Loading

அத்தியாயம் 19

 

“டி,டி,டி,டி.. கவி,கவி, கவி,கவி என்று குளியலறையில் நின்று கொண்டு கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டே, மீண்டும் மீண்டும் சொல்லி மனதில் பதிய வைத்துக் கொண்டிருந்தான் அஸ்வந்.

 

திருமணத்திற்கு முதல் நாள் இரவு பார்கவியை அண்ணி என்று அழைத்ததில் இருந்து, அவளை கவி என்று அழைக்கவும் டீ போட்டு அழைக்கவும் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றான்.

 

இப்போதும் அதைத்தான் செய்து விட்டு, முகத்தை தண்ணீரால் அடித்து கழுவி விட்டு,

டவலால் முகத்தை துடைத்த படியே வெளிய வந்தான்.

 

பார்கவி நேற்று இரவு அழுது கொண்டிருந்த, அதே இடத்தில் கால்களைக் குறிக்கி கைகளை தலைக்கு வைத்து படுத்திருந்தாள்.

 

இரவு முழுவதும் பார்கவியை சமாதானப்படுத்தவும் முடியாமல், அவளுக்கு ஆறுதலாக இருக்கவும் முடியாமல், தூக்கம் இல்லாமல் விடிய விடிய முழித்திருந்தது என்னவோ அஸ்வந்தான்.

 

வெகு நேரம் அழுதவள் நடு சாமத்திற்கு மேல் அங்கேயே சுரண்டு படுத்து விட்டாள். அவள் நன்கு உறங்கிய பின்னர் தலையணையை எடுத்து அவளது தலைக்கு அருகில் வைத்தான். தேவைப்பட்டால் எடுத்து வைத்துக் கொள்ளட்டும் என்று, அது அப்படியே தான் இருந்தது.

 

ஆனால் பெட்ஷீட்டை அவளுக்கு போர்த்தி விட்டிருந்தான். மெதுவாக சத்தம் போடாமல் வந்தவன், அவள் மீது போர்த்திருந்த பெட்ஷீட்டை எடுத்து மடித்து கட்டிலில் வைத்து விட்டு, அவளை பரிதாபமாக பார்த்தான்.

 

நன்கு தெரியும் எழுந்தாள் என்றால் அவள் மீது பெட்ஷீட்டை போர்த்தியதற்கு நிச்சயம் நன்றி கூற மாட்டாள். தீ பார்வை பார்ப்பாள். இல்லை சுடு சொற்களால் அர்ச்சிப்பாள். எனவே தான் சமயோசிதமாக முன்கூட்டியே பெட்ஷீட்டை எடுத்துவிட்டான்.

 

அஸ்வந்துக்கு முதலில் தன்னை சரி செய்து கொள்ள கால அவகாசம் தேவைப்பட்டது.

 

அது மட்டும் இல்லாமல் பார்கவியிடம் எப்படி அணுகுவது என்பது அவனுக்கு புரியவில்லை. எனவே சிறிது நாள் சென்ற பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தவன், அவளிடம் எதுவும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.

 

அறையில் இருந்து வெளியே வந்த அஸ்வந்தை பார்த்த செவ்வந்தி அவனிடம் எதுவும் கேட்கவில்லை.

 

“அஸ்வந் காஃபி சாப்பிடுறியா…?” என்று கேட்க, “இல்லம்மா வேணாம்.. நான் லேட்டா டிபன் சாப்பிடுறேன்…” என்றவன் “அண்ணா அங்க..? ஆஃபிஸ் கிளம்பிட்டாணா இவ்ளவு நேரத்துக்கு…” என்று கேட்க

 

செவ்வந்தி “இல்லடா.. அவன் நேத்து கோயிலுக்கு வந்ததோட சரி.. அதுக்கு பிறகு வீட்டுக்கு வரவே இல்ல.. மனசு கேட்காம வாட்ஸ் அப்ல வாய்ஸ் மெசேஜ் போட்டேன்.. பீச் ஹவுஸ்ல தங்கிட்டானாம்.. கிளம்பி வந்துட்டு இருக்கான், இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மெசேஜ் போட்டான்…” என்றவர்

 

“சரி.. பார்கவி, அவ நல்லா இருக்கா இல்ல.. ராத்திரி உன்கிட்ட நல்ல விதமாக நடந்து கிட்டாளா?…” என்று கேட்க

 

“அம்மா! ப்ளீஸ்.. உங்க விருப்பப்படி கல்யாணம் பண்ணியாச்சு.. பார்கவி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாச்சு.. எல்லாத்துக்கும் அவசரப்படாதீங்க..

 

…எனக்கு என்னவோ அவங்களுக்கு.. ச்சே.. அவளுக்கு டைம் கொடுக்கணும்னு தோணுது.. அவ எந்திரிச்சு வந்ததும் மத்த மாமியார்கள் மாதிரி எதுவும் கேட்காதீங்க…” என்றவன் எழுந்து தோட்டத்தின் பக்கம் சென்று விட்டான்.

 

அபர்ஜித் அப்போது தான் வீட்டினுள் நுழைந்தான். கோயிலில் வைத்து பார்கவி பார்த்த அந்த பார்வை. அதன் பின் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. அவளை நேர்கொண்டு பார்க்கும் துணிவும் தகுதியும் அவனுக்கு இருக்க வில்லை.

 

அதனால் தம்பியின் திருமணம் என்று கோயிலுக்கு வந்தவன் திருமணம் முடிந்த கையோடு பீச் ஹவுஸ் சென்று தங்கிக் கொண்டான்.

 

ஆனாலும் எத்தனை நாட்களுக்கு ஓடி ஒழிய முடியும், ஒரே வீட்டில் ஒன்றாக இருக்க வேண்டும், தம்பியின் மனைவி என்னும் வகையில் அவளுடன் நல்ல உறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

அதற்கு அவன் இயல்பாக இருந்தால் தான் அது சாத்தியம். எனவேதான் காலையில் வீட்டிற்கு வந்திருந்தான்.

 

வெகு நேரம் கழித்து எழுந்த பார்கவி தன் அருகில் இருந்த தலையணையை யோசனையாக பார்த்துவிட்டு எழுந்து சென்று நன்கு தலைக்கு குளித்தாள்.

 

வெளியே வந்து கண்ணாடியின் முன்பு நின்று தன்னைப் பார்த்தவளுக்கு விரக்தி புன்னகை தான் தோன்றியது.

 

குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டாள். தன்னை கண்ணாடியில் பார்த்தவளுக்கு எவ்வளவு முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

 

தன் கணவனை நினைத்து அந்த திலகத்தை வைக்க வேண்டும் என்று எத்தனை நாட்கள் தவம் இருந்தாள்.

 

ஆனால் இன்று நெற்றியில் இருக்கும் அந்த திலகம் துப்பாக்கி ரவை துளைத்த புன்னகத்தான் அவளுக்கு தெரிந்தது. உடனே கையினால் பரபரவென்று தேய்த்து அதை அழித்தவள் புருவங்கள் நடுவே ஸ்டிக்கர் பொட்டை வைத்தாள்.

 

இனி என்ன? என்ற அவளது கேள்விக்கு, உன் வாழ்க்கை வேறு விதமாக மாறிவிட்டது என்று உள்ளுணர்வு எடுத்துச் சொன்னாலும் அதை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளாமல், தயாராகி அவள் வெளியே வரவும்,

 

தனது அறையில் அலுவலகம் செல்வதற்காக தயாராகி அபர்ஜித் வெளியே வரவும் நேரம் சரியாக இருந்தது.

 

இருவரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள, பார்கவியின் உடலில் ஒரு விரைப்பு. அவள் அவ்விடமே நின்று விட, வேகமாக அவளை கடந்து டைனிங் டேபிளில் சென்று அமர்ந்து விட்டான் அபர்ஜித்.

 

அஸ்வந் ஏற்கனவே அங்கேதான் அமர்ந்திருந்தான். செவ்வந்தி இருவருக்கும் காலை உணவை எடுத்து வைத்தார். பார்கவி அங்கே செல்ல பிடிக்காமல் அறைக்கு போகலாம் என்று திரும்ப,

 

செவ்வந்தி அவளை பார்த்து விட்டு “பார்கவி! வாடா.. காஃபி தரட்டுமா?..” என்று கேட்க வாய் திறந்து பதில் சொல்லாமல் இல்லை என்று தலையை ஆட்டினாள்.

 

“சரி அப்ப வந்து உட்காரு சாப்பிடலாம்…” என்று சொல்ல அவரிடம் பதில் சொல்ல பிடிக்காமல், டைனிங் டேபிள் வந்து அமர்ந்தாள்.

 

செவ்வந்தி அவளுக்கும் சாப்பாட்டை பரிமாற, இரண்டு வாய் கூட சாப்பிட்டு இருக்க மாட்டாள், அவளது தொண்டை குழிக்குள் சாப்பாடு சிக்கிக் கொண்டது. எதிரில் இருந்த அபர்ஜித் மீதுதான் அவளையும் மீறி விழிகள் படிந்தன.

 

அவன் இயல்பாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து அறிவழகி அவனுக்கு ஃபோன் பண்ண, அதை காதில் இருந்த ப்ளூடூத்துடன் கனெக்ட் செய்தவன்

 

“சொல்லு அறிவு..”

 

“சீனியர்!.. இன்னைக்கு ஆஃபீஸ் வருவீங்களா என்ன..?”

 

“ஏன்?..”

 

“இல்ல.. இன்னைக்கு வர மாட்டீங்கனு நினைச்சேன்.. நேத்து தானே கல்யாணம் ஆச்சு…”

 

“லூசு அறிவு!.. எனக்கா ஆச்சு?..”

 

“வாய வச்சிட்டு சும்மா இருந்திருந்திங்கின்னா உங்களுக்கு தான் ஆகி இருக்கும்.. உங்களுக்கு கொழுப்பு…”

 

“நான் ஆஃபீஸ் வாரனோ இல்லையோ.. நீ ஆஃபீஸ் வந்துறாதா…”

 

“ஓஹோ! என்ன இன்டெரெக்ட்டா மிரட்டுறீங்க.. சரி சரி ஆஃபீஸ் வந்துட்டு எனக்கு ஹால் அடிங்க.. நான் ஒரு முக்கியமான வேலையில இருக்கேன்…” என்ன வெறுப்பேத்தாத

 

“கையில கிடைச்ச அவ்ளவு தான் நீ.. ஒழுங்கு மரியாதையா ஆஃபீஸ் வந்துரு…” என்று அவளுடன் பேசிக் கொண்டே சாப்பிட்டதால் அபர்ஜித்திற்கு புரை ஏறிவிட்டது. அவன் தலையில் தட்டி இருமிக் கொள்ள,

 

பரபரப்பாக மேஜையில் இருந்த தண்ணீர் ஜாரில் இருந்து கிளாஸில் தண்ணீரை ஊற்றி, அவன் புறம் நீட்டி இருந்தாள் பார்கவி.

 

ஒரு நொடி பொழுதில் அதை செய்துவிட்டாள். அதன் பிறகு தான் தெரிந்தது அவளையும் அறியாமல் அவள் உள் மனது உணர்ச்சிவசப்பட்டது.

 

எத்தனை இரவுகள் அவனுடனான இது போன்ற நிகழ்வுகளை கற்பனை செய்து இருப்பாள்.

 

அவளையும் அறியாமல் மனதளவில் அவனுடன் வாழ்ந்து கொண்டிருந்தவள் தானே. கற்பனையில் அவள் கண்ட காட்சிகள் அவளையும் மீறி கண் முன் நிஜமாக நடந்தன.

 

ஆனால் எத்தனை தவறான விடயம், கணவன் அருகில் இருக்க கணவனின் அண்ணன் மீது கரிசனம் . தண்ணீர் கிளாஸை பொத் என்று மெசேஜையில் போட்டவள், கண்ணீர் நிறைந்த கண்களோடு விறு விறுவென அவ்விடத்தை விட்டு தோட்டத்தை நோக்கி சென்று விட்டாள்.

 

அங்கிருந்த மூவருக்குமே தர்ம சங்கடமான நிலமை. அதிலும் அபர்ஜித்திற்கு அஸ்வந்தின் முகத்தை பார்க்க முடியவில்லை.

 

செவ்வந்தி நிலைமையை சரி செய்யும் பொருட்டு தண்ணீரை எடுத்து அபர்ஜித்திற்கு கொடுக்க, அதை குடித்தவன் மேற்கொண்டு சாப்பிடாமல் கையை கழுவி விட்டு அலுவலகம் சென்று விட்டான்.

 

அஸ்வந் இது எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடித்தவன் “அம்மா நான் இன்னைக்கு ஆஃபீஸ்க்கு போலாமா?..” என்று கேட்க ஏதோ யோசனை இருந்த செவ்வந்தி

 

“ஹா! ஆ.. நீ கிளம்பு…” என்று சொல்ல அவனும் எழுந்து தனது அறைக்கு சென்று தயாராகி, அலுவலகம் செல்ல வெளிய வந்து காரில் ஏறும் போது, தோட்டத்து பெஞ்சில் தலையை குனிந்தவாறு கண்களில் அலைப்புறுதலுடன் அமர்ந்திருந்த பார்கவியை பார்த்தான்.

 

அவளை பார்க்கும் போது அவனுக்கு பரிதாபமாகத்தான் இருந்தது. வீட்டிலேயே முழு நேரமாக இருந்தால் அவளது மனது மாற வாய்ப்பு குறைவு என்பதால் அவளை வேலைக்கு சேர்த்து விட நினைத்தான்.

 

பர்விதா ஏற்கனவே கூறி இருந்தாள் அல்லவா பார்கவிக்கு ஆசிரியையாக பணிபுரிய விருப்பம் என்று.

 

அதனால் அவனது அலுவலகத்துக்கு பக்கத்திலேயே இருக்கும் பாடசாலையில், அவனுக்கு தெரிந்த பெண் ஒருத்தி பணி புரிகின்றாள்.

 

அவளைக் கண்டு பார்கவிக்கு ஒரு வேலை வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் அலுவலகம் சென்றான்.

 

அஸ்வந்தின் அலுவலகத்துக்கும் அந்த பாடசாலைக்கும் ஒரே காம்போண்ட் சுவர் தான். அந்த பாடசாலையில் வேலை செய்யும் கண்மணி என்பவளை அவனுக்கு நன்கு தெரியும்.

 

அவளை தேடித்தான் பாடசாலைக்கு சென்று இருந்தான். ஆனால் அவள் பத்து நாட்கள் விடுமுறையில் இருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.

 

அவனிடமும் இந்த விடயத்தை அவள் கூறி இருந்தாள். இவனுக்கு தான் அவன் வாழ்வில் நடந்த குளறுபடியால் எல்லாமே மறந்து போயிருந்தது.

 

*******

அபர்ஜித் வழக்கம் போன்று பர்விதாவிற்காக காலேஜ் வாசலில் தவம் கிடந்து விட்டு, அலுவலகம் வந்து சேர்ந்தவன், அடுத்து என்ன என்பதை பற்றி அறிவழகியுடன் ஐடியா போட்டு ஓய்ந்து போனான்.

 

அவனது எண்ணம்போல் அடுத்த நொடி மாறுவதல்ல வாழ்க்கை. சில விடயங்கள் மாறுவதற்கும், காயங்கள் ஆறுவதற்கும் கால அவகாசம் கண்டிப்பாக வேண்டும்.

 

பார்க்கவியின் மனநிலையும் சரி பர்விதாவின் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியும் சரி உடனடியாக மாறிவிடாது.

 

அபர்ஜித் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் சரியாக வீட்டிற்கு வருவதில்லை, நேரம் சென்றே வந்தான்.

 

பார்கவி அவளது அறையிலேயே முடங்கி கொண்டாள். வெளியில் வந்தால் தானே அது போன்ற சங்கடங்கள், அவளையும் மீறிய செயல்கள் நடக்கக்கூடும்.

 

பாகவியின் வீட்டில் இருந்து சங்கரி அழைப்பை எடுத்து, புகுந்த வீட்டை அனுசரித்துப் போக வேண்டும், சந்தோஷமாக வாழப் பாரு, என்று அறிவுரைகளை வழங்க அவளுக்கு இருக்கும் மன அழுத்திற்கு இன்னும் மூளை சூடாகியது.

 

செவ்வந்தியிடம் எதுவும் பேசவில்லை, செவ்வந்தியாக பேச்சு கொடுத்தால் (ம்ம், ம்ஹும்) தான் பதிலாக இருந்தது.

 

அறையில் கூட அஸ்வந் இல்லாத நேரம் தான் இருப்பாள். அஸ்வந் வந்துவிட்டால் பால்கனிக்கு சென்று விடுவாள். அவளது சௌகரியம் தான் முக்கியம் என்பதால் அஸ்வந் நேரத்திற்கு தூங்கி விடுவான்.

 

அவன் தூங்கிய பின்னர் அறையினுள் வந்து சோஃபாவில் படுத்துக்கொள்வாள் பார்கவி.

 

அந்த ஐந்து நாட்கள் அஸ்வந்தும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை . மரு

மகள் வந்த பின்னர் வீடு கலகலப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்த செவ்வந்திக்குத்தான் ஏமாற்றமாக போனது. வீடு கலை இழந்ததை போல் இருந்தது.

 

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
12
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்