Loading

அத்தியாயம் 13

 

“எக்ஸ்கியூஸ் மி சார்” ஆறு வாசலில் நின்று கேட்க, 

 

“எஸ்” என உள்ளே அனுமதித்தவர், “கம் வித் யுவர் பேரண்ட்ஸ் டுமாறோ” (நாளை உன் பெற்றோர்களுடன் வா) என சுருக்கமாக அவர் சொல்ல.

 

‘எதுக்குன்னு கேப்போமா? வேண்டாமா?’ என்ற யோசனையில் இவள் முழிக்க, “வாட்? வாண்ட் டு சே அகைன் ?” (௭ன்ன? திரும்ப சொல்லனுமா?)௭ன்றார் காட்டமாக.

 

“நோ சார்” ௭ன்றவள் “பட்” என மேலும் தயங்க.

 

“டு யூ வாண்ட் தி ரீசன்? (காரணம் வேணுமா?)”. 

“எஸ் சார்”.

 

“ஹௌ டூ யூ நோ ப்ரகலத்தன்?” (ப்ரகலத்தன ௭ப்டி தெரியும்).

 

“ஹி இஸ் மை சீனியர் இன் ஸ்கூல்”.

 

“ஜஸ்ட் எ சீனியர் ரைட்? நத்திங் மோர் தன் தட்?” (வெறும் சீனியர் மட்டும் தானா? அதற்கு மேல் ௭துவுமில்லயா?).

 

இவள் ஆன்சர் பண்ணாமலிருக்க, “அத தெரிஞ்சுக்க தான் உன் பேரண்ட்ஸ வர சொல்றேன். யூ மே லீவ்” என முடித்துவிட.

 

அவள் “ஆமா, அவன் ௭னக்கு ௭ல்லாவற்றிற்கும் மேல் தான்” என ஒத்துக் கொள்ள தயங்குபவள் கிடையாது. ஆனால் அவள் அம்மாவிற்கு விஷயம் இப்படி தெரிவதில் பிடித்தமில்லை என்பதால் கவலை கொண்டாள்.

 

வெளி வராண்டாவிற்கு வர ,  அங்கு எல்லோரும் கிளம்பும் பரபரப்பில் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.

 

அதில் இவளை வேகமாக ஓடிய யாரோ இடித்து தள்ளிவிட்டு செல்ல, யோசனையாக நடந்தவள், கீழே விழுந்ததில் சுயநினைவு பெற்று, யோசனையிலிருந்து வெளி வந்து நிமிர, “எங்க கவனம் வச்சுட்டு வார” என வேகமாக வந்து தூக்கி விட்டான் ப்ரகலத்தன்.

 

“ஹே பாத்துடி” என லட்சுவும் பின்னையே ஓடி வந்தாள். ஹெச்.ஓ.டி அறையில் நடந்ததை தானும் கேட்டவள், அடுத்த நிமிடம் ரெப்பாக கிளாஸ் ஸ்டாஃபை பாக்க சென்றிருந்தாள், நடந்ததை விசாரிக்க.

 

அந்த மேடம், ரெப் என்பதால் மட்டுமே இவளிடம் விஷயத்தைச் சொன்னார், மற்றபடி எந்த ஒரு ஸ்டூடண்ட் பற்றியும் மற்ற ஸ்டூடண்ட்டிற்கு விஷயம் பகிரபடக் கூடாது என்பது அங்குள்ள ரூல். காசிப் பேசி சூசைட் வரை தூண்டி விட்டு விடுகின்றனர் என்பதால் இந்த ரூல். அதனாலேயே அவளிடம் கூட போட்டோவை காட்டவில்லை. பேரண்ட்ஸின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிவிடுவர் ௭ன்பதாக மட்டும் கூறினார்.

 

லட்சு, “ஹே, யாரோ நீயும் அண்ணாவும் இருக்குறத போட்டோ எடுத்து நம்ம ஸ்டாப்ஸ்க்கு அனுப்பியிருக்காங்க. இத ஆண்ட்டிக் கிட்ட சொல்லிடுவாங்க. மத்தப்படி ஆண்ட்டி டெசிஷன் இஸ் பைனல்ன்னு விட்டுடுவாங்களாம்” என்க.

 

“நீ நாளைக்கு ஆண்ட்டிய கூட்டிட்டு வா. என்னையும் பேரண்ட்ஸ் கூட்டிட்டு வரச் சொல்லிருக்காங்க. நா அப்பாட்ட  பேசிக்கிறேன், ஆண்ட்டிடையும்” என்றான் சேர்த்து.

 

“அம்மாட்டயா? என்ன சொல்வீங்க?” ௭ன்றாள் வேகமாக.

 

“அத யோசிக்கல,  பட் நீ ஒர்றி பண்ணாம இப்ப கெளம்பு. ஏற்கனவே லேட்டாயிடுச்சு ஷேர் ஆட்டோ கிடைக்காம போயிடும். சீக்கிரம்” என்க.

 

மற்ற நால்வரும் ஆறு, லட்சு, பேக்கோடு வந்தனர், “எவ்வளவு நேரம் உங்க ரெண்டு பேருக்கும் வெயிட் பண்றது. ஹெச்.ஓ.டி என்ன சொன்னாரு?” என்றாள் நிலா.

 

இவர்கள் இருவரும் சொல்ல.

 

“யார் இந்த வேலையெல்லாம் பாத்தது” என்றாள் அமலா.

 

ஆறெழில் திரும்பி ப்ரகலத்தனை பார்க்க, “என் கிளாஸ் ரேணுன்னு தான் நினைக்கிறேன்” ௭ன்றான் அவன் மெதுவாக.

 

“எதுக்கு அவங்க இதெல்லாம் பண்ணனும்” மறுபடியும் நிலா கேட்க.

 

“அவ ப்ரசிடெண்ட்ட லவ் பண்றா போல, அதனால இவங்க என்கிட்ட பேசுறது பிடிக்கலையா இருக்கும்” ப்ரகலத்தனை பாத்தவாறு ஆறு சொல்ல.

 

“இது என்ன சின்னப்புள்ளத்தனமா இருக்கு” வைரம்.

 

“இத பத்தி டீடெய்லா நாளைக்கு டிஸ்கஸ் பண்ணலாம், இப்ப கிளம்பலாம்” லட்சு சொல்ல.

 

“ஆமா கிளம்புங்க” என அவர்களை கிளப்பி சென்று ஷேர் ஆட்டோ ஏற்றிவிட்டு காலேஜ் பார்க்கிங் வந்தான் ப்ரகலத்தன். அங்கு அகத்தியன், நாது, மூர்த்தி மூவரும் இவனுக்காக காத்து நின்றனர்.

 

“மாப்பிள அந்த சிவில் 3rd இயர் பொண்ணுங்க டான்ஸ் செமல, அந்த கட்டச்சி என்னா ஆட்டம் ஆடுறா?” என அவர்கள் பேசிக்கொண்டிருக்க.

 

“ஹே கிளம்பளாம்டா, ப்ரகலத்தன் வந்துட்டான்” என ப்ரகலத்தனை பார்த்து விட்டு மூர்த்தி சொல்ல. மூவரும் அவரவர் பைக்கில் ஏறி அமர, ப்ரகலத்தன் வந்து அவன் பைக்கில் சாய்ந்து நின்று விட, மூவரும் “என்னடா கிளம்பலையா?” ௭ன நின்று விட.

 

“நீங்க போங்கடா, நா கொஞ்ச நேரம் இருந்து கிளம்புறேன்”.

 

“இந்த இருட்டுல தனியா என்ன பண்ண போற?” அகத்தியன் கேட்க.

 

பதில் சொல்லாமல் அவன் யோசனையில் இருக்க, “அவேன் ஏதோ சீரியஸ் திங்கிங்ல இருக்கான். வீட்ல போய் நீ மட்டும் என்ன பண்ண போற, பேசாம நில்லு. அவனே ஒரு முடிவுக்கு வரட்டும், பேசிட்டு போகலாம்” என நாது சொல்ல, மூவரும் நின்றுவிட்டனர்.

 

சிறிது யோசனைக்குப்பின் ப்ரகலத்தன், ஒரு முடிவோடு ஜெயந்திக்கு கால் செய்தான்.

 

பேப்பர் கரெக்ஷனில் இருந்த ஜெயந்தி அருகில் இருந்த போன் அடிக்கவும் ௭டுத்தவர், திரையில் வரும் “ஆறு சீனியர்” ௭ன்ற பெயரில் சிரித்தவாறு அட்டெண்ட் செய்து, “சொல்லுப்பா பங்க்ஷன் நல்லபடியா முடிஞ்சதா? நாடகம் ௭ப்டி பண்ணாங்க? நேரமாகிடுச்சே, எழில் கிளம்பிட்டாளா?” ௭ன்றார்.

 

“ம், இப்ப தான் ஆண்ட்டி லட்சுவும், அவளும் கிளம்பினாங்க”.

 

“டிராமா நல்லா பண்ணிட்டாங்களா, வீடியோ எதுவும் கிடைச்சா கலெக்ட் பண்ணி கொடுப்பா” ௭ன்றார்.

 

“கண்டிப்பா ஆண்ட்டி, முக்கியமா ஒரு விஷயம் பேசணும், இப்ப பேசலாமா?” ௭ன்றான் தயக்கமாக.

 

“சொல்லுப்பா பேப்பர் கரெக்சன் தான் பண்ணிட்டிருந்தே, சொல்லு”.

 

அவன் ௭ப்டி ஆரம்பிப்பது ௭ன மறுபடியும் தயங்க. அவன் அமைதியை கவனித்தவர் ஒரு அம்மாவாக, “எதும் பிரச்சனையாப்பா, ௭ழில் ௭தும் விளையாட்டா பண்ணிட்டாளா?” ௭ன்க.

 

“அப்டிலா ஒண்ணுமில்ல ஆண்ட்டி” ௭ன்றவன், ‘இதுக்கு மேல தயங்கி அவங்களயும் டென்ஷனாக்க வேணா’ ௭ன்றெண்ணி, “அது வந்து ஆண்ட்டி, எழில….. ௭ழில எனக்கு ரொம்ப பிடிக்கும். ஸ்கூல் படிக்கும்போதே என் கிட்ட வந்து தைரியமா உங்க கண்ணு ரொம்ப அழகா இருக்குன்னு ஈசியா சொல்லிட்டு போனவ. அங்க அங்கிள்ட்ட என்ன சொன்னான்னு தெரியல, நா 10th படிக்கும் போது என்ன ஸ்கூல்ல வந்து பார்த்தாரு” என நிறுத்த.

 

அவன் ஆரம்பிக்கவும் ‘௭ன்னவோ ௭ன’ அதிகரிக்க ஆரம்பித்திருந்த பீ.பி இப்பொழுது ஷாக்கில் அப்படியே நிற்க. “எழில் அப்பாவா வந்து பேசுனாரு? அது ஏன் அப்பவே? உன்ன ஏன் வந்து பாத்தாரு? அவருக்கு ௭ப்டி உன்ன தெரியும்? ௭ன்ன பேச வந்தாரு?” என்றார் அடுக்கடுக்கான கேள்வியாக குழப்பத்துடன்.

 

“ஆறெழில்காக தான்னு நினைக்கிறேன் ஆண்ட்டி….. ஆமா ஆண்ட்டி, அங்கிள் ௭ன்ட்ட, நா யாரு, என்ன, எங்க இருக்கேன், அப்பா, அம்மா பத்தி, எல்லாமே கேட்டாங்க. அவங்க ட்ரைக்ட்டாவே ௭ங்கிட்ட ‘ஆறெழில் ரொம்ப தைரியமான பொண்ணு தான், அவ ஏதாவது உன்ட்ட வந்து பேசினா அத அட்வான்டேஜா எடுத்துக்க வேணாம். அவளுக்கு முடிவு ௭டுக்றதுக்கான வயசு இது இல்ல, உங்க ரெண்டு பேருக்குமே படிக்ற வயசு, நல்லா படிங்க, உன்னால அவ எப்பயும் டிஸ்ட்ராக்ட் ஆகக் கூடாது. அது தான் உங்க ரெண்டு பேருக்கும் நல்லது’, இப்டிலாம் சொன்னாங்க. ‘இத நீங்க உங்க பொண்ணுக்கு சொல்லலாமே அங்கிள்’ன்னு கேட்டதுக்கு, ‘சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அவ இன்னும் டிசைட் பண்ண முடியாத குழப்பத்துல இருக்கா. நீ ஹோப் குடுக்கலனா அவ கன்ஃப்யூஷன் அப்படியே இருக்கும். அவளுக்கு தேவையான நேரத்துல டிசைட் பண்ணிக்கட்டும்’னு சொன்னாங்க.

 

நீங்க இப்படி ௭ன்ட்ட வந்து பேசுற மாறி, ஒவ்வொருத்தர்ட்டயா போய் எக்ஸ்பிளைன் பண்ண முடியுமா அங்கிள்னு கேட்டேன்.

 

“என் மகள பாக்குறவன்டெல்லாம் நா போய் பேசலயேபா, என் மகளுக்கு ஏதோ ஒரு அட்ராக்ஷன் உன்மேல, அத முளையிலேயே இல்லாம ஆக்கணும். அவ லைப் நல்லா இருக்கணும், லவ் பண்ணா நல்லா இருக்கமாட்டான்னு சொல்லல. இப்ப முடிவு எடுக்குற வயசு உங்க ரெண்டு பேருக்கும் இல்ல. இப்போ உனக்கு சரின்னு தோன்றது ரெண்டு வருஷத்துல, ச்ச அவசரப்பட்டோமோன்னு தோணுனா என் பொண்ணு லைப்?? இதே என் பொண்ணுக்கு தோணுனாலும், என் பொண்ணோட லைப்??. அதான்பா உங்க ரெண்டு பேருக்காகவும் தான் பேசுறேன். உனக்கு இன்னும் ரெண்டு வருஷத்துல படிப்பு முடியுது. அவள டெய்லி அதே ஸ்கூல்ல பாக்க தான் போற, ஆனாலும் அவாய்ட் பண்ணு அவளே புரிஞ்சுப்பா” அப்டின்னு சொன்னாங்க.

 

சப்போஸ் எங்களுக்கு ஒருத்தர ஒருத்தர் புடிச்சதுனான்னு கேட்டேன்?.

 

“கண்டிப்பா அந்நேரம் உங்களுக்காக யோசிக்கிறேன்ப்பா” அப்டின்னாங்க.

 

“என் மகட்ட என்கிட்ட இருக்குற பிடிவாதம் இருக்குமான்னு தெரியல, இருக்குமுன்னா, எத்தன வருஷம் ஆனாலும் உன்ன தேடி வருவா. ஒருவேள அவளுக்கு இது ஜஸ்ட் அட்ராக்ஷனா இருந்தா, நீ முடிச்சுட்டு போகும்போதே உன் ஞாபகமும் போயிடும்”னு நம்பிக்கையா சொன்னாங்க.

 

நானும் பதிலுக்கு, “ஓகே அங்கிள், எனக்குமே எழில் மேல லவ்வான்ற கிளாரிட்டி இல்ல, ௭னக்கும் அட்ராக்ஷனா கூட இருக்கலாம். இப்ப வர நாங்க நேரா நிறைய பேசிக்கிட்டதில்ல. இனியும் அப்டித்தான் இருப்பேன். எப்ப எனக்கு அவள புடிச்சிருக்கு அவதான் என் லைஃப்ன்னு ரியலைஸ் பண்றேன்னோ அப்போ அவளத் தேடி போ மாட்டேன். உங்களத் தேடி தான் வருவே”ன்னு நானும் அப்ப தோணுனத சொன்னே ஆண்ட்டி.

 

ரொம்ப தைரியம் தான்பா உனக்கும்னு சொல்லி சிரிச்சாங்க. உங்களவிட இல்ல அங்கிள்னு சொன்னேன். அப்புறம் நிறைய பேசுனோம், அங்கிளோட போன் நம்பர் கூட கொடுத்தாரு. 12த் முடிச்சுட்டு உங்க பொண்ணுக்கிட்ட சொல்லாட்டியும், உங்ககிட்ட சொல்லிட்டு தான் போவேன்னு சொன்னேன். அப்ப கூட எனக்கு அவள புடிச்சதால தான் அப்டி சொல்லிட்டு போனேன்னு எனக்கு புரியல. ஆனா அங்கிள்க்கு அது புரிஞ்சுருக்கும்ன்னு நினைக்றேன். அவர் சொல்லாம, ஆறெழில் இந்த காலேஜிலேயே கரெக்டா வந்து சேர வாய்ப்பில்லையே ஆண்ட்டி” என அவனுக்கு தோனியவற்றயும், அன்று நடந்ததயும் முழு மூச்சாக சொல்லி முடித்தான்.

 

அந்த பக்கம் கண்ணீரை துடைத்த ஜெயந்தி, “இல்லப்பா, உன்ன பத்தின டிடைல்ஸ் அவளுக்கு அவர் சொல்லல, அவளுக்கு வேற யார் மூலமாவோ தெரிஞ்சிருக்கு. 11த் சேந்ததுமே   இன்ஜினியரிங் தான் படிப்பேன், இந்த காலேஜ்ல தான் படிப்பேன்னு சொல்லிட்டா. கவுன்சிலிங்ல வேணும்னா படி, காசு கட்டிலா சேக்க மாட்டேன்னு சொன்னேன்.

சரின்னு சொல்லி எடுத்த முடிவுல ஸ்ட்ராங்கா நின்னு படிச்சு, அங்க வந்து சேர்ந்தா. ஆனா அவ அப்பாக்கு எல்லாமே புரிஞ்சிருக்கு”. 

 

“இருக்கலாம் ஆண்ட்டி, காலேஜ் சேர்ந்ததும் நா கொடுத்த என் நம்பர பத்திரமா வச்சுருந்து சாகறதுக்கு முந்தின நாள் எனக்கு கால் பண்ணாங்க” என நிறுத்த.

 

இப்பொழுது மறுபடியும் ஜெயந்திக்கு படபடப்பு அதிகரித்தது , அதை உணர்ந்தவாறு  “பதட்டப்படாதிங்க ஆண்ட்டி. எதுக்குன்னு தெரியல நாளைக்கு வீடு வர வாப்பா நேர்ல பேசிக்கலாம்ன்னு சொன்னாரு. வீட்டுக்கே கூப்பிடுறாங்களே என்ன பிரச்சினையோ? எழிலுக்கு என்னவா இருக்குமோன்னு பயந்துட்டே தான் வந்தேன்” என்க.

 

“வந்தியா?” என ஆச்சரியப்பட்டார்.

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 30

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
5
+1
27
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்