Loading

அத்தியாயம் 32

 

“உங்க அம்மா என்ன முடிவு செஞ்சுருக்காங்க?”.

 

“தெரியலயே ஆண்ட்டி. நா ஊர் பக்கம் வந்தே அஞ்சு வருஷம் கிட்ட ஆச்சு, அவங்க தான் வந்து போயிட்டு இருக்காங்க”.

 

சிறிது நேர அமைதிக்கு பின் “ஓ! அப்ப என் பொண்ணுக்கு நா மாப்ள பாக்கட்டுமா?”.

 

“இப்ப அவ இருக்கற கடுப்புக்கு கண்டிப்பா நீங்க பாத்ததும் ஓகே சொல்லி கல்யாணம் பண்ணிப்பா. உங்களுக்கு சிரமமேயிருக்காது” என்றான் சிரிப்புடன்.

 

“நல்லா பேச கத்துக்கிட்ட. நல்லா பேசிட்டுருந்தவ அமைதியாயிட்டா. குறும்புத்தனம்லா காணாமலே போச்சு ப்பா, ஏதோ பெரிய மனுசி மாறி பேசிட்டு திரிறா” என்றார் பெருமூச்சுடன்.

 

“நா நேர்ல வந்துட்டா எல்லாமே திரும்ப வந்துரும் ஆண்ட்டி. அதுக்கு நீங்க ஃபஸ்ட் இறங்கி வரணும்னு தான் வெயிட் பண்ணேன். லீவ் கூட சேத்து வச்சிருக்கேன். ஒன் மந்த் லீவு எடுத்துட்டு வரட்டுமா ஆண்ட்டி?”.

 

“என்னால முடியல, தயவு செஞ்சு உன் ட்ராமாவ கொஞ்சம் நிறுத்து. அவளுக்கு 25 முடிய போகுது, இதுக்கு மேலயும் வச்சிட்டு இருக்க முடியாது. உன் அம்மா அப்பாவ வந்து பேச சொல்லு. இல்லன்னா நா இவள கன்வின்ஸ் பண்ணி வேற பையனுக்கு கட்டி வைக்க ஏற்பாடு பண்ணனும்” ௭ன அவன் அம்மா பேசி சென்றது மனதில் வைத்தே பேசிவிட்டு வைத்தார்.

 

“நல்லா மிரட்டுங்க ஆண்ட்டி” என்றவன், “வீட்ல அம்மா அப்பாட்ட பேசிட்டு, என்னைக்கு வரோம்னு சொல்றேன் ஆண்ட்டி. வைக்கட்டுமா?” என வைக்க போக.

 

அவனை ஒரு நிமிஷம் ௭ன நிறுத்தி “அவ நம்பர் வேணுமா?” ௭ன்றார்.

 

சிரித்தவன் “என்ட்ட இருக்கு ஆண்ட்டி. ஆனா போன்ல பேசி அவ கோவத்தை குறைக்க முடியாது. சோ நேர்ல வந்து சமாதானப் படுத்திக்கிறேன்” ௭ன வைத்தான்.

 

வைரமும் அவனது ஆபீஸிலேயே கேட் ஸ்கோர் வைத்து, இவனது ரெக்கமண்ட்டில் நுழைந்திருந்தான். சேர்ந்து இருவருடம் ஆகியிருந்தது. வைரத்திடம் ஜெயந்தி மொபைலில் இருந்து பேசுவாள் ஆறு. ஆனால் ப்ரகலத்தனைப் பற்றி பேசாமல் வைத்துவிடுவாள். இப்பொழுது சொந்தமாக மொபைல் வாங்கிய பின் முதலில் சேவ் செய்த நம்பரே அவனிது தான். எஃபியில் அக்கவுண்ட் ஓபன் செய்து இருக்கிறாள். ஸ்கூல், காலேஜ் ௭ன ஃப்ரெண்ட்ஸ் எல்லோரையும் அக்ஸ்ப்ட் செய்தவள், அவனது ரெக்வஸ்ட்டை மட்டும் அக்ஸ்ப்ட் செய்யவில்லை. ஆனால் அவன் அப்லோட் செய்த போட்டோக்கள் தான் அவள் கேலரி மொத்தமும். பைலட் யூனிஃபார்மில் அவன் இருக்கும் போட்டோவை தான் ஹோம் ஸ்கிரீனாக வைத்திருந்தாள். ஆனால் கோபமாக மட்டும் இருக்கிறாளாம்.

 

ப்ரகலத்தன் வைரத்திடம், “டேய் சென்னை கிளம்புறேன் வரியா?” ௭ன கேட்க.

 

“நீங்க உங்க ஆள கரெக்ட் பண்ண போறீங்க, நா எதுக்கு?”.

 

“நீ உன் ஆளோட அப்பாவ கரெக்ட் பண்ணு”.

 

“அதயும் நீங்க தான் பண்ணனும் சீனியர். பஸ்ட் உங்க ரூட்ட செட்டில் பண்ணி மேரேஜ் முடிச்ச கையோட என்னையும் கர சேர்த்துருங்க சீனியர். அவ அப்பாவ பாத்தாலே பயமா இருக்கு”.

 

“அந்த பொண்ணும் எத்தன நாள் தான் காரணம் சொல்லிட்டே இருக்கும். சீக்கிரம் பேச சொல்லுடா வீட்ல”.

 

“25 வயசு தான ஆகுது, அதுக்குள்ள என்னடே அவசரம்ட்றாரு என் அப்பா. அந்த மனுஷனும் கறார் பேர்வளி தான். ஆனா என் லவ்வ ஒத்துக்கிட்டாரு. தங்கச்சிக்கு முடிச்சிட்டு பண்ணிக்கன்னுட்டாரு”.

 

“அடப்பாவி இவ்வளவு நடந்துருக்கா, வீட்டுல பேசி ரெடியா தான் வச்சிருக்க”.

 

“ஆமா சீனியர், என் பக்கம் வாங்க வேண்டிய அடியெல்லாம் வாங்கிட்டு, அப்புறம் அங்க போய் வாங்குவோம். சேந்து அடிச்சா எப்டித் தாங்குறது. அதான் எங்க அப்பா கால்ல மொத விழுந்துட்டேன்”.

 

“நல்லா வருவ. சரி தங்கச்சிக்கு ஃபர்ஸ்ட் மாப்பிள பாத்து சீக்கிரம் முடி. அப்றம் சேந்து போய் லட்சு அப்பாட்ட பொண்ணு கேக்கலாம்”.

 

“எல்லாம் உங்க ஆசிர்வாதம் சீனியர். ஆறுவ கேட்டதா சொல்லுங்க” என்றான் நக்கலாக.

 

“நக்கலா பண்ற, பாத்துக்குறேன் மேன்” என சென்னைக்கு ப்லைட் ஏறினான்.

 

ஓலா பிடித்து வீடு வந்து இறங்க, ராஜம் வேகமாக வெளியே வந்தார். “ஏங்க பையன் வந்துட்டான். பெட்டியை வாங்க வாங்க” என குரல் கொடுக்க.

 

“நா தூக்கிப்பேன்ம்மா” என இறங்கியவன் தூக்கிக்கொண்டு உள்நுழைய, மேல் போர்ஷனில் குடியிருந்தவர்கள் எட்டி, “இனி ராஜம் ஆண்ட்டிய கையில பிடிக்க முடியாது” என்ற சத்தம் கேக்க, நிமிர்ந்து பார்த்தான், காலேஜ் படிக்கும் வயதில் ஒருவன் கைகாட்ட, இவனும் பதிலுக்கு கை காட்டி சிரித்து விட்டு உள் நுழைந்தான்.

 

“வீட பெருசா கட்டுங்க, எதுக்கு தனியா வாடகைக்கு விடுற மாறி மேல கட்ரீங்கன்னு கோச்சுக்கிட்டியே, எவ்வளவு ஒத்தாசையா இருக்காங்க தெரியுமா” என்றார் ராஜம் குடியிருப்பவர்களை.

 

“குளிச்சுட்டு இருக்க மனுஷனா வா வான்னா எப்டி வருவேன்?. வாப்பா டிராபிக் எப்டி இருந்தது” என வந்தார் அவன் அப்பா.

 

“இப்ப அவ்வளவு டிராபிக் இல்லப்பா. டெல்லிய கம்பேர் பண்ணும்போது இது மச் பெட்டர். இன்னைக்கு டூட்டியா ப்பா”.

 

“ஆமா உங்க அப்பாவுக்கு என்னைக்கு தான் லீவு இருந்துருக்கு” ராஜம் சொல்ல.

 

“எதுக்கு நாள் முழுக்க வீட்லயிருந்து உன்கிட்ட வசவு வாங்கிக்கிட்டே இருக்கதுக்கா”.

 

“நீங்க வீட்ல இருக்க வேணாங்க, கிளம்புங்க உங்க வேலைய பாத்துக்கிட்டு” என்றார் அதற்கும்.

 

சிரித்த ப்ரகலத்தன் “ஒரு மாசம் இங்க தான்ப்பா. கல்யாணம் இந்த ஒன் மந்த்க்குள்ள வச்சுட்டா, இன்னும் சந்தோஷம்” ௭ன்றான் போற போக்கில் யாருக்கோ கல்யாணம் ௭ன்பதுபோல் இருவர் முகத்தயும் ஆராய்ந்து.

 

“யாருக்கு ப்பா கல்யாணம்??” அவன் அப்பா கேட்க, “ஏன் ப்பா ௭னக்கு தான்” ௭ன்றான் சிரித்த முகத்துடன்.

 

“பையன வாய்விட்டு கேட்க வச்சு வேடிக்க பாக்கீகளே. சீக்கிரம் புரோக்கர் தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்க” என்றார் ராஜம்.

 

“பயங்கர ஹீயூமர் சென்ஸ்ம்மா உனக்கு. ஈவினிங் பேசலாம் இதப்பத்தி. வந்ததும் சண்டை வேணாம். நா குளிச்சிட்டு வரேன் சாப்பாடு எடுத்து வைங்க” என சிரித்துக்கொண்டே தனதறை சென்றுவிட்டான்.

 

“என்னங்க இவேன் இப்டி சொல்லிட்டு போறான், 5 வருஷமா அந்த புள்ள பேச்சையே ௭டுக்கலன்னு நா கூட அவள மறந்துட்டான்னு நினைச்சேன்” ௭ன கணவனிடம் வர, “எனக்கு டூட்டிக்கு டைமாச்சு. சாயந்தரம் பாத்துக்கலாம்” என நழுவி விட்டார் அவர். மகனுக்கு சாப்பாடு எடுத்துவைக்க யோசனையோடு நகர்ந்தார் ராஜம்.

 

சாப்பிட்டு வந்து படுத்தவன், அவள் நம்பருக்கு “ஹாய்” என தனது புது நம்பரில் இருந்து மெசேஜ் அனுப்ப, ஒரு மணி நேரம் கழித்துதான் அதை பார்த்தாள் ஆறு. நியூ நம்பர் எனவும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட, ஈவினிங் வரைப் பொறுத்தவன் ரிப்ளை வரவில்லை என்றதும், பார்வேர்ட் காதல் கவிதைகளாக எடுத்து அனுப்பிக் கொண்டிருக்க, 15க்கு மேல் வரவும், அந்த நம்பருக்கு கால் செய்து விட்டாள்.

 

சிரித்தவாறு அட்டன் செய்தவணும், “ஹலோ” என்பதற்குள், “யார் வேணும் உங்களுக்கு? நியூ நம்பர்ல இருந்து பண்ணுனா யாருன்னு சொல்லிட்டு கான்வர்சேஷன் ஸ்டார்ட் பண்ண மாட்டீங்களா?” என்றாள் நிதானமாகவே. 

 

“என் நம்பர் உன்கிட்ட இருக்கும்னு நினைச்சேன். நீ மொத்தமா இப்டி என்ன டெலிட் பண்ணுவன்னு கனவா கண்டேன்” என்றான் இவன் சிரிப்பை அடக்கி.

 

ஆறெழில் ஒரு நிமிடம் மூச்சை அடக்கி தான் நின்றாள், கண்டு கொண்டாள் அவன் குரலை, கேட்டுக் கொண்டிருந்தவளால் கட்டுபடுத்த முடியவில்லை சந்தோஷம், கோவம், அழுகை என போட்டியிட கட் செய்து விட்டாள். அவளுக்கு பேச்சே வரவில்லை. அவன் மறுபடியும் கூப்பிட கட் செய்தாள், மறுபடியும் கூப்பிட சுவிட்ச் ஆப் செய்து விட்டாள்.

 

‘ஓ! காட்!!! இவள எப்டி மலை இறக்கன்னு தெரியலையே, ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்’ என இவன் வேண்டுதலோடு தூங்க முயற்சித்தான், புரண்டு புரண்டு படுக்க கனவிலும் அவளே., ரெட்ட ஜடையில், ஸ்கூல் யூனிபாஃர்மில் ‘உங்களுக்கு ௭ன் லவ் இன்பேக்சுவேஷன் இல்லன்னு ப்ரூவ் பண்றேன்’ ௭ன்றாள் விரல்களை நீட்டி, ‘௭ன்ன ௭ப்டி நீங்க அவாய்ட் பண்ணலாம், ௭னக்கு ௭வ்வளவு கஷ்டமா இருந்துச்சுன்னு தெரியுமா’ ௭ன அழுதாள். ‘௭ப்டி பிரசிடண்ட் உங்களால ௭ன்ன பாக்காம இருக்க முடிஞ்சது’ ௭ன சண்டையிட்டாள். “கொஞ்ச நேரம் தூங்க விடுடி உன்ன நேர்ல சமாளிக்க தெம்பு வேணும்” ௭ன முடிவாக அவளிடம் கூறுவது போல் கூறி திரும்பி படுத்து தூங்கி போனான்.

 

ஈவ்னிங் அவன் அப்பா வந்தபிறகே அவனை தேடிவிட்டு, இன்னும் ௭ழவில்லை ௭ன ராஜம் சொல்லவும், அவன் அறைக்கு வந்து ௭ழுப்பினார்.

 

“குட் ஈவ்னிங் ப்பா, சீக்ரம் வந்துட்டீங்க??” ௭ன ௭ழ, “ஆமாப்பா திரும்ப போகணும், சரி நீ வெய்ட் பண்ணுவியோன்னு நடுவுல வந்தேன்” ௭ன்றார் அவர்.

 

“2 மினிட்ஸ் ப்பா, ஃப்ரஷ் ஆகிடுறேன்” ௭ன பாத்ரூம் புகுந்து விட, அவன் அப்பா வெளியேறினார்.

 

ஃப்ரஷாகி ஹாலுக்கு வந்தவன், “வொர்க் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா இருக்காப்பா?” ௭ன கேட்டவாறு வந்து சோபாவில் அமர்ந்தான்.

 

“ப்ரோமோஷன் கூடும்போது பொறுப்பும் கூடுமேப்பா, பிரஷர் தான் வேறென்ன. இன்னும் மூணு வருஷம், அப்புறம் ஃபுல் ரிலீஃப். ஆனா உங்க அம்மா ஒருத்திய சமாளிக்குறதுக்கு வெளி வேலைகள் எவ்வளவோ தேவலாம்” ௭ன அவர் முடிக்கும் முன், “என்னது?” என வந்தார் ராஜம்.

 

பலமாக சிரித்த ப்ரகலத்தன், “பேமிலிய இப்டி கன்ட்ரோல்ல வச்சிருக்கதன் ரகசியம் என்னம்மா?”.

 

“யாருடா கண்ட்ரோல்ல இருக்கது நீயா? உங்க அப்பாவா? நா தான் உங்க கண்ட்ரோல்ல இருக்கேன்” என நொடித்தார் ராஜம்.

 

“என்னப்பா முடிவுல இருக்க?” என்றார் அவன் அப்பா நேரடியாக. 

 

“என்ன புதுசா கேக்குறீங்க? ஆல்ரெடி சொன்னது தானே. எப்ப பொண்ணு பாக்க போலாம்னு நீங்கதான் சொல்லணும்”.

 

“ஜாதகம் பாக்காம நா எதையும் முடிவு பண்ண மாட்டேன்” என்றார் ராஜம்.

 

“ஜாதகம் பாத்து பொருந்தலனாலும் நா அவள தான் கல்யாணம் பண்ணிப்பேன். நீங்க தான் நிம்மதி இல்லாம கல்யாணம் பண்ணி வைப்பீங்க, சோ யாருக்கும் மன கஷ்டம் வேணாம், அது தேவயில்ல” என்றான் மகன்.

 

“உன் இஷ்டத்துக்கு தான் எல்லாம் செய்வனா எதுக்கு நானு?” அவன் அமைதியாக விட, அவன் அப்பாவும் அமைதியாக அமர்ந்து விட, “என்ன பதில் பேச மாட்றீங்க. ஏனோ அந்த பொண்ண பர்ஸ்ட்லயே பிடிக்காம போனதால ஏத்துக்க மனசே வரமாட்டேங்குது என்ன செய்ய? சரி ஜாதகமாது சரி வந்தா, கடவுள் மேல பாரத்த போட்டு ஆகுறத பாக்க வேண்டியது தான்னு முடிவு பண்ணேன். நீங்க அதுக்கும் கட்டையப் போட்டா என்ன அர்த்தம்?” அதற்கும் இருவரும் பதில் சொல்லாமல் இருக்க.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 47

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
52
+1
2
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்