
நாட்கள் மாதங்களாக சென்று இருந்தது. என்னதான் நவிலன் பேசமாட்டேன் என்று சொல்லியிருந்தாலும் ,அவன் மீது நம்பிக்கை இல்லாமலும், தனது தங்கையின் மீது நம்பிக்கை இல்லாமலும், வனிதாவிடம் இருந்து பறிக்கப்பட்ட போனை மீண்டும் அவளிடம் ஒப்படைக்கவில்லை…
அவளை காலேஜுக்கு மட்டும் அனுப்பிக்கொண்டு இருந்தான் சுந்தர்…. தங்கையின் எதிர்காலத்தை மட்டும் கணக்கில் கொண்டு…
கிட்ட திட்ட மூன்று மாதங்கள் ஓடி இருந்தது. எக்ஸாம் முடிந்து காலேஜுக்கும் சென்று இருந்தாள்.
வனிதாவை காலேஜுக்கு அனுப்புகிறார்கள் என்பதை மட்டும் பிரேம் மூலமாக தெரிந்து கொண்டான். மற்றபடி வனிதாவை பற்றி அவன் மேற்கொண்டு பிரேம் மூலமாக எதையும் தெரிந்து கொள்ள விரும்பவில்லை.
ஒரு முறை பிரேம் நவிலன் இடம் சண்டை இட்டிருந்தான். “இப்போ அவ அண்ணன் சொன்னதுக்காக அவளை விட்டு விலகப் போறியோ ?அப்போ அவ்ளோ தான் நீ அவளை லவ் பண்ணியா ?”என்று கோபத்துடனே கேட்டிருந்தான்..
” இப்பயும் லவ் பண்றேன் மச்சான்.ஆனா அதை உனக்கோ ,இல்ல அவ அண்ணனுக்கோ நான் நிரூபிக்க விரும்பல .வனிதா என்னை புரிஞ்சுக்குவா என்று நான் நம்புறேன். மேற்கொண்டு இத பத்தி நான் பேச விரும்பல.
உனக்கு என் மேல கோபம் இருக்கும் இல்லாம இருக்காது… எனக்கு தெரியும். சின்ன வயசுல இருந்து உன் கண்ணு முன்னாடி ஓடி ஆடி விளையாடின புள்ள. ஆனா,அவளை விடமாட்டேன் டா மச்சான்.. என்னோட உசுரு டா மச்சான் அவ.. என்னுடைய எதிர்காலமே அவ தான.. என்னால இப்போ உனக்கு இவ்ளோ மட்டும் தான் வாக்குறுதி தர முடியும்.. மேற்கொண்டு இத பத்தி இனிமே பேசாத” என்று விட்டு ஃபோன் வைத்து விட்டான்.
பிரேம் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, வனிதாவிடம் பேச வர..
“அண்ணா இதுக்கு மேல நீங்க இத பத்தி பேச வேண்டாம். .. அதே மாதிரி அவர தப்பா சொல்லாதீங்க. என்கிட்ட.. எதுவும் பேச வேணாம்.. “என்று அமைதியாக இருந்தாள்.
“அவன் உன்ன பத்தி யோசிக்கிற மாதிரியே தெரியலையே வனிதா ?”என்றான் பிரேம்..
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்க பிரண்ட் மேல உங்களுக்கு அவ்வளவு தான் நம்பிக்கையா ? “என்றான் சிறிது வருத்தத்துடன்.
“அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையான்னு கேக்கல.. உனக்கு கேட்கிறேன். …”
“எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கா இல்லையான்னு நான் ஏன் உங்களுக்கு புரிய வைக்கணும்… இல்ல உங்க கிட்ட சொல்லணும்…, இருந்தாலும் என்னை நீங்க தங்கச்சியா நினைச்சி தான் கேக்குறீங்க என்பதற்காக சொல்றேன்…
என்ன என் நவி அப்படியே விட்டுவிட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு… இதுக்கு மேல இதை பத்தி பேச வேணாம் .. அவர் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு ..நான் நம்பிக்கை வைக்காமல் அவர் மேல வேற யாரு நம்பிக்கை வைத்துவிட முடியாது…”என்று நகர்ந்து விட்டாள்.
குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்கு பிறகு , அந்த செமஸ்டர் முடிந்து காலேஜ் தொடங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகு நிவேதா காலேஜ் வர ஆரம்பித்து இருந்தாள்…
குழந்தைக்கு ஒரு அளவிற்கு மாட்டுப் பால் கொடுப்பதாக கவிதா சொல்லி இருக்க, மூன்று மாதங்களுக்கு பிறகு இன்று தான் காலேஜ் வந்திருந்தாள்.
வனிதா பஸ் ஏறியவள் ,முதலில் நிவேதாவை பார்க்கவில்லை. அப்போது, அவள் உள்ளே சென்ற பிறகு,சரண்யா ஏரியவுடன் நிவேதா.. சரண்யாவிற்கு கை காமிக்க. ..
அவளை பார்த்த சரண்யா குதூகலத்துடன்..”ஹே.. நிவே! நீ காலேஜ் வரேன்னு சொல்லவே இல்ல? சொல்லாம கொள்ளாம வந்திருக்க” என வேகமாகவே கத்தினாள்..
வனிதா சடார் என்று பிரேக் போட்டது போல் திரும்பிப் பார்த்தாள்.
“லூசு சொல்றேன்.. எதுக்கு டி இப்படி கத்துற, பஸ்ல இருக்குற எல்லாத்துக்கும் கேட்கிற மாதிரி ” என்று பூவாய் மலர்ந்து விட்டு சரண்யாவை தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டாள்.
வனிதா சரண்யாவை திரும்பி பார்த்தாள். சரண்யாவும் பார்த்த பிறகு சரண்யாவிடம் வனிதா எதுவும் சொல்ல வேண்டாம் என்பது போல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு தன் இடத்திற்கு சென்று உட்கார்ந்து கொண்டாள்.
இந்த மூன்று மாதத்தில் நவிலன் நிவேதாவிற்கு போன் செய்யவும் இல்லை, மெசேஜ் செய்யவும் இல்லை.
அதேபோல நிவேதா நவிலனுக்கு போன் செய்ய கூடிய சூழ்நிலையில் இல்லை. அவள் தொடர்ந்து அவனிடம் பேச முடியாது என்பதால் மெசேஜ் போன் எதுவும் செய்யவில்லை.
ஒரே ஒருமுறை ,”எக்ஸாம் எப்படி எழுதி இருக்க? “என்று மட்டும் மெசேஜ் செய்திருந்தாள்.
அவனும்,” ஒன்னும் பிரச்சனை இல்ல ஓகே ..”என்பது போல் மெசேஜ் செய்திருந்தான்.
அவ்வளவு தான் .. அவர்களது பேச்சுவார்த்தை இந்த மூன்று மாதத்தில், அதை தவிர வேறு எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
அன்று மாலை காலேஜ் முடிந்து பஸ் எடுப்பதற்கு நேரம் இருந்ததால், பஸ்ஸுக்கு கீழே நின்று தனது மற்ற தோழிகளிம் பேசிக்கொண்டு தனது குழந்தை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தாள் நிவேதா.
வனிதா அப்பொழுது தான் பஸ் ஏற வந்திருந்தாள்.சரண்யா வனிதா வீட்டில் அவர்கள் காதல் பற்றி தெரிந்த உண்மையை நிவேதாவிடம் சொல்லவில்லை.
வனிதா சொல்ல வேண்டாம் என்பது போல் தலையாட்டி இருந்ததால், சரி என்று அமைதியாக இருந்தாள்.
நவிலனுமே அதற்கு முன்பாகவே சரண்யா விடம் நீ போன் செஞ்சோ, மெசேஜ் செஞ்சோ இப்போதைக்கு நிவி கிட்ட இத பத்தி பேசக்கூடாது என்று சொல்லி இருந்தான் கட்டளையாக.
இப்பொழுது வரை நவிலன், வனிதா விஷயம் வனிதா வீட்டில் தெரியும் என்று நிவேதாவிற்க்கு தெரியாது.
“குழந்தை எப்படி இருக்கு கா.. அதுக்குள்ள காலேஜ் வந்துட்டீங்க?” என்று வனிதாவாக வந்து பேச செய்தாள்.
வனிதாவை பார்த்த நிவி, “பாப்பா நல்லா இருக்கா வனிதா.. ஒன்னும் பிரச்சனை இல்ல. ..”என்று புன்னகைத்தாள்..
“பாப்பாக்கு பால் கா..” என்றாள் கேள்வியாக..
“வரும் போது நான் ஃபீட் பண்ணிட்டு வந்துருவேன். .. திரும்ப வீட்டுக்கு போய் ஃபீட் பண்ணுவேன்… நடுவுல மாட்டு பால் கொடுபாங்க அம்மா. ”
“ஓ! உங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ..”என்றாள்.
“பால் தான் கட்டிக்கும்..பாத்ரூம்ல போயிட்டு பால் பீசி விட சொல்லி அம்மா சொல்லி இருக்காங்க. வேற ஒன்னும் பிரச்சனை இல்ல “என்றாள் .
“சரி கா..” என்று விட்டு வனிதா பஸ் ஏற சென்றாள்.
“ஒரு நிமிஷம் வனிதா!” என்று நிவி கூப்பிட ..
“ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று கேட்டாள் அவளது முகத்தை உற்று நோக்கியபடி.
” ஒன்னும் இல்ல கா .. டயர்ட்டா இருந்துச்சு வேற ஒன்னும் இல்ல.”
“இல்லையே.. கொஞ்சம் இளைச்சுட்ட மாதிரி இருக்கு..”
” அப்படி எல்லாம் இல்லைக்கா.. நீங்க ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிறதால உங்களுக்கு அப்படி தெரியுது போல” என்று வர வைக்கப்பட்ட சிரிப்புடன் சொல்லிவிட்டு மேலே ஏறி விட்டாள்.
அப்போது சுற்றி இருந்த நிவேதாவின் மற்ற தோழிகள் தான் .. ” என்ன டி அதிசயமா அவளா வந்து விசாரிக்கிறா? . உன்ன கண்டாலே அவளுக்கு ஆகாதே…?” என்று கேள்வி எழுப்பினர்..
“அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. அவ ஒன்னும் கெட்டவ இல்லையே . எந்த பொண்ணுக்கா இருந்தாலும், தான் லவ் பண்ற பையன் இன்னொரு பொண்ணு கிட்ட க்ளோசா பேசினா பிடிக்காது தானே..
அந்த போசசிவ்,கோவம் அவ்ளோதான் விடுங்க… அவளை பத்தி இனியும் நாம பேச வேண்டியது இல்ல.
இப்ப எனக்கு குழந்தை பிறந்து இருக்கிறதால வந்து விசாரிச்சிட்டு போற, அவ்வளவுதான். ”
“ஒருவேளை நவிலன் உன் கிட்ட விசாரிக்க சொல்லி இருப்பானோ?” என்று நிவியின் தோழி மாலா சொல்லி சிரித்தாள்…
மாலாவின் தலையில் கொட்டிய நிவேதா, “லூசு மாதிரி பேசாத… அவன் சொல்லிலாம் இவ கேக்க மாட்டா… அவன் சொல்லியும் இருக்க மாட்டான்…
இவளா வந்து கேக்குறா, மொத்தமா அவளோட கேரக்டரே தப்புன்னு சொல்லிடுவீங்க போல, லூசுங்களா ..”என்று சொல்லிக் கொண்டே பஸ் ஏறி இருந்தாள் நிவேதா.
” என்னமோ சொல்ற போ “என்று விட்டு நிவேதாவின் தோழிகளும் பஸ் ஏறி இருந்தார்கள்.
நிவேதா அன்று மாலை வீட்டிற்கு வந்து தனது மார்பகத்தை சுத்தம் செய்துவிட்டு கீழே கொஞ்சம் பால் பீசி விட்டு அதன் பிறகு தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது அவளது போன் அலறியது. குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு யார் ?என்று எடுத்துப் பார்த்தாள்.
புது நம்பரில் இருந்து போன் வந்திருந்தது.’யாராக இருக்கும் ?’ என்று யோசித்து விட்டு அந்த நம்பருக்கு போன் செய்தாள்.
“கா நான் வனிதா பேசுறேன்..” என்றாள் எடுத்த எடுப்பில்..
‘இவ ஏன் இப்போ போன் பண்றா?, அதுவும் வேறு ஏதோ ஒரு நம்பர்ல இருந்து’ ,என்று யோசித்து விட்டு ” சொல்லு வனிதா” என்றாள்..,
“அக்கா நாளைக்கு மதியமா உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணுமே ” ..
” முக்கியமான விஷயமா? “..
“ஆமா கா ..ஆனா ,இப்போ பேச முடியாது..”என்று தயங்கினாள்..
“சரி வனிதா எங்க வர்றது?” என்றாள் கேள்வியாக.
“இல்லக்கா.. நான் உங்க கிளாஸ் ரூம் கிட்ட வரேன்..
நீங்க வர வேண்டாம்”.
“வனிதா நீ ஃபர்ஸ்ட் பில்டிங் நான் தேர்ட் பில்டிங் உனக்கு ஓகேவா?” .
” இருக்கட்டும் கா”..
“அவ்வளவு முக்கியமான விஷயமா? என்ன ?”..
” இல்ல பேசணும் கா” .. என்றவள் ஒரு சில நொடி அமைதிக்கு பிறகு,
“சரி கா பாருங்க” என்று விட்டு வைத்து விட்டாள் வனிதா.
வனிதா காலை பஸ் ஏறும் பொழுது நிவேதா அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். … பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.. ஆனால், வனிதா அமைதியாக தான் இருந்தாள். பெரிதாக எதையும் கண்டுகொள்ளாமல்..
“ஏண்டி அவளையே பாத்துட்டு இருக்க ?”என்று சரண்யா கேட்டாள்.
“ஒன்னும் இல்ல சும்மாதான்” என்று விட்டு அமைதி ஆகிவிட்டாள்.
அன்று மதியம் சாப்பிடுவதற்கு முன்பாகவே மூச்சு வாங்க அவர்களது கிளாஸ் ரூம் முன்பு வந்து நின்றாள் வனிதா…
சரண்யா தான் முதலில் பார்த்தவள் “என்ன வனிதா இவ்வளவு தூரம்?” என்றாள்.
“இல்ல கா உங்க கூட உட்கார்ந்து சாப்பிடலாம் என்று தான்”..
நிவேதா அமைதியாக ,’ ஏதோ ஒன்று பெரிதாக இருக்கிறது ‘என்று யோசித்தாள் ..
இப்போதே பேச வேண்டாம் சாப்பிட்டு முடித்த பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அமைதியாக சாப்பிட்டாள் .
சாப்பிட்டு முடித்தவுடன் நிவேதாவே வனிதாவை தனியாக அழைத்துக் கொண்டு நகர்ந்து சென்றாள்…
வேகமாக அவளை கட்டி அணைத்தாள் வனிதா.
ஏற்கனவே பால் கட்டிக் கொண்டு வலியில் இருந்த நிவேதாவிற்கு ,இவள் வேகமாக கட்டி அணைக்க ..
வனிதா வேகமாக நெஞ்சோடு மார்பகத்தை அழுத்தி நின்றதால் அவள் மார்பருகே சுரந்த பாலின் வெம்மை, நிவேதாவின் ஆடையை நினைத்திருந்தது…
அதை உணர்ந்த வனிதா..
” சாரிக்கா ஏதோ ஒரு வேகத்துல” என்றாள்
தடுமாற்றத்துடன் சங்கடமாக.
“ஒன்னும் இல்ல இரு..நீ பதறாத” என்றவள் பாத்ரூம் சென்று பால் கட்டிக் கொண்டு வலி எடுக்க ஆரம்பித்ததால்.. பால் கீழே பீசி விட்டு வந்தாள்.

