
காரின் வேகத்தை கூட்டி பத்து நிமிடத்தில் மருத்துவமனையில் நிறுத்த, அதில் யாருக்கு என்னவென்று பதறிய தியா “ரே எதுக்கு ஹாஸ்பிட்டல் யாருக்கு என்ன” என்று பதற,
அவளின் பேச்சை கண்டு கொள்ளாமல் காரைவிட்டு இறங்கியவன், பெண்ணவளின் பக்கம் வந்து கதவை திறந்து அவளையும் இழுத்து சென்றான்.
ஆடவனுடன் இழுப்பட்டு வந்த தியா, உடைந்து தலையில் கைவைத்து அமர்ந்திருக்கும் ஆர்யனை கண்டு மேலும் பதறி ரேயனை கையை உதறிவிட்டு அவனருகில் சென்றவள் “ஆர்யா யாருக்கு என்னடா ஆச்சு.. எதுக்கு இப்படி இருக்கிற” என்றும் அவன் நிமிராமல் இருந்ததில் நாடியை பற்றி தன்னை பார்க்கும் படி நிமிர்த்தியவள் “தியா.. இ..சை இ..சை” என்றவனுக்கு வார்த்தைகள் வர மறுக்க தமக்கையை கட்டி கொண்டு அழுதுவிட்டான்.
என்ன நிகழ்ந்ததிருக்கும் என்ற குழப்பத்திலிருந்த தியாவிற்கு, அவன் இசை என்று அழுததும்,
அவளுக்கு தான் ஏதோ நிகழ்ந்திருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு வேதனையில் கதறுவனிடம் நிலையை அறிந்து கொள்ள முடியாமல் யாழிசை நினைத்து கவலையுடனே தம்பியின் முதுகை வருடி கொடுத்தவள் “ஒன்னும் ஆகாதுடா அவளுக்கு.. நீ ரிலாக்சாகு” என்றவள் ரேயனை கவலையாக பார்க்க,
அவனும் என்ன நிகழ்ந்திருக்கும் என்று புரியாததில் ருத்தரனுக்கு மருத்துவமனை பெயரை அனுப்பிவிட்டு, அவனை தான் பாவமாக பார்த்திருந்தான்.
அப்போது ஒரு கையில் கட்டுடன் மறுகையில் குட்டி குழந்தையை பிடித்தவாறு மருத்துவரை பார்த்துவிட்டு வெளியே வந்த வாகினியை கண்டு பதறிய ரேயன் “வாகி டியர்.. என்னடி ஆச்சு” என்று குழந்தையை தன் கையில் இடம் பெயர்த்ததுவிட்டு,
அவளை கை தாங்கலாக அழைத்து வந்து தியாவின் அருகில் அமர வைத்திருக்க, தியாவும் “என்னாச்சி வாகி கைல.. குழந்தைக்கு ஒன்னும் இல்ல தான” என்றவள் தம்பியை தன்னை அணைத்திருந்ததால் குழந்தையுடன் ஆடவன் நின்றிருப்பதில் பிஞ்சு முகம் தெரியாமல் போனதில் தெரிந்து கொள்ள வாகியிடம் கேட்டு வைக்க,
அவளின் பதற்றம் புரிந்த வாகியும் “பேபிக்கு ஒன்னும் இல்ல.. பதறாத” என்றதும் தான் பெண்ணவளால் மூச்சே விட முடிந்தது, பிறகு அவளிடம் வாகி “உனக்கு எப்படி கைல அடிப்பட்டுச்சு.. யாழிசைக்கு என்ன.. முதல என்ன நடந்துச்சுன்னு தெளிவா சொல்லு” என்றதும் பெண்ணவளும் சிறிது நேரம் முன் நிகழ்ந்த சம்பவத்திற்கு இருவரையும் அழைத்து சென்றாள்.
*****
ஆடவர்கள் இருவரும் தியாவும் சென்றதும் யாழிசையும் வீட்டிற்கு வந்து சித்திராவுடன் இணைந்து படித்து கொண்டிருக்க, வாகியோ குழைந்தகள் இருவருடன் விளையாடி கொண்டிருந்தாள்.
அப்போது பட்டம்மாள் படித்து கொண்டிருந்தவர்களிடம் கோவில் போவதாக கூறிவிட்டு சென்றிருக்க,
அவர் செல்வதை அறையிலிருந்து கவனித்து வெளியே வந்த வாகி அங்கிருந்த பெண்களிடம் “பாட்டி எங்க போறாங்க” என்றதுக்கு சித்திரா “அது ஒன்னும் இல்ல அக்கா.. இன்னைக்கு அவங்க லவ்ஸ்க்கு பிறந்த நாளு சோ தாத்தா ஞாபகத்தில கொஞ்சம் ஃபீல் ஆயிடுவாப்படி.. அதான் அப்படியே கோவில் போயிட்டு பக்கத்துல பார்க் போயிட்டு ரிலாக்ஸ் பண்ணிட்டு வரும்” என்றதை ஓவென்று கேட்டு கொண்டு எதிரேயிருந்த நாட்காட்டி தேதியை பார்த்தவளுக்கு அவனின் அவளின் நினைவு வந்து விட்டது,
பின்னே இன்று அவனுக்கும் பிறந்த நாளல்லவா அன்றைய நாளில், அவன் செய்யும் சேட்டைகளை நினைத்து பெண்ணவளின் உணர்வுகள் வெடிக்க தயாராகி விட, மூச்சை இழுத்து பிடித்து கொண்டு குழந்தையுடன் மறுகையில் நிஷாவை பிடித்து அவர்கள் முன் வந்தவள் “கொஞ்சம் குட்டிங்கள பாத்துக்கங்கடா அக்கா ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துருறேன்” என்றதை கேட்டு கையிலுள்ள குழந்தையை வாங்கி கொண்ட யாழிசை “ஏன்கா மார்னிங் தான குளிச்சீங்க.. மறுபடியுமா” என்க,
சற்று தடுமாறிய வாகினி “இல்லடா கொஞ்சம் வெயில் அதிகமா இருக்கா.. சோ சுவெட்டிங்ல இரிட்டேட்டா இருக்கு.. அதான்” என்றவள் அடுத்து எதாவது கேட்டு விடுவார்களோ என்று அஞ்சி அறைக்குள் ஓடி கதவை அடைத்துவிட்டு குளியல் அறையில் ஷவரின் கீழ் நின்று தண்ணீரோடு தன் உணர்வுகளால் உண்டான கண்ணீரையும் சிந்தி கொண்டிருந்தாள்.
*****
படிப்பை ஓரம் கட்டிவிட்டு குழந்தை இருவருடனும் விளையாடி கொண்டிருக்க,
சித்திராவின் மடியில் அமர்ந்திருந்த நிஷா விளையாடிய களைப்பில் அப்படியே அவளின் மேலே சாய்ந்து உறங்கி விட்டாள்.
யாழிசை மடியிலிருந்த குழந்தை உறங்கி பின் விழித்து அழ தொடங்கிவிட, தட்டி கொடுத்து சமாதானம் படுத்தி மறுபடியும் உறங்க வைக்க முயற்சித்தும் தோல்வியாகி விட, சித்திரா தான் உறங்கி கொண்டிருக்கும் நிஷாவை சோஃபாவில் கிடத்திவிட்டு அழும் குழந்தைக்கு பால் எடுத்து வந்து கொடுத்தாள்.
சிறிது குடித்த குழந்தை, அதற்கு மேல் குடிக்காமல் வீறிட்டு அழ, பாவம் மங்கைகள் இருவரும் தான் எப்படி சமாதானம் படுத்துவது என்று தெரியாமல் திண்டாடி போயினர்.
பின் வாகினியை அழைக்க நினைத்து கதவை தட்டி பார்த்தும் அவள் குளியல் அறைக்குள் தண்ணீரில் இருந்த காரணத்தால் அவளுக்கு சத்தம் சரியாக கேட்காமல் போனதில் தோல்வியே தழுவியிருக்க,
குழந்தையோ விடாமல் அழுது கொண்டிருக்க, சத்தத்தில் நிஷாவும் முழித்து விடுவாள் என்று சித்திரா “யாழ் நான் குட்டிய தூக்கிட்டு போய் நம்ம காம்பவுண்ட் வால்க் போயிட்டு வரேன்.. காத்துட்டோமா போனா குழந்தைக்கு ரிலிப்பா இருக்கும்.. நீ நிஷா கூட இங்கயேயிரு” என்றுவிட்டு குழந்தையை தூக்கி கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்து வீட்டு கேட்டை கடந்ததே போயிட்டும் வந்துமிருக்க,
நிஷாவிற்கு தட்டி கொடுத்தவாறே யாழிசை அவளை கவனித்து கொண்டே இருந்தாள்.
மாறி மாறி அங்குமிங்கும் நடந்தவாறே குழந்தைக்கு தட்டி கொடுத்து சித்திரா நடந்து கொண்டிருக்க,
சட்டென்று பெண்ணவளின் முன் வந்த வண்டியில் பின்னே தலைகவசத்துடன் அமர்ந்திருந்தவன் பெண்ணவள் கையிலிருந்த குழந்தையை இழுக்க,
எதிர்பாராமல் நிகழ்ந்ததில் அதிர்ந்து நிதானித்து குழந்தையை மட்டும் விடாமல் இறுக்கி பிடித்தவள் “குழந்தைய விடு.. யாருடா நீங்க” என்று கத்த தொடங்கி விட,
சத்தம் கேட்டு தூங்கி கொண்டிருக்கும் நிஷாவை பார்த்துவிட்டு ஓடி வந்த யாழிசை குழந்தையை பறிக்க வந்தவர்களை கண்டு பதறி சித்திராவுடன் இணைந்து தானும் குழந்தையை பற்றி “குழந்தைய விடுடா..” என்று கத்தி கொண்டிருக்க, மூவரின் போராட்டத்தில் சமாதானமடைந்த குழந்தை மறுபடியும் அழ தொடங்கிவிட்டது.
அதே நேரம் சரியாக ஆர்யன் கார் வந்து நிற்க, பின்னே கார் வந்ததை கண்டு வண்டியின் பின்னே அமர்ந்திருந்தவன் யாழிசை வயிற்றிலே ஓங்கி மிதித்து தள்ளிவிட்டுருக்க,
தள்ளியதில் அங்கிருந்த கம்பத்தில் முட்டி கீழே விழுந்த யாழிசை வயிற்று வலியில் துடித்து கதறி விட்டாள்.
சித்திராவோ “யாழ்..” என்று கத்திவிட்டு தன்னை தள்ள முயற்சித்தவனிடமிருந்து குழந்தையை பரிக்க முயன்று கொண்டிருக்க,
யாழிசை கதறலை கேட்டு பதறியடித்து இறங்கிய ஆர்யா கண்கள் சொருகிய நிலையிலிருந்தவளின் கன்னத்தை தட்டி “இசை என்ன பாருடா” என்க, அவளோ நம்பியின் புறம் கை நீட்டி
அவர்களை காப்பாற்று என்க,
தன்னவள் கதறி கொண்டிருக்க இன்னொரு புறம் தங்கை நிலையை பார்த்தவன் எழுந்து செல்ல போக,
அப்போது அவ்விடம் வந்து சேர்ந்த வாகினி சித்திராவை பார்த்துவிட்டு யாழிசை ஆர்யன் புறம் திரும்பி “ஆர்யா.. நான் சித்திரா பாத்துக்குறேன் நீ யாழிசை பாத்துக்க” என்றுவிட்டு சித்திராவை நோக்கி ஓடினாள்.
ஆர்யன் கீழே இறங்கியதிலே முன்னால் தலைகவசத்துடன் அமர்ந்திருந்தவன் வண்டியை மெல்ல ஓட்ட தொடங்க சித்திரா குழந்தை விடாமல் பிடித்து தங்களுடனே தொடர்வதில் காண்டாகி பின்னால் அமர்ந்திருந்தவன் கத்தியை எடுத்து பெண்ணவள் வயிற்றிலே சொருகி விட்டான்.
அதில் கண்கள் கலங்கிய சித்திரா வலியை இதழ் கடித்து அடக்கி கொண்டே குழந்தையை மட்டும் விடாமல் ஓடி கொண்டிருக்க, அதில் அவள் வயிற்றிலிருந்த கத்தியை எடுத்து மறுபடியும் சொருகிய நொடி சித்திராவின் பிடி தளர,
அதை பயன்ப்படுத்தி பெண்ணவளை தள்ளிவிட்ட நொடி, அவர்களை நோக்கி ஓடி வந்த வாகி குழந்தையை பிடித்து கொண்டே வயிற்றில் கத்தி சொருகி ரத்தம் வடிந்த நிலையில் தள்ளாடி கொண்டிருந்தவளை பார்க்க, சித்திராவோ “அக்..கா குழந்..தை” என்று விழுந்து விட்டாள்.
அவளை காப்பாற்ற வேண்டுமென்று வெறியில் ஒரு கையில் குழந்தையை பிடித்தவாறு மறு கையில் பின்னிருந்தவனை தாக்கி கொண்டே ஓடிய வாகி, வலியில் அவனின் பிடி தளர்ந்த நேரம் குழந்தை தன் பக்கம் இழுத்து காத்த நொடி, அவனின் கையிலிருந்த கத்தி பெண்ணவளின் கையிலும் இழுத்து ரத்தம் வடிய தொடங்க, அதற்கு மேலும் போராடினாள் மாட்டி கொள்வோம் என்று ஆடவர்கள் வண்டியில் பறந்து விட்டனர்.
வாகியும் அழும் குழந்தையை நெஞ்சோடு அணைத்து பிடித்து பறந்தவர்களை அப்படியே விட்டு கீழே கிடந்த சித்திராவை நோக்கி வந்து பெண்ணவள் கன்னம் தட்ட, அதற்குள் யாழிசையை காரில் கிடத்தி காரை இயக்கிய ஆர்யன் சித்திராவையும் சேர்த்து அழைத்து செல்ல, வாகியின் கையிலும் வரும் ரத்தத்தை கண்ட ஆர்யன் “வாகி சிஸ்டர் நீயும் உள்ள ஏறு”
“இல்ல ஆர்யா.. நீ போ நிஷா தனியா வீட்டுல தூங்கிட்டு இருக்கா” என்று கை குழந்தையை தாங்கியப்படி கூறி கொண்டிருக்கும் போதே,
அவ்வழியாக நடந்து வந்த பட்டம்மாளை கண்டு கொண்ட வாகினி பட்டென்று காரின் பின்னே ஏறி இரு பெண்களையும் பிடித்து கொண்டு “ஆர்யா கார எடு” என்றுவிட்டு பட்டம்மாளுக்கு அழைப்பு விடுக்க,
ஆர்யன் கார் செல்வதை பார்த்த பட்டம்மாள் “இவன் என்ன அதுக்குள்ள கிளம்பிட்டான்” என்று எண்ணி கொண்டிருக்கவும் வாகினியிடம் அழைப்பு வர, அதனை ஏற்று காதில் வைத்ததும் “பாட்டி வீட்டுல நிஷா தூங்கிட்டு இருக்கா.. நீங்க அவளோட ஆட்டோ பிடிச்சு ஹாஸ்பிட்டல் வந்திருங்க.. அங்க வந்ததும் என்ன விஷயம்ன்னு சொல்லுறேன்.. நீங்க பதறாம வாங்க” என்று பக்கத்தில் இருக்கும் மருத்துவமனை பெயரை கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருக்க,
தன்னவளின் நிலையில் கண்கள் கலங்க மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் ஆர்யன்.
இரு பெண்களுக்கும் சிகிச்சை ஆரம்பிக்க, சித்திரா கத்தி குத்துப்பட்டிருப்பதால் மருத்துவர் தயங்க அதனை உணர்ந்து கொண்டு திறன்பேசியிலிருந்த தன்னுடைய பழைய அதிகார அட்டையை காட்டி சிகிச்சையும் கொடுக்க வைத்துவிட்டு தன்னுடைய கை காயத்திற்கும் கட்டியிட சென்றாள் என்று இருவருக்கும் நிகழ்வை கூறி முடிக்கவும், அனைத்தையும் கேட்ட ருத்ரன் “சிட்டு” என்று உடைந்து மண்டியிட்டு கதறி விட்டான்.
அவனின் வரவை எதிர்பார்க்காமல் அங்கிருந்தவர்கள் அவன் நிலையில் அதிர, ரேயன் அவனை தூக்கி “மச்சி தேவிக்கு ஒன்னும் ஆகாதுடா” என்க, ருத்ரனோ “மச்சான்” என்று அவனை தாவி அணைத்து கொண்டான்.
ரேயனும் நண்பனுக்கு ஆறுதல் கூற, இன்னொரு பக்கம் வாகி கதை கூறவும் தன்னவளின் நினைவில் உதறல் எடுக்க தமக்கையின் தோலில் சாய்ந்து கொண்ட ஆர்யனின் கையை ஆதரவாக பற்றிய தியா நண்பனின் நிலையோடு உள்ளே சிகிச்சையிலிருந்த இரு பெண்களின் நிலமையும் நினைத்து கண்களும் கலங்க தயாராக, தானும் உடைந்துவிட்டால் சரியாக இருக்காது என்று உள்ளுக்குள் புழுங்கியவள் வெளியே இருவருக்கும் ஆதரவாக இருக்க,
அவளின் உணர்வு புரிந்து வாகி அவளின் கைக்கு அழுத்தம் கொடுத்தாள்.
அதன் பின் பாட்டியும் வந்துவிட அவருக்கு பட்டும்படாமல் விஷயத்தை கூறி அங்கே ஒரு அறை எடுத்து குழந்தைகளை அவருடன் தங்க வைத்தார்கள்.
*****
அனைவரும் மருத்துவமனைக்கு வந்து ஒரு மணிநேரம் கடந்து விட, இரு பெண்களின் நிலை பற்றி இன்னும் தகவல் வராததில் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆதரவாக பிடித்து கொண்டு கலவரமாகவே அமர்ந்திருந்தார்கள்.
முதலில் யாழிசையை சோதனை செய்த மருத்துவர் வெளியே வந்து “யாழிசை ஹஸ்பண்ட்” என்று அழைக்க,
“நான் தான் டாக்டர்.. என் இசை எப்படி இருக்கா டாக்டர்” என்று ஆர்யன் முன்னே செல்ல, அவனின் பின்னயே மற்றவர்களும் சூழ்ந்து கொண்டனர்.
பின் மருத்துவரோ “சார் அவங்க ப்ரெக்னன்ட்டா இருக்காங்கன்னு தெரியும் தான.. இப்படி தான் கேர்லெஸா இருப்பீங்களா” என்று கத்திவிட்டு “அவங்களுக்கு அபார்ட் ஆயிடுச்சு.. ஓவர் பிளீடிங் வேற ஆகுது சோ லேட் பண்ணாம நாங்க முழுசா க்ளீன் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டோம்.. நீங்க ரிசப்ஷன்ல பஃபார்மிலிட்டீஸ் முடிச்சி சைன் பண்ணி கொடுத்துருங்க” என்றதை கேட்டு அனைவரின் மனமும் கனமாகிவிட,
தன் உயிரில் உருவான குழந்தை இல்லையென்றாலும் அவளின் கர்ப்பம் தெரிந்த நொடியிலிருந்து அவள் குழந்தையை தன் குழைந்தாக நினைக்க தொடங்கிய ஆர்யாவிற்கு அவ்வுயிர் மண்ணை அடையும் முன் கரைந்து விட்டதை நினைத்து வேதனையாக இருந்தாலும் தனக்குள் மறைத்துவிட்டு பெண்ணவளின் நலத்தை கருதி,
செல்ல போன மருத்துவரை தடுத்தவன் “டாக்டர் என் இசைக்கு ஒன்னும் ஆகாது தான..” என்று உடைந்து பேசுவனின் உணர்வு புரிந்து தோலை தட்டி கொடுத்த மருத்துவர் “டோண்ட் வொர்ரி மிஸ்டர் ஆர்யன்.. அவங்க உயிருக்கு எந்த ஆபத்தும் என்ன அபார்ட்டானதுல மெண்டலி அண்ட் பிசிகல்லி வீக்கா இருப்பாங்க.. நீங்க தைரியமா அவங்க பக்கத்துல இருந்தா அவங்கள ஈஸ்யா வெளியே கொண்டு வந்துருரலாம் பீ ஸ்ட்ராங்” என்று சொல்லிவிட்டு சென்று விட,
ஆடவனுக்கோ தன்னவள் தன்னிடம் வந்து விடுவாள் என்பதே இப்போதைக்கு போதுமானதாக இருக்க, பெண்ணவளை எப்படியும் தன்னால் சரி செய்து விட முடியும் என்ற நம்பிக்கையில் மருத்துவர் கூறியவற்றை கவனிக்க செல்ல, தியா ரேயனுக்கு கண்ணை காட்ட, அதன் அர்த்தம் புரிந்து ஆர்யன் பின்னே சென்று விட்டான்.
சித்திராவை நினைத்து உணவற்று அமர்ந்திருந்த நண்பனின் அருகில் அமர்ந்த தியா அவனின் தலையை தன் தோலோடு சாய்த்து தாய் போல் அணைத்து கொண்டாள்.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍
