Loading

6 – வலுசாறு இடையினில் 

 

ஏகாம்பரத்தினை பற்றிய முழு விவரமும் வர்மனின் காதுக்குள் ஊதி விட்டான் வட்டி . 

 

“சரியான எடக்கு பிடிச்ச ஆளா தான் இருக்கான்ல .. இவனுக்கு எப்டி அந்த பொண்ணு பொறந்துச்சி ?”, வர்மன் நடந்தபடியே பேசினான் . 

 

“போய் படைச்சவங்கள கேளுங்க மச்சான்.. சின்ன புள்ளைல அந்த பொண்ணு கிட்ட வம்பு இழுத்தீங்க சரி .. இப்பவுமா ? ஏன் இப்டி கோவத்துல சறுக்க பாக்கறீங்க ?” , வட்டி நூல் விட்டான் . 

 

“அது என்னமோ அந்த புள்ள கிட்ட வம்பிலுத்தா நல்லா இருக்கும். முழிய உருட்டாம அது பாக்கறதும், அதிராம பேசறதும் கொஞ்சம் வித்யாசமா இருக்கும்.. அதான் அப்பப்ப வம்பிழுப்பேன்.. ஆனா இந்த தடவ அவ அதிகமா பேசிட்டா டா “, கழுத்தை நீவியபடி அவன் சொன்ன விதம் வட்டிக்கு விஷயத்தை உணர்த்தியது . 

 

“நீங்க மட்டும் அப்டி பேசலாமா? அந்த புள்ள காலேஜ்ல சேர்ந்ததுல இருந்து அது தான் மொத மார்க் வாங்குதாம். அது கிட்ட போய் புள்ளைக்கு நாலு எழுத்து சொல்லி குடுக்க தெரியறவரை படிச்சா போதும்னா கோவம் வராத ?”, என நூல் விட்டான். 

 

“நான் என்னடா தப்பா சொல்லிட்டேன் ? நடப்புல இருக்கறத தானே சொன்னேன் .. நம்ம ஊருக்கு எதுக்கு அவ்ளோ படிப்பு ?”, வீம்பை விடாமல் பேசினான் வர்மன். 

 

“ஏன் நம்ம ஊரு புள்ளைங்க படிச்சா நம்ம வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறிடும்ன்னு தானே பொண்ணுங்கள படிக்க வேணாமுன்னு சொல்றீங்க ?”

 

“டேய் .. கூட கூட பேசினா வாய ஒடச்சிடுவேன்.. அந்த ஆளுக்கு மொதல்ல எங்க இருந்து கொடச்ச   குடுக்கலாம் சொல்லு டா “

 

“ம்க்கும்.. அடுத்தவன் பொழப்ப கெடுக்க இவ்ளோ ஆர்வம் .. எனக்கு ஒரு சந்தேகம் மச்சான் .. அதுக்கு மொத பதில் சொல்லுங்க பொறவு நீங்க கேக்காத விஷயத்த கூட சொல்றேன் “

 

“என்னடா சந்தேகம் ?”

 

“அந்த புள்ளைய விரும்பரியலா ?”

 

வர்மன் அதிர்வுடன் பார்த்தான். அவன் அப்படி பார்ப்பதை கண்டு வட்டி , “ என்ன மச்சான் முழிக்கறீங்க ?”, என அருகில் வந்து கேட்டான். 

 

“நீ நான் சொல்றத மட்டும் பண்ணு .. இங்கரு இந்த விஷயம் கெழவி காதுக்கு போச்சி உன் கழுத்து காணாம போயிரும் பாத்துக்க .. “, வர்மன் கொடுத்த குடைச்சலில் ஏகாம்பரத்திற்கு முதல் பிரச்சனை கடை வாயிலில் சென்று நின்றது. 

 

“ஏகாம்பரம் .. “

 

“வாங்க தணிகாசலம் வாங்க .. என்ன தீடிர்ன்னு  இந்த பக்கம் ?” , ஏகாம்பரம் வந்தவரை உபசரித்து கேட்டார். 

 

“எல்லாம் நல்ல விஷயம் தான்.. என் பொண்ணுக்கு கல்யாணம் முடிவாகி இருக்கு .. அதான் உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன்.. அப்டியே  வீட்டுக்கு தேவையான சில பொருள வாங்கிட்டு வர சொல்லி என் பொண்டாட்டி சொல்லி விட்டா “, என கடையில் கண்ணை சுழற்றி விட்டு கூறினார் தணிகாசலம். 

 

“ரொம்ப சந்தோஷம் .. எங்க பையன் ? நம்ம ஊரு பக்கம் தானே ?”, என கடை பையனை அவர் கொண்டு வந்த லிஸ்டில் இருப்பதை எடுத்து வைக்க கொடுத்து அனுப்பினார். 

 

“இல்ல.. வெளிநாட்டு மாப்பிள்ளை .. அதான் எல்லாம் நிறைவா செய்யணும் ன்னு பாக்கறேன் .. “

 

“வெளிநாடா ? நம்ம ஊரு பொண்ணுங்க அங்க போய் என்ன பண்ண போகுதுங்க ? பாஷை புரியணும் .. பழக்க வழக்கம் எல்லாம் புரியணுமே தணிகாசலம் .. உங்க பொண்ணு எது வரை படிச்சி இருக்கு ?”

 

“என் பொண்ணு காலேஜ் நாலாவது வருஷம் படிக்குது .. அதுக்கும் வேலை வெளிநாட்டுல கிடைக்குமாம்.. மாப்ள சொன்னாரு .. “, பெருமையாக பேசினார் தணிகாசலம். 

 

“பொட்ட புள்ளைய வேலைக்கு அனுப்பி சாப்பிடற அளவுக்கா அங்க வருமானம் இல்லாம இருக்கு ? என்ன தணிகாசலம் இது ? நம்ம ஊரு பொண்ணுங்க இதுக்கு எல்லாம் சரி பட்டு வருவாங்களா ?”, கேலியுடன் பேசினார் ஏகாம்பரம். 

 

“என்ன ஏகாம்பரம் இப்பிடி பேசறீங்க ? இன்னும் நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?  புருஷன் செத்ததும் வாழறத்துக்கு வழி இல்லாம சொந்த வீட்ல வேலைக்காரியாட்டம் வாழற  புள்ளைங்க எல்லாம் இன்னும் நம்ம ஊருல தான் இருக்கு .. காலம் மாறிடிச்சி ..அவங்களும் சொந்த கால்ல நின்னா தான் நல்லது ..  நாமளும் அதுக்கு தக்கன மாறிக்கணும் .. சரி சொல்ல வந்த முக்கியமான விஷயத்த சொல்லிடறேன் .. “

 

‘என்ன’ என்பது போல பார்த்தார் ஏகாம்பரம். 

 

“நீங்க என்கிட்ட வாங்கி இருந்தீங்களே கைமாத்தா கொஞ்சம் வேணும்ன்னு .. அத குடுத்தா எனக்கு கல்யாண செலவுக்கு சவுகரியமா இருக்கும் .. கைல தயாரா இருக்குன்னு போன வாரம் கூட சொன்னீங்களே “, என தான் வந்தது இதற்கு தான் என்று கூறிவிட்டார் தணிகாசலம். 

 

“அதான் .. நீங்க இன்னும் கொஞ்ச மாசம் கழிச்சி வாங்கிக்கறதா சொன்னீங்களே தணிகாசலம் .. “, உள்ளுக்குள் ஏற்கனவே யோசித்து இருந்தாலும், அவர் வாய் வழி வந்த பின் பதில் கூறி கொள்ளலாம் என மனதிற்குள் யோசனையில் இருந்தார். 

 

“ஆமா சொன்னேன் .. இப்போ திடீர்ன்னு கூடி வந்துரிச்சி.. கல்யாணம் எல்லாம் கூடி வரப்போ செஞ்சிடணும் இல்லயா .. ?”

 

“சரி தான் தணிகாசலம் .. நீங்க இப்போ தேவை படாதுன்னு சொன்னதும் இன்னொரு பக்கம் முதலீடு பண்ணிட்டேன் .. ஒடனே எடுக்க முடியாது .. அதான் யோசிக்கறேன்.. “, ஏகாம்பரம் யோசனையுடன் கூறினார். 

 

“ஒண்ணும் அவசரமில்ல ஏகாம்பரம்.. இன்னும் பத்து நாள்ல குடுத்துடுங்க.. நான் வரேன் “, என வந்த வேலை முடிந்தது என சென்று விட்டார். 

 

“அந்த ஜோசியக்காரன் வாய தொறந்தான் .. வந்துரிச்சி பிரச்சனை .. சே இந்த சனியன என்னிக்கு விட்டு ஒழிக்கரேனோ அன்னிக்கி தான் எனக்கு நிம்மதி போல “, என சிடுசிடுத்தபடி அவருக்கு தர வேண்டிய பணத்தை பிறட்ட வழிகளை யோசித்தார். 

 

“அப்பா.. அப்பா .. “, என அழைத்தபடி மகன் ராஜன் வந்தான். 

 

“சொல்லு ராஜா .. எதுவும் வேணுமா ?”

 

“ஆமா பா .. நாங்க ஃபிரண்ட்ஸ் எல்லாரும் டூர் போறோம் .. பணம் வேணும்.. “, அருகில் இருந்த சிகரெட்டை தந்தை அறியாமல் எடுத்து பைக்குள் திணித்து கொண்டு கேட்டான். 

 

“எவ்ளோ வேணும் ராஜா ? எங்க போறீங்க? “

 

“இங்க  தான் பா.. ஒரு அஞ்சாயிரம் குடுங்க.. இன்னும் கொஞ்சம் என் அக்கவுண்ட்ல பணம் போட்டு விடுங்க.. “, என கூறியபடி தந்தை கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு வெளியே சென்றான். 

 

“ராஜா .. இந்த பைய வச்சிட்டு போற ?”, ஏகாம்பரம் சத்தமாக கேட்டார். 

 

“உங்க பொண்ணு தான் எனக்கு ரெகார்ட் எழுதி தரமாட்டேன்ன்னு சொல்லிட்டாளே .. அதான் என் ஃப்ரெண்ட் கிட்ட எழுத குடுக்கறேன் .. கொஞ்ச நேரத்துல ஃப்ரெண்ட் வந்து எடுத்துக்குவான் பா.. நான் போய்ட்டு வரேன் “, என போகும் போக்கில் பற்ற வைத்து விட்டு சென்றான் ராஜன். 

 

  “அவளுக்கு அவளோ கொழுப்பு ஆகிடிச்சா? நீ போயிட்டு ஃபோன்  

பண்ணு கண்ணு.. நான் அவள  எழுத சொல்றேன்”

 

“வேணாம் பா.. நான் வேற ஆள சொல்லிட்டேன் .. இதுக்குமேல மாத்த வேணாம்.. நான் அங்க போயிட்டு உங்களுக்கு ஃபோன் பண்றேன்.. “, என கத்தியபடி பைக் எடுத்து கொண்டு பறந்தான். 

 

ஏகாம்பரம் தராசில் ஒரு பக்கமாக சாய்வதால் ஏற்படும் விழைவு தெரிந்தும் ஒரே பக்கமாக சாய்ந்து நிற்கிறார். காலமே அதற்கான பதிலையும் சொல்லும். 

 

“எலேய் வட்டி.. இவன் தானே அந்த வீட்டு ராஜ குமாரன்.. ?”, பைக்கில் செல்லும் ராஜனை பார்த்தபடி கேட்டான் வர்மன். 

 

“அதே ராஜா வீட்டு ராஜா குட்டி தான் மச்சான்.. இவன் அவங்க அப்பனுக்கு ரெண்டு படி மேல இப்போவே இருக்கான்.. “, வட்டி கடையில் பொருட்களை அடுக்கியபடி கூறினான். 

 

“மாப்பிள்ளைக்கு  விருந்து வச்சி மரியாதை பண்ணனும் ல ?”, வர்மன் சிரித்தபடி கேட்டான். 

 

“மச்சான் .. இவன் மேல கைய வச்சா ஒடனே ஏகாம்பரம் கொடி ஏத்திடுவாரு.. “

 

“சரி .. கடைசில விருந்து வைப்போம்.. அடுத்த ஆளு எப்ப போவான் ?”

 

“இருங்க மச்சான் .. ஒண்ணு ஒண்ணா அனுப்பலாம்.. என்ன அவசரம் ?”

 

“அந்த புள்ள காலேஜ் முடிக்கறதுக்குள்ள எல்லா வேலையும் முடியணும்.. அது காலேஜ் முடிக்க முன்னாடி என் பொண்டாட்டி ஆகி இருக்கணும் .. சீக்கிரம் அடுத்த ஆள அனுப்பு “, என அதட்டினான். 

 

நங்கையும் , வினிதாவும் கல்லூரியில் சிரித்து தோழிகளுடன் பேசியபடி பொழுதை இன்பமாக கழித்துக் கொண்டிருந்தனர். 

 

“நங்கை .. நீ செலக்ட் ஆனா கம்பெனில இருந்து மெயில் வந்தது .. நம்ம பரீட்சை முடிஞ்சதும் அங்க ட்ரைனிங் ஆரம்பிக்குமாம்.. “, வினிதா கூறினாள். 

 

“ட்ரைனிங் எங்கன்னு போட்டு இருக்கா ?”

 

“அது அப்ப தான் சொல்வாங்கலாம் .. “

 

“சரி பாத்துக்கலாம் .. அதுவரைக்கும் மாப்ளைன்னு எவனும் வீட்டுக்கு வரமா இருக்கணும் “, என கூறியபடி அடுத்த வகுப்பிற்கு தேவையான கையேடுகளை எடுத்து கொண்டு கவனிக்க அமர்ந்தாள். 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
11
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  10 Comments

  1. Archana

   இதெல்லாம் ஓவரா இல்ல பையன் கேட்டா பணம் தராரு, பத்தாதுக்கு மேல அக்கவுண்ட்லே கூட போடுவாரு ஆனா அந்த மாங்கா என்ன பண்ணுதுன்னு ஒரு வார்த்தை கேட்க மாட்டாரு இந்த ராஜன் வந்தாலே எனக்கு பிபி வருதுப்பா😒😒😒

  2. Janu Croos

   புள்ளைய பெக்க சொன்னா பொறுக்கிய பெத்து வச்சிட்டு பெருசா பேசுது இந்த ஆளு….அப்பா கிட்ட காசும் வாங்கிட்டு அவனுக்கே தெரியாம சிகரெட்டும் எடுக்குறான் அதுவும் இந்த வயசுல….
   ஒரு ரூபாய்க்கு பிரயோஜனம் இல்லாத தீவெட்டி தலையன் இவன் ரெக்கார்ட் நோட்ட நங்கை எழுதனுமா?
   வர்மா சார்…நீங்க என்ன பிளான் பண்றீங்க?ஏதோ பிளான் பண்றீங்கனு புரியது….ஆனா அது எங்க வரை போகும்னு தெரியலயே…..

  3. இந்த ஏகாம்பத்த முதல்ல நல்லா வெளுத்து வாங்கனும் ஊர் சுத்துற புள்ளைக்கு காசு கொடுத்து அனுப்பிட்டு படிக்கிற பொண்ண கொழுப்பு கூடிப்போச்சுன்னு திட்டுறான் அறிவு கெட்டவன்

  4. Oosi Pattaasu

   வர்மனோட ஜோடி நங்கை, அவ தான் அந்த ஊரோட வீரமங்கை…

  5. kanmani raj

   நங்கைக்கு பிடிச்சது படிப்பு, வர்மனுக்கு இருக்கு அவ மேல ஒரு பிடிப்பு, இதுல மாட்டிட்டு துடிக்குது வட்டியோட நட்பு…