Loading

அத்தியாயம் 12

 

 

 

“ அப்பா  காலேஜுக்கு நேரமாகுது ? “ என்று பரபரத்தாள் தீப்ஷீ .

 

 

 

“ இதோ வந்துட்டேன் தீபு . சாரி இன்னைக்கு லேட்டா தான்  எழுந்திருச்சேன் . நீ நேத்தே உன்னை காலேஜ்ல விட சொல்லி சொன்ன , நான் தான் அசதியில் தூங்கிட்டேன் . “ என்றார் தினேஷ் .

 

 

 

“ சரிப்பா வாங்க .  “

 

 

 

பைக்கில் இருவரும் சென்றதை பார்த்த தேவ் , “ இவள் ஏன் அங்கிளோடு போறா ஒருவேளை சத்யாவோடு சண்டையோ ? அதுக்கு வாய்ப்பே இல்லையே . ஒருவேளை அவன் இன்னைக்கு காலேஜ் வரலையோ ? “  என்று சத்தமாக பேசினான் . காரை ஸ்டார்ட் செய்தான் அவர்களை பின்தொடர்வதற்காக .

 

 

 

“ தீபு ஏன் டா சோகமா இருக்க ? “  என்றுக் கேட்டார் தினேஷ் .

 

 

 

“ ஒன்னும் இல்ல பா . “

 

 

 

“ நானும் காலையிலிருந்து பார்த்திட்டிருக்கேன் , உன் முகமே சரியில்ல . “

 

 

 

“ சத்யா இதுவரைக்கும் இதுபோல எங்கும் போனதில்ல பா . அதான் அவன் இல்லாம ஒருமாதிரி இருக்குப் பா . “

 

 

 

“ உன்னை வைத்துக் கொண்டு என்ன செய்வது , இரண்டு பேரும் எப்போதும் டுவின்ஸ் போல சுற்றினால் அப்படி தான் இருக்கும்  . நாளைக்கே உனக்கு கல்யாணமாச்சுனா  , உன்னால் சத்யாவை பார்க்க முடியாது . அப்போ என்ன பண்ணுவ? “

 

 

 

“ அப்போ நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் . “

 

 

 

“ என்ன பேசுற தீப்ஷீ ? உனக்கு செல்லம் கொடுத்து நான் பெரிய தப்பு பண்ணிட்டேன் . அப்பா கிட்ட எப்படி பேசணும்  கூட உனக்கு தெரியலை .  “ என்றார்  தினேஷ் கோபமாக .

 

 

 

“ சாரிப்பா . இனிமே இப்படி பேச மாட்டேன் . “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ …. “

 

 

 

“ அப்பா , ஆனா, ஒன்னு எங்க நட்பை மதிக்கிறவர தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன் அதில் மாற்றம் இல்லை . “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

அவளின் பதிலை கேட்டு, சிரித்த தினேஷ் , “ உன்னிடம் மாட்ட போகும் என் மாப்பிள்ளையின் நிலைமையை நினைத்தால் எனக்கு இப்பவே பாவமா இருக்கு . “ என்றார் .

 

 

 

“ அப்பா !  “  என்று பல்லை கடித்தாள் தீப்ஷீ .

 

 

 

காலேஜ் வந்துவிட , “ பாய் பா ஈவ்னிங் கரெக்டா வந்துடுங்க. நான் இந்த மரத்தடியில் தான் நிற்பேன் . “

 

 

 

“ ஓகே டா பாய் . “ என்ற தினேஷ் தன் அலுவலகத்தை நோக்கி சென்றார் .

 

 

 

தீப்ஷீக்கு காலேஜ் கடுப்பாக போனது . சத்யாவை பார்க்க முடியாததால் சந்தியாவும் சோகமாக இருந்தாள் .

 

 

 

எப்படா மணி நான்காகும் வீட்டிற்கு செல்லலாம் என்று பார்த்துக் கொண்டிருந்தாள் தீப்ஷீ . ஒருவழியாக மணி நான்காக , “ சந்தியா பாய். “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ நில்லு தீப்ஷீ , எப்படி வீட்டிக்கு போவ? “ என்றுக் கேட்டாள் சந்தியா .

 

 

 

“ அப்பாவோட தான் . “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ சரி வா அங்கிள் வரும் வரை நானும் உன்னோடு இருக்கேன்  ‌‌. “

 

 

 

“ வேண்டா சந்தியா , அப்பா வர லேட்டாகும் . நீ பஸ் மிஸ் பண்ணிடுவ.”

 

 

 

“ எனக்கு உன்னை தனியா விட்டுட்டு போக கஷ்டமா இருக்கு தீப்ஷீ . “

 

 

 

“ நீ பயப்பட தேவையேல்ல . நான் காலேஜில் தான் இருக்க போறேன் . “

 

 

 

“ சரி பாய் தீப்ஷீ , பீ கேர்ஃபுல் . “

 

 

 

தீப்ஷீ சென்று மரத்தடியில் நின்றாள் .

 

 

 

தேவ்வும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் காரில் இருந்தபடி . திடீரென்று அவன் ஃபோன் அடித்தது . ஆம் தேவ்விற்கு மட்டும் ஃபோன் காலேஜில் பயன்படுத்த அனுமதி. அதுவும் காரிலே வைத்து வர வேண்டும் அவன் இந்தியாவிற்காக விளையாடும் வீரர் என்பதால் அவனுக்கு அடிக்கடி முக்கிய தகவல்கள் வரும் என்பதால் இந்த சலுகை  .

 

 

 

“ ஹலோ “ என்றான் தேவ் .

 

 

 

“ தேவ் , நான் தினேஷ் பேசுறேன்.”

 

 

 

“ சொல்லுங்க அங்கிள். “

 

 

 

“ தேவ் , நீ வீட்டுக்கு போயிட்டியா ? “

 

 

 

“ இல்ல அங்கிள் , காலேஜில் ஒரு வேலை இருந்தது . இப்போதான் காரில் ஏறினேன் , இனி வீட்டுக்கு தான் கிளம்பணும் “ .

 

 

 

“ தேவ் , ஒரு ஹெல்ஃப் . வரும்போது தீப்ஷீயும் கூட்டிட்டு வர முடியுமா பா ? எனக்கு ஆஃபீஸில் முக்கியமான வேலை வந்துடுச்சி . என்னால் தீப்ஷீயை கூட்டிட்டு போக வரமுடியாது . இனி சர்வேஷ் வீட்டுக்கு வந்து , பின் அங்கிருந்து தீப்ஷீயை கூட்டிட்டு வர காலேஜ் போனா லேட்டாகும். அதான் உன்னை கூட்டிட்டு வர சொல்லுறேன். தப்பா எடுத்துக்காதே . அவளிடமும் என்னால் பேச முடியாது . “

 

 

 

“ இதில் என்ன அங்கிள் இருக்கு நான் காரில் தான் வீட்டுக்கு  போறேன். அப்படியே தீப்ஷீயை கூட்டிட்டு வர்றதெல்லாம் பெரிய வேலையா ? ஆனா , நான் சொன்னால் தீப்ஷீ வரமாட்டாள் .  “  என்று வானத்தில் பறந்துக் கொண்டே சொன்னான் தேவ் .

 

 

 

“ நீ போனை அவளிடம் கொடு நான் சொல்றேன் . “

 

 

 

“ இதோ தரேன் அங்கிள் .  “  என்றவன் காரிலிருந்து வெளியே இறங்கி , தீப்ஷீ அருகே சென்றான் .

 

 

 

அவளிடம் பேச ஈகோ தடுக்க தொண்டையை கணைத்தான் தேவ் .

 

 

 

முதலில் அவனை கவனிக்காத தீப்ஷீ , அவனின் சத்தத்தில் திரும்பி பார்த்தாள் , அங்கு தேவ் நிற்க , காரணமே இல்லாமல் தீப்ஷீக்கு கோபமும் , பயமும் வந்தது .

 

 

 

அவள் பேசுவதாக இல்லை என்பது புரிந்த தேவ் அவளிடம் போனை நீட்டியவன் , “ அங்கிள் உன் கிட்ட பேசணும்னு சொன்னார் . “ என்றான் .

 

 

 

‘ அவர் ஏன் இவனுக்கு போன் போடுகிறார் அப்பாவிடம் பேச வேண்டுமே. எனக்கு வேறு வழியே இல்லை ‘ என்று நினைத்த தீப்ஷீ , அவனிடம் இருந்து போனை வாங்கினாள் .

 

 

 

“ ஹலோ அப்பா. “

 

 

 

“ சாரி தீப்ஷீ. எனக்கு முக்கியமான வேலை வந்துடுச்சு , என்னால் இப்போ உன்ன கூட்டிட்டுப் போக வரமுடியாது . அதனால் நீ தேவ்வோடு வீட்டுக்கு போ . “  என்றார் தினேஷ் .

 

 

 

“ இல்ல , நான் ஆட்டோவில் வீட்டுக்கு போறேன் . “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

‘ எனக்கே இப்போ தான் ஒரு அருமையான வாய்ப்பு கடவுள் தந்திருக்கிறார் . அதையும் இவள் கெடுக்கிறாளே . ‘ என்று மனதில் புலம்பினான் தேவ் .

 

 

 

“ தீப்ஷீ உன்னோடு ஆர்கியூ பண்ண எனக்கு டைமில்ல . இன்னைக்கு ஒரு நாள் நீ வீட்டுக்கு தேவ்வோடு போ . நான் போனை வைக்கிறேன். “ என்றார் தினேஷ் .

 

 

 

தேவ்விடம் போனை நீட்டினாள் தீப்ஷீ . தேவ் காரை ஓட்டி வந்து அவள் அருகில் நிறுத்தினான் .

 

 

 

காரையும் , தேவ்வையும் கோபமாக முறைத்தாள் தீப்ஷீ .

 

 

 

‘ இவளாக எப்படியும் காரில் ஏற போவதில்லை . நான் மட்டும் உன்னை அழைத்துவிடுவேனா ? உன்னை அழைப்பதற்கு நீ ஒன்னும் விருந்தாளி இல்லை . நீயாக தான் காரில் ஏற வேண்டும். ‘  என்று நினைத்த தேவ் , கார் ஹாரனை விடாமல் அழுத்தினான் .

 

 

 

கல்லூரியில் இருந்த ஒன்று , இரண்டு பேரும் தீப்ஷீயை ஒருமாதிரி பார்க்க , கோபத்தில் காலால் தரையை ஓங்கி மிதித்தவள் ,” எல்லாம் திமிர் “ என்று சத்தமாக சொன்னவள் , வேறு வழியில்லாது காரை நோக்கி சென்றாள்.

 

 

 

பின் பக்க கதவை திறந்து , ஏறியவள் வேகமாக கதவை மூடினாள்  .

 

 

 

அதிலிருந்தே அவளின் கோப அளவை புரிந்துக் கொண்ட தேவ் , அவளை அமைதிப்படுத்த காலேஜ் வெளியே வந்ததும் மியூசிக் பிளேயரை ஆன் செய்தான் .

 

 

 

அவன் நேரம் தான் சரியில்லை போல் .

 

 

 

“ எங்கப்பன் உன்

 

மாமன் உன் மாமன்

 

எங்கப்பன் அதனால

 

நான் உன்ன ஒத்துப்பேனே

 

அம்முலு குட்டியே

 

பொம்முலு குட்டியே அம்மு

 

குட்டியே நீதான் பேபி “  என்று பாட்டு ஓட தீப்ஷீ கோபம் அதிகமானது .

 

 

 

அவளை கண்ணாடி வழியாக பார்த்த தேவ் , வேகமாக பாட்டை மாற்றினான் .

 

 

 

அடுத்த பாட்டோ ,

 

 

 

“ ஊத்திகினு கடிச்சிக்கவா

 

கடிச்சிகினு ஊதிக்கவா

 

போதிக்கினு படுத்துக்கலாம்

 

படுத்துகினும் போதிக்கலாம்

 

காத்தடிக்குது காத்தடிக்குதுக் காசிமேட்டு காத்தடிக்குது….. “

 

 

 

இந்த பாட்டை கேட்டாளே தீப்ஷீக்கு சத்யாவோடு டான்ஸ் ஆடியதே நினைவுக்கு வரும் .

 

 

 

அந்த நினைவில் அவள் முகம் மகிழ்ச்சியை காட்ட ,

 

 

 

தேவ் கண்ணாடி வழியாக அவளை பார்த்து முறைத்தான் . கோபமாக பாட்டை மாற்றியவனால் நினைவை மாற்ற முடியாதே . பள்ளி பருவத்திற்கு சென்றான்.

 

 

 

‘ நினைவுகள் .‌..

 

 

 

“ எப்படி சர்வேஷ் , அங்கிள்  தீப்ஷீயை அவனோடு ஆடவிட்டார் ? ஒரு தடவை தீப்ஷீ நம்மோடு ஆடுவேன் என்று பிடிவாதம் செய்த போது , அவளை அடித்தது மட்டுமல்லாமல் அவளை ஆடவும் விடலை . “  என்றுக் கேட்டான் தேவ் .

 

 

 

“ அதான் தேவ் , எனக்கும் புரியலை . எப்படி தான் அந்த சத்யா எங்க அப்பாவையும் மாற்றினான் என்று தெரியலை ? முன்பு அவனை அப்பாவிற்கு பிடிக்கவே பிடிக்காது . “  என்றான் சர்வேஷ் .

 

 

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சத்யா , தீப்ஷீ குரல் கேட்டது .

 

 

 

‘ இவர்கள் தொல்லை இருக்கக்கூடாது என்று தான் சின்ன பார்க்கை விட்டுவிட்டு இந்த  வில்லாவோட பெரிய பார்க் வந்தால், இங்கும் வந்துட்டாங்களே  ‘ என்று மனதில் திட்டிக் கொண்டே , கடுப்பாக அவர்களை பார்த்தான் தேவ் .

 

“ சத்யா , டான்ஸ் ஆடியதே டயர்டா இருக்கு , இப்போ எங்க கூட்டிட்டு போற ? “  என்றுக் கேட்டாள் தீப்ஷீ .

 

 

 

“ அம்மு , நாளைக்கு நாம டான்ஸ் ஆடணும். சோ…  இன்னைக்கு ஸ்டேஜில் ஒருதடவை ஆடினா தான் நாளைக்கு நாம பயப்படாமல் ஸ்டேஜில ஆடமுடியும் . அதுவும் இல்லாமல் ஒருமுறை நாம் ஆடப் போகும் டான்ஸ் ஸ்டெப் , ஸ்டேஜ் ஏரியாக்கு பொருந்துதா என்று பார்க்கணும் . “ என்றான் சத்யா .

 

 

 

“ நல்ல ஐடியா சத்யா . ஆனா நாம செய்யும் தவறை எப்படி கண்டுபிடிப்பது ? “ கேட்டாள் தீப்ஷீ .

 

 

 

“ அதுக்கு தான் இது இருக்கே . “ என்று தன் கையில் இருந்த கமலாமா போனை நீட்டினான் சத்யா .

 

 

 

“ சூப்பர் சத்யா , இப்போ யார் வீடியோ எடுக்க போறாங்க ?  “

 

 

 

“ வா அம்மு அங்கு யாராவது இருப்பார்கள் “ என்றுப் பேசிக் கொண்டே தேவ் , சர்வேஷ்ஷை கடந்து ஸ்டேஜை நோக்கி நடந்தார்கள் சத்யா மற்றும் தீப்ஷீ .

 

“ வா தேவ், அவங்க ஆடுவதை பார்க்கலாம் . “ என்றான் சர்வேஷ் .

 

 

 

“ வேண்டாம் . “ என்று மறுத்தான் தேவ் .

 

 

 

“ அப்படி என்ன அவங்க ஆடி கிழிக்க போகிறார்கள் என்று நாம் பார்க்கலாம் . நீ வா தேவ் . “ என்று அவனை இழுத்து வந்தான் சர்வேஷ் . இருவரும் மறைவாக நின்றுக் கொண்டனர் .

 

 

 

அங்கு ஒரு வயதான தம்பதி இருந்தனர் . அவர்களிடம் சென்ற சத்யா , “ தாத்தா , நாங்க ஆடுவதை, நான் தரும் மொபைலில் வீடியோ எடுத்து தர்றிங்கிளா ? “ என்றுக் கேட்டான் .

 

 

 

அதை கேட்டு சத்தமாக சிரித்த பாட்டி , “ இந்த கிழவனுக்கு கை சும்மாவே ஆடும் , இந்த லட்சணத்தில் ஃபோனில் வீடியோவா ? “ என்றார் பாட்டி .

 

 

 

“ யாரை பார்த்து கிழவன் என்கிறாய். ராஜமௌலி அடுத்த படத்திற்கு என்னை தான் கேமராமேனாய் கூப்பிட்டிருக்கார் . நான் எப்படி வீடியோ எடுக்குறேன் என்று பார் . நீ போய் ஆடு பையா . “  என்றார் தாத்தா .

 

 

 

“ நீங்கள் எடுக்க போவதை நானும் தானே பார்க்க போறேன் “  என்று உதட்டை சுழித்து தோளில் இடித்து பழிப்பு காட்டினார் பாட்டி .

 

 

 

சத்யாவும் , தீப்ஷீயும் இவர்கள் பேசியதைக் கேட்டு சிரித்துக் கொண்டே ஸ்டேஜ் ஏறினர் .

 

 

 

“ அம்மு , நிறைய தடவை ஆடிட்டோம். அதனால், இப்போ ஜஸ்ட் ஸ்லோ மொமண்ட் மட்டும் பாட்டு இல்லாமல் ஸ்டெப்ஸ் கவுண்ட் வைத்து ஆடலாம் . “ என்றான் சத்யா .

 

 

 

அவர்களின் ஆட்டத்தை பார்த்த தேவ் , சர்வேஷ் விழுந்து விழுந்து சிரித்தனர் .

 

 

 

“ என்ன டா சர்வேஷ் டான்ஸ் ஆட சொன்னால் இருவரும் எக்சசைஸ் பண்றாங்க . “  என்றான் தேவ் .

 

 

 

“ ஆமாம் டா தேவ் . அப்போ நாளைக்கு ஒரே காமெடியா இருக்க போகுது . நாளைக்கு சீக்கரமா வந்து முன்னாடி உட்கார்ந்துக்கணும் தேவ். அப்போதான் நம்மால் எல்லா எக்சர்சைஸ்ஸும் நல்லா பார்க்க முடியும் . “ என்றான் சர்வேஷ் .

 

 

 

இருவரும் சத்யா ,  தீப்ஷீ ஆட்டத்தை கலாய்த்துக் கொண்டே வீட்டை நோக்கி சென்றனர் .

 

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
6
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அப்போ சத்யா தீப்ஷி நல்ல ஃப்ரெண்ட்ஸ் போல … அந்த ஃப்ரெண்ட்ஷிப் ப புரிஞ்சுக்கிற ஆள் வந்தா பரவாயில்லையே … தேவ் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் … ஆனா என்ன நடக்குமோ

  2. சத்யாவுடனான தனது நட்பை மதிக்கும் ஒருவரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற உறுதியில் அவள்.

    தீயின் மீது காதல் கொண்டு, சத்யா தீ நட்பின் மீது பொறாமைக்கொண்டு பொங்கும் அவன்.

    கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்கிறான். Music player கூட அவனுக்கு எதிராக சதி செய்கிறதே.

    பள்ளி பருவக் கால நினைவுகளுக்கு மகிழ்வுடன் பயணிக்கிறாள் தீப்ஷி. அதே நினைவுகளுக்கு பொருமலுடன் பயணிக்கிறான் தேவ்.