Loading

அத்தியாயம் 21

 

தீப்ஷீயின் நெற்றியில் குங்குமம் வைத்து தன் உரிமையை நிலைநாட்டினான் தேவ் .

 

 

 

ஐயர் கூறிய மந்திரத்தை இருவரும் சொல்லிக்கொண்டிருந்தனர் .

 

 

 

தினேஷ் சரண்யா கண் குளிர தன் மகளை பார்த்தனர் .

 

 

 

அனைத்து சடங்குகளும் முடிய , ஒவ்வொருவராக தங்கள் அன்பளிப்பை தர மேடை ஏறினர் .

 

 

 

தினேஷ் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தார் .

 

 

 

சத்யா,  சர்வேஷ் டைனிங் ஹாலைப் பார்த்துக் கொண்டனர் .

 

 

 

சத்யாவிற்கு,  சந்தியா நினைவாக இருக்க  அவளை தேடி போனான் .

 

 

 

மண்டபத்திற்கு வெளியே மரத்தடியில் தனியாக நின்றிருந்தாள் சந்தியா .

 

 

 

“ சாப்பிட வராம இங்கு என்ன பண்ணிட்டுருக்க ? “  என்றுக் கேட்டான் சத்யா .

 

 

 

திடீரென்று கேட்ட சத்தத்தில் சந்தியாவிற்கு தூக்கி வாரிபோட்டது .

 

 

 

“ இப்படியா பின்னால் வந்து பயமுறுத்துவீங்க? “ என்றுக் கேட்டாள் சந்தியா .

 

 

 

“ நான் கேள்வி தான் கேட்டேன் . அதுக்கு பயந்தது உன் தப்பு‌. “

 

 

 

“ … “

 

 

 

“ கேட்ட கேள்விக்கு பதில் .”

 

 

 

“ சாப்பிட தோணலை. “

 

 

 

“ இன்னும் எதுக்கு அழுதுட்டுருக்க ? அதான் எல்லாம் நல்ல படியா முடிஞ்சிடுச்சே. “

 

 

 

“ நீங்க ஏன் என்கிட்ட பேசலை . உங்களுக்கு என்ன பிடிக்கலையா ? தீப்ஷீ கிட்ட மட்டும் சம்மதம் சொன்னீங்க.”

 

 

 

“ நீ , என்ன காதலிக்கிறதை தீப்ஷீ தான் சொன்னா … அதான் என் பதிலை அவக் கிட்ட சொன்னேன்.”

 

 

 

“ சரி இப்போ கேட்கிறேன் , என்னை கல்யாணம் பண்ணிக்க  சம்மதமா ?”

 

 

 

“ சம்மதம் ஆனா , கொஞ்ச வருஷம் நீ காத்திருக்கணும்? “

 

 

 

“ கண்டிப்பா. “

 

 

 

“ இப்போ வந்து சாப்பிடு. “

 

 

 

“ இன்னொரு கேள்வி . ஏன் நீங்க தீப்ஷீக்கு துணையாக இல்லாம, அவளை கட்டாயப்படுத்தி இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணீங்க? அவளை பார்க்கவே கஷ்டமா இருக்கு , அவ முகத்தில் சிரிப்பே இல்லை .”

 

 

 

“ அதுக்கு காரணம் இருக்கு. நீயே போக போக புரிஞ்சுக்குவ . இப்போ வா , எனக்கு டைமில்ல. “ என்ற சத்யா திரும்ப, அங்கு நின்றிருந்த ராஜன் மற்றும் ஈஸ்வரியை பார்த்தான்.

 

 

 

“ ரொம்ப சந்தோஷம்பா , நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னதுக்கு. “ என்றார் ராஜன்.

 

 

 

“ ஆனா , உங்களுக்கு என் குடும்பத்தைப் பத்தி தெரியுமா ? “ எனறு மேலும் ஏதோ பேச வர…

 

 

 

சத்யாவை பேச விடாமல் , “ அதான் பார்த்தோமே சத்யா , உன் வார்த்தைக்கு உன் குடும்பம் இன்னைக்கு எவ்வளவு முக்கியதுவம் தந்தாங்கனு . இந்த கல்யாணம் நடக்கவே நீ தான் காரணம் .” என்றார் ராஜன்  . சத்யாவின் குடும்பமாகவே தீப்ஷீயின் குடும்பத்தை பார்த்தார் ராஜன் .

 

 

 

எல்லாம் அவர்களுக்கு முன்பே தெரியும் என்று தீப்ஷீ சொன்னதால் வேறு எந்த பழைய கதையையும் பேசவில்லை சத்யா .

 

 

 

“ சரி வாங்க சாப்பிடலாம் .” ,

என்ற சத்யா , மூவரையும் உணவு  உண்ண அழைத்துச் சென்றான் .

 

 

 

தன் வேலைகளை முடித்த சத்யா இப்போது மேடை ஏறினான் . தேவ்விற்கு கை கொடுத்தான் சத்யா .

 

 

 

தேவ்வும் எந்த பந்தாவும் செய்யாமல் அவனுக்கு கை கொடுத்தான் .

 

 

 

“ கங்கிராட்ஸ் தேவ் . இது என்னோட கிப்ட் , கொடைக்கானலுக்கு மூணு நாள் ட்ரிப் . நாளை மறுநாள் விடியகாலைல கார் வரும் உங்கள கூட்டிட்டுப் போக. “

என்றான் சத்யா .

 

 

 

“ சத்யா , எதுக்கு இதெல்லாம் .” என்றாள் தீப்ஷீ கோபமாக .

 

 

 

“ நான் முன்னாடியே ஏற்பாடு செஞ்சது அம்மு . என்னோட கிப்ட்டை ஏத்துக்குறதும், ஏத்துக்காததும் உன் விருப்பம் . இப்போ ஒரு போட்டோ எடுத்துக்கலாம்.” என்ற சத்யா தீப்ஷீ அருகில் நின்றுக் கொண்டான் .

 

 

 

தேவ் மகிழ்ச்சியாகவே சத்யாவின் கிப்ட்டை பெற்றுக்கொண்டான் . தீப்ஷீயுடன் தனியாக பயணம் செய்ய காத்திருந்தானே தேவ் . அப்போது தான் தீப்ஷீ அவனிடம் பேசவாவது செய்வாள் என்று தேவ் நினைத்தானோ .

 

 

 

“ மேடம் இங்கு வந்து நில்லுங்க . உங்கள போட்டோ எடுக்கணும். “ என்று வெளியே அழைத்தார் போட்டோகிராஃபர்.

 

 

 

தீப்ஷீ அங்கு செல்ல…  இப்போ தேவ் மற்றும் சத்யா தான் மேடையில் நின்றனர் .

 

 

 

தீப்ஷீ வருகிறாளா என்று பார்த்த சத்யா , “ நீ தீப்ஷீய காதலிக்குறது எனக்கு முன்னாடியே தெரியும் . தமிழன்பனைப் பத்தியும் எனக்கு நல்லா தெரிஞ்சி தான் இந்த கல்யாணத்துக்கே ஏற்பாடு செஞ்சேன் . இன்னைக்கு நடந்த டிராமாவிற்கு காரணமும் நீ தான் என்பது எனக்கு நல்லா தெரியும்.”  என்றான் சத்யா .

 

 

 

அவனை அதிர்ச்சியாகவே தேவ் பார்த்தான் , “ நீ கண்டுபிடிச்சிடுவேனு தெரியும். ஆனா , இவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிப்பேனு எதிர்பார்க்கலை. “ என்றான் தேவ் .

 

 

 

“ எல்லாம் தெரிஞ்சி தான் உனக்கு தீப்ஷீய கல்யாணம் பண்ணி வெச்சேன் . அவள நல்லா பார்த்துக்கலைனா அடுத்த நிமிஷம் அவளை உன்கிட்ட இருந்து பிரிச்சிக் கூட்டிட்டு போகவும் நான் யோசிக்க மாட்டேன். “ என்றான் சத்யா .

 

 

 

“ உனக்கு அந்த வாய்ப்பை நான் தரமாட்டேன் மச்சான் .” என்ற தேவ் , சத்யாவை அணைத்துக் கொண்டான் .

 

 

 

அவனின் இந்த செயலை எதிர்ப்பார்க்காத சத்யா தடுமாறினான் . மேடை ஏறி வந்த தீப்ஷீ அதிர்ச்சியாக பார்த்தாள் . தான் காணும் காட்சி உண்மையா என்று தெரிந்துக்கொள்ள கண்களை தேய்த்துக் கொண்டு மீண்டும் பாரத்தாள்.

 

 

 

தீப்ஷீ அருகில் வந்ததும் , தேவ் சத்யாவை விட்டான் . தீப்ஷீ கேள்வியாக சத்யாவை பார்த்தாள் .

 

 

 

“ எனக்கு எதுவும் தெரியாது அம்மு.  நான் கீழே போறேன் .” என்ற சத்யா ஓடியேவிட்டான் .

 

 

 

‘ அடப்பாவி நீ ஏன் டா இப்படி வெட்கப் பட்டு ஓடுற. இவ வேற  என்ன தப்பா நெனைச்சுக்க போறா.’ என்று நினைத்தான் தேவ் .

 

 

 

மேடையில் போட்டோ எடுக்கும் வேலை முடிய ,

 

 

 

“ இரண்டு பேரும் சாப்பிட வாங்க. “ என்று அழைத்தான் சர்வேஷ் .

 

 

 

“ எனக்கு பசிக்கலை சர்வேஷ். “ , என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ ஆனா , எனக்கு பசிக்குது.” என்றான் தேவ் .

 

 

 

“ உனக்கு. “ என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் .

 

 

 

தேவ் அவளின் கை விரல்களை பிடித்து அழுத்தி , “ என்ன சர்வேஷ் , இன்னும் உன் தங்கைக்கு மரியாதைனா  என்னன்னு தெரியலை போல . உன்ன பெயர் சொல்லி கூப்பிடுறா  . என்கிட்ட நீ, வா, போனு பேசுறா. “ என்றான் .

 

 

 

“ கை வலிக்குது. “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ சொல்ல வந்ததை மரியாதையா சொன்னால் நான் உன் கைய விடுவேன். “ என்றான் தேவ் .

 

 

 

“ உங்களுக்கு பசிச்சா நீங்க போய் சாப்பிடுங்க . நான் வரலை. “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

அவளின் கையை விட்ட தேவ் , “ நீ இல்லாம நான் மட்டும் தனிய போய் சாப்பிட்டால் , எல்லோரும் என்ன ஒருமாதிரி பார்ப்பாங்க . நான் என்னமோ உன்ன தனியா விட்டுட்டு வந்த மாதிரி. “

 

 

 

“ இல்ல நான் வரலை. “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ உனக்கு கால் வலிக்குதா செல்லம். மாமா கிட்ட சொன்னா நானே டைனிங் ஹாலுக்கு உன்ன தூக்கிட்டு போறேன்  . இதுக்கு போய் யாராவது பசிக்கலைனு அடம்பிடிப்பாங்களா ?”  என்ற தேவ் , தீப்ஷீயை தூக்குவது போல் நெருங்கி வர .

 

 

 

“ இல்ல நானே சாப்பட வரேன். “  என்ற தீப்ஷீ வேகமாக முன்னே செல்ல… சர்வேஷ்ஷும், தேவ்வும் அவளை பின் தொடர்ந்தனர் .

 

 

 

“ எங்க வீட்டு பிடிவாத , சண்டி ராணிய நீ ஈஸியா உன் வழிக்கு கொண்டுவந்துட்டியே. உன் பாடு தான் கஷ்டம்னு நினைச்சேன் . அப்போ என் தங்கை தான் பாவம். “ என்றான் சர்வேஷ்.

 

 

 

“ எனக்கு அவளப்  பத்தி நல்லா தெரியும் டா . அவ எனக்கு பயப்படுறதெல்லாம், என்னை அவ வெறுக்கும் வரைக்கும் தான்  . அவ என்ன நேசிக்க ஆரம்பிச்சா நான் தான் அவளுக்கு பயப்படணும்.” என்றான் தேவ் .

 

 

 

மூவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் . சத்யா அவர்களுக்கு வேண்டியதை வரவழைத்துக் கொண்டிருந்தான் .

 

 

 

“ சத்யா , நீ சாப்பிட்டியா ? “ என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

 

 

“ நீ சாப்பிடு அம்மு , நான் அப்புறமா சாப்பிடுறேன். “  என்றான் சத்யா .

 

 

 

“ சத்யா , இது தான் கடைசி பந்தி . நீ இங்கு யாரையும் தனியா கவனிக்க தேவையில்லை . எல்லோரும் நம்ம வீட்டு ஆளுங்க தான் . அவங்களுக்கு வேண்டியதை அவங்களே கேட்டு வாங்கிப்பாங்க . நீ வந்து உட்காரு‌. “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ எனக்கு பசிக்கலை அம்மு. நீ சாப்பிடு டா. “ என்றான் சத்யா .

 

 

 

“ சரி வாய திற. நான் ஊட்டிவிடுறேன். “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

சத்யா, சங்கடமாக தேவ்வை பார்த்தான்.  “ என்ன சத்யா யாரையோ பார்க்குற? நம்ம நட்புக்குள் யாரையும் வரவிடமாடடேன். நம்மள  கேள்வி கேட்க யாருக்கும் நான் அனுமதியும் தரலை . மீறி கேட்டால் அந்த உறவை தூக்கி போடவும் நான் யோசிக்க மாட்டேன். “ என்றாள் தீப்ஷீ ஓர கண்ணால் தேவ்வை பார்த்துக் கொண்டே .

 

 

 

“ அம்மு , இப்படியெல்லாம் பேசுற வேலை எல்லாம் வெச்சுக்காத . உறவை தூக்கி போடுறது, உனக்கு ஈஸியான விஷயமா இருக்கலாம் . உறவு இல்லாத எனக்கு தான் அதன் வலி தெரியும். “ என்றான் சத்யா .

“ சாரி சத்யா , இனிமே இப்படி பேசமாட்டேன் . உனக்கு நான் இல்லையா சத்யா , நீ இப்படி சொல்லலாமா? “ என்று கண்களில் நீரோடு கேட்டாள் தீப்ஷீ .

 

 

 

“ எனக்கு நீ , நம்ம குடும்பம் எல்லோரும் இருக்கீங்க . ஆனா,  நீ சொல்லிய வார்த்தை தான் என்ன இப்படி பேச வெச்சது. “ என்ற சத்யா அவளின் கண்ணீரை துடைத்துவிட்டவன் , வாயை திறந்து காட்டினான் .

 

 

 

தீப்ஷீ அவனுக்கு ஊட்டி கொண்டிருக்க , சத்யா சாப்பிட்டுக் கொண்டே தன் வேலையை செய்தான் .

 

 

 

‘ என்ன சென்டிமென்ட்டுடா சாமி . வானத்தைப்போல படம் பார்த்த பீல் வருதே .’  என்று நினைத்தான் தேவ்  .

 

 

 

அதுவரை எங்கோயிருந்த போட்டோகிராஃபர் மாப்பிள்ளை , பெண் சாப்பிடுவதை பார்த்து . வேகமாக அவர்கள் அருகில் வந்து அவர்கள் உண்பதுப் போல் போட்டோ எடுத்தவர்,” சார் , மேடமுக்கு ஊட்டிவிடுங்க “  என்றார் .

 

 

 

“ அண்ணா , அந்த மாதிரி ஃபோட்டோ எடுக்க வேண்டாம். “  என்றாள் தீப்ஷீ , தேவ்வை முந்திக் கொண்டு .

 

 

 

“ என்னோட கல்யாண ஆல்பத்தில் கண்டிப்பா அந்த மாதிரி ஃபோட்டோ இருக்கணும் .” என்ற தேவ்  , தீப்ஷீக்கு ஊட்டி விட்டான் .

 

 

 

போட்டோகிராஃபர் முன்பு எதுவும் பேச விரும்பாத தீப்ஷீ ,  தேவ்வை முறைத்துக் கொண்டே அவன் ஊட்டியதை உண்டாள்.

 

 

 

தீப்ஷீயை , தேவ்விற்கு ஊட்டிவிட சொல்ல தயங்கிய போட்டோகிராஃபர் அமைதியாக நிற்க . அவரின் நிலை உணர்ந்து தேவ் கோபமாக, “ எனக்கு ஊட்ட பிடிக்கலைனா  சும்மா போட்டோவுக்கு போஸாவதுக் கொடு. “ என்றான் தேவ் .

 

 

 

‘ சத்யா மேல் நீ கொண்ட பாசத்தில் , ஒரு சதவீதம் என்மேல் வை என்று தான் கேட்கிறேன். ‘ என்று நினைத்தான் தேவ் .

 

 

 

அவனின் கோபம் பற்றி அறிந்த தீப்ஷீ , அமைதியாக அவனுக்கு உணவை ஊட்டினாள் .

 

 

 

“ அண்ணா , இந்த மாப்பிள்ளை , பெண்ணை விதம் விதமா ஃபோட்டோஸ் எடுப்பாங்களே. அதுபோல் நீங்க எடுக்க மாட்டீங்களா ? “ என்று அதிமுக்கிய சந்தேகத்தைக் கேட்டான் சர்வேஷ் .

 

 

 

தீப்ஷீ காளி அவதாரம் எடுத்து அவனை முறைத்தாள் . எல்லோரும் இருக்கும் தைரியத்தில் தானே சர்வேஷ் கேட்டான் . யாருமில்லை என்றால் தீப்ஷீ அவனை அடிக்கவும் யோசிக்க மாட்டாள்.

 

 

 

“ அடுத்து அதுக்கான ஃபோட்டோ ஷூட் தான் . சாப்பிடலைணா  அவங்க ஃபோட்டோஸ் எடுக்கும் போது டயர்டா இருப்பாங்க. அதுக்காக தான் அவங்க சாப்பிட்டு வரட்டும்னு வெயிட் பண்றோம். “ என்றார் .

 

 

 

“ சரிங்க அண்ணா , இரண்டு பேரையும் சீக்கிரமா அனுப்பி வைக்கிறேன். “என்றான் சர்வேஷ் .

 

 

 

“ இல்ல , நீங்க போங்க அந்த மாதிரி போட்டோஸ் எல்லாம் எடுக்க வேண்டாம் .” என்றான் தேவ் .

 

 

 

“ தேவ் , எதுக்கு டா வேண்டாம்னு சொல்ற.” என்றான் சர்வேஷ் .

 

 

 

“ நீ அமைதியா இரு சர்வேஷ் . அண்ணா , நீங்க கிளம்புங்க. “ என்றான் தேவ் .

 

 

 

தேவ்வின் பதிலால் நிம்மதி அடைந்த தீப்ஷீ கை கழுவ சென்றாள் .

 

 

 

“ டேய் இதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ் டா . ஏன் வேண்டாம்னு சொன்ன? “ என்றுக் கேட்டான் சர்வேஷ் .

 

 

 

“ அதெல்லாம் மத்தவங்களுக்கு தான் . என்ன பிடிக்காமல் என்ன ஒட்டி நின்னு விதம் விதமா போட்டோ எடுப்பதெல்லாம் அவளுக்கு இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கும். அதான் டா வேண்டாம்னு சொன்னேன். அவ மட்டும் என்ன காதலிக்கட்டும் அவுட்டோர் கப்புள் போட்டோ ஷூட்டே பண்ணிக்கலாம். “என்றான் தேவ் .

 

 

 

“ பின்ன ஏன் டா இப்போ மட்டும் அவளோடு ஊட்டுவது போல் ஃபோட்டோ எடுத்த? அதுவும் தான அவளுக்கு பிடிக்கலை.”

 

 

 

“ ஃபோட்டோவிற்காக அவளை ஊட்ட சொல்லலை டா . அவ சத்யாவுக்கு ஊட்டுறதை  பார்த்து எனக்கும் அவ கையால் சாப்பிட ஆசையா இருந்திச்சி . நேரா ஊட்டிவிட சொன்னா உன் தங்கை ஊட்டிவிடுவாளா ? அதான் ஃபோட்டோ எடுக்குற மாதிரி என் ஆசைய நிறைவேத்திக்கிட்டேன். “ என்றான் தேவ் .

 

 

 

“ அடப்பாவி! “  என்று வாயை பிளந்தான் சர்வேஷ் .

 

 

 

“ நீ ஷாக்கானது போதும் , உன் தங்கை எங்கையாவது போறதுக்கு முன்னாடி நாம அவ இருக்குக்ற இடத்துக்கு போலாம் வா. “ என்று சர்வேஷோடு வெளியே வந்தான் தேவ் .

 

 

 

சத்யாவோடு பேசிக் கொண்டிருந்தாள் தீப்ஷீ . தேவ்வும், சர்வேஷ்ஷும் அவர்கள் அருகில் வந்தனர் .

 

 

 

“ பெரியவங்க எல்லோரும் வேறு வண்டியில் போய்ட்டாங்க . நம்மள இந்த கார்ல வர சொன்னாங்க . கிளம்பலாமா நல்ல நேரம் முடிறதுக்கு முன்னாடி. “என்று தேவ்வை கேட்டான் சத்யா .

 

 

 

“ நீ சாப்பிடவே இல்லையே . போய் சாப்பிட்டு வா கிளம்பலாம். “ என்றான் சர்வேஷ் .

 

 

 

“ இல்ல எனக்கு பசிக்கலை நாம கிளம்பலாம்‌. “ என்ற சத்யா காரின் முன் சீட்டில் உட்கார போக .

 

 

 

தீப்ஷீ , “ சத்யா , நீ பின்னால் வந்து உட்காரு . சர்வேஷ் , நீ முன்னாடி போ. “ என்றாள் .

 

 

 

தேவ் ஏதோ சண்டைக்கு தயாராகிறான் என்பது புரிய, வேகமாக சர்வேஷ் , “ எல்லாத்துக்கும் சண்ட போட்டுட்டு  இருக்காதீங்க . இதெல்லாம் உங்களோடே வெச்சுக்கோங்க , எங்கள விட்டுடுங்க. “ என்றவன் முன்னாடி உட்கார்ந்துக் கொண்டான் .

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
5
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. சத்யா உனக்கும் தெரியுமா எதுக்கு இந்த டிராமா எல்லாம் … அவ கிட்ட காதலை சொல்லி தேவ் பொறுமையா அவளை கல்யாணம் பண்ணியிருக்கலாம் … இங்க தீப்ஷி மட்டும் தான் பாவம் போல … இந்த தேவ் நல்லவனா கெட்டவனா 🤔🤔வில்லனா மாறுவானோ …