்கு அந்த நாத்தம் பிடித்த சாக்ஸை விட இவளோடு சேர்ந்து சர்க்கஸில் வித்தை காண்பிப்பதே மேல் என தோன்ற,”அடியே நில்லு டி நானும் வரேன்” என ஸ்ரீயைப் பின்பற்றி பைப்பைப் பிடித்து இறங்கினாள்.

 

 

இங்கோ வருண் அந்த ஸ்டோர் ரூமின் கதவைத் திறக்கப் போக சரியாக அதே சமயம் அறக்க பறக்க ஓடி வந்த சிந்தியா அவன் கைமேல் தன் கையை வைத்து மறைத்தாள்.

 

 

அவளை முறைத்தவன் ,”கையை எடு” என கடுப்புடன் கூற,

 

அவளோ கையை எடுக்காமல் ,”இப்போ எதுக்கு இந்த கதவை திறந்துட்டு இருக்க போ போய் உன் வேலையை பாரு” என எங்கே தன் திட்டம் வீணாய் போய் விடுமோ என பதட்டத்தில் அவனை தடுக்க,

 

வருணுக்கு அவளின் பதட்டம் அவள் மீதும் சந்தேகத்தைத் தூண்ட ,”என்ன நீயும் இந்த கடத்தலுக்கு உடந்தையா? மரியாதையா கையை எடு இல்லை தங்கச்சின்னு கூட பார்க்க மாட்டேன் கொன்னு போட்ருவேன் ” என சிம்ம குரலில் எச்சரிக்கை விடுக்க,

 

காளிதாசனே ஒரு நிமிடம் அவன் குரலில் நடுங்கி விட்டார். சிந்தியா வேறு வழியில்லாமல் பயத்துடன் கதவில் இருந்து கையை எடுக்க, வருண் வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல, காலியான அறையே அவனை வரவேற்றது.

 

அவனைத் தொடர்ந்து உள்ளே வந்த மூவரும் அதிர்ச்சியடைய, சிந்தியா தன் திட்டம் இப்படி பாழாய் போன கோபத்தில் ,” டாட் இங்க இருந்தவ எங்க போய்ட்டா?? எனக்கு அவ வேணும் டாட்” என காளிதாசனின் சட்டையைப் போட்டு கிழிக்க,

 

வருண் அவள் கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டிருந்தான்.

 

அதில் அவள் நிலை தடுமாறி கீழே விழ, காளிதாசன் பதறிப் போனார்.

 

தன் அரசியல் வாழ்க்கைக்கு இப்படி ஒரு குடும்பம் இருப்பது தெரிந்தால் பங்கம் ஏற்படும் என்று தான் இவர்களை வெளிஉலகிற்கு தன் வாரிசாக அறிவிக்காமல் இருந்தார், ஆனாலும் அந்த கயவனுக்குள்ளும் இருவர் மீதும் மலையளவு பாசம் இருந்தது..அது தான் தந்தையின் மகிமையோ.

அவளைத் தூக்கி நிறுத்தியவர் வருணிடம் திரும்பி ,”என்ன பழக்கம் இது வருண் பொம்பளை பிள்ளையை கை நீட்டி அடிக்கிற இதுதான் உன் நாகரிகமா??” என கடிந்து கொண்டார்.

 

“ஆமா உங்க பொண்ணுனா மட்டும் உங்களுக்கு வலிக்குதா?? இதே மாதிரி தான ஸ்ரீ, வர்ஷூவை பெத்தவங்களுக்கும் வலிக்கும் அதைப்பத்தி கொஞ்சமாச்சும் கவலை இருக்கா உங்களுக்கு” என வருணும் கோபத்தில் கத்த,

 

சிந்தியாவோ அவர்களை கண்டுகொள்ளும் மனநிலையில் இல்லை, அவள் மனம் முழுதும் ஸ்ரீ தப்பித்துச் சென்றுவிட்டதே எரிமலையை உருவாக்கிக் கொண்டு இருந்தது.

 

கோபம் கொப்பளிக்க, அந்த அறையை விட்டு அவள் கிளம்ப, அவளைக் கண்டுகொண்ட வருணும் ‘இவள் ஏதாவது முட்டாள்தனம் செய்து வைக்கப் போகிறாள்’ என நினைத்து தந்தையுடனான வாக்குவாதத்தை நிறுத்திவிட்டு அவளை பின் தொடர்ந்து வெளியேறினான்.

 

 

ஹரியும் கார்த்திக்கும் அப்போது தான் அந்த வீட்டை அடைந்திருந்தனர், பரபரப்புடனும் மிகவும் எச்சரிக்கையாக இருவரும் திறந்திருந்த வீட்டினுள் நுழைய, பின்பக்கமாக பைப் வழி இறங்கி வந்த இருவரின் பத்தினிகளும் இவர்களைக் கண்டுவிட்டனர்.

 

“டி வர்ஷூ அங்க பாரு டி அந்த லூசுங்க எல்லாம் முடிஞ்ச பின்னாடி தமிழ் நாடு போலீஸ் மாதிரி இவ்ளோ லேட்டா வருதுங்க.. அவனுங்களை கூப்பிடுடி திரும்பவும் அந்த சிந்தியா பேய்கிட்ட மாட்டிக்க போறாங்க” என ஸ்ரீ வர்ஷூவிடம் கூற,

 

வர்ஷூவும் அங்கிருந்த ஒரு கல்லை தூக்கி கார்த்திக்கை நோக்கி எரிய, அது குறி தவறி கார்த்திக்கின் அருகில் இருந்த கண்ணாடியில் பட்டு “பட்” என உடைந்து பலத்த சத்தத்தை ஏற்படுத்தியது.

 

அந்த சத்தத்தைக் கேட்டு காவலாளி உள்ளே வர வர்ஷூவும், ஸ்ரீயும் அங்கிருந்த புதருக்குள் மறைந்து கொண்டனர்.

 

ஹரியும் கார்த்திக்கும் யாரென திரும்பிப் பார்க்க, அந்த காவலாளி மட்டுமே உள்ளே வந்தவன் அவர்களைப் பார்த்து ,”யோவ் யாருய்யா நீங்க?? இங்க என்ன பண்றீங்க முதல்ல வெளிய கிளம்பு” என அவர்களை துரத்தினான்.

 

அதற்குள் சப்தம் கேட்டு மற்றவர்களும் மாடியிலிருந்து ஓடி வந்திருந்தனர்.

 

அங்கு ஹாலில் நின்றிருந்த ஹரியைப் பார்த்து சிந்தியா அப்படியே பேஸ்தடித்தது போல் நிற்க, கார்த்திக்கைக் கண்டு காளிதாசனும் அவனின் பி.ஏவும் அதிர்ந்தனர்.

 

வருண் கார்த்திக்கை அடிக்கடி கல்லூரியில் கண்டிருப்பதால் அவனைப் பார்த்து யோசனையுடன் நிற்க, கார்த்திக்கை வருணைக் கண்டுகொண்டு ,”ஹேய் தம்பி நீ எங்கடா இங்க?? நீ என்ன பண்ற?” என கேட்டான்.

 

ஹரிக்கோ காளிதாசனைத் தவிர அங்கிருந்த யாரையும் தெரியவில்லை ,அவன் கண்களோ தவிப்போடு ஸ்ரீ எங்கிருக்கிறாளோ என அந்த வீடு முழுக்கும் அலைபாய்ந்தது.

 

அவனின் தவிப்பை உணர்ந்து கொண்ட சிந்தியாவிற்கு உள்ளுக்குள் பற்றிக் கொண்டு வந்தது.

 

வருண் பதிலளிப்பதற்கு முன் அந்த வாட்ச்மேன் உள்ளே வந்து ,”அவர் வீட்டுல வந்து அவரையே யாருன்னா கேட்குற?? நீ யாரு டா முதல்ல?? உன் திருட்டு முழியை பார்த்தாளே டவுட்டா இருக்கு இரு போலீஸை கூப்பிடுறேன்” என மிரட்ட,

 

‘இது இவன் வீடா???? என்னடா நடக்குது இங்க’ என புரியாமல் இருவரும் குழம்பி நிற்க,

 

“இங்க என்ன நடக்குது ஸ்ரீ , வர்ஷூ எங்க யாரு நீங்கெல்லாம் எதுக்கு அவங்களை கடத்தி வச்சுருக்கீங்க??” என ஹரி குழப்பத்தில் கேட்டே விட,

 

அதற்குள் வெளியே காத்திருந்த வர்ஷூவும் ஸ்ரீயும் இவர்கள் இன்னும் வராததால் ஏதேனும் ஆபத்தோ என பயந்து உள்ளே வந்திருந்தனர்.

 

“நாங்க இங்க இருக்கோம்” என அவர்கள் முதுகிற்குப் பின் கோரசாக ஒலித்த குரலில் இரு ஹீரோக்களும் தாங்கள் தேடிக் அலைந்த பொக்கிஷம் கிடைத்து விட்ட பூரிப்போடு திரும்ப ,

 

ஸ்ரீ வேகமாக ஓடி வந்து ஹரியை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

கார்த்திக்கோ மனதில் கடுப்புடன் ,”எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு பாரு எருமை எருமை என் மானத்தை வாங்குறா” என நினைத்தவன் அவள் வர மாட்டாள் எனத் தெரிந்து அவனே அவளைப் போய் அணைத்திருந்தான்.

 

அவளோ அவனின் செய்கையில் அதிர்ந்து அவனை தன்னிடம் இருந்து பிரித்தெடுக்க முயல, அவனோ அசராமல் அவள் காதுக்குள் ,”இப்போ நீ முரண்டு பிடிச்ச அப்பறம் நீ பண்ண காரியத்துக்கு உன் மேல இருக்க கோவத்துல இங்கயே எல்லாருக்கும் ஃப்ரென்ச் கிஸ் எப்படி இருக்கும்னு உன்னை வச்சு டெமோ காட்டிருவேன்.. ஒழுங்கா என் மானத்தை வாங்காம நில்லு” என மிரட்டினான்.

 

அவளோ ‘இவன் செய்தாலும் செய்வான் எதற்கு வம்பு’ என பொம்மை போல் நின்றிருந்தாள்.

 

இங்கு ஹரியோ அவளை காணாமல் தான் அடைந்த துன்பத்தை இந்த ஒற்றை அணைப்பில் போக்குவது போல் மேலும் அவளுள் புதைந்தான்.

 

அதே மனநிலையில் இருந்த ஸ்ரீயும் அவனை வாகாக ஒட்டிக்கொண்டு அங்கு தங்களையே எரித்து விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்த சிந்தியாவைக் கண்டு எப்படி என பலிப்புக் காட்டி அவளை மேலும் வெறுப்பேற்றினாள்.

 

அவள் செய்கையில் சிந்தியாவின் இரத்த அழுத்தம் ஏகத்திற்கும் எகிற அங்கிருந்த பூஜாடியை எடுத்து வீசி அடிக்க, அது புத்தம் புதிதாய் அந்த ஹாலை அலங்கரித்திருந்த 42இன்ச் எல்.இ.டி டிவியில் பட்டு தெரித்தது.

 

அதில் காளிதாசன் தன் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்து கார்த்திக்கை நோக்கி கொலைவெறியுடன் வந்தவர் அவனை வர்ஷூவிடம் இருந்து பிரித்தெடுத்து அடிக்கப் போக வர்ஷூ அதற்குள் அவரை தள்ளி விட்டிருந்தாள்.

 

‘என் மேல அம்புட்டு பாசமா டி செல்லக்குட்டி’ என்பது போல் கார்த்திக் லுக் விட , அவளோ “ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை அவன் என்னை மும்பையில வச்சு டார்ச்சர் பண்ண கணக்கை சரி பண்ண வேணாம் அதுக்குத் தான்” என அவன் மனதைப் படித்தது போல் பதில் கூறினாள்.

 

என்ன தான் அவர் மேல் கோபம் வெறுப்பு இருந்தாலும் , தானாடா விட்டாலும் தன் தசை ஆடும் என்பது போல் வருண் “அப்பா” என அவரைத் தூக்கி நிறுத்த,

 

அதற்குள் அவன் பி.ஏ பக்கத்து பங்களாவில் எப்போதும் இவர்களுக்கு பாதுகாப்பாக தங்கியிருக்கும் அவர்களின் அடியாட்களை வரச்சொல்லியிருந்தான்.

 

 

“அப்பாவா” என ஸ்ரீ, வர்ஷூ, கார்த்திக் மூவரும் அதிர , ஸ்ரீ ஹரியின் பிடியில் இருந்து நழுவி வந்து வருணைப் பார்த்து ,”அடப்பாவி அப்போ ப்ளான் பண்ணி தான் என்னை லவ் பண்றேன் லவ் பண்றேன்னு சுத்துனியா?? நான் கூட சிந்தியா உன் தங்கச்சின்னு சொன்னப்போ நீ நல்லவனா இருப்பன்னு நம்புனனே ..ச்சை நீயும் இவங்களோட உடந்தையா??” என கோபத்தில் கத்த,

 

அப்போது தான் சிந்தியா என்ற பெயர் ஹரி, கார்த்திக் மூளையில் மணியடித்தது.

 

அவர்கள் என்ன நடந்தது என விசாரிக்கும் முன் காட்டு மிராண்டிகள் போல் இருந்த ஒரு ஏழு எட்டு பேர் உள்ளே தட தடவென நுழைந்து சுதாரிக்கும் முன் ஹரியையும் கார்த்திக்கையும் அடிக்க துவங்க,

 

அங்கே என்ன நடக்கிறது என்றே ஒரு நிமிடம் யாருக்கும் புரியவில்லை.

 

சற்று நேரத்திற்க்குள் தெளிவான ஹரியும் கார்த்திக்கும் அவர்களை தடுத்து தாக்க துவங்க, ஸ்ரீயும் வர்ஷூவும் இதுதான் சாக்கு என சிந்தியாவைப் போய் அடிக்க ஆரம்பித்தனர்.

 

வருணும் காளிதாசனும் அந்த முட்டாள்களை தடுத்து நிறுத்த போராட அந்த வீடே ரணகளமானது.

 

“என் ஹரியைவா கொல்லுவேன்னு சொன்ன, குண்டச்சி இந்தா வாங்கிக்கோ கும்மாங்குத்து” என அவள் மூக்கிலே ஒரு குத்து விட,சிந்தியாவின் சில்லு மூக்கு உடைந்து இரத்தம் பொல போல வென வந்தது.

 

வர்ஷூவோ ,”ஸ்ரீகுட்டி நான் ஒரு வாட்டி டி ப்ளீச்ச்ச்ச்” என கெஞ்ச,”உனக்கு இல்லாததாடி தங்கம் வா வா நான் அவளை பிடிச்சுக்குறேன் நீ நல்லா குத்து” என மாறி மாறி இருவரும் அடித்து அடித்து விளையாடினர்.

 

ஹரி தான் கற்றுக்கொண்ட கராத்தேவை இங்கு ஒருவழியாக உபயோகப்படுத்தினோமே என திருப்தியுடன் கைக்கு சிக்குபவனையெல்லாம் போட்டு வெளுத்து வாங்க, நடுவில் அந்த பி.ஏவும் மாட்டி சிக்கி சின்னாபின்னமானான்.

 

கார்த்திக்கோ வர்ஷூவின் முன் சீன் போடுகிறேன் பேர்வழி, யூ டியூபில் பார்த்த வர்மக்கலையை வைத்து ஒருவன் கழுத்துப் பகுதியில் விரலை வைத்து நோண்ட, அவனோ “யோவ் கழுத்தை சொரிஞ்சது போதும் , ரொம்ப நாளா காது தான் அரிக்குது அங்க சொரிஞ்சு வுடு” என காதைக் காட்ட, வர்ஷூ அதைக் கண்டு வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.

 

இப்படியே இவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கையில் திடீரென கேட்ட துப்பாக்கி சப்தத்தில் அனைவரும் சட்டென அடங்கி என்னவாயிற்றோ எனத் திரும்பிப் பார்க்க, அந்த S.P தான் தன் வேலையை முடித்து அங்கு வந்தவன் இவர்கள் நிலமையைப் பார்த்து அதை கட்டுப்படுத்த சீலிங்கை நோக்கி சுட்டிருந்தான்.

 

அப்போது தான் கார்த்திக்கும் தன் பேன்டில் இருந்த துப்பாக்கி பற்றி நியாபகம் வந்தது ,”சே வர்மக்கலை கட்டுறேன்னு வர்ஷூகிட்ட வர்மா படம் மாதிரி பல்பு வாங்குனதுக்கு பதிலா பிஸ்டலை காமிச்சு பில்லா மாதிரி சீன் போட்டிருக்கலாம் .. இன்னும் வளரனும் டா கார்த்திக் நீ” என அவன் தனக்குத் தானே கூறிக்கொள்ள அருகில் இருந்த தடியன் அவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.

 

அனைவரையும் அடக்கிய போலிஸ் அந்த காட்டுமிராண்டிகளை மிரட்டி வெளியே அனுப்ப, அவர்களும் காளிதாசனின் கண்ணசைவிற்கு கட்டுப்பட்டு வெளியேறினர்.

 

 

இப்போது பொறுமையாக அனைவரையும் அங்கிருந்த சோபாவில் அமர வைத்தவன் என்ன நடந்ததென்று முதலில் ஸ்ரீயிடம் விசாரிக்க, அவளும் சிந்தியாவின் மேலிருந்த கடுப்பில் பள்ளியிலிருந்து நடந்த சம்பவங்கள் முதற்கொண்டு இன்று வரை ஒன்றுவிடாமல் ஒப்பித்து விட்டாள்.

 

அனைத்தையும் கேட்ட ஹரிக்கு அன்று ஸ்ரீ நடந்து கொண்டதற்கு காரணம் இன்று விளங்க, அவள் பேசியது தவறென்றாலும் அவளுடைய கோபத்திற்குப் பின் இருந்த காரணம் அவனுக்கு புரிந்தது.

 

அவளின் செயலுக்கு என்றுமே விளக்கம் கேட்காமல் அவளின் மேல் குற்றம் சுமத்தி விட்டோம் என அவன் மனம் அவனைச் சாட, அவள் கைகளை அழுத்திக் கொடுத்தவனுக்கு அந்த சிந்தியாவை தீச்சட்டியில் போட்டு வறுத்தெடுத்தால் என்ன என்றளவிற்கு கோபம் வந்தது.

 

அடுத்து அந்த போலீஸ் வர்ஷூவை எதற்கு கடத்தினார்கள் என விளக்கம் கேட்க வர்ஷூ முந்திக் கொண்டு ,”கடத்துறதை விடுங்க சார் அந்த நாத்தம் பிடிச்ச சாக்ஸை வச்சு என்னை கொல்லப் பார்த்தானுங்க அதை மட்டும் யாரு பண்ணதுன்னு கேட்டு சொல்லுங்க சார்..எனக்கு இருக்க கோபத்துக்கு அவனை அட்லீஸ்ட் நறுக்குன்னு மண்டையில கொட்டியாச்சும் என் கோபத்தை தீர்த்துக்கிறேன்” என்று கடுப்புடன் கூற,

 

அவள் கூறியதிலும் அவள் முகபாவனையும் சிந்தியாவையும் , அந்த பி.ஏவையும் தவிர மற்ற அனைவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

 

பின் காளிதாசன் தன் பி.ஏ தான் இவ்வாறு செய்தான் என்றும் , இவர்கள் தான் தான் ஜெயிலுக்கு போக காரணம் என்பதால் இவ்வாறு செய்துவிட்டான் என்றும் பாதி உண்மையை மட்டும் கூறினார்.

 

வர்ஷூவோ இருந்த கடுப்பில் காளிதாசன் பண்ண அந்த கீழ்த்தரமான செயலைக் கூறி அதனால் தான் கார்த்திக் போலீஸிடம் மாட்டி விட்டான் எனக் கூறிவிட வருணுக்கு தன் தந்தையையும் தங்கையையும் நினைத்து அறுவெருப்பாக இருந்தது.

 

வருண் ஒரு முடிவோடு சோபாவிலிருந்து எழுந்தவன் , நால்வரின் முன் சென்று நின்று “என் தங்கச்சி சார்பாவும் என் அப்பா சார்பாவும் உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்.. கண்டிப்பா இது மன்னிக்க கூடிய செயல் இல்லைன்னு எனக்குத் தெரியும் இருந்தாலும் எனக்காக இதை மறக்க முயற்சி செய்யுங்க.. இனிமேல் என் குடும்பத்துல இருந்து யாரும் உங்களையோ உங்க குடும்பத்தையோ தொந்தரவு செய்ய மாட்டாங்க அதுக்கு நான் உத்தரவாதம் தரேன் நீங்க பத்திரமா வீட்டுக்கு கிளம்புங்க ..அன்ட் ஒன்ஸ் அகைன் சாரி” எனக் கூறியவன் அவர்களிடம் கையெடுத்துக் கும்பிட்டு மன்னிப்பு வேண்ட,

 

அவன் கண்களில் இருந்த உண்மை ஹரியை ஈர்த்தது. அவன் அருகில் வந்தவன் அவன் தோளில் ஆதரவாய் கையைப் போட்டு ,”நான் உன்னை நம்புறேன் வருண்.. உனக்கு என்ன ஹெல்ப் வேண்டும்னாலும் தயங்காம என்னைக் கேழு உனக்கு ஒரு அண்ணனா நான் என்றும் இருப்பேன்… டேக் கேர்” எனக் கூறியவன் மற்ற மூவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

 

அவர்கள் இங்கிருக்கும் வரை அமைதியாக அவர்களை உறுத்து விழித்துக் கொண்டிருந்த சிந்தியா அவர்கள் கிளம்பவும் இத்தனை நாளாய் அவள் மனதில் இருந்த வெறி இன்று வெடித்துச் சிதற தன் சிந்தையை இழந்தவள் ,”நோஓஓஓஓ!!!!!” என பெருங்குரலெடுத்துக் கத்தியவள் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியை எடுத்துக் கொண்டு ஸ்ரீயைக் குத்த ஓடினாள்.

 

அவள் சப்தத்தில் திரும்பி பார்த்த ஹரி, அவள் செய்யப்போகும் செயலை உணர்ந்து விரைவாக ஸ்ரீயை தன்னில் இழுத்து மறைக்க, அந்தக் கத்தி ஹரியின் வயிற்றில் ஆழமாக இறங்கியது.

 

“ஹரி!!!!!!!!” என கத்திய ஸ்ரீ இந்த பேரதிர்ச்சியை தாங்க முடியாததோடு இரு நாட்களாக உண்ணாததும் படுத்த அப்படியே மயங்கிச் சரிந்தாள்.

 

 

வலியில் துடித்த ஹரி அப்போதும் அவளை விடாமல் ஒரு கரத்தில் தாங்கிக் கொண்டு , , இன்னொரு கையால் அவள் கன்னத்தைத் தட்ட, சிந்தியாவிற்கு அவர்களின் பாசம் மேலும் வெறியேற்ற மீண்டும் கத்தியை எடுத்து தாக்கப் போக, அதை உணர்ந்த ஹரி ஸ்ரீயை ஒரு கையில் தாங்கிக் கொண்டு இன்னொரு கரத்தால் அவள் கழுத்தை நெரித்தான்.

 

கார்த்திக்க்கும் வருணும் அவளை இழுக்க முயல அவளோ வெறிகொண்ட வேங்கை போல் அனைவரையும் சமாளித்து அவளின் இலக்கான ஸ்ரீயை குத்துவதிலே முனைப்பாக இருக்க,

 

ஒரு சிறு பெண்ணிற்குள் இவ்வளவு பலமா என ஆண்களே வியந்து போகும் அளவிற்கு அவளின் வெறி அவளுக்கு பேய் பலத்தை தந்திருந்தது.

 

கழுத்தில் ஹரியின் அழுத்தம் அதிகமாக மூச்சிற்கு சிரமப்படுவதையும் பொருட்படுத்தாது அவள் போராட, மகளின் நிலையை காண சகிக்காத காளிதாசன் ஹரியின் கைகளை இழுக்க போராடினார்.

 

ஆனால் அவனின் பிடியோ உடும்புப் பிடியாக இருந்தது .

 

ஹரியின் கைகளின் இறுக்கத்தில் தான் சாகப்போவதை உணர்ந்து கொண்ட சிந்தியா , தான் சாவதற்கு முன் கண்டிப்பாக ஸ்ரீ சாக வேண்டும் என தன் ஒட்டுமொத்த பலத்தையும் திரட்டி வருண் கார்த்திக் பிடியிலிருந்து நழுவியவள் ஆவேசத்துடன் ஹரியின் கைவளையில் இருந்த ஸ்ரீயைக் குத்தப் போக, அப்போது திடீரென ஹரி சிந்தியா கழுத்திலிருந்து கையை விட்டதால் அவர் கைகளைப் பிடித்திருந்த காளிதாசன் நிலை தடுமாறி இருவருக்கும் நடுவில் விழப்போக, சிந்தியாவின் கையில் இருந்த கத்தி அவளின் தந்தையின் இரத்தத்தில் நனைந்தது.

 

அந்த போலீஸோ பின்னால் நின்றிருந்ததால் அவள் குத்திவிட்டது தெரியாமல், நிலமையை கட்டுக்குள் கொண்டு வர மீண்டும் துப்பாக்கியை எடுத்து சீலிங்கை நோக்கி சுடப்போக, அப்போது அந்த பி.ஏ அவசரமாக சிந்தியாவிடம் இவனை இடித்துக் கொண்டு ஓட, அதில் அவன் கை தடுமாறி ட்ரிக்கரில் கை பட்டுவிட, அந்த தோட்டா சிந்தியாவின் முதுகைத் துளைத்தது.

 

ஒரு நிமிடத்திற்குள் இவை அனைத்தும் நடந்துவிட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

 

அதற்குள் ஹரி அதிக ரத்தப்போக்கு காரணமாக மயங்கி கீழே விழ, அந்த நிலையிலும் ஸ்ரீயை கீழே விடாமல் அவன் மேலேயே அவளைத் தாங்கிக் கொண்டான்.

 

அப்போது தான் மற்றவர்களுக்கு உணர்வு வர, நால்வரையும் அள்ளிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினர்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்