Loading

ஐந்து நாட்கள்  மட்டுமே கோவாவில் இருக்க போவதால் வடக்கு கோவாவை மட்டும் சுற்றி பார்க்கும் முடிவில் களம் இறங்கினார்கள் துருவனும்  அவனது நண்பர்களும்… அவர்களுக்கு பாதுகாப்பாக ஜெஸியும் அவளது படையும் உடன் சென்றார்கள்.

முதலில் சப்போரா கோட்டைக்கு (chapora fort) தான் சென்றனர்…

அங்கு சில போட்டோக்களும் செல்ஃபிக்களும் எடுத்துக் கொண்டு அடுத்த இடத்திற்குச் சென்றனர்.

சிங்குவெரியம் கடற்கரையில் அமைந்து இருக்கும் அகுவாடா  கோட்டைக்கும்  அகுவாடா ஜெயிலுக்கும் சென்றனர். அருகே அந்த கடற்கரையை ஒட்டிய  கடைகள் அமைந்த சாலைக்குள் நுழைந்து சுற்றி பார்த்தனர்.

ஜெஸியின் பார்வையில் இருந்து விலகாது, அவள் பார்வைக்கு எட்டின தூரத்தில் தான் அவர்கள் இருந்தார்கள். ஒரு எல்லை வரை  அவர்களை சுதந்திரமாக விட்டு விட்டு உடன் வந்தவர்களுடன் ஐக்கியமாகி விட்டாள் ஜெஸி.

தன் படையுடன் இருந்தாலும்  அவளால் சாதாரணமாக  இருக்க முடியவில்லை. கணவனுடன் கை கோர்த்த சென்ற சாலைகளில் இன்று அவனது நினைவுகளுடன் கரம் கோர்த்து செல்வது அவளுக்கு வேதனையாக இருந்தது. அவளது கண்கள் அவ்வப்போது  கண்ணீரைச் சுரக்க உள்ளிழுத்து கொண்டு அவர்களுடன் சகஜமாக இருக்க முயன்றாள்.

துருவனும்  நண்பர்களுடன் இருந்தாலும் ஜெஸியைப் பார்க்க அவன் தவறவில்லை.  அவளது உதடுகள் சிரித்தாலும் கண்களில் உயிர்ப்பு இல்லை…  இரு கண்களிலும் வலி அப்பிக் கிடக்க, அதற்கு காரணம் தான் தானோ என்ற எண்ணம்  அவளை பார்க்கும் போதெல்லாம் தோன்றியது. உள்ளுக்குள் இருக்கும் நியாஸ்தான் அவளிடம் மன்னிப்பு  கேட்கச் சொல்லி அவனை ஊந்த, அவனோ ‘ நானா? மன்னிப்பா? நேவர் ‘ என்ற ரீதியில் அந்த நியாஸ்தனை  அசட்டை செய்தாலும் உள்ளே அந்த நியாஸ்தன் செய்யும் குறுகுறுப்பை பொறுத்துக் கொள்ள முடியவில்லை… இருந்தாலும் நண்பர்களுடன் சேர்ந்து அதனை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டான்.

மதியம் வரை அலைந்து களைத்தவர்கள் மதிய  உணவிற்கு ஹோட்டலுக்குள் நுழைந்தனர்.

அங்கே வடநாட்டு உணவுகளை பேருக்கு கொறித்து விட்டு அறைக்கு சென்று அசதியில் உறங்கி விட்டனர்.

இரவு ஏழு மணி போல கிளம்பி வெளியே வந்தவர்கள் இரவு நேரத்தில் கடற்கரை அழகை ரசித்தனர். அங்கே இருந்த நைட் கிளப்பிற்கு சென்று ஆட்டம்  போட மிக எளிமையான உடையில் வந்திருக்கும் ஜெஸியை ஒரு நொடி அவளை வியக்காமல் இல்லை துருவன். இருந்தாலும் தன் தலையை உலுக்கி விட்டு நண்பர்களுடன் கொண்டாட்டத்தில் இணைந்துக் கொண்டான்.

இரவு பன்னிரண்டு வரை கொண்டாடம் என இருந்தவர்கள். தூங்கச் சென்று காலை பத்து மணிக்கு தான் எழுந்தார்கள். அதன் பின் காலை உணவை முடித்துக் கொண்டு இன்னும் சில கடற்கரைக்கும் சில சர்ச்களும் பழைய கோட்டைகளுக்கும் சென்றனர்.

ஒவ்வொரு நாளும் வீணாக்காமல் வடக்கு கோவாவை கண்டு களிக்க, இரவில் அங்கு நடந்தப்படும் கேசினோக்கு மட்டும் வார கடைசியில் போகலாம் என்று மற்றைய நாளில் இரவு  பகலும் சுற்றித் திரிந்தனர்.

அவர்கள் பகலில் கடைசியாக சென்ற இடம் தான் ஹர்வலெம் வாட்டர் ஃபால்ஸ்( harvalem water falls) .

இயற்கை அன்னையின் மார்பில் சுரக்கும் பாலாக அந்த  வெள்ளை அருவி ஆரவாரத்துடன் கொட்டி விட, குடும்பங்களோடு வந்த மக்கள் அதனை கண்டு குதூகளித்தனர்.

படிகளில் ஏறி அந்த தடுப்பு  கம்பிகளை ஓட்டி சிலர் அருவியுடன் செல்ஃபியும்  போட்டோவும்  எடுத்தனர். இவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு போட்டோக்களும்  இன்ஸ்டாகிராமில் பிலிம் காட்டிட, சில செல்ஃபிகளும், தனியாக நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.

ஒரு பக்கம் இவர்கள் , மறுபக்கம் தன்யா, அசோக், ஶ்ரீ, ரவி என அவர்களும் தங்கள் பணியிலிருந்து இறங்கி வந்து சாதாரண மனிதர்களை போல அந்த இடத்தையும் கொண்டாடினார்கள். இதில் தனித்து இருந்தது என்னவோ ஜெஸி தான்.

ஓரமாக  ஓரிடத்தில் அமர்ந்தவள் செல் போனில் இப்போது வந்திருக்கும் இடத்தில் கணவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை எல்லாம் பார்த்து பார்த்து வருந்திக்  கொண்டிருந்தாள்.

திடீரென வான மகளை சூழ்ந்த மேகங்கள் தன்னுள் நிரம்பிய நீரையை திவளையாக மண்மீது பொழிய,

மக்கள் அனைவரும் கூரையைத் தேடி அதன் கீழே சென்று நின்றுக் கொள்ள இவள் மட்டும் மழையை ரசித்து அதே இடத்தில் நின்று அருவியையும்  அதனோடு மழையையும் ரசிக்க ஆரம்பித்தாள்.

அவள் காதில் அன்று அவன் பாடிய பாடல் மீண்டும் ஒலித்தது. இதே போல அவர்கள் வந்த நேரமும் மழை வர, அவள் ஓட எத்தணிக்க, அவனோ அவள் கையை பற்றிழுத்து  தனக்கும் கம்பிக்கும் நடுவில் அவளை சிறை வைத்து, இரு கைகளை அணைப் போட்டவன்,

“இந்த மாதிரி அருவியையும் மழையையும் ஒரே நேரத்தில் பார்த்து ரசிக்க முடியுமா? கிடைக்கற வாய்ப்பை பயன்படுத்திக்கடி பொண்டாட்டி !” என்று நெற்றி முட்டியவன், அவளை திருப்பி அருவியைப் பார்க்க வைத்ததோடு மழையையும் ரசிக்க வைக்கவும் செய்தான்.

அவள் அருவி, மழையை மட்டும் ரசிக்காது, தன் தோளில் நாடியை பதித்து காதோறும் அவன் பாடும் பாட்டையும், அதன் வரிகளையும் அவன் குரலையும் சேர்த்து ரசித்தாள்.

மழை மேகமாய் உருமாறவா..

உன் வாசல் வந்து உயிர் தூவவா

மனம் வீசிடும் மலராகவா..

உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..

கண்ணாக கருத்தாக

உனை காப்பேன் உயிராக..

உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே

அட உன்னுள் உறைந்தேனே..

இன்று என்னுள் மாற்றம் தந்தாயே

உனை என்றும் மறவேனே..!கண்ணுக்குள்ளே உன்னைவைத்தேன் கண்ணம்மா -நான்கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மாகண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா !

இன்னும் அவன் பாடிய பாடலும் அவனது மூச்சுக் காற்றும்  அவள் காதினோரம் ஒலித்துக் கொண்டே இருந்தன. மழை நீருடன் அவள் கண்ணீரும் கலந்து முகத்தில் வடிந்தது. பார்க்கிறவர்களுக்கு தெரியாது அவளது அழுகையும் வலியும்.

தூரமாய் ஒரு கூடாரத்தில் நின்று கொண்டிருந்த துருவன், நனைந்து கொண்டிருக்கும் ஜெஸியை கண்டான்.

அருகே நின்ற அசோக்கிடம் “எல்லாரும் என்ஜாய் பண்ணும் போதும் தனியா உட்கார்ந்திருந்தா, எல்லாரும் மழைன்னு ஒதுங்கும் போது இப்போ வந்து நனைஞ்சுட்டு நிக்கறா ! என்ன மேக் இவ?”

“எங்க மேம் எல்லாரையும் போல இல்ல ! ஷி இஸ் ஆல்வெஸ் யூனிக் !”என்றான் அவன்.

“மக்கூம்… ஆமா ஏன் உங்க மேடம் எப்பவும் சோகமாவே இருக்காங்க.  லவ் பெயிலியரா?”என அவனிடம் பேச்சு கொடுத்து போட்டு வாங்க. அவனோ “அதை எங்க மேடம் கிட்டயே கேளு !”என்று நகன்று விட்டான். அவனோ  அவனை முறைத்து விட்டு” எல்லாரும் அவள போலவே இருக்கானுங்க…!”என முனங்கினான்.

மழை நின்று விட மக்கள் வெளியே வர ஆரம்பித்தனர். அடித்த மழையில் பால் போன்று கொட்டிய அருவி செந்நிறத்தில் தன்னை உருமாறிக் கொண்டு கொட்ட அதை அனைவரும் வியந்து பார்த்து மீண்டும் செல்போனில் புகைப்படத்தை எடுத்துக்  கொண்டனர்.

அவள் மட்டும் உணர்ச்சிகளின்றி சிலை போல அவ்விடத்திலே  நின்றாள். அவள் அருகே வந்த நின்ற துருவனோ அருவியையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். அவன் வந்தது கூட தெரியாது அவள் அருவியை தான் வெறித்தாள்.

‘ எப்படி பார்க்க வேண்டிய  அருவிய, எப்படி பார்க்கறா பாரு !’ என சலித்துக் கொண்டவன்,  பலத்த மூச்சை வெளியே விட்டு அவளிடம்  பேச்சு கொடுத்தான் “ஜெஸி, எப்ப பாரு தனியாவே வந்து நிக்கற,  சோகமாக எதையோ வெறிச்சி பார்த்துட்டே இருக்க, சில நேரம்  உன் கண்ணல இருந்து வழியற கண்ணீர துடைச்சிக்கற, என்ன தான் பிரச்சனை உனக்கு? லவ் பெயிலரா?”அவன் கேட்க, திரும்பி அவனை பார்த்து விட்டு”தெட்ஸ் நன் ஆப் யூர் பிஸ்னஸ் “என்றவளின்  முகத்தில் இஞ்சித்துக்கும் உணர்ச்சி என்பதே இல்லை… இயந்திரம் போல சொல்லி  விட்டுச் சென்றாள்.

“துருவா ! தேவை தானா உனக்கு ? இந்த அசிங்கம் உனக்கு தேவை தானா?!”என தனக்கு தானே கேட்டுக் கொள்ள, அவன் அருகே வந்த தன்யா

“என்ன தனியா பேசிட்டு இருக்கீங்க?”

“எல்லாம் என் நேரம் மா  என் நேரம்…”நெஞ்சில் அடித்துக் கொண்டு சொன்னவன், அவளிடமாவது ஜெஸியை பற்றி தெரிந்துக் கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் “சரி, நான் உன்னை ஒன்னு கேட்கட்டுமா?”என்றான்

“ம்ம்.. கேளுங்க !”

“உங்க மேம்’க்கு என்ன பிரச்சனை ஏன் பீல் பண்ணிட்டே இருக்காங்க?”

“இதை அவங்க கிட்டயே கேட்க வேண்டியது தான !”என்றாள். அவனோ உள்ளுக்குள் ‘பாபநாசம் படத்த பார்த்திருப்பானுங்க போல எல்லாரும் ஒரே பதில சொல்லுதுங்க…’ என எண்ணியவன் ” கேட்டேனே ! ஆனா நன்  ஆப் யூர் பிஸ்னஸ் சொல்லிட்டாங்க உங்க மேடம்…!”என்று சலித்துக் கொண்டான்.

“அப்போ அதே தான் நானும் சொல்றேன். மைண்ட் யூர் பிஸ்னஸ் “என்று அவளும் சென்று விட, ‘ நீ எவ்வளவு பட்டும் திருந்த மாட்ட துருவா ! அவ கதை உனக்கு எதுக்கு? இப்படி அசிங்கப்பட்டு அவ கதைய நீ தெரிஞ்சுக்கனுமா? த்து வெட்கமா இல்ல உனக்கு? அவ எப்படி போன நமக்கு என்ன? இன்ஃபாக்ட் அவ அழுதா நாம ஹாப்பியா  தான இருக்கணும் !  எதுக்கு பீல் பண்ற? என்ஜாய் பண்ணு மேன்”என்று தன்னை தானே திட்டியும்  பின் தேத்திக் கொண்டும் சென்றான்.

அன்றைய பொழுது போக இரவு கேசினோ செல்ல அனைவரும் ஆயத்தமானார்கள்.

அசோக் , ஶ்ரீ… உங்களுக்கு என்ன பேக்கேஜ் வேணுமோ  அதுல பே பண்ணி விளையாடுங்க , சாப்பிடுங்க… ஹாட் ட்ரிங்க்ஸ் கூட அளவு தான்…. கொடுக்கற கூப்பனுக்கு விளையாடுங்க… அதுக்கு மேலே வேணாம்… நிறைய ஏமாத்து வேலைகள் இருக்கும் ஜாக்கிரதை “என்றாள்.

 

“ஒகே மேடம்”என்று அவர்கள் சென்று விட்டனர்.”ரவி, நீயும் போ !”என்றாள்  ஜெஸி.

“நோ, மேம் எனக்கு இன்டர்ஸ்ட் இல்ல…! நான் ஃபுட் மட்டும் எடுத்துக்கிறேன் “என்றான் . தன்யாவும் அதே சொல்ல.. சிரித்துக் கொண்டே சரியென  விட்டாள்.

துருவனிடம் சென்றவள், “ரிஷி” என்றாள். அவனும் முன்ன வந்து “சொல்லுங்க சிஸ்டர் “என்றான்.

அவளோ துருவனை பார்க்க  அவனிடம் எகத்தாளம் இருந்தது.

“நான் சொன்னா உன் பிரண்டு கேட்க மாட்டான். அதான் உன் கிட்ட சொல்றேன்… இங்க விளையாடுறது தப்பு இல்ல. ஆனா  லிமிடெட் தான். ஆசைக்கு விளையாட்டிட்டு வர சொல்லு, அளவா விளையாட சொல்லு ! இல்லேனா பிரச்சனை தான். நிறைய ஏமாத்து  வேலையும் ஏமாத்துகாரர்களும் இருப்பாங்க… அவங்க கிட்ட ஏமாறாம கட்டுன பணத்துக்கு விளையாடிட்டு வர சொல்லு ! நாளைக்கு நைட் கிளம்பணும் அதை நியாபகத்துல வச்சிட்டு விளையாட சொல்லு. மோர் ஓவர், இங்க ஏதாவது  சேட்டை பண்ணா கன்ன நெத்தில வச்சிட்டு பேசிட்டு இருக்க மாட்டாங்க போட்டுடு தான் மறு வேலைய பார்ப்பாங்க பீ கேர் ஃபுல்லா இருங்க…”என்று எச்சரிக்கை விடுத்து செல்ல, அவனோ அதை அசட்டை செய்து விட்டு சென்றான்.

ஜெஸி கொடுத்த அத்தனை  எச்சரிக்கைகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் பிரச்சனையை விலை கொடுத்து வாங்க உள்ளே சென்று இருக்கிறான் துருவன் இந்த முறை என்னாகுமோ?

****

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்