Loading

அத்தியாயம் 08

 

எனக்கு ஒரு ஐடியா என்று அறிவழகி சொல்ல, ஆர்வமாக அவளை நிமிர்ந்து பார்த்த அபர்ஜித்திடம்

 

“இப்போ என்ன பார்கவி மேடமோட தங்கச்சிய நீங்க லவ் பண்றீங்க.. ஆனா உங்களுக்கும் பார்கவி மேடமுக்கும் கல்யாணம் நடக்கப்போகுது..

 

…கல்யாணத்த நிப்பாட்டுனோம்னா ரெண்டு குடும்பத்துக்கும் பெரிய சண்டையும் வரும்.. பெரிய மனஸ்தாவமும் வரும்.. அதே நேரம் நீங்க போயிட்டு பார்கவி மேடமோட தங்கச்சி கிட்ட லவ் பண்றேன்னு சொல்லவும் முடியாது..

 

…முத்தம் குடுத்ததுக்கு லவ்வான்னு உங்கள கேவலமா பாப்பாங்க.. அதனால பார்கவி மேடம் கூட உங்க கல்யாணம் நடக்கட்டும்…”

 

“ஏய் லூசு அறிவு.. என்ன சொல்ற…?”

 

“வெயிட் சீனியர்.. ஐடியா சொல்லிட்டு இருக்கும் போது குறுக்கால மறுக்கால வரக்கூடாது.. அப்புறம் எனக்கு ஒரு ஃப்லோ வராது.. மறந்துடுவேன்ல…” என்றவள் “வாயில விரல வைங்க…” என்று சொல்ல

 

“என்னது…?” என்று அவன் கேட்க

 

“ம்ம்.. வைங்க..” என்று அவள் அதட்ட

 

“எல்லாம் என் நேரம்..”னு சொன்னவன் வாயில் விரலை வைத்து அமைதியாக இருக்க,

 

“பார்கவி மேடம் கூட உங்க கல்யாணம் நடக்கட்டும்.. கல்யாணத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி பார்கவிய கல்யாணம் பண்ணிக்கணும்னா அவங்க தங்கச்சிய எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கணு சொல்லுங்க.. எப்டி என் ஐடியா..

 

…நீங்க பார்கவி மேடமுக்கு கொடுத்த அந்த நம்பிக்கைய உடைக்கவும் தேவையில்ல.. அதே நேரம் நீங்க லவ் பண்ற பார்கவி மேடமோட தங்கச்சியயும் கல்யாணம் பண்ணிக்கலாம்.. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா…” என்று சொல்ல,

 

அவளை கொலை வெறியுடன் முறைத்து பார்த்தான் அபர்ஜித். “என்ன சீனியர் சும்மா சும்மா முறைக்கிறீங்க…?” என்று அவள் அலுத்துக் கொள்ள

 

“நீ எல்லாம் படிச்சு தானே லாயர் ஆன…”

 

“சீனியர் இன்னொரு வாட்டி சொல்லுங்களேன்…”

 

“ஹா..”

 

“இல்ல உங்க வாயால கேட்கும் போது ஆனந்தமா இருக்கு, இன்னொரு வாட்டி நான் லாயர்னு சொல்லுங்களேன்…” என்று அவள் கேட்க

 

அருகில் இருந்த பைலை எடுத்து அவள் தலையிலேயே நங்கு நங்கு என்று அடிக்க ஆரம்பித்து விட்டான் அபர்ஜித்.

 

“ஆஆஆஆ.. சீரியல் வேணா.. வேணா.. வலிக்குது.. அடிக்காதீங்க…” என்றவள் அவன் கையில் இருந்து பைலை பிடிங்கிக் கொண்டு, மேலும் கீழும் மூச்சு வாங்க “என்னாச்சு சீனியர்..?” என்று கேட்க

 

“மாங்கா.. மாங்கா.. மட சாம்பிராணி.. ரெண்டு பொண்ண கல்யாணம் கட்டி என்ன ஜெயிலுக்கு போக சொல்றியா.. நீ தனிப்பட்ட முறையில கேஸ் எடுத்து நடத்தணும்னா வேற கேஸ போய் புடி.. என்னையே கேஸ் ஆக்க பாக்குறியா நீ?..” என்று கேட்க

 

நாக்கை கடித்தவள் “ஆமா இல்ல.. ஒருத்தர் ரெண்டு கல்யாணம் பண்ண முடியாது இல்ல.. அதுதான் சொன்னேனே சீனியர் என்னால எல்லாம் யோசிக்க முடியாது.. நீங்களே ஆழ்ந்து ஆழமா யோசிச்சு நல்ல முடிவா எடுங்க.. வேணும்னா நான் ஹெல்ப் பண்றேன்…” என்று சொன்னவள்

 

“சரி ஆரம்பிப்போமா…” என்று சொல்லி அவள் வளமையாக நோட் பண்ணிக்கொள்ளும் அந்த நோட்டையும் பேனையையும் எடுத்தவள்

 

“முதலாவது விஷயம் உங்களுக்கு பார்கவி மேடம் கூட கல்யாணம் நிச்சயம் பண்ணி மண்டபம் வரைக்கும் வந்து கல்யாணம் நின்னு போச்சு..

 

…ரெண்டாவது..கல்யாணம் நிக்கிறதுக்கு முதல் நாள் ராத்திரி நீங்க தங்கச்சிக்கு முத்தம் கொடுத்து இருக்கீங்க.. இப்போ மூணு மாசம் கழிச்சு மறுபடியும் உங்களுக்கும் பார்கவி மேடத்துக்கும் உங்க ரெண்டு வீட்டு சம்மதத்தோட கல்யாணம் நடக்கும்…

 

… மூணாவது..அதுக்கு இடையில நீங்க பார்கவி மேடமோட தங்கச்சிய லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்க.. இப்போ உங்க பிரச்சனை என்ன? பார்கவி மேடம கல்யாணம் பண்ணிக்க முடியாது.. பார்கவி மேடமோட தங்கச்சிய கல்யாணம் பண்ணிக்கணும் ..

 

…இதுக்கு சிம்பிளா ஒரே வழி சீனியர் ஸ்ட்ரெயிட்டா போய்…” என்று அவள் ஆரம்பிக்க

 

“ஸ்ட்ரெயிட்டா போய், ரைட்ல திரும்பினா அவங்க ஒரு குளம் இருக்கும். அங்க போய் நீ குதிச்சுடு…” என்று அபர்ஜித் சொல்ல

 

“அந்த குளம் எவ்ளவு ஆழம் இருக்கும் சீனியர்.. ஏன்னா எனக்கு நீச்சல் தெரியாது…” என்றாள் தெரியும் என்னும் வகையில் கெத்தாக.

 

“சத்தியமா முடியல அறிவு.. நீ இப்போ சொன்னதத் தானே நான் திரும்பத் திரும்ப சொல்லிட்டு இருக்கேன்.. அதையே எனக்கு திரும்ப திரும்ப சொல்லி நீ என்ன டென்ஷன் ஏத்துற…” என்று அவன் கத்த

 

“வை ஆங்கிரி பேர்ட் மூட்.. கூல் சீனியர்.. நான் சொல்றத முழுசா கேளுங்க.. நீங்க ஸ்ட்ரெயிட்டா போய் உங்க அம்மா, பார்கவி மேடம் அம்மா அப்பா எல்லாரையும் கூப்பிட்டு வெச்சு.. எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல.. கல்யாணத்த நிப்பாட்டுங்கனு சொல்லிருங்க.. சிம்பிள்…

 

…உங்களுக்கும் பார்கவி மேடமுக்கும் நடக்க இருக்கிற கல்யாண நின்னுடும்.. இன்னொரு ஆறு மாசமோ மூணு மாசமோ கழிச்சு பார்கவி மேடமோட தங்கச்சி கிட்ட நீங்க ப்ரொபோஸ் பண்ணிடுங்க.. அதுக்கு பிறகு உங்க அம்மா கிட்ட சொல்லி அவங்க வீட்டுல தங்கச்சிய பொண்ணு கேப்போம்…” என்று சொல்ல,

 

“செருப்பாலேயே அடிப்பாங்க.. நீ வாங்கிக்கிறியா…” என்று அபர்ஜித் கேட்க “உங்க கல்யாணம் நடக்க நான் ஏன் செருப்படி வாங்கணும்…” என்று அவள் எகிற

 

“தெரியுது இல்ல.. ரெண்டு குடும்பமும் பேசி முடிவு பண்ணி.. எங்ககிட்டயும் விருப்பம் கேட்டு அந்த கல்யாணம் நடக்க இருந்துச்சு.. இப்போ போய் அந்த கல்யாணத்தை நிறுத்த சொன்னா..

 

…பார்கவியோட பாட்டி இறந்ததால அவ அதிர்ஷ்டம் இல்லாதவன்னு ஊரே பேசுது.. அத நானும் நம்பித்தான் இந்த கல்யாணத்த நிப்பாட்டுறேன்னு அந்த பொண்ணு நினைக்காதா.. அவ ஏதாவது தப்பான முடிவெடுத்துட்டா என்ன பண்ண சொல்ற..

 

…அதே நேரம் எங்க அம்மா அவங்க தலை குனிஞ்சு யார் முன்னாடியும் நிக்கக் கூடாது.. இப்போ ஏதோ துக்க சம்பவத்தால கல்யாணம் நின்னு போச்சு.. அதுக்கே பார்கவிய இப்டி பேசுறாங்க.. இப்போ நான் வேணாம்னு சொல்லிட்டேன்னா அந்த குடும்பத்தோட மானம் மரியாத என்ன ஆகும் ..

 

…அதோட அக்காவ புடிக்கலைன்னு சொல்லிட்டு நான் திரும்ப எப்டி தங்கச்சிய போய் பொண்ணு கேக்க முடியும்.. கல்யாணம் பண்ணி வைங்கணு எந்த முகத்த வெச்சிட்டு போய் நிற்பேன்.. இது பெரிய சிக்கலான முடிச்சு அறிவு. இந்த முடிச்சுக்கள எப்டி அவுக்கறதுன்னு எனக்கு தெரியல…” என்று அபர்ஜித் கவலையாக சொல்ல,

 

“சீனியர் நீங்க சொல்றது எனக்கு புரியுது.. ஆனா கண்ண மூடி ஒரு விஷயத்த எனக்கு சொல்லுங்க.. உங்களால உங்க அம்மா, பார்கவி மேடமோட குடும்பம், பார்கவி மேடம், இவங்க சந்தோஷத்துக்காக பார்கவி மேடம கல்யாணம் பண்ணிக்க முடியுமா?…” என்று கேட்க

 

இல்லை என்று அழுத்தமாக தலையாட்டியவன் “இந்த 16 நாள்ல நான் அதத்தான் யோசிச்சேன்.. முட்டாள் தனமா முத்தம் கொடுத்தத பெருசா எடுத்துக்கிட்டு ஒரு பொண்ணு வாழ்க்கையில விளையாடக் கூடாதுன்னு தான் அமைதியா இருந்தேன்…

 

…ஆனா இன்னைக்கு பர்விதா என்ன, நீ என் அக்காவ கல்யாணம் பண்ணிக்க போறவன் மட்டும்தான் அப்டி என்கிற மாதிரி பார்த்த பார்வ.. நான் கொடுத்த முத்தம் அவள எந்த விதத்திலயும் பாதிக்கலன்னு இயல்பா நடந்துகிட்ட விதம்…

 

…அது எல்லாத்தையும் பாக்கும்போது இதயத்துக்குள்ள ஏதோ ஒரு வலி.. அந்த முத்தம் என்ன கொலையா கொள்ளுதே.. உன்ன ஒன்னுமே பண்ணலயான்னு கத்தி கேக்க தோணுது.. அவ என்னோட உரிமைனு மனசு சொல்லிகிட்டே இருக்கு..

 

…அந்த உரிமை உணர்வு எனக்கு பார்கவிய பாக்கும் போது வரல.. இனிமேலும் வராது.. கண்டிப்பா பார்கவினு இல்ல பர்விதாவ தவிர வேற யாரையுமே என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது.. என் மனைவி என்கிற ஸ்தானத்துல வெச்சு பாக்கவும் முடியாது…” என்று அவன் உருக்கமாக சொல்ல,

 

“சிம்பிள்.. அவ்வளவுதான்.. முதல்ல உங்க மனசுல என்ன இருக்குன்னு.. பர்விதா.. கரெக்ட்டா…?” என்று அவள் பெயரை கேட்க அவன் உதடுகளில் அவ்வளவு இறுக்கத்திலும் மெல்லிய கீற்றுக் போன்ற புன்னகை .

 

“ஆமா பரவிதா…”

 

“அவங்க கிட்ட உங்க மனசுல இருக்குறத சொல்லுங்க…”

 

“எப்டி சொல்லச் சொல்ற.. உன்மேல காதல் வந்துருச்சுன்னு சொன்னா கேட்டுத்து செருப்பாலேயே அடிப்பா.. அவ என்ன எப்டி எடுத்துப்பா.. உடம்பு சுகத்துக்கு அடிக்ட்டானதால தான் இந்த மாதிரி பேசுறேன்னு நினைச்சுட்டானா சத்தியமா என்னால தாங்கிக்க முடியாது அறிவு..

 

…இத்தன நாளா எனக்குள்ளேயே நிறைய கேள்விகள் கேட்டேன்.. நிறையவே அதற்கான விடைய தெரிஞ்சுக்கிட்டேன்.. நிறைய அலசி ஆராய்ஞ்சு தான், கடைசியில எனக்குள்ள இருக்கிறது அவ மேல இருக்கிற காதல்னு புரிஞ்சுகிட்டேன்..

 

… இப்போ கூட அவள வீட்டுல விட்டுட்டு வரும்போது கூடவே கூட்டிட்டு வந்துடலாமானு ஏதோ ஒரு பரிதவிப்பு.. அது அவ மேல இருக்குற காதல் மட்டும் தான்.. உடம்பு மேல இருக்குற மோகமோ அசையோ கிடையாது அறிவு.. நான் சொல்றது உனக்கு புரியுதா…” என்று அவளும் பெண்தானே என்னும் வகையில் தவிப்பாக பார்க்க,

 

“சீனியர் காதல பத்தி எனக்கு அவ்ளவா தெரியாது.. ஆனா உங்கள பத்தி எனக்கு நல்லா தெரியும்.. எந்த ஒரு பொண்ணையுமே நீங்க தப்பா பாத்தது கிடையாது.. எவ்ளவோ சந்தர்ப்பம் அமைச்சும் நீங்க தடம் மாறி போகல..

 

…அப்படிப்பட்ட நீங்க பர்விதா மேடம் கிட்ட இந்த அளவுக்கு அடிக்ட்டாகி இருக்கீங்கனா.. அதுல உங்க மனசு சம்மந்தப்பட்டு இருக்குனு அர்த்தம்.. அதனால தான் சொல்றேன்.. முதல்ல உங்க மனசுல என்ன இருக்குன்னு தீர்மானமா பர்விதா மேடம் கிட்ட சொல்லுங்க..

 

…அவங்களுக்கும் உங்கள கல்யாணம் பண்ணிக்க விருப்பம்னா மூணு மாசம் கழிச்சு நடக்க இருக்கிற கல்யாணத்த நிறுத்த வேணாம்.. பார்கவி மேடம் கிட்ட மட்டும் பேசுங்க அவங்க புரிஞ்சிகிட்டு இந்த விஷயத்த சாதாரணமா எடுத்துக்கிட்டாங்கன்னா..

 

…ரெண்டு குடும்பத்துக்கும் மனஸ்தாபம் இல்லாம பர்விதா மேடம நீங்க கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லையா.. ஒரு முறை ட்ரை பண்ணி பார்க்கிறதுல தப்பில்லையே சீனியர்…” என்று சொல்ல

 

இழுத்து பெருமூச்சு விட்டவன் “எனக்கும் வேற வழி தெரியல அறிவு.. இன்னைக்கு பர்விதா கிட்ட ஏதேதோ பேசணும்னு தான் போனேன்.. ஆனா அவ எதுமே நடக்காதது போல சாதாரணமா பேசவும் என் மைண்ட் கொலாப்ஸ் ஆயிடுச்சு..

 

…நாளைக்கு அவள சந்திச்சு இந்த 16 நாள் எப்டி எல்லாம் தவிச்சேன்.. என்னெல்லாம் அவள பத்தி நினைச்சேன்.. என் மனசுல அவ இப்போ என்னவா இருக்கா.. எல்லாத்தையும் சொல்லப்போறேன்..

 

… அவள் இல்லாம என்னால வாழ முடியாது.. என் வாழ்க்க முழுக்க காதலியா என் மனைவியா அவள் எனக்கு வேணும் என்கிறத அவள் கிட்ட சொல்ல போறேன்.. அவள் என்ன புரிஞ்சுப்பா இல்ல அறிவு.. அவ என்ன தப்பா மட்டும் பார்த்துட்டா அந்த இடத்திலேயே நான் கூனி குறுகி செத்துருவேன்…” என்று கமரிய குரலில் கூற,

 

“ஐயே சீனியர்.. சும்மா குழந்த புள்ள மாதிரி கண்ண கசக்காதிங்க.. பொண்ணுங்க எடுத்தவுடனே லவ் பண்ண மாட்டாங்க.. நீங்க போயிட்டு ப்ரொபோஸ் பண்ணுங்க.. நம்ம கஜினி முகமது மாதிரி திரும்ப திரும்ப படையெடுப்போம்.. எப்டியாச்சும் அவங்க மனச கைப்பற்றுவோம்…” என்று ஜான்சி ராணிக்காக அவள் எழுந்து நின்று சொல்ல,

 

அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. “சரி இன்னைக்கு என்ன எல்லாம் பேச நினைச்சேனோ.. அத நாளைக்கு அவகிட்ட பேசிடுறேன்.. என்னோட விருப்பம் என்ன என்றது அவளுக்கு தெரியட்டுமே.. அதுக்கு பிறகு என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம் ..

 

…கண்டிப்பா கோவப்படுவாள். ஆனாலும் என் மனசுல உள்ளத அவளுக்கு புரிய வைக்கணும் அறிவு.. மனசாட்சிக்கு துரோகம் பண்ணிட்டு என்னால ஒரு வாழ்க்கை வாழ முடியாது..

 

… பார்கவிக்கு நான் செய்ற துரோகம்.. பார்கவி மனச உடைக்க கூடாதுன்னு யோசிச்சா கடைசி வரைக்கும் அவளுக்கும் உண்மையா இல்லாம எனக்கும் உண்மையா இல்லாம எங்க வாழ்கையே வீணா போயிடும்..

 

…என் விருப்பத்த பர்வி கிட்ட சொல்லிட்டு அவ முடிவ பொருத்து வீட்ல பேசி பார்கவிக்கும் எனக்கும் நடக்க இருக்கிற கல்யாணத்த நிறுத்தணும்…” என்று அவன் சீரியஸாக சொல்ல

 

“ஹாஆஆஆ…” என்று கொட்டாவி விட்டவள் “வர வர ரொம்ப பிளேடு போடுறீங்க சீனியர்…” என்று சொல்ல

 

“சும்மா இருந்து தானே சம்பளம் வாங்குற.. நான் புலம்புறத்த கேளு…”

 

“வேற வழி…”

 

“சரி ரொம்ப நேரமாச்சு வா உன்ன வீட்ல விட்டுட்டு நானும் வீட்டுக்கு போறேன்…” என்றவன் அறிவழகியையும் அழைத்துக் கொண்டு அவள் வீட்டில் விட்டுவிட்டு தன் வீடு வந்து சேர்ந்திருந்தான்.

Click on a star to rate it!

Rating 4.4 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
6
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அறிவு ரெம்ப அறிவா யோசிக்கிறா😆😆..அபர்ஜித் குழப்பிகிட்டே இல்லாம பர்வி கிட்ட பேசினா தான் வழி கிடைக்கும்..

    1. Author

      பேரே அறிவழகில அறிவாதானே பேசணும் 🤣🤣🤣 அபர்ஜித் தானே பர்வி கிட்ட பேசுவான் வேற விதமா 🤭