பகுதி – 8
அவருடன் பணிபுரியும் மற்றொரு மருத்துவர் கேட்டார்.
” என்ன ஆச்சி டாக்டர் ஆனந்த் “
ஆனந்த் ” சேம்பிள் அனுப்பி இத்தனை நாளாகி ரிப்போர்ட் வரல டாக்டர்…..
கேட்டா அவ்ளோ அவசரம்னா வேற இடத்தில கொடுத்துக்கோன்னு தெனாவட்டா சொல்றான் மரியாதையில்லாம பேசுறான்”
” ஹிஸ்ட்டோ லேப் இந்த சுற்றுவட்டாரத்திலே இல்லை டாக்டர் அந்த தெனாவட்டுதான் எப்படியிருந்தாலும் நாம அவனுக்குதான சேம்பிள் அனுப்பியாகனும்ற திமிருல பேசுறான்.”
ஆனந்த் ” ஆமா டாக்டர் அதே திமிருதான் ஆனா நம்மதான பேஷன்ட்ஸ்கிட்ட பதில் சொல்ல வேண்டியிருக்கு “
” யெஸ் முன்னலாம் டாக்டர் என்ன சொன்னாலும் நம்பிட்டு அவங்க சொல்றதை ஏன் எதுக்குன்னு யோசிக்காம செஞ்சாங்க ஆனா இப்போலாம் அவங்களே நம்மளை குவெஷின் பண்றாங்க “
ஆனந்த் ” எல்லாம் கூகிளோட மாயம் டாக்டர் அன்னைக்கி ஒரு பேஷன்ட் வந்து கேக்குறாங்க cbc ரிப்போர்ட் எதுக்கு என்னை எடுக்க சொல்றீங்க எனக்கு வெறும் அலர்ஜிதான cbc கேன்சர் பேஷன்ட்க்குதான எடுப்பாங்க கேன்சரோட அறிகுறில அரிப்பு அலர்ஜின்னு எதுவுமில்லையேன்னு கேக்குறாங்க ஸார் என்ன சொல்ல சொல்லுங்க CBC (complete Bloodcell Count)ன்றது உடம்புல இருக்க ரத்த அணு சிவப்பணு இரத்ததட்டுகளோட அளவை சரிபார்க்குறதுக்கு பயன்படுதுறது. உங்க உடம்புல அரிப்பு இருந்தா வெள்ளையணுக்களோட அளவு அதிகமா இருக்கும் அதை கண்டுபிடிச்சி எவ்வளவு அதிகமா இருக்கோ அதுக்கேத்த மாதிரி மருந்து மாத்திரைகளோட டோஸ் கொடுப்போம் அதுக்குதான் இந்த டெஸ்ட் கேன்ஸர் வந்தாலும் இந்த டெஸ்ட் எடுப்போம் அணுக்களோட எண்ணிக்கைய பார்க்க நீங்க கூகுள் பார்த்திட்டு வந்து எங்ககிட்ட கேட்காதீங்க நாங்களும் அஞ்சி வருஷம் படிச்சிட்டுதான் வந்திருக்கோம்னு அவங்களுக்கு நான் எக்ஸ்பிளைன் பண்ண பின்னாடிதான் பில்லே கட்டுனாங்க டாக்டர் “
” மக்கள்லாம் இப்போ நல்லா டெவலப் ஆகிட்டாங்க ஸார் இவங்களுக்கு நாமதான பதில் சொல்லியாகனும் அதெல்லாம் எங்க அவனுக்கு தெரிய போகுது சாதாரணமா சொல்றான் வெயிட் பண்ணி ரிப்போர்ட் வாங்கிக்க இல்லைனா வேற இடம் பாருன்னு “
அப்போது அவர்களின் நண்பர் ஒருவன் அங்கு வந்தான் இவர்களிடம் பேச்சு கொடுத்ததில் அவனுக்கும் அவர்களின் பிரச்சனை புரிந்தது.
” டேய் என்கிட்ட ஒரு லேப் நடத்துறவங்கவந்து பேசுனாங்க இதேபோலதான் ஹிஸ்டோலேப்தான் நடத்துறாங்க ஏதாச்சும் சேம்பிள் அனுப்ப முடியுமான்னு கேட்டாங்க நாங்கதான் எங்க ஹாஸ்பிடல்ல சர்ஜெரியே பண்றதில்லையே முடியாதுன்னு சொல்லிட்டன் நீங்க வேணா பேசுபாருங்களேன் அவங்களுக்கு பெரிசா வேலையில்ல ரிப்போர் உங்களுக்கு சீக்கிரமா கிடைச்சாலும் கிடைக்கலாம் “
” அப்படியா ” என்றான் தயாவிடம் பேசிய ஆனந்த்.
” ஆமாடா அவங்க நம்பர்கூட எதுக்கும் இருக்கட்டும்னு நோட் பண்ணி வெச்ச இந்தா பேசிப்பாரு ” என்று தயாளினியின் எண்ணை கொடுத்தான்.
அந்த மருத்துவர் தயாளினிக்கு அழைத்தார்.
” ஹலோ யாரு “
” ஹலோ நான் *** ஹாஸ்பிட்டலருந்து பேசுறன் மேடம் “
” சொல்லுங்க ஸார் “
” மேடம் நீங்க ஹிஸ்டோபேத் லேப் நடத்திறதா கேள்விபட்டோம் உங்கிட்ட அதுபத்தி பேசனும் கொஞ்சம் நேர்ல வரீங்களா”
” ஓகே ஸார் எங்க “
” ஹாஸ்பிடல்கே வந்திடுங்க முடிஞ்சா இன்னைக்கி ஈவ்னிங்க ஒரு நாலு மணிக்கு வாங்களேன்.”
” ஓகே ஸார் நான் வரேன் உங்ங நேம் ஸார் “
ஆனந்த் ” உங்க நேம் மேம் “
” தயாளினி ஸார் “
” சரி வாங்க நேர்ல பேசலாம் “
மாலை நான்கு மணிக்கு தயாளினியும் தீபனும் அவரின் மருத்துவமனைக்கு சென்றனர்.
அவர்கள் இருவரையும் பார்த்த ஆனந்திற்கு திருப்திபடவில்லை. ஏனென்றால் ஹிஸ்டோபேத் லேப் நடத்த முன் அனுபவமே முக்கியம் இவர்கள் என்னவென்றால் இப்போதுதான் கல்லூரி முடித்தவர்கள் போலிருக்கின்றனறே இது சரியாவருமா என்று யோசித்துக்கொண்டே அவர்களை உள்ளே அழைத்தார்.
ஆனந்த் ” வாங்க மேடம் குட்ஈவ்னிங்”
” ஹலோ ஸார் குட்ஈவ்னிங்” என்று சொல்லிட ஆனந்த் இருவரையும் அமரந்திட கூறினார்.
தீபன் ” சொல்லுங்க ஸார் என்ன விஷியம் “
ஆனந்த் ” நீங்க ஒரு ஹிஸ்டோ லேப் நடத்துறீங்கல்ல உங்களுக்கு சேம்பிள் தரலாம்னு எங்களுக்கு ஒரு ஐடியா இருக்கு அதான் அதைப்பத்தி பேசலாம்னு கூப்டன்”
தயா “கண்டிப்பா ஸார் நீங்க அனுப்புங்க நாங்க சரியா பண்ணி கொடுப்போம் “
ஆனந்த் ” இல்லை நீங்க இப்போதான் ஆரமிச்சிருக்கீங்க உங்களை பாத்தாவும் ரொம்ப சின்னவயசா தெரியுது எக்ஸ்பீரியன்ஸ் இருக்குமா அதான் கொஞ்சம் யோசனையா இருக்கு”
தயாளினி ” ஸார் எங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் அவ்ளோவா இல்லை ஆனா எங்க தாத்தாக்கு பதினெஞ்சி வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அவருதான் இதை நடத்துராரு நாங்க அவருக்கு உதவியா இருக்கோம் “
ஆனத்த் ” ஓஓஓ அப்படிங்களா சரி நான் சேம்பிள் அனுப்புனா எனக்கு ரிப்போர்ட் எப்ப கிடைக்கும்”
தீபன் ” இன்னைக்கு அனுப்புனா நாளைக்கு கொடுத்திடுவோம் ஸார்”
ஆனந்த் ” தம்பி நீங்க நினைக்கிறமாறி நாலு ஐஞ்சி சேம்பிள் இல்லை முப்பது நாப்பது அனுப்புவோம் ஒரேநாள்ல பார்த்து ரிப்போர்ட் எப்படி கொடுப்பீங்க”
தயாளினி ” எங்களால முடியும் ஸார் நீங்க எத்தனை அனுப்புனாலும் மறுநாளே ரிப்போர்ட் கொடுத்திடுவோம் “
ஆனந்த் ” ரிப்போர்ட்ஸ் அ எந்த பேத்தாலஜிஸ்ட் பாக்குறாங்க எனக்கு அவங்க நம்பர் கிடைக்குமா நான் அவங்ககிட்டயும் பேசிட்டா கொஞ்சம் தெளிவாகிடுவன் “
தயாளினி வசுந்தராவிற்கு அழைத்து பேசிட அவளும் நம்பிக்கையூட்டும் விதமாய் ஆனந்திடம் பேசினாள்.
அதன்பின் மூர்த்தியிடமும் பேசியவர் அவர்களின் லேப் ஐ வீடியோ காலில் பார்த்தார். ஆடம்பரமான வசதிகள் இல்லாவிட்டாலும் அத்தியாவசியமானவை அனைத்தும் அங்கே இருக்க அவரும் கொஞ்சம் திருப்தி அடைந்தார்.
ஒருவழியாய் ஆனந்த் திருப்தி அடைந்து தயாவிடம் கூறினார்.
” இங்க பாருமா நான் எப்பவும் அமிர்த்தா லேப்ஸ்ல தான் சேம்பிள் கொடுப்பன் அவங்க ரிப்போர்ட் லேட் பண்றனாலதான் உன்கிட்ட கொடுக்கிறன் நாளைக்கு உங்களுக்கு ஐஞ்சி சேம்பிள் அனுப்புறன் உங்களோட ரிப்போர்ட்ட பார்த்திட்டு உங்களுக்கு தொடர்ந்து சேம்பிள் அனுப்பலாமா வேணாமான்னு முடிவு பண்ற”
தீபன் ” ரொம்ப நன்றி ஸார் எங்க ரிப்போர்ட்ஸ் உங்களுக்கு திருப்திகரமா இருக்கும் நீங்க தொடரந்து எங்களுக்கு சேம்பிள் தருவீங்க பாருங்க” என நம்பிக்கையாய் பேசிவிட்டு சென்றான்.
தயாளி தீபன் இருவரும் சந்தோஷத்தில் துள்ளிகுதித்தனர். பின்னே முப்பது நாப்பது சாம்பிள் இதுபோதாதா அவர்களுக்கு. இதில் வரும் பணத்தை வைத்தே அவர்கள் நால்வரின் தேவைகளையும் ஓரளவிற்கு நிறைவேற்றி கொள்ளலாமே என்று ஆனந்தபட்டனர்.
தீபா ” செம்ம டா நம்ம எதிர்பார்க்காத ஒன்னு இப்படி லக்கா கிடைச்சிருக்கு”
ஆமா ” தயா நான்கூட நினைக்கவே இல்லை இதை நாளைக்கு அவரோட சேம்பிள்ஸ நல்லா பண்ணிதரனும் அவர் நமக்கே தொடர்ந்து சேம்பிள் கொடுக்கனும் “
இருவரும் பேசிக்கொண்டே வந்தனர்.
தீபன் தயா இருவரும் பைக்கில் செல்ல அவர்கள் செல்லும் வழியில் அமிர்த்தா லேப்ஸ் இருந்தது.
தயா தீபனை தட்டி காட்டினாள்.
ஏய் ” அங்க பாரு டா அமிர்த்தா லேப்ஸ் “
தீபன் அதனை பார்த்து வாயை பிளந்தான். இருக்காதா பின்னே அத்தனை பெரிய கட்டிடமாயிற்றே அமிர்த்தா லேப்ஸ் எங்கே இவர்களின் லேப் எங்கே.
தீபன் ” என்னடி லேப் அ கட்ட சொன்னா பெரிய மாளிகையவே கட்டி வெச்சிருக்கான்”
தயா ” ம்ம்ம் பாரேன் எத்தா பெரிய கட்டிடம் இவங்களுக்குலாம் ஐம்பது சேம்பிள் வராம இருக்கிறதுலாம் பெரிய விஷியமே இல்லைல “
தீபன் ” ஆமா ஒரு பொருட்டே இல்லை தான்”
தயா ” டேய் தீபா எனக்கு ஒரு ஆசைடா இந்த நிமிஷம் தோணுனது “
” என்னா ஆச “
” இந்தமாறி ஒரு பெரிய லேப்க்கு நான் முதலாளியாகனும் டா “
அவள் சொன்னது என்ன நேரமோ தெரியவில்லை முப்பத்து முக்கோடி தேவர்களும் அப்படியே ஆகட்டும் என ஆசிர்வதித்துவிட்டனர்.
தீபன் “அது ஆசையில்ல மா பேராசை”
தயா ” ஏன்டா “
தீபன் ” பின்ன என்னடி ஐம்பது சேம்பிள் வந்ததும் அப்படியே கோடி கோடியாவா பணம் கிடைச்சிடபோகுது ஏதோ கொஞ்சம் கிடைக்கும் அந்த காசு நம்ம வாங்குன லோன் கட்டிடவே சரியாபோகும் மறுபடியும் ரியேஜென்ட்ஸ் வாங்கனும் டிஸ்சூ பிராசசிங் மிஷின் வாங்கனும் இப்படி நிறையா இருக்கு இந்தமாறி பெரிய லேப்லாம் நம்மலால அவ்ளோ சீக்கிரத்துல கட்டிட முடியாது “
தயா ” அதுவும் சரிதான் நான் பேசாம இந்த லேப் ஓனர கரெட் பண்ணிடுறன் அப்படினா அந்த லேப்கு நான் ஓனராகிடுவன்ல “
” ஆமா அப்படியே வந்து ஒத்தகால்ல நிக்கபோறான் கட்டுனா உன்னைத்தான் கட்டுவன்னு பேசாம வா டி ஏடாகூடமா பேசிகிட்டு “
” உனக்கு பொறாமைடா எங்க அந்த மாதிரி நடந்திடுமோன்று “
” இப்ப நீ வாய மூடலை வண்டிய பள்ளத்தில விட்டுவ “
” சரி சரி நான் பேசலை நீ பத்திரமா கொண்டுபோய் விடு “
” அந்த பயமிருக்கட்டும் “
இருவரும் பேசிக்கொண்டே லேப்பிற்கு வந்து சேர்ந்தனர்.
மறுநாள் ஆனந்த் சொல்லியதுபோல் ஐந்தாறு சேம்பிள் அனுப்பினார்.
தயாளினி அதனை சிறப்பாய் முடித்து மறுநாளே ஆய்வறிக்கை கொடுத்தாள். அதெல்லாம் மிகச் சரியாய் இருக்க ஆனந்த் இவர்களிடமே தொடர்ந்து சேம்பிள்களை அனுப்பினார்.
ஆனந்தும் அவர்களுக்கு தெரிந்த நண்பர்களுக்கும் தயாளினியின் லேப் ஐ பரிந்துரை செய்தான்.
தயாளன் லேப்……..
அஜ்ஜூ ” யாழி நாளைக்கு தயாக்கு பர்த்டே என்ன பிளான்?”
யாழி ” ஆமால்ல இந்தவாட்டி அவனை செம்மயா சர்ப்ரைஸ் பண்ணனும்.”
வசீ “;அவனுக்கு இதுவரை கொடுக்காத கிஃப்ட்டா கொடுக்கனும்”
அஜ்ஜூ ” எனக்கு ஒரு செம்ம ஐடியா தோனுது”
யாழி ” என்ன? “
அஜ்ஜூ ” ஒன் வீக் எந்த டென்ஷனும் இல்லாம ஹாப்பியா ஊர் சுத்தலாம் மஜா பண்ணலாம்”
வசீ ” இது அவனுக்கு கிஃப்டா இல்லை நீ ஊர் சுத்த பிளான் பண்றியா”;
அஜ்ஜூ ” டேய் அவன் ரொம்ப டென்ஸ்டா இருக்கான்டா இந்த ஒன் வீக் ஆ அதான் அவனை ரிலாக்ஸ் பண்ணலாம்னு சொன்ன “
யாழி ” ஆமா டா அந்த ஆனந்த் பிரச்சனைல அவன் கொஞ்சம் கடுப்பாதான் இருக்கான் நாம எங்கயாச்சும் வெளியபோலாம் “
வசீ ” லூசுங்கலா வேலையிருக்கு நாம நாலுபேரும் போய்ட்டா ஸ்லைடு யார் பார்த்து ரிப்போர்ட் கொடுப்பா “
யாழி ” ஏய் ஸ்லைடுதான வந்து பார்த்துக்கலாம் பட்டுபட்டுனு. ரிப்போர்ட் கொஞ்சம் லேட் ஆகும் முன்னாடியே மெயில் பண்ணிடலாம்”
வசீ ” இதுக்கு தயா கண்டிப்பா ஒத்துக்கமாட்டான் அவன் வேலையில எவ்ளோ கரெக்டா இருப்பான்னு தெரியும்ல அன்னைக்கி அந்த ஆனந்த் திட்டுனப்ப நம்மகிட்ட ஆயிரம் ஸ்லைட்ஸ் இருந்துச்சி தயாமட்டுமே அன்னைக்கி 700 ஸ்லைடுஸ் பாத்தான் தெரியுமா அதான் அந்த ஆனந்த் பொறுப்பில்லையான்னு கேக்கவும் அவனுக்கு செம்ம கோவம் வந்திடுச்சி”
அஜ்ஜூ ” ம்ம்ம் நாம அவன்கிட்ட சொல்ல வேணா சொல்லாம சர்ப்ரைஸ் பண்ணலாம்.”
யாழி ” ஆமா வசீ நாமலும் ஒரு பிரேக் எடுத்துக்கலாம் “
வசீ ” சரி பண்ணுங்க வேணான்னா ஒத்துக்கவா போறீங்க “
அஜ்ஜூ ” சூப்பர் அமிகிட்டயும் சொல்றோம் தயாவ கடத்துரோம் கோவா போறோம் என்ஜாய் பண்றோம் “
மூவரும் hifi அடித்துக்கொண்டனர். இந்த திட்டத்தால் இவர்களுக்கு வரப்போகும் விளைவுகளை அறிந்திடாமல்.
அடுத்த epi எப்போ வரும் நிலா…
When u will post the next epi. Eagerly waiting sis