Loading

மெல்லினம் 39:

பலமுறை அவனின் அலைப்பேசி அடித்து ஓய்ந்த பிறகே, மெல்ல கண்விழித்தான் கதிரழகன்.

உறக்கம் இன்னும் முழுமையாக கலையாத எரிச்சல், அவன் முகத்தில் மிச்சம் இருக்க அலைப்பேசியை எடுத்து பார்த்தான் ஞானம் தான் அழைத்திருந்தார்.

“என்னம்மா??”

“தம்பி இங்க இன்னும் சுடுகாட்டுக்கு எடுக்கல. நாங்க எப்படியும் வர ராத்திரி ஆகிடும். சீதா அண்ணன் வீட்டுல இருந்து வந்தா, நீயும் முல்லையும் போயிட்டு வந்துடுங்க” என்க,

“சரிம்மா” என்றதும் வைத்து விட்டவனின் முகத்தில் அதுவரை இருந்த எரிச்சல், முல்லை என்ற பெயரை கேட்டதும் மறைந்து விட்டிருந்தது.

அவன் தேடி தவித்து ஏங்கிய பொக்கிஷம், இன்று அவன் கைவளைவுகளில். திருமணம் முடிந்து விட்டாலும்,  நிரப்பப்படாத இடைவெளி அனைத்தும், நேற்று நிரப்பப்பட்டு முழுமையாக கதிரின் முல்லையாகியிருந்தாள்.

மனதாலும், உடலாலும், அவன் இருந்த தவம் கலைக்கப்பட்டு இரண்டற கலந்து விட்டது. நேற்றைய இரவுகளின் மிச்சங்கள் நினைவு வந்து அவனை தகிக்க செய்ய, பதுமை என உறங்கி கொண்டிருந்தவளின் உறக்கத்தை மெல்ல கலைக்க ஆரம்பித்தான்.

“ம்ம்ம், ப்ச் கதிர்…!” என்றவளின் சிணுங்கல்களை, அவனின் மீசை முடி குத்தி அடக்க, கண் திறந்தவளின் முகத்திற்கு நேரே காதல், மோகம், தாபம் கலந்தவனின் முகம் தோன்ற, ஆவேசமாய் அவளின் இதழ்களின் இதழ் பதித்து, அவளின் வார்த்தைகளுக்கு பூட்டு போட்டவன், மீண்டும் ஒருமுறை அவளுடன் இரண்டற கலக்க துடிக்க, மனம் விரும்பியே அவனிடம் சரணடைந்தாள் முல்லை.

பசியினால் முல்லையின் வயிறு‌ சத்தமிட, 

உறக்கம் கலைந்து எழுந்தவளின்‌ கண்கள் இரண்டும் எரிய, உடல் எல்லாம் அலுப்பில் வலிக்க ஆரம்பித்தது. இன்னும் சில நிமிடங்கள் உறங்கேன்‌, என்று கெஞ்சிய விழிகளை கசக்கி தூக்கத்தை தூர விரட்டியவள், தன்‌ மேல் சொகுசாய் படுத்து உறங்கி கொண்டிருந்தவனை தள்ளி எழுப்ப முயல,

“ப்ச் முல்லை!!!” என அதட்டியவன் மேலும் மேலும் அவளின் கழுத்து வளைவில் புதைந்து சுகமாய் உறக்கம் கொள்ள,

அவனை எழுப்ப முயன்று தோற்றவள் “எனக்கு பசிக்குதுங்க” என்றிட,

அடித்து பிடித்து எழுந்தமர்ந்தவன் மணி பார்க்க மூன்று.

தன்னையே நொந்து கொண்டவன், உணவினை ஆர்டர் செய்ய முயல, அவனின் நேரம் உணவினை ஆர்டர் கொடுக்க முடியாமல் நெட்வோர்க் சதி செய்ய, சட்டென எழுந்தவன் “முல்லை நீ எழுந்து முகம் கழுவு, இங்க பக்கத்துல ஒரு கடை இருக்கு இன்னேரத்துக்கு சாப்பாடு இருக்கான்னு தெரியலை. நான் போய் என்ன இருக்குன்னு பாத்துட்டு வாங்கிட்டு வரேன்” என்றவன் டீ-சர்ட்டை அணிந்து கொண்டு கிளம்பி விட,

முல்லை எழுந்து முகம் கை கால் கழுவி கீழே வந்தவள், டைனிங் டேபிளில் அமர்ந்து பசித்த வயிற்றுக்கு சிறிது தண்ணீர் ஊற்றி அணைக்கும் முயற்சியில் இறங்க கதிர் வந்து விட்டான்.

அவனின் நல்ல நேரம் எல்லா சாப்பாடும் விற்று தீர்ந்திருக்க, கடைசியாக இருந்த இரு சாப்பாடுகளை வாங்கி வந்திருந்தான்.

உணவினை வைத்ததும், அதனை தட்டில் எடுத்து வைக்க கூட தோன்றாது, முல்லை வேகவேகமாக உண்ண ஆரம்பிக்க அவளின்‌ பசியின் அளவை கண்டவனுக்கு கஷ்டமாக போயிற்று.

“சாரி முல்லை ரொம்ப பசியா??முன்னாடியே எழுப்பியிருக்கலாம்ல” என்க,

“ம்ம்ம், சாரு எங்க என்னை வாயை திறக்க விட்டீங்க சொல்லுறதுக்கு??” என முறைக்க,

அவள் சொல்லியதில் கதிருக்கு வெட்கம் வந்து விட ,”போ டி” என்று‌ பதிலுக்கு பொய்யாக முறைத்தவன், அடுத்து எதுவும் வாயை திறக்காது உண்ண ஆரம்பித்து விட்டான்.

உணவினை முடித்தும் முல்லை சமையலறையை‌ சுத்தம் செய்ய, கதிர் பெற்றோருக்கு அழைத்து அங்கு நடக்கும் நிகழ்வுகளை கேட்டு கொண்டவன், அலுவலக சம்பந்தாமாக வந்த மெயிலை பார்வையிட ஆரம்பித்து விட,

வேலையை முடித்தவள் அவனருகே வந்து அமர “டூ மினிட்ஸ் முல்லை” என்றவன் சரியாக இரண்டு நிமிடங்களில் லேப்டாப்பை தூக்கி ஓரம் வைத்தவன், சீதாவிற்கு வீடியோ கால் அழைப்பு விடுத்து விட்டான் அத்விதனுடன் பேசும் பொருட்டு.

முல்லைக்கு ஆச்சர்யமே அவள் கேட்க வந்ததும் இது தான். ஆனால் அவள் வாய் திறக்காமலே அவளின் மனதினை கண்டு கொண்டு செயலாற்றியவனை கண்டு மேலும் மேலும் காதல் பெருகியது முல்லைக்கு.

ஒரு நாள் விட்டு பிரிந்த, ஏக்கம் அத்விதனிடம் நன்கு தெரிய கதிரின் முகம் தெரிந்ததும் “அங்….” என அழைக்க வந்தவன் அமைதியாகி கண்களை சுருக்கி அவனை காண,

அவனின் செயலை புரியாது விழித்த கதிர் “அதி கண்ணா!!!” என்றழைத்த நொடி, “ப்பா….கதிப்பா….நான் அங்க வரேன்…நீ வா” என்றிட உலகமே தனது இயக்கத்தினை சட்டென்று நிறுத்தி விட்ட உணர்வு கதிரிடம்.

கேட்ட வார்த்தைகள் அவனை தவிப்பிற்குள்ளாக்க தான் கேட்டது சரியா? என நினைத்து முல்லையை  பார்க்க அவளும் அதே நிலையில் இருக்க,

“அதி கண்ணா, இப்போ‌‌ நீ என்ன? என்ன சொன்ன ?திரும்ப சொல்லு” என அவன் தழுதழுத்த குரலில் கேட்க,

“ப்பா…கதிப்பா” என தந்தையின் சொல்லுக்கு இணங்க, அவன் பெறாத உதிரம் மீண்டும் அழுத்தமாக அவனை அப்பா என் அழைத்து அவனின் நிலையை புரிய வைக்க,

மகிழ்ச்சியில் அவனது கண்கள் கலங்கிட இரண்டு கண்ணீர் துளிகள் வெளியேறின.

“முல்லை..! முல்லை! இப்போ இவன் சொன்னது நிஜமா உனக்கு கேட்டுச்சா? இது எதுவும்‌ கனவு இல்லையே??” என அவன் தவியாய் தவிக்க,

முல்லை பதில் கூறும் முன் “அதெல்லாம் உனக்கு காது நல்லாதான்டா கேட்டுருக்கு, என் சிப்சு” என்றபடி திரையில் ராகேஷ் வர,

“டேய்! டேய் அண்ணா! அத்வி என்னை‌! என்னை‌…! அப்பா‌ சொன்னான்டா” என்றவனின் வார்த்தைகள் தட்டு தடுமாற,

“உன் பிள்ளை‌ உன்னை அப்பான்னு கூப்பிடாமா, வேற யாரைடா கூப்பிடுவான், ப்ளடி பிஸ்கட்” என ராகேஷ் தம்பியின் உணர்வு குவியல் புரிந்து, சற்றே அவனை திசை திருப்ப மற்ற முயல,

அதற்குள் அத்வி “கதிப்பா…வா…வா…இங்க கதிப்பா வா” என தனது இரு பிஞ்சு கைகளையும் நீட்டி அவனை அழைக்க,

“தோ, வந்துட்டேன் அதி குட்டி. இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க இருப்பேன்” என்றவன் வேகமாக கிளம்ப முயல,

அவனின் அவசரத்தை கண்டு சிரித்த ராகேஷ்” டேய்…டேய் இருடா, சீதாவோட அண்ணாவும், அண்ணியும் அங்க தான் கிளம்பிட்டு இருக்காங்க. நானும் அவுங்களோட வர்றேன் இவனை‌ கூட்டிகிட்டு, இதுக்கு ஒரு தடவை அலைவியா நீ?? அடங்கி உட்காருடா ,சரி அவுங்க கிளம்பிட்டாங்க நான் வைக்கிறேன்” என்றவன் போனை வைத்து விட,

முல்லையை இறுக அணைத்தவன் “முல்லை! என் பையன் என்னை அப்பா கூப்பிட்டுட்டான். எவ்வளவு நாள் ஏக்கம் தெரியுமா” என்றவனிடம் இன்னும் கண்ணீர் நிற்காமல் வழிய,

அவனின் மகிழ்ச்சியினை கண்டு முல்லைக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது. அத்வி அப்பா என்றழைத்ததற்கா? இத்தனை உணர்வு குவியல், ஆரவாரம் இவனிடம். எப்பொழுதும் எழும் கேள்வி அவள் மனதினில் இப்போதும் எழுந்தது.

‘அப்படி என்ன இருக்கிறது? என தன்னையும், அத்வியையும் இந்த அளவுக்கு பிடித்திருக்கிறது இவனிற்கு??’

வாசலுக்கும் வீட்டிற்கும் ஆயிரம் தடவை நடந்து விட்டான் கதிர் அத்வியின் வருகையை எதிர்நோக்கி.

ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை ராகேஷிற்கு அழைத்து, எங்க வந்து கொண்டிருக்கிறார்கள் என இவன் செய்த அலப்பறையில் கடுப்பாகிய ராகேஷ், அடுத்து போனை எடுக்கவே இல்லை.

ஒருவித பதட்டத்துடனும் பரபரப்புடனும், நடந்து கொண்டிருந்தவனை கண்டு சற்றே பொறாமையாக தான் இருந்தது முல்லைக்கு.

அதுவரை அவளை கொஞ்சி குலாவி கொண்டிருந்தவன் கடந்து அரைமணி நேரமாக அவளை திருப்பி கூட பார்க்கவில்லை. இதில் அத்விக்கு பிடித்த உணவை இரவிற்கு செய்ய சொல்லி அதட்டல் வேறு.

வாயிலில் கார் சத்தம் கேட்டதும் அடித்து பிடித்து கொண்டு கதிர் ஓட, இவன் வருவதற்குள் ஒரே ஓட்டமாய் அத்வி வீட்டினுள் வந்திருந்தவன், “கதிப்பா” என்றழைப்போடு அவன் மீது தாவ அள்ளி அணைத்து கொண்டான் கதிர்.

அவனின் பின்னே ஓடிவந்த ராகேஷ் “இந்தாடா நீ என்ன உஷைன் போல்டா? கார் கதவு திறந்ததும் அப்படியே குதிச்சு ஓடி வர. இங்க தான் இருக்கான் உன் அப்பன், அவ்வளவு அவசரமா ஓடி வரணுமா? கீழ விழுந்துருந்தா என்ன பண்ணிருப்ப” என சிறு குரலில் அதட்ட,

அவனின் அதட்டலில் தன் சிறு கண்களை சுருக்கி அவனை முறைத்தவன் “பேட் பெய்யப்பா… கதிப்பா தான் குட்” என்க,

“போடா பொடிப்பயலே” என்ற ராகேஷ் நகர,

கதிரின் கன்னம் தொட்டு “ஐ மிஸ் யூ கதிப்பா” என்க, உருகி விட்டது கதிருக்கு.

“ஐ டூ மிஸ் யூ டா” என்றவன் அவனை உச்சி முகர,

சீதாவின் அண்ணனும் அண்ணியும் உள்ளே வந்தனர்.

“வாங்க, வாங்க”என அவர்களை அழைத்து அமர வைத்தவன்‌ “முல்லை” என குரல் கொடுக்க, டீ ட்ரேயுடன் வெளியே வந்தாள் முல்லை.

அத்தனை நேரம் தேடாதவன் முல்லையை கண்டதும் “ம்மா” என்றவாறு அவளிடம் செல்ல முயல,

“போடா, வந்தன்னா அடி தான், இவ்வளவு நேரம் கழிச்சு தான்‌ உன் கண்ணுக்கு தெரியுறேன்னா? உன் கதிப்பா கூடவே‌ கொஞ்சி குலாவிக்கோ” என்க அத்வியின் முகம் சுருங்கி விட்டது.

அவனின் சுருங்கிய முகம் தாங்காது “ப்ட்ச் முல்லை” என கதிர் அதட்டலிட,

ஏற்கனவே கதிர்‌ தன்னை கண்டு கொள்ளாததில் சுணங்கி போனவள்‌ மகன் அவளை சுத்தமாக தேடாததில் சற்றே காண்டாகி தான் போயிருந்தவள் கதிர் அதட்டியதும் சிறு கோபம் முளை விட “என்ன? என்ன முல்லை” என பதிலுக்கு இவள் சற்றே எகிற, அவளின்‌ குரலின்‌ மாற்றத்தை உணர்ந்து கொண்டவன்,

“ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை” என சட்டென இறங்கி வந்தவன் குழந்தையிடம் சமாதானம் பேச தொடங்கியிருந்தான்.

வந்தவர்களை முல்லை நன்கு உபசரிக்க, அவர்களும்‌ நன்றாகவே பேசினர் முல்லையிடம். விஷேஷத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு அவர்கள் கிளப்ப, ராகேஷூம் இணைந்து கொண்டான்.

அவன் கைகளில் சிறு பேக் இருக்க கேள்வியாய் பார்த்த கதிரிடம், “சீதாவுக்கும் ரேஷ்மிக்கும் டிரெஸ்டா” என்றவன் அத்வியிடம் திரும்பி “வர்றியாடா குட்டி அங்க” என்க,

“ம்ஹீம், ம்ஹீம் நோ…நோ…பெய்யப்பா” என கதிரின் கழுத்தை இறுக்கமாக கட்டி கொள்ள,

“இப்புடியே இறுக்கமா பிடிச்சுக்கோ தொலைஞ்சிறப் போறான் உங்கப்பன்” என நக்கலாக கூறியவன் வந்தவர்களுடன் கிளம்பி விட,

அதன் பின் கதிர்‌ அத்வியுடன் ஐக்கியமாகி விட்டான். பொறுத்து பொறுத்து பார்த்தவள், நீண்ட நேரமாகியும் அவர்களின் சம்பாஷணை ஓயாது போல் தெரிந்ததில், கடுப்புடன் அறைக்குள் நுழைந்து கதவடைத்து கொண்டாள் முல்லை.

அவள் அவர்களை தாண்டி சென்றதை கூட உணராத நிலையில் இருந்தனர் இருவரும்.

“கதிப்பா தண்ணி” என அத்வி கேட்டு தான் தங்களது உரையாடலை முடித்து வைத்திருந்தான்.

“முல்லை அதிக்கு தண்ணி எடுத்துட்டு வா” என அவள் இருக்கிறாளா? இல்லையா? என கூட நிமிர்ந்து பாராது கதிர் சத்தமிட, நீண்ட நேரமாகியும் அவளின் அரவம் உணராததில் அப்போது தான் கதிர் அவளை தேட அவள் இல்லாதது தெரிந்தது.

மீண்டும் ஒரு முறை இவன் சத்தம் கொடுக்க, அப்போதும் பதிலில்லை என்றதும் ‘எங்க போனா இவ’ என்றபடி அத்விக்கு தண்ணீர் கொடுக்க சமையலறை தூக்கி சொல்ல, அங்கே இரவு உணவிற்கு பாதி தயார் செய்திருந்த நிலையில் இருப்பதை கண்டதும், சட்டென பல்பு எரிந்தது அவனிற்கு.

‘போச்சு, திரும்பவும் காண்டாகிட்டா போலயே’ என நினைத்தவன் “டேய் அதி‌ நீயாவது உங்கம்மா கிட்ட போயிருக்க கூடாதாடா??” என புலம்பியவன் வெளிகேட்டை சாற்றி விட்டு அவனின் அறைக்கு செல்ல, மூடிய கதவே அவனை வரவேற்றது.

“ஆத்தி…ரொம்ப காண்டாகிட்டா போலயே!” என அலறியவன் கதவில் கை வைக்க திறந்து கொண்டது.

முல்லை தூக்கி வைத்து முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருக்க, அவள் அருகே சென்றவன் பாவம் போல் நின்று கொண்டு “முல்லை” என அழைக்க அவளிடம் பதிலில்லை.

“ஹனிடால்..” என்றவாறு அவளின் தோளை தொட, வெடுக்கென அதனை தட்டி விட்டவள், அவனிற்கு முதுகு காட்டி படுத்து விட,

“அதி குட்டி அம்மா கோவமா இருக்கா ” என்றவன் அவனின் காதினில் எதுவோ கூறி இறக்கி விட,

தைய, தக்கா! வென நடந்து சென்ற அத்வி, “ம்மா” என்றழைத்தவன் அவளின் மேல் ஏறி படுத்து கொண்டு அவளின் கன்னத்தில் முத்தமிட்டு சிரிக்க,

அவனின் செயலில் கரைந்தாலும் விறைப்பாகவே இருந்தவள் “போடா நீ, பேசாத உன் கதிப்பா கிட்டயே போ, நான் வேண்டாம்ல உனக்கு” என்றிட,

“நோ…நோ….ம்மா நீ வேணும் ” என்றவன் பரிதாபமாக கதிரை ஏறிட, அள்ளி அணைக்க கைகள் பரபரத்தது கதிருக்கு அவனின் பாவனையில், இருந்தும் முல்லையை நினைத்தே அடக்கி நின்றவன்,

சைகையால் அத்வியிடம் கன்னம் தொட கூற, அதனை சமர்த்தாக புரிந்து கொண்டவனும் முல்லையின் கன்னம் தடவி கொஞ்சி “ஹனிதால்…..” என்க பட்டென சிரித்து விட்டாள் முல்லை.

அவளின் சிரிப்பில் மகிழ்ந்தவன் “ஹனிதால்…! ஹனிதால்” என உற்சாகமாக அழைக்க, சத்தமாகவோ சிரித்தாள் முல்லை அவனின் யுக்தியை நினைத்து.

“அப்பாடா சிரிச்சுட்டா” என்றவாறு கதிர் முல்லையின் அருகே அமர்ந்து அவளை அணைக்க,

“எடுங்க கைய, உங்க கூட இன்னும் சண்டை முடியல, கொஞ்ச நேரம் முன்னாடி வரைக்கும் அட்டை போல என் மேல் ஒட்டிக்கிட்டு கிடந்துட்டு, புள்ளை வந்ததும் திரும்பி கூட பாக்கலை. இப்போ மட்டும் ஏன் வர்றீங்க” என்றபடி அவனுடன் சண்டை பிடித்தவள் தன் மேல் இருந்த அத்வியை தனக்கருகே படுக்க வைத்து கொண்டாள்.

“ஏய்!!!” அவள் சொன்ன உண்மையில் வெட்கி புன்னகையுடன் கூறியவனின் குரல் குழைந்து ரகசியமாக ஒலித்தது.

“இதெல்லாம் நியாயமே இல்லை டி, அவனும் தான உன்னை கண்டுக்கவே இல்லை, அவனை மட்டும் கொஞ்சுற” என இவன் மல்லுக்கு நிற்க அதனை எல்லாம் கண்டு கொள்ளாமல், அத்வியிடன் கதை பேச தொடங்கி விட்டாள் முல்லை.

“போ டி ” என்றவன் சிறிது நேரம் முறுக்கி கொண்டு “அத்வி இங்க வா” என்க, “நோ ப்பா அம்மா கூட” என்றவனின் பதிலில் மேலும் முறுக்கியவன் திரும்பி படுத்து கொண்டான்.

சில நிமிடங்கள் கூட தாக்கு பிடிக்க முடியாமல் “ப்ச் முல்லை” என்றவாறு, அவளின் பின்புறம் இருந்து அவளின் இடையில் கை கொடுத்து தன்னுடன் சேர்த்தணைத்தவன், அவளின் வெற்று முதுகில் தனது மீசை முடிகளால் கோலமிட, மறுகரம் வழக்கம் போல் அத்வியின் கன்னத்தினை வருடியது.

அவனின் தீண்டலில் நெளிந்தவள் “கதிர் என்ன பண்றீங்க விடுங்க” என,

“ம்ம்ம் அப்போ என்னையும் கொஞ்சு” என்க,

“முடியாது” என பட்டென பதில் வர,

“அப்போ அனுபவி” என்றவன் தன் பேச்சுகளை முடித்து கொண்டு, இதழ் கொண்டு அவளை தீண்ட மெல்ல உருகினாள் பெண்.

அப்போதும் அவள் வீம்பு பிடிக்க, அவளின் முதுகில் இருந்த பூனை முடிகளை பல்லினால் இழுத்து சிறிதாக கடித்து வைக்க,

“ஷ்ஷ்ஷ்” என கத்தியவள் அதற்கு மேல் முடியாதென திரும்பி பட்டென அவனின் கன்னத்தில் சிறு அடியை போட,

அவளின் புறம் இருந்த அத்விதனை தூக்கி தன் நெஞ்சுடன் அணைத்து கொண்டவன், விலக முயன்றவளை விடாது கழுத்தோடு சேர்த்தணைத்து, அவளது கூந்தலை வலிக்க பற்றியவன் வலியில் கத்த திறந்த அவளது இதழ்களையும், வலிக்க பற்றி கொண்டான்.

அத்விதனை வைத்து கொண்டு அவளால் அதிகம் போராடவும் முடியவில்லை. அவளது போராட்டம் முடிந்து, அவள் சோர்ந்து போகும் வரை அவளை விடாது இறுக்கமாக பற்றி கொண்டிருந்தவன், ஒரு கட்டத்தில் அவள் சோர்ந்ததும் மெல்ல தனது பிடியை இலகுவாக்கி கொண்டானே தவிர, விடவில்லை.

போதும் என நினைத்தானோ, ஒரு கட்டத்தில் அவனே விடுவிக்க அவளின் முகம் எல்லாம் அவனின் கைகளின்‌ அழுத்தத்தில் கன்றி சிவந்து போயிற்க, கன்னங்கள் இரண்டும் பயங்கரமாய் வலிக்க, அவனை ஏறிட்டு முறைத்தவளை கண்டு குறும்புடன் கண்ணடித்து சிரித்தான் கதிர்‌.

“இப்போவாச்சும் என்னை கொஞ்சுவியா” என அவன் கேட்டிட,

“கொழுப்பு, கொழுப்பு, உடம்பு எல்லாம் கொழுப்பு! இவ்வளவு நேரம் இவரு கொஞ்சுனது பத்தாததாமா” என அவனை நன்றாக அடித்தவள், இறுதியில் அவன் தோள் சார்ந்து கொண்டாள்.

அவளை அணைத்து படுத்தவனின் முகம் எல்லையில்லா நிம்மதியில் விகாசித்து இருந்தது.

“ம்மா பசிக்கு” என்ற அத்வியின் வார்த்தைகளில் தங்களது தவத்தை கலைத்தவர்கள், அவனை தூக்கி கொண்டு கீழிறக்க, ஏற்கனவே பாதியில் நிறுத்தியிருந்தை அவசரகதியில் செய்து உணவினை முல்லை முடிக்கவும், ஞானமும் கோபலசுவாமியும் வரவும் சரியாக இருந்தது.

உணவினை முடித்து விட்டு அனைவரும் உறங்கிட, என்றும் இல்லாத நிறைவு, அன்று கதிர் மற்றும் முல்லையின் முகத்தில் நிறைந்திருக்க, தங்கள் இணையின் அருகாமையில் சுகமாய் உறக்கத்தினை தழுவியிருந்தனர்.

மேலும் இரண்டு நாட்கள் கழிந்திருந்து. இந்த இரண்டு நாட்களும், வாழ்க்கையை அத்தனை சந்தோஷமாக எதிர்கொண்டு வாழ்ந்தனர் கதிரும் முல்லையும்.

இவர்களின் வாழ்க்கை நிறைந்த மகிழச்சியாய் மாறியிருக்க, அங்கே சுரபியின் நிலை படு மோசமாகியிருந்தது.

“சொல்லு டி? ஹரிஷ் சொல்லுறது எல்லாம் உண்மையா? இரண்டு தடவை அபார்ஷன் பண்ணி, அதை யாருக்கும் தெரியாம வேற மறைச்சு வச்சுருக்க, ச்ச்சீ” என தன் முன்னே நின்று ஆவோசமாய் கேள்வி கேட்ட ஸ்ருதியை கண்டு பதில் பேச முடியாது கூனி குறுகி நின்றாள் சுரபி.

“ஆமா அப்புடி தான்” என தைரியமாக உடன் பிறந்தவளிடம் தலையை நிமிர்த்தி, உரைக்க முடியவில்லை சுரபியால்.

அக்கா தன்னை கீழாக நினைப்பாளே, என்ற எண்ணமும் தற்போது கரு கலைந்த அதிர்ச்சியும், அவளை பேச விடாது மெளனியாக்கி விட, அவள் முன் குற்றவாளிகளாக நின்றனர் ஹரிஷீம் சுரபியும்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 9

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
10
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ஒரு அழகான அத்தியாயம். கதிரோட காதல் ரொம்ப அழகாக இருக்க காரணமே, அவன் அத்வி மேலயும் வச்சிருக்கிற அளவில்லாத அன்பு தான். அவளை மட்டுமில்லாம, அவளோட குழந்தையையும் உண்மையா நேசிக்கிற அழகன் தான் கதிரழகன்.