Loading

பிறை -45

 

ஜன்னல் வழியாக வரும் கூதலுக்கு இதமாக இருந்தது அவனது அணைப்பு. குளிருக்கு அவனது வெது வெதுப்பான தேகம் சட்டென பொருந்திக் கொள்ள.. அவளும் அவனோடு ஒன்றிப் போனாள்.

 

” என்ன மூன் அதுக்குள்ள கிறங்கிட்டியா ” காதில் கேட்ட அவனது கிசு கிசுப்பான குரலில் தேகம் சிலிர்த்து போனவள்..

 

” பிளீஸ் தேவ்… ” என வெட்கம் தாளாமல் உளறினாள்.

 

” ஸ்டார்ட் பண்ணவே இல்லையே டி ”

 

” கொஞ்சம் பேசாம இருங்களேன்” ஏனோ அவனது காதல் வார்த்தைகளை அவளால் கேட்க முடியவில்லை. உணர்வுகள் அவளையும் தட்டி எழுப்ப.. அதை எப்படி அவனிடம் கட்டுவது என தெரியாமல் உளறிக் கொண்டிருந்தாள்.

 

” தேவ்..”

 

” ம்ம்.. ”

 

” போதுமே”

 

” எது.. ”

 

” பிளீஸ் ”

 

” எது போதும்னு சொல்லு ”

 

” இது ” என அவளது உடலில் ஊறிக் கொண்டிருந்த அவனது கரங்களை காட்டினாள் பிறை.

 

” வேற எப்படி ஸ்டார்ட் பண்ணுறது. இதுதான் பர்ஸ்ட் ஸ்டெப் ” கூச்சம் இல்லாது அவன் பேசிய தாம்பத்திய வார்த்தைகள் எல்லாம் பக்கத்தில் இருந்தவளிடம் பறந்திருந்தது.

 

” பிளீஸ் நீங்க பேசாதீங்க தேவ்..”

 

” அப்போ நீ பேசு ”

 

” என்ன பேச ”

 

” எப்படி ஸ்டார்ட் பண்ணலாம்னு நீயே சொல்லு ” என்றதும் அவனது நெஞ்சில் அடித்தவள்..

 

” கொஞ்சம் பயமா இருக்கு ” மனதில் உள்ளதை மறைக்காமல் கூறி இருந்தாள் பிறை.

 

” உனக்கு என்ன தெரியும்..”

 

” தெரியும் காலேஜ்ல பிள்ளைங்க கூட பேசும் போது.. அவங்க கொஞ்சம் கொஞ்சம் சொல்லி இருக்காங்க ”

 

” பாரேன்.. நான் கூட மூனுக்கு கிளாஸ் எடுக்கனும்னு நினைச்சேன்.. ஆனால் நீ ஆல்ரெடி புல் சிலபசும் முடிச்சுட்டு தான் வந்திருக்க ”

 

” ஐயோ நீங்க நினைக்கிற போல இல்லைங்க.. ஏதோ தெரியும்..”

 

” அந்த ஏதோ என்ன ”

 

” பிளீஸ் விடுங்களேன் ”

 

” என்கிட்ட என்ன டி வெட்கம் ”

 

” வேற யார் கிட்ட காட்டுறதாம் ”

 

” நான் உன் புருஷன் ”

 

” அதுக்காக.. ”

 

” இத்தனை நாளா என் மேல கோபத்துல இருந்த தானே.. நானும் உன் கூட வந்திருக்கனும் .. ”

 

” அதான் வரலையே ”

 

” சரி கோபம் போற மாதிரி ஒன்னு கொடுக்கவா ” நிஜமாலுமே பேசுவது அவன் தானா என்ற சந்தேகம் வந்தது அவளுக்கு.

 

அவளுக்கு தெரிந்தவன் எப்போதும் சிரிக்காமல், விறைப்பாக இருப்பவன்.. அவளிடம் இத்தனை தூரம் இறங்கி வந்து பேசுவதை பார்த்தவளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.

 

” கமிஷனர் சாருக்கு இப்படியெல்லாம் கூட பேச வருமா என்ன ”

 

” ஏன் டி என்னைய என்னனு நினைச்ச”

 

” இல்ல நீங்க எப்போதும் மூஞ்சில சிரிப்பை கூட காட்டாம முறுக்கிட்டு தானே சுத்துவீங்க ”

 

” அது என் வேலை அப்படி.. அதுக்காக பொண்டாட்டி கிட்டயும் அப்படி இருக்க முடியுமா என்ன .. ”

 

” அதுசரி.. என்னைய பிடிக்காத மாதிரியே நடிச்சீங்க.. ஏதோ பெரியவங்களுக்காக கல்யாணம் பண்ணிகிட்ட மாதிரி நடந்தீங்க ”

 

” ஆமா இத்தனை நாளும் அப்படியே இருந்துட்டேன்.. இப்போ திடீர்னு வந்து.. சென்னைல ஒரு சிக்னல்ல ஒரு பொண்ணை பார்த்தேன்.. பார்த்ததும் ரொம்ப பிடிச்சு போச்சு.. அதே பொண்ணு என் கேஸ்ல வந்து மாட்டுச்சு. அவளை காப்பாத்தி அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசை பட்டேனு எப்படி சொல்ல முடியும்.. நைட்டு எல்லாம் தூங்காம அவளையே நினைச்சுட்டு இருந்தேன்னு சொன்னா நல்லா இருக்குமா ” என்றதும் அவளது விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது.

 

” எந்த சிக்னல் ”

 

” வழக்கமா உன்ன பார்க்கிற சிக்னல் தான்.. முதல் முதல உன்ன கார்ல பார்த்தேன்.. நீ உன் பிரெண்ட் சுஷ்மிதா, கீதா அந்த பொண்ணோட அண்ணன் எல்லாம் இருந்தீங்க ”

 

” அதுதான் நான் சென்னைக்கு வந்த பர்ஸ்ட் நாள் ”

 

” ம்ம் தெரியும்.. அன்னைக்கே விழுந்துட்டேன் ”

 

” நிஜமாவா ”

 

” ப்ரூஃப் பண்ணவா மூன் ” என்றவனது கைகள் சொன்ன செய்தியில்.. மொத்தமாக துவண்டு போனாள் பிறை.

 

” ரொம்ப சின்ன பொண்ணுன்னு யோசிச்சேன் டி.. கோவில்ல பார்த்ததுக்கு அப்பறம் முடிவே பண்ணிட்டேன் ” என்றவனது பேச்சில் கண்களை மூடிக் கொண்டாள் பிறை.

 

அவளது வெட்கத்தை பார்த்தவனுக்கு மேலும் முன்னேறும் எண்ணமும் வந்து விட.. மெதுவாக அவளை நெருங்கி உச்சந்தலையில் முத்திரை பதித்தான். பின் சற்றே இறங்கி மூடிய விழிகளுக்கு பரிசுகளை கொடுத்தவன்.. மெல்ல அவளது செவிகளுக்கும் கொடுத்து விட்டு, ” கண்ணை திறந்து பாரு மூன்.. உன் கண்ணை பார்த்தா தான் நீ என்ன நினைக்கிறேன்னு தெரியும் ”  காதில் பேசியவன்.. மெல்ல அவளது சின்ன மூக்கிற்கு முத்தம் கொடுத்து, அவளது சுவாசத்தை களவாடிக் கொள்ள.. அடுத்ததாக அவளது செப்பு இதழ்களை அவன் இதழ் கொண்டு மெல்ல வருடியவன்.. கொஞ்சம் கொஞ்சமாக முத்தம் வைத்து.. முழுவதுமாக அவளது இதழை கவ்வி இருந்தான் ஆதிதேவ் .

 

மெல்ல முனங்கி மூச்சிற்காக அவனை விலக்கியவள்.. தவிப்போடு அவன் முகம் பார்க்க.. அவனும் அவளைத்தான் பார்த்தான்.

 

” ஆர் யூ ஓகே மூன் ” என கன்னங்களை பற்றிக் கொண்டு அவன் கேட்டதும்.. ஓகே என்றவாறு தலை அசைத்தாள்.

 

பின் மீண்டும் அவனது தேடுதல் பணி கழுத்தில் இறங்க.. நெஞ்சம் நடுங்கியது. கழுத்தில் செய்த குறும்பில் அவனை இறுக்கப் பிடித்துக் கொண்டவள்.. ” தேவ் பிளீஸ்” என கத்தி விட.. சிரித்துக் கொண்டவன்..

 

” ஓகே தானே மூன்.. ஸ்டார்ட் பண்ணலாமா ” என்றதும்.. வெட்கத்தில் அவனது மார்பில் ஒளிந்து கொண்டவளது சம்மதம் புரிய.. மெல்ல மெல்ல அவளை தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வந்தவன்.. அடுத்த ஐந்தே நிமிடத்தில் ஆடைகளுக்கு விடுதலை அளித்திருந்தான்.

 

” தேவ்.. ப்ளீஸ் ”

 

” மூன் பிளீஸ்” இதற்கும் மேல் அவளது மறுப்பை கேட்கும் நேரத்தை எல்லாம் அவன் கடந்திருந்தான். பெண்ணவளின் வளைவு நெளிவுகளில் இருந்து மீள முடியாது திணறிப் போனவனுக்கு, கட்டுக்கடங்காத உணர்வுகள் வந்து அவனை பித்தம் கொள்ள செய்ய.. சற்றே வன்மையாக அவளை ஆட்கொள்ள.. கணவன் காட்டிய புது உலகில் தன்னை மறந்து கிடந்தாள் பேதை..

 

ஏனோ அதற்கு மேல் அவளிடம் பேசுவதற்கு ஒரு வார்த்தையும் வரவில்லை. இருவருமே உணர்ச்சிகள் பிடியில் சிக்கிக் கொண்டு.. அதிலிருந்து மீள முடியாமல் ஒருவரை ஒருவர் நாடி, இந்தனை நாள் காத்து வைத்திருந்த கற்பை ஒருவருக்கொருவர் பரிசாக அளித்தனர்.

 

கூடல் முடிந்த சோர்வில் அவள் கண் மூடி மெத்தையில் இருக்க.. அவள் மீதிருந்து சரிந்து அருகில் படுத்தவனோ… கண் மூடி இருக்கும் மனைவியை தான் விடாது பார்த்தான்.

 

பெரிய பெரிய மூச்சுகளுடன் படுத்திருந்தாள். அவளது வெற்று மேனியை மறைக்கும் வண்ணம் இருவருக்குமாக போர்வையை எடுத்து போற்றியவன்.. ” மூன்.. நீ ஓகே தானே … ” என கேட்டதும்..

 

” ம்ம்.. ஓகே தாங்க ” என மெதுவாக இமைகளை பிரித்தாள்.

 

” என்னாச்சு டி ரொம்ப சோர்வா தெரியுற ”

 

” நான் நல்லாத்தான் இருக்கேன் .. ஆனால் கொஞ்சம் டயர்டா இருக்கு ” மெலிதாக சிரித்தாள். அவளது உடல் வலி அவளது கண்களில் தெரிந்தது. கொஞ்சம் அதிகமாக தான் படுத்தி விட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு.

 

” வெந்நீர் வச்சு குளிச்சா சரி ஆகிடும்.. வரியா ”

 

” ஐயோ என்னால இப்போ முடியாதுங்க.. நான் தூங்கனும்”

 

” என்ன டி ஒரு ரவுண்டுக்கு சோர்ந்துட்ட” வெட்கத்தோடு கணவனது மார்பில் அடித்து விட்டு , அவன் மீதே தலை வைத்து படுத்துக் கொண்டாள் பிறைநிலா.

 

அந்த இரவு இருவருக்குமே மறக்க முடியாத ஒரு இரவாக இருந்தது. இனி வரும் காலங்களில் இந்த ஒரு இரவை நினைத்து தான் இருவரும் காலத்தை ஓட்ட வேண்டும்.

 

இங்கே கூடல் அரங்கேறி கொண்டிருந்த சமயத்தில், அவளது தோட்டத்தில் ஏறிக் குதித்த ஆதிக்கு.. அலைபேசியில் அழைப்பு வந்தது.

 

” ம்ம் வேலை முடிய போகுது ”

 

” தூக்கிட்டியா ஆதி ”

 

” இல்ல.. தூக்க போறேன் ”

 

” இங்க கொஞ்சம் பிரச்சனை.. ” என அவன் நடந்ததை கூற.. அவசரமாக அங்கிருந்து கிளம்பி இருந்தான் ஆதி.

 

இம்முறையும் பிறை அவனிடம் இருந்து தப்பித்து இருந்தாள்.

 

காலை வேலை நன்றாக புலர்ந்தது. அசதியில் உறங்கிக் கொண்டிருந்த இரு ஜீவனையும் அவர்கள் வீட்டு சேவல் கூவிக் கொண்டே , அவர்களது உறக்கத்தை கலைத்தது.

 

மெல்ல எழுந்த பிறைக்கு உடம்பு வலி எடுக்க.. நிதர்சனம் புரிந்தவளுக்கு அவனை பார்க்கவே அத்தனை கூச்சமாக இருந்தது.

 

” பண்ணுறதையும் பண்ணிட்டு பச்சை பிள்ளை மாதிரி தூங்குறதை பாரு” என உடைகளை எடுத்துக் கொண்டு குளிக்க சென்றாள்.

 

அவள் எழுந்து செல்லும் போதே அவனும் முழித்து விட்டவன்.. பின் வாசல் கதவை திறந்து கொண்டு சுற்றிலும் பார்வையை பதித்தான்.

 

குளித்து விட்டு வந்தவள், அவனை காணாமல் வேகமாக கீழே சென்றிருந்தாள். அவளது தயக்கத்தை உணர்ந்தவனும், அவளை தொந்தரவு செய்யாமல் கிளம்பி கீழே வந்தான்.

 

வந்ததுமே மீனாட்சி அவனை பிடித்துக் கொண்டார். ” ஆதி கண்ணா.. நம்ம பாரு போனை எடுக்கவே இல்ல.. என்னனு தெரியல பா.. எப்பவுமே நைட்டு பேசுவா.. நேத்து நைட்டு பேசல.. சரி தூங்கிட்டான்னு நான் விட்டுட்டேன்.. ஆனால் இப்போ போன் பண்ணா சுவிட்ச் ஆப்ன்னு வருது.. ” என்றதும் சற்றே யோசித்தவன்..

 

” பொறுமையா இருங்க மா.. நான் அங்க போய் வீட்ல பார்க்க சொல்லுறேன் ” என்றதும் தான் மீனாட்சி சற்றே அமைதியாகிப் போனார்.

 

அதே நேரம் சரண் அவனை அழைத்துக் கொண்டு தனியாக சென்றான். ” நைட்டு தோட்டத்துல என்ன டா பண்ண ”

 

” தோட்டத்துல நான் என்ன பண்ணேன்.. ” என்றவனுக்கு ஏதோ உறைக்க.. ” சிசிடிவி பார்த்தியா ” என்றதும்.. அந்த காணொளியை காட்டினான் சரண்.

 

அதில் ஆதி வந்தது முதல், போன் பேசிவிட்டு வேகமாக சென்றது எல்லாம் பதிவாகி இருந்தது.

 

” சிட்… எப்படி மிஸ் பண்ணேன்… ” என காலை உதைத்தவன்..

 

” என்ன டா… ”

 

” நான் இல்ல டா .. என்ன மாதிரியே தான் அவனும் இருக்கான்.. அப்படிதான் வீட்டுக்குள்ள வந்தான்.. இப்போ இங்க வரைக்கும் வந்திருக்கான்.. என் கெஸ் சரிதான்.. ” என அங்குமிங்கும் நடந்தவன்.. ” பாரு வேற அங்க தனியா இருக்கா.. உடனே நம்ம அங்க போகனும் சரண்..”

 

” அவளுக்கு என்ன டா ”

 

” இல்ல ஏதோ சரியில்லை.. ”

 

” என்ன டா என்னனமோ சொல்லுற.. ”

 

” வீட்ல சொல்லிடாத.. பயந்துற போறாங்க.. நம்ம உடனே கிளம்பலாம் ”

 

” அப்போ இங்க யாரு பார்த்துக்கிறது..”

 

” அதான் சிசிடிவி இருக்குல்ல.. நான் ஆள் போட்டுட்டு போறேன் ” என்றதும் சரணுக்கும் அதுவே சரியென பட சம்மதித்தான்.

 

கோவிலில் இருக்கும் பொழுது சரண் மட்டும் இவர்கள் வீட்டிற்குள் வந்து வீட்டை சுற்றிலும் சிசிடிவியை பொருத்தி இருந்தான். தற்போது அதுவே அவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

 

” மா இப்போவே நாங்க ஊருக்கு கிளம்பிறோம் ”

 

” ஏன் டா என்னாச்சு ” திவாகர் சற்றே பயந்தார்.

 

” அதெல்லாம் ஒன்னும் இல்ல.. எனக்கு கேஸ் விஷயமா வர சொல்லி இருக்காங்க.. உடனே போகனும்.. நான் போயிட்டு உங்களுக்கு தகவல் சொல்லுறேன்.. நீங்க இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு வாங்க..” என் பேசிய கையோடு மாமனார் மாமியாரிடம் சொல்லிக் கொண்டு கிளம்பி இருந்தான்.

 

தோட்டத்தில் மலர்களை பறித்து கொண்டிருந்தவளுக்கு உள்ளே நடந்த கலவரம் தெரியாமல் போனது. ஆதியும் அவளிடம் கூறவில்லை.

 

அங்கே மும்பையில் ஆழ்ந்த மயக்கத்தில் இருந்தாள் பார்கவி.

 

சனா 💖

 

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 25

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
19
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்