
பிறை -43
விமானத்தின் வழியே கோயம்பத்தூர் மாநகரத்தை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள் பார்கவி. இன்னும் ஒரு நாளில் இந்த ஊர் முழுவதும் தன்னை பெற்றவர்கள் தேடுவார்கள் என நினைக்கும் போதும் மனம் கலங்கியது.
ஆனால் இதே ஊரில் தான் அவனிடம் காதலை கூறினாள். அன்று மெக்னிக் ஷாப்பில் பேசியதற்கு பின்பு, அவனை வழக்கமாக அந்த கடையில் பார்க்க முடிந்தது. இறங்கி போய் பேச தான் மனம் வரவில்லை. ஒரே வார்த்தையில் பதில் அளிப்பவனிடம் என்னவென்று பேசுவாள்.
அவன் பேச்சை வளர்த்தால் தானே.. இவளும் பேச முடியும்.. கத்திரித்ததை போல பேசியவனை நாட அவளுக்கு மனம் வரவில்லை. பெண்ணாக பிறந்து விட்டாள் அல்லவா.. அவளாக சென்று பேச மனம் இடம் கொடுக்கவில்லை.
வழக்கமாக அந்த கடையில் மட்டும் தவறாது அவனை பார்த்து விடுவாள். அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது. நாட்களும் அதன் போக்கில் செல்ல.. இதுவே தொடர்கதையாகி போனது.
அன்று விடுமுறை.. தோழியை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றாள் பார்கவி. மீண்டும் அந்த கடை வழியே தான் போனார்கள்.. ஆனால் அன்று அவனை காணவில்லை.
அவனை காணாத ஏக்கத்தில் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தாள் பார்கவி. ” என்ன டி உன் முகமே டல்லா இருக்கு.. என்னாச்சு ”
” அதெல்லாம் ஒன்னும் இல்ல டி..”
” நீதானே டி கோவிலுக்கு போகனும்னு கூப்பிட்ட.. இப்போ மூஞ்சிய தூக்கிட்டு இருக்க ” ரீனா கத்த..
” ம்ம்.. சாமியை தரிசனம் பண்ணலாம் டி ”
” அந்த கடையில உன் ஆளு இல்ல.. அதான் உன் பிரச்சனையா ” உடைத்து கேட்டிருந்தாள் அவளது தோழி.
” உனக்கு எப்படி தெரியும் ” அதிர்ச்சியாக கேட்டவளுக்கு பதிலாக..
” நானும் உன்ன கவனைச்சிட்டு தான் வரேன்.. எனக்கு தெரியாம இருக்கும்மா.. இன்னைக்கு இல்லைன்னா என்ன.. நாளைக்கு பார்க்கலாம் ” என தேற்றிய தோழியை கண்ணீர் மல்க பார்த்தவள்..
” எனக்கே தெரியல டி.. எப்படின்னு.. என்னால இப்போ அவரை பார்க்காம இருக்க முடியல.. நானும் அது ஈர்ப்பு தான்னு நினைச்சேன்.. ஆனால் அவரை பார்க்காமல் ஒரு நாள் கூட இருக்க முடியல.. பேசலை பழகலை ஆனால் எப்படி காதல் வந்திச்சுன்னு எனக்கு தெரியல .. ரொம்ப பலவீனமா ஆகிட்டேன் டி.. அவருக்கு என்னைய பிடிக்குமான்னு வேற தெரியல.. இப்போ என்ன டி பண்ணுறது ” என கண்ணீரோடு நின்ற தோழியை பார்க்க அவளுக்கு மனம் வலித்தது.
அதிர்ந்து கூட பேசாதவளை அழ வைத்து விட்டானே.. ஆனால் அவன் மீது தவறில்லையே.. அவன், இவள் இருக்கும் திசை பக்கம் கூட திரும்பவில்லையே. அப்படி இருக்கையில் எப்படி அவனை குறை கூற முடியும்.
” அழுகாத டி.. எல்லாம் சரி ஆகிடும்.. ” என்ற பார்கவியை தேற்றியவள்.. அவளை சன்னிதிக்கு அழைத்து சென்றாள்.
” நீ வேணும்னு நினைக்கிறத கடவுள் கிட்ட வேண்டிக்கோ டி.. கண்டிப்பா நடக்கும் ” என தோழி கூறியதை கேட்டு, அமைதியாக கண்மூடி கடவுளை வேண்டினாள் பார்கவி.
” எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு தெரியல.. ஆனால் இப்போ அவரை காதலிக்கிறேன்னு தோணுது. எப்படியாவது அவரை பார்க்கனும் ” என கண்ணை மூடிக் கொண்டு கடவுளை பிராதிக்க.. கண்களை திறந்தவளுக்கு விருந்தாக அவளுக்கு எதிர் வரிசையில் நின்று கடவுளை வணங்கிக் கொண்டிருந்தான் அர்ஜுன்.
அவனை பார்த்த பரவசத்தில் தோழியை அணைத்தவள்.. ” என்ன ஆனாலும் பரவாயில்லை டி.. இன்னைக்கு அவரை பார்த்து காதலை சொல்ல போறேன்.. அவரு ஓகே சொன்னாலும் சரி.. இல்ல நோ சொன்னாலும் சரி.. என் மனசு கொஞ்சம் ரிலாக்ஸ்சா இருக்கும் ” என பார்கவி படபடவென பேச.. தோழியின் எண்ணத்தை நினைத்து அதிர்ந்து போனாள்.
” என்ன டி அவசர படாத.. அதுக்குள்ள காதல் அது இதுன்னு சொல்ல போறியா ”
” சொன்னா என்ன தப்பு.. என்னால இதுக்கு மேல வெயிட் பண்ண முடியும்னு தோணல.. நான் போறேன் ” என வேகமாக கோவிலை சுற்றிக் கொண்டிருந்தவன் முன்பு மூச்சிறைக்க நின்றாள் பார்கவி.
சட்டென தன் முன்னே ஒரு பெண் வந்து நிற்கவும், இரண்டடி பின்னே சென்றவன்.. அவளை புருவம் சுருங்க பார்த்து விட்டு.. அவளை விட்டு விலகி நடக்க போனவனை வழி மறித்து நின்றாள் பார்கவி.
” ஒரு நிமிஷம் உங்க கிட்ட பேசனும்… ” என கைகளை குறுக்காக நீட்டி வழி மறைத்து நின்றாள் பார்கவி.
” என்ன பேசனும் ”
” நான் யாருன்னு உங்களுக்கு தெரியுதா ”
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன்.. ” தெரியாது.. வழிய விடுங்க ” என நகர போனவனை நகர விடாது.. வழி மறைத்தவள்..
” உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் ”
” நீங்க யாருன்னு முதல்ல சொல்லுங்க ”
” சத்தியமா நான் யாருன்னு உங்களுக்கு தெரியலையா ”
” தெரியல.. ”
” ஏங்க அந்த மெக்கானிக் செட்.. என் பைக் ரிபெயர்.. நீங்க தானே பார்த்தீங்க.. நான் கூட எக்ஸாம் போகனும்னு சொன்னேன்ல. காசு கூட வாங்கல ” என ஒவ்வொன்றாக கூறியவளை பார்த்தவன்..
” ஓ… ஓகே பணத்தை கொடுங்க ” என்றவனை அதிர்ச்சியாக பார்த்தாள்.
” எந்த பணம்”
” அன்னைக்கு வண்டியை சரி பண்ணதுக்கு பணம் கொடுக்க தானே இப்போ வந்தீங்க ” என்றவனை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் பார்த்து வைத்தாள் பார்கவி.
” ஹலோ பணம் எல்லாம் கொடுக்க வரல.. ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்ல வந்தேன்..”
” சொல்லுங்க..”
” இங்க கூட்டமா இருக்கு.. அப்படி ஓரமா போய் பேசுவோமா ” என்றதும் அவள் பின்னே நகர்ந்தான் அர்ஜுன்.
” அது வந்து.. நான்.. ”
” எனக்கு டைம் இல்ல.. சீக்கிரம் சொல்ல முடியுமா ”
” நான் ….லவ் … பண்ணுறேங்க.. ”
” அதை லவ் பண்ணுறவங்க கிட்ட சொல்லுங்க.. என்கிட்ட ஏன் சொல்லுறீங்க ”
” அது நான் .. உங்களை தான் லவ் பண்ணுறேன் ” திக்கி திணறி ஒரு வழியாக கூறி விட்டாள்.
” வேற எதுவும் சொல்லனுமா”
” இல்ல ”
” டைம் வேஸ்ட் பண்ணாத கிளம்பு ” ஒருமையில் தாவி இருந்தான்.
” இனிமே என் டைம் முழுக்க உங்களுக்கு தான் .. நான் லவ் பண்ணுவேன்.. உங்களையும் பண்ண வைப்பேன்.. அஜூ.. ” என கத்தியவளை சட்டை செய்யாது கிளம்பி இருந்தான் அர்ஜுன்.
இன்றும் அதை நினைத்தால் அவளது உதடுகளில் தானாக புன்னகை வந்து ஒட்டிக் கொள்ளும்.
அதன் பிறகு அடிக்கடி அவளது கண்ணில் பட்டான் அர்ஜுன். அவனை விடாது துரத்தி இருந்தாள் பார்கவி.அவளது தொல்லை தாங்காமல் இன்றே அவளிடம் பேசி விடும் எண்ணத்தில் இருந்தான் அர்ஜுன். ” இங்க பாரு.. எனக்குன்னு குடும்பம் இல்ல.. ஆனால் நீ அப்படி கிடையாது.. அதுனால இதையெல்லாம் விட்டுட்டு வேற வேலை இருந்தா பாரு ” என தெளிவாக கூறி இருந்தான் அர்ஜுன்.
” குடும்பம் இல்லைனா என்ன.. நம்ம கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்மளும் ஒரு குடும்பம் தானே அஜூ..”
” இந்த மாதிரி வசனம் எல்லாம் பேச வேணாலும் நல்லா இருக்கும்.. நடைமுறைக்கு ஒத்து வராது ”
” அதெல்லாம் நான் சரி பண்ணுறேன்…”
” உன் வீட்ல நான் அனாதைன்னு சொல்லி உன்னால சம்மதம் வாங்க முடியுமா..” அவனது கேள்வியில் சற்றே திணறியவள்..
” அவங்க சம்மதிக்கலைனா கூட.. நான் உன்ன தான் கல்யாணம் பண்ணிப்பேன்..”
” இதை நான் எப்படி நம்புறது ”
” காதல்ல நம்பிக்கை தானே முக்கியம் ”
” ரொம்ப சினிமா பார்ப்பியோ ”
” நான் நிஜமா தான் சொல்லுறேன்.. எங்க வீட்ல சம்மதம் சொல்லலைனா.. நான் உங்க கூட வர ரெடி.. ” துடுக்குத்தனமாக அனைத்து முடிவுகளையும் எடுத்தாள் பார்கவி.
இத்தனை தூரம் அவள் இறங்கி வந்த பின்பு தான் அவளது காதலை அவன் ஏற்றுக் கொண்டதே.. மற்ற காதலர்கள் போல வெளியே சுற்றுவது, படம், பீச் என இவர்கள் சுற்றியதில்லை. வாரத்தில் ஒரு நாள் சர்ச் வாசலில் சந்திப்பதோடு சரி.
இதோ இந்த காதல் கொடுத்த தைரியத்தில் தான் விமானத்தில் பறந்து கொண்டிருந்தாள் பார்கவி.
***
பிரியாணியை உண்டு விட்டு அனைவரும் களைப்பாக அமர.. ” பிறை.. நீ தம்பியை கூட்டிட்டு ரூமுக்கு போ.. கொஞ்சம் படுத்து எந்திருக்கட்டும் ” என சிவகாமி மகளை அனுப்பி வைக்க.. இதற்காகவே காத்திருத்தவன் போல வேகமாக எழுந்து ரெடியாக நின்றான் ஆதிதேவ்.
இருவரும் மேலே சென்றனர். அறைக்குள் வந்து கதவடைத்ததும் அவளை கைவலைவில் நிறுத்தி இருந்தான் ஆதி.
” விடுங்க… ” என சிணுங்கிய மனைவியை இமைக்காது பார்த்தவன்..
” என்ன டி கோபம்.. அப்படி என்ன உனக்கு என் மேல கோவம் வருது.. போனை கூட எடுக்க மாட்டியா.. மெசேஜ் பார்த்திட்டு ரிப்ளை பண்ணல.. உன் மனசுல என்ன தான் நினைச்சிட்டு இருக்க.. நான் அங்க வேலை பார்க்கிறதா.. இல்ல உன்னையே நினைக்கிறதா”
” என்ன எதுக்கு நீங்க நினைக்கனும்.. அதான் ஊருக்கு அனுப்பிட்டீங்கள .. அப்பறம் எதுக்கு நினைப்பு வருது”
” உன்ன நினைக்காம வேற யாரை நினைக்கிறது.. ”
” நீங்க இல்லாம இங்க உள்ளவங்க எல்லாம் என்னைய எப்படி எல்லாம் பேசிடாங்க தெரியுமா.. அதை பத்தியெல்லாம் உங்களுக்கு கவலை இல்ல.. நீங்க வந்து கொஞ்சவும் .. நான் சிரிக்கனும் இல்ல ”
” சரி நான் வந்திருக்கனும் தான்.. அம்மா எல்லாம் சொன்னாங்க.. நாளைக்கே உன் ஊருக்குள்ள வண்டியில ஒரு ரவுண்ட் போயிட்டு வருவோம்.. அதுக்கு அப்பறம் யாரு என்ன பேசுறாங்கன்னு பார்க்கிறேன் ”
” நிஜமாவா ” முட்டை கண்களை விரித்து கேட்டவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன்..
” நாளைக்கு கூட்டிட்டு போக நான் ரெடி.. ஆனால் அதுக்கு பதிலா நீ எனக்கு என்ன தருவ ” என அவளது கழுத்தில் முகம் புதைத்தவன்..
” வாவ் நைஸ் ஸ்மெல் டி மூன்… ” என வாசம் பிடித்துக் கொண்டே அவளை இறுக்கி அணைத்தான் ஆதிதேவ்.
” ஊர்ல உள்ளவங்க பேசுனது தான் கோவமா.. இல்ல மேடம்க்கு என்னைய தேடுச்சா ” கணவனின் அணைப்பிற்குள் இருந்தவளுக்கு அவனது கேள்வி கூச்சதை கொடுக்க.. பதில் கூறாமல் அவனுள் பதுங்கிக் கொண்டாள்.
” காலேஜ் முடிக்க எத்தனை மாசம் ஆகும் டி மூன் ”
” மாசம் எல்லாம் இல்ல.. இன்னும் 1 வீக் போனா போதும்.. ப்ராஜெக்ட் மட்டும் கொடுத்துட்டா போக தேவையில்ல ”
” அப்போ காலேஜ் முடிச்சுட்ட தானே..”
” ஆமா ”
” மேல எதுவும் படிக்கனுமா ”
” இல்ல வேலைக்கு தான் போகனும் ”
” அப்போ இன்னைக்கு நைட்டு ஒரு ரிகர்சல் பார்க்கலாமா .. ” என நிறுத்தியதும்.. அவனிடம் இருந்து விலகியவள்… வெட்கத்தில் அறையில் இருந்து ஓடி இருந்தாள்.
நாளை இதே நெருக்கம் இருக்குமா ??
சனா💖

