
அந்தப் பிரம்மாண்டமான மாளிகை வளாகமே ஒரு நொடியில் நிசப்தத்தில் உறைந்தது. வானம் இடித்துக் கொண்டிருந்தாலும், அங்கு நின்றிருந்த ஆட்களின் இதயத்துடிப்பு அவர்களுக்குத் தெளிவாகக் கேட்டது. அந்த கருப்பு நிற ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் வந்து நின்ற வினாடி, அங்கிருந்த ரவுடிகள் முதல் காவலாளிகள் வரை அனைவரும் ஒருவித மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளானது போல் ‘அலர்ட்’ ஆனார்கள். கைகள் தானாகவே கட்டப்பட, தலைகள் மரியாதையுடன் குனிந்தன.
காரின் கதவு திறக்கப்பட்டது. முதலில் தரையில் அழுந்தப் பதிந்தது அந்த விலையுயர்ந்த லெதர் பூட்ஸ். காரிலிருந்து அவன் வெளியே வந்தபோது, அந்த இருண்ட மழைக் காலத்திலும் ஒரு மின்னல் வெட்டியது போல இருந்தது. அவன் பெயர் ஆதித்ய தேவ்.
அவனது தோற்றம் ஒரு போர்வீரனின் கம்பீரத்தைக் கொண்டிருந்தது. நல்ல கோதுமை நிற மேனி, மழையின் சாரலில் நனைந்து ஒருவித மெருகூட்டப்பட்ட இரும்பைப் போல ஜொலித்தது. ஆறு அடி உயரமான அவனது உருவம், அந்த இடத்தையே ஆக்கிரமித்திருந்தது. அடர்த்தியான மீசையும், செதுக்கி வைக்கப்பட்ட தாடியும் அவனது முகத்திற்கு ஒரு முரட்டுத்தனமான அழகைத் தந்தன. சிரிப்பையே அறியாத அந்த உதடுகள், அவன் எவ்வளவு கடுமையானவன் என்பதற்குச் சாட்சியாக இருந்தன.
அவனது கண்கள்… அவை வெறும் கண்கள் அல்ல, கூர்மையான கத்திகள்! அந்தப் பார்வையில் ஒருவிதக் கோபம் எப்போதும் தகித்துக் கொண்டிருக்கும்; அப்படியே நெருப்பைக் கக்கும் டிராகனைப் போலத் தெரிந்தது. அந்தப் பார்வை யாரை நேருக்கு நேராகச் சந்திக்கிறதோ, அவர்களின் ஆன்மாவே ஒரு கணம் நடுங்கிவிடும். சட்டைக்குள்ளும் அடங்க மறுத்து விம்மி நிற்கும் அவனது ‘சிக்ஸ் பேக்’ உடலமைப்பு, அவனது அதிகாரத்திற்கும் பலத்திற்கும் ஒரு மகுடமாக அமைந்திருந்தது. பார்ப்பதற்கு அப்படியே ஒரு மிரட்டலான தோற்றம்—ஒரு நவீன காலத்து அரசன் போல!
(M. M. V) அப்ப oru வழிய இவனுக்கு intro கொடுத்தாச்சு.
அந்த பொண்ணுக்கு குடுத்துட்டு இவனுக்கு கொடுக்கலனா நம்மள கொன்றுவ போல. ஐயோ மொறைக்குறனே மீ எஸ்கேப் 🙏.
சுற்றிலும் இருந்தவர்கள் காட்டிய அடிபணிந்த மரியாதையை அவன் சற்றும் பொருட்படுத்தவில்லை. அவனது கவனம் ஒரு புள்ளியில் மட்டுமே இருந்தது. அமைதி நிலவிய அந்த மாளிகையின் வராண்டாவில், அவனது ஷூக்கள் எழுப்பிய ‘டக்… டக்…’ என்ற சத்தம் ஒரு மரண ஓலத்தைப் போல எதிரொலித்தது. அவன் நடக்கும்போது அவனது கைகள் அசையும் வேகத்தில் கூட ஒரு அதிகாரம் இருந்தது.
பிசினஸ் வட்டாரத்தில் ஆதித்ய தேவ் ஒரு சிம்ம சொப்பனம். அவன் ஒருமுறை முடிவெடுத்துவிட்டால், அதை மாற்ற இந்த உலகத்திலேயே எவராலும் முடியாது. அவன் போட்ட கோட்டைத் தாண்டியவர்களும் இல்லை, அவனை எதிர்த்துப் பேசியவர்கள் மீண்டும் தொழிலைத் தொடர்ந்ததும் இல்லை. “தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தண்டனை உண்டு” என்பதுதான் அவனது தாரக மந்திரம். அவனது அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை.
(M. M. V)ஆமா மன்னிப்பு கேக்க கூடாது sorry கேளுங்க வீட்டுருவ😁. ஐயோ மொறைக்குறனே தெரியாம பேசிட sir சாரி ஐயோ திரும்பவுமா எஸ்கேப் 😁.
ஆதித்ய தேவிற்குத் ‘துரோகம்’ என்பது கசப்பான மருந்து. உயிரைக் கொடுத்தாவது உறவைக் காப்பான், ஆனால் சிறு துரோகம் இழைக்கப்பட்டாலும் அவர்களை வேரோடு அழிப்பதுதான் அவனது வழக்கம். அவனது கண்கள் இப்போது சிவந்து போயிருந்தன. அவனது கோபத்தின் உஷ்ணம் அந்த மழைக் குளிரையும் தாண்டி வெளிப்பட்டது.
அவன் அந்த அறையை நோக்கி முன்னேறினான். அவனது ஒவ்வொரு அடியும் நிலா இருந்த அறையின் கதவை நெருங்க நெருங்க, உள்ளே இருந்த அந்த அப்பாவிப் பெண்ணின் ஆயுள் குறைந்து வருவது போன்ற சூழல் நிலவியது. ஆதித்ய தேவ் எப்போதுமே பலம் வாய்ந்த எதிரிகளுடன் மோதிப் பழகியவன். ஆனால், இந்த முறை அவன் முன்னால் நிற்பது ஒரு மென்மையான, அப்பாவிப் பெண்.
அவன் அந்த அறையின் கதவருகே வந்து நின்றான். கதவைத் திறக்கக்கூட அவன் கையைப் பயன்படுத்தவில்லை; அவனது அதிகாரமிக்க ஒரு உதையிலேயே அந்தப் பிரம்மாண்டமான கதவு பயத்துடன் திறந்து கொண்டது. உள்ளே இருந்து ஒரு மெல்லிய அழுகுரலும், நடுக்கமும் அவனை வரவேற்றன. ஆதித்ய தேவ் உள்ளே நுழைந்தான். அவனது நிழல் அந்த அறையையே இருளாக்கியது. கட்டிலின் மூலையில் சுருங்கிப் போய் அமர்ந்திருந்த நிலா, மெல்லத் தலை நிமிர்ந்து அந்த நெருப்புப் பிழம்பைப் பார்த்தாள்.
அந்தத் தேவதைக்கும், இந்த அரக்கனுக்கும் இடையிலான மோதல் இப்போதுதான் தொடங்கப் போகிறது.
War Begin for angel Vs demon.
அரக்கன் வருவான்.

