
என் வானின் வானவில் நீ-32
அருணிடம் தன்னை ஏன் திருமணம் செய்து கொண்டாய் என்று பிரதன்யா கேட்க அவனோ சற்றும் தாமதிக்காமல்
“இதென்ன கேள்வி. எனக்குப் பிடிச்சது பண்ணேன்.” என்றான் இலகுவாக.
“ப்ம்ச் அதான் எப்படி பிடிச்சது.?”
“என்ன தனு?, காரணம் கேட்டால் என்ன சொல்ல எனக்கு உன்னை மறுக்க எந்த ரீசனும் இல்ல தனு” என்றவன்,”ஆமாம் ஏன் உன்னைப் பிடிக்கக் கூடாது?” என்று மீண்டும் அவளிடம் கேட்க
“ஸ்ஸோ பிரசாத் உனக்கு புரியலை. அதாவது உனக்கு பார்த்தப் பொண்ணு ரொம்ப ரொம்ப அழகு. என்ன சொல்ல எனக்கே அவங்களை ஃபோட்டோவில் பார்க்கவும் அவ்வளவு பிடிச்சது. சட்டுனு அவங்களை வேணாம் னு சொல்லிட்டு வந்திருக்க. நான் உன்னை வலுக்கட்டாயமாக” என்று நிறுத்த
“அய்ய என்னை கட்டாயப் படுத்தி இந்த மேரேஜ் நடக்கலை அப்படி நடத்திக்கவும் முடியாது. உன்னைப் பிடிக்க காரணம் எனலாம் தேடலை நான். ஜஸ்ட் பிடிச்சது. மேரேஜ் னு யோசிச்சா மைன்ட் ல நீ வந்த பண்ணிக்கிட்டேன்” என்றவன்” ஸோ உன் மூளையை தின்ன விஷயம் இதுதான் இல்லையா?” என்றான் கோபமாக
” எல்லோருக்கும் தோணுற ஒரு விஷயம் பிரசாத்” என்றாள் அவளுமே.
” உனக்குத் தான் தோணி இருக்கு ” என்று எரிச்சல்பட்டான் .
” இல்லவே இல்லை. என்னைப் பார் “என்று சொல்லவும்,” பார்த்துட்டு தான் இருக்கேன்” என்க
” ஓய் கிண்டலா?!, ப்ப்ச் இங்கே பாரு உனக்கு பார்த்த பொண்ணையும் என்னையும் கம்பேர் பண்ணிப் பாரேன். இப்போ இல்லை ஒரு வருஷம் முந்தி சொல்றேன். நீ ப்ரதர் னு சொல்ற மாதிரி லுக்ல அதுவும் பல்லுக்கு ப்ரேஸ் எல்லாம் போட்டுட்டு இருந்தேன் அப்படிப்பட்ட என்னை எப்படி செலக்ட் பண்ணீங்க அதுதான் குழப்பமா இருக்கு “என்று சொல்லவும் சிரிப்புடன் அவளைப் பார்த்தவன்,” ஜஸ்ட் ஒரு ஹக் “என்று இறுக அணைத்துக் கொண்டவன் அவள் விழிகளை ஊடுருவி,” ஃபீல் மை லவ் பிரதி” என அவளிதழில் தன் இதழ்களை பொருத்தினான். நிமிடங்களுக்கு மேலாக நீடித்த அந்த இதழ் கூடலில் துவண்டு நெகிழ்ந்து அவனோடு ஒன்றிப் போனாள் பெண்.
மனதேயின்றி அவளிதழ்களை விடுவித்தவன்,” உன்னைப் பார்த்தா மட்டும் தான் இப்படி தோணுது” என்றான் மையலாக
” தோணும் தோணும்” என்று விழிகள் சிரிக்க அவனைக் கட்டிக் கொண்டவள்,” என்னை எல்லாம் பார்த்தா கிண்டலாக பேசறவங்க தான் அதிகம் பிரசாத். அதனால் தான் எனக்கு நம்பிக்கையே வரவில்லை” என்றாள் மனதை மறையாமல்.
“கேலி கிண்டலை தாண்டாத மனுஷங்களே இருக்க முடியாது தனு. உலக அழகியே ஆனாலும் அவங்களையும் நொட்டை சொல்ல ஒரு குரூப் இருக்க தான் செய்யும். கிண்டல் பண்ற ஆளும் கேலி கிண்டலுக்கு ஆளான ஒரு பர்ஷனா தான் இருப்பாங்க. நமக்கு வந்தா நத்தம் திண்டுக்கல் மத்தவங்களுக்கு வந்தா தஞ்சாவூர் திருவாரூர்”என்றான் கிண்டலாக.
“என்னது நத்தம் திண்டுக்கல்லா”என்று புரியாமல் அவள் விழிக்க
“எத்தனை நாளைக்கு தான் உனக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னி னு சொல்றது. அதுக்கே போர் அடிச்சுடாது அதான் ஒரு சேஞ்சுக்கு நத்தம் திண்டுக்கல்”என்றான் சிரித்தபடியே
“எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன் உங்களுக்கு கிண்டலா”என்று முறைத்தாள்.
“ஹ்ம்ம் ஹ்ம்ம் ஒண்ணுக்கும் ஆவாத கேள்வியை கேட்டுட்டு இதுல சீரியஸ் சீரியல்லுன்னுட்டு”என்று அலுத்துக் கொண்டவன் “எனக்கு உன்னை தான் பிடிச்சது. மேரேஜுக்கு ஓகே சொன்னேன் காரணம் கேட்டால் தெரியாது. உன்னைப் பிடிக்கும். டாட்
அவ்வளவு தான் இதைப் பத்தி பேசாத”என்றான் முடிவாக
“தோணுச்சு கேட்டேன். இதைப் போய் யார் கிட்ட கேட்க… சம்பந்தப்பட்ட ஆள் கிட்ட தானே கேட்க முடியும் மிஸ்டர் அறுவை பிரசாத்”என்றாள் கேலியாக.
“டவுட் தீர்ந்துச்சா…தூங்குவோமா”என்று சலிப்பாக கேட்க.
“தூக்கம் வருதா நிஜமாவா”என்று அவனை வம்பு செய்ய
“அடி வாங்காம ஓடிடு சொல்லிட்டேன் எவ்வளவு ஹாப்பி மூடோட கூப்பிட்டேன் அத்தனையும் கேள்வி கேட்டு ஸ்பாயில் பண்ணிட்ட”என்று இழுத்து போர்த்தி படுத்தவனை விடாமல் வம்பு செய்ய தன்னோடு இறுக்கிக் கொண்டு உறங்கிப் போனான்.
இருவர் மனதிலும் மகிழனின் அம்மா மகிழனின் கஸ்டடி கேட்டு வருவாளோ என்று அஞ்சிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் அச்சத்தை மெய்ப்பிக்கும் விதமாக மகிழனின் அம்மா அருண் பிரசாத் தன் மகனை விட மறுப்பதாக வழக்கு தொடுத்திருந்தாள்.
இனி மகிழன் யாரிடம்….???
********
‘ கவிலயாவை நீ மறக்கவில்லை ‘என்று தேஜா கூற யுகன் புரியாமல் திகைத்து நின்றான்.
“ப்ப்ச் புரியலையா”என்றவள் “நான் ஊருக்கு வந்த பிறகு எத்தனை புக்ஸ் படிச்சீங்க”என்று கேட்க
“டெய்லி படிச்சேனே. ஒரு நாள் கூட மிஸ் பண்ணதில்லை.”
“உங்களுக்கு புக்ஸ் படிக்க பழக்கி விட்டது யாரு”
“லயா”என்றான்.
“மணிப்ளான்ட் க்ரோட்டன்ஸ் எல்லாத்துக்கும் தண்ணி ஊத்துனீங்களா”
“ஒரு செடி விடாம ஊத்தினேன் ஏன் நீ பார்க்கலையா ரோஸ் எல்லாம் பட்ஸ் வச்சிருந்ததே”என்று சொல்ல
“செடி வளர்க்கிற பழக்கத்தை ஏற்படுத்தி குடுத்தது யாரு”
“அஃப்கோர்ஸ் லயா தான். ப்ப்ச் சம்பந்தமே இல்லாமல் இதெல்லாம் எதுக்கு கேட்கிற அஸ்வி”என்றான் சலிப்பாக.
“சம்மந்தம் இருக்கே”என்றவள் “லயா பழக்கி விட்ட எதையுமே நீங்க மறக்கலை. ஒரு நொடியாவது கவி இதை படிக்க சொல்வா ல்ல அல்லது தண்ணி ஊத்தலைனா கடுப்பு ஆவா னு நீங்க நினைச்சது இல்லையா”என்றதும் யுகனுக்கு வியப்பு மேலிட்டது.
“டெய்லி ரொட்டின் ல கவி உங்க எல்லா விஷயத்திலும் கலந்து தான் இருக்காங்க அப்புறம் எப்படி நீங்க அவங்களை மறந்ததா சொல்றீங்க”என்றாள்.
“அதுவும் அவளை நான் விரும்பியதும் ஒண்ணா அஸ்வி”என்று முறைக்க
“கண்டிப்பாக ஒண்ணு தான். ஒருத்தங்க சொன்னதை பழக்கி விட்டதை இயல்பா செய்றது எல்லாம் அந்த பர்ஷனை பிடிச்சதாலையும் அவங்க செய்ய சொன்னதை கடைபிடிக்கறதாலையும் ஒவ்வொரு நிமிடமும் அவங்களை நீங்க விரும்பிட்டே தான் இருக்கீங்க புரியுதா”என்றாள் தெளிவாக.
“ஆனா நான்”
“ப்பா… ஹஸ்பண்ட் வொய்ஃப் ரிலேஷன்ஷிப் னால வந்த பிடித்தம் இது என் மேல நீங்க எடுத்துக்கிட்ட உரிமை தான் அன்னைக்கு நடந்தது. நான் அதை அக்ஸெப்ட் பண்ணது என்னோட ஹஸ்பண்ட் ன்ற உரிமை. அந்த லவ் அது நமக்கான புனிதம். நீங்க லயா மேல காட்டுற லவ் அஃபெக்ஷன் எல்லாம் கடந்த காலமா இருந்தாலும் அது உங்களோட தங்கிடுச்சு ஆதி அதை நீங்களே மறக்க நினைச்சாலும் முடியாது. அதை மறந்தா தான் புது வாழ்க்கையை வாழ முடியும் ன்ற எந்த சட்டமும் கிடையாது.”
“அவங்களை நினைச்சுட்டே வாழறது தான் உங்க காதலுக்கு நீங்க செய்ற மரியாதைன்னா அதை நீங்க உங்க கடைசி காலம் வரைக்கும் உங்களை அறியாமலேயே செய்வீங்க. என் கூட வாழற வாழ்க்கை அதை மறக்கடிக்கும்னு நினைக்கிறது முட்டாள்தனம். “
“புரியுது தான் அஸ்வி. சடனா அந்த டைரியை பார்க்கவும் ஒரு தாட் நானும் சராசரி மனுஷன் போல ஆகிட்டேனோன்னு”
“அதுல என்ன தப்பு இருக்கு. சராசரி மனுஷனா வாழ்ந்தா என்ன இப்போ. ஆக்ஸுவலி சராசரி மனுஷனா வாழறது தான் இந்த காலத்தில் மிக சிரமம். நீங்க அது போல இருக்கிறது நல்ல விஷயம் தான். “
“ஹ்ம்ம்”
“பட் ஒரு விஷயம். இதை நான் சொல்றேன் என்னைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்”என்றவள் “என்னைக்கும் எங்க ரெண்டு பேரில் யார் பெஸ்ட் னு மட்டும் கம்பேர் பண்ணிடாதீங்க. கவிலயா உங்க வாழ்க்கை ல ஒரு பகுதினா நான் மறுபகுதி அவ்வளவு தான் டோன்ட் கம்பேர் இட். என் கிட்ட லயாவை தேடாதீங்க. தேஜஸ்வினியை அஸ்வியாவே பாருங்க அது போதும்”என்றாள் அழுத்தமாக.
“தேங்க் யூ”என்றான் அவளின் இடையைக் கட்டிக் கொண்டபடி
“எதுக்கு காலையில் இருந்து அழ வச்சதுக்கா…”
“நானும் தான் ஃபீலிங்ல இருந்தேன்.”என்று நிமிர்ந்து பார்த்துப் பேச
“ஃபீலிங் ஓவர் டோஸ் ஆகிடுச்சு அதான் சார் மூஞ்சியை முக்கா முழம் தூக்கி வச்சுட்டு அலைஞ்சு இருக்கீங்க”என்று அவன் முன்னுச்சி முடியை கலைத்து விட்டவள் நெற்றியில் இதழ் பதித்தாள்.
காதலில் தோல்வியுற்ற பின்னர் அதை நினைத்து கொண்டே வாழ வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. காதல் தோல்விக்கு பின்னான திருமணத்தில் தன் துணையோடு இல்லறம் துவங்குவது குற்றமும் இல்லை. ஏனெனில் தோற்பது காதலர்கள் தானே ஒழிய காதல் அல்லவே… அதிலும் இங்கு யுகாதித்தனின் காதல் தோற்கவில்லை. அமரத்துவம் அடைந்தது. கவிலயா கவிநயத்துடன் அவன் வாழ்வில் இரண்டறக் கலந்து போனவள். யுகனின் வாழ்வில் வந்து போன வானவில் அவள். தேஜஸ்வினி யுகாதித்தனின் வாழ்க்கை எனும் வானில் ஒளியாய் வந்தவள்.
************
இரு இணைகளும் தங்களுக்குள் எழுந்த சிறு சிறு வருத்தங்கள் சந்தோஷங்கள் என்று அனுபவித்து தங்களின் வாழ்வை சிறப்பாய் நகர்த்த பெரியவர்கள் எப்போது நல்ல செய்தி கூறுவார்கள் என்று காத்திருந்தனர். அதிலும் நந்தினி தாய்மை அடைந்த செய்தி வரவும் திரிபுரசுந்தரி மகள்களை தான் பார்த்தார்.
“ஏன் டா யுகா பேசாமல் நாம ரெண்டு பேரும் வடிவேலு தாரிணியை வாந்தி எடுக்க வச்ச மாதிரி கையை விட்டு எடுக்க வச்சு என் பொண்டாட்டி வாந்தி எடுத்துட்டா வாந்தி எடுத்துட்டானு தண்டோரா போடுவோமா”என்று அருண் கிண்டல் செய்ய சத்தமாய் சிரித்து விட்டான் யுகாதித்தன்.
“ஏன்டா கொஞ்சம் சும்மா இரேன்டா”என்று வாயைப் பொத்தி கொண்டு சிரிக்க
“பின்ன என்ன டா அங்கே நம்ம மாமியார் பார்வையை பாரேன்”என்றான் கிண்டலாக.
“அதை விட நம்மாளுங்க மூஞ்சிய பாரேன். கேஸ்டராயில் குடிச்ச மாதிரி.”என்று யுகாவும் சிரிக்க
“ரெண்டும் ஊரையே வித்துடும் ஆனா அவங்க அம்மா கிட்ட பதூசா பம்மிடுங்க. ‘இதெல்லாமே ஒரு நடிப்பு சிவாங்கினு’ நான் எப்படி சொல்வேன்”என்று கிண்டலும் கேலியுமாய் இருவரும் கமுக்கமாக சிரித்தனர்.
“நான் வேணும்னா சொல்லிட்டு வரவா மாம்ஸ்”என்று பின்னால் வந்து நின்ற அகிலனை இருவரும் கழுத்தில் கைபோட்டு இறுக்கிய படி நகர்த்திச் செல்ல கந்தசாமி தான் பதறினார். பத்மநாபனுக்கு அப்படி ஒரு சிரிப்பு மருமகன்கள் தன் மகனோடு விளையாடுவதிலும் வம்பு செய்வதிலும்.
சுதாகரன் நந்தினியை வாழ்த்தி விட்டு செந்தாளம்பட்டியில் இருந்து கிளம்பியவர்கள் இம்முறை ரயிலிலேயே பயணித்தனர்.
சென்னை திரும்புகையில் இரு இணைக்கும் அதிர்ச்சி தரும் ஒரு விஷயம் அவரவர்க்கு காத்திருந்து. அது என்ன என்று அடுத்த அத்தியாயம் காண்போம்.
…… தொடரும்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
2
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.

Super super super super enna அதிர்ச்சி