Loading

பிறை -53

 

மும்பையில் இப்படி ஒரு காட்டிற்கு நடுவே.. இத்தனை பெரிய ஆராய்ச்சி கூடத்தை அவர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை. அனைவரும் உள்ளே செல்லாமல் அமைதியாக நின்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

” எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்..  உள்ள போகலாம் சார் ” கூட வந்த காவலர்கள் கூற..

 

” இவ்வளவு தைரியமா கதவு எல்லாம் திறந்திருக்கும் போது உள்ள போறது சரியா படலை.. கொஞ்சம் வெயிட் பண்ணலாம்.. ” என சுற்றிலும் பார்வையை பதித்தான் ஆதிதேவ்.

 

அவனது பார்வையை பொய்யாக்காமல் .. அங்கிருந்த மின் கம்பிகள் தென்பட்டது.

 

” சோ உள்ள யாராவது வந்தா.. கரெண்ட் ஷாக் அடிச்சு தூக்கிடுவான்.. ” என கம்பியை காட்ட.. அனைவருக்கும் குலை நடுங்கியது.

 

” அப்போ எப்படித்தான் உள்ள போறது ஆதி ” என சரண் கேட்டுக் கொண்டே சுற்றி பார்த்தவன்.. ” பேசாம இங்க வர கரெண்ட் சப்ளை மொத்தத்தையும் கட் பண்ண சொல்லிட்டா என்ன ” என அவனே கேட்க..

 

” எக்ஸாக்ட்லி ” என பதில் அளித்தான் ஆதி. அவனது வேண்டுகோளுக்கு இணங்க , மின்வாரியத்திற்கு தகவல் சென்று.. முதலில் இந்த காட்டிற்கு கொடுக்கப்பட்டு வரும் மின்சாரத்தை நிறுத்தி இருந்தார்கள்.

 

கரெண்ட் கட் ஆனதில் வெறி கொண்டவன் போல உள்ளே சுற்றியவன்.. ” இவன்.. இவன் எல்லாத்தையும் என் வாழ்க்கையில இருந்து பறிச்சு கொண்டு போயிட்டு.. இன்னைக்கு திரும்பவும் என் வாழ்க்கையில வரான். ஆனால் இந்த முறை நான் கோழையா இருக்க மாட்டேன். கண்டிப்பா எனக்கு போட்டியா இருக்கிற ஆதியை இந்த மண்ணுல புதைக்காம விட மாட்டேன் ” என கத்தினான் அர்ஜுன்.

 

” காத்துறதுனால எதுவும் ஆக போகுதா.. இப்போ கரெண்ட் இல்ல.. அவங்க எல்லாரும் ஈசியா உள்ள வந்துடுவாங்க .. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசி ” என வில்சன் அவனை கடிய.. சற்றே யோசித்தவன்.. வேகமாக ஆதியின் அலைபேசிக்கு அழைத்திருந்தான்.

 

அதற்குள் அவர்கள் அனைவரும் உள்ளே வந்து கதவுக்கு பின் நின்று கொண்டிருந்தார்கள். புது எண்ணில் இருந்து வந்த போனை எடுத்தவன்..

 

” ஹலோ.. ” என்றதும்.. அப்பக்கம் சிறிய அமைதி..

 

” சொல்லு.. இப்போ என்ன சொல்லி என்ன மிரட்டலாம்னு இருக்க ” ஆதியே முதலில் பேச.. அர்ஜுனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எப்படி அவன் கண்டு பிடித்தான் என்று.

 

” நீ மட்டும் உள்ள வா. நீ உள்ள வந்தா உன் பொண்டாட்டியும் , உன் தங்கச்சியும் உனக்கு கிடைப்பாங்க ” என உறுதியாக கூறினான்.

 

” உன்ன எப்படி நம்புறது ”

 

” என்ன பண்ணா நம்புவ.. ”

 

” முதல்ல என் தங்கச்சியை வெளியே விடு.. நம்புறேன்..”

 

” ஸ்மார்ட் தான் ஆதி.. என்னைய இன்னும் பழைய அர்ஜுன்னு நினைச்சிட்டு இருக்கியா என்ன.. நான் இப்போ நம்பர் ஒன் பிசினஸ்மேன் ” என அரக்கன் போல சிரித்தான்.

 

” நீ யாரா வேணாலும் இருந்துக்க.. என் தங்கச்சி வெளிய வந்தா.. மேற்கொண்டு பேசலாம்.. இல்லைன்னா நாங்க எங்க வேலையை பார்க்கிறோம் ” என முடிவாக கூறி இருந்தான் ஆதிதேவ்.

 

” உன் தங்கச்சி உன் கூட வருவாளா ”

 

” ஏன் வரமாட்டா ” என புருவத்தை சுருக்கினான் ஆதி.

 

” அவளோட காதலனே நான்தான் ஆதி.. ” என மீண்டும் சிரித்தவனை .. சிரிப்போடு எதிர்கொண்டவன்.. ” அதுனால தான் என் தங்கச்சி வருவான்னு சொல்லுறேன்.. அவளை வெளியே விடு ” என்றதும் அவனுக்கு கோவம் தலைக்கேறியது.

 

அதே வேகத்தில் பார்கவி இருக்கும் அறைக்கு சென்று.. ” உன் அண்ணன் உன்னைய வெளிய விட சொல்லுறான்.. என்னைய விட்டுட்டு போயிடுவியா நீ ” என மிரட்டினான் அர்ஜுன்..

 

கொஞ்சமும் யோசிக்கவில்லை.. ” போயிடுவேன் அர்ஜுன். முதல் முறைதான் புத்தி கெட்டு தப்பு பண்ணிட்டேன்.. இன்னொரு முறை அப்படி பண்ண மாட்டேன்.. என் அண்ணன் கூட போயிட்டே இருப்பேன் ” என உறுதியாக கூறியவளை பார்த்து ஆத்திரம் தலைக்கேறியது.

 

” அப்போ என்னைய காதலிச்சேன்னு சொல்லி நாடகம் ஆடுனது எல்லாம் பொய்யா ”

 

அவனை வலியோடு ஒரு பார்வை பார்த்தவள்.. ” உண்மையான காதல் என்னனு உனக்கு தெரியல அர்ஜுன். காதல் கிடைக்கிறத விட.. உனக்காக இருக்கிற பொண்ணு, அந்த பொண்ணோட குடும்பம்னு எல்லாம் உனக்கு அமைஞ்சும்.. நீ எல்லாத்தையும் இழந்துட்ட.. நான் உன்ன காதலிச்சது உண்மை தான். அந்த காதலுக்காக தான் என்னைய உயிரா நினைக்கிற என் வீட்டை விட்டுட்டு இவ்வளவு தூரம் உன்னைய நம்பி வந்தேன்.. ஆனால் நீ எனக்கு செஞ்ச எல்லாமே துரோகம்.. துரோகம் மட்டும் தான்.. ” அடக்கமுடியாமல் கண்ணீர் வெளிவந்தது.

 

” நல்லா யோசி.. நான் இப்பவும் உன்ன தான் லவ் பண்ணுறேன் கவி.. இந்த பிஸ்னஸ் நல்ல படியா போனா.. நம்ம தான் நம்பர் ஒன் பணக்காரவங்க.. சும்மா நியாயம் தர்மம் பேசாத.. நல்லா யோசிச்சு முடிவு பண்ணு .. ”

 

” என்ன யோசிக்க சொல்லுற.. இந்த பெண்களோட சாபத்துல இருந்து நமக்கு ஒரு வாழ்க்கையா.. அப்படி ஒரு வாழ்க்கையை நான் என்னைக்கும் வாழ மாட்டேன். இந்த பொண்ணுங்களை காப்பாத்தி, இந்த ஆராய்ச்சியே அழியனுன்னு தான் என் அண்ணி அங்க மூச்சு பேச்சில்லாம படுத்திருக்காங்க.. அவங்க நினைச்சது நடக்கனும். கண்டிப்பா என் அண்ணன் உங்க எல்லாரையும் அழிப்பான். ஆனால் இப்போ கூட ஒன்னும் கெட்டு போகல.. நீயே சரண்டர் ஆகிடு அர்ஜுன். தண்டனைகள் கம்மியாகும். இதோட இந்த பாவத்தை விட்டுடு.. இனிமே பண்ணாத.. இதுவும் நான் உன்ன காதலிச்ச பாவத்துக்கு தான் சொல்லிட்டு இருக்கேன் ”  என பேச்சை முடித்துக் கொண்டாள் பார்கவி.

 

சற்று நேரம் அமைதியாகி போனவன்.. ஆதிக்கு அழைத்து விட்டு.. ” உன் தங்கச்சியை நான் வெளிய அனுப்புவேன். ஆனால் நீ மட்டும் உள்ள வரனும்  ” என்றதும்.. அதற்கு ஒப்புக் கொண்டான் ஆதிதேவ்.

 

” சரண்.. நீதான் அவளை பார்த்துக்கனும்.. அவன் பார்கவியை விடுறேன்னு சொல்லிருக்கான்.. நான் மட்டும் உள்ள போறேன் ” என மணியை பார்க்க.. அவன் கூறிய நேரத்தில் பார்கவி மட்டும் வெளியே வீல் சேரில் வைத்து தள்ளி இருந்தார்கள்.

 

ஓடிப் போய் அவளை பிடித்திருந்தான் சரண். ” ஹே பார்கவி” என அவளை எழுப்பிக் கொண்டிருந்தான். அதே நேரம் தங்கையை ஒரு பார்வை பார்த்து விட்டு.. அவன் மட்டும் முன்னேறி உள்ளே சென்றான்.

 

அவன் உள்ளே வந்ததுமே அவனை தலை முதல் கால் வரை  சோதனை செய்து தான் உள்ளே விட்டார்கள்.

 

அத்தனை பெரிய ஆராய்ச்சி கூடத்தை இப்போது தான் முதல் முறையாக பார்க்கிறான்.

 

சுற்றி எங்கிலும் சவ பெட்டிகள் போல கண்ணாடிப் பெட்டிக்குள் பெண்கள் அணிவகுத்து படுத்திருந்தனர். இத்தனை பெண்களா .. எச்சில் விழுங்கிக் கொண்டவனுக்கு மனைவியை நினைத்து நெஞ்சம் நடுங்கியது.

 

மேலே முன்னேறி சென்றவனுக்கு முன்னால் வந்து வில்சன் நின்றார்.

 

” ஹலோ மிஸ்டர் யங் பாய் ” என கை கொடுக்க.. அவரது கையை பிடிக்காது.. ” அர்ஜுன் எங்க ” இடி இடித்ததை போல இருந்தது அவனது குரல்.

 

” உனக்காகத்தான் காத்துட்டு இருக்கான்.. வா போகலாம் ” என மாடிக்கு அழைத்து சென்றான். மாடிக்கு செல்லும் வழியில் எல்லாம் அங்கிருந்த ஒவ்வொரு கண்ணாடி பெட்டியையும் பார்த்துக் கொண்டே சென்றான். ஒரு பெட்டியில் கூட அவனது மனைவியை காணவில்லை.

 

ஒருவேளை அவளை ஆராய்ச்சியில் ஈடு படுத்தவில்லையோ என்ற யோசனையுடன் உள்ளே சென்றான் ஆதி.

 

அந்த பிராமண்ட அறையில், பெரிய

சோபாவில் அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனை பார்த்ததும் வந்த ஆத்திரத்தை அடக்கிக் கொண்டவன்.. நிதானமாக அவனை கையாள தொடங்கினான்.

 

” வாங்க மிஸ்டர் ஆதிதேவ் ஆருத்ரன். கமிஷனர் ஆப் சென்னை சிட்டி ” என வரவேற்றான்.

 

அமைதியாக வந்து எதிரில் உள்ள ஷோபாவில் அமர்ந்து விட்டான் ஆதி.

 

” ம்ம்.. இத்தனை வருஷத்துக்கு அப்பறம் இந்த மாதிரி ஒரு நிலைமையில என்னைய எதிர்பார்க்களையோ.. ”

 

” இதை விட மோசமா எதிர்பார்த்தேன்.. நாட் பேட் ” என நக்கலாக சிரித்தான்.

 

” என்ன கிண்டலா… திரும்பும் உன் வாழ்க்கைக்குள்ள நான் வருவேன்னு எதிர்பாத்தியா.. ”

 

” தேவை இல்லாததை எல்லாம் நான் எதிர் பார்க்கிறது இல்ல ”

 

” என்ன ஆனாலும் உன் திமிரு இன்னும் குறையவே இல்ல டா ருத்ரா.. ”

 

” அதான் உனக்கே தெரியுமே.. நான் எப்படின்னு ”

 

” தெரிஞ்சதுனால தான் இத்தனை வருஷம் கழிச்சு உன்ன ஆறவிட்டு அடிக்க தருணம் பாத்துட்டு இருந்தேன் ”

 

” சரிதான்.. ” என கழுத்தை தேய்த்து கொண்டவன். ” ஆம்பளையா இருந்தா என்ன பண்ணிருக்கனும்.. என் முன்னாடி வந்து நின்னு என்னைய மீறி என் பொண்டாட்டி மேல கை வச்சிருக்கனும் . ஆனால் நீதான் பொட்ட பயலாச்சே.. புருஷன் இல்லாதப்ப என் பொண்டாட்டியை மிரட்டி வர வச்சிருக்க.. அப்பவும் சரி இப்பவும் சரி உன்னோட குறுக்கு புத்தியை மட்டும் நீ விடவே இல்ல.. அது மட்டும் இல்லாம இருந்திருந்தா நீ வாங்கின மார்க்குக்கு இந்நேரம் பெரிய சிட்டில பெரிய போஸ்டிங்ல இருந்திருப்ப ”

 

” அடேங்கப்பா .. யாருக்கு வேணும் அந்த அஞ்சு பத்து போஸ்டிங்.. மாச சம்பளத்துக்கு வேலை பார்க்கிற நாய் நீ என்னைய பேசுறியா.. நான் பார்க்கிற பிஸ்னஸ்ல எவ்வளவு லாபம் தெரியுமா.. எத்தனை கோடி தெரியுமா.. இந்த மும்பைல பாதிக்கு மேல நாங்க வாங்கி போட்ட இடம் தான்.. இதை விட புதுசா ஒரு தீவையும் விலைக்கு வாங்கிருக்கேன். உன்னால.. அதான் நீ சொன்னியே உன் போஸ்டிங் வச்சு இதெல்லாம் வாங்க முடியுமா.. கூப்பிட்ட உடனே அரசியல்வாதிகளுக்கு கையை கட்டிட்டு பின்னாடியே போகனும்.

 

அரசாங்கத்துக்கு கீழே தான் வேலை செய்யனும். அவன் என்ன வேலை கொடுத்தாலும் பார்க்கனும்.. ஆனால் நான்… ” என கைகளை இருபக்கமும் அகலமாக விரித்தவன்..

 

” ஆனால் நான் அப்படி இல்ல.. நான் தான் ராஜா.. நான் கொடுக்குறது தான் பிராடக்ட்.. பிடிச்சு வாங்கித்தான் ஆகனும்.. இல்லைன்னாலும் பிடிக்க வைப்பேன் ” என திமிராக பேசினான் அர்ஜுன்.

 

” நீ எதை வச்சு இவ்வளவு ஆட்டம் போடுறியோ.. அது எதுவுமே நிரந்தரம் இல்ல அர்ஜுன். தப்பான சேர்க்கை உன்னைய படு குழில தள்ளிடுச்சு ” என அருகில் அமர்ந்திருந்த வில்சனை பார்த்து கூறினான்.

 

” யாரோட சேர்க்கை… என்னைக்கு உங்களோட சேர்க்கையை விட்டு வெளியே வந்தேனோ அன்னைக்கு தான் என் கையில காசு பார்க்க ஆரம்பிச்சேன். இவ்வளவு கோடி சொத்துக்கும் பணக்காரன் ஆனேன்.. ” என மிருகம் போல சிரித்தான்.

 

” எல்லாம் ஓகே தான்.. ஆனால் இனிமே இத்தனை கோடி சொத்தையும் யாரு காப்பாத்த போறது.. ”

 

” என்ன சொல்லுற ” பல்லை கடித்தான் அர்ஜுன்..

 

” இல்ல நீயே இல்லைன்னு ஆனதும்.. உன் பேரில உள்ள சொத்தை எல்லாம் என்ன பண்ணுறதுன்னு தான் யோசிக்கிறேன்..”

 

” உன் பொண்டாட்டி இன்னும் என் கஷ்டடில தான் இருக்கா.. நியாபகம் இருக்கா ”

 

” ஏன் இல்லாம.. அவ இத்தனை பெரிய ரிஸ்க் எடுத்தது எல்லாமே நீங்க எல்லாரும் அழியனுன்னு தான் ” என கால் மேல் கால் போட்டு அமர்ந்தவனை பார்த்து அர்ஜுனிற்கு சற்றே பயம் வந்தது .

 

” பிளான் பண்ணி தான் உன் பொண்டாட்டிய அனுப்புனியா ”

 

” அதையே இப்போதான் நீ கண்டு பிடிக்கிறியா ” என தலையில் அடித்துக் கொண்டான் ஆதி..

 

” என்ன நினைச்சிட்டு இருக்க.. நீ பிளான் பண்ணி என் பொண்டாட்டிய தூக்குனதா தானே நினைச்சுட்டு இருக்க.. ஆனால் இந்த மொத்த பிளானுக்கும் அவுட்லைன் போட்டு கொடுத்ததே நான் தான் டா.. என்னைய மீறி இங்க எதுவும் நகராது ” என்றதும்.. வில்சன் அதிர்ந்து வேகமாக கண்ணை எடுத்து ஆதியை சுட முயற்சிக்க.. அவரை தடுத்தவன்.. அவர்களுக்கு பின்னால் இருந்த கண்ணாடி பெட்டியை இழுத்து அவன் முன் வைத்தான்.

 

அதற்குள் அமைதியாக படுத்திருந்தாள் பிறைநிலா. எத்தனை பெரிய முயற்சியை எடுத்து.. இப்படி வந்து படுத்திருக்கிறாளே!  பார்க்க பார்க்க ஆதிக்கு நெஞ்சம் கொதித்தது.

 

” உன் பொண்டாட்டியை போட ஒரு செகென்ட் போதும்.. நான் கொடுத்திருக்க மருத்துல அவ இப்போதைக்கு எந்திரிக்க முடியாது. சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” கடைசி ஆயுதமாக பிறையை கையில் எடுத்தான் ஆதி அர்ஜுனன்.

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 24

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
24
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்