Loading

காதல் – 39

 

அவர்களின் காதல் பொழுதுகள் காதலாக சென்று கொண்டிருந்தது…….

 

தன் காதலிக்காக விஹான் ஒவ்வொரு பொருளையும் பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தான்……

 

அவன் வாங்கி கொடுத்த பொருட்களுக்கு மட்டுமே இன்னும் இரண்டு டிராலி தேவைப்படும் போல அவ்வளவு பொருட்கள் அவளுக்கு அவன் வாங்கி கொடுத்தான்…….

 

விஹானுக்கு நாளை மறு நாளில் இருந்து சஸ்பென்ஷன் முடிகிறது அவன் கல்லூரிக்கு சென்றாக வேண்டும் அதனால் இன்று இப்பொழுது இந்த நொடி அப்படியே கரைந்து விடாதா என்று அவன் என்னிகொண்டு இருந்தான்……

 

விஹானுக்கு அஸ்வதியை விட்டு பிரிய மனமில்லாமல் பேசி கொண்டு இருந்தான்……

 

அவனின் அந்த பதிலில் அஸ்வதி அவனின் கைகளை பிடித்து கொண்டு அவன் கையில் முத்தமிட்டாள்……

 

ஏய் என்னடி சில்லறயா குடுக்குற?

 

ஹலோ பாஸ் நம்ம இப்போ இருக்குறது பப்ளிக் பிளேஸ் இங்க இவ்ளோதான் குடுக்க முடியும்……

 

ஓஹோ மேடம் அப்படி வரீங்களோ?     இருடி நைட்டு உன்ன கவனிச்சிக்குறேன்……

 

கவனிச்சுக்கோங்க கவனிச்சுக்கோங்க என்று  அஸ்வதி விஹானை பார்த்து காதலாக சிரித்தாள்…..

 

ஏன்டி இப்படி அழகா சிரிச்சு சிரிச்சு மனுஷன கொல்லுற??

 

நீங்க மட்டும் என்னவாம்?                        என்ன பார்த்து இப்படி அழகா சிரிச்சு சிரிச்சு மயக்குறீங்க???                                  அது மட்டும் என்னவாம் என்று அவள் அவனை பார்த்து சிரித்து கொண்டே கேட்டாள்…..

 

வர வர உனக்கு வாய் அதிகமா ஆகிடுச்சுடி……

 

நா என்னோட காதல் கணவர்கிட்ட அப்படிதான் பேசுவேன் , உங்களுக்கென்ன?

 

எனக்கு ஒன்னும் இல்ல மகாராணி , நீங்க எப்படி வேனாலும் பேசுங்க ,எங்க இருந்து வேனாலும் பேசுங்க ஆனா பேசாம மட்டும் இருக்காதீங்க…..

 

அவன் அவ்வாறு கூறவும் அஸ்வதி சிரித்து விட்டாள்……

 

அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வரும்போது அவர்கள் இருவரின் படகிற்கு அருகில் கஷ்மீரி கவா டீ பவுடர் மற்றும் டிரை ப்ரூட்ஸ் விற்கும் படகு வந்தது அதையும் விஹான் அஸ்வதிக்கு நிறைய நிறைய வாங்கி கொடுத்தான்……

 

அடுத்து அவன் கூறிய வால்நட் வுட் கிரேவிங்ஸ்ஸில் செய்த ஜுவல்லரி பாக்ஸ் அவளுக்கு வாங்கி கொடுத்தான்……

 

விஹான் எங்கிட்ட ஜுவல்லரியே இல்ல ஜுவல்லரி பாக்ஸ் எதுக்குப்பா?

 

உனக்கு நா நெறய ஜுவல்லரி வாங்கி வச்சிருக்கேன் நீ ஊருக்கு கிளம்பும்போது அந்த ஜுவல்லரி எல்லாம் கொண்டு போவ அதுக்குதான் முன்னேற்பாடா இப்போ உனக்கு ஜுவல்லரி பாக்ஸ் வாங்கி தரேன்…..

 

சரி இப்போதான் நீங்க சொன்ன எல்லா பொருளும் வாங்கியாச்சுல்ல வாங்க இப்ப நம்ம ரெண்டு பேரும் போட்டிங் போகலாம் என்று இருவரும் அந்திவானம் சாயும் நேரத்தில் சூரியன் அந்த ஏரிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் நேரம் இருவரும் காதலில் மூழ்கியப்படி  படகில் கண்களோடு கண்கள் வைத்து கண்களாலே காதல் செய்து கொண்டு பயணித்து கொண்டிருந்தனர்……..

 

அப்பொழுது அங்கு வந்த சிறிய போட்டில் அவர்களின் காதலுக்கு ஏற்பப் பாடல் ஒலித்து கொண்டு இருந்தது…….

 

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே

கை தீண்டும் போது பாயும் மின்சாரமே

உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம்

இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம்

இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன்

அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன்

உன் ராக மோகனம் என் காதல் வாகனம்

செந்தாமரை செந்தேன் மழை

என் ஆவி நீயே தேவி

ராஜ ராஜ சோழன் நான்

எனை ஆளும் காதல் தேசம் நீதான்

பூவே காதல் தீவே

கள்ளுர பார்க்கும் பார்வை உள்ளுர பாயுமே

துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே

வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே

பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே

முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே

என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே

தேனோடை ஓரமே நீராடும் நேரமே

புல்லாங்குழல் தள்ளாடுமே பொன் மேனி கேளாய் ராணி”………

 

என்னடா அஸ்வி நம்ம காதலுக்கு எல்லாரும் பாட்டு போடுறாங்க?

 

எல்லாரும் போடல , நம்ம கதைய இப்போ எழுதிட்டு இருக்குற அந்த அழகான ஆத்தர்தான் நம்ம காதலுக்கு ஏத்த மாதிரி சிட்டுவேஷன் சாங் போடுறா……

 

ஏன் அவங்களுக்கு  இந்த மாதிரி சிட்டுவேஷன் சாங் போட யாரும் இல்லையா?

 

ஆமா , அவளுக்கு பாட்டு போட யாரும் இல்ல அண்ட் அவளுக்கு இந்த மாதிரி பாட்டு போட்டு ரொமான்ஸ் பண்ண ஆளு பக்கத்துல இல்லன்னு நமக்கு போட்டுட்டு இருக்கா…….

 

நம்ம காதலுக்கு அவங்க பாட்டு போடுறாங்கல்லா அவங்க காதலுக்கு நம்ம பாட்டு போடலாம் ……

 

ஓகே டன் என்று இருவரும் ஒன்றாக இணைந்து அந்த மாலை வேளையில் காதல் வேலையாக சென்று கொண்டிருந்தார்கள்…….

 

இருவரும் நீண்ட நேரம் அந்த ஏரியில் பயணித்து விட்டு மீனா பஜார் சென்றனர்……

 

அங்கு உலகப் புகழ்பெற்ற பஷ்மினா சால்வைகள்  மற்றும் கம்பளிப் போர்வை, குர்திகள், பெரன்கள் ( பாரம்பரிய உடை) போன்ற ஆடைகள் அஸ்வதிக்கு விஹான் நிறைய வாங்கி கொடுத்தான்……

 

பிறகு கைகளால் நெய்யப்பட்ட பட்டு மற்றும் கம்பளி கம்பளங்கள் , தரைவிரிப்புகள், மெத்தை விரிப்புகள் மற்றும் சுவரில் தொங்கும் அலங்காரப் பொருட்கள் அஸ்வதிக்கு வாங்கி கொடுத்தான்…….

 

விஹான் எதுக்கு இவ்வளோ வாங்குறீங்க???

 

அதெல்லாம் அப்படிதான் , நீ அமைதியா இரு என்று அவன் அவளுக்கு நிறைய வாங்கி கொடுத்தான்…..

 

அஸ்வி இந்த பட்டு கார்பெட், பெட்ஷீட், பில்லோ கவர் எல்லாம் நீ ஊருக்கு போய் உன்னோட ரூம்ல போடனும் சரியா???

 

கண்டிப்பா போடுவேன் , உங்க ஞாபகமாக நீங்க வாங்கி கொடுத்த எல்லாம்  நா என்னோட ரூம்ல  போடுவேன்……

 

அவள் அவனை பார்த்து அழகாக சிரித்து கொண்டே கூறவும் அவளின் அழகிய கன்னங்களை பிடித்து செல்லமாக கிள்ளினான்…..

 

அடுத்து ஊசி வேலைப்பாடுகளால் செய்த ஜால்  மற்றும் ஆரி வேலைப்பாடு போன்ற பாரம்பரிய எம்பிராய்டரி செய்யப்பட்ட துணிகள், திரைச்சீலைகள், குஷன் கவர்கள், பைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ட்ரெடிஷனலான ஆரி அண்ட் சோஸ்னி டிரஸஸ் வாங்கி கொடுத்தான்…….

 

நீங்க சொன்ன எல்லாம் வாங்கியாச்சு நெக்ஸ்ட் என்ன பண்ணலாம்??

 

நெக்ஸ்ட் இங்க பேமஸ்சான சாப்பாடு உனக்கு வாங்கி தாரேன் இங்க உள்ளூர் சாப்பாடு  எல்லாம் சூப்பரா இருக்கும் வா உனக்கு வாங்கி தாரேன் என்று அவன் அங்கு இருக்கும்  பிரசித்தி பெற்ற உணவகங்களுக்கு அவளை அழைத்து சென்றான்……..

 

ஃபர்ஸ்ட் சூடா ஆவி  பறக்கும் காஷ்மீரி சிக்கன் மோமோஸ்  சாப்டலாம் வா என்று இருவரும் ஒன்றாக இணைந்து சூடான சிக்கன் மோமோசை சாப்பிட்டனர் அப்பொழுது அஸ்வதிக்கு வாய் சுட்டு விட விஹான் பதறிப் போய் ஐஸ் தண்ணீர் வாங்க ஓடினான்……

 

அஸ்விம்மா இப்போ வாய் எரிச்சல் குறஞ்சிருக்கா?

 

அவனின் பதட்டமான முகத்தை பார்த்த அஸ்வதி சிரித்து கொண்டே அவனின் வியர்வை வடிந்த முகத்தை துடைத்து விட்டாள்……

 

எனக்கு இப்போ பரவாயில்ல , நீங்க உக்காருங்க என்று அவனை தன் அருகினில் அமர வைத்து விட்டு அவனிடம் பேசினாள்…..

 

என்னங்க ஏன் இவ்வளவு பதட்டம்?       இது சூடான சாப்பாடு சாப்பிட்டு வந்த ஜஸ்ட் ஒரு சின்ன வாய்  எரிச்சல் தான் நீங்க பதட்டப்படாதீங்க ……

 

அஸ்வி உன்னோட முகமே கலர் மாறிடுச்சு, நீ எனக்காக பொய் சொல்லாத உனக்கு வாய் ரொம்ப எரிச்சலா இருந்தா இதை சாப்பிட வேணாம் வச்சிரு……

 

அய்யோ எனக்கு இந்த மோமோஸ் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என்று அவள் அவன் வாங்கி கொடுத்த மோமோஸை ருசித்து சாப்பிட்டாள்……

 

அவனுக்காக அவள் சூடான , காரமான உணவுகளை உட்கொள்கிறாள் அதை பார்த்த  விஹானுக்கு அவளின் காதலை என்னி அஸ்வதியை பார்த்து ரசித்து கொண்டே இருந்தான் ……..

 

அவன் அவளை ரசித்து கொண்டு இருப்பதை அஸ்வதியும் பார்த்துவிட்டாள் இருவரின் விழிகளும் ஒன்றோடு ஒன்று விழி வீச்சில் வீனை மீட்ட ஆரம்பிக்க அவர்களின் விழி வழி காதலுக்கு ஏற்ப அந்த கடையில் பாடல் ஒலித்தது…….

 

கண்ணோடு

கண் சேரும் போது

வார்த்தைகள் எங்கே

போகும்

 

கண்ணே உன்

முன்னே வந்தால்

என் நெஞ்சம் குழந்தை

ஆகும்

 

விழியில் உன்

விழியில் வந்து விழுந்தேன்

அந்த நொடியில் என் எதிர்காலம்

நீ தான் என்று உயிர் சொன்னதே

 

வழியில் உன்

வழியில் வந்து நடந்தேன்

அந்த நொடியில் என்

வழித்துணை நீ தான்

என்று நிழல் சொன்னதே

 

உன்னோடு

வாழ்ந்திடதானே நான்

வாழ்கிறேன்

 

உன் கையில்

என்னை தந்து தோள்

சாய்கிறேன் ஓ… தோள்

சாய்கிறேன்…….

 

அந்த பாடலை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்து கொண்டனர்…….

 

நெக்ஸ்ட் உனக்கு நா காஷ்மீரி மட்டன் ஷாமி கபாப்  வாங்கி தாரேன் சாப்பிட்டு பாரு சும்மா கிஸ்ஸாவா இருக்கும் என்று ஒரே பிளேட்டில் இரண்டு ஃபோர்க்  வைத்து ரொமான்டிக் ஸ்டைலில் மட்டன் ஷாமி கபாப்பை விஹான் வாங்கி வந்தான் , ஆவி பறக்க இருந்த அந்த மட்டன் ஷாமி கபாப்பை மெதுவாக ஊதி ஊதி அவளுக்கு  வாய் மற்றும் உதடுகள் சுடாதவாறு ஊட்டி விட்டான்…….

 

விஹான் இந்த ஷாமி மட்டன் கபாப் நெஜமாவே ரொம்ப சூப்பரா இருக்குது இன்னும் ஒன்னு  சொல்லுங்க என்று அவள் அந்த ஷாமி மட்டன் கபாப்பை ரசித்து ருசித்து சாப்பிட்டாள்……

 

அஸ்வதி ஒரு பொருளை கண்ணால் பார்த்தாலே அதை அவளுக்கு சொந்தமானதாக ஆக்குபவன் அவன் வாய் திறந்து கேட்டதை வாங்கி கொடுக்காமல் இருப்பானா?                    அவள் கேட்ட ஷாமி மட்டன் கபாப்பை இரண்டு பிளேட்கள் வாங்கி வந்தான்….

 

அவன் வாங்கி வந்த ஷாமி மட்டன் கபாப்புடன் இனிப்புச் சுவையுள்ள ஷீர் மால் மற்றும் வெண்ணெய் நாண் வைத்து அஸ்வதி சாப்பிட்டாள்……

 

வாவ்….. வாவ்…….வாவ்……..                    சான்சே இல்ல ரொம்ப சூப்பரா இருக்குது விஹான் என்று அவள்  அவன் வாங்கி கொடுத்த ஷீர் மால் மற்றும் வெண்ணெய் நானை ரசித்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தாள்…….

 

அடுத்து காஷ்மீரி ஸ்டைல் தம் ஆலு அதாவது உருளைக்கிழங்கு கறி அதில் மிதமான காரம், ரிச்சான கிரேவி வைத்து அஸ்வதியிடம் விஹான் கொடுத்தான் இருவரும் மாறி மாறி ஊட்டிவிட்டு கொண்டு சாப்பிட்டனர்…..

 

அடுத்து காஷ்மீரின் ராஜா மட்டன் கறி என்று அழைக்கப்படும் ரோகன் ஜோஷ் அஸ்வதிக்கு விகான் வாங்கிக் கொடுத்தான் மென்மையான இறைச்சியில் செய்து அருமையான மணம் பரப்பி கொண்டு இருந்த ரோகன் ஜோஷை இருவரும் மாறி மாறி ஊட்டி விட்டு கொண்டு சாப்பிட்டார்கள்…..

 

கடைசியாக இனிப்பான  முடிவுக்கு,  இனிப்பான காதலுக்கு உலர் பழங்கள் வைத்து செய்த  ஐஸ்க்ரீமான குங்குமப்பூ குல்ஃபியை இருவரும் இணைந்து ஒன்றாக சாப்பிட்டனர் ……

 

இருவரும் கைகள் கோர்த்துக்கொண்டு இரவு நேர காஷ்மீரை ரசித்துக்கொண்டே ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர்…….

 

பிறகு இருவரும் அருகிலுள்ள ஒரு பார்க்கில் அமர்ந்தனர்……

 

அப்பொழுது விஹான் யாருக்கோ போன் செய்தான்…….

 

ஹலோ ரஜீக் பாய் நானும் அஸ்வதியும் இங்க மீனா மார்க்கெட் பக்கத்துல உள்ள பார்க்ல இருக்குறோம் என்கிட்ட கொஞ்சம் லக்கேஜ் இருக்குது அதை வாங்கிட்டு போய் என்னோட  ரூம்ல வச்சுடுநீங்களா?

 

சரி சார் என்று விஹான் அழைத்த ரஜீக் பாய் வந்துவிட அவரிடம் அவர்கள் அங்கே வாங்கிய பொருட்களை கொடுத்து தனது அறையில் வைத்துவிடுமாறு கூறிவிட்டு இருவரும் அந்த இரவு நேரத்தில் பணியில் நனையும் காஷ்மீரை ரசித்துக் கொண்டு சென்றனர்…….

 

அஸ்வதி உனக்கு டீச்சிங் ரொம்ப புடிக்குமா?  உன்னோட காலேஜ்ல ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் எப்படி? உன்கிட்ட நல்லா பேசுவாங்களா?

 

எனக்கு சின்ன வயசுல இருந்தே டீச்சிங்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்னோட காலேஜ்ல ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் என்கிட்ட ரொம்ப நல்லா பேசுவாங்க என்கிட்ட ரொம்ப பாசமா இருப்பாங்க எனக்கு காலேஜ் போனா வீட்டையே மறந்துவிடுவேன் அவ்வளவு ஜாலியா இருக்கும்……

 

அப்போ ஊருக்கு போன பிறகு என்ன மறந்துடுவியா???

 

மறப்பேன் என்றே நினைத்தாயோ…..

என்னையே தந்தேன் உனக்காக ….

ஜென்மமே கொண்டேன் அதற்காக”…..

 

என்று அஸ்வதி வி ஹானை பார்த்து பாடினாள்…….

 

ஏய் என்னடி செல்லம் அழகா பாட்டெல்லாம் பாடுற??

 

உங்களுக்காக ஒரு சின்ன முயற்சி, எப்படி இருக்கு?

 

சூப்பரா இருக்கு என்று அவன் அவளின் தோள்களில் கை போட்டவாறு காதலாக கை கோர்த்தவாறு நடந்து சென்று கொண்டு இருந்தார்கள்……..

 

காதல் பொழுதுகள் இனிமையாக சென்று கொண்டிருக்கிறது…….

 

பார்ப்போம்….

 

தொடரும்…..

 

உங்களின் பொன்னான கருத்துக்களை ஆவலோடு எதிர்பார்க்கும் உங்களின் நான்……….

 

❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕❄️💕

 

 

Click on a star to rate it!

Rating 4.6 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
3
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்