Loading

காதல் – 54

 

கோர்ட்டில் சுலோச்சனா மற்றும் அனந்தி ஆகிய இருவரும் கொலை செய்ய துணிந்த காரணத்திற்காக இருவருக்கும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை கோர்ட் விதித்தது…….

 

அஸ்வதி தன்னால் தன்னுடய தாயாருக்கும் தங்கைக்கும் இப்படி ஆகிவிட்டதே என்று கவலையில் கோர்ட்டு வாசலில் நின்று அழுது கொண்டே நின்றாள் அப்பொழுது அவளிடம் அவளின் பால்ய கால நண்பர்கள் இருவரும் பேசினார்கள்…..

 

அந்த நண்பர்கள் யார் என்றால் ……

 

அஸ்வதியின் சிறு வயது ஆசிரம தோழன் தோழியான மதன் மற்றும் வள்ளி ஆகிய இருவரும் வளர்ந்து பெரிய போலீசாக அவள் முன் நின்றனர் அவர்கள் இருவருக்கும் தன்னுடைய காதலனான விஹானை நன்கு தெரிந்திருந்தது அது எப்படி என்று அவர்கள் இருவரிடமும் கேட்டுக் கொண்டிருந்தாள்……

 

எப்படி என்னோட விஹான உங்க ரெண்டு பேருக்கும் தெரியும்?

 

நா , விஹான், ஹர்ஷா , வள்ளி எல்லாரும் ஒன்னா தான் காலேஜ் படிச்சோம் ஆனா அப்போ அங்க எல்லாருக்கும் ஹர்ஷா ஆஷ்ரமத்துல  எங்க கூட ஒன்னா வளந்த பசங்கன்னு தெரியாது …….

 

அப்போ நீயும் வள்ளியும்  சின்ன வயசுல இருந்தே ஓன்னாதான்  இருந்தீங்களா?

 

ஆமா அஸ்வா, புது ஆசிரமத்துக்கு எங்கள கூட்டிட்டு போனாங்க அப்புறம் நாங்க எல்லாரும் காலேஜ் படிக்க வேற வேற இடத்துக்கு போயிட்டோம் சோ நானும் வள்ளியும் ஒன்னா காலேஜ் படிச்சி ஒரே வேலையில இருக்கிறதுனால நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்குறோம்……

 

துவாயி , சூர்யா  ரெண்டு பேரும் இப்போ எங்க  இருக்குறாங்கன்னு  தெரியுமா?

 

தெரியல அஸ்வா……

 

ஆமா விஹான் என்ன சொன்னாங்க?விஹானுக்கு எப்படி நீங்க ரெண்டு பேரும் என்னோட ஃப்ரெண்ட்ஸ்ன்னு தெரியும்?

 

அந்த விஷயத்த உன்னோட ஆள் கிட்ட நீ தான் கேட்கணும்,  ஆமா அந்த கொடூர பொம்பள சுலோச்சனாவும் அவளோட பொண்ணு அனந்தியும் உன்ன கொல்ல பாத்துருக்காங்க ஆனா அவங்க ரெண்டு பேரும் ஜெயிலுக்கு போறத பாத்து நீ அழுவுற , நீ என்ன லூசா??

 

தெரியல மதன்  ஆனா அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்படுறதை பார்த்தால் எனக்கு கஷ்டமா இருக்கு…….

 

ஹே வள்ளி இன்னும் இவ திருந்தலடி…..

 

டேய் நீ சும்மா இருடா …..

 

அஸ்வா அவங்க ரெண்டு பேரும் தப்பு செஞ்சிருக்காங்க அதுக்கான தண்டனைய அனுபவிக்கிறாங்க அவ்வளவுதான் நீ வருத்தப்படாத நாங்க உன்ன உன்னோட வீட்டுல கொண்டு போய் விடுறோம் வா என்று மதனும் வள்ளியும் அஸ்வதியை அவளின் வீட்டில் கொண்டு போய் விட்டனர்…….

 

பிறகு அஸ்வதி விஹானுக்கு போன் செய்தாள் ஒரே  ரிங்கில் அவளுடைய போனை விஹான் எடுத்து விட்டான்……

 

சொல்லுங்க செல்ல குட்டி , கோர்ட்டு, கேஸ் எல்லாம் முடிஞ்சிடுச்சா?

 

எல்லாம் முடிஞ்சிடுச்சி, ஆமா உங்களுக்கு எப்படி மதனும் , வள்ளியும் என்னோட சின்ன வயசு பிரெண்ட்ஸ்ன்னு உங்களுக்கு தெரியும்?

 

நீ நேத்து என்கிட்ட இந்த கேஸ் பத்தி சொன்னல்ல , அதான் சென்னையில இருக்குற என்னோட போலீஸ் பிரண்டு கிட்ட சொன்னேன் அப்போ அவன் தான் சொன்னான் இந்த கேசுக்கு அவன்தான்  இன்சார்ஜ்ன்னு அப்புறம் ரொம்ப நேரம் நாங்க காலேஜ்ல இருந்த நாட்களை பத்தி பேசிட்டு இருந்தோம் அப்போ எனக்கு ஒரு சின்ன டவுட் வந்துச்சு மதனும் வள்ளியும் சென்னையில ஆசிரமத்தில் வளர்ந்து பசங்கன்னு என்கிட்ட மட்டும்  சொல்லி இருக்காங்க அதான் அவங்க உன் பிரண்ட்ஸா இருக்குமோன்னு ஒரு டவுட் அதான் உன்னோட சின்ன வயசு போட்டோவ மதனுக்கு அனுப்பி நா கேட்டேன் அவனும் அவன் கிட்ட இருந்த போட்டோவ எனக்கு  அனுப்பினான் அப்பதான் கன்பார்ம் ஆச்சு……….

 

விஹான் நா எவ்வளவு சந்தோஷமா இருக்குறேன்னு தெரியுமா ??!என்னோட சின்ன வயசு பிரண்ட்ஸ்ல்ல மூணு பேரு கிடைச்சிட்டாங்க இன்னும் ரெண்டு பேரு தான் இருக்காங்க அவங்களயும் நா சீக்கிரமா பார்த்துடனும் விஹான்……

 

கண்டிப்பா கண்டிப்பா….நீ சீக்கிரமா அவங்கள சந்திப்ப, ஆமா கோர்ட் வாசல்ல வச்சு சுலோச்சனாவையும் , அனந்தியையும் ஜெயிலுக்கு கூட்டிட்டு போகும் போது அத பாத்து  அழுதையாமே?

 

இல்ல….

இல்லையே நா நா….

நா ஏன் அவங்க ரெண்டு பேரயும் ஜெயிலுக்கு போறத பார்த்து அழுக போறேன்?

 

அப்போ நீ அழுகல?

 

ஆ…..ஆமா……

 

எங்க என்னோட கண்ண பார்த்து சொல்லு……..

 

விஹான் என்ன மன்னிச்சிடுங்க நா உங்ககிட்ட பொய் சொல்லிட்டேன் ஆமா நான் அழுதேன் ஏன்னா எனக்கு தெரியல நா எதுக்கு அழுதேன்ன்னு என்று அஸ்வதி அழுக ஆரம்பித்தாள்……..

 

அஸ்வதி கண்ணா அழாதே……

 

என்ன மன்னிச்சிடுங்க விஹான்…..

 

சரி விடு ,நீ சாப்பிடியா?

 

இல்ல விஹான் , இனி தான்…..

 

நேரம் என்ன ஆகப்போகுது இன்னும் சாப்பிடாம என்ன பண்ற போ போய் சாப்பாடு எடுத்து போட்டு சாப்பிடு…..

 

இல்ல விஹான் அவங்க எந்த சாப்பாடுல சயனைடு கலந்திருக்காங்கன்னு தெரியல அதான் இங்க சாப்பாடு சாப்பிட பயமா இருக்கு……..

 

கரெக்ட் தான் நீ இன்னைக்கு உங்க வீட்ல சாப்பிட வேணாம் வெளிய போய் எதவாது சாப்பிட்டு வா ,நா மதனயும், வள்ளியையும் வர சொல்லுறேன் என்று அவன் மதனயும், வள்ளியையும் அழைத்து தன் காதலியோடு இரவு உணவு உன்னுமாறு கூறினான்……

 

அஸ்வதி கிளம்பி தயாராக இருக்க மதனும் வள்ளியும் அஸ்வதியை அழைத்துக்கொண்டு ஒரு ஹோட்டலுக்கு  சென்றனர்…….

 

ஹே அஸ்வா…..

 

சொல்லுடா மதன்…..

 

உன்னோட ஆளு உன்மேல ரொம்ப பாசம் வச்சிருக்கான் போலயே?நைட்டு சாப்பாடு நீ சாப்பிடுறதுக்கு நாங்க ரெண்டு பேரும் உனக்கு காவல் என்ன?

 

காவலா???

 

பின்ன என்னவாம்?

 

டேய் மதன் சும்மா இருடா , அஸ்வா நம்ம மூனு பேரும் சேந்து இப்படி சாப்பிட்டு எவ்வளோ நாள் ஆச்சு?

 

ஆமா வள்ளி அப்போ எனக்கு ஒழுங்கா சாப்பிட தெரியாது சாப்பாட்டை சிந்தி சிந்தி சிந்தி சாப்பிடுவேன் அப்போ இந்த மதன் தான் எனக்கு ஒழுங்கா சாப்பாட்ட ஊட்டி விடுவான் அதெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா மதன்?

 

நல்லா ஞாபகம் இருக்குடி, சரி இப்போ நீ என்ன சாப்பிடுற?

 

இந்த ஹோட்டல்ல என்ன ஃபேமஸ்? என்ன சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும்?

 

ஏய் என்னடி நீ அப்படியே விஹான் கேக்குற மாதிரி கேக்குற?அவன்தான் எந்த ஹோட்டல் போனாலும் இந்த ஹோட்டல் என்ன பேமஸ் , என்ன சாப்பாடு ரொம்ப நல்லா இருக்கும் அப்படின்னு கேட்பான் அவனை மாதிரி நீயும் கேக்குறியே?

 

நானும் விஹானும் காஷ்மீர்ல போகாத ஹோட்டலே கிடையாது,  நிறைய இடம் சுத்தி பார்ப்போம் அப்போ விஹான் கூடயே இருந்து இருந்து அவங்க பேச்சு வழக்கு அப்படி எனக்கு வந்துருச்சு என்று அஸ்வதி சிரித்தாள்……

 

சரிதான் இப்போ என்ன சாப்பிடுற? இந்த ஹோட்டல்ல புரோட்டாவும் நாட்டுக்கோழி கறியும் ரொம்ப ஃபேமஸ் அது சாப்பிடுறியா?

 

ஓகே டன் எனக்கு புரோட்டாவும் நாட்டுக்கோழி கறியும் என்று அஸ்வதி கூறினாள் ……..

 

மதன் எனக்கும் நாட்டுக்கோழி கறியும் புரோட்டாவும் போதும்…….

 

எனக்கு புரோட்டாவும் மட்டன் கறியும் போதும் என்று அந்த சர்வரிடம் ஆர்டர் கொடுத்து விட்டு அவர்கள் மூவரும் தங்களின் பால்ய காலத்து சிநேகம் பற்றி சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்……

 

பிறகு அவர்களுக்கு அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்துவிட அஸ்வதி புரோட்டாவை பிய்க்க தெரியாமல் பிய்த்துக் கொண்டு இருந்தாள், அதைப் பார்த்த மதன் அவளுக்கு அழகாக புரோட்டாவை பிய்த்துக் கொடுத்தான்…..

 

பிறகு அஸ்வதியை அவள் வீட்டில் விட்டுவிட்டு மதனும் வள்ளியும் சென்றனர்……

 

பிறகு எப்பொழுதும் போல  அஸ்வதி தன்  காதலனுடன் வீடியோ காலில் பேசி சிரித்துக்கொண்டே தங்களின் நாட்களை நகர்த்தினார்கள்……

 

இப்படியே ஐந்து மாதங்கள் கடந்து சென்றதும்……

 

அன்று அஸ்வதி தன் வகுப்பிற்குள் செல்லும்போது அவள் வகுப்பில் ஒரே சத்தமாக இருந்தது…….

 

சைலன்ஸ் சைலன்ஸ் ஏன் இப்படி எல்லாரும் சத்தமா பேசிட்டு இருக்கீங்க?பக்கத்து பக்கத்துல தானே உக்காந்துட்டு இருக்கீங்க மெதுவா பேசுனா என்ன?  அங்க வெளியே வர உங்க சத்தம் கேக்குது, என்ன விஷயம்?ஏன் இவ்வளவு சத்தம்?

 

மேடம் மேடம் எங்களுக்கு டூர் போக சர்குலர் வந்துருக்கு,  அதுக்கு நீங்கதான் இன்சார்ஜ் மேடம் அதான் சந்தோஷத்தில் குதிச்சிட்டு இருந்தோம் என்று வகுப்பின் ரெப்ரசென்டேட்டிவ் கூறவும் அஸ்வதிக்கும் அவர்களின் சந்தோஷம் தொற்றிக் கொண்டது…..

 

சரி சரி சைலன்ஸ் ஆமா எந்த ஊரு கூட்டிட்டு போகப் போறாங்க?

 

மேடம் நம்ம எல்லாரும் காஷ்மீர் போக போறோம் மேடம் என்று அனைத்து மாணவர்களும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தனர்……

 

என்னது காஷ்மீரா என்று  அஸ்வதியும் அந்த ஊரின் பெயரை கேட்டு சந்தோஷத்தில் மாணவர்களுடன் குதித்தாள்…….

 

சரி சரி நா மத்த டீடெயில்ஸ் எல்லாம் ஆபீஸ்ல கேட்டுட்டு வரேன் அதுவரை எல்லாரும் அமைதியா இருக்கணும் சரியா?

 

அஸ்வதி ஆஃபீசுக்கு சென்று தங்களின் தன்னுடைய வகுப்பில் உள்ள  மாணவர்களை இன்ப சுற்றுலா அழைத்து செல்வது பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டு வந்தாள்…….

 

அஸ்வதி வகுப்பிற்குள் நுழையும் போது அனைத்து மாணவர்களும் அவள் என்ன கூற போகிறான் என்று ஆர்வமாக காத்துக் கொண்டிருந்தனர்…….

 

ஸ்டுடென்ட்ஸ் நம்ம மொத்தம் எல்லாரும் சேர்த்து அம்பது பேர் இருக்குறோம் அதனால ஆளாளுக்கு நாற்பத்தி ரெண்டாயிரம் சொல்றாங்க ,நா லெஸ் பண்ண சொல்லி கேட்டிருக்கேன் , அப்புறம் நம்ம சென்னையிலிருந்து டெல்லிக்கு ஒரு பிளைட்ல போறோம் அப்புறம் டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு ஒரு ஃப்ளைட்ல போறோம் அப்புறம் ஸ்ரீநகரில இருந்து நம்ம தங்க போற இடத்துக்கு ஒரு பஸ்ல போறோம் அப்புறம் நமக்கு ஸ்டே பண்ற இடத்துலேயே சாப்பாடு ப்ரொவைட் பண்ணிடுவாங்க நம்ம சுத்தி பார்க்குறதுக்கும் கைடு அரேஞ்ச் பண்ணியாச்சு இவ்வளவுதான் பிளான் உங்களுக்கு ஓகேவா?

 

ஓகே மேடம் ……

 

எனக்கு புரியுது அமௌன்ட் கொஞ்சம் அதிகம் தான் அப்படின்னு ஆனா உங்கள பஸ்ஸிலயும் ட்ரெயினிலயும் கூட்டிட்டு போனா ரொம்ப அலச்சல்,  எல்லாருக்கும் முடியாம போயிடுச்சுன்னா என்ன பண்றது? அதான் கொஞ்சம் காஸ்ட்லியா இருந்தாலும் சேபா போயிட்டு வந்துடலாம்ன்னு நினைக்கிறேன் நீங்க என்ன நினைக்கிறீங்க?

 

எங்க எல்லாருக்கும் ஓகே மேடம் ஆனா சில்பா , சோனா, ஷங்கர் மூனு பேரும் இவ்வளவு நேரம் வரேன் அப்படின்னு சொல்லிட்டு டூர் அமௌன்ட் கேட்டுட்டு வர மாட்டேன்னு சொல்றாங்க மேடம்…….

 

அஸ்வதி அந்த ஷில்பா, சோனா ,ஷங்கர் ஆகிய மூன்று பேரையும் பார்த்தாள் அவர்கள் மூவரும் சோகமாக அமர்ந்து கொண்டிருந்தார்கள்……

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்………

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்