Loading

பகுதி – 5

அமி அம்மா என இடையை பிடித்துக்கொண்டு விழ வசீம் பதறிவிட்டான்.

” ரிதா என்னாச்சுமா உனக்கு ” என்று கீழே அமர்ந்து அவளை தூக்கி அமரவைத்திட அவளுக்கோ கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.

” ரிதா மா வலிக்கிதா டா அய்யோ நான் நகர்த்திதான்டா விட்டேன் விழுவேன்னு நினைக்கலைடா ” என்றவனின் கண்களோ கலங்கியேவிட்டன.

அவன் கண்ணையே பார்த்தாள் அதில் அவளுக்கான காதலையே கண்டிருந்தாள்.

இந்த துடிப்பில்தான் அன்றுமுதல் இன்றுவரை அவன்மீது பித்தாய் இருக்கிறாள் பேதையவள் அவன்தான் இதை அறிந்தும் அறியாமலும் நடிக்கிறான். அவனது நடிப்பை நிறுத்திடவே இவள் நாடகத்தை தொடங்கினாள்.

” அய்யோ அம்மா போச்சே என் இடுப்பு அய்யோ வலிக்கிதே என்னை ஏன்டா இப்படி பண்ண “

” ரிதாமா மன்னிச்சிடு மா ஸாரிமா அய்யோ நான் என்ன பண்ணுவன் ரிதா வலிக்கிதா டா “

” ம்ம்ம் எண்ணதேச்சி குளிக்கிது தள்ளிவிட்டுட்டு பேச்சபாரு” எரிச்சலாக பேசினாள்.

” ரிதா ஸாரி டா எங்கடா வலிக்கிது “

அவள் எழ முயற்சிக்க கையில் கல் ஒன்று குத்திட அவளோ ஸ்ஸ்ஸ்ஆஆஆஆ என்றிட வசீமோ
ரிதாமா என்னடா ஆச்சி என்று அவள் கையை பற்றிட அவளுக்கோ உடல் சிலிர்த்துவிட்டது. கூச்சத்தில் அவள் கையை அவனிடமிருந்து விடுவிக்க அவளோ அவளுக்கு முடியவில்லை போலும் என்று நினைத்து  அவளை அப்படியே கைகளில் ஏந்திவிட்டான்.

பெண்ணவளின் நிலைதான்  0° க்கு சென்றுவிட்டது. பின்னே அவளுக்குதான் வலியே இல்லையே சும்மாவிழுந்து அவனை பயப்படுத்தலாம் என்றே அவள் அலறிட அந்த அலறலில் அவளவனோ துடித்திட அவன் கண்ணையே பார்த்திருந்ததால் அவனைப் பார்த்துக்கொண்டே எழபோனவள் கையில் கல் குத்திட அப்போதும் சிறிய வலிதான் ஏற்பட்டது. இயல்பாக வலி ஏற்பட்டால் கத்துவதைப்போல்தான் அவள் கத்திட அவனோ தன்னை தூக்கிடுவான் என அவள் கனவிலும் நினைக்கவில்லை.

” ரிதா மா ஒன்னுமில்லடா ஹாஸ்பிடல்போலாம் டா உனக்கு ஒன்னுமில்லடா டாக்டர்டபோனா சரியாகிடும் டா ” என்று உலறினான் ஆணவன் தானும்  மருத்துவனென்பதை மறந்து.

அவளை சீட்டில் அமரவைத்து காரை அவன் இயக்கிட அவளோ அவனையே பார்த்திருந்தாள்.

” வசீம் எனக்கு ஒன்னுமில்ல தான் சும்மாதான் கத்துன உங்களை பயப்படுத்ததான் அப்படிபண்ண ” வசீமிற்கு கோபம்வந்துவிட்டது கொஞ்ச நேரத்தில் அவன் உணர்வுகளோடு விளையாடிவிட்டாளே என்று பட்டென ஓர் அறைவிட்டான். 

அவளோ அசராமல் அவனை பார்த்து கேட்டாள் ” எந்த உரிமைல என்ன அடிச்ச டா “

அப்போதுதான் அவன் செய்ததை உணர்ந்தவன் தலைகுனிந்தான்.

” என்னமோ சொன்ன உன் பிரண்டுக்கு நம்பிக்கை துரோகம் ஜாதி மதம் குடும்பம் பிலாபிலாபிலான்னு இப்போ எனக்காக துடிச்சியே அப்போ ஏன் இதெல்லாம் யோசிக்கலை “

……

” என்ன கூப்ட ரிதா….ரிதான்னு தான கூப்பிட்ட அது எங்கருந்துவந்துச்சி வாய்லருந்தா இல்ல உன் மனசோட ஆழத்திலருந்து வந்துச்சி “

” சரி நீ ஒரு லிஸ்ட்டுபோட்டு சொன்னியே உனக்கும் எனக்கும் ஒத்துவராததுக்கு அதெல்லாம் தேவையே இல்ல நீ ஒரே வார்த்த என் கண்ணபார்த்து உன்னை எனக்கு பிடிக்கலை நான் உன்னை என் நண்பனோட தங்கச்சியா மட்டும்தான் பாக்குறன்னு நீ சொல்லிருந்திருக்கலாமே நான் அத்தோட உன் பக்கமே வந்திருக்கமாட்டனே ஏன் டா ஏன் சொல்லலை நீ  ஏன்டா உன்னையே ஏமாத்திக்கிற நீ “

…….

” உனக்கு நல்லா தெரியும் நான் உன்னை ஏன் காதலிக்கிறன் எப்போலருந்து காதலிக்கிறன்னு நீ என்னை அவாய்ட் பண்ணனும்னா ஈசியா பண்ணிருக்கலாம் ஆனா நீ பண்ணலை உன் மனசுல என்மேல  ஆசையில்லைனு சொல்லு நான் இப்பவே இந்த நிமிஷமே உன்னை காதலிக்கிறதை விட்டுடுறன். “

வசீம் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது. ஆம் அவள் சொல்வதெல்லாம் உண்மைதானே அவனுக்கும் அவள்மீது காதல்தானே. அதனால்தானே அன்று அவன் அப்படி துடித்தான். இவளுக்கு காதல் வந்த காரணம் அவளுக்கான அவன் துடிப்பு. ஆனால் அவனுக்கோ காரணமின்றி தோன்றிய உணர்வு அவன் மனதையும் மீறிய உணர்வு அதனால்தான் அவளுக்காய் ரோடுரோடாய் திரிந்தான். பெண்ணவளின் மனதில் அவன் தோன்றுமுன்னோ அவன் மனதில் அவள் சிம்மாசமிட்டிருந்தாளே.

ஆணவன் அவள் தோள் சாய்ந்துவிட்டான் தன்னை கட்டுபடுத்திட முடியாமல்.

ரிதா……ரிதா……ரிதா….. அவள் நாமம் மட்டுமே ஜபித்தான். வேறு வார்த்தை வரவில்லை. அவளும் தாரமாய் அவனை தாங்கினாள். அவள் நெஞ்சில் முகம் புதைத்து அழுதான். இத்தனைநாள் மறைத்த உணர்வு இன்று வெளிப்படுவிட்டதே.

” ரிதா நான் உன்னை எப்போ காதலிக்க ஆரமிச்சன்னு எனக்கே தெரியாது ஆனா உனக்கு காதல்வரதுக்கு முன்னாடியே நான் உன்னை விரும்புன உன் கண்ணுல எனக்கான காதல் தெரிஞ்ச அந்தநொடி நான் எவ்ளோ சந்தோஷபட்டன் தெரியுமா  இந்த உலகத்துலயே ரொம்ப மகிழ்ச்சியான மனுஷனா உணர்ந்தன் ரிதா ஆனா இது சரிவராதுன்னு ஒதுங்கிபோனா நீ என்னை தேடிவர இப்போ உன்கிட்ட சொல்லவும் வெச்சிட்டியே டி. ஐ லவ் யூ டி ஐலவ் யூ சோ மச் டி உன்னை இங்க வெச்சி தாங்கனும்டி ” என்று அவன் நெஞ்சத்தை காட்டிட அவள் அவனுள் புதைந்துக்கொண்டாள்.

இறுக்கமாய் அனைத்துக்கொண்டவன் கூறினான் அவளிடம் ” உன்னை ராணிமாதிரி வெச்சிகனும் டி உனக்கு உன்னோட காதலுக்கு நான் அடிமையா இருக்கனும்  தினம்தினம் சேவை பண்ணனும் டி அணுஅணுவா உன்னை என்னுல கலந்துக்கனும் டி ரிதா. “

அமிக்கோ அதிர்ச்சிமேல் அதிர்ச்சி. அவன் காதலிகிறானென தெரியும் ஆனால் இந்த அவளவிற்கு காதலிக்கிறானென அவளுக்கு தெரியாதே. அவள் ஐந்து வருட காதல் அவளுக்கு கிடைத்துவிட்டது. அவன் நெஞ்சத்தில் அவள். இதுபோதுமே இதற்காய்தானே இத்தனை போராட்டம்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு………

முருகன் கோவிலில் மூர்த்தியும் அவர் மனைவி மாலாவும் பதட்டதோடு நின்றிருந்தனர்.

ரதி கண்களில் கண்ணீரோடு ஒரு மூளையில் ஓரமாய் ஒடுங்கியிருந்தாள்.

தீபனோ கோவத்தை எங்கு காட்டுவது என்ன செய்வது என்று அறியாமல் கடுப்பிலும் கையாளாகத்தனத்திலும் நின்றிருந்தான் கைகளில் கட்டுகளோடும் முகத்தில் காயங்களோடும்.

எல்லாவற்றிர்கும் காரணமார அஜ்ஜூவோ எனக்கென்ன என்பதுபோல் கோவிலுள்ள பெண்களை சைட் அடித்துக்கொண்டு இருந்தான்.

யாழி அழகாய் தயாராகி மாலையை கையில் வைத்திருந்தாள்.

அமிர்தா தயாளினியை அழைத்துவந்தாள். ஆகாய நீலவண்ண பட்டில் மணமகளுக்கான அலங்காரத்தோடு வந்தமர்ந்தாள் தயாளன் அருகில்.

மாலையை இருவருக்கும் மூர்த்தி மாலா இருவரும் அணிவித்தனர்.

ஐயர் மந்திரங்கள் ஓதிட கருமமே கண்ணாய் தயா மந்திரங்களை சொல்லிக்கொண்டிருந்தான். தயாளினியோ முகத்தில் எந்த ஒரு உணர்வுமின்றி அமர்ந்திருந்தாள்.

ஐயர் தாலி எடுத்துகொடுக்க தயாளன் அதனை தயாளினியின் கழுத்தில் கட்டிட மூர்த்தி மாலா அட்சதைதூவிட மற்ற அனைவரும் கைதட்டி வாழ்தினர்.

தயா தாலி கட்டிக்கொண்டே தயாளினியை காதில் சொன்னான் இப்போ நீ எனக்கு கீழதான டி என் முன்னாடி உன்னை தலைகுனிய வெச்சிட்டன் பாத்தியா நான் ஆம்பளை டி விட்ட சவால்ல ஜெயிச்சிட்டன் என்றான்.

தயாளினூயோ உள்ளே உடைந்து நொறுங்கியிருந்த மனதை மீண்டும் கல்கொண்டு நொறுக்குவதைப்போல் உணர்ந்தாள்.

அமிர்தாவோ ஏக்கமான விழிகளோடு வசீமை ஏறிட்டாள். இந்த பாக்கியத்தை எனக்கு தரமாட்டாயா என்பதைபோல.

அவனோ முக்ததை திருப்பிக்கொண்டு சென்றான்.

பல திருப்பங்களோடு அடுத்தடுத்த பதிவுகள்……கருத்து சொல்லிவிட்டுபோங்க சகோஸ் சகீஸ்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment