Loading

வேலை முடித்துவிட்டு அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்த ருத்ரன் தனது மாமன் மகளும், அம்மாவும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே வந்தவன் சிரித்துவிட்டு,

“என்ன காயு மா, அத்தையும், அண்ணன் மகளும் கொஞ்சிக்கிற மாறித் தெரியுது” என்று கேட்க,

“ஏன் சொல்ல மாட்டீங்க? நான் ஊர்ல போய் வம்பு இழுத்துட்டு வந்து அவங்க அண்ணன் அண்ணி பேரைக் கெடுக்கிறேனாம்… அவங்க மருமகள் மட்டும் ரொம்ப நல்வளாம், நான் ஊருக்குள்ள வம்புச் சண்டையை இழுத்துட்டு வரவளாம்” என்று சொல்லிச் சிரிக்க,

“உங்க பஞ்சாயத்தை என்னால  தீர்த்து வைக்க முடியாது. என்ன ஆள விடு…” என்று ரூமுக்குள் சென்று தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தான்.

காயு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு இருக்க,

“என்னாச்சு காயு?” என்று ருத்ரன் கேட்டான்.

“நேற்று நாம் பார்த்தவன்…” என்று வரும் வழியில் நடந்த அனைத்தையும் அவள் சொன்னவுடன்,

“சரி விடு காயு, சாதாரணமா பேசுனதுக்கு நீ ரொம்ப சீரியஸா எடுத்துக்குற” என்று சொல்ல,

அவனது தோளில் தட்டியவள், “எதுக்கு நான் சீரியஸா எடுத்துக்கணும்? இந்த காயுவுக்கு அந்தப் பழக்கமே இல்லை மாமா. நீ ஏன் இவ்வளவு சீரியஸா பேசுற” என்று அவன் தோளில் தட்டிச் சிரித்துவிட்டு நகர,

“அக்காவுக்கும், தங்கச்சிக்கும் வாய்க் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி” என்றான்.

“என்ன பண்ண? ஒரே வயிற்றில் இல்ல பிறந்திருக்கோம், அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லிச் சிரித்துவிட்டு வெளியில் செல்ல,

அப்போது தான் பள்ளி முடிந்து வந்த தமிழ், தங்கை தன் வீட்டில் இருப்பதைப் பார்த்துவிட்டு, “என்னடி, இங்க பண்ணிட்டு இருக்க?” என்று கேட்டாள்.

“நான் என் அத்தை மகன்கிட்டப் பேசிட்டு இருக்கேன். உனக்கு என்ன வந்தது?” என்றாள்.

“அப்போது பாக்கியம், “ஏன், அவன் உன் அக்கா புருஷன் இல்லையோ?” என்றார்.

“உன் மருமகளுக்குப் புருஷன் ஆகுறதுக்கு முன்னாடியே எனக்கு அத்தை மகன். அதை மறந்துடாதீங்க” என்று ருத்ரனைப் பார்த்து ஒற்றைக் கண்ணை அடித்து விட்டுச் சிட்டாகப் பறந்து விட்டாள்”.

“ஏய் வாயாடி” என்று மாமியார், மருமகள் இருவரும் கத்துவதைக் கூடக் கொஞ்சமும் சட்டை செய்யாமல் தனது வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்”.

“கேடி” என்று ருத்ரன் சொல்லிவிட்டு வெளியில் செல்ல,

ருத்ரனை முறைத்துக் கொண்டு, “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்றாள் தமிழ்.

“உன் தங்கச்சி பேசுறதுக்கு நான் பொறுப்பாக முடியாது.” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக முனகி விட்டு வெளியே சென்று விட்டான்.

தமிழ் தனாவைப் பார்க்கத் தனது தாய் தங்கள் அருகில் இல்லை என்ற உடன் மாலை நடந்ததைச் சொல்ல,

“சரி விடு தனா, பெருசா ஒன்னும் இல்லல” என்றாள்.

“பிரச்சனையா இருந்தா நான் சொல்லி இருக்க மாட்டேனா? ஒன்னும் பெருசா இல்ல அண்ணி. அவரு அதைச் சாதாரணமா எடுத்துகிட்ட மாறி தான் இருக்கு.” என்று விட்டு அவளுடைய ரூமுக்குச் சென்று விட்டாள் தனா.

அகிலா இரண்டு நாள்கள் இங்குத் தங்கி விட்டு தனது கணவன் வந்தவுடன் அவளுடைய வீட்டிற்குச் சென்று விட்டாள். இங்கிருந்த இரண்டு நாள்களிலும் தனது தாய் தந்தையிடம் தன்னால் முடிந்த அளவு பேச,

இருவரும் அவளுக்குப் பிடி கொடுத்து எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார்கள்.

தமிழ் அவ்வளவு சொல்லியும் தன்னால் அமைதியாக இருக்க முடியாமல், தனது அண்ணனுக்காகப் பேசச் செய்தாள்.

ஒரு வாரம் சென்று இருந்தது.

இந்த ஒரு வாரத்தில் காயு அந்த கெமிஸ்ட்ரி லேப் அசிஸ்டன்ட் அதிரனைப் பார்க்கச் செய்தாள்.

தினமும் அதிரன் காலேஜில் காயத்ரியைப் பார்த்தாலும் கண்டும் காணாமல் நகர்ந்து விடுவான்.

காயத்ரியுமே முதல் நாள் அவனைப் பார்த்துப் பேசச் சென்றாள்.

அவன் கண்டும் காணாமல் சென்ற பிறகு, ‘நமக்கு என்ன வந்துச்சு?’ என்று எண்ணி விட்டு ‘அவன் எப்படியோ செல்கிறான்’ என்று நினைத்தாள்.

காலேஜில் மட்டும்தான் இருவரும் கண்டு காணாமல் இருந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

காலேஜ் முடிந்து இருவரும் செல்வது ஒரே பாதையாக இருக்கும்.

சிறு தூரம் சென்ற பிறகுதான் இருவரும் வேறு பாதையில் தங்களது வீடு நோக்கிச் செல்ல வேண்டியது வரும்.

போகும் வழியில் சாதாரணமாகப் பார்க்க நேரிட்டால் ஏதாவது வம்பு இழுத்துக் கொண்டே இருந்தார்கள் இருவரும்.

தனா தான் இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழித்தாள்.

‘காலேஜில் ஏதோ நல்ல பிள்ளை போல் நடந்து கொண்டு இருக்கிறார்கள்’ என்று எண்ணி விட்டு தனது தோழியிடமும் புலம்ப செய்தாள்.

“எதுக்கு டி நீ அவர்கிட்ட வம்புக்குப் போற?” என்று கேட்க,

“அவர் கிட்ட வம்பு இழுக்க நானா தேடிப் போறேன்? அவரா வம்பு இழுக்க வரும்போது அமைதியா போகச் சொல்றியா?” என்று கேட்டாள்.

“அவர் தான் பேசுகிறார் என்றாள் நீயுமாடி?” அவர் நம்ப புரொபசர்” என்று தனா சொல்ல,

“காலேஜ்ல தான் ஸ்டூடண்ட், புரொபசர் எல்லாம். வெளிய வந்துட்டா சக மனுஷங்க தான். அதான் நானும் பதிலுக்குப் பேசுறேன். இதுல என்ன இருக்கு?” என்று தோழியிடம் சீறி விட்டு,

சிரித்த முகமாக, “விடு செல்லம், இதெல்லாம் வாழ்க்கையில சாதாரணம்” என்றாள்.

“நீ எந்தப் பிரச்சனையும் பண்ணாம இருந்தா சரி தாயி, என்ன ஆள விடு” என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.

ஒரு சில நேரங்களில் “எது வந்தாலும் உன் பிரண்டு பேஸ் பண்ணிட்டு வந்துடுவேன் தங்கம்” என்று அவள் தாடையில் தட்டி விட்டுச் சென்று விடுவாள்.

நாள்கள் அழகாகச் சென்று இருந்தது.

அன்று காலையில் தமிழ் ஸ்கூலுக்குக் கிளம்பிக் கொண்டு இருக்க,

அப்போதுதான் ரூமுக்குள் வந்த ருத்ரன், “தமிழ், சாயங்காலம் உனக்கு ஏதாச்சும் வேலை இருக்கா?” என்று கேட்டான்.

“பெருசா இல்ல மாமா” என்றாள்.

“அப்போ கொஞ்சம் வெளியே போயிட்டு வரலாமா?” என்று கேட்டான்.

“லைட்டா வேலை இருக்கு, வெளியே போற அளவுக்கு டைம் இல்ல” என்றாள்.

அவளை முறைத்துப் பார்த்துவிட்டு, “இப்போ தான் வேலை இல்லைன்னு சொன்ன?” என்றான்.

“பெருசா வேலை இல்லன்னு நான் சொன்னேன். வேலையே இல்லன்னு சொல்லல. வெளியே போற அளவுக்கு எனக்கு டைம் இல்ல” என்று விட்டு தனது ஹேண்ட் பேகை எடுத்து மாட்டிக் கொண்டு ஸ்கூலுக்குக் கிளம்பி விட்டாள்.

அவளையே முறைத்துக் கொண்டு நின்றான் ருத்ரன்.

மாலை தமிழ் வீட்டிற்கு வரும் பொழுது தன் கண்களால் வீட்டை ஒரு அலசு அலசி விட்டு வந்தவள் ஹாலிலே ஹேண்ட் பேகை வைத்துவிட்டுப் பின் கட்டிற்குச் சென்று முகம் கைகள் கழுவிக்கொண்டு வருபவள்,

இன்று நேராகத் தன்னுடைய ரூமுக்குச் செல்ல,

ருத்ரன் இன்னும் வராமல் இருக்க, ‘மாமா இன்னும் வரலையா?’ என்று மனதிற்குள் எண்ணி விட்டுத் தனது ஹேண்ட் பேகைக் கட்டிலில் தூக்கிப் போட்டு விட்டு, முகம் கை கால் கழுவிக்கொண்டு தனது முந்தானையை இடுப்பில் சொருகிக்கொண்டு, துண்டால் முகத்தைத் துடைத்துக் கொண்டு தனது ரூமில் இருந்து வெளியில் வர,

எதிரில் வந்த ருத்ரன் மீது மோதி நின்றாள்.

“ஏன் மாமா, நான் தான் முகத்தைத் துடைச்சிட்டு வரேன். நீங்க பாத்துட்டு தானே இருக்கீங்க, பார்த்து வர மாட்டீங்களா?” என்று கேட்டாள்.

“சரி ஏதோ ஞாபகத்துல வந்துட்டேன், சாரி” என்று விட்டு ரூமுக்குள் வந்து விட்டான்.

“சரி காலையில ஏதோ கேட்டீங்களே?” என்று கேட்டாள் அவன் பின்னாடியே வந்து.

“அதான் மேடமுக்கு வேலை இருக்கே. நீங்க உங்க வேலையப் பாருங்க” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் அப்போது தான் வேலையில் இருந்து வந்ததால்,

பாத்ரூம் சென்று விட்டு ரூமில் இருந்து வெளியில் வந்து விட்டான்.

தமிழ் தான் அவனைத் திட்டிக் கொண்டே சமையல் அறையில் டீ போட்டுக் கொண்டு இருந்தாள்.

ஹாலில் உட்கார்ந்து இருக்கும் அவனிடம் டீ கொடுக்க, எதுவும் பேசாமல் வாங்கிக் குடித்துவிட்டுத் தனது ஃபோனில் எதோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவனைப் பத்து நிமிடம் அமைதியாகப் பார்த்தவள் “மாமா…” என்று அழைக்க,

“என்னடி?” என்றான்.

“இல்ல அது, நீங்க காலைல…” என்று வார்த்தையை ஒவ்வொன்றாகக் கோர்த்துச் சொல்ல,

“உனக்கு என்ன வேணும்? அதச் சொல்லு, எனக்கு வேலை இருக்கு” என்றான்.

“இங்க நாங்க மட்டும் வேலை இல்லாம உட்கார்ந்து இருக்கோம் பாரு” என்றாள் அவனுக்குக் கேட்கும்படியாக.

“நான் எப்போ சொன்னேன், உனக்கு வேலை இல்லனு. நீ போய் உன் வேலையைப் பாரு” என்று எழுந்து வெளியே சென்று விட்டான்.

‘இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. வர வர ரொம்ப தான் கோபம் வருது. ஓவரா தான் பண்ண வேண்டியது. காலையில கேக்குறதையும் கேட்டுட்டு இப்போ திமிரப் பாத்தியா?’ என்றாள்.

அவளது மனசாட்சியே அவளைக் கேள்வி கேட்டது. காலையில அவர் கேட்கும் போது நீ என்ன பதில் சொன்ன, யோசி என்று.

தன்னையே திட்டிக் கொண்டு, தன் தலையில் தட்டிக்கொண்டு சமையலில் இறங்கி இருந்தாள்.

இரவு 8 மணி போல் செல்வம், தனம், காயத்ரி மூவரும் ருத்ரன் வீட்டுக்கு வந்திருக்க, மூவரையும் வரவேற்ற தமிழ்,

“என்னப்பா, இந்த நேரத்தில் வந்து இருக்கீங்க? அதுவும் மூணு பேரும். ஏதாச்சும் முக்கியமான விஷயமா?” என்றாள்.

அவளுடைய அம்மா தனம், “ஆமா தமிழு, நாளைக்கு என்ன நாள் ஞாபகம் இருக்கா?” என்று கேட்க,

ஒரு சில நொடி அமைதிக்குப் பிறகு “தெரியும் மா. அதுக்கு என்ன, இப்ப இந்த நேரத்தில் வந்திருக்க?” என்றாள்.

“இல்லடி நாளைக்கு ரெண்டு பேரும் வேலைக்கு லீவ் போட்டீங்கன்னா, குடும்பத்தோட குலதெய்வக் கோவிலுக்குப் போயிட்டு வந்துடலாம். இன்னும் நாம கல்யாணம் முடிஞ்சதுல இருந்து கோவிலுக்கும் போகல இல்லையா? கல்யாணமே அவசரமா நடந்துச்சு, அதுக்கு அப்புறம் எதையும் நம்ம முறையா பண்ணல இல்ல” என்றார்.

“ஆமாம், இங்க எல்லாம் முறையா நடக்குது பாரு” என்று தமிழ் சொல்ல ருத்ரனுக்குச் சுருக்கென்று தைக்க,

பேசாமல் எழுந்து ரூமுக்குச் சென்று விட்டான்.

தனம் தான் தன் மகளை முறைத்துக் கொண்டு நின்றார்.

“தமிழ் வர வர உனக்கு வாய் கூடி போச்சு. என்ன பேசுறோம் என்று தெரியாம பேசிட்டு இருக்க. நாம பேசுறது எதிரில் இருக்கவங்களைக் காயப்படுத்தாத அளவுக்கு இருக்கணும்.

நாங்க உன்ன அப்படி வளர்க்கவும் இல்ல, உன்கிட்ட இருந்து இப்படி ஒரு வார்த்தையை எதிர்பார்க்கவும் இல்லை” என்றார்.

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 15

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
13
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. Innuma ivanga pangayathu mudiyala…. Tamil romba vaai pesura 🥲 Ruthran ivlo yerangi varan la…. Story is going good