Loading

காலை விடிந்ததும் அனைவரும் ஹாஸினியி ன் அறைக்கு வந்தனர். கண்விழித்தவன்  நடந்த விஷயம் அனைத்தையும் ஹாசனியின் பெற்றோரிடம் கூறினான்.

ஹாசினியின் அப்பாவோ ஆமாம் ஜீவா அவர் கூட ஒரு வாட்டி அவருடைய பையனுக்கு நம்ப ஹாசினியை   கேட்டார்   கல்யாணமே வேணாம்னு சொல்லுது  என்றேன்.

அப்புறம் அவரும் அதோடு விட்டுட்டாரு என்று கூறினார். ஹாசினி  தூங்கி கொண்டிருக்க தனது அறைக்கு வந்து கிளம்பினான்.

திருமண வேலைகளில் துணிமணி எடுத்தல்,  பாத்திரிக்கை அடித்தல் போன்ற அனைத்து வேலைகளும் 3நாட்களில் வெகு வெகு விரைவாக நடந்து கொண்டிருந்தது.

ஜீவாவின் பட்டு மஹாலில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் அனைவரின் குடும்பத்திற்கும் துணிமணி எடுத்து கொடுத்தார் ஜீவாவின் அம்மா.

வீடு வீடாக சென்று பத்திரிக்கை வைத்து விட்டு வந்தனர் மூன்று நாட்களாக ஜீவாவை  ஹாசினி பார்க்கவே இல்லை போன் செய்தால் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது என்னவாக இருக்கும் என தனது அறையில் இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அப்போது ஹாசினியின் அறைக்குள் நுழைந்தான்  அருகே வந்தவனிடம் ஹாசினி  பேசவே இல்லை ஹாசினிமா என அவளை இழுத்து தனது அருகில் அமர வைத்தாள்.

நான்  வரும்போது நீ தூங்கி கிட்டு இருப்பே நாலு மணிக்கு வந்தா எல்லாரும் தூங்கிட்டு தான் இருப்பார்கள் என்று கூறினாள்.

இரண்டு ரவுடிங்க  உள்ள ஒரே சண்டை அடிதடி அவங்கள பிரச்சனையை தீர்த்து வைக்கரத்துக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு என்று கூற தெரியுமே என்றாள்.

எப்படி என்றான்  டிவியை  காண்பித்தாள்  அதனை லோக்கல் சேனல்ல சாரை பத்தி தானே எல்லாம் போட்டுக்கிட்டே இருக்காங்க வந்ததிலிருந்து அப்படியே ஊரையே மாத்திட்டீங்க என்னென்று சொல்ல என்றாள்.

கட்டிலில் தலையில் கை கோர்த்து படுத்திருந்த அவன் அவளை சிரித்துக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஜீவா இந்த வேலை வேண்டாம் ஜீவா  என்று கூற விருட்டென்று எழுந்து நின்றான்  என்ன சொன்ன புரியல ஹாசினி  என்று கூற  இந்த போலீஸ் வேலை வேண்டாம் ஜீவா என்றாள்.

அவனின் முகம் மாறியது அடிதடி என்கவுன்டர்,  துப்பாக்கி,  கத்தி இதெல்லாம் வேணாம் பயமா இருக்கு என்றாள்.

என்னோட புருஷன் ஐபிஎஸ் அப்படின்னு சொல்லும் போது பெருமையாக தான் இருக்கும் ஆனா வேணாம் ஜீவா என்று கூற என்ன விளையாடுறியா ஐ.பி.ஸ் படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா?  உனக்கு என்னவோ ஈசியா சொல்ற வேலையை வேணாம்னு என்றவன்.

என்னோட அடையாளம்,  அங்கீகாரம் இது இத விட்டுட்டு வந்து என்னை என்ன பண்ண சொல்ற என்றான்.

கையில் போட்டிருந்த காப்பு முறுக்கி கஞ்சி போட்ட போலீஸ் ஆபீஸர் மாதிரி இருக்கு உன்ன யூனிபார்ல  பார்க்கவே பயமாயிருக்கு நீ  முதல்ல போய் யூனிபோர்ம மாத்து என்றாள்.

ஹா ஹா ஹா  என்று சிரித்தவன் அருகில் வந்து அவனைப் பார்த்துவிட்டு பின்னாலேயே சென்றவள்  சுவர் முட்டி நிற்க வைத்து என்ன சொன்ன  திரும்ப சொல்லு என்று அவள் நெற்றி முட்டி அவளருகில் குனிய அவள் அனைத்தையும் மறந்தாள்.

நீ பக்கத்துல வந்தாலே எல்லாம் மறந்து போயிடுது ஜீவா ஆனால் உன்கிட்ட பேசணும்னு நினைச்சது எல்லாமே  என.

அவள் போலீஸ் டிபார்ட்மென்ட் பற்றி எதுவும் எனக்கு அந்த அளவு தெரியாது ஜீவா  இப்பதான் புரியுது சனி,  ஞாயிறு லீவு இல்ல,  மழை வெயில் கணக்கில்லை,  மூன்று வேளை சரியான சாப்பாடு கூட இருக்காது, தூக்கம் கூட கிடையாது, நல்ல நாள் கெட்ட நாள் இல்ல பொண்டாட்டி புள்ளைங்க கூட இருக்க முடியாது நீ என் கூடவே இரு ஜீவா லீவு நாள் கூட என் கூட இருக்க மாட்ட போலவே  என்று கூறிய வளை பாவமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.

முட்டைக் கண்களை உருட்டி உருட்டி பேசிக்கொண்டிருந்த அவளை பார்ப்பதற்கு அவனுக்கு சிரிப்புதான் வந்தது.

வேலைய ரிசைன் பண்ணிடு  பிசினஸ் பண்ணலாம் அங்கு ஊருக்கே போய்விடலாம் என் கூடயே இரு என்று அவன் மார்பில் முகம் புதைத்து அழ தொடங்கினாள்.

அவளின் தலையை கோதி அவன் செல்லக்குட்டி இங்க பாரு நம்ம நாட்டுல வீரத்தமிழ் பெண்கள் வாழ்ந்த ஊர் இது ஒரு போரில்  தன்னுடைய மகனையோ தன்னுடைய கணவனை இழந்த வீட்டிலிருந்த அடுத்த ஆண்மகனை தயார் பண்ணி அனுப்புன வீரத் தமிழ்ச்சி வாழ்ந்த ஊரில் பிறந்த பொண்ணா நீ.

என்ன ஹாசினிமா இப்படி பேசிட்டு இருக்க என்னுடைய கணவன் என்னுடைய சகோதரன் என்னுடைய மகன் என்று சுயநலமாக இருந்தால் நம்ம நாட்டை யார் பாதுகாப்பா பாத்துக்க முடியும்.

உன்னை போலவே என் புருஷன் கூட இருக்கணும்னு நினைச்சா ராணுவத்தில் வேலை செய்ற  மனைவிமார்க்கள்  உன்ன மாதிரி நினைச்சா நாட்டை யார் பாதுகாக்கிறது ஹாசினிமா. 

நம்ம நாட்டை ஆள பாதுகாக்க  ஒவ்வொரு வேலையிலும் ஒவ்வொரு கஷ்டம் இருக்கும் டாக்டர், போலீஸ், மிலிட்டரி  தேசத்துக்காக நேர்ந்து விட்டதாக அர்த்தம்.

ஹாசினிமா ப்ளீஸ் இந்த வேலையில ஏதாவது செய்யணும் இந்த சமுதாயத்துக்கு என்னால முடிஞ்சது ஏதாவது செய்யணும் நெனச்சிகிட்டு இருக்கறேன்.

ப்ளீஸ் நீ எதுவும் என்ன ஹார்ட் பண்ணிடாத என்று கூறினான் . வேலையா,  ஹாசினியான்னு கேட்டா இரண்டுமே சம அளவு கோல்தான்
ஹாசினிமா என்றான்.

அப்ப வேலை தான் ஃபர்ஸ்ட் நான் செகண்ட் தானா என்று முட்டிக் கொண்டு வந்த கண்ணீரை அடக்க முயற்சி செய்தாள்.

உ ன்கிட்ட நிறைய பேசணும் ஒரு கப் காபி ரொம்ப டயர்டா இருக்கு குளிச்சிட்டு வந்துடுறேன் என்று தனது அறைக்கு சென்றான்.

கிச்சனுக்கு சென்று காபி கொண்டுவரேன் என்று சென்றாள்.

இடுப்பில் டவலுடன் வந்து தலையை துவட்டிக் கொண்டு நின்றான்.

காபியோடு அறையினுள் நுழைந்தவள் பரந்த மார்பும் திரண்ட தேகம் எக்சசைஸ் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்தவளைப் பார்த்தாவள் தயங்கி வாசலிலேயே நின்றாள்.

  காபி என,,  தேங்க்ஸ்டா என்று காப்பியை எடுத்துக்கொண்டு  டி-ஷர்ட் மாற்றிக் கொண்டு வந்து அமர்ந்து காபி குடித்தான்.

தேங்க்ஸ் ஹாசினிமா என்று கூறி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்  மேரேஜ்க்கு அப்புறம் என்ன ஐடியா வச்சிருக்கே என்று கேட்டான்.

என்ன ஐடியானா   புரியலையே ஜீவா என மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் எப்படி இங்கேயே இருக்கணுமா இல்ல வேற வீட்டுக்கு போலாமா என்று அவளைப் பார்க்க,  நீங்க என்ன முடிவு இருக்கீங்க என்று கேட்டாள்.

நான் என்ன முடிவு எடுத்தாலும் உனக்கு ஓகேவா என உனக்கு எது சந்தோஷமோ எனக்கும் அதுதான் சந்தோஷம் என்று கூறினாள்.

நான் உன்னை மட்டும்தான் ஹாசினிமா விரும்பினேன். நகை,  பணம்,  சொத்து எதுவும் வேண்டாம்  ஹாசினிமா நான் கட்டுற   தாலியோட நான் உனக்கு போடற  நகையோட வந்தா  போதும் என் வசதிக்கு தகுந்த போல உன்னை நான் பார்த்துப்பேன். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு உனக்கு புரியும்னு நினைக்கிறேன்  எனக்கு அது ஒரு மாதிரியா  இருக்கு என்று கூற அவனையே பார்த்தாள்.

உன் மனச நோகாதபடி நான் பார்த்துப்பேன் ஹாசினிமா எனக்கு நம்பிக்கை இருக்கு உனக்கு என்ன புடிக்கும் உனக்கு எப்ப என்ன செய்யணும்னு  எனக்கு தெரியும்.

மேரேஜ்க்கு அப்புறம் உனக்கு ரொம்ப பிடிச்ச இடத்துக்கு தான் போக போறோம் என்று கூறியவன்.

ஹாசினிமா உனக்கு ஏதாவது வருத்தமா என்று கேட்க ஒரு வருத்தமும் இல்லை ஜீவா என்று அவன் அருகில் வந்தவள்  நீ எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு சந்தோஷம்தான் ஜீவா ஆனால் நீ மனசளவுல எந்த கஷ்டமும் படக்கூடாது நான் நீ என்னை இந்த அளவு பார்த்துக்கரியோ நான் அந்த அளவுக்கு பார்த்துக்கொள்வேனான்னு  எனக்கு தெரியாது ஜீவா.

நான் சின்ன புள்ள எனக்கு நீ சொல்லி கொடு நீ என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன் என்று கூறி அவளை நெருங்கியவன் அவனின் தோளில் சாய்ந்தவள் அவனின் மீசையை முறுக்கினாள். மேரேஜ்க்கு அப்புறம் என்ன பண்ணனும் உனக்கு சொல்லி தரேன் என்னறவனின்  கன்னத்தை கடித்து வைத்தாள்.

  போன்  ஒலித்தது பத்து நிமிஷத்துல வந்திடுறேன் என உள்ளே நுழைந்தவன் . யூனிஃபார்ம் உடன் வெளியே வர  வெரி அர்ஜென்ட்  ஹாசினிமா என்று நெற்றியில் முத்தமிட்டு கிளம்பியவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

🌺🌺வாசம் வீசும்🌺🌺

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்