
வானம் சூடிய கருமையை அகற்றிக் கொண்டிருந்தது கோவா மாநகரம்… அந்த இரவு வேளையிலும் பகல் போல வண்ண வண்ண விளக்குகள் ஒளிர்ந்து பகலுக்கு ஈடாக ஒளியினை பரப்பிக் கொண்டிருந்தன.
என்னதான் இந்த ஊரில் பார்ப்பதற்கு நிறைய இடங்கள் இருந்தாலும் எல்லா இடங்களுக்கு சென்று வந்தாலும் கோவா சென்று வந்த நிறைவை கொடுப்பது என்னவோ இந்த கேசினோ தான்.
இரவு நேரத்தில் நடத்தப்படும் சூதாட்ட விடுதிகள் இங்கு அதிகம். கேசினோ என்பது ஒரு சூதாட்ட விடுதி, அது கடலில் மிதக்கும் கப்பலில் தான் அதிகம் இருக்கும்.
பெரும்பாலான வி. ஐ. பி களும், சுற்றுலா வரும் மக்களும் அதிகம் வந்து பார்வையிடும் இடம்.
சூதாட்ட விளையாட்டுகள், உணவுகள் , மது வகைகள் என நிறைய இருக்கின்றன. அதற்கெல்லாம் மொத்தமாக பேக்கேஜ் என்ற வகையில் பிரித்து கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
வார நாட்களை விட வர கடைசி நாட்களில் தான் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படும்… பேக்கேஜ் பொறுத்து கட்டணம் செலுத்தினால் அவர்களுக்கு ஒரு கூப்பன் கொடுப்பார்கள் அதை வைத்து உள்ளே சென்று விளையாடலாம் , சாப்பிடலாம், மது அருந்தாமல்… அதற்கு மேல் விளையாட வேண்டும் என்றால் அதற்கு தனி கட்டணம்…
விளையாட தூண்டி ஆர்வமேற்றி, மீண்டும் பணம் கட்டி விளையாடி ஏமாந்து தோற்றவர்கள் தான் அங்கு அதிகம்… அதனால் கொடுத்த கூப்பனுக்கும் மட்டும் விளையாடி விட்டு வருவது நல்லது அங்கு.
****
கோவாவிற்கு வந்ததே இங்கு வருவதற்கு தானே என்பது போல துருவனும் அவனது நண்பர்களும் ஆர்வத்துடன் உள்ளே நுழைந்தனர். அவர்களுக்கு பின் ஜெஸியின் படையும் உள்ளே நுழைந்தது.
ஜெஸிக்கு இதில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை… ஆரோவுடன் இருக்கும் போது சரி இப்பவும் சரி அவளுக்கு இங்கே வருவது சுத்தமாக பிடிக்க வில்லை. அன்று ஆரோவுக்காக வந்தாள். இன்று தலையெழுத்து என்று வருகிறாள்…
ஆர்வமாக வந்த தன்யா கூட முகம் சுழித்து விட்டாள்… ரவியோ நமக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல விறைப்பாக இருக்க, அசோக் மற்றும் ஶ்ரீ தான் ஆர்வமாக இருந்தனர்.
அங்கே அரைகுறை ஆடையுடன் சில பெண்களும் ஆடுவார்கள்… அது தனியிடம், மது அருந்திக் கொண்டும் உணவு உண்டு கொண்டே ரசிக்கும் படியாக ரெஸ்டாரன்ட் இருக்கும்.. முதலில் உணவை எடுத்துக் கொண்டு மூவரும் அமர, துருவனும் நண்பர்களும் மிதமான மது வகைகளை கொஞ்சமாக எடுத்துக் கொண்டு ஆட்டத்தை பார்த்தவாறு சுகித்தனர்.
துருவனை தவிர மாற்ற நால்வரும் ஆடும் பெண்கள் மீது கண்களை வைத்திருக்க, அந்த விஷயத்தில் ஏனோ துருவனுக்கு ஆர்வமில்லை… அவனது பார்வையோ விளையாடும் விளையாட்டுகள் மீது படிந்து இருந்தது.
தன்யா அவனை கவனித்துக் கொண்டு தான் இருக்கிறாள். மேடையில் ஆடும் பெண்கள் மீது அவன் பார்வை பதியவே இல்லை…
“இங்க ரெண்டு விஷ்வாமித்ரர் இருக்காங்க கவனிச்சீங்களா மேடம்?”என்று ஆரம்பித்தாள் தன்யா.
“ம்ம்… ஒன்னு ரவி ! கன்ஃபோர்ம். இன்னொன்னு யார் ரிஷியா? அசோக் , ஶ்ரீ அவனுங்கள சேர்க்க மாட்டேன்… அவனுங்க கொஞ்சம் ஜொல்லு தான். ரிஷி தானா?”என்றாள் ஆர்வமாக,
ரவியோ அவர்களை பாவமாக பார்த்து வைக்க, அடக்கப்பட்ட சிரிப்புடன்” உண்மைய தான் சொன்னேன் ரவி ! இப்ப நம்ம ஆஃப் டியூட்டி ல தானே இருக்கோம். ஆனா இப்பயும் பாரு ஃபுல் டியூட்டி ல இருக்கறது போல விறப்பா இருக்க. நீ… நம்ம வேலைய பொறுத்த வரைக்கும் நம்ம பார்வையும் எட்டு திசைக்கும் அதை தாண்டியும் இருக்கணும், நீ என்ன ரெண்டு திசையை மட்டும் பார்த்திட்டு இருக்க, கொஞ்சம் அந்தப் பக்கமும் பாரு டா ! சப்போஸ் அந்த பொண்ணுங்களே அட்டாக் பண்ண வந்தா என்ன பண்ணுவ நீ? அவங்களை ஜஸ்ட் பாக்கறது தப்பு இல்ல டா ! ஆனா அந்த பார்வையில் ஒழுக்கம் இருக்கணும்.. அவ்வளவு தான் ரவி ! நீ நீயா இரு ! இதை பண்ணா யாரு என்ன சொல்லுவா எல்லாம் நினைக்காம, வாழ்க்கைய ரசிச்சு வாழு என்ன !!” என அறிவுரை வழங்க “எஸ் மேடம்” என்று சொன்னாலும் அவனது பார்வை அங்கே போக வில்லை.
” இவன் திருந்த மாட்டான். நீ இன்னொருத்தன் யாருன்னு சொல்லு?”என்றாள்.
தன்யாவும் ரவியை பார்த்து சிரித்துக் கொண்டே” இதை சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க மேடம்… இருந்தாலும் இது தான் உண்மை. அந்த இன்னொரு ஆள் துருவன் தான்”என்றாள்.
“வாய்ப்பே இல்ல ! அவன் தான் நாக்க தொங்க போட்டுட்டு நாய் போல பார்த்துட்டு இருப்பான். அவனாவது பாக்காம இருகிறதாவது போடி.. “என்றாள்.
“மேம் ! ட்ரஸ்ட் மீ. நான் அந்த குரூப்ப பார்த்திட்டு தான் இருக்கேன். துருவனை தவிர அவனுங்க நாலு பேருடைய கண்ணும் அங்க தான் இருக்கு. ஆனா துருவன் போனை தான் பார்த்திட்டு இருக்கான்”என்றாள்.
“அப்படியா நம்ப முடியலையே !”என்று அவனை பார்க்க, அவன் பார்வையோ கவனமோ ஆடும் பெண்களிடம் இல்லை. போனில் தான் இருந்தது. ஒரு கையில் மதுவும் மறு கையில் போனும் இருக்க, அதை அருந்திய படி போனை தான் பார்த்தான்.
அவளும் ஒரு பார்வையாக அவன் மேடையை பார்ப்பான் என்று ஆர்வமாக பார்க்க, அவளுக்கு ஏமாற்றத்தை தான் பரிசாக கொடுத்தான். ஒரு முறை கூட அவன் அங்கே பார்க்கவில்லை
‘ இவன் என்ன அவ்வளவு நல்லவனா? பெண்கள பார்க்கவே மாட்றான்? என்னவா இருக்கும்? ‘ என அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே, ஒரு நவ நாகரீங்க மங்கை அரைகுறை ஆடையுடன் அவன் அருகே வந்து அவன் முதுகில் கையை படர விட்டு பாதி அங்கங்கள் அவன் மீது படுமாறு நாற்காலியின் கை பிடியில் அமர்ந்து” என்னோட வர்றியா?”என்று கொங்கனி(konkani) கோவாவில் பேச படும் மொழியில் கேட்க, அவனோ எதுவும் யோசிக்காது, அவன் அருத்திக் கொண்ட மதுவை அவள் மீது ஊற்றி விட்டான்.
” ஷிட்” என அவள் எழுந்துக் கொள்ள, தன் பார்வையினாலே அவளை எட்ட நிக்க வைத்தவன், கெட்ட வார்த்தையில் திட்டி விட்டு திரும்பிக் கொள்ள, அவளும் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவமானத்துடன் அங்கிருந்து சென்று விட்டாள்.
அவள் அமர்ந்த விதம் அவனது நண்பர்களுக்கு கூட பிடிக்க வில்லை முகம் சுழித்து விட்டனர். அவள் சென்றதும், அவன் முதுகை தூசி வந்தது போல தட்டி விட, இவளுக்கு சிரிப்பு தான் வந்தது.
இன்று நடந்ததையும் அன்று ஹோட்டல் பாத்ரூம்மில் நடந்ததையும் வைத்து யோசித்தவளுக்கு ஒன்று புரிந்தது பெண்கள் விஷயத்தில் அவன் மோசமானவன் இல்லை என்று. தன்னை வம்பிழுக்க , கோபத்தை தூண்ட மட்டுமே அவ்வாறு பேசுகிறான் என்று புரியவும் அவள் இதழ்களில் மென்புன்னகை மட்டுமே பூத்தது. அதுவும் அடுத்த அரைமணி நேரத்தில் மறைந்தும் போனது, அவன் இழுத்து வைத்த பிரச்சனையால்.
தனித்து விட பட்ட சிங்க குட்டியை சுழந்த நரிகளை போல, சூதாட்ட விளையாட்டில் மாட்டிக் கொண்ட துருவனை சூழ்ந்து விட்டனர். கருப்பு நிற ஆடைகள் அணிந்திருந்த அங்கு வேலை செய்யும் பணியாட்கள். அவர்கள் பார்க்க வேலை செய்யும் பணியாட்களை போல இருந்தாலும் விளையாட வந்தவர்களிடம் பணம் பறிக்கும் கூட்டம் அவர்கள்.
கேசினோவில் கொடுக்கப்படும் கூப்பினில் விளையாடி ஜெயிப்பவர்களை ஆசைக்காட்டி மேலும் விளையாட வைத்து பணம் பறிக்கும் கும்பல் அதிகம் அங்கே… இன்று துருவனை வைத்து விளையாடி பணம் பறிக்க எண்ணி விட்டனர் போலும்
கொடுத்த கூப்பனுக்கு விளையாடியவன் ஜெயித்து விட, பணம் அவனுக்கு நிறைய கிடைத்தது. ஜெஸியை கர்வமாக பார்த்து காலரை தூக்கி விட்டு அடுத்த முறைக்கு அவன் தயாராக, அவ்வளவு எச்சரித்தும் அடுத்த முறை என்று நிப்பவனை கண்டு அவளுக்கு கொல வெறி வந்தது.
“ரிஷி, அவனை விளையாட வேணாம் சொல்லு ! இந்த கூட்டம் சரியில்ல… இவன் தனியாளா சிக்கிருக்கான். எல்லாத்தையும் புடிங்கிட்டு தான் விடுவானுங்க… இதோட நிறுத்திட்டு வர சொல்லு அவன” என ஜெஸி ரிஷியிடம் எச்சரிக்க,
அவனும் கலக்கத்துடன்”நான் சொல்றேன் சிஸ்டர்”என்று விளையாடிக் கொண்டிருக்கும் துருவன் அருகே சென்று குனிந்து அவன் காதருகே” வாடா போயிடலாம்… ஜெயிச்ச வரைக்கும் போதும் போலாம் டா”என்றான்.
“இதான் டா லாஸ்ட் ! இதுல ஜெயிச்சிட்டு வர்றேன்”என்று மீண்டும் ஆட்டத்தில் கவனத்தை வைக்க, ரிஷியோ ஜெஸியை பார்த்து இரண்டு பக்கமும் தலையை அசைக்க, அவளோ தலையில் கைவைத்து விட்டாள்.
முதலில் ஜெயித்தவன் , அடுத்தும் அதே பாணியில் விளையாட தோற்று போனான். அவர்கள் முன்னே அமர்ந்த கூட்டம் சிரித்தது. அவனுக்கு அவமானமாக இருந்தது. இன்னொரு முறை அவனை விளையாட வைக்க அவர்களோ ஆயுதமாக அவன் மீது நக்கல் சிரிப்பை உதிர்க்க, அவனுக்கு மேலும் வெறியாகியது. அடி பட்டும் அடுத்த முறை விளையாட கூப்பன் வாங்கினான்.
ரிஷி எவ்வளவு தடுத்தும் பயணில்லாமல் போனது. இரண்டாவது முறையாக அவன் விளையாட, இவளோ கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று எண்ணியிருந்தவள் எல்லாரையும் எச்சரிக்கையாக இருக்க சொன்னாள்.
அவள் எண்ணிய படியே பிரச்சனை வெடித்தது” யாரை ஏமாத்திறீங்க? நான் சரியா தான் விளையாடினேன். நான் இந்த கேம்ல ஜெயிச்சிருக்க வேண்டியது. நீங்க தான் ஏதோ ஏமாத்திறீங்க… கூப்பிடுங்க ஓனர, ஐ வான்ட் டூ கம்பிளைன் யூ… ஆசைய தூண்டி விட்டு பணம் பறிக்கீங்களா? ஹவ் டேர் யூ… உங்களை எல்லாம் போலீஸ்ல பிடிச்சி கொடுக்கிறேன்”என கத்த ஆரம்பிக்க, அவன் எதிரே இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள்.
பல பேர் இப்படி கொந்தளித்து அடங்கிப் போனதை அவர்களும் பார்த்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவனாக தான் தெரிந்தான் துருவன்.
இது சூதாட்ட விளையாட்டு , இதில் நேர்மை , உண்மை எங்கிருக்கும்? விவரமறியாது அநியாயத்தை கண்டு பொங்கியவனாய் குதிக்க, மற்றவர்கள் அதையும் வேடிக்கைப் பார்த்தனர்.
வயதானவர் மட்டும் பொங்கி கொண்டிருந்த துருவன் அருகே வந்து”மிஸ்டர் யங்… இது கேசினோ, சூதாட்ட விடுதி ! இங்க விளையாட்ற கேம்ஸ் எல்லாத்துலயும் சூதாட்டம் இருக்கு… நீங்க விளையாட விளையாட அள்ளி தருவாங்களா என்ன?? அவனும் சம்பாரிக்கணும்ல…! விடுங்க தம்பி !”என்று அந்த ஊர் பாசையில் பேசினார்.
“அதுக்காக இங்க வர மக்கள் கிட்ட ஆசைய காட்டி பணம் பறிப்பாங்க பார்த்திட்டு இருக்க சொல்றீங்களா?”
“இதென்ன நியாய விலை கடைனு நினைச்சியாப்பா? சூத்தாட்ட விடுதி ! இங்க நேர்மையா இருப்பாங்க நினைக்கிறது முட்டாள் தனம் இல்லையா?”என விளக்க முயல, அவனுக்கு தான் அவர்களுக்கு அவர் சாதகமாக பேசுவதை கண்டு எரிச்சலாக வந்தது.
“சார், ப்ளீஸ் இதுல நீங்க தலையிட வேண்டாம் !நான் பாத்துக்கிறேன்”என்றான் அவரும் தோளை குலுக்கி விட்டு சென்று விட்டார்.
“இந்த கேசினோ ஓனர் யாரு? கால் தி மேனேஜர்? இந்த கேசினோ சி. ஈ.ஓ இப்போ வந்தாகணும்?”என்று உரக்க கத்த அவர்களோ மேலும் சிரித்தார்கள்.
“ரவி ! கொஞ்சம் கவனமா இரு ! இந்த பிரச்சனை கைகலப்பா முடிய கூட வாய்ப்பு இருக்கு. எல்லாரும் அலார்ட்டா இருங்க !”என்றவள் துருவனை நோக்கி நடக்க, “மேம் ! நான் போறேன்… நீங்க வேணாம்”என்று தடுத்தான்.
“இட்ஸ் ஓகே நான் போறேன்…”என்று அவர்களை நோக்கி நடந்தாள். கத்தி ஆர்பாட்டம் செய்யும் துருவனின் அருகே வந்து அவன் நெஞ்சில் கை வைத்து தடுத்தாள்.
அவனோ அதிர்வுடன் அவளை பார்த்தான்.”நோ ! இங்க நீ நியாயம் கேக்குறது வேஸ்ட் ! வா போலாம்”என்றாள். அவனுக்கோ மூச்சு இரைத்தது. அவள் அவன் நெஞ்சில் வைத்த கையை இன்னும் அகற்ற வில்லை. அவளையும் கையையும் மாறி மாறி பார்த்தவன், அனைத்தையும் மறந்து அமைதியாகிப் போக, அந்தக் கணத்தை பயன்படுத்தி அவன் கை பிடித்து அழைத்து சென்றாள்.
ஜெஸியை பார்த்ததும் அவர்கள் விடவில்லை… மேலும் சீண்டும் விதமாக, “வேணும்ன்னா இவளை வச்சு விளையாடேன், நீ ஜெயிச்சா, நீ இழந்த பணத்தை மொத்தமா உனக்கே கொடுத்திடுறோம்… ஆனா நீ தோத்துட்டா பொண்ணு எங்களுக்கு !” என்று சொல்லி சிரிக்க, துருவனுக்கு அதை கேட்க பொறுக்காமல் ஜெஸியை தாண்டி அவர்கள் மீது பாய, அவனை தடுத்த ஜெஸி அவர்களை திரும்பி பார்த்து முறைத்து விட்டு துருவனை அழைத்துக் கொண்டு நகர, அவர்களை மறித்த ஒருவன், “என்ன பதில் சொல்லாம போனா எப்படி?” என்று அவளை கண்களால் அளந்து விட்டு கேட்க, அவன் பார்வையில் முகத்தை சுழித்து விட்டு அவனை தாண்டி செல்ல, அவள் கையை பிடித்து விட்டான்.
சட்டென திரும்பி அவனை பார்த்தாள் “பதில் சொல்லாம போற, என்ன வர்றியா?” என்க, அடுத்த கணம் கீழே சுருண்டு கிடந்தானவன். அவள் அடித்த அடியில்…
அவளை திகைத்து போய் பார்த்தனர் அனைவரும்… “வா போலாம்…!” துருவனைப் பார்த்து சொல்லி விட்டு, அவன் கையை பிடித்துக் கொண்டு நடக்க, அவனை அவளையும் கீழே அசைவின்றி கிடந்தவனை பார்த்து நெஞ்சில் நீர் வற்ற பயந்த படி அவளுடன் நடந்தான். அடுத்த ஒருவன் அடிக்க வர அவனையும் அடித்தாள். நிறைய ஆட்கள் அங்கே சூழ்ந்து கொள்ள, துருவனும் அவனது நண்பர்களையும் தவிர்த்து அந்த ஐவரும் சண்டையில் இறங்க அந்த இடமே களேபிரமானது.
ஒரு கட்டத்தில் அந்த ஐவராலும் தாக்கு பிடிக்க முடியவில்லை… ஜெஸியை தவிர அனைவரும் பிடிப்பட்டு விட்டனர்.
ஜெஸியை சுற்றி வளைத்தனர்.
“ஹாஹா… மாட்டிக்கிட்டீயே !” அவளது ஆடையில் கை வைக்க வந்தவனின் கையில் எங்கிருந்தோ வந்த குண்டு பாய்ந்து, கையில் இரத்தம் பீறிட்டது, வலியில் கையை உதறியவாறே யாரென பார்த்தான். போலீஸ் தான். ஆனால் மப்டியில் வந்திருந்தனர்.
ஜெஸியின் கண்கள் சுட்டவனை கண்டு அகல விரிந்தது. “வி.கே”என்றாள் முணங்களாக,
தன்னுடன் வந்தவர்களை கண்கள் காட்ட, அவர்கள், அவர்களை கைது செய்தனர்., இவன் மட்டும் ஜெஸியை நோக்கி வந்தான்.
“ஆர் யூ ஓகே பேபி?”என்றான் கூலர்ஸை கொஞ்சம் இறக்கி விட்டு கேட்க, அவள் இதழ்கள் புன்னகையில் விரிய, “நண்பா !”என்று தாவி அணைத்துக் கொள்ள, அவனும் அவளை அணைத்துக் கொண்டான்.
ரவி, அசோக், தன்யா , ஶ்ரீக்கு அவன் யாரென தெரியும்… ஆனா துருவனுக்கும் அவனது நண்பர்களுக்கும் தெரியாது என்பதால் அவர்களை பார்த்து நின்றனர்.
அவனிடமிருந்து விலகினாள், “என்னடி சரியா வந்தேனா?”என்றான்.
அவனை முறைத்தவள், “ம்ம்… கிளைமேக்ஸ்ல என்னவோ கரெட்டா வந்துட்ட ! ஆனா போலீஸா எப்ப தான் பிரச்சனைக்கு முன்னாடி வருவீங்க…? நானா இருக்க போய் தாக்கு பிடிச்சேன். இதுவே வேற யாரும் இருந்திருந்தால்… இந்த தடியனுங்களுக்கு டின்னர் தான்… இனியாவது பிரச்சனைன்னா சீக்கிரம் வந்திடுங்க போலீஸே !”என்றாள் நக்கல் தோணியில்…
அவனும் சிரித்துக் கொண்டே” உங்க மேலே இருக்கற ஆபார நம்பிக்கையில் கொஞ்சம் அசட்டை தனத்துல வந்துட்டேன் பாடிக்கார்டே ! இனி இது போல நடக்காது”என்றான்.
அவளும் அவனது செய்கையில் சிரித்து விட, மீண்டும் அணைத்துக் கொண்டாள் அவனை.
“என்னடி பயங்துட்டீயா? நான் வர மாட்டேன் நினைச்சிட்டீயா?”
“பயம் எல்லாம் இல்ல. நீ வருவேன் எனக்கு தெரியும். திரௌபதிக்கு வாசு தேவ கிருஷ்ணனை போல எனக்கு நீ வாசு ! ஒரு கட்டத்துல செயலிழந்த போன நேரத்துல கடவுளா , நண்பனா வந்து காப்பாத்திட்ட டா !”என்றாள்.
இருவரும் பேசிக் கொண்டிருக்க, சற்று பொறாமையுடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த துருவன் அவர்களுக்குள்ளே என்ன உறவு என்பதை அறிந்துக் கொள்ள பக்கத்திலிருந்த ரவியிடம் கேட்டான்.
அந்த போலீஸ் யாரு ஜெஸிக்கு தெரிஞ்சவரா?” எனக் கேட்டான். “ஆமா ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் ! ஒரே காலேஜ் படிச்சவங்க, கொஞ்ச நாள் எங்களோட ட்ரைனிங்ல இருந்தார். அப்புறம் போலீஸ் வேலை கிடைக்க இங்க வந்துட்டார்”என்றான். அவன் மெதுவாய் தலை ஆட்டினாலும் வாசு ஜெஸியை அணைத்திருப்பதை பார்க்கவே முடியவில்லை… உள்ளே ஒரு புது உணர்வு, அவன் சினத்தை தூண்டியது, முகம் இறுகிப் போனது.
காவல் அதிகாரியாக தன் கடமையை செய்து விட்டு, வெளியே அவனுக்காக காத்திருந்த ஜெஸியிடம் வந்தான்.
“எங்க தங்கிருக்க?”
அவள் இடத்தை சொல்ல, “ம்ம்… எப்போ கிளம்புறீங்க?”
“நாளைக்கு ஈவினிங்”என்றாள்.
“அப்போ நாளைக்கு லஞ்ச் எங்க வீட்ல தான்”என்றான். அவளோ துருவனை பார்க்க அதை புரிந்து கொண்ட வாசு, துருவனிடம் வந்து மிஸ்டர் துருவன், உங்க பாடிகார்ட நாளைக்கு லஞ்ச்க்கு அனுப்பி வைக்கிறீங்களா உங்களுக்கு உரிய பாதுக்காப்பு கண்டிப்பா கிடைக்கும்…”என்றான்.
‘ இவன் கூட லஞ்சா அதுவும் வீட்லையா?’ என யோசித்தவன், அவர்கள் இருவரையும் சேர்த்து வச்சி கற்பனை செய்தவனால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை… தலையை உலுக்கி கொண்டவன்,
சமாளிக்கும் பொருட்டு” எங்களை எல்லாம் கூப்பிட மாட்டீங்களா? ஒன்லி உங்க பிரண்ட் மட்டும் தானா? இங்க வீட்டு சாப்பாடு சாப்பிட்டதே இல்ல ! நாளைக்கு உங்க பிரண்ட் கூட சேர்ந்து நாங்களும் வருவோம்”என்றான், அவனது நண்பர்கள் அவனை வித்தியாசமாக பார்த்தனர்.
“ஓ.. வித் மை பிளசர் . நீங்களும் வாங்க, ஜெஸி இவங்களையும் அழைச்சிட்டு வா! ஒகே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு பார்க்கலாம் பாய் காய்ஸ் பாய் ஜெஸி” என நேரத்தை பார்த்து சொல்லி விட்டு அவன் சென்றதும் அனைவரும் அவ்விடத்தை விட்டு காரை நோக்கி நடக்க, ஜெஸி துருவனை உறுத்து விழித்தாள். அவனோ தலை குனிந்து கொண்டான். இரு பக்கம் தலையை ஆட்டி விட்டு அவள் முன்னே நடக்க, ‘ உஃப் ‘ என ஊதி நெஞ்சில் கைவைத்து அவள் பின்னே சென்றான்.
*****
ஜெஸி, துருவனை பின் பக்கமாக வளைத்து பிடித்து தனது மாற்றொரு கரத்தால் பாக்கெட்டியிலிருந்த துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றி பொட்டில் வைக்க,
அவனோ கொஞ்சமும் துப்பாக்கி என்று பயப்படாமல் அவளது அணைப்பில் கட்டுண்டு கிடந்தான். அவளிடமிருந்து வந்த வாசனையில் கிறங்கி மயங்கி கண்கள் மூடி அதை நுகர்ந்தவன் அவள் அணைப்பை அவள் மீது சாய்ந்து படி ரசித்து கிடந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
3
+1
+1

