
காதல் – 51
விஹான் மற்றும் அஸ்வதியின் காஷ்மீர் சுற்றுலா , காதல் ,செல்ல கொஞ்சல்கள் எல்லாம் அவள் சென்னைக்கு திரும்பியவுடன் பாதியிலேயே நின்று விட்டது……
அஸ்வதி சென்னையிலும் விஹான் காஷ்மீரிலும் இருந்துகொண்டே தங்களின் காதலை வீடியோ கால் மூலம் வளர்த்து வந்தனர்……
தினமும் இருவரும் தூங்க செல்வதற்கு முன்பு வீடியோ கால் ஆன் செய்து பேசி கொண்டே இருவரும் உறங்கி போவார்கள்…..
அதே போல காலை எழும் போதும் அந்த வீடியோ காலில் இருவரின் முகத்தை பார்த்தவாறே இருவரும் நாளை தொடங்குவார்கள்…….
அஸ்வதி புடவை மட்டும் அணிந்து விட்டு வீடியோ கால் ஆன் செய்து விட்டு தன் காதலனிடம் பேசி கொண்டே கல்லூரிக்கு கிளம்புவாள், அவனும் அதே தான் செய்வான் இருவரும் கல்லூரி வரை பேசி கொண்டே செல்வார்கள்…….
அதே போல் ஒரு காலை வேளையில்…..
அஸ்வி இன்னைக்கு என்ன கிரீன் சாரி கட்டி இருக்க?
இன்னைக்கு செவ்வாய் கிழமை அதான் பக்கத்துல இருக்குற முருகர் கோயிலுக்கு போயிட்டு வரலாம்னு பிளான் அதான் முருகருக்கு புடிச்ச கலர் கிரீன் …….
அப்போ நானும் கிரீன் கலர் ஷர்ட் போடுறேன் என்று அவனும் பச்சை நிறத்தில் ஷர்ட் அணிந்து கொண்டு வந்தான்……
அய்யோ என்னோட விஹான் இந்த கிரீன் கலர் ஷர்ட்ல ரொம்ப ஹன்ட்சமா இருக்காங்கங்ககே என்று அவள் அவனுக்கு திருஷ்டி சுற்றி போட்டாள்……
என்னோட அஸ்விக்கும் நெறய திருஷ்டி என்று அவனும் அவளுக்கு திருஷ்டி சுற்றி போட்டான்…….
இப்பொழுதெல்லாம் சுலோச்சனா மற்றும் அனந்தி அஸ்வதியிடம் அவ்வளவாக வம்பு வைத்து கொள்வது இல்லை அதற்கு காரணம் தேவராஜ் தான் ……
அவர் எப்பொழுதும் வீட்டிலே இருந்து அஸ்வதியை அந்த இரு கழுகளிடமிருந்து காப்பாற்றி வந்தார்…..
அஸ்வதி தன் காதலனிடம் பேசிக்கொண்டே கல்லூரிக்கு வந்து விட்டாள்…….
அவனும் தன் காதலியிடம் பேசி கொண்டே கல்லூரிக்கு வந்து விட்டான்…..
பிறகு அஸ்வதிக்கு அவள் செல்லும் வகுப்பிற்க்கான மனி அடித்ததும் அவள் விஹான்னிடம் கூறி விட்டு சென்று விட்டாள்…….
விஹான் ஆசிரியர்கள் அறையில் அவனும் அஸ்வதியும் ஒன்றாக சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை பார்த்து ரசித்து கொண்டு இருந்தான்…..
அப்பொழுது அங்கு ஹர்ஷத் வந்தான்…..
டேய் மாப்ள என்னடா தனியா உக்காந்து போன பாத்து சிரிச்சிட்டு இருக்க?? மூளை எல்லாம் இருக்க வேண்டிய இடத்துல பத்திரமா இருக்கா? இல்ல இடம் மாறிடுச்சா?
அதெல்லாம் ஒழுங்கா இருக்கு , டேய் என்னோட காதலி , என்னோட அஸ்வி எவ்வளோ அழகு தெரியுமா?அவ அவ்வளோ அழகு மச்சான் என்னோட அஸ்வி அழகோ அழகு என்று அவன் அவளை நினைத்து பாட ஆரம்பித்தான்……
“அசத்தும் அழகு அப்படியே நிலவு
அவளை நினைச்சா உள்ளமெல்லாம் கனவு
எனக்கு நேத்துவர இதயம் ஒன்றே ஒன்றுத்தான்
அதையும் எடுத்துக்கிட்டு
போறா அந்த பொண்ணுத்தான்
குறும்பு சிரிப்பாலே
கில்லி வச்சா நெஞ்சுக்குள்ளே போய்
அசத்தும் அழகு அப்படியே நிலவு
அவளை நினைச்சா உள்ளமெல்லாம் கனவு
பேயடஞ்சதா போல மாறிப்போனனே
காரணமென்ன இந்த கன்னிப் பெண்தானே
எனக்குனு கடவுளிடம் எதுவுமே கேட்டதில்ல
இனிமேல் இவளதான் என்று கேட்பேனே
ஓ எப்படி சொல்வது என்னத்த சொல்வது
வார்த்தை போதவில்ல
அட இப்படி ஒருத்தி கிடைக்க
பிறகும் மூச்சு தேவையில்லை
தினம் முள்ளுக்கும் பூவுக்கும்
மத்தியில் தான் இந்த காதல் வாழ்க்கை”……….
என்று விஹான் அஸ்வதியை நினைத்து உருகி பாடி கொண்டு இருந்தான்………
ஹலோ ஹலோ…..
மிஸ்டர் முஹமது விஹான்….
சார் சார் சார்………
போதும் போதும் உங்க பாடல் கச்சேரி, உங்க கிளாசுக்கு போக வேண்டிய பெல் அடிச்சி அறை மனி நேரம் ஆகுது கிளாசுக்கு போயிட்டு வந்து மீதி பாட்ட பாடுங்க நா இங்கேயே தான் இருப்பேன்…..
சரிடா அய்யாச்சாமி, நா கிளாசுக்கு போயிட்டு வாரேன்டா அய்யாச்சாமி என்று விஹான் ஹர்ஷத்தின் முதுகில் அடித்து விட்டு சென்றான்……..
இவன் லவ் பண்ணது தான் பண்ணான் எப்பவும் ஒரே லவ்வர் பாயா சுத்திட்டு இருக்கான் , இவன்கூட சேந்த பாவத்துக்கு இவன் பாட்டெல்லாம் கேக்க வேண்டியிருக்கு என்று ஹர்ஷத் தனியாக புலம்பி கொண்டிருக்க அப்பொழுது அங்கு வந்த வேதியியல் பிரிவு பேராசிரியை அர்ச்சனா அவனை பார்த்து சிரித்து விட்டார்……
ஹலோ ஹர்ஷத் சார் என்ன தனியா பேசிட்டு இருக்கீங்க?எதுவும் டிராமாவுல நடிக்க போறீங்களா?பிராக்டீஸ் எல்லாம் பலமா இருக்கே என்று அர்ச்சனா , ஹர்ஷா அருகில் அமர்ந்தார்…….
அட நீங்க வேற போங்க அர்ச்சனா மேடம் , இங்க என்கூட சேந்த எல்லாத்துக்கும் லவ் செட் ஆகி வானத்தை தாண்டி விண்வெளி வரை போயிட்டு இருக்குதுங்க ஆனா எனக்கு தரையில நடக்க கூட வாய்ப்பு இல்லையே…….
அவன் கூறியதை கேட்டு மீண்டும் அர்ச்சனா சிரித்து விட்டார்…….
அட என்னங்க என்னோட வாழ்க்கையில நடக்குற சோகத்தை உங்ககிட்ட சொன்னா நீங்க சிரிக்குரீங்க?
சாரி சாரி ஹர்ஷத் சார் , நீங்க இதுவரை எத்தனை பொண்ணுகிட்ட புரோபோஸ் பண்ணிருக்கீங்க?
யாருகிட்டயும் இதுவரை புரோபோஸ் பண்ணது இல்லையே……
அப்போ எப்படி உங்களுக்கு லவ் செட் ஆகும்?
மேடம் ஏன் எப்பவும் பசங்கதான் பொண்ணுங்கக்கிட்ட புரோபோஸ் பணன்னும்ன்னு எதுவும் சட்டம் இருக்கா?ஏன் பொண்ணுங்க பசங்ககிட்ட புரோபோஸ் பண்ணலாமே……
ஹான் பண்ணலாம் பண்ணலாம் என்று அவர் சிரித்தார்……
சரி என்ன விஷயமா டிபார்ட்மெண்ட் வந்தீங்க அர்ச்சனா?
சார் நெக்ஸ்ட் வீக் எங்க டிபார்ட்மெண்ட்ல பிசிக்ஸ் அண்ட் செமிஸ்ட்ரி ரெண்டு சப்ஜெக்ட்டும் எப்படி ஒன்னுக்கொண்ணு இன்டர்லிங்க்ட்டா இருக்குன்னு ஒரு செமினார் நடத்த போறோம் அதுக்கு அந்த செமினார்க்கு நீங்க தான் சீப் கெஸ்டா வந்து செமினார் எடுக்கனும் அதான் கேக்க வந்தேன்……
மேடம் விஹான் அண்ட் நானும் சேம் பொசிஷன்ல இருக்கோம் சோ அவன்கிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுட்டு நம்ம முடிவு பண்ணலாம்….
அப்பொழுது சரியாக தன் வகுப்பு முடிந்து அங்கு விஹான் வந்தான்…..
விஹான் , அர்ச்சனா மேடம் டிபார்ட்மெண்ட்ல பிசிக்ஸ் அண்ட் செமிஸ்ட்ரி ரெண்டு சப்ஜெக்ட்டும் எப்படி ஒன்னுக்கொண்ணு இன்டர்லிங்க்ட்டா இருக்குன்னு ஒரு செமினார் நடத்த போறாங்களாம் சோ நீ சீப் கெஸ்ட்டா போய் பேசிட்டு வாரியா?
ஹர்ஷத் உனக்குத்தான் கெமிஸ்ட்ரி ரொம்ப பிடிக்கும் சோ நீயே சீப் கெஸ்ட்டா போ எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல , அர்ச்சனா மேடம் நீங்க ஹர்ஷத் பேர சீப் கெஸ்டா போட்டுருங்க……
சரி சார் , ரொம்ப தேங்க்ஸ் என்று அர்ச்சனா ஹர்ஷத் பேரை சீப் கெஸ்ட் இடத்தில் போட்டு விட்டு சென்றார்…..
மச்சான் என்னோட அஸ்வி……
மாப்ள போதும் நிறுத்து , எனக்கு கொஞ்சம் ப்ரேக் வேனும் , சிறிய இடைவேளைக்கு பிறகு உன்னோட அஸ்வி புராணத்தை நா கேக்குறேன் என்று ஹர்ஷத் ஓடி விட்டான்…..
இவர்கள் இருவரும் இங்கு இப்படி இருக்க, அஸ்வதி அவளுக்கு பிடித்த ஆசிரியர் பணியில் தனக்கு பிடித்த மாணவர்களுடன் சந்தோஷமாக இருந்தாள்……
அஸ்வதி தன்னுடைய கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்து இரவில் தெரியும் நிலவில் தன் காதலனின் முகம் தெரியுமா என்று அந்த முழு பௌர்ணமி தினத்தில் மாடியில் அமர்ந்து கொண்டு இருந்தாள்……..
ஜனவரி மாத இரவு நேர குளிரும் அடிக்கடி சென்னையில் பெய்யும் அழையா விருந்தளியான மழையும் மழைக்கு முன்பும் பின்பும் அடிக்கும் குளிர் காற்றும் அவளை பாதித்தாக தெரியவில்லை……..
அவளின் சிந்தனை முழுவதிலும் விஹானே ஆட்சி செய்து கொண்டு இருந்தான்……
“யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
என்ன சொல்வேன் இதயத்திடம்
உன்னை தினமும் தேடும்
என் பேச்சைக் கேட்காமல்
உன்னை தேடும்……
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
இசையால் ஒரு உலகம்
அதில் நீ நான் மட்டும் இருப்போம்
கனவால் ஒரு இல்லம்
அதில் நாம் தான் என்றும் நிஜமாய்
அது ஒரு ஏகாந்த காலம்
உன் மடி சாய்ந்த காலம்
இதழ்கள் எனும் படி வழியில்
இதயத்துக்குள் இறங்கியது
காதல் காதல் காதல் காதல்
யாருமில்லா தனி அரங்கில்
யாருமில்லா தனி அரங்கில்
ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய்
இப்படிக்கு உன் இதயம்
பேச மொழி தேவை இல்லை
பார்த்து கொண்டால் போதுமே
தனி பறவை ஆகலாமா
மணிக்குயில் நானுமே
சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே
மீண்டும் என்னை கல்லாய் செய்ய
யோசிப்பதும் ஏனடா சொல்”………
என்று அவளின் தவிப்பிற்கு ஏற்பப் எங்கோ யாருடைய வீட்டில் ஒலித்த ஏ ஆர் ரஹ்மான் இசையில் ஸ்வேதா மோகன்னின் மனதை மயக்கும் குரலில் கேட்ட பாடலை அவள் மெய் மறந்து தன் மெய் முழுவதும் ஆட்சி செய்யும் தண்ணவனை நினைத்து கொண்டு இருந்தாள்……..
விஹானும் தன் காதலியின் முகத்தை தன் ஃபோனில் வைத்து கொண்டு நிலவிற்கு சவால் விட்டு கொண்டு இருந்தான்……
இருவரின் தொலை தூர காதல் அவர்கள் இருவரின் காதலை அதிகமாக்கும் வேலையை செவ்வனே செய்து கொண்டு இருந்தது……
அவர்கள் இருவரும் தங்களின் காதல் உலகில் சந்தோஷமாக தனி தனியே இருந்தனர்………
அஸ்வதியின் சந்தோஷத்தை கெடுக்க சுலோச்சனா மற்றும் அனந்தி நிறைய நிறைய திட்டங்கள் தீட்டி கொண்டு இருந்தார்கள்………
அதில் முதல் திட்டமாக அஸ்வதிக்கு உன்னும் உணவில் சயனைடை கலந்து கொடுக்க பிளான் போட்டனர்……
அந்த திட்டத்தை நிறைவேற்ற இருவரும் ஒரு நகைக்கடைக்கு சென்றனர்……
ஹலோ பீட்டர் எப்படி இருக்க?
வணக்கம் சுலோச்சனா நீங்க எப்படி இருக்கீங்க?
நா ரொம்ப நல்லா இருக்கேன்……
ரொம்ப சந்தோஷம், இது உங்க பொண்ணா?
ஆமா பீட்டர் இது என்னோட பொன்னு அனந்தி இப்போதான் காலேஜ் பைனல் இயர் படிக்கிறா…….
என்ன சுலோச்சனா எதுவும் காரணம் இல்லாம என்ன தேடி வர மாட்டியே ?என்ன விஷயம்?
அது எனக்கு கொஞ்சம் சயனைடு வேனும்…….
எதுக்கு உனக்கு சயனைடு??
என்னோட வீட்டுல நெறய பூச்சி தொல்லை அதான்……
ரொம்ப அசிங்கமா நடிக்கிறது தெரியுது, எதுக்குன்னு உண்மையான காரனத்த சொல்லு…….
அஸ்வதிய கொல்ல …..
அஸ்வதியா என்று அந்த பீட்டர் அதிர்ச்சியாக கேட்டார்……
அடுத்து நடக்க போவது என்ன????
தொடரும்…..
உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….
💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️

