
கண்ணீல் கண்ணீருடன் கூடிய வலியை சுமந்து மௌனமாக அமர்ந்திருந்தாள் ஜெஸி. ஆனால் அவளுக்குள் பெரும் புயல் ஒன்று வீசியடித்து கொண்டிருந்தது.
“நான் சொன்னதுக்கு பதில் சொல்லு ஜெஸி. ஏதாவது பேசு. மௌனம் சாதிக்காத. ஐ நீட் ஆன்ஸர்”என்றான்.
“எனக்கும் ஆன்ஸர் தான் தெரியணும் எட்வார்டு. என் புருஷன கொன்னது யாருனு எனக்கு தெரியணும்…”என்று இதழ் மலர்ந்து பேசினாள்.
“ஓ காட் ! அது ஆக்சிட்டேன்ட் ஜெஸி. இன்னும் அதை கொலை நினைச்சிட்டு இருக்கீயா???”
“ஆக்சிடென்ட்டா காமிச்ச திட்ட மிட்ட கொலை எட்வார்டு. அது உனக்கு புரியல”
நெற்றியை தேய்த்து கொண்டவன்”எதுக்கு ஆரோனை திட்ட மிட்டு கொலை செய்யணும்??? அவனை கொல்ல அவன் என்ன பண்ணான்??”
“இந்த திட்டம் ஆரோனை கொல்ல இல்ல. அந்த அரசியல்வாதிய கொல்ல. அதுல ஆரோனும் மாட்டி இருக்கணும்ன்றது என் கணிப்பு??? ஆனா திட்டமிட்டு பண்ண கொலை தான் இது. விபத்து இல்ல “என்று அடிச்சி சொன்னாள்.
“சரி எத வச்சி இது திட்டமிட்டு செய்த கொலைனு சொல்ற?? அதுவும் வீரமதி தான் செஞ்சாங்க எப்படி சொல்ல வர்ற? புருசனையே திட்டமிட்ட கொலை செய்வாங்களா? அதுவும் நாட்டில முக்கியமா பிரமூகர இப்படி திட்டம் போட்டு கொல்ல முடியுமா???”
“கொல்ல முடியும் சொல்றது பல சாட்சிகள் நம்மூர்லே இருக்கு எட்வார்டு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ்ல இருந்து ராஜிவ் காந்தி வரைக்கும் திட்டமிட்டு செய்த கொலை தான் அவங்களுக்கு இயற்கையான சாவா கிடைச்சது. புருஷன மனைவி கொல்றது இந்தக் காலத்துல ரொம்ப சகஜம் எட்வார்டு புருஷன கடவுளா பார்க்கற பெண்கள் அவர்களுக்கு எமனாக மாறவும் தயங்க மாட்டாங்க… நீ இன்னும் ஆதீ காலத்துலே இருக்காத “என்றாள்.
அவளை முறைத்தவன்”எனக்கு தெரிஞ்சு வீரமதி மேம் அப்படி பண்ணிருக்க மாட்டாங்க தோணுது ஜெஸி”
“என்னை போல ஒவ்வொரு நாளும் கணவனை நினைச்சி பீல் பண்ணிட்டு இருக்கிறதை பார்க்கிறியோ !”என்றதும் வாயை மூடிக் கொண்டான்.
“சரி ஜெஸி. உன் பாயிண்ட் ஆப் வியுக்கே வருவோம் எதை வச்சி நீ வீரமதி தான் கொன்னாங்க அடிச்சி சொல்ற? அதுக்கு ஆதாரம் இருக்கா???”ரெக்ஸ்லின் கேட்க,
அமைதியாக அவர்கள் இருவரின் முகம் பார்த்தவள், வேகமாக தன் செல்லை எடுத்து அதில் அவன் கடைசியாக பேசி அனுப்பி வைத்த வாய்ஸ் மெசேஜை அவர்களுக்கு கேட்கும் படி ஓட விட்டாள்.
அதை முழுதாக கேட்டு இருவரும் அதிர்ந்தனர்.”இதை ஏன் நீ முன்னாடியே சொல்லல ஜெஸி?”
“நானே ஒரு மாசம் முன்னாடி தான் கேட்டேன் எட்வார்டு. அதுக்கு அப்றம் அவங்க வீட்டுக்குள் நுழைய அந்த திட்டத்தை போட்டேன்… இதுல ஆரோன் நார்மலா பேசல எட்வார்டு. அவன் பேச்சுல நடுக்கம் இருந்தது நீ நோட் பண்ணீயா?
எனக்கு என்னவோ அவங்க பிளானை ஆரோன் தெரிஞ்சிகிட்டதுனால அவனையும் சேர்த்து கொலை செய்திருப்பாங்கனு தோணுது.
இல்ல ஆரோனும் அவங்களுக்கு ஏதாவது ஒரு விஷயத்துல எதிரியா மாறி இருக்கலாம். அதுனால் அவனை கொல பண்ணிருக்கலாம். இல்ல வீரமதி மேம சந்தேகப்பட்டு கூட ஆரோன் அப்படி சொல்லிருக்கலாம். ஆனா அது எப்படியோ என் மனசுக்கு இது விபத்துனு நம்புற வரைக்கும் நான் உண்மைய தெரிஞ்சுக்க போராட்டிட்டு தான் இருப்பேன் எட்வார்டு”என்று தெளிவாவும் தீர்க்கமாகவும் சொன்னாள்.
அவள் சொல்வதும் சரி என்று தான் அவனுக்கு பட்டது. விபத்து என்று ஒரேடியாக சொல்லி விடவும் முடியவில்லை. ஆரோனின் கடைசி நிமிட பேச்சு அவனை உள்ளுக்குள் அசைத்தது. நண்பனின் கடைசி நிமிடம் உடனிருந்து காக்க நமக்கு துப்பில்லாமல் போய் விட்டதே என்ற குற்றவுணர்வு அவனுக்குள் இருக்கிறது.
‘இது மட்டும் கொலையாக இருக்கட்டும். நண்பனை கொன்னவர்களை கொல்லாமல் விடக் கூடாது’என்று உள்ளுக்குள் சபதம் கொண்டான்.
“ஜெஸி ! இது கொலையா ? விபத்தா? கண்டு பிடிப்போம். விபத்துனா ஆரோன் இல்லன்றத ஜீரணிச்சி தான் ஆகணும். . இல்ல இது கொலைனு முடிவாக தெரிய வந்ததுனா, ஆரோனோட சாவுக்கு அவங்க பதில் சொல்லித்தான் ஆகணும், நம்ம கொடுக்கற தண்டனை ஏத்துகிட்டு தான் ஆகணும் ஜெஸி…”என்றான்.
“எட்வார்டு ! ஆரோன் சொன்ன இன்னொருத்தன் யாருனு உனக்கு தெரியுமா?? இதுக்கு முன்ன வீரமதி மேம் வீட்டுக்கு வந்திருக்கானா?? உனக்கு அவனை தெரியுமா??”
“இல்ல ஜெஸி ! அவனை எனக்கு யார்னு தெரியாது. அவன் வந்திருக்கானா எனக்கு தெரியல. இந்த பெயர வீரமதி மேம் வீட்டுக்குள் நான் கேட்டதும் இல்ல அவங்க சந்திக்கற ஆட்கள்ல எனக்கு தெரிஞ்ச வரைக்கும் கேள்வி படல !” தனக்கு தெரிந்ததை சொன்னான்.
“ம்ம்ம்… எனக்கு வீரமதி மேம் பத்தி ஃபுல் டிடெய்லஸ் வேணும் எட்வார்டு. வீரமதி ஃபேமிலி , பிரண்ட்ஸ் சர்கில்ல இந்த பெயருடைய நபர் இருக்காங்களா நாம தேடனும் எட்வார்டு. மொதல்ல அந்த மேம் பத்தின டிடைல்ஸ் என் கைக்கு வேணும். அதுக்கு அப்றம் அடுத்த ஸ்டெப்ஸ் எடுத்து வைக்கணும் எட்வார்டு” என்றிட அவனும் ‘சரி என்றான். மேலும் அவள் யோசனையில் இருந்தாள்.
“என்ன யோசிக்கற ஜெஸி??”ரெக்ஸ்லின் கேட்க” எனக்கு நிவாஸ் மேல சந்தேகமாக இருக்கு”என்றாள் அமைதியாக.எட்வார்டும் ரெக்ஸ்லின் அதிர்ந்தார்கள்.
“அவனா?? அவன் மேல் என்ன சந்தேகம் ஜெஸி உனக்கு??”
“நீ ரெக்ஸ்லின் பிரசவத்துக்கு போயிட்ட. ஆனா நிவாஸ் அந்த டைமல ஆன் ட்யூட்டில தான இருந்தான். அப்போ அவனுக்கு தெரிஞ்சுருக்கும் அங்க என்ன நடந்ததுனு? அவனும் ஆரோனோட அந்த அரசியல் வாதிக்கு பாதுகாப்பு கொடுக்காம எங்க போனான். அவனுக்கும் தான விபத்து நடந்திருக்கணும். ஆனா எப்படி அவன் மட்டும் உயிரோட ஒரு அடி படாம தப்பிச்சான். நம்ம கண்ணுல படாம ஏன் தலை மறைவா இருக்கான். நம்ம கிட்ட செல்லாம எங்க போனான். அவன் மேலேயும் எனக்கு சந்தேகமா இருக்கு. அவனுக்கு இந்த கொலையில பங்கு இருந்தால் முதல்ல சாகுறது அவன் தான்”கண்ணில் சீற்றத்தோடு ருத்ர காளியானாள்.
****
ஞாயிறு என்பதால் வீட்டில் அனைவரும் கூடி இருந்தார்கள். வீரமதி கூட சாதாரணமாக தான் இருந்தார். மகன், மகள் , மருமகளுக்கு பேரனுக்கும் அவர் கையாலே சமைத்து போட வேண்டும் என்று ஆசையை அந்த விடுமறை நாளில் பயன்படுத்திக் கொண்டார்.
தினமும் ராதாவின் சமையலை ருசிப்பவர்கள் இன்று வீரமதியின் சமையலை சாப்பிட ஆர்வமாக இருந்தனர்.
ராதாவின் உதவியுடன் , சிக்கன் , மட்டன், மீன் என மூனு வகையிலும் உணவை சமைத்திருந்தார் வீரமதி.
அனைவரும் ஒன்றாக சாப்பிட அமர்ந்தவர்கள் அப்போது தான் குளித்து முடித்து விட்டு வந்த துருவனையும் அமர்த்திக் கொண்டனர். அவர்களாவே பரிமாறி சாப்பிட்டனர்.
வீரமதி சமையலை நந்தன் வரைக்கும் உச்சுக் கொட்டி உண்டனர்.சாப்பிட்டு கொண்டிருந்த வீரமதி துருவனை கண்டு” நீ எப்போ ஆஃபீஸ்க்கு வர போற? இல்ல உனக்குனு ஏதாவது ஐடியா வச்சிருக்கியா?? என்ன பிளான்ல இருக்க??”என்று கேட்டார்.
“மாம் பிளான் எல்லாம் இருக்கு . ஆனா அதுக்கு முன்ன நான் எஞ்சாய் பண்ணணும் மாம் ! அதுக்குள்ள பொறுப்ப ஏத்தி தலையில வச்சுக்கணுமா?? நோ மாம் இன்னும் டேஸ் போகட்டும்”என்றான்.
“இல்ல துருவ் ! போதும் நீ எஞ்சாய் பண்ணினது. பொறுப்ப ஏத்துக்கற வயசு வந்திடுச்சி ! எஞ்சாய் பண்ணணும் உதாரியா சுத்தாம உன் பிளான் என்ன சொல்லு”என்றார் சன்னமாக,”அதில் அவனும் அதிகம் பேசாமல், தன் திட்டத்தை சொன்னான்.
” நானும் என் பிரண்ட்ஸ் கன்ஸ்டருக்ஷன் ஆரம்பிக்கலாம் பிளான்ல இருக்கோம் மாம். இன்னும் நாங்க அதை பத்தி முழுசா டிஸ்க்ஸ் பண்ணல… “என்றான்.
“பண்ணிட்டு சொல்லு ! பணம் வேணும்னாலும் தர்றேன் வாங்கிக்கோ. ஆனா உன் டேஸ் எஞ்சாய் பண்றதுல வேஸ்ட் பண்ணாத ! சீக்கிரமா உன் பிரண்ட்ஸ் கிட்ட பேசி பதில் சொல்லு” என்றார் அவனும் சரியென தலை அசைத்தான்.
****
குழந்தைகளுக்கு தேவையான சோப்பிலிருந்து அரையாடை வரைக்கும் பெண்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களும் அணையாடைகளும் என அனைத்தும் தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த ‘டச் மீ’ நிறுவனம்.
இந்தியாவில் வட மாநிலத்தை சேர்ந்த நிறுவனம் என்றாலும், மற்ற மாநிலத்தில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் இந்த நிறுவனம், தெற்கு பக்கத்தில் ஐம்பது இடங்களில் கூட பிடிக்கவில்லை .
“டச் மீ” பொருட்கள் எல்லாம் தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா தெலுங்கானா என தெற்கு மாநிலங்களில் மிகக் குறைவாக தான் விற்பனையாகின்றன. அதிலும் தமிழ்நாட்டில் மிகக் மிகக் குறைவாக விற்பனையாகின்றன.
“டச் மீ ” நிறுவனத்தை மும்பையில் வசிக்கும் ‘மிலால் யாதவ்’என்பவர் தான் நடத்தி வருகிறார். அவரது தாத்தா காலத்திலிருந்து இந்த நிறுவனத்தை பெரும் புகழுமாக நடத்தி வருகின்றனர். ஆனாலும் அவர்களது தயாரிப்பை தமிழ் நாட்டிலும் தெற்கு பக்கத்திலும் விற்று தன் ஆட்சியை நிலை நிறுத்த முடியவில்லை.
அதற்காகத்தான் தெற்கு பக்கத்தில் முதல் இடங்களில் இருக்கும் நிறுவனங்களோடு டையப் வைத்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்.
தெற்கில் அதிகமான தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் ‘வீ’ என்னும் வீரமதியின் தயாரிப்பு நிறுவனத்தோடு இணைந்து தனது தயாரிப்புகளை விற்க எண்ணியவர், அதைப் பற்றி வீரமதியிடம் பேச தான் அவரது இடம் தேடி அவரது அலுவலகத்திற்கு மிலால் தனது இரண்டாவது மனைவியான ரிஷிகாவைவும் உடன் அழைத்துக் வந்திருந்தார்.
ஐம்பத்தாறு வயதான மிலாலுக்கு பேரன் பேத்திகள் இருந்தும் முப்பது வயதுடைய தமிழ் பெண்ணான ரிஷிகாவை திருமணம் செய்துக் கொண்டார்.
அவரது வீட்டில் அத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் அவர் தனது விருப்பம் போல தான் இருந்தார். அவரது புதல்வர்கள், சொத்தெல்லாம் அவர் பெயரில் இருப்பதால் அமைதியாக இருக்கின்றனர்.
அதனால் அவரை எதுவும் செய்ய முடியாத கையறு நிலை அவர்கள் இருக்க, இவரோ அவிழ்த்து விட்ட கிழட்டு காளை போல் ஊர் மேய்ந்து கொண்டிருக்கிறார்.
பி.ஏ வாக வந்த தமிழ் பெண்ணை தன் மனைவியாக்கி கொண்டார்.
ஆள் பலம் , பணம் பலத்தை கண்டு கொஞ்சம் பயந்து, மயங்கி அவரை கட்டிக் கொண்டாள். ஆனால் பாவம் அவள், அவரது கைச் சிறையில் உயிருள்ள பொம்மையாக இப்போது வரை எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள்.
வீரமதியின் அலுவலகத்திலும் தன் பண பலத்தை கட்ட நினைத்தார். ஆனால் அங்கே அதெல்லாம் வேலைக்கு ஆகவில்லை அவரை காக்க வைத்தே வீரமதியை பார்க்க அனுமதித்தனர்.
அதில் கடு கடுவென்று இருந்தவர், மேலும் அதில் எண்ணெய்யை ஊற்றுவது போல இருந்தது வீரமதியின் பேச்சும்.
அவர் பிஸ்னஸ் விஷயமாக டையப் வைத்து கொள்ளும் நோக்கத்தைச் சொல்ல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் வீரமதி. ஆனால் அதுக்கு முன்னே அந்நிறுவனத்தை பத்தி அக்கு வேறாக ஆணி வேறாக தெரிந்து வைத்துக் கொண்டார் வீரமதி
அவரது ‘டச் மீ’ பொருட்கள் எல்லாம் விலை அதிகம், மேலும் அதில் அதிகப் படியான கெமிக்கல்ஸையும் கலக்குகின்றனர். தரமற்றதாகப் போய் கொண்டிருந்தன அந்த நிறுவனத்தின் பொருட்கள் அனைத்தும்.
அவர் அப்பாயின்மெண்ட் கேட்டதும் அவரை பற்றியும் அவரது நிறுவனத்தை பற்றி முழு விவரத்தை அறிந்து வைத்த பின் தான் அவரையே பார்க்க அனுமதி அளித்தார் வீரமதி.
“எங்களோட டையப் வச்சிக்க உங்களுக்கு சம்மதமா மிஸஸ் வீரமதி பிரகதீஸ்வரன்?”என்றார்.
அதற்கு வீரமதியோ மின்னலைப் போல நொடியில் புன்னகை சிந்தி விட்டு மறைத்தவர், அவரிடம் அந்தக் கேள்வியை கேட்டார்.
“உங்க, இந்த புது மனைவியோட ப்ரீயட்ஸ் டேட்ஸ் எப்பனு உங்களுக்கு தெரியுமா மிஸ்டர் மிலால்?? அவங்க அப்போ எத்தனை பேட்ஸ் யூஸ் பண்ணுவாங்க உங்களுக்கு தெரியுமா? உங்க கம்பெனி பேட்ஸ் தான் யூஸ் பண்ணுவாங்க.. அவங்களுக்கு கம்ஃபோர்ட்பிலா இருக்கானு கேட்டுறீங்களா? அப்றம் உங்க ஓய்ப் உங்க கம்பெனி காஸ்மெட்டிக்ஸ் தான் யூஸ் பண்றாங்களா??? “எனக் கேட்டு அவர் கோபத்தை கொஞ்சமாகப் பற்ற வைத்தார்.
“வாட் நான்சென்ஸ் ! நான் ஏன் அதையெல்லாம் தெரிஞ்சு வச்சிக்கணும்?? வந்த விஷயத்தை பேசாம தேவை இல்லாமல் பேசிட்டு இருக்கீங்க வீரமதி ” என பல்லைக் கடித்தார்.
அதில் புன்னகைத்த வீரமதி” மிஸ்டர் மிலால், டையப் வச்சிக்க போற நிறுவனத்து கிட்ட தன்னோட சந்தேகங்கள் கேட்டு தெரிஞ்சுக்கிறதுல தப்பு இல்லையே !”எனக் கேட்கவும் காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து கொண்டிருந்த அவரது பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு பேசினார்.
“பிராடைக்ட்ல என்ன டவுட்டோ தாராளமா கேட்கலாம் வீரமதி. ஆனா அனாவசியமா என் ஃபேமிலியில இன்டர்ஃபியர் ஆக உங்களுக்கு எந்த ரைட்ஸ்ஸூம் இல்ல!”என்றார்.
“நான், உங்க ஃபேமிலில இன்டர்ஃபியர் ஆகல மிஸ்டர் மிலால். உங்க அந்தரங்கத்தை தெரிஞ்சுக்கணும் எனக்கு எந்த விருப்பமும் இல்ல.
உங்க பிராடைக்ட உங்க பேமிலி மெம்பர்ஸ் யூஸ் பண்றாங்களானு நான் தெரிஞ்சுக்க வேணாமா??? உங்க குடும்பம் முதல்ல உங்க பிராடைக்ட்டா தான் யூஸ் பண்றாங்களா?? இல்ல ஃபாரின் பிராடக்ட் எதுவும் யூஸ் பண்றாங்களானு தெரிஞ்சுக்க நினைக்கிறேன். உங்க பிராடைகட் உங்க பேமிலி மெம்பர்ஸ் யூஸ் பண்ணினா தானே. நீங்க தரமான பிராடைக்ட் தான் தயாரிக்கிறீங்கனு நான் நம்ப முடியும்? அதான் கேட்டேன் “என்றதும் அமைதியானவர் பக்கத்தில் அமர்ந்திருந்த ரிஷிகாவை முறைத்தார்.
உங்க அமைதிய பார்த்தால் உங்க பிராடைக்ட் உங்க ஒயிப் யூஸ் பண்ணல போல. உங்க பிராடைக்ட நீங்களே யூஸ் பண்ணலேனா , உங்க பிராடைக்ட் மக்கள் வாங்கி யூஸ் பண்ணனும் மட்டும் நினைக்கிறீங்களே சரியா???”எனக் கேட்க அமைதியாக தன்னருகே அமர்ந்திருந்த ரிஷிக்காவை பார்த்தார். அவளோ தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
“உங்க ஒயிப்போட பீரியட்ஸ் டேட்ஸ் தெரியாது எத்தனை பேட்ஸ் யூஸ் பண்ணுவங்கான்னு தெரியாது எந்த பிராடைக்ட யூஸ் பண்ணுவாங்கனும் தெரியாது? அப்றம் எப்படி நீங்க ஒரு நல்ல ஹஸ்பண்ட்டாவும் உங்க பிராட்க்ட் வாங்கற கஷ்டமராவும் உங்க பிராடைக்ட் தரமா தயாரிக்கற பிஸ்னஸ் மேனாவும் உங்களால இருக்க முடியும்???”எனக் கேட்டிட, அவருக்கோ கோபம் பழியாக வந்தது “ஸ்டாப் !!! என் கம்பெனி தரத்தை பத்தி உங்களுக்கு என்ன தெரியும் வீரமதி???”
“தெரியும் மிஸ்டர் மிலால். உங்க அப்பா இருக்கிறவரைக்கும் தரத்துல டாப் ஃபைவ்ல இருந்த உங்க கம்பெனி இப்பையும் இருக்கு தான். ஆனா தரத்தால இல்ல பணத்தால. கொஞ்சமும் தரமற்ற உங்க பிராடைக்ட் டாப் ஃபைவ்ல் இருக்க காரணம் மணி மட்டும் தான்”
“ஸாரி ! ஒரு தரமற்ற கம்பெனியோட டையப் பண்ணி என் பிராடைக்ட் மேல இருக்கற மரியாதை கெடுத்துக்க விரும்பல. எனக்கு கல்சர் ரொம்ப முக்கியம் ப்ரோபஷனலையும் சரி பெர்சனலையும் சரி அதை நான் ரொம்ப எதிர்பார்ப்பேன். உங்க கிட்ட அது இல்ல. சோ நீங்க போகலாம்”என்று வாசலை காமித்தார்.
“இதுக்கு நீங்க பின்னாடி வருத்தப்படுவீங்க வீரமதி” என்று சீற்றமாக சொல்லி விட்டு சென்றார். அதனை அசட்டைச் செய்து விட்டு தன் வேலையை பார்த்தார்..
வீரமதியின் அலுவகத்திலிருந்து வெளியே வந்த மிலாலை ஏற்றிக் கொள்ள மகிழுந்து வாசலில் வந்து நின்றது. கோபமாக உள்ளே ஏறியவர், தன்னுடன் ஏறும் மனைவி ரிஷிகாவை தடுத்து நிறுத்தி, நீ ஆட்டோல வா “என்று கர்ஜித்து விட்டு கிளம்பிவிட்டார்.
“பேபி பேபி…”என பின்னால் ஓடி வந்தவள் மகிழுந்து மறைந்த பின் “அப்பாடா ! இந்த சனியன் கிட்ட இருந்து கொஞ்ச நேரத்துக்கு நமக்கு விடிவுகாலம் “என்று எண்ணி, தன் தோழிக்கு அழைத்தாள். அவளோ **** ஹோட்டலின் பெயரை சொல்லி வரச் சொல்ல, டேக்சியை பிடித்துக் கொண்டு ஹோட்டலுக்கு சென்றாள்.
******
இங்கோ நண்பர்கள் ஐவரும் சேர்ந்து கன்ஸ்டரக்ஷன் கம்பெனி வைப்பதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
“மச்சி ! எங்களுக்கு உன் கூட சேர்ந்து கம்பெனி ஆரம்பிக்கிறதெல்லாம் கனவு. ஆனா உன் லெவலுக்கு முதல் போடற வசதி எங்க கிட்ட இல்ல மச்சி ! நாங்க எல்லாரும் அன்றாடங்காட்சிகள் தான். வேலைக்குப் போய் சம்பாரிச்சாத்தான் எங்க குடும்பத்த கொண்டு போக முடியும் . நீ வந்து பிஸ்னஸ் பண்ணலாமா கேட்டால் பணத்துக்கு நாங்க எங்கடா போவோம் மச்சி”என வித்யாசாகர் தங்கள் வீட்டுக்கு நிலவரத்தை விளக்க ,
“ஆமா மச்சி வித்யா சொன்ன நிலமையில் நாங்க மூணு பேரும் இருக்கோம். எங்களால அவ்வளவு பணமெல்லாம் ரெடி பண்ண முடியாது மச்சி ! வேணும்னா உன் கம்பெனில எங்களுக்கு வேலை போட்டு கொடு தாராளமா சேர்ந்து வேலை பார்க்கிறோம்”என்று ரிஷி சொல்ல அதையே ஆமோத்தினர் மற்ற மூவரும்.
அவர்கள் நிலையை அறிந்தவன் தான் இருந்தாலும் அவர்களை விட அவனுக்கு மனமில்லை. நால்வரும் திறமையும் யுக்தியும் நிறைந்தவர்கள். உடன் பயிலும் போதே அதை துருவனும் உணர்ந்திருக்கிறான். அவர்களை விடுத்து தனியாக கம்பெனி ஆரம்பிக்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை. அவர்களும் வேலை இன்றி வெட்டியாக சுத்தித் திரிகின்றனர். ஐவருக்கும் அனுகூலம் கிடைக்க வேண்டும் என்பதே துருவனின் எண்ணம். அதற்காக தான் பேசிக் கொண்டிருக்கிறான்.
“மச்சி ! நீங்க நாலு பேரும் நான் போடுற அமௌண்ட் கொடுக்கணும் இல்ல. உங்களால முடிஞ்சத கொடுங்க. ஏன்னா எனக்கு கீழ வேலை பார்க்கற வர்கர்ஸா உங்களை நினைக்கவோ பார்க்கவோ என்னால முடியாது நீங்க என் பிரண்ட்ஸ் டா ! எனக்கு சமம்மா தான் இருக்கணும்… புரிஞ்சதா ?”என்றதும் நால்வரும் நெகிழ்ந்தனர்.
“ஒவ்வொருத்தரும் ஐம்பதாயிரம் கொடுங்க போதும் மத்தத நான் பார்த்துகிறேன்”என்றான்.
“வெறும் ஃபிப்ட்டிக் கொடுத்து லாபத்துல சரி பங்கு போட முடியாதுல டா !”ஆஜித் கேட்க, “நீங்க தான டா சம்பளம் கேட்டீங்க. வர லாபத்தை உங்க சம்பளமா நினைச்சிக்கோங்க. எனக்கு பணம் முக்கியம் இல்ல. எங்க அம்மாவை போல பேரும் புகழும் கிடைச்சாலே போதும். உங்களுக்கு உங்க குடும்பத்த உங்க சம்பாத்தியத்துல பார்த்துக்கணும் அவ்வளவு தான. நாம நம்ம பெஸ்ட் கொடுப்போம் மச்சி வர்ற பார்த்துக்கலாம். உங்களுக்கு ஒகே தான”
நண்பனின் மேல் முழு நம்பிக்கை வைத்து அவனோட பணிபுரிய ஒத்துக் கொண்டனர் நால்வரும். ஐவரும் மகிழ்ச்சியில் இருக்க, ஹோட்டலுக்கு நுழைந்தாள் ரிஷிகா.
அவள் தோழி அவளை வரவேற்க அவள் எதிரே அமர்ந்தாள் ரிஷிகா
“என்னடி ரொம்ப கோவமா இருக்க போல என்னாச்சி??”என கேட்க, ரிஷிகா அனைத்தையும் சொன்னாள்.
“இதெல்லாம் உனக்கு தேவைதானா உன் அழகுக்கு இந்த கிழவன் தான் கிடைச்சானா?? ஊர்ல உனக்கு பையனே கிடைக்கலையா??? அந்த கிழவன போய் கொஞ்சிட்டு இருக்க, நான் இப்பையும் சொல்றேன் அவன விட்டு வந்திடு ! உன் அழகுக்கு உன் பாஸ்ட் எல்லாம் மறந்து உன்னை கல்யாணம் பண்ணிட்டு உன் காலுக்கடியில் கிடைக்க நிறைய பேர் இருக்கானுங்க, அந்தாள் வேணாம்டி உனக்கு”என்றவளை கர்வமாக பார்த்தாள் ரிஷிகா.
“உன் அழகுக்கு அந்த கிழவன் எல்லாம் ஒன்னுமே இல்ல டி. நல்ல அழகான பையனாப் பார்த்து மேரேஜ் பண்ணிக்கோடி” என்றாள்.
‘அழகான பையன் ‘என்றதும் அவள் துருவனை எண்ணிப் பார்த்து வெட்கம் கொண்டாள். அவள் அவனை எண்ணிக் கொண்டிருக்க, அதை கலைக்கும் விதமாக சிரிப்பொலி கேட்டதும் திரும்பிப் பார்த்தாள். துருவனும் நண்பர்களும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அவனை கண்டதும் எழுந்தவள் அவனுடன பேச செல்ல, அவனோ ரெஸ்ட்ரூமிற்குச் சென்றான்.
அவளும் அவனை பின் தொடர, ஆண்கள் கழிப்பறை என்று தெரிந்தவள் அவன் பின்னே சென்று அவனை கட்டி அணைத்து விட்டாள். அவன் பதறி அவளிடம் விலகி அவள் கன்னத்தில் அறைந்திருந்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
10
+1
1
+1

