Loading

அத்தியாயம் 7

 

சத்யா சிக்னலில் காத்திருக்க தேவ் அவர்களை பிடித்துவிட்டான் . சிறிது தூரம் மெயின் ரோட்டில் சென்றவன் பின் அதிக வண்டி இல்லாத சிறிய தெருவிற்குள் சென்றான் சத்யா . அவனை பின் தொடர்ந்து தேவ்வும் சென்றான் .

 

 

 

அந்த தெருவில் , ஒரு பெண் அவளின் கணவனை  ரோட்டில் பிரட்டி போட்டு அடித்துக் கொண்டிருந்தாள் .

 

 

 

அதை பார்த்த தீப்ஷீ , “ சத்யா வண்டியை நிறுத்து “  என்றாள் .

 

 

 

“ ஏன் அம்மு ? “  என்றான் சத்யா .

 

 

 

“ சத்யா , அங்கே பார் ஒரு லேடி அவங்க ஹஸ்பண்டை  அடிக்கிறாங்க “ என்றாள் .

 

 

 

“ வேண்டாம் அம்மு , அவங்களை பார்க்கவே சொர்ணாக்கா தூரத்து சொந்தம் போல் இருக்காங்க “ என்றான் சத்யா .

 

 

 

“ சத்யா நான் ஒரு ஐ.பி.எஸ் “ , என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் சத்யா , “ என்னது ? “  என்றான் .

 

 

 

“ ஐ.பி.எஸ் ஆக போகிறேன் என்று சொல்ல வந்தேன் . இப்பவே நான் சிட்டியை கண்ட்ரோலாக வைத்துக் கொள்ள வேண்டும் “ என்றவள் மாஸாக , ஸ்டைலாக , கெத்தாக வண்டியில் இருந்து இறங்கினாள். படத்தில் வருவதுப் போல் அவளுக்கு முன் காற்று அடிக்க அவள் கூந்தல் பின் பக்கம் பறக்க அந்த பெண் அருகே வந்தாள் தீப்ஷீ .

 

 

 

“ அக்கா நிறுத்துங்க. என்ன பெண்களுக்கு தான் சட்டமும் சமுதாயமும் ஆதரவு தருதுனு  இப்படி உங்க வீட்டுக்காரரை , ரோடு என்றும் பார்க்காமல் அடிக்கிறீங்களா !”  என்று பொங்கி எழுந்தாள் தீப்ஷீ .

 

 

 

“ நல்லா கேளு தாயி . இவளை கல்யாணம் செய்த நாளில் இருந்து என் நிம்மதியே போயிடிச்சி “ என்றவரின் குரல் தெளிவில்லாமல் வந்தது .

 

 

 

இப்போ தான் தீப்ஷீக்கு புரிந்தது , ‘ இவர் குடித்திருக்கிறார் என்று. ஐயோ! இவருக்கு போய் ஆதரவா குரல் கொடுத்துட்டேனே! ‘ என்று மனதில் அலறினாள் தீப்ஷீ .

 

 

 

“ ஐய்ய இந்த கசுமாலம் , நான் கூலிவேலை செய்து எடுத்துட்டு வர துட்டை அபேஸ் பண்ணி குடிச்சிட்டு வருது . அப்படி நாளைக்கு உன் வீட்டுகாரர் பண்ணா, என்ன நீ மடியில் வெச்சி கொஞ்சுவியா ? “ என்றுக் கேட்டார் அந்த பெண் .

 

 

 

திரு திருனு முழித்த தீப்ஷீ, “ இல்லை” என்று தலை ஆட்டினாள் .

 

 

 

“ தூக்கி போட்டு மிதிக்க தான செய்வ  ? “

 

 

 

“ஆம்” என்று தலையை ஆட்டினாள் தீப்ஷீ.

 

 

 

“ அத தான் நானும் செய்றேன் , இடத்தை காலி பண்ணு “ என்ற பெண் மீண்டும் அவள் கணவனை அடிக்க தொடங்கினாள் .

 

 

 

“ பாய் கா “  என்ற தீப்ஷீ , சத்யா அருகே வந்தான் .

 

 

 

சத்யா அவளை பார்த்து அடக்க முடியாமல் சிரித்தான் . ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த தீப்ஷீ தன் பையை கொண்டு சத்யாவை அடித்தாள் .

 

 

 

இவள் எதற்கு இறங்கினாள் என்று தெரியாது தேவ்வும் காரின் கண்ணாடியை திறந்து பார்த்தான் . அவர்கள் பேசியது அவனுக்கு தெளிவாக கேட்க அவனும் சிரித்துக் கொண்டே அவள் பல்ப் வாங்கிய அழகை ரசித்தான். பின் சத்யா பைக் அருகே வந்து ஹாரன் அடித்தான் .

 

 

 

சத்யா , தீப்ஷீ இருவரும் சண்டையை நிறுத்தி அவனை திரும்பி பார்க்க அங்கு தேவ் கார் இருக்க தீப்ஷீ கொதி நிலை அதிகமானது .

 

 

 

“ அம்மு வந்து பைக்கில் உட்காரு “ .

 

 

 

“ சத்யா , இவனுக்கு வேறு வழியே இல்லையா . நம்ம போற வழியிலே வரான் “ என்றவள் பைக்கில் ஏறி அமர்ந்தாள் .

 

 

 

“ அம்மு , அங்கு டிராஃபிக்காக இருப்பதால் தான நாம் இந்த வழியில் வந்தோம் அதுப் போல் அவனும் டிராஃபிக்கிற்காக இந்த வழியில் வந்திருப்பான் “ என்றான் சத்யா .

 

 

 

“ சத்யா , நான் பல்பு வாங்கியதை அவன் பார்த்திருப்பானா “ .

 

 

 

“ மே பி . வாய்ப்பிருக்கு “  .

 

 

 

“ ச்சே “  என்று டென்ஷனானள் தீப்ஷீ .

 

 

 

“ விடு அம்மு , இதெல்லாம் ஐ.பி.எஸ் வாழ்க்கையில் சாதாரணமப்பா “ என்றான் சத்யா .

 

 

 

“ சத்யா “  என்று பல்லை கடித்தவள்  , “ நான் ஒரு நாள் ஐ.பி.எஸ் யூனிஃபார்ம் போடும் போது, நீ தான் ஃபர்ஸ்ட் சல்யூட் அடிப்ப. “  என்றாள் .

 

 

 

“ ஐ ஆம் வெயிட்டிங் “  என்ற சத்யா குரலில் கிண்டல் போய் , “ உன்னால் முடியும் “ என்று நம்பிக்கை தருவதுபோல் கூறினான் .

 

 

 

சின்ன வயதில் தான் ஐ.பி.எஸ் ஆக முடிவெடுத்த தருணத்தை யோசித்தாள் தீப்ஷீ.

 

 

 

‘ நினைவுகள்…

 

 

 

“அப்பா … நாம தப்பு செய்தால் போலீஸ் பிடிப்பார்கள் . அப்போ போலீஸ் தப்பு செய்தால் யார் தண்டனை தருவது ? “ என்று கேட்டாள் தீப்ஷீ .

 

 

 

சாப்பிட்டுக் கொண்டிருந்த தினேஷ் , “ஐ.பி.எஸ் ஆபீசர் கேட்பார். “

 

 

 

“ ஓ … அது தான் அவங்க வேலையா அப்பா. “

 

 

 

“ இல்லை டா . அவங்க தான் நாட்டில் எந்த பிரச்சனையும் வராமல் அமைதியா இருக்க செய்வாங்க , தப்பு செய்கிறவர்களை பிடிப்பது , இன்னும் நிறைய இருக்கு ஆனால் சொன்னால் உனக்கு இப்போ புரியாது “ என்றார் .

 

 

 

“ சரிப்பா “ .

 

 

 

“ ஏன் டா திடீர்னு கேட்குற ? “ .

 

 

 

“ நான் ஒரு போலீஸ்க்கு தண்டனை கொடுக்க போறேன் . நான் ஐ.பி.எஸ் ஆக போறேன் “  என்றாள் தீப்ஷீ .

 

 

 

அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த சரண்யா , சர்வேஷ் , தினேஷ் மூவரும் சிரித்தனர் .

 

 

 

“ கண்டிப்பாக நான் ஐ.பி.எஸ் ஆவேன் “ என்றவள் எழுந்து சென்றுவிட்டாள் .

 

 

 

அவர்கள் சிரித்துக் கொண்டுதான் இருந்தார்கள் , தீப்ஷீயின் எண்ணத்தின் உறுதி அறியாமல் .

 

 

 

 

 

 

வழக்கம் போல் சத்யா அருகில் வேனில் உட்கார்ந்த தீப்ஷீ , “ சத்யா … நான் ஐ.பி.எஸ் ஆக போறேன் “ என்றாள் .

 

 

 

“ சூப்பர் . எங்க அம்முவிற்கு திடீர்னு எந்த மரத்தடியில் ஞானம் கிடைத்தது ? “ என்றான் .

 

 

 

“ சத்யா… உங்க அம்மா , அப்பாவிற்கு தண்டனை தர தான் . உங்க அப்பா போலீஸ் . போலீஸ் தப்பு செய்தால் ஐ.பி.எஸ் ஆஃபீஸர் தண்டனை தருவாங்கனு அப்பா சொன்னாங்க “ என்றாள் .

 

 

 

“ ரொம்ப சந்தோஷம் அம்மு “ என்றான் உண்மையில் அவன் மனம் நிறைந்துவிட்டது அவளின் அன்பில் . ‘

 

 

 

 

 

 

ஒரு வழியாக காலேஜ் வந்தனர் மூவரும் .

 

 

 

“ அம்மு , எனக்கு முக்கியமான வேலை இருக்கு டா , நீ உன் கிளாஸ்ஸிற்கு போயிடுறியா ? “ என்றுக் கேட்டான் .

 

 

 

“ என்ன சத்யா , நான் இன்னும் முதல் முறை நீ பார்த்த அதே அம்மு பாப்பாவா ? கிளாஸ்ஸிற்கு வழிக் கூட தெரியாது என்று நினைக்கிறீயா . நான் இன்னும் மூன்று வருடத்தில் ஐ.பி.எஸ் ஆக போகிறேன் நினைவில் வைத்துக்கோ சத்யா “ .

 

 

 

“ நீ என்றுமே எனக்கு பாப்பா தான் . பாய் டா அம்மு “  என்றவன் அவள் தலை முடியை களைத்துவிட்டு சென்றான் .

 

 

 

இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த

சைலஜாவின் நிலைக் கண்டு அவள் தோழிகள் சிரித்தனர் . சைலஜாவின் கொதிநிலையை அதிகப்படுத்திக் கொண்டிருந்தனர் . அவர்கள் நால்வரும் பார்க்கிங் ஏரியாவிற்கு அருகில் உள்ள மரத்தடியில் உட்கார்திருந்தனர் .

 

 

 

சைலஜா மூன்று வருடங்களாக சத்யாவை தன் காதல் வலையில் வீழ்த்த பல முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறாள் . சத்யாவிற்கு அவளிடம் காதல் உணர்வு இல்லாத போது அவனை வற்புறுத்தினால் அதற்கு பெயர் காதலே இல்லை . என்றுமே அவளால் சத்யாவின் இதயத்தை வெற்றிப் பெற முடியாது வீழ்த்த தான் முடியும் .

 

 

 

“ ஹே பொண்ணே இங்க வா ? “  என்றாள் சைலஜா .

 

 

 

அவர்களை கண்டுக் கொள்ளாமல் சென்றுக் கொண்டிருந்தாள் தீப்ஷீ .

 

 

 

“ ஹே சத்யாவோட வந்த பொண்ணு இங்க வா “ என்றாள் நால்வரில் ஒருத்தி .

 

 

 

சட்டென நின்ற அவர்களை திரும்பி பார்த்த தீப்ஷீ , அவர்கள் அருகில் சென்றாள் . ஏதோ வம்பு செய்ய போகிறார்கள் என்று உணர்ந்த தேவ் வண்டியிலே இருந்தான் , என்ன நடக்கிறது என்று பார்க்க .

 

 

 

“ என்ன ? “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ இப்படியா சீனியர்ஸ் கிட்ட மரியாதை இல்லாமல் பேசுவாய் ? “ சைலஜா .

 

 

 

“ என்ன விஷயம்னு சொல்லுங்க இல்லனா நான் மட்டும் போய்டே இருப்பேன் “ தீப்ஷீ .

 

 

 

“ சத்யாவை உனக்கு முன்பே தெரியுமா ? சத்யாவும் நீயும் லவ்வர்ஸ்ஸா ? அதான் அவன் எனக்கு ஓகே சொல்லலையா ? “  என்றுக் கேட்டாள் சைலஜா .

 

 

 

“ நான் எதுக்கு சொல்லணும் “ என்றாள் தீப்ஷீ கோபமாக .

 

 

 

“ அவன் இதுவரை எந்த பெண்ணோடும் பேசியதில்லையே அப்படி என்னடி இருக்கு உன் கிட்ட ? சத்யா மயங்கி விழ  “  என்றாள் சைலஜா .

 

 

 

தீப்ஷீயால் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை இதற்கு மேல் இங்கு நின்றால் ஒரு கலவரம் உண்டாகும் என்பதை உணர்ந்த தீப்ஷீ பதில் ஏதும் கூறாமல் செல்ல தொடங்கினாள் .

 

 

 

“ என்ன டி பேசிட்டு இருக்கும் போதே போற” என்று எழுந்த சைலஜா , தீப்ஷீ அருகே கோபமாக சென்றாள் .

 

 

 

அவள் அடிக்க தான் செல்கிறாள் என்பதை உணர்ந்து தேவ் வேகமாக இறங்கினான் அவனின் ஹீரோயினை காப்பாற்ற ஹீரோவாக இன்ட்ரோ கொடுக்க நினைத்தான் போல் .

 

 

 

சைலஜா கையை ஓங்கினாள் , ஆனால் அவள் அடிப்படுவதற்குள் தீப்ஷீ அவள் கையை பிடித்தாள் . ஏற்கனவே பயங்கர கோபத்தில் இருந்த தீப்ஷீ , சைலஜா கையை ஓங்கியதும் கோபத்தில் தன் வசம் இழந்தாள் . சைலஜா கையில் உள்ள வர்ம புள்ளியை மெதுவாக அழுத்தினாள் . பின்பு தீப்ஷீ வேகமாக அழுத்தினாள் அவளின் கையே செயல் இழந்து போகும் அளவுக்கு பயங்கரமாக அழுத்தினாள் .

 

 

 

வலி தாங்க முடியாமல் கத்தினாள் சைலஜா , அவள் அழவே தொடங்கிவிட்டாள் .

 

 

 

“ இந்த கை நீட்டுகிற வேலை எல்லாம் என் கிட்ட வேண்டாம் . இனி உனக்கு சத்யா என்று பெயரை சொல்ல கூட உரிமை இல்லை . அதை மீறினால் , இப்போ நான் உனக்கு காட்டியது வெறும் ட்ரெய்லர் தான்  மெயின் பிக்சரை பார்ப்ப…   வர்ட்டா… “ என்று ஸ்டைலாக கூறியவள் கிளாஸ்ஸிற்கு சென்றாள் .

 

 

 

அதிர்ச்சியாக பார்த்த தேவ் , ‘ ஐயோ இவள் இவ்வளவு ஸ்டிராங்காக இருக்காளே . இவளை கல்யாணம் செய்த பின்பு தினமும் என் வாழ்வு போர் தான் போல . என் அறை டபிள்யூ . டபிள்யூ . இ ரிங்காக மாறிவிடும் போல எதற்கும் தயாராக இரு தேவ் ‘  என்று தீப்ஷீயின் பலத்தை கண்டு பயந்தவன் மனதில் எண்ணினான் , ‘ இனிமேல் தினமும் அதிக நேரம் ஜிம் போனால் தான் இவளுக்கு நிகராக இருக்க முடியும் ‘ என்றும் முடிவெடுத்தான்  .

 

 

 

வேகமாக தீப்ஷீ வகுப்பிற்கு வந்த சத்யா , “ அம்மு , பைக் பார்க்கிங் முன்னாடி சைலஜா உன் கிட்ட வம்பு செய்தாளா ? இப்போதான் பாலா ( சத்யாவின் நண்பன் ) வந்து சொன்னான் “  என்றுக் கேட்டான் .

 

 

 

“ ஆமாம் சத்யா . அதுக்கு எதுக்கு நீ இப்படி மூச்சு வாங்க  ஓடி வர “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

“ அம்மு , அவள் ஒருமாதிரி ரூடா பேசுவா அதான் என்ன ஆச்சுனு கேட்க வந்தேன். “

 

 

 

“ சத்யா அவள் பேசியதற்கு  நன்றாக திருப்பி தந்துட்டுதான் வந்தேன். “

 

 

 

“ அம்மு அதுக்காக நீ காலேஜில் வர்மக் கலை எல்லாம் பயன்படுத்துவியா “ .

 

 

 

“ சத்யா அவ ரொம்ப தப்பா பேசினா இருந்தும் நான் அமைதியா தான் பதில் ஏதும் சொல்லாம வந்தேன் . ஆனா அவ என் மேல கையை ஓங்கியதும் என்னை மீறி  செய்துட்டேன்“ என்றவளின் குரல் அழுகையில் இருந்தது .

 

 

 

அவளின் கண்களை துடைத்துவிட்ட சத்யா , “ சரி விடு அம்மு . அவள் அடி வாங்க தகுதியானவள் தான் . உனக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ னு தான் பயமா இருக்கு “ .

 

 

 

“ சத்யா , நீ அடிக்கடி சைலஜா பற்றி சொல்லும்போது நான் உனக்கு காதல் , பெண்கள் மேல் உள்ள வெறுப்பு என்று தான் நினைத்தேன் ஆனா , உண்மையில் சைலஜா ஒரு அரக்கி தான் . நான் சைலஜாவை தேடி , உன்னையும் அவளையும் சேர்த்து வைக்கலாம் என்று நினைத்து தான் இந்த காலேஜ்லே வந்து சேர்ந்தேன் . நல்ல வேலை அவளை பற்றி இன்றே தெரிந்தது . அடுத்தது உனக்கு வேறு நல்ல பெண்ணை தேட வேண்டும் “ என்ற தீப்ஷீ , ஓர கண்ணால் சந்தியாவை பார்த்தாள் .

 

 

 

அது வரை இருவரின் பேச்சை புத்தகத்தை வாசிப்பதுப் போல கேட்டுக் கொண்டிருந்தவள் . தீப்ஷீ கடைசியாக பேசியதை கேட்டு தன்னை மீறி இருவரையும் பார்த்துவிட்டாள் . அதை கவனித்த தீப்ஷீ , மனதில் குறித்துக் கொண்டாள் .

 

 

 

“ உனக்கு வேறு வேலையே இருக்காதா அம்மு . எனக்கு காதல் , கல்யாணம் இதில் எல்லாம் நம்பிக்கையே இல்லை . சரி டா பாய் கிளாஸ்ஸிற்கு போகணும் “  என்றான் சத்யா .

 

 

 

இப்போது சந்தியாவின் முகம் வாடி போனது . இதையும் குறித்துக் கொண்டாள் தீப்ஷீ . சந்தியா எதுவும் சொல்லாத வரை தீப்ஷீயால் எந்த உதவியும் செய்ய முடியாதே .

 

 

 

“ தீப்ஷீ , என்ன ப்ராப்ளம் ? “ என்றுக் கேட்டாள் சந்தியா .

 

 

 

“ நத்திங் சந்தியா , சத்யா கிளாஸ்மேட் என் கிட்ட வம்பு பண்ணாங்க . அதான் கொஞ்சம் என் ஸ்டைலில் பதில் சொல்லிட்டேன் “ என்றாள் தீப்ஷீ .

 

 

 

தீப்ஷீ சொல்லியவிதத்தில் , சத்தமாக சிரித்துவிட்டாள் சந்தியா , “ எப்போதுமே நீ இப்படிதானா ? “ என்றாள் .

 

 

 

“ எஸ் எஸ் “  என்று பெருமையாக தலையை ஆட்டினாள் தீப்ஷீ .

 

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
7
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. தேவ் நீ கனவு கண்டுட்டே இரு … சத்யா தீப்ஷி தான் சேருவாங்களா ?? இல்ல ஃப்ரெண்ட்ஸ் தானா ?? பார்க்கலாம்

  2. தீIPS சொல்லவே இல்ல 🤣🤣 அதுவும் சொர்ணாக்காவையே எதிர்த்து நிக்கிறா.

    Bulb வாங்கியதை தேவ் பார்த்திருப்பானோ என்ற கவலை வேற.

    சத்தியாவிற்காக தான் இவள் IPS ஆக வேண்டும் என்கிறாளா? இருவரது நட்பும் அன்பும் வியக்க வைக்கிறது.

    தேவ் Hero entry கொடுக்க நினைத்தான் கடைசியில் Heroine performance பார்த்து பயந்துட்டான்.

    அவ கையில wedding ring போட்டால் WWE Ring la தான் வாழ்க்கை நல்லா யோசிச்சுக்கோ தேவ்.