அத்தியாயம் 8 ❤
💞 என்னவனே !!!அவளுக்கு என்ன தைரியம் !! உன்னை தன்னவன் என கூற 💞
சற்று குறைவான உயரமும் ,
பளிச்சென்று மின்னிய முகமும், அப்பெண்ணின் அழகை நன்றாக எடுத்துக் காட்டியது.
அவள் கார்த்திக்கின் அருகில் வந்து சிறு தடுமாற்றத்துடன் ,
” ஹாய் கார்த்திக்.நா பேரு தீக்ஷிதா.நேனு நிதோ !! ” என அவள் கூற ஆரம்பிக்க, கார்த்திக்கும் , தமிழும் ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
” நீங்க தெலுங்கு தான் பேசறிங்கனு நினைக்கிறேன்.ஆனா என்ன சொல்றிங்கனு சத்தியமா தெரில ” என கார்த்திக் கூற ,
தீக்ஷிதா ” மர்ச்சிப் போயாவ் ” தலையில் தட்டிக் கொண்டு ” உங்களை நான் நாலு மாசமா இங்க காலேஜ்லப் பாத்துட்டு இருக்கேன்.உங்க கேரக்டர் ரொம்ப பிடிச்சிருக்கு.அதுனால ஐ லவ் யூ ! “
என அவள் படபடவென சொல்ல வந்ததை சொல்லி முடிக்க, காதலை உரியவனிடம் வெளிப்படுத்தி விட்டோம் என்று எண்ணியவளது முகத்தில் அத்தனைப் பிரகாசம்.
கார்த்திக் ஒன்றும் பேச முடியாமல் வாயடைத்துப் போனான்.
அருகிலிருந்த தமிழ் ” அப்படியா விஷயம் ! ” என்று தாடையில் கை வைத்து யோசிப்பது போல் கார்த்திக்கைப் பார்த்தான். அவனோ தோளைக் குலுக்கிக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி ,
தமிழிடம் ” மச்சி ! ஒரு நிமிஷம் அப்படி தள்ளிப் போய் நில்லேன் “
தமிழ் ” ஏன்டா ? “
கார்த்திக் ” போய் நில்லுடா ” என அவனைத் துரத்தி விட்டு தீக்ஷிதாவிடம் திரும்பினான்.
” தீக்ஷிதா ! நீங்க என்கிட்ட லவ் சொன்னது தப்பு இல்லை.ஆனால் அதை மறுக்க எனக்கு உரிமை இருக்குனு நினைக்குறேன் ” என்றவுடன் தீக்ஷிதாவின் கண்கள் கலங்க ஆரம்பித்து விட,
” ப்ளீஸ் !!! அதுக்குள்ள அழுதுறாதீங்க . நான் சொல்லி முடிச்சுடறேன் “அவன் கூறியவுடன் அவளது இமைகள் விரிந்து கண்கள் பெரிதாக,
அதைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டே ,
” நான் இப்படி தாங்க மனசுல பட்டதை சொல்லிடுவேன். எனக்கு உங்க மேல மட்டும் இல்லை.வேற யார் மேலயும் இப்போதைக்கு லவ் வராது.ஏன்னா எனக்கு லவ் பண்ண இன்ட்ரஸ்ட் – உம் இல்ல. அப்படி பண்ணலாம்ன்னு தோனுனாலும் … ”
அதைக் கூறி முடிப்பதற்குள், தீக்ஷிதா அவனது பேச்சை இடைமறித்து ,
” தோனுச்சுன்னா ! என்னை லவ் பண்ணுவிங்களா ? “
கார்த்திக் ” இருங்க . லெட் மீ ஃபினிஷ் ! லவ் ஒருத்தர் மேல, தானா வரனும்ங்க. இப்படி கெஞ்சி , இல்லைனா கம்பெல் பண்ணி வரக்கூடாது.புரியுதா ? “
அவன் பேச ப்பேச அவளது முகம் சோகமாவதை உணர முடிந்தாலும் வாழ்க்கையின் நிதர்சனம் அதுதானே ! என அவனும் மனதில் பட்டதை கூறி முடித்தான்.
” அப்பறம் இன்னொரு விஷயம்.நாலு மாசமா என்னை நோட் பண்ணிட்டு இருந்ததுல
உங்க காலேஜ் லைஃப் – ஐ வீணாக்கிட்டிங்க. இனிமேல இருக்க மீதி நாட்களை நல்லா என்ஜாய் பண்ணுங்க ” அறிவுரை ஒன்றை இலவசமாக கூறி விட்டு, ” பாய் ” என சென்று விட்டான்.
தீக்ஷிதா அவனிடம் தனது காதலை கூறியதையும், கார்த்திக் அவளுடன் தனியாக பேசியதையும் வெகு நேரமாக சிரத்தையுடன் மஹிமாவின் விழிகள் கவனித்துக் கொண்டு இருந்தன.
தன்னை மஹிமா பார்த்துக் கொண்டு இருப்பதை முதலிலேயே கண்டு கொண்டான் கார்த்திக்.அவளை நோக்கி ஒரு அர்த்தப் புன்னகையுடன் கடந்து சென்றான்.
அவன் போனதும் மஹிமா சிறிது நேரம் தனக்காக காத்திருக்குமாறு ஶ்ரீயிடம் கூறி விட்டு
தீக்ஷிதாவிடம் வந்தாள்.
மஹிமா ” ஹாய் ! ஐ யம் மஹிமா “
இவளும் சம்பிரதாயத்திற்கு,
” ஐ யம் தீக்ஷிதா ” என்க,
மஹிமா ” நான் உங்க கூட கொஞ்சம் தனியாகப் பேசலாமா ? “
– தொடரும்