Loading

“இப்போ உங்களுக்கு காசு பணம் தான் முக்கியமா ?”என்றாள் வனிதா சண்டை கோழியாக சீறிக்கொண்டு..

“இப்போ இந்த வயசுல உனக்கு அவன் முக்கியமா தான் இருக்கும்.. வேற எப்படி தோணும் ?” என்று வனிதாவின் அண்ணி சுகந்தி முந்திக்கொண்டு வந்து பேச….

“நானும் பாக்குறேன் அரை மணி நேரமா.. ரெண்டு பேரும்  சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க..” என்றவுடன்..

‘ தனது அண்ணி தான் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை நேரடியாக பார்த்திருக்கிறார்.
அதை வீட்டில் வந்து பத்த வைத்தும் இருக்கிறார் ‘ என்று தனது அண்ணியை தீயென முறைத்தாள் .

“அவளை ஏன்டி முறைக்கிற ? அவ இந்த வீட்டுக்கு வாழ வந்தவ .. இந்த வீட்டுக்கு நல்லது தான் நினைப்பா “என்றார் கோமதி.. .

“ஆமாம் … வாழ வந்தவங்க தான்.. யாரு இல்லைன்னு சொன்னா ?இப்போ நீ சொன்ன பாரு நவிலன்  ஓட  அண்ணிக்கும் ,உன் மருமகளுக்கும் ஒன்னும் பெருசா டிஃபரண்ட் இல்ல மா .. அதை மறந்துராத மா நீ…” என்றாள் ஏளனமாக ..

வனிதாவின் அண்ணன் அவளை இன்னொரு அடி போட்டவன்.

“என் பொண்டாட்டி பத்தி நீ பேசாத ..”என்றான்.

“ஓ! உன் பொண்டாட்டி பத்தி பேசும் போது உனக்கு கோவம் வருது  இல்லையா..?”

“ஆமாம், ஏன் வராம..  ? அவ நான்  தொட்டு தாலி கட்டுன பொண்டாட்டி! “என்றான் எரிமலையாக.

“உன்னோட  பொண்டாட்டி தான்.. நான் எப்போ இல்லன்னு சொன்னேன்..” என்றாள் வனிதா கூட கூட வாதாடியப்படியே

அப்போது..

” வயசுல அவளை விட  பெரியவ .. இந்த வீட்டுக்கு வாழ வந்தவ.., அவளோட அண்ணன் பொண்டாட்டி அண்ணி  என்ற எண்ணம் எதுவுமே இல்லாம என்னை என்னென்ன பேச்சு பேசுற பாருங்க ..” என்று வனிதாவின் அண்ணி சுகந்தி நீலி கண்ணீர் வடித்தாள் .

“போதும் அண்ணி!.. நீங்க என்ன பார்த்திருந்தீங்கன்னா கூட நீங்க நல்லவங்களா இருந்து இருந்தா.. அது என்ன விஷயம் ,விவரம் என்ன என்று நீங்க என்கிட்ட தனிப்பட்ட முறையில் கேட்டு இருக்கலாம். .. உங்களுக்கும் எனக்கும் ரொம்ப எல்லாம் வயசு வித்தியாசம் இல்லல ,அஞ்சு வருஷம் என்ன விட நீங்க பெரியவங்க.. அவ்வளவு தானே … ஆனா அதை என்கிட்ட நேரடியா கேட்காமல் ,மொத்த குடும்பத்துக்கிட்ட சொல்லி சண்டையை மூட்டிவிட்டுட்டு  நின்னு வேடிக்கை பாக்குறீங்க..

நீங்க ரொம்ப நல்லவங்க தான்.. விடுங்க.. !” என்றாள் சினம் குறையாமல் அதே நேரம் நக்கலாகவும்..

வனிதாவின் அண்ணி சுகந்தி அமைதியாக இருக்க….

” இவகிட்ட இருக்க போனை ஃபர்ஸ்ட் புடுங்கி  எறி மா ..அது  இருக்க போய்  தான் இப்படி ஆடிட்டு இருக்கா… ஸ்கூல் படிக்கும்போதே இதை கேட்டான்னு போன வாங்கி கொடுத்தா.. வேண்டாத வேலைய பாத்துட்டு இருக்கா..

இவ மேல இனிமே ஒரு கண்ணு வச்சுக்கோ கவனமா பாத்துக்கோ..  இல்லன்னு வை குடும்ப மானம்  கப்பல் ஏறிடும் .என்னால இதுக்கு மேல சொல்ல முடியாது. இல்லன்னா இவ சொல்ற மாதிரி நான் எனக்கு என்ன வந்துச்சுன்னு  என் பொண்டாட்டியை  கூப்பிட்டு தனி  குடித்தனம்  கூட போயிடுறேன். உனக்கு இவ வேணுமா ?இல்ல நான் வேணுமா? என்று நீங்க தான் முடிவு பண்ணனும்” என்று தனது அப்பா அம்மாவை பார்த்து சொல்லிவிட்டு நகர்ந்தான் வனிதாவின் அண்ணன் சுந்தர் .

சுகந்தி  ஏளனமாக வனிதாவை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.

அன்று முதல் வேலையாக  வனிதாவின் போன் அவளிடமிருந்து பறிக்கப்பட்டு  இருக்க.

அவளை வெளியில் விடுவதற்கும் அவள் அம்மா விருப்பப்படவில்லை. கூண்டில் அடைப்பட்ட கிளி போல் வாழ்ந்தாள்..

நடைபிணம் போல  நடமாட செய்தாள் . தன் வீட்டில் தங்களின் காதல் விவகாரம் தெரிந்த விஷயத்தை எப்படியாவது நவிலன் இடம் சொல்ல வேண்டும். ஆனால் ,அதை எப்படி சொல்வது என்று கூட அவளுக்கு புரியவில்லை. ஆனால், பிரேம்  வீட்டில் தெரிந்து விட்டது ..

வனிதாவின் அண்ணி சுகந்தியின் வாயல், “உங்களை நம்பி தானே.. அத்தை எங்க வீட்டு புள்ளையை உங்க வீட்டுக்கு போக வர அனுப்பி வச்சோம் .

இப்படி நம்ம பிரேம் தம்பியே அவனுடைய கூட்டாளிக்கு அவன் தங்கச்சி வனிதாவை தனியா பேச சொல்லி விட்டு வேடிக்கை பார்க்கலாமா ?”என்று கேட்டிருந்தாள். அவள் ஒன்றும் நல்லெண்ணத்தில் அண்ணியாக கேட்கவில்லை.. தனது நாத்தனார் வனிதாவின் காதல் விவகாரத்தை அடுத்தவர்களிடம் பற்ற வைக்க வேண்டும் என்று கெடுதல் எண்ணமும் ,கேடுகெட்ட புத்தியும் இருக்க  ..பிரேம் அம்மாவிடம் அவ்வாறு கேட்டிருந்தாள்.

சுகந்தி சென்ற பிறகு ,பிரேமின் அம்மா பிரேமிடம்,” என்னடா இப்படி பண்ணி வச்சிருக்க? . வனிதாவும் நவிலனமும் காதலிக்கிறாங்களாம். நீ என்கிட்ட சொல்லவே இல்ல ?” என்று கேட்டார் ..

தன்  அம்மாவிடம் என்ன விவரம் என்று முழுமையாக கேட்டுக் கொண்ட பிரேம், அதை தனது நண்பன் நவிலன் இடம் சொல்லி இருந்தான்.

 

“அவங்க வீட்ட பத்தி உனக்கு சொல்லவா வேண்டும் ..அவங்க மக்க மனுசால பார்க்கிறவங்க கிடையாது டா. காசு பணத்தை பெருசா மதிக்கிறவங்க..இவங்க காசு பணம் படச்சவங்க டா.. ஆனா உனக்கு நம்ம நவிலன் வீட்டு நிலைமையை உனக்கு சொல்லியா தெரியணும் .அவன நம்பி தான டா அவ அம்மா இருக்கா .நீங்க வயசுக் கோளறுல லவ் கிவ்னு சொல்லி சுத்திட்டு போயிடுவீங்க..

கொஞ்ச நாள் ஆனா , அந்த புள்ளைய கூட மறந்துட்டு உங்க வேலைய பாத்துட்டு நீங்க போயிடுவீங்க ..ஆன,   நாங்க தான்டா வயித்துல நெருப்பை கட்டிக்கிட்டு  நிக்கணும் .அந்த பிள்ளைக்குனு ஒரு வாழ்க்கை இருக்குடா ..அந்த புள்ளைய வாழ விடுங்க டா.. உன்ன வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணான்னு கூப்பிடுற புள்ள டா.. நல்ல புள்ளடா அந்த வீட்டிலேயே அது ..”என்று விட்டு பிரேம் அம்மா நகர்ந்து விட்டார்.

இதை எப்படியாவது தனது நண்பனிடம் சொல்ல வேண்டும் என்று எண்ணியவன் அன்று இரவே தனது நண்பனை பார்த்து விஷியத்தை சொல்லி இருந்தான் .

” டேய் மச்சான் உங்க விஷயம் வனிதாவோட வீட்டுக்கு தெரிஞ்சுருச்சு போல.. அந்த புள்ளையை வீட்டுக்குள்ளவே அடச்சி வச்சிருக்காங்க .போனும் புடுங்கிட்டு விட்டதா, அவங்க அண்ணி வந்து எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு இருந்துச்சு,
எங்க அம்மா என்கிட்ட சொல்லுச்சு “என்று சொல்லியிருந்தான்.

நவிலன் என்ன செய்வது என்று தெரியாமல் யோசனையில் இருந்தான் .அப்பொழுது நவிலனை பார்க்க வனிதாவின் அண்ணன் சுந்தர் வந்திருந்தான் . வந்தவன் வேகமாக கொத்தக நவிலனின் சட்டையை பிடிக்க.

“அண்ணா, என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?”என்று பிரேம் தான் சுந்தரை விளக்கி விட்டான்.

சுந்தர் தான்  பிரேமை முறைத்தவன். “நீதாண்டா இவ்வளவுக்கும் முக்கிய காரணம்.. அவன் என் தங்கச்சி பின்னாடி சுத்தும்போது என்கிட்ட வந்து சொல்லி இருக்கணுமா இல்லையா ?உன்னை என் தம்பியா நினைச்சு தானே உங்க வீட்டுக்கு வனிதா வரப்போக விட்டது.

ஆனால் ,நான் உன்னை தம்பியா நினைச்சதுக்கு நல்ல படம் கத்து கொடுத்துட்ட டா ..”என்றான் வலியுடன்…

தனது நண்பனின் சட்டையில் இருந்த கையை எடுத்து விட்டவன்.
“அண்ணா இப்பவும் நான் எந்த தப்பும் பண்ணல அண்ணா.!  பாப்பாவுக்கு இவனை புடிச்சிருந்துச்சு ..இவனுக்கும் அவள புடிச்சிருந்துச்சு காதலிக்கிறது அவ்வளவு தப்பா அண்ணா?  எங்க வாயச எல்லாம் கடந்து தானே நீயும் வந்த.”

“காதலிக்கிறது தப்பா சரியா அப்படின்னு பேச நான்  இங்க வரல.. தப்பா? சரியா? எனக்கு அது தேவையும் இல்லை .இந்த வயசுல வனிதாவுக்கு இது தேவையா ?படிக்கிறத விட்டுட்டு அவ டாக்டர் படிக்கணும்னு நினைச்சா அது உனக்கே தெரியும் தானே
அவளோட  கனவே அதுதான் .

அப்படி இருந்தும் டாக்டர் படிக்காமல்,இப்போ  டிகிரி படிக்கிறதுக்கு இவன் தானடா காரணம் ,இவனோட காதலும் சேர்ந்து தான காரணம்
… இல்லை என்று சொல்லிடுவியா ? இப்ப தான சொன்ன உன் நண்பனால அவ வாழ்க்கை அழிஞ்சிடாதுன்னு இதுவே பெரிய அழிவு தான டா..

இப்போ இந்த வயசுல இந்த காதல் கன்றாவி மட்டும் தான் முன்னாடி வந்து நிற்கும்… அது மட்டும் தான் பெருசா தெரியும்.  ..  இப்ப லவ் பண்றேன்னு சுத்திட்டு எல்லாத்தையும் மொத்தமா முடிச்சுட்டு அதுக்கப்புறம் உன் நண்பன் வேற ஒருத்தியை கட்டிக்கிட்டு போயிடுவான் ..என் தங்கச்சி  நிலமை  “என்று விட்டு அமைதியாக இருக்க..

ஆரம்பத்தில் அவன் பேசும் போது சிறிது குற்ற உணர்வுடன் இருந்த நவிலன்.. அவன் இறுதி வாக்கியத்தில் கொந்தளித்து,
“போதும் இதுக்கு மேல பேச வேணாம்..  நான் உங்க தங்கச்சி பின்னாடி வரமாட்டேன் … அதுக்கு மட்டும் உத்தரவாதம் தரேன்.. அதே மாதிரி அவளை வீட்டுக்குள்ளே அடைச்சி வச்சிருக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

உங்க தங்கச்சி கிட்ட நான் போன்லயும் பேச மாட்டேன். இதுக்கு மேல உங்களுக்கு இத எப்படி நான் நிரூபிக்கிறது என்று எனக்கு தெரியல… நீங்க அவகிட்ட மறுபடியும் போன் குடுக்குறதும் கொடுக்காததும் உங்க விருப்பம்! ஆனால், படிக்க அனுப்புங்க…”  என்றான்.

 

நவிலன் தனது நண்பனை பார்த்துவிட்டு,” நான் இன்னைக்கு நைட் கிளம்பிடுவேன் ..அதிகமா நான் இனி இங்க வரவும் மாட்டேன் .எனக்கு இதான் லாஸ்ட் வருஷம். நான் மேற்கொண்டு வேலைக்கு போறதா தான் இருக்கேன் .ஏற்கனவே வேலைக்கு தான் போயிட்டு இருக்கேன். என்னோட குடும்ப சூழ்நிலை காரணமா” என்றான் எங்கோ பார்த்தபடி,

“உன் குடும்ப சூழ்நிலை தெரிஞ்சும் .. நீ என் தங்கச்சி பின்னாடி சுத்தி இருக்கியே. உன்னை என்னடா பண்ணலாம் … “என்று எகிறினான் சுந்தர்..

 

 

“புரியுது!..  என் குடும்ப சூழ்நிலை தெரிஞ்சும், உங்க தங்கச்சி மேல விருப்பப்பட்டது என் தப்புதான்.. ஒத்துக்கிறேன்! . இனி உங்க தங்கச்சியோட லைஃப்ல நான் குறுக்க வரமாட்டேன். ஆனா, என்ன வச்சி நீங்க உங்க தங்கச்சியை டாமினேட் பண்ண மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.

 

நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கு புரியும் … இதுக்கு மேல உங்க தங்கச்சி லைஃப் ல நான் குறுக்க வர மாட்டேன் . என்ன நீங்க நம்பலாம் ..  என்ன நம்பி உங்க தங்கச்சியை நீங்க  உங்க தங்கச்சியா மட்டும் பார்ப்பீங்கன்னு நான் நம்பி காலேஜுக்கு போறேன் .. என்ன காரணமா வச்சு அவளை எந்த வகையிலும் துன்புறுத்த மாட்டீங்க என்று நம்புறேன்..” என்றவன். அன்று இரவே அமைதியாக ஊருக்கு கிளம்பி சென்று விட்டான்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்