
அத்தியாயம்-35
‘நாளம் தாக்கவும் காக்கவும்
ஆன மலர் சூழ்ந்த,
ஓடுநீர் பிறப்பிடத்தே
மாபெரும் வித்தின் விருட்சத்து, இருபால் பட்சியின் கூட்டதிலே
அடுத்த துப்பு உள்ளதுவே’
என்ற வரியை மீண்டும் மீண்டும் அனைவரும் வாசித்துக் கொண்டிருந்தனர்.
அகா தன் கைகளை ஆறுபோல் சைகை செய்து காட்ட, “அதான் நோட்டிருக்குல்ல? எழுதித்தொலை பக்கி” என்று விஷ்வேஷ் கூறினான்.
இடவலமாய் தலையசைத்தவள் தான் எழுத வருவதை புத்தகத்தில் எழுத,
எழுத்துக்கள் ஏதும் தோன்றாமல் வெற்று காகிதமாகவே அது காட்சி பட்டது.
“என்ன பேனால இங்கில்லையா?” என்று ஜான்விகா கேட்க,
மறுப்பாகத் தலையசைத்தவள் அவள் பெயரை எழுதிக் காட்ட, அது மட்டும் அழகாய் தோன்றியது.
“என்ன இது மட்டும் எழுதுது?” என்று ப்ரியா கேட்க,
“ஹே ப்ரீ.. அந்த அசரீரீ மண்டையன் சொன்னான்ல? நீ என்ன கேட்டாளும் கிடைக்கும். ஆனா அதுக்கும் ஒரு எல்லை இருக்கு. உங்களுக்கான பலத்தையும் பலவீனத்தையும் மாற்றுவதுக்கோ தேற்றுவதுக்கோ அந்தச் சக்தியைப் பயன்படுத்த முடியாது. அதனால தான் உன் சக்தில உருவாக்கின இந்த நோட் அன்ட் பென் இதைக் கண்டுபிடிக்க மட்டும் யூஸ் ஆகலை” என்று அகர்ணன் கூறினான்.
‘ஆம்’ என்பதுபோல் தலையாட்டிய அகநகை, மீண்டும் கைகளை வளைத்துக் காட்ட,
“என்னடி பாம்பா?” என்று ஜான்விகா கேட்டாள்.
இல்லை என்பது போல் தலையசைத்து சளிப்பாய் திரும்பியவள் மீண்டும் திரும்பி, தண்ணீர் குடிப்பதைப் போல் சைகை செய்து, கைகளை வளைத்துக் காட்ட,
“ஏ ஆறா?” என்று துருவன் கேட்டான்.
துள்ளலுடன் ஆம் என்று குதித்தவள், மலைபோல் கைகளைக் கொண்டு சைகை செய்ய,
“மலை?” என்று மதி கேட்டான்.
மீண்டும் ஆமெனத் தலையாட்டியவள், இரண்டையும் சேர்த்து செய்ய,
“மலையாறு?” என்று அகர்ணன் கேட்டான்.
இல்லையென்றவள் மலைபோல் சைகை செய்து அதிலிருந்து நீர் வருவது போல் காட்ட,
“அருவி?” என்று இளநகை கேட்டாள்.
தங்கையைக் கட்டியணைத்துக் கொண்டவள் அந்தக் குறிப்பேட்டினை வாங்கி இரண்டாம் வரியைக் குறிப்பிட்டுக் காட்டினாள்.
“ஓடுநீர் பிறந்பெடுத்தே” என்று உச்சரித்த இளநகை, கண்கள் பளீரிட, “தட்ஸ் ஆவ்செம் அகா.. ஓடுநீர்னா ஆறு.. ஆறு பிறக்குமிடம் அருவி” என்று கூற,
“ஏ செம்ம.. அப்ப அந்த முதல் வரி?” என்று துருவன் கேட்டான்.
“இதயத்தைக் காக்கவும் தாக்கவும் உதவும் மலர்?” என்று மதி கூற,
“ஐ காட் இட்” என்று மீண்டும் இளநகை குதித்தாள்.
“என்னது இளா?” என்று அனைவரும் உற்சாகம் அடைய,
“ஃபாக்ஸ் க்ளௌவ்ஸ்” என்றாள்.
“அப்படினா?” என்று ப்ரியா கேட்க,
“அது பிங்க் கலர்ல க்ளௌவ்ஸ் மாதிரி இருக்குற பூ. அதுலருந்து உருவாக்கும் திரவத்தை உடல்ல ஊசி மூலமா செழுத்தினா இதயம் அதோட செயலையே நிறுத்திடும். ஆனா அதே பூவிலிருந்து உருவாகும் திரவம் கொஞ்சம் போல மருந்தா கொடுத்தா அது இதயத்தை வலிமை பெற செய்யும். அந்தப் பூக்கள் நிறைந்திருக்கும் இடத்துல இருக்கும் அருவி.. இது தான் முதலிரண்டு வரிகள் சொல்லுது” என்று இளநகை கூறினாள்.
“வாவ் செம்மடி” என்று கூறிய துருவன் அந்தத் தகடை வாங்கி அடுத்த வரியைப் படித்தான்.
“மாபெரும் வித்தின் விருட்சத்து” என்று அவன் வாசிக்க,
தகடை பார்த்துக் கொண்டிருந்த ஜான் “விருட்சம்னா மரம். யோகா கிளாஸ்ல விருட்சாஸனா, ட்ரீ போஸ்னு எங்க மேடம் சொல்லிகுடுத்துருக்காங்க” என்று கூறி, “ஓம்..” என்று கத்தியபடி தனது வலது காலை இடது தொடையில் வைத்துக் கைகளைத் தலைக்குமேல் கூப்பிட்டாள்.
“உங்க பொண்டாட்டி மைக் புட்டுகிட்டதுக்கு என் பொண்டாட்டி மைக் புட்டுட்டு போயிருக்கலாம்” என்று அகர்ணனைப் பார்த்து மதி புலம்ப,
“சரி அப்போ வித்துனா என்ன?” என்று ப்ரியா கேட்டாள்.
“வித்துனா விதைனு நினைக்குறேன்” என்று துருவன் கூற,
“அப்பனா பெரிய விதையோட மரம்” என்று இளநகை கூறினாள்.
“ஏ பெரிய விதையோட மரம்னா பாம் ட்ரீ ப்பா” என்று பிரியா கூற,
“பாம் ட்ரீ?” என்று கேள்வியாய் கேட்டனர்.
“ஆமா.. நான் ஒரு ஆர்டிகல்ல படிச்சிருக்கேன். உலகத்துல பெரிய விதை கொண்ட மரம் பாம் ட்ரீனு” என்று பிரியா கூற,
“அப்பனா ஃபாக்ஸ் க்ளோவ்ஸ் மலர்கள் சூழ் நதியிருக்குற அருவிக்குப் பக்கத்துல உள்ள பாம் ட்ரீ மேல உள்ள ஏதோ ஒரு பறவையோட கூட்டுல தான் அடுத்த க்ளூ இருக்கு. அப்ப இருபால் பறவைனா என்னது?” என்று அகர்ணன் கேட்க,
“ஹ்ம்.. யோசிப்போம்.. இவ்வளவு கண்டுபிடிச்சாச்சே.. அதுவும் கிடைக்கும்” என்று மதி கூறினான்.
“சரி அந்தக் கரடி எங்க மதிண்ணா?” என்று இளநகை கேட்க, சுற்றி முற்றி தேடியவன் ஆற்றங்கரையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கரடியைக் கண்டு, “அங்கதான் இருக்கான்” என்றுவிட்டு “ஏ டெடிபேர்” என்று அழைத்தான்.
அதுவும் தன் மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு அவனுக்கு எடுபிடி தொழில் செய்ய ஓடோடி வர,
“எம்பொண்டாட்டி கூட நான் கூப்ட குரலுக்கு இப்படி வரமாட்டா” என்று கூறினான்.
“மவனே அவளுக்குக் காது கேக்காதுனு தைரியத்துல பேசுறடி” என்று விஷ்வேஷ் கூற,
“போட்டுக் குடுத்துறாதடா” என்று பீதியோடு கெஞ்சினான்.
“சரி சரி போதும்.. அந்தக் கரடிய கூப்பிட்டு அதுகிட்ட விசாரி” என்று துருவன் கூற,
“அதுக்கு எப்புட்ரா ஃபாக்ஸ் க்ளோவ்ஸ்னு சொன்னா புரியும்? அதுக்கு தமிழ் பெயரேதுமில்லையா?” என்று மதி கேட்டான்.
“அய்யோ எனக்கு அதெல்லாம் தெரியாதே?” என்ற இளநகை,
“சரி சுத்தி நிறையா பிங்க் கலர் பூக்கள் இருக்குற அருவி எங்க இருக்கும்னு கேளுங்க” என்று கூற,
“ம்ம்” என்ற மதி அதையே கரடியிடம் கேட்டான்.
அதுவோ பதில் தெரியாமல் தன் நாவால் அவன் கன்னம் வருடிக் கட்டியணைக்க,
“இவன் என்னடி கரடி கூடக் குடும்பம் நடத்திட்டு இருக்கான்?” என்று அத்தனை நேரம் விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த ஜான்விகா தற்செயலாய் திரும்பிப் பார்த்துத் திடுக்கிட்டவளாய் கேட்டாள்.
“ஆமா.. உன்னைய டைவர்ஸ் பண்ணிட்டு கரடியைக் கட்டிக்கப் போறான்” என்று சைகைகளோடு விஷ்வேஷ் கூற,
“ஏதூஊ? என்னைய டைவர்ஸ் பண்ண போறானா?” என்று கத்தினாள்.
“ஆத்தாடீ..” என்று காதுகளைப் பொத்திக்க் கொண்டவன் தலையில் கொட்டிய ப்ரியா,
“அவ பாட்டுக்கு அமைதியா தான இருந்தா? அவளை உசுப்பேத்தி மதியண்ணாக்கு டின்னு கட்டுறேன்னு பேருல உங்க காதைக் கெடுத்துக்காதீங்க” என்று கூறினாள்.
மதி மண்டையிலேயே ஒன்று பொட்டு குத்துகுத்தெனக் குத்திய ஜான்விகா, “என்னைய டிவோர்ஸ் பண்ண போறியாடா? பக்கி நாயே.. பார்டைமா செத்துபோனப்பவே போடா நாயேனு விட்டுட்டு டாம் க்ரூஸ கல்யாணம் பண்ணிருக்கனும்டா நானு.. வெளக்கெண்ண மவனே” என்று கத்த,
“அடியே.. எவன் என்ன சொன்னாலும் நம்புவியாடி.. அவன் உருட்டுரான்டி.. ஆ.. ஊம குத்தா குத்துறாளே.. அடேய் யப்பா.. காப்பாத்துங்கடா” என்று மதி கத்தினான்.
கடைசியில் கரடி தான் அவனை அவளிடமிருந்து காப்பாத்த வேண்டி நடுவே வந்து நிற்க, “வாடி என் சக்களத்தி.. என்னடி? எனக்கும் என் புருஷனுக்கும் நடுவுல வந்து நிக்குறியா?” என்று தன் சட்டை கையை மடித்து விட்டுக் கொண்டாள்.
“இந்தக் கிழி கிழிக்குறாளேடா..” என்று அகர்ணன் கூற,
அவனை ஏற இறங்க பார்த்த அகா, ‘அவலாம் பாக்கதான் பால்டப்பா.. பேசினா பீர் பாட்டில்’ என்பதாய் சைகை செய்தாள்.
“அய்யோ கடவுளே.. நாம சீக்கிரம் அந்த அருவிக்குப் போகனும். எல்லாரும் உங்க விளையாட்ட நிறுத்துங்க. இப்பதான் முதல் க்ளூவையே உருப்படியா கண்டுபிடிச்சிருக்கோம். இன்னும் எத்தனை க்ளூ இருக்கோ?” என்று இளநகை ஆயாசமாய் கூற,
பின்பே அனைவரும் அவள் புலம்பலுக்குச் செவி சாய்த்தனர்.
கரடியிடம் அருவி குறித்து கேட்கும் யோசனையில் அனைவரும் மூழ்கியிருக்க, சட்டென யோசனை பெற்ற அகர்ணன்,
“ஏ ஜான்..” என்றான்.
அவளுக்குதான் ஸ்பீக்கர் போய்விட்டதே!
ஐயோவென்று அவள் தோளில் தட்டி அழைத்தவன், “ஜானுக்குதான் கண் பார்வை நல்லா தெரியும்ல? மரத்துல ஏறிக் கண்ணுக்கெட்டுற தூரம்வரை எங்கெல்லாம் அருவி இருக்குனு பார்ப்போம்.. ஆளாளுக்கு பிரிஞ்சு போய்த் தேடுவோம்..” என்று கூற,
அவன் என்ன பேசுகின்றான் என்றே புரியாமல் ‘’பே’வென்று பார்த்துக்கொண்டிருந்தாள் ஜான்விகா.
அவள் முழியில் சிரித்த அகநகை அவளுக்குச் சைகை மூலம் விடயத்தைத் தெரியப்படுத்த, “ஓ.. அருவியா? இருங்க பாக்குறேன்” என்றவள் இறங்கிய ஏணி மூலமாகவே மேலேறி மரத்தின் கிளைகளைப் பற்றிக் கொண்டு மேலும் முன்னேறி உயர சென்றாள்.
“அடியே விழுந்துடாதடி..” என்று மதி பதட்டமாய் கத்த,
“அதெல்லாம் கொரில்லாகுட்டி வம்சாவளி பாசே.. பெர்பெக்டா மரம் ஏறும்” என்று துருவன் கூறினான்.
மேலே சென்றவள் சுற்றிமுற்றி பார்த்தாள். அவளது கண்களைச் சுருக்காமலே அனைத்தும் அத்தனை துள்ளியமாய் தெரிந்தது அவளுக்கு.
“அட அந்தப் பூ என்ன கலர்ல இருக்கும்னு கேட்கலையே?” என்றபடி பார்த்தவள் கண்ணுக்கு நான்கு இடங்களில் அருவி தெரிந்தது.
“ஏன்டா.. ஒரு காட்டுல ஒரு அருவி போதாதா? நாலு அருவி கட்டனுமா?” என்று வானைப் பார்த்து அந்த அசரீரீயை திட்டியவள், அதற்கான பாதைகளைக் குறித்துக் கொண்டு கீழே வந்தாள்.
“என்ன ஜான் என்ன தெரிஞ்சது?” என்று ப்ரியா சைகை செய்து கேட்க,
“நாலு அருவி இருக்குதுபா” என்று அதற்கான பாதைகளையும் கூறினாள்.
“ஓகே.. அப்பனா ஓகே.. நானும் அவியும் ஒரு பாதைல போறோம்.. நாங்க கண்டுபிடிச்சுட்டா நானே வாசம் பிடிச்சு உங்களைத் தேடி வந்து கூட்டிட்டு போவேன்.. விஷ்கு காது நல்லா கேட்கும். அதனால அவனும் சமாளிச்சிடுவான். ஜான்விகாவுக்கு கண்ணு நல்லா தெரியும். அதனால நீ போற அருவி உச்சிக்குப் போயி சிக்னல் குடுத்துடு. யாரா இருந்தாலும் விஷ் அன்ட் ப்ரீயாவ முதல்ல தொடர்புகொள்ள பாருங்க. அவனுக்குக் காது நல்லா கேட்கும். அவங்களை கண்டுபிடிச்சுட்டாளே போதும்.. மத்த எல்லாரையும் ஈசியா புடிச்சுடலாம்” என்று அகர்ணன் கூற,
“அதெப்டி என்னைக் கண்டுபிடிச்சா மத்தவங்கள பிடிக்க முடியும்?” என்று விஷ்வேஷ் கேட்டான்.
“அட விஷ்.. அதான் ப்ரியா இருக்காளே.. ஒரு எனிவேர் டோர் ஆர்டர் போட்டா கொரில்லாவோ குட்டிசாத்தானோ வந்து குடுக்க போகுது” என்று இளநகை கூற,
யாவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
“ஆனா எனக்கும் இளாக்கும் எந்தப் பவருமே இல்லையே நாங்க எப்படி உங்கள கண்டுபிடிக்க?” என்று துருவன் கேட்க,
‘இந்த ஜென்மத்துல நீ என் தங்கச்சிய இம்பிரெஸ் பண்ண மாட்டடா’ என்று அகா எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள்.
மற்றவர்களும் அதையே யோசித்திருக்க, “அந்த வெட் ஆனியனெல்லாம் எங்களுக்குத் தெரியும்.. நீங்கப் போங்க நாங்க உங்களைக் கண்டுபிடிச்சுக்குறோம்” என்று மதி கூறினான்.
சரியென்ற முடிவுடன் நான்கு ஜோடிகளும் நான்கு மலைகளை நோக்கித் தனித்தனியே பயணித்தனர்.

