
மாலை தான் தங்கியிருக்கும் இடத்திற்கு சென்ற ரேயன் உடமைகள் சிலவற்றை கைப்பையில் எடுத்துக்கொண்டு பெண்ணவள் முகவரிக்கு வந்து ஹாரன் அடித்து அழைக்க, புடவையில் மயிலாக வந்தவளை கண்டு இமைக்க மறந்து விட்டான்.
தியாவும் வீட்டை பூட்டிவிட்டு தன்னுடைய பையை, அவனின் மேல் போட்டு “சைட் அடிச்சது போதும்.. கிளம்பலாமா”
“என்னடி இது கல்யாண வீடா போறோம் ஆயிரம் கிலோ மேக் அப்போட வர”
“ப்ச் சும்மா கேள்வி கேட்காத ரே.. இந்த கெட் அப்ல போனா தான் சந்தேகம் வராது” என்று வண்டியில் பின்னால் ஏறிய தியா “ரே நேரா அம்மன் கோவில் போ”
“எதுக்கு அங்கபிரதசனம் பண்ணனுமா” என்றவனின் தோலில் செல்லமாக தட்டியவள் “விளையாடத ரே ஃபர்ஸ்ட் டைம் கேஸ் ஹேண்டில் பண்றேன்ல அதான் ஒரு வேண்டுதல் போட்டுட்டு கெட்அப் பிளான அங்கயிருந்து ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு தான்.. பிளீஸ் எனக்காக போயேன்” என்றதில் தலையில் அடித்து கொண்ட ரேயன் “போய் தொலைக்குறேன்” என்று கடுப்புடனே கோவிலை நோக்கி சென்றான்.
****
கோவிலுக்குள் வந்து பெண்ணவள் சாமி கும்பிட்டு பயபக்தியாக சன்னதிகளை சுற்றி வர,
அவளின் பின்னையே அர்சித்தப்படி சென்றவன் “எம்மா நீ நல்லா சுத்திட்டு வா.. நான் வெளிய நிக்கிறேன்” என்றவனின் கையை பிடித்த தியா “அங்க ஆன்ட்டி நிக்குறாங்க பாரு.. அவங்க கூட பேசிட்டுயிரு வரேன்” என்று கூறிவிட்டு சென்று விட,
அவள் கூறிய திசையை நோக்கி “ஆன்ட்டியா..” என்றவாறு திரும்பியவன் அங்கு நின்றவரை கண்டு விழி விரித்து “அம்மா” என்று இதழ் அசைத்தவன்,
ஒரு நொடி உறைந்து நிலைக்கு சென்று நினைவு திரும்ப ‘அய்யோ அம்மா மாட்டினா செத்தோம்’ என்று பதறத்தில் முன்னாள் சென்று ‘இப்படி போனா மாட்டிப்போம்’ என்று தலையில் அடித்து கொண்டு திரும்பிய நேரம் “நரேன்..” என்று அவன் அன்னையின் குரல் கேட்டு சிணுங்கிவிட்டு திரும்பியவன், அப்போது தான் அவரை பார்ப்பது போல் “நீங்க என்னம்மா பண்றீங்க” என்று அவருகில் செல்ல,
அவனை புருவம் உயர்த்தி கேள்வியாக பார்த்த, அவனின் அன்னை ரங்கநாயகியோ “அத நான் கேக்கணும் நரேன்.. உனக்கு தான் கோவில் வரவே பிடிக்காதே.. இப்போ மட்டும் என்ன”
“அது ஒன்னுமில்லமா பொங்கல் புளியோதுரை கிடைக்குமாம்.. அதான் சாப்பிட்டு போக வந்தேன்” என்றதும் அவரின் முறைப்பு பார்வை கண்டு “ஈஈ ப்ரெண்டுக்கு பிடிக்குமாம்.. அதான் என்னையும் இழுத்துட்டு வந்துட்டான்.. சரி அவன் வெளிய நிக்கிறான் நான் சீக்கிரம் போகனும்.. நீங்க சாமி கும்பிட்டு பத்திரமா வீட்டுக்கு போயிடுங்க” என்றவன், அவள் தன்னை தேடி வருவதற்குள் செல்ல முயல, அவன் கைப்பற்றிய தியா தன்னை நோக்கி திருப்பினாள்.
அவளின் குரல் கேட்டு ‘போச்சு’ என்று அவளின் இழுப்பிற்கு திரும்பியவன் பெண்ணவளை கண்டு அதிர்ந்து சிலையன நிற்க,
அதை தனக்கு சாதகமாக பயன்ப்படுத்திய பாவையோ, அவன் நெற்றியில் குங்குமம் வைத்து ஊதி விட்டு “உன்ன எங்கலாம் தேடுறது நரேன்” என்று எதிரே நின்ற ரங்கநாயகியை கண்டு “அத்தைகிட்ட தான் பேச வந்தியா.. என்னயும் கூப்பிட்டுருக்கலாம்ல” என்றவள் குடும்ப பாங்கான பெண்ணாக, அவரின் காலில் விழுந்து என்ன ஆசிர்வாதம் “பண்ணுங்க அத்த..” என்க,
ரெண்டடி பின்னே சென்று சிலையான நிற்கும் மகனை உலுக்கி “என்னடா இது யாரு இவ.. இந்த பொண்ணு தான அன்னைக்கு ஃபோன்ல பேசினா வாய்ஸ் அதை போல இருக்கு” என்க,
தியாவோ “உங்களுக்கு ஷார்ப் மைண்ட் அத்தை.. எப்படி கண்டு பிடிச்சிங்க” என்றதில் முறைத்தவர் “யாருக்கு யாருடி அத்த.. என்னடா இதெல்லாம்” என்க, அதில் நடப்பிற்கு வந்தவன் “நானே எதிர் பாக்கலமா” என்க,
தியாவோ “சாரி நரேன்.. அத்தைக்கு நம்ம விஷயம் தெரியாதா.. நான் தான் மாட்டிவிட்டுட்டேனா உன்ன” என்று பாவமாக வருந்தியவளை முறைத்த ரேயன் “ஓவர் ஆக்டிங் பண்ணாம சும்மா இருடி” என்று பெண்ணவளின் காதில் கடித்து வைத்து,
“அம்மா என்ன நம்புங்க இது இன்வெஸ்டிகேஷன்காக போட்ட கெட்அப் எதாயிருந்தாலும் நாளைக்கு வீட்டுக்கு வந்து சொல்லுறேன்.. இப்போ போங்க” என்க,
அவரின் கையை பற்றிய தியா “அய்யோ அத்தை எங்கள பிரிச்சிட மாட்டீங்க தான.. உங்க பையன் என் கழுத்துல தாலி கட்டிருக்கார்” என்று தாலியை வெளியே எடுத்து கண்ணில் ஒத்தி கொள்ள,
அவளின் செயலில் கடுகடுத்த ரங்கநாயகி “நரேன்.. அவ கழுத்துல தாலி இருக்கு.. இதென்ன விளையாட்டு காரியமா கெட் அப் போட”
“அய்யோ அம்மா.. நிஜமா கெட்அப் தான் அவ என்மேல உள்ள கொலவெறில உங்ககிட்ட ஆக்டிங் போட்டு பலி வாங்கிட்டு இருக்கா.. சோ என்மேல நம்பிக்கையிருந்தா வீட்டுக்கு போங்க.. நாளைக்கு வந்து விளக்குறேன்” என்று அவரை ஒருவழியாக சரிகட்டி அனுப்பி வைத்து பெருமூச்சு விட்,
அவனின் தோலில் கைவைத்த தியா “என்ன ரே.. ஆன்ட்டி நம்பல போல பெர்பார்மன்ஸ் பத்தலயோ” என்றதில் அவளைவிட்டு விலகி கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் பெண்ணவள் கன்னத்திலே ஒன்று விட்டு “அறிவில்ல எதுல விளையாடனும்ன்னு பொண்ணு மாறியாடி நடந்துக்குற” என்று கத்த, அவனின் அடியை எதிர்பாராமல் அதிர்ந்து கன்னத்தில் கை வைத்து நின்றாள்.
அவள் அதிர்வில் தான் கோவத்தை கட்டுப்படுத்த முடியாமல் அடித்து விட்டோம் என்பதே விளங்க தன்னுக்குள் நொந்தவன் “இனி இப்படி பண்ணாத பிளீஸ்” என்று அடித்ததின் விளைவால் மென்மையாக கூறிவிட்டு வெளியே சென்று விட, முகத்தை உம்மென்று வைத்து பின்னே சென்றவள் “கொஞ்சம் பேசணும்” என்க,
வண்டியில் ஏறி அமர்ந்த ரேயன் “சொல்லு” என்பது போல் பெண்ணவளை பார்க்க, அவனை பார்க்காது வேறு புறம் பார்வையை திருப்பி கொண்ட தியா “அக்ஸ்வல்லி ரெஸ்டாரன்ட்ல நீங்க சொன்ன அக்யூஸ்ட் ரூம் பக்கத்துல சிங்கிள் ரூம் கிடைக்கல ஹனி மூன் சூட் தான் கிடைச்சுது.. நானும் புக் பண்ண சொல்லிட்டேன் யாருக்கும் சந்தேகம் வர கூடாதுன்னு தான் இப்படியொரு கெட் அப்” என்று விளக்கம் கொடுத்து முடித்தவள்,
அவன் அடுத்து கூற வருவதை கூட காதில் வாங்காமல் வண்டியின் பின் ஏறி “போலாம்” என்று வண்டியின் பின்பக்கம் பிடித்து கொள்ள,
வரும் போது உரிமையாய் தோலை பற்றியவள், இப்போது விலகி பின் பக்கம் பிடித்ததை உணர்ந்த ஆடவனின் மனதிலும் சுணக்கம் ஏற்பட்டாலும் காட்டி கொள்ளாது சாலையில் கவனத்தை செலுத்தினான்.
அதோடு ஓயாமல் பேசும் பெண்ணவளின் மௌனம் வேறு ஆடவனின் நிதானத்தை இழக்க செய்ய ‘இதுக்கு மேல வண்டி ஓட்டுனா ஜோடியா சொர்க்கம் தான் போகனும்’ என்று எண்ணிவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கு “இளநீர் குடிப்போம்”
“எனக்கு வேண்டாம்” என்று முகத்தை திருப்பி கொண்டாள்.
ரேயனோ “உனக்கு வேண்டாம்ன்னா.. நானும் குடிக்க கூடாதா என்ன” என்றதும் பெண்ணவள் இறங்க, அவனும் இறங்கி இரு இளநீர் வாங்கி வந்து “இந்தா” என்று கொடுக்க,
அவனை முறைத்த தியா “எனக்கு தான் வேண்டாம்ன்னு சொன்னேன்ல”
“கம்பனிக்காக குடிக்க மாட்டியா.. அன்னைக்கு நான் உனக்காக பிரியாணிலாம் சாப்பிட்டேன்ல” என்றதும் பையிலிருந்த பணத்தை எடுத்து அவனிடம் நீட்ட,
அன்று தான் பணம் கொடுத்ததை செய்து காட்டிருக்கிறாள் என்று புரிந்து உள்ளுக்குள் சிரித்தவன், அப்பணத்தை வாங்கி கொண்டு இளநீரை கொடுக்க, பின் தியாவும் இளநீரை வாங்கி குடித்தாள்.
இளநீர் குடித்தாலும் ஆடவனின் கண்கள் பெண்ணவளை தான் ரசித்தது கழுத்தில் தாலி நெற்றியில் குங்குமம் புடவை என்று அவளின் அழகை ரசிக்காமல் இருக்க முடியாமல் போக, அவள் உணரும்படியே தான் பார்த்து வைத்து “ஆமா.. இந்த தாலி எங்க இருந்து கிடைச்சுது”
“என்னோட ப்ரெண்ட் ஒருத்தி சீரியல் ஆக்டர்.. அவகிட்டயிருந்து வாங்கினது தான்.. கோவில வச்சி நானே எனக்கு கட்டிக்கிட்டேன்” என்றதில் விஷசமத்துடன் புன்னகைத்த ரேயன் “நீயே எதுக்கு கட்டிகிட்ட சொல்லியிருந்தா.. நானே கட்டி விட்டுயிருப்பேன்ல” என்று கூறியவன் விளையாட்டாக கூறினானா, இல்லை பெண்ணவளிடம் அவனின் மனதை வெளிப்படுத்தினான் என்பது அவனுக்கே வெளிச்சம்.
அவன் கூறியதை கேட்டு எதுவும் பேசாமல் காலியான இளநீரை தூக்கி வீசியவள் “போலாமா” என்றதும் முகம் இறுகிய ரேயன், அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவளுடன் ரெஸ்டாரன்ட் வந்து சேர்ந்தான்.
ரெஸ்டாரன்ட் உள்ளே வந்து தங்களுக்கான அறை சாவியை வாங்கிவிட்டு அறைக்குள் நுழைந்தவர்கள் புதுமண தம்பதிகளை வரவேற்க அறை முழுவதும் அலங்கரிக்கப்பட்டதை கண்டு பெண்ணவளை ஆடவன் குறு குறுவென்று பார்த்து வைக்க, அவனின் பார்வையை கண்டு கொள்ளாமல் குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
****
இரவு வேலையில் அறையிலே பெண்ணவள் உணவை வரவழைத்து அமைதியாக உன்றுவிட்டு உறங்கி விட,
அப்போது ஒரு வேலையாக வெளியே சென்று வந்தவன் நன்றாக உறங்கி கொண்டிருக்கும் தியாவின் அருகில் வந்து தன் கைத்தடம் பட்டு சிவந்த கன்னத்தை வருடி “சாரி யாழி.. நான் உன்ன அடிச்சிருக்க கூடாது.. என்ன என்ன பண்ண சொல்லுற.. நானே உன்ன ஏத்துக்கவும் முடியாம தள்ளி வைக்கவும் முடியாம தவிச்சிட்டு இருக்கேன்.. நீ அது புரியாம சீண்டி மேலும் தவிக்க வைக்கவும் கோவத்த கன்ட்ரோல் பண்ண முடியாம அடிச்சிட்டன்டி..” என்று அவளின் கன்னத்தில் இதழ் பதித்தவன் “லவ் யூ யாழி.. இத உன்கிட்ட நேரடியா சொல்லுவேனான்னு தெரியாது.. அதோட இது தப்புன்னு எனக்கு தெரியுது.. ஆனாலும் நீ தான் வேணும்ன்னு என் மனசு துடிக்குது..” என்றவனின் முகம் சில குழப்ப ரேகையின் எண்ணத்தால் இறுகி விட,
சாப்பிட கூட தோன்றாமல் அப்படியே படுத்து உறங்கியவன், ரெண்டு மணி போல் தன் பணியை காண கண் விழித்தவன் தூங்கி கொண்டிருக்கும் பெண்ணவளை இடையூர் செய்யாமல் வெளியே சென்று விட்டான்.
***
தன் அறைக்கு பக்கத்து அறையிலிருக்கும் கைதியை ஆதாரத்துடன் பிடிக்க எண்ணி, அவர்களின் இரவு நேர கலந்துரையாடலை அறிந்து கொண்டு ரெஸ்டாரன்டில் அவர்களை கவனிப்பதற்காக தேர்ந்தெடுத்த வேலையாளிடம் பேசி அவனின் உடை மற்றும் பேட்சை அணிந்து கொண்டவன்,
ஏற்கனவே யாருமரியா வண்ணம் கைதியின் அறையிலிருந்த வல பக்க அறையை பேசி காலி செய்ய வைத்து ஜோஸப் வாகினியை அங்கே இறக்கியிருக்க, உள்ளே செல்வதற்கு முன் குழுவில் எல்லாருக்கும் ஜுஸ் கொடுத்துட்டு “கதவ திறக்கிற நேரம் நீங்க உள்ள வந்தரணும்” என்று விஷயத்தை கூறி அவர்களை தயாராக இருக்கும்படியே குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, தன் முகம் தெரியாமலிருக்க மாஸ்க்கை அணிந்து வேலையாள் போல் அந்த அறையின் கதவை தட்டினான்.
கதவு திறக்கப்பட்டதும் அனைவருக்கும் பானத்தை வழங்கியவன், எடுத்து கொண்டு கதவருகில் செல்லவும் அங்கிருந்தவர்கள் கதவை திறக்கவும் துப்பாக்கியுடன் மற்றவர்கள் உள்ளே சுற்றி வளைத்திருக்க,
தன் மாஸ்கை கழற்றி எறிந்த ரேயன் இருவருடன் தியா நிற்பதையும் புருவம் உயர்த்தி பார்த்துவிட்டு முக்கிய கைதியின் முன் துப்பாக்கியை நீட்டியவன் “ரொம்ப வருஷமா டிபார்ட்மெண்டுக்கு ஆட்டம் காட்டுறியாமே” என்று அவனின் அருகிலிருந்த பெட்டியை சூட,
அதில் அழுத்தம் தாங்காமல் திறந்த பெட்டியில் உள்ள போதை பொருளை பார்த்துவிட்டு “யூ கேம் ஓவர் நவ்” என்றுவிட்டு மற்றவர்களிடம் கண்ணை காட்ட, அதின் அர்த்தம் உணர்ந்து அங்கிருந்தவர்களை இழுத்து சென்றனர்.
****
மறுநாள் காலையில் வந்த தியாவை அங்கிருந்த மேல் அதிகாரி பாராட்ட ‘நம்ம தான் பெருசா எதுவுமே பண்ணலையே’ என்று புரியாமலே பாராட்டை வாங்கி நன்றி தெரிவித்திருந்தாள்.
பின் அவர் சென்றதும் பெண்ணவளின் கன்னத்தை கண்ட ஜோஸப் “என்னாச்சி பேபி.. புகழ்ச்சில சிவந்துட்டியா” என்றதில் பல்லை கடித்த தியா “உன் நண்பன் அடிச்சி சிவந்துட்டன்டா” என்று நேற்று நிகழ்ந்த காரியத்தை அவனிடம் ஒப்பிக்க,
அதில் சிரித்த ஜோஸப் “ஓவர் டோஸ் போல.. உனக்கு தேவை தான் வர வர உன் வால் தனம் ரொம்ப கூடிட்டு போகுது”
“என்ன பண்றது மச்சி வாலிப வயசுல” என்று அவனின் கன்னத்தை தட்டி கண் சிமிட்ட, அவளின் செயலில் தலையில் அடித்து கொண்டவன் “நீ திருந்தவே மாட்ட” என்றுவிட்டு செல்லவும் ரேயன் உள்ளே வரவும் சரியாகயிருக்க, நொடியில் தன்னுடைய முகத்தை மாற்றிய தியா, அவனை பாராது மடிக்கணினியை பார்த்து அமர்ந்திருந்தாள்.
ரேயன் வந்து நிமிடங்கள் கடந்தும் கடமையே கண்ணாக மடிக்கணினியை விட்டு பார்வையை திருப்பாத தியாவை கண்டு கடுப்பு எழுந்தாலும் அடக்கி கொண்டு தானே அமைதியை களைக்க எண்ணி “ஆமா நேத்து நீ தூங்கிட்டு இருந்தன்னு தான் டிஸ்டர்ப் பண்ணாம வந்தேன்.. அப்புறம் எப்படி ஜோஸப் வாகியோட கனெக்ட்டாகி கரெக்ட்டா வந்த”
“நீங்க குரூப்ல மெசேஜ் அனுப்பினீங்க.. அந்த குரூப்ல நானும் இருக்கிறேன் நினைவுப்படுத்துறேன்” என்றவனுக்கு அப்போது தான் நினைவில் வர “ஓ.. அப்படினாலும் சின்ன மெசேஜ் சத்தக்கே எழும்பிட்டியா”
“அந்த குரூப்புக்கு மட்டும் ஸ்பெஷல் ரிங்டோன்.. அதாவது என்ன அலார்ட் பண்ற போல வச்சிருப்பேன்” என்றவள் இப்போதும் கூட மடிக்கணினியிலிருந்த பார்வையை மாற்றாமல் “நான் தான் ஒண்ணுமே பண்ணலையே பின்ன எதுக்கு சார்கிட்ட பெருமையா பேசி வச்சியிருக்கீங்க” என்க,
அதற்கு புன்னகைத்த ரேயன் “சோ நீ என்ன பாத்து பேச மாட்ட ரைட்.. ஆனா இந்த நீ இப்போ பாக்காம பதில் கிடைக்காது” என்க, அதை கேட்டு பெருமூச்சுவிட்டு திரும்பி அவனை பார்க்க,
ரேயனோ “நீ கொடுத்த கெட் அப் ஐடியா தான்.. நம்ம ரெஸ்டாரன்ட் நுழைய காரணம்.. இல்லன்னா ஹவ் இட்ஸ் பாசிபில்” என்க, தன் கேள்விக்கான பதில் கிடைத்ததும் பெண்ணவள் அவனை பாராமல் விட்ட பணியை தொடங்க,
அவளின் கோவம் உணர்ந்து “யாழி” என்றழைக்க, அவ்வழைப்பில் ஒரு நிமிடம் பெண்ணவளின் கையை வேலை நிறுத்தம் செய்து அவனை பார்த்திருக்க,
“சாரி நேத்து அடிச்சிருக்க கூடாது.. உனக்கு என்மேல கோவம்ன்னு தெரியும்” என்று அவளை சமாதானம்படுத்த வாங்கி வந்த சாக்லேட்டை பெண்ணவளின் முன் வைத்தவன் சாப்பிடு என்று நீட்ட,
அவ்வளவு தான் மொத்தம் கோவத்தையும் ஏலத்துக்கு வித்தது போல் தூக்கி எரிந்துவிட்டு, அதனை பிரித்து சாப்பிட்டவள் “தேங்க்ஸ் ரே” என்று கண் சிமிட்ட, அதில் தன்னை இழந்து மீட்டவன் “கோவம் போயிடுச்சா”
“போகல தான்.. நான் பண்ணினதும் தப்பு தான” என்றதில் ஆடவன் வெளிப்படையாக புன்னகைத்து “இதே போல எல்லாத்தையும் புரிஞ்சிக்கிட்டா நல்லது” என்று அவளுக்கு எதையோ உணர்த்த முயல,
அதை பெண்ணவள் கேட்காமல் அவனின் புன்னகையில் தன்னை இழந்து மீட்பது பாவையின் முறையாக “ஆமா உனக்கு சிரிக்கலாம் தெரியுமா” என்றதில் தாராளமாக இதழ் விரிய சிரித்தவன் “அது எனக்கே இப்போ தான் தெரியும்.. சரி ஈவ்னிங் வெளிய போலாமா..”
“ஓகே நான் ஃபர்ஸ்ட் கேஸ் வின் பண்ணினதுக்கு என்னோட ட்ரீட்.. வாகி ஜோஸா ரெண்டு பேருமே ஜாய்ன் பண்ணிக்கட்டும்” என்றதும் அவனும் ஓகே என்று கண் சிமிட்டி விடை பெற்றான்.
தொடரும்…
– ஆனந்த மீரா 😍😍

