
அத்தியாயம்-04
தோழமை கூட்டம் நால்வரும் கூடி அமர்ந்திருக்க, ஜேன்சி அவர்கள் கட்டப்போகும் ஒரு பல்பொருள் அங்காடிக்கான திட்டங்களை பற்றி அவர்கள் கொடுத்து வைத்ததாக சேமித்து வைத்திருந்ததை அவர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தது. அவற்றை சிரத்தையுடன் கேட்டவர்களில் மூவர் ஜான்விகாவை தான் ஆச்சரியத்தோடு நோக்கினர்.
ஒருமுறை பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு சென்றிருந்தபோது அவள் இந்தந்த முறைகளில் கட்டமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி தங்களின் கேலி பேச்சுக்களுக்கு ஆளானது நினைவு வரவே, அவளை ஆச்சரியமாக பார்த்தனர். அவளுமே அதே அதிர்ச்சியில் தான் இருந்தாள்.
“ஏ ஜான்.. ரியலி சாரி. அன்னிக்கு உன்னை ரொம்ப கலாய்ச்சோம். ஆனா உன்னோட ப்ளான்ஸ் நம்ம ஃபியூச்சர்ல உருவாக்கப்படும்னு நாங்க எதிர்ப்பார்க்கவே இல்லை” என்று விஷ் கூற,
“அடேய் நீ வேற.. நானே நம்ம விளையாட்டு போக்குல சொன்னதா இருக்கேனு பீதில இருக்கேன். இதுக்கு ஏரியா ஸ்பேஷியஸ்ஸா இருக்கனும், மண்ணோட வலம் ரொம்ப முக்கியம். அதுக்கு பயன்படுத்தும் மெடீரியல்ஸோட குவாலிடி அதுக்கு ஆகும் பணம்னு அப்ப நான் சொன்னப்போ இது காமெடி தான்டா. ஆனால் இப்ப உள்ள பொருளாதாரத்துக்கு இது சரிபட்டு வரும்னு இருக்கு” என்றாள்.
“ஆமா ஜான். நீயே இந்த மீட்டிங்கை கண்டெக்ட் பண்ணு. உன்னோட தாட்ஸ் அன்ட் வியூஸ நம்ம ஊழியர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டியது நீ தான்” என்று அகா திடமாக கூற,
“ஏ என்னடி ரொம்ப கான்பிடென்டா பேசுற? என்னமோ உண்மைலயே கம்பெனிக்கு ஓனர் மாதிரி.. பார்டைம் தான் இது” என்று ஜான் கூறினாள்.
“பார்டைமோ, ஃபுல் டைமோ, இது உனக்கு கிடைச்சிருக்கும் ஒரு வாய்ப்பு. இதை பயன்படுத்துறதுல என்ன?” என்று அகா கூற,
“ஷி இஸ் ரைட்” என்று துரு கூறினான்.
‘அடேய்.. ஆனாலும் அவளுக்கு ஓவரா ஒத்து ஊதுறடா நீ’ என துருவனை உள்ளே கருவிக் கொண்ட ஜான், “சரி முயற்சி பண்றேன்” என்று கூற,
“சூப்பர் ஜான்” என்றனர்.
சில நிமிடங்களில் நிதி, இயக்கம், தகவல் தொழில்நுட்பம், சட்டம், வியாபாரம், கட்டிட அமைப்பு என ஒவ்வொரு பிரிவின் தலைமையாளர்களும் கூடி இருக்க, ஜேன்சி அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தது.
பணியாளர்களுக்கு அது விசித்திரமாக பட்டபோதும் யாரும் ஏதும் கேட்டுக்கொள்ளாமல் இருக்க, அறிமுகப்படலம் முடிந்து ஜான் தனது விளக்கவுரையை துவங்கினாள்.
தனது திட்டத்தைப் பற்றி விவரித்தவள், ஊழியர்கள் ஆலோசனையையும் கேட்டு தான் ஏதும் தவறான கண்ணோட்டத்தில் கூறியிருந்தால், அவற்றையும் திருத்திக் கொண்டாள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தொடர்ந்த அந்த கூட்டம், முடிவுபெற, அனைவரது முகத்திலும் திருப்தியான புன்னகை!
ஜான்விகாவிற்கு தன் திறமையை நினைத்து தனக்கே அத்தனை பூரிப்பாக இருக்க, இத்தனை இருந்தும் தனக்கு வேலை கிடைக்காமல் இருந்ததை எண்ணி கழிவிரக்கமாகவும் இருந்தது.
அனைவரும் விடைபெற்று வெளியேற, ஜேன்சியிடம் அடுத்தகட்ட வேலைகள் என்னவென்று கேட்டுத் தெரிந்து கொண்டனர். அனைத்து வேலைகளும் முடிந்து சரியாக ஆறு மணிக்கெல்லாம் ஊழியர்கள் புறப்படுவது தெரிய, “ஏ ஜே! என்ன எல்லாரும் கிளம்புறாங்க?” என்று விஷ் கேட்டான்.
“ஆமா சார். சிக்ஸோ கிலாக் எல்லாரும் கிளம்பிடுவாங்க. காலை பத்து மணியிலிருந்து, மாலை ஆறு மணி வரை தான் எல்லா இடத்திலும் வேலை. காவல் துறை, மருத்துவத்துறை மட்டும் தான் இருபத்து நான்கு மணிநேரமும் இயங்கும். அதுவும் ஷிப்ட் வைஸ் தான் நடக்கணும்” என்று ஜே கூறியது.
“அவ்ளோ தான் வர்கிங் நேரமா? வேலையெல்லாம் டிலே ஆகாதா?” என்று ஜான் வினவ,
“அதான் இப்ப எல்லாமே மெஷின் வர்க்காகிடுச்சே ஜான். மனுஷனோட பாதிக்கும் மேற்பட்ட வேலைகளை மிஷின் பார்க்குது. அதனால டைம் சேவ் ஆகுது” என்று அகா சரியாகக் கணித்துக் கூறினாள்.
“எஸ் மேம்” என்று ஜேன்சி கூற,
சரியென்று யாவரும் சேர்ந்து புறப்பட்டனர்.
சட்டென ஏதோ நினைவு பெற்றவனாக துருவன் “ஏ ஜேன்சி.. கோவில் எதுவும் இருக்கா?” என்று யோசனையோடு வினவ,
“எஸ் சார் இருக்கே” என்றது.
‘அப்போ எத்தனை வருஷம் ஆனாலும் மனிதன் மனசுலருந்து அழிக்க முடியாத ஒன்று ஆன்மீகம்’ என்று எண்ணியவன் சற்றே தயக்கத்தோடு “கேஸ்டிஸம் இன்னும் இருக்கா?” என்று வினவ,
“இருக்கே சார்” என்றது.
“மார்க் எல்லாம் கேஸ்ட் பேசிஸ்ல செபரேட் பண்ணறது, ஜாதி சண்டை இதெல்லாம் இருக்கா?” என்று மீண்டும் அவன் வினவ,
“இல்லவே இல்லைனு சொல்ல முடியாது சார். ஆனா சிலபல வருடங்களுக்கு முன்ன இருந்தது போல் அவ்வளவு தீவிரமாக இல்லை. இன்னும் சில இடங்கள்ல ஜாதி மதம் போன்ற தலைப்புகளில் பேச்சு வார்த்தை நடந்தா அது ஒரு தர்க்கத்துல தான் முடியுது. அன்ட் நீங்க சொல்ற அந்த கேஸ்ட் பேசிஸ்ல படிப்பு.. அதுலாம் இல்லை சார்” என்றது.
“அப்ப எந்த பேசிஸ்ல காலேஜ்லாம் சேர முடியுது?” என்று அவன் வினவ,
“இதுபடி அதுபடின்னுலாம் கிடையாது சார். என்ன மார்க் என்ன கேஸ்ட்னு எதுவுமே பார்க்க மாட்டாங்க. அரசாங்கம் இந்த படிப்பு இந்த வருஷம் இவ்வளவு தொகைனும், இந்த மதிப்பெண்ணுக்குள்ள இருப்பவர்களுக்கு தான் அந்த படிப்பு படிக்க முடியும்னும் கொடுத்திருக்கு. அந்த மதிப்பெணுக்குள்ள வாங்கிட்டா அந்த வருடம் எவ்வளவு தொகை நிர்ணயம் பண்ணிருக்காங்களோ அதை கட்டி படிக்கலாம். அப்பத்தான் அதை படிக்க முடியும்” என்று ஜேன்சி கூறியது.
இதை கேட்ட தோழர்கள் நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, “ஸ்டில்.. இன்னும் இந்த ஜாதி சண்டைகள் நடக்குதா? இவ்வளவு நவீனமான உலகத்துல?” என்று ஜான் ஆச்சரியத்துடன் வினவ,
“நாகரீகத்தாலையும் மாற்ற முடியாத அழுக்கு இது. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் மாறாது” என்று விஷ் கூறுகையில் அன்றைய இரவு துருவன் கூறியது தான் அவர்கள் நினைவில் ஓடியது.
அந்த பேச்சினை மௌனம் வந்து அணைத்துக் கொண்டதன் விளைவாய் நிசப்தமாக பயணம் தொடர, கண்ணாடி வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த அகநகை, “ஜே ஸ்டாப் தி கார் (வண்டியை நிறுத்து)” என்றாள்.
மறுப்பின்றி ஜே வண்டியை நிறுத்த, “என்ன அகா?” என்று மற்றவர்கள் வினவினர்.
“எல்லாரும் போங்க. நான் கோவிலுக்கு போக போறேன்” என்று அவள் கூற, வெளியே தெரிந்த கோவிலைக் கண்டனர்.
“தனியா எதுக்கு? நாங்களும் வரோமே?” என்று விஷ் வினவ,
“இல்ல விஷ்.. நானே போறேன். ப்ளீஸ் லீவ் மீ அலோன் ஃபார் சம்டைம் (என்னை கொஞ்சம் நேரம் தனியா விடுங்க)” என்றாள்.
“இந்த இடமே உனக்கு பழக்கம் கிடையாது அகா. எப்டி திரும்ப வீட்டுக்கு போவ?” என்று ஜான் வினவ,
“ஜேவ கூப்டுப்பேன். ஃபோன் இருக்கு ” என்றாள்.
அதற்கு மேல் யாரும் அவளை தடுக்காதிருக்க, “பார்த்து போ. பாய்” என்று கூறிய துரு, அவள் இறங்கியதும் வண்டியை கிளப்பும்படி கூறினான்.
செல்லும் வாகனத்தினைக் கண்டு பெருமூச்சு விட்டவள், அந்த கோவிலுக்குள் நுழைந்தாள். அது ஒரு சிவன் கோயில்! உள்ளே நுழையவும் சாம்பிராணி மணம் கமழ, சுற்றி வெண் புகை மூண்டிருந்தது.
கடவுள் நம்பிக்கை கொண்ட அகாவிற்கு அந்த இடம் நல்ல அமைதியையே கொடுத்தது!
அங்கு சென்று பார்த்தவள் பூசாரி அலைப்பேசியை பார்த்து உள்ளே ஏதோ செய்வது தெரியவர, ‘என்ன பண்றாங்க? ஃபோன பார்த்து மந்திரம் ஓதுறாரா?’ என்று யோசித்தாள்.
பூசாரியும் சிறிது நேரத்தில் ஆரத்தி காட்டிவிட்டு, கருவறையின் வலப்பக்க சுவரின் புறம் தட்டை நீட்டி “எடுத்துக்கோங்கோ” என்று கூற ‘இவருக்கென்ன ஆச்சு?’ என்றபடி ‘பே’ என விழித்தாள்.
இவளை பார்த்த பூசாரி தட்டுட்டன் வெளியே வர, “உள்ள வேற யாரும் இருக்காங்களா சாமி?” என்று ஆர்வம் பொறுக்காது வினவினாள்.
“இல்லையே ம்மா” என்று அவர் கூற,
“அப்றம் உள்ள யாருக்கு ஆரத்தி காட்டினீங்க?” என்று கேட்டவளுக்கு “அதுவா? கேமராக்கு காட்டினேன்மா” என்றார்.
“கேமராவுக்கா? புரியும்படி சொல்லுங்க சாமி” என்று அவள் வினவ,
“என்னமா நீ புதுசு போல கேட்குற? ஆன்லைன் பூஜைமா. கோவிலுக்கு வரமுடியாம, ஆனா பூஜை பண்ணியே ஆகணும்னு இருக்குறவங்க, நேரமும் பூஜையும் பெயரும் சொல்லி பதிவு பண்ணிடுவாங்க. அவங்களுக்கு பூஜை லைவா போகும். பூஜை முடிஞ்சு பிரசாதம் கொரியர்ல அனுப்பி வச்சுடுவோம்” என்றவர் பதிலில் “ஏதே?” என்று விழி பிதுங்கி நின்றாள்.
அவளை விசித்திரமாக பார்த்தவர் “ஆரத்தி எடுத்துக்கோமா” என்க,
ஆரத்தியை தொட்டுக் கும்பிட்டுவிட்டு, திருநீரை கீற்றுப்போல் நெற்றியில் பூசிக்கொண்டு பிரகாரத்தினை சுற்றினாள்.
அக்கோவிலிக்குள் சிறிய, செயற்கை குளம் இருக்க, அங்கே சென்று அமர்ந்தவள், குளத்தின் நடுவே சிறிய சிவலிங்கம், நீரில் பாதி மூழ்கிய நிலையில் காட்சியளிப்பதைப் பார்த்தது பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
‘என்ன நடக்குது இங்க? எப்படி இங்க வந்தோம்? இங்கிருந்து எப்படி போவோம்? விஷ்ஷோட அத்தை குடும்பம் எப்படி இல்லாம போனாங்க? ப்ரியா எங்க இருப்பா? இங்கிருந்து போக வழியே இல்லையா? இந்த உலகத்துல எங்களுக்கு எதை உணர்த்த கூட்டிட்டு வந்தீங்க?’ என்று மனதிற்குள் பல கேள்விகளை கேட்டுக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கிப் பொழியத் துவங்கியது.
எந்த யோசனையும் இல்லாத இந்த புதிர் அவளுள் பல சந்தேகங்களை கொண்டு வந்ததன் விளைவு கண்ணீராய் இறங்க,
“அவி” என்று அவள் அருகே ஒரு குரல் கேட்டது.
காதுகளில் அந்த குரல் விழுந்த போதும் அவள் புத்தியை அது சென்றடையவில்லை. அவள் தோள் தொட்ட அந்த கணீர் குரலுக்கு சொந்தமானவன், “அகநகை செல்வி” என்க திடுக்கிட்டு சுயம் பெற்றாள்.
ஆஜானுபாகுவான உடல்கட்டுடன் ஆறடிக்கும் மேற்பட்ட உயரத்தினை குறுக்கி குனிந்து தன் தோளில் கரம் வைத்திருந்த அந்த ஆடவனை விழிகள் அகற்றாது பார்த்தவள் “ஏ அவி” என்று அவன் மீண்டும் உலுக்கியதில் திடுக்கிட்டு எழுந்தாள்.
“யா..யாரு?” என்று அவள் வினவ,
“யாரா? நல்லா கேக்குறீங்க மேடம். அதானே! அடிச்சவங்க மறக்கலாம். அடிவாங்கினவன் மறப்பேனா?” என்று கேட்டான் அந்த முகமறியாதவன்.
“அடிச்சேனா? நானா? ஹெலோ.. யாரு நீங்க?” என்றவள் முகத்தை கூர்ந்து நோக்கியவன்,
“அழுதியா? என்னாச்சு? எனி ப்ராப்ளம்?” என்றான்.
அவனைப் பார்த்தவள் பார்வையில் ஓர் அன்னியத்தை உணர்ந்தவன், “அகர்னன், உன் கம்பெனியோட பார்ட்னர்ஷிப் வச்சிருக்குற ஆர்.ஏ கம்பெனி ஓனரோட பர்சனல் செகரட்டரி” என்று கூற,
‘ஆத்தீ..’ என்று எண்ணியவன், “ஓ.. சாரி சாரி.. ம..மறந்துட்டேன். இ.. இல்ல சட்டுனு நினைவு வரலை” என்றாள். அவளை ஏற இறங்க பார்த்தவன், ஏதோ பேச வர, அவன் அலைபேசி ஒலித்தது.
அவளிடம் அனுமதி கேட்டுவிட்டு அவன் பேச செல்ல, ‘அய்யோ யாரு என்னனு தெர்லயே.. சிவசிவா’ என்று புலம்பியவள் சட்டென்று ஜேன்சியை தொடர்பு கொண்டாள்.
“ஜே.. உடனே கோவிலுக்குவா. நான் உள்ள குளத்துக்கிட்ட இருக்கேன்” என்று அவள் பரபரப்பாக பேசிய அடுத்த ஐந்தாவது நிமிடம் அது அவள் முன் இருக்க, “ஏ ஜே.. எப்டி இவ்வளவு சீக்கிரம் வந்த?” என்று வினவினாள்.
“விஷ்வேஷ் சார் என்னை கோவில் வாசல்லயே இருக்க சொல்லிருந்தார் மேம்” என்று ஜே கூற மானசீகமாக நண்பனுக்கு ஒரு நன்றியைக் கொடுத்தவள், தூரத்திலிருந்த அகர்னனை காட்டி “யாரு ஜே அவரு? நான் அடிச்சேன்னு வேற சொல்றாரு” என்று கேட்டாள்.
அவனை ஸ்கேன் செய்த ஜே, “அவர் மிஸ்டர் அகர்ணன் மேம். நம்ம பார்ட்னர்ஷிப் கம்பெனியான ஆர்.ஏ கம்பீனி ஓனரோட பி.ஏ. முதல் முறை இவர் நம்ம கம்பெனிக்கு பேச வந்த சமயம் ஒரு வாக்குவாதத்துல நீங்க இவரை தெரியாம அடிச்சுட்டீங்க” என்று கூற,
“அடிச்சுட்டேனா? எப்டி?” என்று கேட்டாள்.
தன் விழிகளில் ஜே அந்த காட்சியினை ஓட விட, ‘டீலிங் பேசுவதற்கு இவனும் இவனுடன் இன்னொருவனும் வந்திருந்தனர். அப்போது பார்ட்னர்ஷிப் வைத்துக் கொள்ள விருப்பமற்று இருந்த தோழமைக்கூட்டம் அதை வெளிப்படுத்தியிருந்தனர். அகர்ணனுடன் வந்தவன் நால்வரையும் வெகுவாக வற்புறுத்தி கேட்க விடாப்பிடியாக முடியாது என்று சொன்ன அகாவை பார்த்து தகாத ஆங்கில வார்த்தைகளில் ஏசவும் அவனை அறைய ஓங்கியவள் கை, பேசியவனை அடிப்பதற்கு முன் வந்த அகர்ணன் கன்னத்தில் பளீரென்று விழுந்தது’ என்பதைக் கண்டு திகைத்து நின்றாள்.
“உங்களை பேசினவர் தான் அந்த கம்பெனி ஓனரோட எக்ஸ். பி.ஏ. இந்த சம்பவத்துக்கு பிறகு அவரை வேலைய விட்டு தூக்கி இவரை தான் அவர் பி.ஏவா மிஸ்டர்.ராஜ் எடுத்துக்கிட்டார். அதன் பிறகு அவரே வந்து மரியாதையான வகையில் மன்னிப்பு வேண்டினதால மீண்டும் சுமூகமாகி நம்ம பார்ட்னர்ஷிப்கும் சம்மதிச்சோம். நீங்களும் முறையா அகர்ணன் சார்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிட்டீங்க” என்று ஜே முழுதாக விளக்க,
“அடியாத்தி..” என்று அவள் வியக்கும்போது அகர்ணன் வந்தான்.
ஜேன்சியை பார்த்து “ஹாப்பி ஈவினிங் ஜேன்சி” என்று அகர் கூற,
“குட் ஈவினிங் சார்” என்றது.
“என்ன அவி.. ஆர் யூ ஓகே? ஒருமாதிரி இருந்தீங்க” என்று அகர் வினவ,
“இ.. இல்ல மிஸ்டர் அகர்ணன். ஐம் ஃபைன்” என்றாள்.
அவளை மீண்டும் கூர்மையாக பார்த்தவன் “ஓகே அவி, பை. பை ஜேன்ஸி” என்றுவிட்டு செல்ல, அவனையே பார்த்தபடி நின்ற அகா, சில நிமிடங்களில் ஜேன்ஸியுடன் புறப்பட்டாள்.
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


“தரையில் பேசியது எல்லாம் திரையில் தெரிகிறது” 🤣 அதுபோல் ஒவ்வொருவரும் விளையாட்டாக கூறியது எல்லாம் நிஜத்தினில் நடந்துள்ளது.
ஜான் அவளது திறமையால் மீட்டிங்கை திறம்பட சமாளித்து விட்டாள்.
ஜான் ஏன் துருவ குறுகுறுனு பார்க்கிறா!
துரு கூறியதை போல், “சாதி, மத பிரிவினைகள் எல்லாம் நாகரீகத்தால் முற்றுமுழுதாக அகற்ற முடியாத அழுக்கு”.
ஆன்லைன் பூஜை with Door delivery பிரசாதம். 😍
அகநகைசெல்வி அகர்ணன் அழகான பெயர்கள். ❤️
அவ்வ்.. அதேதான் மா🫣😁
ஜான் பார்வைக்கு ஒரு அர்த்தம் இருக்கு😝
ஆமா க்கா. சிலவற்றை என்ன செய்தாலும் மாற்ற முடியாது.
மிக்க நன்றி அக்கா 🥰😍❤️❤️