Loading

 

இரவு தியா கூறியது போல் நால்வரும் பெண்ணவளின் செலவில் ரெஸ்டாரன்டில் சந்தித்து ஒன்றாக இணைந்து சாப்பிட்டு முடிய, வாகினியை வீட்டிற்கு விட ஜோஸப் சென்று விட, தியாவும் தன்னுடைய வீட்டிற்கு ரேயனுடன் வண்டியில் சென்றாள்.

 

பின் போகும் வழியில் அவனிடம் வண்டியை நிறுத்த கூறி “ஐஸ் கிரீம் சாப்பிடலாம் ரே” என்று தனக்கு அவனுக்குமான ஐஸ் கிரீமை வாங்கிவிட்டு திரும்ப சட சடடென்று மழை பெய்ய தொடங்க, அருகிலிருந்த பேருந்து நிறுத்தமிடத்தில் மழைக்காக ஒதுங்கி அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட தொடங்கினார்கள்.

 

ஆடவனும் மழையை ரசித்தப்படி ஐஸ் கிரீம் சாப்பிடும் சிலையை ரசித்து தன்னுடையதையும் சாப்பிட்டு முடித்து பெண்ணவளிடம் பேச்சு கொடுக்க “யாழி..” என்று மென்மையாக அழைத்தான்.

 

இப்போதெல்லாம் அவனின் சுருங்கிய அழைப்பு பெண்ணவளின் உயிர்வரை சென்று ஏதோ உணர்த்த, வழக்கம் போல் அவ்வழைப்பில் செயலிழந்து மீண்டவள், உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்ளாமல் “சொல்லு ரே”

 

“நீ லவ் பத்தி என்ன நினைக்கிற” என்றவனின் நோக்கம் புரிந்து விரகத்தியாக சிரித்தவள் “என்ன சடனா லவ் பத்தி கேக்குற”

 

“இல்ல நீ தான் வளைச்சி வளைச்சி சைட் அடிக்குறியே.. அதான் லவ் பத்தி என்ன நினைக்குறேன் கேட்டேன்”

 

“கோவில் போகிறதால சாமி கும்பிடுற எல்லாருக்கும் பக்தியிருக்குன்னு அர்த்தமா என்ன.. அது போல தான் சைட் அடிச்சிக்க வேண்டி தான் மத்தப்படி லவ், மேரேஜ்ன்னு வரும் போது ஆம்பளைங்க மேல சுத்தமா எனக்கு நம்பிக்கை இல்ல” என்றவளின் முகத்தில் வலியின் சாயல் அப்பட்டமாகவே தெரிய,

 

அதை குறித்து கொண்ட ரேயன் “அப்போ லாஸ்ட் வர சிங்கிளாவே இருக்க போறியா”

 

“என் அம்மாவோட புருஷன்.. அதான் என் அப்பன் என் அம்மாவ காதலங்குற பேருல தாலிக்கட்டி ஏமாத்தி அவங்க அழக மட்டும் அனுபவிச்சிட்டு என்னயும் தம்பியையும் கொடுத்துட்டு நடு தெருல விட்டுட்டு போயிட்டான்.. அப்போ என் அம்மா தம்பிய சுமந்துகிட்டு இருக்காங்க.. நான் நாலு வயசு பிள்ள.. எங்க அம்மா ரொம்ப அப்பாவி அதுனால தான் அந்த ஆளு ஈஸ்யா ஏமாத்திட்டான் அந்த வலி அவங்களுக்கு இருந்தாலும் வெளியே காட்டிக்காம மாசமா இருக்கும் போதே எனக்கு சாப்பாட்டுக்காக வேலை பாத்தாங்க..

 

சடன்னா ஒருநாள் ரெண்டு அடியாட்கள் வந்து உயிரோட இருக்க ஆசைப்பட்டா ஊரவிட்டு போன்னு மிரட்டிட்டு போனானுங்க.. அதுவே என் அப்பன் ஆளுங்க தான்.. மறுநாளே நாங்க இருந்த வீட்ட கொழுத்திட்டானுங்க.. எங்க அம்மாவும் கஷ்டப்பட்டு அவங்க உயிரையும் பணயம் வைக்க உசுரோட ரெண்டு பேரும் வெளியே வந்துட்டோம்.. அப்புறம் கையிலயிருக்குற காசுல ஏதோ நம்பிக்கையில மதுரை வந்தாச்சு..

 

அப்போ பசில நான் அழ பக்கத்துலிருந்த ஹோட்டல் பால் வாங்கி ஆத்தி கொடுத்த என் அம்மாக்கு பிரசவலி வந்துருச்சு உடனே அந்த ஹோட்டலிருந்த லேடீஸ் தான் என் அம்மாவ ஹாஸ்பிட்டல் சேக்க என் தம்பியும் பிறந்தான்.. அப்புறம் ஹாஸ்பிட்டல் சேத்தவங்களே பரிதாபப்பட்டு கொஞ்சநாள் எங்கள பாத்துக்க.. அம்மா உடம்பு தேரி வரவும் அந்த ஹோட்டல்லயே அம்மா வேல பாக்க ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. என் அம்மாவோட கை பக்குவமும் பிடிச்சி போய் வியாபாரம் நல்ல போக தனியா வீடு எடுத்து மூணு பேரும் தங்கிட்டோம்.. அப்படியே அந்த ஹோட்டலயே வேலை பார்த்து என்னையும் என் தம்பியையும் படிக்க வச்சாங்க இப்போவரை அந்த வேலைய விடல..” என்றவளின் கண்கள் கலங்கி மூச்சு வாங்க,

 

அதில் பதறி அவளை தோலோடு அணைத்த ரேயன் “யாழி.. ரிலாக்ஸ்” என்று அவள் முதுகை வருடி கொடுக்க,

 

“நான் வயசுக்கு வந்ததும் தான் என் அம்மா எல்லாத்தையும் என்கிட்ட சொன்னாங்க.. அதோட காதலிருக்குறது தப்பில்ல அந்த காதல் உன் சுயத்த இழக்க வச்சா அது உண்மையான காதல் இல்ல.. உனக்குன்னு பிடிப்பு வருரவரை படிப்பு வேலைன்னு ஓடிட்டேயிரு எப்போ உனக்கு வாழ்க்கைன்னா பாடம் புரிஞ்சி உனக்குன்னு துணை தேவைப்படுதோ அப்போ உனக்கு நம்பிக்குறிய ஆண தேர்ந்தெடு அது சரியாயிருந்தா.. அப்போ தான் உன் வாழ்க்கை முழுமையா வெற்றி அடையும்ன்னு சொல்லுவாங்க.. நானும் அத தான் பின்பற்ற நினைக்கிறேன்” என்றவள் இறுதியை தடுமாற்றத்துடன் கூறி முடிக்க,

 

பெண்ணவளின் தூயர் கேட்டு வேதனை அடைந்தவன் “உன் அம்மா சொன்னது கரெக்ட் தான்.. ஆனா அதுக்காக எல்லாருமே உங்க அப்பா போல இருக்கா மாட்டாங்க யாழி” என்றவனுக்கு தன் மீதும் நம்பிக்கையில்லாமல் போயிவிடுமோ என்று ஏக்கம் இருக்க,

 

அவனின் கூற்றை ஒப்பு கொண்ட தியா “கரெக்ட் தான் ரே.. நான் பாத்தவரை என் தம்பி நீ அப்புறம் ஜோஸா உங்க மூணு பேரு போல நல்லவங்க இருக்க தான் செய்றாங்க.. ஆனா நம்ம உறவு மாறாத வரை நல்லது மாறினா அது யாராயிருந்தாலும் எனக்கு யார்மேலயும் நம்பிக்கையில்ல..” என்று அவனிடம் மறுமுகமாகவே எச்சரித்த தியா யாராயிருந்தாலும் என்பதையும் அவன் உணரும் வேண்டுமென்று அழுத்தி கூறினாள்.

 

ஏனோ, அவளின் உணர்வுகள் புரிந்தாலும் பெண்ணவள் தன்னை சுட்டி காட்டிகுறாள் என்று உணர்ந்து இதழ் குவித்து ஊதியவன் “எனக்கு உன் கஷ்டம் புரியுது யாழி.. ஆனா என்னால உன்னவிட்டு போக முடியாதுடி.. எப்போவுமே கூடயிருப்பேன்.. எனக்கு நீ வேணும் யாழி” என்றவன் பட்டென்று அவளை அணைத்து “லவ் யூ யாழி” என்று விட,

 

அவ்வளவு தான் வெறிபிடித்து அவனை தள்ளிவிட்டவள் “பைத்தியாம நரேன் உனக்கு.. இவ்வளவு சொல்லியும் இப்படி சீப்பா பிகேவ் பண்ற வேண்டாம் நரேன்.. இந்த எண்ணத்த தூக்கி போட்டுரு இல்லன்னா நம்ம நட்பயையும் அழிச்சிடும்”

 

“என்னால தூக்கி போட முடியாதுடி.. எனக்கு நீ வேணும் யாழிமா.. என்னால உன்ன விட்டு கொடுக்க முடியாது.. என் காதல உனக்கு புரிய வைப்பேன் புரிஞ்சுப்ப” என்று அவள் கையை பற்ற போக, அவனை நெருங்க விடாமல் தடுத்தவள் “சோ இத்தன நாளா இந்த எண்ணத்தல தான் என்கிட்ட பழகியிருக்க நான் அது கூட தெரியாம உன்ன நம்பி ச்சி.. போயிடு” என்று எழுந்தவள் மழையில் நனைந்தப்படியே உணவற்று வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

 

அவளின் தலை மறையும் வரை பார்த்திருந்து அப்படியே கண்கள் மூடி சாய்ந்தவனுக்கு பெண்ணவளை அவன் முதல் முறை பார்த்த நிகழ்வுகளே வந்து சேர்ந்தது.

****

மதுரையில் நண்பன் திருமணத்திற்காக வந்திறங்கிய ரேயன் ரயில் நிலையத்தில் சற்று தள்ளி கூட்டமாக இருப்பதை கண்டு அங்கு விரைந்தான்.

 

அங்கு பெண்ணொருத்தி கல்லூரி செல்லும் மணவானின் முகத்தை பஞ்சராக்கி “ஏன்டா முண்டம் காலேஜ்க்கு படிக்க போறியா இல்ல சேவை பண்ண போறியா..” என்க, அவளின் பக்கத்தில் நின்ற பெண்ணை பார்த்துவிட்டு, அவளின் அடியில் பம்மி “அக்கா அந்த பொண்ணுக்கு ஹெல்ப் பண்ணலாம்ன்னு தான்” என்றவளின் வாயில் குத்தியவள் “எது வாழ்க்கை கொடுத்து தான் ஹெல்ப் பண்ணுவீங்களோ.. சார் வள்ளல் பரம்பரையா”

 

“இல்ல அக்கா.. அந்த பிள்ளைய லவ் பண்றேன்”

 

“ஓ லவ் எப்படி எப்படி அசிட் அடிக்கிறன்னு சொல்லுறளவு புனிதமானதோ.. லவ் வேணும்ன்னு சொல்லுற உங்களுக்கு தான் அடிக்க தெரியுமா.. இப்போ லவ் வேண்டாம்ன்னு சொல்லிட்டு அந்த பொண்ணு அசிட் அடிப்பா” என்க, அதில் பதறியவன் “அக்கா விட்ருங்க பிளீஸ்”

 

“கழுதை நாயே நான் உனக்கு அக்காவா.. முதல உன் வாயில ஊத்த சொல்லுறேன்” என்று அருகிலிருந்த பெண்ணவளுக்கு கண்ணை காட்ட, அவளும் கையிலிருந்ததை அவனின் முகத்தில் ஊற்ற,

 

அதில் அவன் அலறி துடிக்க “ஏய் ஏய் அடங்கு இப்போ சூடு தண்ணி தான் ஊத்தியிருக்கேன்.. இனி உன்ன பத்தின விஷயம் எதாவது காதுக்கு வந்துச்சு உன் முகத்தை அந்தராக்கிடுவேன்.. ஓடி போ” என்றதை கேட்டு, அவனோ அலறி ஓடி விட்டான்.

 

பின் தனக்கு உதவி செய்ய வந்தவளிடம் அப்பெண் “தேங்க்ஸ் யாழினி அக்கா” என்க, அதில் சிரித்து தலையை தட்டிவிட்ட தியா “நம்ம பயம் தான் நமக்கு எதிரி எல்லாத்தையம் தைரியமா ஃபேஸ் பண்ணு.. காலேஜ் டைமாச்சுல போ” என்று அனுப்பி வைத்தவள், சுற்றி தன்னை பார்ப்பவர்களை கண்டு “நான் என்ன படமா ஓட்டிட்டு இருக்கேன் போய் புலப்ப பாருங்ககையா” என்று அங்கிருந்து பெண்ணவள் செல்ல,

 

போகும் அவளையே பார்த்திருந்த ரேயன், அப்பெண் யாழினி என்று சொல்லவும் ‘யாழி’ என்று செல்லமாக பெயர் வைக்க, தன் மனம் செய்யும் பைத்தியகாரதனத்தில் தலையில் அடித்து தன்னை நொந்துவிட்டே சென்றான்.

 

அதன் பின் திருமணத்தை முடித்துவிட்டு ரயில் நிலையம் வந்தவனின் கண்களும் மனமும் அவள் எங்கையாவது இருக்கிறாளா என்று தேட, தேடலுக்கு விடையானவளோ மறுநிமிடமே அவனின் திறன்பேசியோடு வந்து காட்சி கொடுத்தாள்.

 

அவளின் வரவில் உள்ளம் குத்தாட்டம் போட்டாலும், மூளையோ அது தவறு என்று எதையோ சுட்டி காட்டியதில் முகம் கருத்தவன் உணர்வுகளை அடக்க நினைக்க,

 

அவனை சோதிக்கவே பெண்ணவள் அவளின் எதிரில் வந்து அமர்ந்து விட்டதில் மூளையும் மனதும் மாறி மாறி செய்த குழப்பத்தில் மேலும் கடுப்பாகி அதன் கோவத்தில் அவளிடம் கடுகடுத்து பேசினான்.

 

பின் சென்னை வந்திறங்கவும், இதற்கு மேல் அவளை பார்க்க மாட்டோம் என்று எண்ணி போகும் போது அழுத்தமாக ஒரு முறை பார்த்தவனின் கருத்து பொய் என்றும் விதமாக அவனின் அலுவகத்திலே தியா வேலைக்கு வந்திருக்க,

 

அவளை கண்டதும் குதிக்கும் மனதிற்கு கடிவாளமிட முடியாமல் அவளிடம் காட்டமாகவே நடந்து கொண்டவன், அதை சோதிக்கும் விதமாக ரங்கநாயகியிடம் அவள் செய்த நாடகத்தில், அதனை ரசிக்கும் மனதின் மேல் உள்ள மொத்த கோவமும் அவள் மேல் திரும்பியதில் அடித்து விட்டான்.

 

அதன் பிறகு அவளின் அமைதி வேறு அவனை ஒரு புறம் வாட்ட, பெண்ணவளை விடவும் முடியாமல் சில குழப்பத்தில் தத்தளித்தவன் வழக்கு முடிந்து மறுநாள் அனைத்து குழப்பதிற்கு விடை கிடைத்த சந்தோசத்தில் பெண்ணவளை தேடி வந்திருந்தவன் தன் காதலை சொல்லவும் முடிவெடுத்த சமயம் தான் மழைக்காக இருவரும் இடம் ஒதுங்க,

 

இச்சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்த எண்ணி பேசியவன் பெண்ணவளின் கதையில் வேதனையடைந்து, அவளுக்கு எப்போதும் தான் இருப்பேன் என்று நம்பிககை கூறும் விதமாக பட்டென்று காதலை சொல்லிவிட்டான்.

 

அனைத்தையும் சிந்தித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி தன்னுடைய இடத்திற்கு சென்றவன், பெண்ணவளுக்கு அழைத்து தோற்றான்.

*****

மறுநாள் வழக்கம் போல், இருவரும் வேலைக்கு வந்திருக்க பெண்ணவள் அறைக்குள் சாக்லேட்யுடன் வந்தவன், அதனை முன் வைத்துவிட்டு “ஏன்டி ஃபோன் அடிச்சா எடுக்க மாட்டியா”

 

“நேத்து நீ பண்ணின காரியத்துக்கு எடுக்கவா முடியும்” என்று காட்டத்துடன் கேட்டுவிட்டு, அவன் கொடுத்த சாக்லேட்டை சாப்பிடவும் தவறவில்லை.

 

அதில் உள்ளுக்குள் சிரித்த ரேயன் “சரி ஏதோ புது கேஸ் வந்திருக்காம் சார் கூப்பிட்டார் போயிட்டு வருவோம்” என்றதும் பெண்ணவள் எழவும் திறன்பேசி அலற,

 

“வெயிட் அம்மா கால் பண்றாங்க பேசிட்டு வரேன்” என்று செல்ல போனவளை கைபிடித்து தடுத்த ரேயன் “என் மாமியார் தான.. இங்கயிருந்தே பேசலாமே அப்படி என்ன ரகசியம்” என்று கண்ணடிக்க, அதில் கையை உதறியவள் பார்வையால் எரித்துவிட்டே வெளியே சென்றாள்.

 

அவள் சென்றதும் தலையாட்டி சிரித்து கொண்ட ரேயன் பெண்ணவள் மேஜையிலிருந்த ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டிருக்க, அன்று அவள் ரயிலில் வரைந்த ஓவியம் கண்ணில் பட்டதில் விழி விரித்தவன் “அட.. நம்மள தான் வரைஞ்சி இருக்கா செல்லகுட்டி..” என்று அதற்கு கீழிருந்த கவிதைகள் வாசித்தான்.

 

“ஆயிரம் ஆண்கள் ரசித்திருக்கிறேன்

அவர்களிடம் சரியாத மனது

உன்னிடம் சரிகிறதோ..!”

 

“மௌனமே பிடிக்காத நான்

உன்னிடம் மட்டும்

மௌனம் ரசிக்கிறேன்..

ஒருவேளை உன்னை பிடித்தால்

வந்த மாற்றமோ..! “

 

என்ற இரு கவிதைகளையும் படித்து சிரித்து தலை கோதியவன் “அப்போ மேடம் பாத்துமே விழுந்துட்டா.. அவ அம்மாவுக்கு நடந்தத நினைச்சி சுத்துறா பாப்போம்.. எத்தன நாளைக்கு இவ வீம்புன்னு” என்று அதனை தனது திறன்பேசியில் படம் பிடித்தவன் பெண்ணவள் வரும் அரவம் கேட்டு அதனை எடுத்த இடத்தில் வைத்து நல்ல பிள்ளை போல் அமர்ந்திருக்க, பிறகு இருவரும் பணியில் கவனத்தை செலுத்தினார்கள்.

****

 

ஒருபக்கம், அவனின் காதல் தொல்லையில் கடுப்பானாலும், சில பல வழக்குகளை அவனுடன் இணைந்த தியா வெற்றியாக முடித்து சிறந்த அதிகாரியாகவும் திகழ ஆரம்பித்து ஆறு மாதமும் கடந்து விட,

 

இதற்கு இடைப்பட்ட காலங்களின் தியாவின் வேலையின் தீவிரம் உணர்ந்து அவளை தொந்திரவு செய்யாமல் ஆர்யனே தன் அன்னையுடன் அடிக்கடி வந்து சென்றிருக்க,

 

ரேயனின் காதல் விஷயம் அவனின் வாயால் அறிந்த ஆர்யன், அவனே அக்காவின் எதிர்காலமாக இருக்க வேண்டுமென்று எண்ணி “மாம்ஸ்” என்று அவனுடன் ஒன்றி விட்டான்.

 

வழக்கம் போல் வேலை முடிந்து தன் இடத்திற்கு சென்ற ரேயனுக்கு, ஆர்யாவிடமிருந்து அழைப்பு வர யோசனையாக அழைப்பு ஏற்று “சொல்லுடா” என்க,

 

மறுமுனையில் அவன் கூறியதை கேட்டு அடித்து பிடித்து பெண்ணவளின் வீட்டிற்கு வந்திருக்க, அவளோ உடமைகளை அடுக்கி கொண்டிருந்தாள்.

 

உணர்வுகளை வெளியே காட்டாத ரேயன் “எங்கடி கிளம்பிட்ட”

 

“ஊருக்கு போறேன்டா.. அம்மாக்கு இன்னும் ரெண்டு நாள்ல பர்த்டே டா.. போய் சர்ப்ரைஸ் விசிட் பண்ண போறேன்” என்று அவனை அணைத்தவள் கண்ணீர் விட,

 

அதில் பதறி கன்னம் பற்றி துடைத்துவிட்டவன் “யாழி என்னடி”

 

“தெரியல ரே.. ஏனோ அம்மாவிட்டு ரொம்ப தூரம் வந்த போல ஃபீலாகுது” என்றவளின் உணர்வு புரிந்து இறுக்கி அணைக்க, அவளுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டதால் மறுக்காமல் அவனுக்குள் புதைந்து கொண்டாள்.

 

சிறிது நிமிடம் கழிந்து அவளை தன்னிடமிருந்து பிரித்தவன் “யாழி.. நானும் வரேன்டி.. அப்படியே என் புகுந்த வீட பாக்கணும்” என்று கண்ணடிக்க, அவனை தள்ளிவிட்ட தியா “கொஞ்ச நேரம் உன்ன ப்ரெண்ட்டிலியா ஹக் பண்ணினா உன் வேலைய காட்டுற பாத்தியா” என்று முறைக்க,

 

“தனியா எப்படிடி போவ”

 

“வரும் போது தனியா தான வந்தேன்” என்றவள், அவனின் அர்த்த பார்வையில் “சரி உன்கூட தான் வந்தேன்.. அதுக்கு என்ன இப்போ”

 

“நானும் வரேன்டி பிளீஸ்.. கேஸ் கேஸ்ன்னு மண்ட காஞ்சி போயிடுச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்ல” என்க, ஏனோ அவன் துணையில்லாமல் செல்ல அவள் மனம் தடுக்க வழியின்றி “சரி வந்து தொலை.. ஆனா அங்க வந்து உன் சேட்டைலாம் இருக்க கூடாது”

 

“பண்ண மாட்டேனே” என்று தலையாட்டிவன் பெண்ணவள் உடமையுடன் தன் இடத்திற்கு வந்திருக்க,

 

அங்கிருந்த ஜோஸபிற்கும் ஏற்கனவே ரேயன் விஷயம் தெரிவித்ததால் அவனும் சாதரணமாகவே காட்டி கொண்டான்.

 

அதன் பின் அன்னைக்கு பிறந்தநாளிற்கு ஷாப்பிங் என்ற பெயரில் அது இது என்று எடுத்திருக்க, பாவம் ஆடவன் தான் நொந்து அமர்ந்திருந்தான்.

 

அனைத்தும் மூடிய இரவு போல் பேருந்தில் ஏற, இருவரும் அருகருகே இருந்ததால் மனசோர்வு மற்றும் களைப்பில் பெண்ணவள் அவன் தோலில் உறங்கி விட, அவனும் அவள்மேல் தலை சாய்த்து உறங்கி விட்டான்.

 

தொடரும்…

 

– ஆனந்த மீரா 😍😍

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. கடந்த இரண்டு அத்தியாயங்களில் நிறைய எழுத்து மற்றும் சொல் பிழைகள்… கவனியுங்கள்.. நன்றி 💐