
காதல் -28
அந்த ஆள் நடமாட்டம் குறைவான இடத்தில் தான் சிந்தாமணி அலறிக் கொண்டு இருந்தார்.. அவருடைய புடவையை வைத்தே அவரது கை கால்களை கட்டி வைத்த ராஜ வேல் வெறித்தனமாக அவரை நெருங்கி இருந்தான்.
அதே நேரம்.. ஒரு கட்டிங் போடுவதற்காக அந்த பக்கமாக வந்து கொண்டிருந்தார் ஒருவர். ஊருக்கு வெளியே இருப்பதால் எந்த தொந்தரவும் இல்லாமல் கட்டிங் போட்டு விட்டு போவது அவரது வழக்கமாக இருக்க.. இன்றும் அதே நேரத்தில் பாட்டிலோடு அந்த வீட்டை நெருங்கி போகும் போது.. சிந்தாமணியில் அலறல் சத்தத்தில் ஆடி போனார் ஆடவர்.
இல்லை பிரம்மையாக இருக்கும் என.. அங்கே அருகில் அமர்ந்து சரக்கை போட ஆரம்பித்தார் அவர். மீண்டும் அதே அலறல்..
” எங்க இருந்து சத்தம் வருது, இந்த வீடு எப்பவுமே பூட்டி தானே இருக்கும், இன்னைக்கு யாரு வந்திருக்கா… ” என நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் அலறல் சத்தம் கேட்க.. இதற்கு மேல் தாமதிக்க வேண்டாம் என பாட்டிலில் மீதம் உள்ள சரக்கை வாயில் ஊற்றி விட்டு வேகமாக அந்த வீட்டை நெருங்கி கதவை திறக்க முயல.. அது உள் பக்கமாக பூட்டி இருந்தது..
சற்றும் தாமதிக்காமல் பின்னால் வழியாக சென்று கிணற்றின் மேல் ஏறி கூரையின் மேல் பாய்ந்து அந்த வீட்டிற்குள் குதித்தார் அவர். அங்கே அவர் கண்ட காட்சி அத்தனை கொடுமையானது. சிந்தாமணியை பாதி நிர்வாணமாக்கிய ராஜ வேல் தொடர்ந்து அவனது வேட்கையை தொடர, அதற்கு மேல் பொறுக்க முடியாமல் ராஜின் மேல் பாய்ந்தார் அந்த ஆடவர்.
சரக்கு அடித்திருந்ததால் , கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து ராஜை வெளுக்க ஆரம்பித்தார்… திடீரென வீட்டிற்குள் ஒருவன் வருவான் என்பதை எதிர்பார்க்காமல் அதிர்ந்த ராஜ்.. அவனும் தன்னுடைய பலத்தை திரட்டி அடிக்க பாய, ஏனோ எதிராளியின் பலத்தில் அவனால் போட்டி போட முடியாமல் சோர்ந்து விழுந்தான்.
” என்ன தைரியம் டா உனக்கு, வயசு பொண்ணு எல்லாம் போய், இப்ப அம்மா வயசுல இருக்குற பெண்ணையும் விட்டு வைக்கிறது இல்லையா” என அவனை அடித்து சின்னா பின்னாமாக ஆக்கி விட்டார் அவர்.
அடித்த அடியில் ராஜ் இந்த உலகத்தை விட்டே சென்றிருக்க.. அவனை வெறியாக தாக்கி விட்டு வீட்டிற்கு பின்னால் உள்ள கிணற்றில் தூக்கி வீசி விட்டு, வீட்டிற்குள் வந்தவர் சிந்தாமணியை நெருங்கினார்..
அதற்குள் சிந்தாமணி பாதி மயக்கதிர்க்கு சென்று விட்டார். இப்படியே உயிர் போனாலும் பரவாயில்லை என்று நினைத்தாரோ என்னவோ…
வீட்டிற்குள் வந்தவர் கை கால்கள் கட்டப் பட்டிருந்த சேலையை கழற்ற ஆரம்பித்தார்… அவர் அடித்த சரக்கு வேலை செய்ய, போதை தலைக்கேறி போக தலையை உலுக்கி கொண்டே செய்தார்.
தன் மேல் அசைவு தெரியவும் மெதுவாக கண் விழித்த சிந்தாமணி.. வேறொரு ஆடவனை பார்த்து கத்த முடியாது சூழ்நிலையில் கண்ணீர் வடித்தார். அவன் முடித்து விட்டு இவன் வருகிறான் போல என நினைத்து உடலை அசைத்து அவரது மறுப்பை தெரிவிக்க… அதை எதையும் அறியாமல் காரியத்தில் கண்ணாக இருந்தார் அவர்.
நிதானம் தவறி போனது அவருக்கு… அதே நேரம் அந்த வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள் சாயாலி…
அங்கே அரை நிர்வாணமாக இருக்கும் அந்த பெண்ணையும்… அருகில் முழு போதையில் இருக்கும் ஆடவனையும் பார்த்தவள் அதிர்ந்து போனாள்.
” அப்பா…… ” என சாயாலி அலறி கத்தி விட…
போதையில் அதை உணராமல் மேலும் முன்னேறிச் சென்று கொண்டிருந்தார் அவர். ஆம் அவர் சாயாலியின் தந்தை தான்… இந்த நேரத்தில் தந்தை இங்கே தான் குடித்து விட்டு கிடப்பார் என அவரை தேடி வந்த சாயாலி கண்டது தான் இந்த காட்சி.
குடி …குடி மட்டுமே என வாழ்ந்து வந்த தன் தந்தை இப்போது பெண்ணை கற்பழிக்கும் நிலைக்கு வந்து விட்டதை அவளால் சற்றும் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை .. அந்த சூழலே அங்கு என்ன நடந்திருக்கும் என அவளை தானாக உணர வைத்தது.. அவள் நினைத்தது சரி தான்.. ஆனால் கற்பழிக்க முயன்றது அவளது தந்தை இல்லையே, ராஜ வேல் என்பதை அறியாமல் போனாள் பேதை.
மெதுவாக சிந்தாமணி எழுந்து … கால் அடியில் அமர்ந்திருக்கும் சாயாலியின் தந்தை சண்முகத்தை தாக்க.. அதில் கடுப்பான சண்முகம்.. சிந்தாமணியை உதறி தள்ளினார்..
அங்கு நிற்கும் சாயாலியிடம் இரைஞ்சும் பார்வை பார்த்தவர்… எப்படியாவது என்னை காப்பாற்று என கண்களால் கெஞ்சினார்.
அதற்கு மேல் பொறுக்க முடியாமல் சாயாலி ஓடி சென்று அவளது தந்தையை சிந்தாமணியிடம் இருந்து இழுக்க… அவரோ போதையில் மகளையும் பிடித்து தள்ளி விட்டார்.
அவரது முரட்டு தனமான செயலில் அதிர்ந்த சாயாலி… அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து அவர் மண்டையில் அடித்தே விட்டாள்…. போதையில் நிலை தடுமாறிய வண்ணம் எழுந்த சண்முகமோ , தன் தலையில் அடித்த சாயாலியின் முடியை பிடித்து கீழே தள்ளி விட்டவர்… அடுத்த நொடி சிந்தாமணியை நெருங்கி அவர் முடியை கொத்தாக பிடித்து விட்டார்.
காப்பாற்ற வந்த சண்முகத்தை தான் இருவரும் மாறி மாறி அடிக்கிறார்கள் என்பது இருவருக்கும் தெரியவில்லை .. சிந்தாமணி மயக்க நிலைக்கு சென்றதால் அவராலும் கண்டு கொள்ள முடியவில்லை.. இத்தனை நாளும் குடி பழக்கத்துடன் குடும்பத்தை மட்டுமே வதைத்த தந்தை தற்போது பெண்களை சீரழிக்க கிளம்பி விட்டார் என்ற கடுப்பில் அவளும் தாக்கி விட்டாள்.
சிந்தாமணியின் முடியை பிடித்து இழுத்து வந்தவர் முன்பு சாயாலி வெறியாக நிற்க… அவளை கண்டு கொள்ளாமல் முன்னேறி சென்றவரை பார்த்து ஆத்திரம் மேலோங்க.. ” அப்பா போதும் பா… இதுக்கு மேல எதுவும் செய்யாதீங்க… பாவம் மேல பாவம் பண்ணிட்டு இருக்கீங்க ” என கத்திய மகளை கண்டு கொள்ளவில்லை சண்முகம்… அப்பா என்றதும் அதிர்ந்து போன சிந்தாமணிக்கு அப்போது தான் தெரிந்தது… இந்த பெண்ணின் தந்தை தான் இவர் என்பது…
துணியை கூட சரியாக அணியாத சிந்தாமணியை இழுத்து கொண்டு வெளியே செல்வதை பார்த்து, அவரை தடுக்கவும் முடியாமல் ஒரு கல்லை எடுத்து வந்து அவர் பின்னால் இருந்த வண்ணம் தலையில் போட்டு விட்டாள் சாயாலி..
அவ்வளவு தான் ரத்தம் சொட்ட சொட்ட தரையில் மடிந்து விழுந்தார் சண்முகம்… சிந்தாமணி அதிர்ந்து போய் பார்க்க… ரத்தத்தோடு கீழே விழுந்த தந்தையை கண்டு அலறி போனாள் சாயாலி.. ஏதோ ஒரு வெறியில் செய்து விட்டாள்.. ஆனால் என்ன இருந்தாலும் தந்தை அல்லவா, ” அப்பா…………. ” என அலறி அவர் அருகில் அமர… அதுதான் அவள் பேசிய கடைசி வார்த்தை..
அந்த நிமிடத்தில் இருந்து அதிர்ச்சியில் அவளது பேச்சு திறன் பறிபோனது. சிந்தாமணி பயத்தில் அலற தொடங்கினார்… ” ஐயோ என்ன மா பண்ணிட்ட… ” என முடியாமல் சிரமப் பட்டு கேட்டுக் கொண்டாள் சிந்தாமணி…
அப்போது அங்கு ஏதோ ஆட்கள் வருவது போல சத்தம் வர, கூடவே சைரன் சத்தமும் சேர்ந்து வந்தது… ” நீ இங்க இருந்து உடனே போ மா… நான் தப்பிச்சு போயிடுவேன்… போ மா ” என சிந்தாமணி சாயாலியை விரட்டாத குறையாக அனுப்பி வைக்க… பிரம்மை பிடித்தவள் போல இரத்தம் சொட்ட கிடக்கும் தந்தையை பார்த்துக் கொண்டே சென்றாள் சாயாலி…
வண்டியில் ஏற்றி விட்ட சிந்தாமணியின் டிரைவர் , அவரது வண்டியை வேலை பார்த்து விட்டு, சிந்தாமணி கையில் கட்டி இருக்கும் வாட்சில் உள்ள கருவியை பயன்படுத்தி அவர் வீட்டிற்கு சென்று விட்டாரா என உறுதி படுத்த பார்க்க, அதுவே ஊருக்கு வெளியே உள்ள ஏரியாவில் காட்டியதுமே உடனே காவல் நிலையத்திற்கு அழைத்து லொகேஷனை அனுப்பி விட்டு அவனும் அந்த இடத்திற்கு விரைத்தான்…
அப்படி தான் போலீஸ் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தது… சிந்தாமணி கிழிந்த நாராக கீழே கிடக்க… வேகமாக வந்த பெண் போலீசார் அவரை தூக்கி ஆடைகளை அணிவித்து … தண்ணீரை கொடுத்து சற்று மயக்கம் தெளிந்ததும் நடந்ததை கேட்க… அவரோ சாயாலியின் தந்தையை காட்டி கற்பழிக்க முயன்றதாக கூறி விட்டார்…
” ஐயோ அம்மா நான் உங்களை ராஜ வேலு கார்ல தானே அனுப்பி விட்டேன் ” என டிரைவர் கேள்வி கேட்க…
” அவர் தான் முதல்ல என்னைய” என அதற்கு மேல் பேச வராமல் சிந்தாமணி கண்ணீர் சிந்த… பார்ப்பவர்கள் அனைவருக்குமே மனது கனமானது…
சண்முகம் அருகில் சென்று பார்த்த போலீசார்.. ” சார் இவரு இறந்துட்டாரு ” என கூறவும்.. போலீசார் சிந்தாமணியை தான் பார்த்தார்கள்..
” எனக்கு வேற வழி தெரியலை சார்… இவரும் என்ன கற்பழிக்க முயற்சி பண்ணும் போது.. என்ன காப்பத்திக்க கல்லை எடுத்து அவர் தலையில போட்டேன் ” என முகத்தை மூடிக் கொண்டு அழ… அதற்கும் மேல் பேச்சு வார்த்தையை இழுக்காமல் சிந்தாமணியை காரில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தனர்.
ஆக குடிக்கு அடிமையாகி இருந்த சண்முகமும் செய்யாத தப்பிற்கு தண்டனையை வாங்கி கொண்டு இந்த பூலோகத்தில் இருந்து மறைந்து இருந்தார்.
அதுக்கப்பறம் நடந்தது தான் உனக்கே தெரியுமே… என முகத்தை மூடி அழுது கொண்டிருந்தார் சிந்தாமணி…
அதிர்ந்து போனவனாய் அங்குள்ள இருக்கையில் செயலற்று அமர்ந்து விட்டான் மறவன்… தவறு செய்தது தன் தந்தையாக இருந்த போதிலும் அவரை கொலை செய்து இருக்கும் பெண்ணை ..உடலுக்கு ஆசைப் பட்டு நெருங்கி இருக்கிறாள் என பழி சுமத்தி அவளை வீட்டை விட்டு அனுப்பி விட்டோமே.. இனி சாயாலி இல்லாது என்ன செய்வேன்… காலம் கடந்த ஞான உதயம்..
இனி சாயாலி மறுபடியும் வருவாளா.. ? அவள் வருவது இருக்கட்டும் வந்தாலும் அத்தனை எளிதில் அவனுடன் வாழ்ந்து விடுவாளா ?? வாழ்க்கையே கேள்விக்குறி ஆகி போனது இவன் கதையில்…
சனா🖤

