Loading

நிவேதா கோபத்தில் தனது கணவனிடம் சண்டையிட்டு இருந்தாலும் ,அதன் பிறகு எப்பொழுதும் போல் நார்மல் ஆகிவிட்டாள்.

பதினோராவது மாதம் இருக்கும் பொழுது நெருங்கிய உறவுகளை மட்டும் கூப்பிட்டு வசந்த் நிவேதாவின் பெண் குழந்தை சன்விகா விற்கு காது குத்தப்பட்டது..

காது குத்து விழாவிற்கு தனது நண்பனைக் கூப்பிட்டு இருந்தாள்..

“இல்லடி நான் வரல. நான் அங்க வந்தா சரிப்பட்டு வராது.. அது மட்டும் இல்லாம அப்பா இறந்து 1 வருஷம் கூட ஆகல, உங்க குலதெய்வ கோயில் துஷ்டமான சாமி..நான் வரவும் கூடாது..” என்றான்.

” சரிடா.. நீ கோவிலுக்கு வரவேண்டாம்.. வீட்டுக்கு வா” என்று கூற..

” வீட்டுக்கு வந்தா இன்னும் பிரச்சினையாகிடும்.. உனக்கு தான் பிரச்சனையாகும்.. மாமா எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டாரு நம்பிக்கை இருக்கு. ஆனா, உங்க வீட்ல இருக்கவங்க ஒன்னுக்கு ரெண்டா காது வச்சு பேசுவாங்க. தேவையில்லாத வேலை எதுக்கு நீ பாரு ” என்று விட்டான்.

அவளுக்கு சிறிது வருத்தமாக இருந்தாலும் ஏற்கனவே தன்னிடம் நடந்து கொள்வதை வைத்து இவர்கள் தப்பாக சித்தரித்தாலும் சித்தரிப்பார்கள் என்று எண்ணி அமைதியாகிவிட்டாள் .

தன்னுடைய தோழிகளையும் காதுகுத்திற்கு கூப்பிட்டு இருந்தாள்.

அப்போது சரண்யா தான் வரும் பொழுது நவி வாங்கி கொடுத்த, பொருட்களை கொண்டு வந்தாள். ஒரு உடையும் ,குழந்தைக்கு சின்ன சின்ன பொம்மைகளாக கொஞ்சமும் வாங்கிக் கொடுத்து அனுப்பி இருந்தான்.. அவனால் முடிந்த அளவிற்கு..

“இதெல்லாம் எதுக்கு சரா வாங்கிட்டு வந்திருக்க?” என்று நிவே கேள்வி எழுப்ப.

சுற்றி ஆட்கள் இருப்பதால், எதுவும் பேசாமல் சரண்யா சிரித்தபடி அமைதியாகி விட்டாள்.

நிவேதா . அதன் பிறகு, தான் அது நவி வாங்கி கொடுத்து அனுப்பி இருப்பான் என்பதை  உணர்ந்தாள்.. காது குத்து விழாவும் விமர்சையாக முடிந்திருந்தது..

அடுத்த ஒரு மாதத்தில் குழந்தைக்கு முதல் வருட பிறந்தநாள்..” கொஞ்சம் அக்கம் பக்கம்  மட்டும் கூப்பிடலாம் “என்று நிவே கேட்டதற்கு,

” வேணாம் இப்போ நம்ப கூப்பிட்டு கொஞ்சம் பெருசா பிறந்தநாள் கொண்டாடினா தப்பாயிடும். என் அண்ணன் பையன் பிறந்தநாளுக்கு யாரையும் கூப்பிடல அதனால இப்ப நம்ம கூப்பிட்டா தப்பா பேசுவாங்க..” என்றான்.

அவனை அமைதியான முகத்துடன் பார்த்தவள், எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டாள்.

பிறந்தநாள் விழாவும் கொண்டாடிவிட்டு, கேக் மட்டும் குழந்தை சன்விகாவை அழைத்துக் கொண்டு சென்று நெருங்கிய ஒரு சில உறவுக்கும், அக்கம் பக்கம் வசந்த் கொடுத்து விட்டு வந்தான்.

அதுவரை அமைதியாக இருந்தவள் … ”  கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க கேக் மட்டும் எதுக்கு குடுக்குறீங்க?”

“இது நமக்காக டி..  நீ ஆசைப்பட்டதுக்காக, என்னோட ஆசையும் கூட..”

” அப்ப அவங்களை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கலாம் இல்ல ?”

“சரிப்பட்டு வராது டி..அதான்” என்றான் ஒற்றை வார்த்தையில்,

“எனக்கு புரியல.. ஆனா, பாப்பா பிறந்ததுக்கு அப்புறம் நீங்க கொஞ்சம் வித்தியாசமே நடந்துக்குறீங்க?”

“அப்படி  எல்லாம் இல்லடி.. நான் எப்பவும் போல தான் இருக்கேன்.. ஒரு சில விஷயத்தை நம்ப புதுசா செய்யும் போது பிரச்சனை ஏற்படும்ல அந்த பிரச்சனையை  தவிர்க்கிறதுக்காக மட்டும்தான்.. மத்தபடி எனக்கு என் பொண்ணோட பிறந்தநாளை விமர்சையா செய்யக்கூடாது என்றோ ,உன் ஆசையா நிறைவேற்ற கூடாது என்றோ இல்ல..”

“ஏதோ சொல்றீங்க போங்க..” என்று அமைதியாகி விட்டாள்.

குழந்தைக்கு ஒரு வயது முடிந்து முதல் பிறந்தநாள் முடிந்ததிலிருந்து அடிக்கடி அவளிடம் சுற்றி உள்ளவர்கள் இரண்டாவது குழந்தை எப்போ என்று கேள்வி எழுப்பியிருக்க.

இவளுக்கு தான் ஐயோ என்று இருந்தது ..இன்னும் முதல் குழந்தையே முழுமையாக வளர்க்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்க.. இதில் உடனே இரண்டாவது குழந்தையா?  என்று எண்ணினாள்.

வசந்த்  அவளிடம் ஒரே வார்த்தையாக,” இப்போதைக்கு நமக்கு இரண்டாவது குழந்தை பத்தி யோசிக்கிற ஐடியாவில் மனநிலையில் இல்ல டி.. இப்போதைக்கு இன்னும் கொஞ்சம் நாளைக்கு நமக்கு பாப்பா மட்டும் போதும் .அவங்க சொல்றாங்க, இவங்க சொல்றாங்கன்னு யோசிக்காத. யாரு வேணாலும் என்ன வேணாலும் சொல்லலாம் ..யாரும் புள்ளையை வளர்த்து தர போறது கிடையாது. நம்ப விருப்பப்பட்டு நமக்கு தோணும் போது அடுத்த குழந்தையை பத்தி யோசிப்போம். இப்போ பாப்பாவ நல்ல வளர்க்கிறத பத்தி மட்டும் யோசிப்போம்” என்று கூறியிருந்தான் .

அவளும் அதன் பிறகு மகிழ்ச்சியுடன் இருந்து விட்டாள். அடுத்தவர்கள் கூறுவதற்காக இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாதே..

அவன் அவளுக்கு வாக்குறுதி கொடுத்தது போலவே குழந்தைக்கு இரண்டு வயது ஆகி சன்விகா ஓர் அளவிற்கு ஓடி யாடி விளையாட ஆரம்பித்தவுடன், அவளை காலேஜுக்கு அனுப்பி படிக்க வைக்க முடியாது என்று எண்ணியவன்,” வீட்டிலிருந்து படிப்பது போல் கரசில் போட்டு மேற்கொண்டு படிக்கிறியா?  என்னால உண்மையா பாப்பாவ விட்டு பிரிஞ்சி இருக்க முடியாது.. நீ ரெகுலரா காலேஜ் போற மாதிரி இருந்தா ,பாப்பாவ என்னால தனியா பார்த்துக்க கஷ்டமாவும் இருக்கும் டி ..இல்லனா உங்க அம்மா வீட்டுக்கு பாப்பாவை அனுப்புற மாதிரி இருக்கும்.. எனக்கு நீயும் அவளும் எப்பவும் என் கூட வேணும். என்னால அவளையும் , உன்னையும் பிரிஞ்சி இருக்கிறது கஷ்டம்..”என்று தன்னிலையும் எடுத்துக் கூறியவன், அவள் மேற்கொண்டு படிப்பையும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் அவளிடம் கூறினான்..

புன் சிரிப்புடன் ” சரி “என்று சம்மதித்தவள்.. அவன் கூறியது போலவே மேற்கொண்டு படிப்பை  தொடர…கரசில் போட்டுவிட்டு வந்தாள்.. கரசில் போட்டதால் வருடத்திற்கு ஒரு முறை எக்ஸாம் எழுதினால் போதும் என்று கூறி இருந்தார்கள்.

சரி என்றபடி வீட்டில் அவ்வப்போது படிக்க வசந்த் கூறினான்..

” தினமும் காலேஜ் போற மாதிரி இருந்தா தான், டெஸ்ட் வைப்பாங்க படிக்கணும்.. நடத்துவாங்க.. இது நானா சொந்தமா தான் படிக்கணும். தினமும் படிக்கிறதை விட எக்ஸாமுக்கு கொஞ்ச நாள் முன்னாடி படிக்க செய்றேன்.. இப்போ படிச்சாலும் மறந்துடும்.. இப்ப பாப்பாவையும் , உங்களையும் வீட்டையும் பார்த்துக்கிறேன்.. நீங்க என் மேல வச்சிருக்க நம்பிக்கையை காப்பாற்றுவேன்.. நல்லா படிச்சு உங்க பேர காப்பாத்துவேன்” என்று உறுதியளிக்க..

சிரித்தவன்” சரி” என்று அமைதியாகி விட்டான் ..

குழந்தைக்கும் இரண்டு வயது பூர்த்தி அடைந்திருக்க.. சன்விகாவிற்கு இரண்டு வயது இரண்டு மாதம் முழுமையாக முடிந்த நிலையில் நிவேதாவுக்கு ரெண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற ஆசை , எண்ணம் தோன்றியது..

தன் கணவனிடமும் அவளின் விருப்பத்தை கூற..

” இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் வேதா. பாப்பாக்கு மூணு வயசு ஆகட்டும். ஸ்கூல் போகட்டும்..  “என்றான்.

“நம்ப என்ன பிளான் பண்ணாலும் எப்போ குழந்தை தங்குமோ அப்பதான் தங்கும்.. அப்படி உடனே தங்குனா கூட பாப்பா ஸ்கூலுக்கு போக கரெக்டா இருக்குமில்ல.. நம்ப மூணு வயசுல ஸ்கூல் செத்துருவோமில்ல ” என்றாள்..

” சரி உன்னோட விருப்பம். ஆனா, குழந்தை வேணும்னு மாசம் மாசம் ஏங்காத.. வரும்போது வரட்டும். அதுக்கு ஏத்த மாதிரி நம்ம எப்பயும் போல இருந்துக்கலாம்.. பார்த்து சூதானமா இல்லாம அவ்வளவுதான் ஓகேவா”

  சரி என்று தலையாட்டி இருந்தாள்.

அவர்களது நேரமோ என்னவோ அடுத்த மாதமே அவளுக்கு நாள் தள்ளி போயிருந்தது ..அவளும் மகிழ்ச்சியடைந்தாள் ..

நாள் தள்ளிப் போய் இருந்த சமயத்தில் சொந்தக்காரர் ஒருவரின் திருமணம் என்று சென்றுவிட்டு வந்தமையால் இரண்டு நாட்கள் துணி துவைக்காமல் இருக்க,  அனைத்தையும் ஒரே நாளில் துவைத்து  மொட்டை மாடியில் துணி காய வைப்பதற்கு படிக்கட்டில் ஏறினாள்..

அப்பொழுது அவளுக்கு ஒரு மாதிரியாக இருக்க.. நெஞ்சமும் படபடக்க.. ஒன்றும் புரியாமல் துணியை கூட  காய வைக்காமல் குடுகுடு என்று கீழே இறங்கி வீட்டிற்குள் நுழைந்தவள், நேராக பாத்ரூம் செல்ல .

அவளின் பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் கசிய.. அவளுக்கு மூச்சே நின்று விட்டது..

  தொண்டை அடைத்து கண்களில் நீர் அருவியாக கொட்டியது.. எட்டு நாட்கள் நாள் தள்ளி போய் இருக்க ஆசையில் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தாள் ..வயிற்றில் சிசு வளர்கிறது என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு… குருதியை பார்த்தவுடன்… சொல்ல முடியாது வலியை உணர்ந்தாள்..

அவள் கிட் வாங்கிக் கொண்டு வர சொல்லி கேட்கும் பொழுது கூட , வசந்த் இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் .நம்ம ஹாஸ்பிடலுக்கு போகலாம்.. கிட் வேணாம் என்று கூறியிருந்தான் ..

அவளும் அமைதியாகி விட்டாள். குழந்தையை எதிர்பார்த்து இருந்தவளுக்கு பீரியட் ஆகவும். வருத்தமாகிவிட்டது .. அழுகையுடனே தனது கணவனுக்கு போன் செய்தாள்..

அவனும் வீட்டிற்கு வந்திருந்தான். “இதுக்கு ஏண்டி அழுவுற ? பாப்பா இருந்துச்சா இல்லையானு கூட நமக்கு தெரியாது ..எட்டு நாள் தள்ளிப் போச்சு..இது நார்மலா கூட இருக்கலாம்..இதையே யோசிக்காத.. ரொம்ப மனச போட்டு குழப்பாதா “என்று கூறி அவளை  தன் தோளில் சாய்த்து ஆறுதல் வார்த்தைகள் கூறினான்..

அவனும்  ஆசையாக தான்  இருந்தான்.. அவனுக்கும் வருத்தம் தான். இருந்தாலும், தன் முன்னே அழுது வடிபவளை தேற்ற தான் அவன் மனம் உந்தியது ..

சன்விகாவிற்கு கீழே ஹாலில் பொம்மையை போட்டு விட்டு தான் மாடியில் துணி காய வைக்க சென்றிருந்தாள். குழந்தையை தான் பார்த்துக் கொள்வதாக கூறியவன்.. “போய் குளிச்சிட்டு வா” என்று அவளை அனுப்பி இருந்தான். அவளும் குளித்துவிட்டு வரவும் ..

“துணி காய வச்சிட்டியா ?” என்றான்..

“இ..இன்னும் இல்ல..மடியேரும் போதே தான்..” என்றாள் திணறலாக ..

“சரி விடு . நான் காய வைக்கிறேன். நீ பாப்பா பார்த்திட்டு ரெஸ்ட் எடு ” என்றான்..

” வேணாம் .. நானே காய வச்சுக்குறேன் “என்று குளித்துவிட்டு தான் போட்டிருந்த துணியையும் துவைத்தவள் மொத்தமாக துணியை காய வைத்து விட்டு வந்தாள்..

அதன் பிறகு குழந்தையை அவள் கையில் கொடுத்துவிட்டு “சரி டி எனக்கு வேலை இருக்கு. இதையே நெனச்சிட்டு இருக்காத” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

அவனுக்கும் வருத்தம் தான். கிட்டத்தட்ட ஒரு வாரங்கள் அதை எண்ணியே வருத்தத்தில் மூழ்கி இருந்தாள். ஒழுங்காக சாப்பிடாமல் முகம் சோர்வடைந்து காணப்பட்டாள்.

” நீ ஃப்ரீயா இருடி.. பாப்பாவை பாருடி நமக்கு பாப்பா இருக்கு. அப்புறம் ஏன் பீல் பண்ற?”

” நீங்களும் ஆசைப்பட்டீங்க தானே! எனக்காக தானே உங்க வருத்தத்தையும் மறைச்சுக்குறீங்க..” என்று அவன் நெஞ்சில் சாய்ந்த படி அழுதாள்.

” உனக்கு நான் தள்ளி போச்சு அவ்வளவுதான்… அதையே ரொம்ப யோசிச்சு உன் உடம்பை கெடுத்துக்காத. குழந்தை இருந்துச்சா இல்லையானு தெரியாது..” என்று கூறும்போதே,

” எனக்கு இதுவரைக்கும் நாள் தள்ளிப் போய் இருக்கா சொல்லுங்க? உங்களுக்கே தெரியும் தானே..  ஒரு ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடி கூட  வந்திருக்கு.ஆன, பின்னாடி வந்ததில்ல ..”

“இருக்கட்டும். ஆனா, நமக்கானது இல்லை டி ..அதான்.. அதை நெனச்சு ரொம்ப பீல் பண்ணாத..” என்று அவளை  தேற்றியவன்.  தன்னையும் தேற்றிக்கொண்டான்.

அடுத்த மாதமும் அவளுக்கு நாள் தள்ளி போயிருந்தது.. கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேல் தள்ளிப் போகும் வரை அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. கிட் வைத்தும் செக் பண்ண வில்லை. நாள் தள்ளி இருக்கிறது என்று தெரிந்ததிலிருந்து அவளை பெரிதாக எந்த வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொண்டான்.

தண்ணி அவனே பிடித்தான்.. துணித்து வைத்தான் .தன்னால் முடிந்த அளவிற்கு அவளுக்கு உதவி செய்தான் என்று தான் சொல்ல வேண்டும் .முதல் குழந்தை கருவுற்று இருந்த பொழுது  அவளை தாங்கியதை விட இரண்டாவது குழந்தைக்கு ரொம்பவே அதிகப்படியாக தாங்கினான்.

போன மாதம் அவளுக்கு நாள் தள்ளி இருந்து,  குழந்தை இருந்ததோ இல்லையோ ? அது ஆண்டவனுக்கு தான் வெளிச்சம்.. அதிலிருந்து அவள் சோர்வாக இருந்ததை பார்த்தவனுக்கு வலி தாங்க முடியாமல் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தான்…அவளுக்கு தேவையான அனைத்தையும்..

20 நாள் கடந்த பிறகு மருத்துவரை அணுகி பரிசோதிக்க.. அவள் கர்ப்பம் உறுதி செய்யப்பட்டது . இரண்டாவது கர்ப்பமாக இருப்பதை வீட்டில் உள்ள யாரிடமும் கூறவில்லை ..

அதற்கு முக்கிய காரணமும் இருந்தது. இரு மாதங்களுக்கு முன்புதான் ,அவனது தாய்க்கும் இவனுக்கும் பிரச்சனை ஆகி சண்டை பெரிய புதகரமாகவே உருவெடுத்து நின்றது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக வயல்வெளியில் போட்ட காசு பணத்தை ஒத்த ரூபாய் கூட தராமல் வசந்தா இழுவையில் வைத்திருக்க. இவனும் வெளிநாட்டில் சம்பாதித்த காசை வைத்து இங்கு செலவு செய்தபடி இருந்தான் .ஆனால், தனக்கு என்று குடும்பம் ,பிள்ளை என்று வந்த பிறகு பொதுவிலே போட்டுக் கொண்டிருந்தால் தனக்கென்ற வாழ்க்கையை பார்ப்பது எப்படி ?என்று எண்ணியவன்..

இதுவரை எழுதி வைத்திருந்த கணக்கு வழக்குகளை ஒரு முறை சரிப் பார்த்தவன் அந்த பணத்தை கேட்டு , தன் தாயிடம் போய் நின்றான்

இத்தனை லட்சம் போட்டு இருக்கேன். ரெண்டு வருஷமா உரம் வாங்கினது ,மருந்து அடித்தது, கலை புடுங்கியது என்று ஒவ்வொன்றாக அவன் கணக்கு சொல்லியபடி இருக்க..

அவன் கூறிய அனைத்தையும் கேட்டு அமைதியாக இருந்தவர். “இருக்கும்போது வாங்கிக்கோ” என்றார்..

“என்ன இருக்கும் போதா ? இப்போ தான கரும்பு பணம் வந்துச்சு.. அதுல இருந்து எடுத்துக் கொடுத்த என்ன ? எனக்குன்னு குடும்பம் புள்ள குட்டி இருக்கு..  அத நான் பார்க்க வேண்டாமா?”என்றான்.

அதுவரை அமைதியாக இருந்தவர் ..”இதுக்கு தான் இந்த சனியன் புடிச்ச கல்யாணமே வேணான்னு சொன்னேன்..” என்று  வக்கிரத்துடன் கூறி விட..

“எனக்கு புரியல”  என்றான் அதிர்வாக  தன் தாயை உற்று நோக்கியபடி ..

“என்னடா புரியல? என்ன புரியல.. இதுவரைக்கும் வயலுக்கு செஞ்ச செலவுக்கு காசு பணம் கேட்டு இருக்கியா? ஆனா, இன்னைக்கு கல்யாணம் ஆகி புள்ள வந்ததுக்கப்புறம் தான எனக்குனு  புள்ள குட்டி, குடும்பம் இருக்கு. காசு தானு  வந்து நிக்கிற?” என்றார் கோபமாக..

” அப்ப எனக்கு கல்யாணமே ஆகாம ,கன்னி கழியாம , உங்க புள்ளையாவே, ச்சீ ச்சீ அப்படி கூட சொல்ல முடியாது.. உங்க தேவைக்கு மட்டும் யூஸ் பண்ற ஒரு வேலைக்காரனா இருக்கணும்னு நினைச்சு இருக்கீங்க ?அப்படித்தானே..? இவ்வளவு நாள செயல்ல காட்டினீங்க..ஆனா , இன்னைக்கு வாய் வார்த்தையாவே உங்க வாயல சொல்லிட்டீங்க …”என்று கண்களில் நீர் துளிர்க்க.. அழுகையுடன் தொண்டை அடைக்க, குரல் கம்ம ,நெஞ்சம் வெடிக்க கத்தினான்..

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்