
அத்தியாயம் 16
கதிரவன் தன் பணியை செவ்வனே முடித்து மலைமகளுக்குள் தன்னை ஒளித்துக் கொள்ள , நிலா பெண் மெதுவாக மேகங்களுக்குள் இருந்து வெளிவந்து கொண்டிருந்த அந்த அழகான அந்தி வேளையில், ஸ்ரீயும் ,வர்ஷுவும் தோழிகளின் கேலி கிண்டல்களோடு தங்கள் முதல் இரவுக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.
“வர்ஷூ உண்மையை சொல்லு கல்யாணம் அப்போவே முடிஞ்சிருச்சு அப்போ இது மட்டும் இன்னும் முடியலைனு சொன்னா நாங்க நம்பணுமா ,பொய் தான இது” என மது அவளை கிண்டல் பண்ண,
வர்ஷூவோ நகையை சரி செய்யும் சாக்கில் குனிந்து கொண்டு ,’பக்கி உனக்கு இருக்குடா இன்னைக்கு உன்னால இந்த மது எருமைலாம் என்னை கலாய்க்கிது..பதிலுக்கு என்னால ஒன்னும் சொல்ல முடியலை எல்லாத்துக்கும் நீ தான் காரணம் ..இன்னைக்கு நைட் நீ செத்த’ என மது கிண்டல் செய்ததுக்கும் கார்த்திக்கையே மனதில் வறுத்தெடுத்தவள் எதுவும் பேசாமல் வலையலை நோண்ட ஆரம்பித்தாள்.
அதற்கும் அவள் தோழிகள்,”இங்க பாருடா நம்ம வர்ஷூவா இது..எப்படி காலேஜ்ல லொட லொடனு தகர டப்பா மாதிரி பேசிகிட்டு இருந்த நம்ம வர்ஷூவையே இப்படி அமைதியின் சிகரமா மாத்திட்டாரே ..பலே கில்லாடி தான் நம்ம கார்த்திக் மாமா” என்று கூறிய நிஷாவின் மண்டையில் கொட்டிய வர்ஷூ,
“அவன் உனக்கு மாமாவா கொன்றுவேன் !!!” என மிரட்டினாள்.
“பாருடா இப்போவே பொசஸிவ்னெஸ் ஆஹ் …நீ என்னை கொன்னாலும் பரவாயில்லை உன்னை கடுப்பேத்தவே இனிமேல் நான் அவரை கார்த்திக் மாமானு தான் கூப்பிடுவேன் ..கார்த்திக் மாமா மாமா மாமா” என அவள் காதில் நன்றாக கத்தினாள்.
அவள் கூறிய பின்பே வர்ஷூவிற்கு அது உரைத்தது..’அவனை யார் எப்படி கூப்பிட்டா உனக்கு என்ன நீ ஏன் கோவப்படுற அப்போ நிஷா சொன்ன மாதிரி எனக்கு அவன் மேல பொசஸிவ்னெஸ் ஆஹ் ..பிடிச்சவங்க மேல தான பொசஸிவ்னெஸ் வரும் அப்போ அவனை எனக்கு பிடிச்சிருக்கா ஆனா நான் தான் அவன் மேல கோவமா இருக்கேனே’ என சரியாக சிந்தித்த மனதை அடக்கிய மூளை ,’அதெல்லாம் ஒன்னும் இல்லை அவனுக்கு போய் மரியாதை குடுத்து பேசுறாளேனு தான் உனக்கு கோவம் வந்துச்சு பொசஸிவ்னெஸும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை அவன் மேல உனக்கு கோவம் மட்டும் தான் இருக்கு’ என்று தவறாக ஆலோசனை வழங்க இந்த புத்தி கெட்ட வர்ஷூவும் மனம் சொல்வதை டீலில் விட்டு விட்டு மூளை சொல்வதையே வேதவாக்காக ஏற்றுக் கொண்டாள்.
இந்த சம்பாஷனைகளில் சற்றும் கவனம் இல்லாமல் தன் கனவு லோகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஸ்ரீயை பார்த்த நந்து மெதுவாக அவள் காதுக்குள் சென்று,”ஊஊஊஊஊ!!!!!” என கத்தினாள்.
காதுக்குள் திடீரென்று கேட்ட சப்தத்தில் பயந்து போன ஸ்ரீ தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து விட்டவள்,பின்பு தான் இது நந்துவின் வேலை என்று புரிந்து,”ஹேய் மென்டல் எதுக்கு டி காதுக்குள்ள வந்து ஊலையிட்ட லூசு லூசு” என்று அவளை திட்டினாள்.
சிரித்துக் கொண்டே அவள் திட்டுக்களை இந்த காதில் வாங்கி அந்த காதில் பறக்க விட்ட நந்து , “இல்லை நீ ரொம்ப நேரமா கனவுலோகத்துலையே சஞ்சரிச்சுட்டு இருந்தியா அதான் எங்க கனவுலையே அண்ணாவ கற்பழிச்சிருவியோன்னு பயந்து போய் உன்ன நினைவுலோகத்துக்கு கொண்டு வர கத்தினேன்” என்று கிண்டல் செய்தவளை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்த ஸ்ரீ ,”எருமை ஒரு சின்ன பிள்ளைகிட்ட பேசுற பேச்சா இது..ரொம்ப கெட்டு போய்ட்ட நந்து நீ இதெல்லாம் சரியே இல்லை…அப்பறம் சுமார் மூஞ்சி குமார்க்கு(அருண்) கால் பண்ணி நீ அவனை லவ் பண்றன்னு சொல்லிருவேன் பார்த்துக்கோ” என அவளின் வீக் பாய்ண்ட்டில் சரியாக அடித்து அவள் வாயை ஆஃப் செய்தாள்.
அப்போது உள்ளே வந்த பாட்டி தங்கச்சிலை போல் பட்டு உடுத்தி நகைகள் அணிந்து தயாராகி இருந்த இரு பேத்திகளுக்கும் பார்த்து அகமகிழ்ந்து போய் அவர்களுக்கு திருஷ்டி கழித்தார்.
பின் இருவரும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க ,”மஞ்சள் குங்குமத்தோட பல்லாண்டு காலம் உங்கள் புருஷன் கூட ஒத்துமையா சந்தோஷமா வாழனும்” என்று வாழ்த்திய பாட்டி இருவரையும் தூக்கி நிமிர்த்தி உச்சி முகர்ந்தார்.
பின் ஸ்ரீயை நோக்கிய பாட்டி கேலி புன்னகையுடன் ,”ஆமாடி வாயாடி உன் மாமன் மேல உனக்கு அம்புட்டு காதலா ???” என்று சம்பந்தமே இல்லாமல் வினவினார்.
குழப்பமான ஸ்ரீ,”ஏன் கிழவி உனக்கு தெரியாதா இப்ப என்ன புதுசா கேக்குற ??” என்று புரியாமல் வினவினாள்.
“பிடிக்கும்னு தெரியும் ஆனா இப்படி பைத்தியமா இருப்பனு தெரியலை..ஏண்டி கூறுகெட்டவளே அவன் உன் மேல அம்புட்டு கோவமா இருந்தானே இப்போ எப்படி கல்யாணத்துக்கு சம்மதிச்சான்,தாத்தா ஏன் இப்படி அவசர அவசரமா கல்யாணம் வச்சாரு இதை பத்தியெல்லாம் உனக்கு யோசிக்கவே தோணலையா??? கல்யாணம்னு சொன்னதும் அப்படியே குஷியா ரெடி ஆய்ட்ட ..நானும் வந்து எப்படி அவன் ஒத்துகிட்டான்னு கேப்ப கேப்பனு பார்த்தேன் .ம்ஹூம் நீ கேக்குற மாதிரி தெரியலை..எப்படி நடந்தா எனக்கென்ன அதான் எப்படியோ கல்யாணம் நடந்துருச்சே அப்படின்னு இருக்கியா” என்று கிண்டல் செய்தார்.
அப்போது தான் அதைப் பற்றியே சிந்தித்த ஸ்ரீ,” அட ஆமால இத பத்தி நான் யோசிக்கவே இல்லை..ஹிஹி..நீயே சொல்லிறேன்” என்று அவர் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சினாள்.
அவள் கையை தட்டி விட்ட பாட்டி ,”இதெல்லாம் ரூம்ல உன் புருஷன் இருக்கான் அவன் கிட்ட வச்சுக்கோ என்ன ஆளை விடுடி..” என்று நக்கல் பண்ணியவர் ..பின் சீரியசான குரலில் ,”அந்தப்பய வேற அம்புட்டு கோவமா இருந்தான்..நீயும் அவனை சமாதானம் பண்ண எந்த முயற்சியும் பண்ணவே இல்லையா..எனக்கு தான் ரொம்ப பயமா இருந்துச்சு இப்படியே பேசாமையே போய்ருவீங்களோன்னு அதான் நம்ம மாதவன் இருக்கான்ல அதான் அந்த டாக்டர் அவன் கூட சேர்ந்து ஒரு திட்டம் போட்டேன்..எனக்கு ரொம்ப உடம்பு சரியில்லை அப்படின்னு எல்லார் கிட்டயும் சொல்ல சொல்லி ஒரு டிராமா போட்டேன்.எல்லாரும் வந்து பாவமா என்ன பார்த்தப்போ உங்க கல்யாணம் இப்பவே நடக்கணும் இதான் என் கடைசி ஆசை ..நிறைவேத்துவியான்னு பாவமா உன் புருஷன் கிட்ட கேட்டேன்..உன் புருஷன் என் டிராமாவ கண்டு பிடிச்சுட்டான் இருந்தும் எனக்கு சத்தியம் பண்ணி குடுத்தான்..எங்க உன் படிப்பு முடியுற வரைக்கும் காத்திருந்தா இவன் மனசு மாறிருவானோன்னு நான் தான் உன்ற தாத்தா கிட்ட சொல்லி இப்படி அவசர அவசரமா பண்ணி வச்சேன்..இப்பதான் என் மனசுக்கு நிம்மதியா இருக்கு..அவன் நான் சொன்னதுக்காக உன்னை கட்டிக்கலை உன் மேல இருக்க நேசத்துனால தான் கட்டிருக்கான்னு எனக்கு தோணுது ..அதுனால அவன் மனசறிஞ்சு இனிமேலாச்சும் பார்த்து நடந்துக்கோ..என்னால முடிஞ்சத நான் பண்ணிட்டேன்..இனிமேல் உன் வாழ்க்கையை சந்தோஷமா வாழ வேண்டியது உன்னோட பொறுப்பு..அவன் கோவத்துல எதாச்சும் சொன்னா கூட பொறுத்து போடி ..எப்பவும் போல அவசரக் குடுக்கை தனமா எதாச்சும் செஞ்சு வாழ்க்கையை கெடுத்துக்காத அவ்ளோ தான் சொல்லுவேன்” என பெரிதாக பேசி முடித்தார்.
அவர் முடித்ததும் அவரை கட்டிக்கொண்டு அவர் கன்னத்தில் இதழ் பதித்த ஸ்ரீ,”ஏய் கிழவி உனக்கு கார்த்திக் மட்டும் தான் செல்லப் பேரன் அப்படின்னு நினைச்சா எங்க மேலையும் பாசம் வச்சுருக்க போலையே..உன் பாசத்தை பார்த்து கண்ணு வேர்க்குது..” என்று கிண்டல் செய்தவள், “கிழவி எனக்கு ஒரு டவுட்” என்று சீரியசாக கேட்டாள்.
“என்ன கேளு” என்று உத்தரவு தந்தவரிடம்,”நேத்து கூட உடம்பு சரியில்லைனு படுத்தியே அது கூட டிராமா தானா” என சிரிப்பை உள்ளடக்கிக் கொண்டு கேட்டவளை பொய்யாக முரைத்தவர்,
“போடி கேடி” என அவள் காதை திருகிவிட்டு திரும்பியவர் அப்போது தான் தன்னையே பயம் கலந்த ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வர்ஷூவை கவனித்தார்.
அவள் அருகில் சென்று அவள் கன்னத்தை வருடி கொடுத்தவர்..”ரொம்ப அழகா இருக்கடா கண்ணா என் பேரனுக்கு ஏத்த ஜோடி தான் நாங்க பார்த்திருந்தா கூட இப்படி ஒரு பொண்ணை பார்த்திருக்க மாட்டோம்..என் பேரன் இதுலலாம் கெட்டிக்காரன் தான்” என வாஞ்சையாக கூறினார்.
அவர் தன்னை மன்னித்து விட்டு தன்னிடம் பாசமாக பேசியதை நம்ப முடியமல் பார்த்தவள்,”ப்பா..பாட்டி உங்களுக்கு என் மேல கோவம்லாம் இல்லையா” என நம்ப முடியாமல் கேட்டாள்.
“இதுல நான் கோபப்பட என்ன மா இருக்கு அவன் எங்க கிட்ட சொல்லாம பண்ணது ஒரு வருத்தம் தான்..எங்க கிட்ட சொல்லலைனா அதுல எதாச்சும் காரணம் இருக்கும்..எப்போ எங்களுக்கு அது தெரியணும்னு இருக்கோ அப்போவே தெரியட்டும்..அந்த கேடிப்பய இவங்க ரெண்டு பேர் கல்யாணம் ஆனதும் சொல்லலாம்னு இருந்துருப்பான் போல அதான் அன்னைக்கு இவங்க கல்யாணத்தை பத்தி சொன்னப்போ ஸ்ரீயோட மகிழ்ச்சிக்கு கொஞ்சமும் குறையாம அவனும் சந்தோஷத்துல கத்துனான்..இப்போ தான் இது இந்த கிழவிக்கு புரியுது..அவன் உன்னை சுத்தி சுத்தி வந்தத பார்த்து நான் கூட காதலிக்கிறான் அடுத்து உங்க அப்பா அம்மாகிட்ட பேசி உங்க கல்யாணத்தை நடத்தி வச்சிரலாம்னு திட்டம் போட்டேன்..ஆனா அதுக்கு அவசியமே இல்லாம பண்ணிட்டான் அந்த படவா..ஆனா ஒன்னு நான் ஒத்துக்கிட்டே ஆகணும் அவன் உன்னை பார்க்குற பார்வைல அவ்வளவு காதல் தெரியுது..ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்ந்து சீக்கிரம் ஒரு கொள்ளு பேரன் பேத்திய பெத்து குடுத்துட்டா இந்த கிழவி நிம்மதியா இருப்பேன்..என்ன மா பெத்து என் கிட்ட தந்துருவ தானே” என்று கிண்டல் செய்தார்.
“போங்க பாட்டி” என்று சிணுங்கிக் கொண்டே அவர் தோள்களில் முகம் புதைத்துக் கொண்ட வர்ஷூவின் மனதில் குட்டி கார்த்திக் பிம்பம் வந்து போவதை என்ன செய்தும் தவிர்க்க முடியவில்லை.
பின் சாருமதி,கலைவாணி,பத்மினி,இராஜலெக்ஷ்மி வந்து இருவருக்கும் ஆயிரத்தெட்டு அறிவுரைகளை வழங்கி தோழியருடன் அவர்களின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.
தோழிகள் அனைவரும் வாசலில் வந்து இருவரையும் கிண்டல் செய்து விட்டு விடைபெற, இரு பெண்களுக்கும் புதுபெண்களுக்கே உரிய தயக்கம்,திருமண வாழ்க்கை குறித்த பயம் தோன்ற இருவரும் உள்ளே செல்லாமல் வாசலிலே தேங்கி நின்றனர்.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ,தங்கள் நிலமையை நினைத்து சிரித்துக் கொண்டே ‘ஆல் த பெஸ்ட்’ சொல்லி கொண்டு ஒரு வழியாக உள்ளே சென்றனர்.
கார்த்திக்கின் அறைக்குள் நுழைந்த வர்ஷூ அங்கு கண்ட காட்சியில் சில நொடிகள் அதிர்ந்து நின்று ,பின் விழுந்து விழுந்து சிரிக்க தொடங்கினாள்.
அங்கே கார்த்திக், பட்டு வேஷ்டி சட்டை அணிந்து நெற்றியில் பெரிதாக பட்டையிட்டு கழுத்தில் ருத்ராக்ஷ மாலை அணிந்து சுவரில் பெரிதாக ஆஞ்சநேயர் படத்தை ஒட்டி வைத்து அதன் முன் தியானம் செய்வது போல் அமர்ந்திருந்தான்.
இவள் சிரிப்பில் கண்களை திறந்தவன் ,பச்சை வண்ண பட்டுடுத்தி மயில் போல் ஒயிலாக சித்துக் கொண்டிருந்த மனையாளை ஏக்கமாக பார்த்தவன் பின் தன்னை சுதாரித்துக் கொண்டு ,”எதுக்கு இப்போ சிரிக்கிற??? நான் என்ன காமெடி ஷோ வா காமிச்சுட்டு இருக்கேன்” என்று கோவமாக கேட்பதாக நினைத்துக் கொண்டு குழைவாக கேட்டான்.
சிரிப்பை அடக்கிக் கொண்ட வர்ஷூ,”எதுக்கு இந்த கூத்து இப்போ ?? எதாச்சும் லூசு மாதிரி பண்ணலைனா உனக்கு தூக்கமே வராதா” என கிண்டல் பண்ணினாள்.
“சிரி சிரி நல்லா சிரி ..என் நிலைமை என் எதிரிக்கு கூட வரக்கூடாது..அழகா ஒரு பொண்டாட்டி,நைட் நேரம்,ரூம் ஃபுல்லா பூ வாசம்,ஆனா உன்னை தொட்டா என்னை வெட்டுவ..நீயா வெளிய போடா நாயேன்னு சொல்றதுக்கு முன்னாடி நானே என்னை கட்டுப்படுத்திக்க என் தலைவன் அனுமன் பக்தரா மாறிட்டேன்..என் முன்னாடி இப்படி வந்து சிரிச்சு என் தவத்தை கலைக்காம ஒழுங்கா போய் தூங்கு” என அவளிடம் தன் உணர்ச்சிகளை கட்டுப் படுத்திக் கொண்டு கூறினான்.
‘என்ன அவனை வம்பிழுத்து கடுப்பேத்தலாம்னு பார்த்தா இப்படி ஒரு முடிவெடுத்துட்டான்..இவன் எப்படி நிம்மதியா தூங்கலாம் ..நோ நோ வர்ஷூ எதாச்சும் யோசி டி’ என மனதோடு பேசிக் கொண்டவள் அவனை பார்த்து கிண்டலாக,”அப்போ உன் தைரியம் வீராப்புலாம் ரூம்க்கு வெளிய தானா நான் கூட உன்ன ஒரு காதல் மன்னன் ஜெமினி கணேசன் ரேன்ஜுக்கு நினைச்சு வச்சிருந்தா நீ ஒரு டம்மி பீசா இருக்கியேப்பா கார்த்தி” என சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டாள்.
‘ஓ நீ அப்படி வரியா இருடி மவளே உன்னை வெளிய ஓட விடுறேன்’ என மனதிற்குள் சிரித்துக் கொண்ட கார்த்திக் மெதுவாக எழுந்து போய் அறைக் கதவை மூடி தாழிட்டான்.
‘சும்மா என்ன பயமுறுத்த லாக் பண்ணா நான் பயந்துருவேனா போடா’ என நினைத்தவள் கெத்தாக அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்.
கதவை மூடி விட்டு திரும்பியவன் முதலில் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷ மாலையை அவள் கண்களை பார்த்துக் கொண்டே கழற்றி அருகில் இருந்த மேசையில் வைத்தவன் பின் அவளை நோக்கி முன்னேறிக் கொண்டே தன் நெற்றியில் இருந்த பட்டையை அழித்தான்.
‘என்ன ஓவரா பில்டப் தரான்..எதுக்கும் கொஞ்சம் உஷாரா இரு வர்ஷூ’ என கூறிக் கொண்டவள் பால் சொம்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு நின்றாள்.
அவளுக்கும் அவனுக்கும் சிறிது இடைவெளியே மிச்சமிருக்க இன்னும் அவள் அருகில் சென்றவன் அவள் கைகளில் இருந்த சொம்பை வாங்கி கட்டிலின் அருகில் இருந்த மேசையில் கிடாசி விட்டு அவளை நோக்கி முன்னேறினான்.
‘அய்யய்யோ என்ன இவ்ளோ கிட்ட வரான்’ என உதறலெடுக்க மெதுவாக பின்னே சென்றாள்.
அவனும் விடாது அவளைத் தொடர ,இதற்கு மேல் வண்டி போகது என்பது போல் சுவற்றில் இடித்துக் கொண்டு நின்றாள்.
இப்போது அவளை நோக்கி மந்தகாச புன்னகையை சிந்தியவன் இன்னும் அவளை நெருங்கினான்.அவன் மூச்சுக்காற்று தன் மேனியில் படும் அளவு உரசிக் கொண்டு நின்றவனை பார்த்து வர்ஷூவிற்கு இதயம் தாறுமாறாக துடித்தது.
தன் கரங்களை அவள் முகத்திற்கு அருகில் கொண்டு சென்றவன் முகத்தில் வந்து விழுந்த முடியை மெதுவாக ஒதுக்கி விட்டு அவள் முகம் நோக்கி குனிந்தான்.
பயத்தில் கண்களை மூடிக்கொண்டு சிலை போல் அப்படியே நின்றவளின் கன்னத்தோடு தன் கன்னம் உரச அவள் காதுக்கு மிக அருகில் சென்று ,”ஐ லவ் யூ கண்மனி” என்று தன் ஒட்டுமொத்த காதலையும் குரலில் தேக்கி கூறினான்.
அவள் வேறேதோ நினைத்து பயந்து கொள்ள அவனின் இந்த வார்த்தைகள் அவள் உயிர் வரை சென்று தாக்கியது. திகைத்து விழித்தவளின் கன்னத்தை தட்டியவன் ,சிரிப்போடு ,”கேடி நீ என்ன நினைச்சு கண்ணை மூடுனன்னு எனக்கு தெரியும்..உன் சம்மதம் இல்லாம அன்னைக்கு உன் கழுத்துல தாலி கட்டுனதே இன்னும் எனக்கு உறுத்திக்கிட்டே இருக்கு..இதுல உன் சம்மதம் இல்லாம உன்னை தொடுற அளவுக்கு நான் அவ்ளோ வில்லன் இல்லை மா..என்னைக்கு உன் மனசு முழுக்க காதலோடு என்னை ஏத்துக்கிறயோ அது வரைக்கும் இந்த அடியேன் தேவிக்காக காத்துக் கொண்டிருப்பேன்.. ..ஆனா உன்னை பார்க்குறதுக்குலாம் நீ தடை போட கூடாது..என் பொண்டாட்டிய சைட் அடிக்கிற உரிமை எனக்கு இருக்கு ஓகேவா..சரி..இப்போ போய் நிம்மதியா படுத்து தூங்கு” என அவள் கண்களை பார்த்துக் கொண்டு கூறியவன் இரவு உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் நுழைந்தான்.
அவன் செயலில் அவளுக்கு அவன் மேல் மதிப்பு கூடியது..அன்று தன் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவில்லை என்ற அவளின் மனதை காயப்படுத்தியவனே இன்று அவன் செயலால் அந்த காயத்திற்கு மருந்திட்டான்.
தன் மனதிற்குள் அவன் காலடி எடுத்து வைத்தது புரியாமலே அவள் சிரித்துக் கொண்டு தன்னுடையை சூட்கேஸில் இருந்து தனக்கான இரவு உடையை எடுத்தாள்.
அவன் வெளியே வந்ததும் இவள் சென்று உடை மாற்றிக் கொண்டு வரும் போது அவன் சோபாவில் சென்று படுத்திருந்தான்.
‘நல்லா பனை மரம் மாதிரி வளர்ந்துட்டு நைட் எல்லாம் இப்படி காலை குறுக்கிட்டே சோபாலையா படுப்பான்..பாவம்..அதான் இவ்ளோ பெருசா பெட் இருக்கே இங்கேயே படுத்துக்கட்டும் தப்பில்லை’ என நினைத்தவள்.
அவன் முன் சென்று நின்னு ,”பெட்ல வந்து படு அதான் அவ்ளோ பெருசு இருக்குல்ல நீ ஒரு மூலைல படுத்துக்கோ நான் ஒரு மூலைல படுத்துக்குறேன்” என எங்கோ பார்த்துக் கொண்டு கூறினாள்.
‘அட மக்குப் பொண்டாட்டியே ..என் கூட ஒன்னா பெட் அஹ் எந்த வித தயக்கமும் இல்லாம் ஷேர் பண்ண உன்னால முடியுதுனா உன் மனசுல நான் இருக்கேன்னு இன்னுமா உனக்கு புரியலை…உனக்கு என்னைக்கு புரிய வச்சு …அய்யோ இப்பவே கண்ணைக் கட்டுதே’ என நினைத்தவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்து போய் கட்டிலில் படுத்துக் கொண்டான்.
அவனுக்கு மறுபுறம் வந்து படுத்தவள் இருவருக்கும் இடையில் தலைகாணி வைத்து பாலம் கட்டிவிட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
அந்த தலைகாணியை தனக்கு வில்லன் போல் முறைத்தவன் ..’இந்நேரம் பக்கத்து ரூம்ல அவன் ஸ்டார்ட் பண்ணி ஹை ஸ்பீட்ல போய்கிட்டு இருப்பான்..உனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்டா கார்த்திக்’ என தன் மனதை தேத்திக் கொண்டவன் கண்களை மூடி உறங்க முயற்சித்தான்.
அங்கே ஹரியின் அறையில் நுழைந்த ஸ்ரீ , அவன் பின்னாலிருந்து தன்னை அணைப்பான் என கனவுகளோடு வந்தவள்,கதவை தாழிட்டு விட்டு குனிந்த தலையை நிமிர்த்தாமல் அவனுக்காக காத்திருந்தாள்.
சில நிமிடங்கள் கடந்தும் ஒன்றும் நடக்காததால் நிமிர்ந்து கட்டிலை நோக்கியவள், அங்கே ஹரி தான் வந்ததைக் கூட கவனிக்காமல் லேப்டாப்பில் தலையை விட்டுக் கொண்டிருப்பதை பார்த்து கடுப்பாகி அவன் அருகில் சென்று தன் வலையல்களை ஆட்டி சப்தம் கொடுத்தாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் மீண்டும் தன் வேலையை தொடர ,கோபத்தின் உச்சிக்கு சென்றவள் பால் சொம்பை மேசையில் ‘டங்’ என வைத்தாள்.
அதற்கும் எந்த ஒரு எதிர் வினையும் வராமல் போக,நொந்து போனவள் கட்டிலில் ஒரு ஓரத்தில் படுத்துக் கொண்டாள்.
அவள் செய்கையை பார்த்து மனதில் சிரித்துக் கொண்டவன், மெதுவாக லேப்டாப்பை மூடி வைத்து அவள் புறம் திரும்பினான்.
அவளும் ஆவலாக அவன் புறம் திரும்ப, “எதுக்கு இப்படி ஏதோ நகைக்கடை பொம்மை மாதிரி நகை பட்டுப்புடவைலாம் போட்ருக்க,இதுல இப்படியே வேற தூங்கப் போறியா போ போய் ட்ரெஸ் மாத்திட்டு வந்து படு” என்று கூறியவன் லேப்டாப்பை அதன் இடத்தில் வைக்க சென்றான்.
‘ரொம்ப முக்கியம் இப்போ இது..இவனுக்கு எல்லாம் ஃபீலிங்க்ஸ்னு ஒன்னு இல்லவே இல்லையா..ஜடம் ஜடம்..அழகா ஒரு பொண்டாட்டி குத்துக்கல்லு மாதிரி பக்கத்துல இருக்கேன் லேப்டாப்பை கட்டிட்டு அழுகுது பாரு’ என அவன் காதில் விழுகுமாறு முனுமுனுத்தவள் அவன் சொன்னது போல் இரவு உடையை எடுத்துக் கொண்டு பாத்ரூமிற்குள் சென்று மறைந்தாள்.
அவன் அதற்குள் டீஷர்ட் ஷார்ட்ஸ்க்கு மாறி கட்டிலில் வந்து விழுந்திருந்தான்.
இவளும் அவனை திட்டிக் கொண்டே கட்டிலில் படுக்கப் போக அவளை தடுத்தவன் ,”ஏய் ஏய் என்ன இங்க படுக்க வர இந்த சினிமா கதை புக்ல படிச்சது இல்லை சண்டை போட்டா பொண்டாட்டி தனியா கீழ தான் படுக்கனும் இந்தா தலைகாணி போர்வையை எடுத்துட்டு போய் கீழ படு” என சீரியசாக கூறினான்.
“அடேங்கப்பா ஆளையும் மூஞ்சியையும் பாரு..உனக்கு தான என் மேல கோவம் ..எனக்கு ஒன்னும் இல்லை அதுனால நான் உன் கூட தான் படுப்பேன்..உனக்கு வேணா என் கூட படுக்குறது கம்பளி பூச்சி ஊறுற மாதிரி இருந்தா நீ போய் கீழ படுத்துக்கோ நான் போக மாட்டேன்” என்று எரிச்சலாக கூறியவள் கட்டிலில் ஏறி நன்றாக நடு மெத்தையில் படுத்துக் கொண்டாள்.
அவள் செய்கையில் நன்றாகவே சிரித்த ஹரி,”சரியான வாயாடி உன்னை வச்சு எப்படி குப்பை கொட்ட போறேனோ ” என புலம்ப,
அவனை நன்றாக முறைத்தவள் ,”இதோ பாரு நானே செம கடுப்புல இருக்கேன்..வாயை குடுத்து வாங்கி கட்டிக்காம தூங்குற வழிய பாரு..தண்டம் தண்டம்” என திட்டினாள்.
சட்டென அவளை நோக்கி குனிந்தவன் திட்டிக் கொண்டிருந்த அவள் செவ்விதழை தன் இதழ் கொண்டு மூடினான்.
அவன் செய்கையை சற்றும் எதிர்பார்க்காத ஸ்ரீ அதிர்ச்சியில் தன் முட்டக்கண்ணை இன்னும் விரித்தாள்.
அவளை பார்த்து கண்ணடித்து விட்டு எழுந்தவன் ,”இனிமேல் என்னை திட்றதுக்கு முன்னாடி நல்லா யோசிச்சிட்டு திட்டு !!! சரியா லட்டு” என அவள் கன்னத்தை தட்டிவிட்டு மேசையில் இருந்த பாலை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.
‘என்ன இவன் கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலையே ..வந்ததும் கண்டுக்கவே இல்லை, அப்பறம் கீழ படுனு சொன்னான்,பச்சக்குனு கிஸ் அடிச்சான் இப்போ பாப்பா மாதிரி பால் குடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டான்…அய்யோ இப்படி மண்டை காய விடுறானே’ என சிந்தித்துக் கொண்டிருந்தவளின் முன் சொம்பை நீட்டியவன் ,”இந்தா குடி எனக்கு வேஸ்ட் பண்ணா பிடிக்காதுனு தெரியும்ல அதுனால ஒரு சொட்டு மிச்சம் இல்லாம் குடிச்சுட்டு போய் ப்ரஷ் பண்ணிட்டு வந்து படு” என்று மிரட்டினான்.
“இதோ பாரு குடிக்க வேணும்னா சொல்லு ஆனா ப்ரஷ்லாம் பண்ண மாட்டேன்” என சிணுங்கிக் கொண்டே கூறியவளை, கள்ளச்சிரிப்போடு பார்த்தவன்,”நைட் ப்ரஷ் பண்ணிட்டு படுக்கனும் அதுவும் பால் குடிச்சா ப்ரஷ் பண்ணனும்னு நல்ல பழக்கம்லாம் இல்லையா” என வம்பிழுத்தான்.
அவளோ அவனை நக்கலாக பார்த்துக் கொண்டே,”அதெல்லாம் இருக்கு..ஆனா என் புருஷனே இப்பதான் அவனோட தவத்தை கலைச்சு முதல் முறையா கிஸ் பண்ணிருக்கான் அத போய் ப்ரஷ் பண்ணி அலைக்க சொல்றியே…அதெல்லாம் முடியாது” என பதிலடி கொடுத்தாள்.
“அடிப்பாவி இந்த அச்சம்,மடம், நாணம், பயிர்ப்புனுலாம் சொல்லுவாங்களே அதெல்லாம் இல்லவே இல்லையா இப்படி தான் பேசுவியா” என கேட்டான்.
“நான் என் புருஷன் கிட்ட தான பேசுறேன் வேற யார்கிட்டயுமா பேசுனேன்..என் புருஷன் என் உரிமை” என்று கூறிவிட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
அவள் சிரிப்பை ஆசையாக பார்த்தவன்,அவளை பாலை குடிக்க வைத்த பின் இழுத்து தன் மார்பில் படுக்க வைத்தான்.
அவளும் அவனோடு நன்றாக ஒண்டிக் கொண்டாள்.
அவள் நெற்றியில் முத்தமிட்டவன்,”லட்டு ..எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும்..எல்லாரையும் விட..ஆனா நமக்கு பிடிச்சவங்க நம்ம நம்பிக்கையை உடைச்சு தப்பு பண்றப்போ ரொம்ப கோவம் வரும்ல..எனக்கு உன் மேல இன்னும் கோவமும் இருக்கு..இல்லைனு பொய் சொல்ல விரும்பலை..அதெல்லாம் மாற இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்..அதுவரைக்கும் என்னையும் அறியாம உன்ன கஷ்டப் படுத்திட்டேனே என்னை மன்னிச்சிரு லட்டு..நமக்குள்ள கோபத்தோட இந்த இல்லறத்தை ஆரம்பிக்கிறதுல எனக்கு விருப்பமில்லை..மனசு முழுக்க காதல் காதல் காதல் மட்டுமே நிறைஞ்சிருக்கும் போது நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் ..இதுல உனக்கு எதும் வருத்தம் இல்லையே..” என அவள் மனதையும் தெரிந்து கொள்ள அவள் விருப்பத்தை அடுகினான்.
“க்ரிஷ் நீ சொன்னது நூத்துக்கு நூறு சரி..நான் பண்ணது சின்ன தப்பே இல்லை..அதுக்கு மன்னிப்பை தவிர வேறெதுவும் என்னால கேக்க முடியாது..ஆனா இனிமேல் அப்படி யோசிக்காம எதுவும் பண்ண மாட்டேன்…இப்படி ஒரு புருஷன் கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கனும்..நமக்கு இன்னும் நிறைய காலம் இருக்கு எப்போ நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கனும்னு கடவுள் எழுதிருக்கானோ அப்போ ஆரம்பிக்கலாம்..எனக்கு உன் கூட இருக்கணும் எப்பவும்..அது நடந்துருச்சு..அது போதும்..வேறெதுவும் வேண்டாம் மாமா” என காதலாக அவனைப் பார்த்துக் கூறினாள்.
அவள் கண்களில் தெரிந்த காதலில் தொலைந்து போனவன் அவளைப் பார்த்துக் கொண்டே,
“கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி…!
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி…
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி…!
மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே…!”
என பாடினான்.
அவன் பாடலில் தன்னை மறந்து உதட்டில் உறைந்த புன்னகையோடே தன் நெஞ்சத்திலே உறங்கிய தன்னவளை புன் சிரிப்போடு பார்த்தவன் அவளை அணைத்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தான்.
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
+1
1

