
அத்தியாயம் 17
ஆதவனின் கதிர்கள் சாளரத்தின் வழியே நுழைந்து ஷேவ் செய்யப்படாத
கார்த்திக்கின் கன்னத்தில் பட்டுத் தெரித்தது.
மெதுவாக கண்ணைக் கசக்கிக் கொண்டு கண் விழித்தவன் முகத்திற்கு அருகில் குழந்தையைப் போல் லேசாக வாயை திறந்து கொண்டு தூங்கிய வர்ஷூவை கண்டு ஆனந்தமாக அதிர்ந்தான்.
“வாவ்வ்வ்வ்!!!! இதல்லவோ இனிமையான காலை…கலையிலே தேவி தரிசனம் அதுவும் இவ்ளோ கிட்ட !!! அய்யோ என்னென்னமோ பண்ணுதே..நேத்து வேற வீராப்பா அவகிட்ட உன் சம்மதம் இல்லாம தொட மாட்டேன்னு வாயை கொடுத்துட்டோமே..இராட்சஷி காலையிலே இவ்வளவு அழகா என் கண்ணுக்கு விருந்து குடுத்தா மாமன் என்னாகுறது …உன்ன எதாச்சும் பண்ணனும்னு தோணுது..நடுவுல இந்த வாக்கு குடுத்தது வந்து முட்டுக்கட்டை போடுது” என புலம்பியவன் பின்,”நான் என்ன தவசியா ,”துளசி கூட வாசம் மாறுனாலும் மாறும் ஆனால் இந்த தவசி வார்த்தை மாற மாட்டான்னு சொல்லிட்டு திரிய” நான் தி கிரேட் கார்த்திக் ..அவ தான் தூங்குறால ..லைட்டா அவ கன்னத்துல மட்டும் பப்பி கிஸ் பண்ணிரலாம் அதெல்லாம் தொட்ட கணக்குல வராது..கையில தான தொட மாட்டேன்னு சொல்லிருக்கேன் உதட்டுல தொடலாம்ல ..நீ அறிவாளி டா கார்த்திக்” என தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு மெதுவாக அவள் கன்னத்தை நோக்கி குனிய அப்போது பார்த்து கண்விழித்த வர்ஷூ தன் முகத்திற்கு மிக மிக அருகில் தெரிந்த கார்த்திக்கின் முகத்தை கண்டு பயந்தவள் ,”அம்மாஆஆஆஆ” என அவன் தடுப்பதற்குள் கத்தி விட்டாள்.
அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்புவதில் பரபரப்பாக இருந்ததால் இவள் கத்தியது நல்லவேளை யாருக்கும் கேட்கவில்லை.
யாரும் வராததால் பெருமூச்சு விட்ட கார்த்திக் ,தன் மனையாளை பார்க்க அவளோ அனல் கக்கும் விழிகளுடன் இவனை பார்த்து ரொமான்டிக் லுக் விட்டுக் கொண்டிருந்தாள்.
“நீயெல்லாம் ஒரு மனுஷனா ..நேத்து தான் ஏதோ ரொம்ப ரொம்ப நல்லவன் மாதிரி டயலாக் பேசுன..நானும் அந்த நடிப்பை உண்மைன்னு நம்பி உன்னை பெட்ல படுக்க விட்டேன் பாரு என் புத்தியை பேட்டா செருப்பாலையே அடிச்சுக்கனும்” என்று பொரிந்தவளை கண்டு நக்கலாக புன்னகைத்தவன் ,”சாரி பொண்டாட்டி நான் பேட்டா யூஸ் பண்றது இல்லை..அதுவும் இல்லாம இங்க வீட்டுக்குள்ளலாம் செருப்பு கிடையாது” என கூறியவனை கண்டு பற்களை நற நறவென்று கடித்தவள்,”யூ யூ சீட் ..இடியட்..மான்ஸ்டர்…ஐ ஹேட் யூ” என கத்தியவளை அடக்கியவன்,”ஹலோ மேடம்,கொஞ்சம் நல்லா கண்ணை திறந்து பாருங்க…யாரு அந்த பெரிய சீன பெருஞ்சுவரை(தலையணை) தாண்டி வந்து என் மேல கை கால் எல்லாம் போட்ருக்கான்னு ” என புருவத்தை ஏற்றி இறக்கினான்.
அப்போது தான் தன்னிலை உணர்ந்தவள்,பட்டென அவன் மீதிருந்து கை கால்களை அகற்றினாள் ,’அய்யோ வர்ஷூ மானம் இப்படி மருதமலை ஏறிப் போய்ருச்சே,கருமம் இவன் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான்..என்ன வர்ஷூ இப்படி சொதப்பிட்ட இதுக்கு பயந்து தான் அவ்ளோ தலைகாணி வச்சிருந்தேன்..அப்படியும் போயும் போயும் அவன் மேல விழுந்திட்டயே ‘ என மனதிற்குள் புலம்பிவிட்டு அவன் முகத்தை பார்க்க முடியாமல் “சாரி” என அவளுக்கே கேட்காத குரலில் சொல்லிவிட்டு சிட்டாக குளியலறைக்குள் சென்று மறைந்தாள்.
“கிரேட் எஸ்கேப் கார்த்திக்!!!..நல்லவேளை அந்த லூசு நான் என்ன நினைப்பேன்னு பயந்துட்டே இருந்ததுனால கிஸ் பண்ண போனதை விட்ருச்சு..இனிமேல் இவகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும்..ஆனாலும் நீ ரொம்ப ஸ்வீட் டி ரசகுல்லா” என பெருமூச்சு விட்டவன் ,காலைவில் தனக்கு கிடைத்த தரிசனத்தை மனக்கண்ணில் நினைத்து இரசித்துக் கொண்டே படுத்திருந்தான்.
உள்ளே வந்த வர்ஷூ அதன் பின்பே தான் உடை எதும் எடுத்துக் கொண்டு வரவில்லை என்பது நினைவில் வர ,”அட லூசே நல்லவேளை இப்பயாச்சும் பார்த்த இல்லைனா என்ன ஆய்ருக்கது..சும்மாவே அந்த கிறுக்கன் முன்னாடி இமேஜ் டேமேஜ் ஆய்ருச்சு..இதுல ட்ரெஸ் எடுத்துட்டு வரலை எடுத்துக்குடுனு சொன்னோம் அவ்ளோ தான்..ஆஞ்சநேயரை ஆட்டோல ஏத்தி அனுப்பிட்டு கிருஷ்ண பரமாத்மாவா மாறிருப்பான்..” என புலம்பிவிட்டு, கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள் அங்கே தன்னை குழப்பமாக பார்த்து கொண்டிருந்தவனை கண்டு கொள்ளாது தன் உடைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டு கதவை ‘பட்’ என அறைந்து சாத்தினாள்.
“அடச்சை நல்ல சீன் மிஸ் ஆய்ருச்சே..இந்த படத்துலலாம் பொண்டாட்டி ட்ரெஸ் எடுக்க மறந்துட்டு போனா புருஷன் எடுத்துட்டு போய் குடுத்து பாத்ரூம்ல ஒரு சீன் நடந்து அங்கேயே ஒரு சாங்க் பாடிருப்பானுங்க..உனக்கு குடுத்து வச்சது அவ்ளோ தான் டா கார்த்திக்” என நொந்து கொண்டவன் மீண்டும் கட்டிலில் விழுந்து கனவு காண ஆரம்பித்தான்.
ஹரியின் அறையிலோ, எப்பொழுதும் 5.30 மணிக்கே எழுந்து பழக்கமாகியதால் இன்றும் அதே போல் ஹரிக்கு விழிப்பு தட்டி விட, மெதுவாய் கண் விழித்தவன் ,தன் மார்பில் படுத்து தன்னை நன்றாக கட்டிப்பிடித்து உறங்கிக் கொண்டிருந்த ஸ்ரீயை கண்டவனது முகத்தில் புன்முறுவல் தோன்றியது..
அவளை கண்ணெடுக்காமல் ரசித்தவன்,பின் அவளை சீண்டிப் பார்க்க எண்ணி மெதுவாக அவள் கைகளை விலக்கி விட்டு எழுந்து அவள் துயில் கலையாமல் பார்த்து தலையணையில் படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தான்.
அவளை பார்த்து மர்மமாக புன்னகைத்தவன்,”இன்னைக்கு உனக்கு இருக்குடி என் குட்டச்சி” என கூறிக்கொண்டு வேகமாக அலமாரியில் சென்று ஏதோ தேடியவன் அது கிடைத்ததும்,”யாஹூ”என விசிலடித்துக் கொண்டே அதை எடுத்துக் கொண்டு அவளிடம் சென்றான்.
அவள் அருகே கட்டிலில் சென்று அமர்ந்தவன் அவள் முகத்தில் தான் கொண்டு வந்திருந்த பெயின்டிங்க் ப்ரஷை வைத்து வண்ணங்களை தொட்டு பேய் போல் வரைய ஆரம்பித்தான்.
ஹரி சிறுவயதில் இருந்தே Face painting நன்றாக பண்ணுவதால் அவனுக்கு இது சுலபமாக இருந்தது..
ஆனால் இதில் கொடுமை என்னவென்றால்,அவன் முகத்தில் இத்தனை கோலம் போட்டும் அவன் மனையாள் சிறிதும் அசையவில்லை, கும்பகர்ணனின் கூடப் பிறந்தவள் போல் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.
அனைத்தையும் முடித்து விட்டு அவள் முகத்தைப் பார்த்தவன்,”பக்கா!!இப்ப தான் ரொம்ப ரொம்ப அழகா இருக்க பொண்டாட்டி” என திருஷ்டி கழித்தவன் ,தன் அடுத்த கட்ட திட்டமாக , விஜய்,நந்துவிற்கு அழைத்து மிகவும் பதட்டமாக “உடனே ரூமுக்கு வாங்க” என கூறிவிட்டு அவர்கள் பேசுவதற்கு வாய்ப்பே கொடுக்காமல் கட் செய்து விட்டு மீண்டு கட்டிலில் வந்து படுத்துக் கொண்டு உறங்குவது போல் பாசாங்கு செய்தான்.
இவன் பேசியதில் தூக்கத்தில் இருந்து எழுந்து அடித்து பிடித்து எழுந்தவர்கள்,விஜய் ஆதியையும் ,நந்து மது ,நிஷாவையும் அழைத்துக் கொண்டு இவர்கள் அறைக்கு வந்தனர்.
அப்போது இவர்களைக் கண்ட விஜய் குழப்பமடைந்து,”உங்களுக்கும் கால் பண்ணானா?” என கேட்க, நந்துவும் அதே குழப்பத்தோடு ,”அப்போ உங்களுக்கும் கால் வந்துச்சா??” என பதில் கேள்வி கேட்டாள்.
அவள் பதிலில் குழப்பம் மேலோங்க,”இந்த லூசுப்பய எதுக்கு எல்லாரையும் வர சொல்லிட்டு கதவை மூடி வச்சிருக்கான்”என கதவைத் தட்ட,
‘ஆமா இவ அவ மூஞ்சில வாசல் தெளிச்சு கோலம் போட்டே எழுந்திரிக்கலை இவன் தட்டுனதும் எழுந்துருவா பாரு..ஹரி நீ தான் எதாச்சும் பண்ணனும் ‘என கூறிக்கொண்டு ,
“லட்டு லட்டு ” என அவளை உலுக்கினான். அப்போதும் அவள் அசையாமல் தூங்கிக் கொண்டிருக்க,அவள் காதிற்குள் சென்று ,”லட்டூஊஊஊஊ” என கத்தினான்.
இவன் கத்தியது வெளியே இருப்பவர்களுக்கே கேட்டு விட ,”பரதேசி லட்டு வேணும்னாடா என் தூக்கத்தை கெடுத்த ..கருமம் கருமம் ..ஏய் உன் அண்ணன் என்ன லூசா டி..லட்டு வேண்டும்னா ஃப்ர்ஸ்ட் நைட் ரூம்லயே பால் ,பழம்,ஸ்வீட் எல்லாம் வச்சிருப்பாங்கள அதை கூட பார்க்காம என்னத்தை செஞ்சானோ” என்றவனை பார்த்து ‘கல்யாணம் ஆகி இத்தனை மாசம் ஆகியும் லூசு மாதிரி பேசுறத பாரு..இந்த பிள்ளைங்க முன்னாடி என் மானத்தை வாங்குறான்’ என நினைத்து ஆதிரா தலையில் அடித்துக் கொள்ள மற்ற மூன்று பெண்களோ சிரிப்பை அடக்கிக் கொண்டு நின்றனர்.
உள்ளிருந்த ஸ்ரீயோ பொறுமையாக,”என்ன க்ரிஷ் எதுக்கு கூப்பிட்ட” என கண்ணை மூடிக் கொண்டே வினவ அதில் நொந்து போனவன் ,”லட்டு மா யாரோ கதவை தட்டுறாங்க யாருனு போய் பாருடா செல்லம்” என கெஞ்சினான்.
“ச்சூ போ க்ரிஷ் ..நீ தான் முழுச்சிருக்கல..நீயே போய் திற..நான் தூங்கணும்” என மீண்டும் அவன் மார்பில் தலை வைத்துப் நன்றாக படுத்துக் கொண்டாள்.
‘இவ போறதுக்குள்ள அவங்க போய்ருவாங்களே’ என புலம்பியவன் ,”இல்லை பேபி இங்க பாரு நான் ஷார்ட்ஸ் அண்ட் கையில்லாத பனியன் போட்ருக்கேன்..ஒரு வேலை பொண்ணுங்க யாரச்சும் வந்துட்டா ..நீ பார்க்க வேண்டிய உடம்பை எல்லாரும் பாத்துருவாங்கல அதான் டா..நீ என் செல்லம்ல போய் திற டா” என போட்டானே பார்க்கலாம் ஒரு பெரிய பிட்டை!!! ஷப்பா முடியலை…
சிறிது நேரம் யோசித்தவள், “நீ சொல்றதும் கரெக்ட் தான்” என லூசுத்தனமாக உளறிவிட்டு மெதுவாக எழுந்து தட்டுத் தடுமாறி கண்ணைக் கசக்கிக் கொண்டே போய் கதவை திறந்தாள்.
கதவு திறந்ததும் திரும்பியவர்கள், இவளை பார்த்து “ஆத்தாடி பேய்!!!!” என விஜய் கத்திக் கொண்டே ஆதிராவின் முதுகுக்குப் பின் ஒளிந்து கொள்ள, நிஷா ஓடியே போய் விட்டாள்.நந்து,மது,ஆதி மட்டும் இவளை பார்த்து அடக்க மாட்டாமல் சிரிக்க, ஒன்றும் புரியாது குழம்பிய ஸ்ரீ “ஏய் எருமைங்களா காலங்காத்தால என் ரூமுக்கு வந்து கதவை தட்டுனதும் இல்லாம இப்போ பேய் மாதிரி சிரிச்சிட்டு இருக்கீங்க!!! என்னன்னு சொல்லிட்டு சிரிச்சு தொலைங்க” என சிடுசிடுத்தாள்.
“அடியேய் நீ தான் டி பேய் மாதிரி மேக்கப் போட்டுட்டு வந்து எங்களை பயமுறுத்துற ..இதுல எங்களை பேய்னு சொல்றியா” என மது எகிற,
விஜயோ ,”ஏம்மா நீங்க தான இந்த பிள்ளையை நேத்து அலங்காரம் பண்ணது..பேய் மாதிரி மேக்கப் போடுறதுனா இதுதானா!!!!இப்படியா பண்ணி அனுபுவீங்க..ஃப்ர்ஸ்ட் நைட்ல பொண்டாட்டிய இப்படி பார்த்துட்டு என் உயிர் நண்பன் இன்னும் உயிரோட இருக்கானான்னு தெரியலையே ..மச்சான் மச்சான் உயிரோட இருக்கியாடா” என சப்தம் போட்டான்.
இவர்கள் பேசியது ஒன்றும் புரியாமல் முழித்தவளை கண்டு ,தன் செல்போனை எடுத்து front cameraவை ஆன் செய்து அவள் முகத்தின் முன் காட்டினாள் ஆதிரா.
செல்போனில் தெரிந்த தன் பிம்பத்தைக் கண்டு அரண்டு போனவள் பயத்தில் போனை தட்டிவிட அவளை முறைத்துக் கொண்டே ஆதிரா அதை கீழே விழாமல் கரெக்டாக கேட்ச் பிடித்தாள்.
இதற்கெல்லாம் காரணம் ஹரி தான் என்பது மிக தாமதமாக புரிய திரும்பியவள் அங்கே இவை அனைத்தையும் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த ஹரியை கண்டு ,”டேய் பன்னி உன்ன சும்ம விட மாட்டேன் இன்னைக்கு நீ செத்த டா!!!” என அவனை நோக்கி வர அவன் அதற்குள் கட்டிலைச் சுற்றி ஓட ஆரம்பித்தான்.
இவளும் விடாது அவனை துரத்திக் கொண்டிருந்தாள், அவனை திட்டிகொண்டே.
இவர்கள் சப்தத்தில் தன் அறையில் இருந்து வந்த கார்த்திக்,”டேய் வெக்கம் கெட்டவனே அவனோட ஃப்ர்ஸ்ட் நட் ரூமுக்கு முன்னாடி நின்னு அவங்களை ஆஆஆ பார்த்துட்டு இருக்க” என அவன் மண்டையில் அடிக்க,
“ஆமா அவன் அங்க மிட் நைட் ஷோ காமிச்சிட்டு இருக்கான் நாங்கெல்லாம் அதுக்கு டிக்கெட் வாங்கி பார்த்துட்டு இருக்கோம் பாரு..போடா என் சிப்ஸு..அந்த லூசு பய ஃபர்ஸ்ட் கான்ஜூரிங்க் படம் காமிச்சான் இப்போ டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் காமிக்கிறான் டா காலங்காத்தால.. நீயே அந்த கொடுமைய பாரு” என அவனையும் இழுத்து விட, கார்த்திக்கோ அவர்களை பார்க்காமல் கலைந்து கிடந்த கட்டிலை பார்த்து ,”அப்போ அவனுக்கு நான் நினைச்ச மாதிரியே முடிஞ்சிருச்சு ..கார்த்திக் என்ன டா இது உனக்கு வந்த சோதனை..டேய் ஹரி.. பொரி ..எனக்கு ஏறுது வெறி..ட்ரைலர்ல வேணா நீ முந்திருக்கலாம் ஆனா பாரு என் பொண்டாட்டி மனசை மாத்தி தீயா வேலை செஞ்சு உனக்கு முன்னாடி நான் என் படத்தை( குழந்தை) ரிலீஸ் பண்ணி காட்டல என் பேரு கார்த்திக் இல்லைடா” என கேவலமான சபதம் ஒன்றை மனதிற்குள் போட்டுக் கொண்டான்.
இவர்கள் அடித்த கூத்தில் மேலே வந்த தாத்தா,”இதென்ன வீடா இல்லை வனவிலங்கு சரணாலயமா?? என்ன நடக்குது இங்க??கொஞ்சம் கூட வயசுக்கு ஏத்த மாதிரி நடக்குறீங்களா.. ஒழுங்கா எல்லாரும் போய் இன்னும் அரை மணி நேரத்துல குளிச்சு கிளம்பி வர்றீங்க” என கர்ஜித்து விட்டு போக விளையாடிக் கொண்டிருந்த ஹரி, ஸ்ரீ கூட தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட மற்றவர்களும் அங்கிருந்து தத்தம் அறைக்கு ஓடினர்.
போகும் போது விஜய் ,”கார்த்தி மச்சான் உன் ரூமிலிருந்த வந்த எந்த சத்தத்தையும் எங்க குலசாமி செல்லாத்தா சத்தியமா நான் கேட்கலை” என கூறி கண்ணடித்து விட்டு ஓடி விட்டான்.
“அய்யய்யோ போயும் போயும் இந்த டமாரத்தோட காதுலயா விழனும் ..இதை வச்சு இன்னும் என் பிள்ளை ஃபர்ஸ்ட் நைட் வரைக்கும் ஓட்டுவானே” என நினைத்துக் கொண்டே கார்த்திக் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.
தாத்தா கூறிவிட்டு சென்றது போல் அனைவரும் அரைமணி நேரத்தில் கிளம்பி வந்ததும் உண்டுவிட்டு தங்கள் குலசாமி கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து விட்டு வந்தனர்.
தாத்தாவும் கூடவே வந்ததால் எந்த வம்பும் வளர்க்காமல் அமைதியாக அந்த பயணம் முடிவடைந்தது.
வீட்டிற்கு வந்து அனைவரும் சோர்வாக ஹாலிலே ஒவ்வொரு மூலையில் அமர, ஹரி மெதுவாக அனைவரையும் பார்த்து,”நாங்க இன்னைக்கே சென்னைக்கு கிளம்புறோம்..எனக்கும் வேலை நிறையா அப்படியே நிக்குது..ஸ்ரீக்கும் இன்டெர்னல்ஸ் ஸ்டார்ட் ஆய்ரும்..சோ நைட் கிளம்புனா தான் சரியா இருக்கும்” எனறு கூறினான்.
இதை அனைவரும் எதிர்பார்த்ததால் மறுப்பேதும் கூறாமலிருக்க கலைவாணி மட்டும் குறும்பாக ,”ஆமா ஹரி நீ போய் குட்டிமாவை காலேஜ்ல விட்டுட்டு உன் வீட்டுக்கு போய்ரு..அவளுக்கும் டையர்டா இருக்கும் நாளைக்கு ஃபுல்லா அவ ஹாஸ்டல்ல ரெஸ்ட் எடுத்துட்டு திங்கள் கிழமை காலேஜ் போக சரியா இருக்கும்” என இருவர் தலையிலும் ஆஞ்சநேயரிடம் சொல்லி சஞ்சீவி மலையையே தூக்கி போட்டார்.
“ஆட்டம்மாஆஆஆ” என ஸ்ரீயும் ,”அம்மாஆஆஆ” என ஹரியும் அதிர்ந்து போய் கத்த, அவரோ கூலாக ,”என்னடா ..நீயும் கார்த்தியும் தான் ஒன்னா ஒரே வீட்ல இருந்தீங்க ..இப்போ திடீர்னு ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆய்ருச்சு ..அப்போ நீயும் ஸ்ரீயும் ஒன்னா இருந்தா என் கார்த்திக் கண்ணா என்ன நடுவீதிலயா நிப்பான்..அதுனால எப்பயும் போல நீயும் கார்த்திக்கும் அந்த வீட்ல இருங்க,ஸ்ரீயும் வர்ஷூவும் ஹாஸ்டல்லயே இருக்கட்டும்” என முடிவாக கூறினார்.
அதுவரையில் ஹரியை நினைத்து சிரித்துக் கொண்டிருந்த கார்த்திக்,இப்பொது தனக்கே ஆப்படிக்கவும் முதல் ஆளாக,” பெரியம்மாஆஆஆ..ஆல்ரெடி கல்யாணம் ஆகி இத்தனை வருஷமா இந்த குரங்கு கூட தான் குடித்தனம் நடத்துனேன்..இப்பவும் இவன் கூடயே இருன்னு சொல்றீங்க..என்ன பார்த்தா பாவமா இல்லையா” என கெஞ்சியவனின் கைகளில் கிள்ளினாள் வர்ஷூ.
அவள் கையை தட்டி விட்டவன்,”அட கம்முனு கெட மா இது என் வாழ்க்கை பிரச்சனை இதுக்கு நீதி கிடைக்காம நான் ஓய மாட்டேன்” என்று போட்டுக் குடுத்தவனை முறைத்தவள் ‘எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குது பக்கி!!!’ என முனுமுனுத்தாள்.
ஹரியோ தன் அம்மாவை பார்த்து,”அம்மா இப்போ உங்க செல்ல பிள்ளை கார்த்திக் எங்க தங்குவான்னு தான பிரச்சனை..அதை பத்தி நீங்க ஒன்னும் கவலை படாதீங்க..கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கே எங்க ப்ளாட்க்கு எதிர்ல இருக்க ப்ளாட்டை கார்த்திக்கு வாங்கிட்டேன் என் ப்ரெண்டை வச்சு..வீட்டுக்கு தேவையான எல்லாமே கூட வாங்கி போட்டாச்சு..சோ உங்க பையன் நடுத்தெருலலாம் நிக்க மாட்டான்..நல்லா திவ்யமா நாராயணா அப்பார்ட்மென்ட்ல நாலு ஏசி உள்ள ப்ளாட்ல நட்ட நடு ஹால்ல தான் நிப்பான்..அதுனால என்னையும் என் பொண்டாட்டியையும் பிரிக்க ப்ளான் போடாதீங்க..அவ என் கூட தான் இருப்பா என்னைக்குமே” என்று உறுதியாக கூறிவிட்டான்.
அவன் கூறியதும் தான் ஸ்ரீக்கும் கார்த்திக்கும் போன உயிர் திரும்பி வந்தது..வர்ஷூவிற்கோ ‘இவன் கூட ஒன்னா ஓரே வீட்ல தனியா இருக்கனுமா’ என்று பயமாக இருந்தாலும் அதே சமயம் சற்று மகிழ்ச்சி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.
கார்த்திக்கோ ,’கல்யாணத்தன்னைக்கு என் மேல அவ்ளோ கோவம் கொண்டு பேசாம இருக்கும் போதே எனக்கு வேண்டியதை எனக்காக யோசிச்சு செஞ்சிருக்கியே டா.. என்ன மன்னிச்சிரு ஹரி..நீ இப்படி தான் எனக்காக என்ன வேணாலும் செய்வன்னு தெரிஞ்சு தான் உனக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாதுன்னு உன் கிட்ட கூட இந்த கல்யாணத்தை பத்தி மறைச்சுட்டேன்’ என அவனின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தவன் திருமணம் ஆன தினத்திலிருந்து இன்று வரை தினமும் அவனிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருப்பதையும் மறக்கவில்லை..
ஸ்ரீயோ ஹரியின்செயலைக் கண்டு ,’கல்யாணத்துல அவ்ளோ கலாட்டா நடந்தும் ,எல்லாரை பத்தியும் சிந்திச்சு பொறுப்பா நடந்துக்குறியே டா புருஷா!!! இது இது இதுக்காகத்தான் உன் மேல பைத்தியமா இருக்கேன்’ என்று நினைத்தவளுக்கு இவன் என் கணவன் என்ற பெருமை முகத்தில் மிளிர்ந்தது.
பெரியவர்களும் இவனின் சமயோஜித புத்தியை மனதில் பாராட்டிக் கொண்டு வெளியே ஒன்றும் கூறவில்லை.
இங்கே இவ்வளவு பிரளயம் நடந்து கொண்டிருக்க, விஜயோ இது எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தரையில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.
இதை கவனித்த பாட்டி,”இந்த வீட்டோட இராசியா இது வந்ததும் சரியில்லை வாய்ச்சதும் சரியில்லை” என புலம்ப தாத்தா அவரை திரும்பி ஒரு தீப்பார்வை பார்த்தார்.
அதில் அவர் வாயை கப்சிப் என மூடிக்கொள்ள ..”சரி போய் எல்லாரும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தரிச்சு பிராயாணத்துக்கு தேவையானதெல்லாம் எடுத்து வச்சு கிளம்புங்க நைட் சாப்பிட்டு புறப்படலாம்” என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவரைத் தொடர்ந்து அனைவரும் தங்களது அறைக்கு செல்ல, கார்த்திக் மட்டும் ஹரியின் கையைப் பிடித்து தடுத்து அவனை பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.
இதைப் பார்த்த ஸ்ரீ ,”டேய் தள்ளிப்போடா நான் தான் அவன் பொண்டாட்டி நீ என்ன ஆன்னா ஊன்னா இவனை வந்து கட்டிப்பிடிக்குற ..போ போய் உன் பொண்டாட்டிய கட்டி பிடி ” என இருவரையும் பிரித்து விட ,’ஆமா அவ பிடிக்க விட்டுட்டாலு…ம் ‘ என முனுமுனுத்து விட்டு ,”ஏய் குள்ளக்கத்திரிக்கா ஒழுங்க ஓடி போய்ரு,உனக்கு முன்னாடி இருந்தே அவன் எனக்கு அண்ணன் ..எங்களுக்குள்ள வந்த உன்னை நான் டைவர்ஸ் பண்ணிருவேன்” என்று கூற , அவனை புரியாமல் பார்த்த ஸ்ரீ ,”லூசு மாங்காய் நீ எப்படிடா என்னை டைவர்ஸ் பண்ணுவ” என்று கேட்டாள்.
ஆனால் பதிலளிக்கும் நிலமையில் அவர்கள் இருந்தால் தானே , இருவரும் பாசமழையை பொழிந்து கொண்டிருக்க ,ஸ்ரீக்கு மட்டும் அந்தக் காட்சியை பார்த்து Backgroundஇல்
“நம்மை போல நெஞ்சம் கொண்ட அண்ணன் தம்பி யாரும் இல்லை
தன்னைப் போல என்னை எண்ணும் நீயும் நானும் ஓர் தாய்ப் பிள்ளை” என்ற பாடல் ஓடியது.
“எப்படியோ போய் தொலைங்க” என்று ஸ்ரீ தங்கள் அறைக்குள் சென்று மறைய, இவர்களிருவரும் தோட்டத்திற்கு சென்று வெகு நேரம் எதைப் பற்றியோ தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருந்தனர்.இருவரின் முகமும் அதை விட தீவிரமாக இருக்க, ஒரு மணி நேர விவாதத்திற்கு பின் எதையோ முடிவெடுத்து விட்டதைப் போல் இருவர் முகமும் தெளிவாகியது.அதன் பின்னே இருவரும் தங்களது அறைக்கு சென்றனர்.
அனைத்து ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என நாட்கள் வேகமாக உருண்டோட,இவ்வளவு நாள் கலகலப்பாக இருந்த வீடு இனிமேல் என்றும் போல் அமைதியாக இருக்கப் போகிறது என்று நினைத்தே பாட்டிக்கு மிகவும் கவலையாக இருந்தது..தன்னைத் தேற்றிக் கொண்டவர், இரு ஜோடிகளுக்கும் தேவையான பொருட்களை எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
இரவு உண்டு விட்டு அனைவரும் கிளம்ப தயாராக இரு ஜோடிகளும் பெரியவர்கள் காலில் சென்று விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
பாட்டி கார்த்திக்கிடம் பேசாவிட்டாலும் முன்பு போல் முகத்தை திருப்பிக் கொள்ளவில்லை..அவனுக்கு அதுவே போதுமானதாக இருக்க திருப்தியாக புன்னகைத்தான்.
பின் இராஜலெக்ஷ்மி வர்ஷூவின் பிரிவை நினைத்து கண்ணீர் விட,வர்ஷூவும் அன்னையைக் கட்டிக் கொண்டு அழுக ஆரம்பித்தாள்.வசந்தகோபாலனுக்கும் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் பாசமாக வர்ஷூவின் தலையை வருடிக் கொடுத்தார்.
இதைக் கண்ட ஸ்ரீ,”நீங்கெல்லாம் ஒரு அப்பா அம்மாவா பாருங்க அவங்கெல்லாம் அவங்க பொண்ணை விட்டு பிரியுற துக்கத்துல எப்படி அழறாங்கன்னு நீங்களும் இருக்கீங்களே ஈஈன்னு இழிச்சுகிட்டு ..எப்போடா கிளம்புவான்னு வெய்ட் பண்ணிட்டு தான இருக்கீங்க” என்று தன் பெற்றோரிடம் பொரிய, நல்லசிவமோ ,”அதை எப்படிடா எங்க வாயலையே சொல்றது” என சிரிப்பை அடக்கிக் கொண்டு கூற ,”யூ டூ அப்பா” என சிணுங்கினாள்.
சாருமதியோ,”ஏய் என்னமோ இவ்ளோ நாளா எங்க கூட இருந்த மாதிரி சொல்ற பிறந்ததுல இருந்த நம்ம வீட்ல இருந்ததை விட உன் மாமியார் வீட்ல இருந்தது தான் அதிகம்..இந்த நாலு வருஷமும் வீட்டுக்கே வராம காலேஜ்ல குப்பை கொட்டுன..அப்பலாம் அழுகாம இப்ப மட்டும் அழுக சொல்றியா” என அவள் காதைப் பிடித்து திருகினார்.
உண்மையில் அவர்களுக்கு உள்ளுக்குள் எல்லா பெற்றோர்களுக்கும் எழும் வருத்தம் தோன்றினாலும், தாங்கள் வருந்தினால் கண்டிப்பாக ஸ்ரீயும் வருந்துவாள் என தங்கள் சோகத்தை மறைத்து அவளிடம் வம்பு வளர்த்தனர்.
ஸ்ரீக்கும் அது புரிந்ததால் அவளும் அவர்களை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.
“டேய் அச்சு குட்டி உனக்கு கூட அக்காவ பிரியுறோம்னு வருத்தம் இல்லையா” என அஷ்வினிடம் கேக்க அவனோ அவளை கட்டிக் கொண்டு,சோகமாக முகத்தை வைத்து,”ரொம்ப ரொம்ப ஜாலியா இருக்கு,இனிமேல் மாமா பாடு உன் பாடு நாங்க நிம்மதியா இருப்போம் ” என கூற “யூ ராஸ்கல்” என அவனை அடிக்க துரத்தினாள்,
இவர்களின் விளையாட்டை பார்த்து வர்ஷூவும் நார்மலாகி சிரித்து விட,கார்த்திக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது..அவளும் தன் மேல் காதல் கொண்டு மனமொத்த தம்பதியராய் வாழ்ந்திருந்தால் அவளை கட்டியணைத்து சமாதானப் படுத்தியிருப்பான்..இப்போது ஒன்றுமே செய்ய முடியாத தன் நிலையை அறவே வெறுத்தான்.
அதன் பின் இவர்களுக்கு தின்பண்டம்,மளிகை பொருட்கள்,காய்கறிகள் என அதுவே ஒரு கார் முழுக்க நிறைத்து அனுப்ப,
ஸ்ரீயும் ,வர்ஷூவும்,இனிமேல் விடுதியில் தங்க முடியாது என்பதால் தங்கள் தோழிகளுடன் வருவதாக கூறி தங்கள் கணவர்களின் ஆசையில் ஒரு லோடு மண்ணை அள்ளி போட்டனர்.
விஜயோ அவர்களை பார்த்து நக்கலாக சிரிக்க, அதில் கடுப்பான ஹரியும் கார்த்திக்கும் ,’நீ மட்டும் எப்படி உன் பொண்டாட்டி கூட போறேன்னு நாங்களும் பார்க்குறோம்’ என மனதில் கருவிக் கொண்டு ,ஆதிராவிடம் “பாசமலரே ,நீயும் அந்த அறுந்த வாலுங்க கூட விஜய் காருல கிளம்பு…இந்த மளிகை ஜாமான் வச்ச காருல உன் மாமனார் மாமியார் வரட்டும்..நான்,ஹரி,மச்சானும் ஹரி கார்ல வந்துருறோம்” என விஜய்க்கான சதித்திட்டத்தை செயல்படுத்த, ஆதிராவோ மிகவும் ஜாலியாக ,”டபுள் ஓகே அண்ணா” என கூறிவிட்டு முதல் ஆளாக போய் காரில் அமர்ந்து கொள்ள,விஜய் தலையில் அடித்துக் கொண்டான்.
இருகாரின் டிரைவரிடமும் ஆயிரம் அறிவுரைகளைக் கூறிய ஹரியும் கார்த்திக்கும் வந்து தங்கள் காரை எடுத்தனர்.
“என்ன மாப்பிள்ளை வரியா இல்லை இங்கேயே பாட்டி கூட இருந்துக்கிறியா” என கார்த்திக் நக்கல் பண்ண,
“வரேன் வந்து தொலைக்கிறேன் வேற வழி..” என அவர்களை முறைத்துக் கொண்டே காரில் ஏறி அமர்ந்தான்.
அனைவரிடமும் விடைபெற்று முதலில் விஜயின் அப்பா அம்மா இருந்த கார் செல்ல,அதைத் தொடர்ந்து பெண்கள் காரும் ,இருவருக்கும் பின்னால் பாதுகாப்பாக தொடர்ந்து ஹரியின் காரும் சிங்கார சென்னையை நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கியது..
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
7
+1
1
+1

