Loading

காதல் – 40

                        விஹான் மற்றும் அஸ்வதி இரவு நேர  காஷ்மீரை கைகள் கோர்த்தபடி காதலாக சுற்றிக் கொண்டிருந்தனர்……

அஸ்வதி நாளைக்கு மிலாடி நபி , நாளைக்கு நீ , நா, நம்ம எல்லாரும் புது டிரஸ் போட்டு அல்லாவை தொழுவோம் சரியா உனக்கு எப்படி தொழுகை செய்யணும்ன்னு நா உனக்கு சொல்லி தரேன் சரியா…..

சரிப்பா நம்ம ரெண்டு பேரும் நாளைக்கு ஒன்னா தொழுவோம் , விஹான் அங்க பாருங்க மலைக்கு மேல ஒரு கோவில் தெரியுது  நம்ம ரெண்டு பேரும் அங்க போயிட்டு வருவோமா?

நீ கேட்டு நா எது இல்லன்னு சொல்லிருக்குறேன் வா ரெண்டு பேரும் போகலாம் என்று இருவரும் கைகள் கோர்த்தப்படி மலைக்கு மேலே சென்றனர்……

அஸ்வி இந்த கோவில் பேரு ஷங்கராசார்யா கோயில் இந்த கோயில்ல ஜ்யேஷ்டேஸ்வரர் கோயில்ன்னும் சொல்லுவாங்க ….

இது சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பண்டைய ஹிந்து கோயில் , இந்த கோயில் கிமு 200–300 வருஷத்துக்கு முன்னால கட்டுனதுன்னு  சொல்லப்படுது …..

ஆதி சங்கரர் தெரியுமா? இந்தியாவோட மிகப் பெரிய ஹிந்து தத்துவஞானி, அத்வைத வேதாந்தம்  தத்துவத்த உலகத்துக்கு விளக்கியவரு சிவபெருமானின் பக்தர் இவரைப் பத்தி கேள்விப்பட்டுருக்கியா??

ஆமா விஹான் இவங்கள பத்தி நிறைய நா கேள்விப்பட்டிருக்கிறேன்….

ஆதிசங்கரர் இந்த இடத்துக்கு வந்து தியானம் பண்ணாங்க  அதனால இந்த இடத்துக்கு அவரோட பேர வச்சுட்டாங்க …..

ஓஹோ அப்படியா உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்??

நா  அப்பா கூட சின்ன வயசுல டூரிஸ்ட் கைட்டா போவேன் அப்போ அப்பா எல்லா கோயில் பத்தியும் ரொம்ப டீடைலா  அங்க இருக்கிற டூரிஸ்ட் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருப்பாங்க அப்படி கத்துக்கிட்டது அண்ட் இப்போ நானும் ஒரு டூரிஸ்ட் கைட்டு ஆகிட்டேன்ல அதனால எல்லாம் தெரிஞ்சாகணும்ல்ல அதான் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா நானே கத்துக்கிட்டேன்……

சூப்பர் விஹான் என்று அவள் அவனின் கைகளை பிடித்து கொண்டு அந்த சிவன் கோவிலுக்குள் சென்றாள்……

கோயிலின் உள்ளே நுழைந்திடும் போது

வருகிற வாசனை நீயல்லவா”……

அஸ்வதி கண்களை மூடிக்கொண்டு சிவனிடம் நீண்ட நேரம் மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டு இருந்தாள் அப்பொழுது ஐயர் குங்குமம் தரவும் விஹான் அதை வாங்கி அவள் பிறை நெற்றியில் வைத்து விட்டான்….

அஸ்வதி கண்களை திறந்து பார்க்கும் போது அவள் கண் முன்னால் அவளின் காதல் மன்னவன் சிரித்துக்கொண்டே நின்றான்……

இருவரும் கோவிலை மூன்று முறை வலம் வந்துவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்தனர்…..

விஹான் இந்த கோயில் ரொம்ப நல்லா இருக்குது,  கோயிலுக்கு வந்த உடனே ஒரு பாசிட்டிவ் பீலா இருக்குது நீங்க குங்குமம் வச்சிக்க மாட்டீங்களா?

நீ வச்சுவிட்டா  வச்சுப்பேன் …..

அவன் அவ்வாறு கூறவும் அஸ்வதி விஹானின் கைகளில் வைத்திருந்த குங்குமத்தை அவனின் நெற்றியில் அழகாக வைத்து விட்டாள்……

இந்த கோவில காலைல அண்ட் சாயங்காலம் நேரம் பாக்க ரொம்ப அழகா இருக்கும் ,இங்க மேல இருந்து பாத்தா டால் ஏரி , ஸ்ரீநகர் சிட்டி,  பனிமலைகள் எல்லாம் ஒரே இடத்தில் பார்க்கலாம் ……

ஆமா விஹான் இந்த இடமே அவ்வளோ ரம்மியமா இருக்கு என்று அவர்கள் இருவரும் அந்த இயற்கையின் அழகை ரசித்து கொண்டு இருந்தார்கள்……

பிறகு இருவரும் மலையிலிருந்து கீழே இறங்கி சாலையில் நடந்து கொண்டிருந்தனர்……

அவர்கள் இருவரையும் வானத்து நட்சத்திரங்கள் பார்த்து சிரிப்பது போல இருந்தது அவர்களுக்கு……

அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் வழியில் ஒரு மரபெஞ்சு இருந்தது அதில் இருவரும் அமர்ந்தனர் அப்பொழுது விஹான் அஸ்வதியின் மடியில் படுத்துக்கொண்டான் அஸ்வதி அவனின் தலை முடிகளை மெதுவாக கோதி விட்டுக் கொண்டிருந்தாள்…..

வெறும் கரையில்

படுத்துக்கொண்டு

விண்மீன் பார்ப்பது யோகமடா

உன் மடியில்

இருந்தால், வாழ்க்கையில்

எதுவும் தேவையே இல்லையடி”…

பிறகு இருவரும் கிளம்பி தங்களின் வீட்டிற்கு சென்றனர்……

அவர்கள் சென்ற நேரம் அனைவரும் உறங்கி விட்டதால் , இருவரும் யாருக்கும் சத்தம் வராமல் மெதுவாக தங்கள் அறைவுக்கு சென்று உறங்கினார்……

மறுநாள் காலையில் சீக்கிரமாகவே இருவரும் எழுந்து விட்டனர் அவர்கள் இருவரும் குளித்து முடித்துவிட்டு வந்தனர்……

அஸ்வதி , விஹான் ரெண்டு பேரும் பிரஷ் ஆகிட்டீங்களா?

ஆமா பீவிம்மா , நாங்க ரெண்டு பேரும் ஃப்ரெஷ் ஆகிட்டோம் …..

சரி அஸ்வதி கண்ணா இந்த சேரி உனக்கு போய் கட்டிட்டு வா போ என்று பீவி ஒரு புது புடவையை அவளிடம் கொடுத்தார் ……

அவர் கொடுத்த புடவையை  அஸ்வதி உடுக்க சென்று விட்டாள்…..

விஹான் இது உன்னோட வேஷ்டி சட்டை போய் கட்டிட்டு வா போ…..

அம்மா  அஸ்வதி சாரி கட்டிட்டு வரட்டும் அவள நா பாத்துட்டு போறேன் என்று அவன் கட்டிலில் அமர்ந்து கொண்டு அவள் சென்ற அறையையே பார்த்து கொண்டு இருந்தான்……

அஸ்வதி பீவி கொடுத்த அடர் நீல நிற புடவையை உடுத்து கொண்டு வந்தாள் அப்பொழுது அவளை பார்த்த விஹான் அஸ்வதியை ரசிக்க இரண்டு கண் போதவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான் அப்பொழுது சரியாக விஹானா டிவியை ஆன் செய்யவும் அதில்……

குருமுகில்களை சிறுமுகைகளில்

யார் தூவினார்?

மழைகொண்டு கவிதை தீட்டினார்….

இளம்பிறையினை இதழ் இடையினில்

யார் சூட்டினார்?

சிரித்திடும் சிலையை காட்டினார்

எறும்புகள் சுமந்து போகுதே

சர்க்கரை பாறை ஒன்றினை

இருதயம் சுமந்து போகுதே

இனிக்கிற காதல் ஒன்றினை

என் சின்ன நெஞ்சின் மீது

இன்ப பாரமே ஏற்றி வைத்ததார்”……

விஹான் அஸ்வதியின் மேல் வைத்த கண்களை அவளிடம் இருந்து மீட்க முடியவில்லை அத்துணை அழகு தேவதையாக இருந்தாள்……

விஹான் அஸ்வதி  அருகில் சென்றான் அவளின் அழகிய முகத்தை தன் இரு கைகளில் ஏந்தி கொண்டு அவளை கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்……

ஹலோ ஹலோ நாங்க இன்னும் இங்கதான் இருக்கோம் என்று பீவி கூறியபடி அஸ்வதியின்  அருகில் வந்தவருக்கு  அவளின் முதுகை பார்த்து அதிர்ச்சி தாங்கவில்லை……

அஸ்வதி கண்ணா என்னம்மா முதுகுல இப்படி இருக்குது?

பீவி அவ்வாறு கேட்கவும் தான் தன்னுடைய முதுகில் இருக்கும் தழும்புகள் நினைவுக்கு வர அவள் தலையில் அடித்துக் கொண்டாள்……

அம்மா …..

அது….

நான் எப்பவும் இந்த மாதிரி ஓப்பன் நெக் வச்சு பிளவுஸ் போட்டதில்லை எப்பவும் ஃபுல்லா கழுத்தை கவர் பண்ற மாதிரி தான் பிளவுஸ் போடுவேன் நீங்க கொடுத்தவுடனே ஒரு ஆர்வத்துல கட்டிட்டு வந்துட்டேன் இப்ப என்ன பண்றது?

அஸ்வதி கண்ணா சுலோச்சனா சூடு போட்டதா இதெல்லாம்?

ஆமாம் என்று அஸ்வதி தலையாட்டினாள்……

கொடுமைக்காரி கொடுமக்காரி குழந்தை முதுகுல எப்படி சூடு வைச்சிருக்கான்னு பாரு என்று அவர் அஸ்வதியை கட்டியணைத்துக் கொண்டார்……

அஸ்வதி பீவியிடம் பேசிக்கொண்டே திரும்பும் போது தான் அவள் முதுகில் இருந்த சூடுபட்ட காயங்கள் வெளியே தெரிந்தது அதை பார்த்த விஹானா மற்றும் விஹானிற்கு சுலோச்சனா மீது கோபமாக வந்தது……..

அஸ்வதி இந்த தழும்பு உனக்கு தடையாக இருக்கக் கூடாது அதனால உன் இஷ்டத்துக்கு உனக்கு என்ன டிரஸ் போட புடிச்சிருக்கோ அத தாராளமா இனி போடு இந்த தழும்ப உனக்கு நா மறைய வைக்கிறேன்……

தழும்ப எப்படி மறைய வைக்க முடியும்?

என்கிட்ட ஒரு கை வைத்தியம் இருக்குது உனக்காக நா அத செஞ்சு தாரேன்,  டெய்லி உனக்கு நா போட்டும் விடுறேன் உனக்கு சீக்கிரம் சரியா போயிடும் என்று கூறியவரை அஸ்வதி கட்டியணைத்துக் கொண்டாள்…..

டேய் விஹான் நீ என்னடா இன்னும் ட்ரெஸ் மாத்தாம நின்னுட்டு இருக்க? போய் ட்ரெஸ் மாத்திட்டு வாடா என்று அவன் தாயார் கூறவும் அவன் அஸ்வதியை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான்…..

இந்த பையன் உன்ன காதலிக்க ஆரம்பிச்சது தான் ஆரம்பிச்சான் எப்பவும் லவ்வர் பாயா சுத்திட்டு இருக்கான் என்று பீவி கூறிவிட்டு கிச்சென் சென்று விட்டார் அவருடன் விஹான்னாவும் சென்று விட்டாள்……

அஸ்வதி தனது நீள தலை முடியை அழகாக பின்னி கொண்டு இருந்தாள்……

அப்பொழுது விஹான் ட்ரெஸ் மாத்தாமல் அவன் ரூமில் இருந்து  தன் காதலியை எட்டி பார்த்தான்……

அவள் தலை முடியை பின்னி ரப்பர் பேண்ட் போட்டு கொண்டு இருந்தாள்……

அவளின் பால் நிற மேனிக்கு அந்த அடர் நீல நிறம் கச்சிதமாக இருந்தது……

அவன் கண்களுக்கு அவள் எப்பொழுதும் அழகுதான் ஆனால் இன்று அந்த புடவையில் அவன் கண்களுக்கு தேவதையாக தெரிந்தாள்……

கம்பன் சொல்ல வந்து

ஆனால் கூச்சங்கொண்டு

எழுதா ஓர் உவமை நீ

வர்ணம் சேர்க்கும்போது

வர்மன் போதை கொள்ள

முடியா ஓவியமும் நீ

எலோரா சிற்பங்கள்

உன் மீது காதலுறும்

உயிரே இல்லாத கல்கூட காமமுறும்

உன் மீது காதல் கொண்ட

மானுடன் தான் என்ன ஆகுவான்”……..

என்று கேட்ட பாடலுக்கு ஏற்ப அவன் அவளின் அழகில் மயங்கி நின்றான்…..

விஹான் என்ன நீங்க இன்னும் ட்ரெஸ் மாத்தாம இருக்கீங்க? சீக்கிரம் போய் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க  என்று அவள் கூறவும் அவன் அவளை பார்த்து டீவியில் ஒலிக்கும் பாடலோடு சேர்ந்து பாடினான்……

உடையால் மூடி வைத்தும்

இமைகள் சாத்தி வைத்தும்

அழகால் என்னை கொல்கிறாய்

அருவி கால்கள் கொண்டு

ஓடை இடையென்றாகி

கடலாய் நெஞ்சம் கொள்கிறாய்

கடலில் மீனாக

நானாக ஆணையிடு

அலைகள் மீதேறி

உன் மார்பில் நீந்தவிடு

பேராழம் கண்டுகொள்ள

ஏழு கோடி ஜென்மம் வேண்டும்”……..

விஹான்……

விஹான்…..

போதும்…..

அம்மா வந்துட போறாங்க…..

ஆனால் அவள் கூறியதை கேட்காமல் அவளின் கை பிடித்து இடை வளைத்து அவளோடு ஆடி கொண்டு இருந்தான்…..

சரி சரி போதும் என்ன பாத்து நீங்க ரசிச்ச மாதிரி நானும் உங்களை ரசிக்கனும்ல சீக்கிரம் போய் ட்ரெஸ் மாத்திட்டு வாங்க என்று அவள் அவனை அவன் அறைக்குள் தள்ளி விட்டாள்……

விஹானும்  தனது தாயார் கொடுத்த வேஷ்டி சட்டையை அணிந்து கொண்டு வந்தான்…….

அஸ்வதி, விஹானை பார்த்து ரசித்து கொண்டே இருந்தாள், அத்துணை அழகாக இருந்தான்…….

ஆறடி உயரத்தில் அம்சமான கோயில் தேர் போல நடந்து வந்தான்……

தமிழ்நாட்டு மன்மதனே வாராய்

பெண் மயங்க மயங்க நடந்து நடந்து வாராய்

நீ இந்திர மகராஜனே

வெற்றி மாலைக்கென பிறந்தவனே

நீ தொட்டதெல்லாம் ஜெயமாக

சொன்னதெல்லாம் நிஜமாக

கன்னி நிலா வந்திடுச்சு கனவுகாண”……

அஸ்வதி டீவியில் ஒலித்த பாடல் அவனின் அழகிய முகத்திற்கு ஏற்ற பாடல் என்று அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்…..

ஹலோ என்ன குட்டிம்மா அப்படி பாக்குற?

அஸ்வதி விஹானை கட்டி அணைத்து கொண்டாள்…..

விஹான் நா உங்க அழகுல மயங்கிட்டேன் என்று அவள் அவனை பார்த்து அழகாக சிரித்து கொண்டே கூறினாள்……

அவளின் சிரித்த முகத்தை விஹான் ரசித்து கொண்டே பார்த்தான்……

தொடரும்…..

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்…….

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்