
காதல் -41
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மலை முகடுகள் .. ஆட்கள் நடமாட்டம் கம்மியாக இருந்த அந்த உச்சிப் பகுதியில் உள்ள சின்ன ஷாப்பில் வெளியே போடப் பட்டிருந்த சேரில் டீ குடித்து கொண்டிருந்தனர் இருவர்.
இஞ்சி டீயை விரும்பிக் குடித்துக் கொண்டிருந்தான் அகரன் … அவனுக்கு எதிரே புதினா டீயை குடித்து கொண்டிருந்தான் மறவன்.
இருவரும் வந்து பத்து நிமிடங்கள் ஆகி விட்டது .. தற்போது வரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை.. ஒருவரை ஒருவர் கண்களாலேயே அளந்து கொண்டிருந்தனர்.
திருப்தியாக இஞ்சி டீயை குடித்து முடித்து கப்பை கீழே வைத்த அகரன்.. கைகள் இரண்டையும் தூக்கி சோம்பல் முறித்து கொண்டு… ” அப்பறம் நான் வந்ததுக்கான காரணம் உனக்கு தெரிஞ்சுடுச்சு போலையே ” என பார்வையை மலைகளில் மீது பதித்த வண்ணம் கேட்டான்.
ஒரு சிப் டீயை பருகிய மறவன்… ” இன்னும் ஏன் உன்ன உயிரோட விட்டு வைக்கனும்னு யோசிச்சுட்டு இருக்கேன் ” என சாவகாசமாக பதில் அளித்தான்.
அதில் அகரன் முகம் மாற… ” அவ்வளவு திமிரு வந்திருச்சா.. இத்தனை நாள் இல்லாம இன்னைக்கு என்ன கொலை பண்ணுற அளவுக்கு யோசிக்கிற, எல்லாம் உன் பொண்டாட்டி கொடுக்குற தைரியம் ரைட் ” என கூர்ந்து பார்த்தான்.
மெல்லிய புன்னகையை உதட்டில் சிதற விட்டவன்… ” நமக்குள்ள நடக்குற எதுவும் என் யாழிக்கு தெரியாது… சம்மந்தம் இல்லாம அவளை உள்ளே கொண்டு வராத ”
” அப்போ திடீர்னு என்ன பார்க்க கூப்பிட்ட காரணம் என்ன ?” என சந்தேகமாக கேட்டான் அகரன்
” ஏன் உனக்கு தெரியாதா ?”
” பல விஷயம் இருக்கு.. நீ எதை கேட்குற ”
” நேத்து நான் அப்பா பிஸ்னஸை கொடுக்க முடியாதுன்னு சொல்லிருந்தா நீ என்ன பண்ணிருப்ப ?” என அகரனை வெட்டும் பார்வை பார்த்தான் மறவன்.
மலை உச்சி அதிர சிரித்தவன்… ” ஸ்மார்ட்… கண்டு பிடிச்சுட்ட போல .. ” என மேலும் நன்றாக அமர்ந்து மறவனிடம் டீல் பேசினான் அகரன்.
” எஸ்.. நீ நினைக்கிறது தான் ரீசன்.. நீ அந்த பிஸ்னஸை விட்டு வெளிய வரலைன்னா … ” என சற்று நிறுத்தி தன் தமையனின் முகம் பார்த்தவன்… ” சாயா அப்பா தப்பு பண்ணாம தண்டனை அனுபவிச்ச விஷயத்தை உன் யாழி கிட்ட சொல்லிருப்பேன் ” என சற்றும் ஈவு இரக்கம் இல்லாமல் பேசும் அவனை முகம் இறுக பார்த்து வைத்தான் மறவன்.
” இதுனால உனக்கு என்ன கிடைக்க போகுது ”
” ஏன் கிடைக்காது, இப்போ இந்த விஷயம் என்கிட்ட இருக்குறதுனால தான் பிஸ்னஸ் எனக்கு கிடைக்க போகுது… இனிமேலும் கிடைக்கும் ” என அழுத்தமாக கூறும் தன் அண்ணனை வெறுமையாக பார்த்தான் மறவன்.
கூட பிறந்த பிறப்பு என்று சொல்வதற்கே மனம் கனத்தது. சிந்தாமணியின் வளர்ப்பில் நன்றாக வளர்ந்தவன் தான் அகரன்.. ஆனால் எப்போது விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார்களோ அப்போது இருந்து தான் இந்த மாற்றம்.. சேர்க்கை சரி இல்லாமல் தகாத நண்பர்களை கூட்டு சேர்த்து கொண்டு அனைவரிடமும் வன்மத்தை வளர்ந்து கொண்டான்
அந்த நேரம் மூர்த்தி சிந்தாமணி இருவரும் ஆளுக்கு ஒரு பிஸ்னஸில் இறங்கி இருந்தனர். பிஸ்னஸ் சூடு பிடிக்கும் தருணம் அது. அதனால் அவர்களது மொத்த கவனத்தையும் அதன் மீது செலுத்தி விட்டு பிள்ளையை கவனிக்க தவறி விட்டனர்.
விடுதியில் தங்கி படிப்பதால் நன்றாக படிப்பான், நல்ல பழக்க வழக்கம் கிட்டும், நல்ல மதிப்பெண் வரும் என சிந்தாமணி நினைத்து விட, அதற்கு நேர்மாறாக நடந்தது …
மறவன் பிடிவாதமாக விடுதி செல்ல மாட்டேன் என வீட்டில் இருந்த வண்ணமே பள்ளி கல்லூரியை முடித்தான்… அதில் தமிழின் மேல் ஆர்வத்தில் இலக்கண இலக்கியங்களை விரும்பி படித்து தற்போது ஒரு எழுத்தாளராக மாறி உள்ளான்.
ஆனால் அகரனின் நிலை??? இதில் யாரை தவறு கூறுவது ..
” என்னோட தமிழ் காதலன்ற பெயரையே உனக்காக விட்டு கொடுத்திருக்கேன்.. இதுக்கு மேலே என்ன செய்யனும்னு நினைக்கிற ”
” யாருக்கு வேணும் உன் தமிழ் காதலன் பெயர்… நான் தப்பு கணக்கு போட்டுட்டேன் மறவா… பெயர் பெருமை இருந்தா போதும் காசு நம்மளை தேடி வரும்னு நினைச்சேன்.. ஆனால் அது உண்மை இல்ல.. இப்ப காசு இருந்தா தான் எல்லாம் நம்ம பக்கம் வரும்னு புரிஞ்சு கிட்டேன்.. ”
” அதுனால ”
” தமிழ் காதலன் பெயரை வச்சு என்னால ஒன்னும் பண்ண முடியாது… அதே நேரம் பணம் இருந்தா என் காலடியில தான் எல்லாரும் ” என பகட்டாக பேசினான்.
” இப்ப இந்த உலகத்துக்கு நீ தான் தமிழ் காதலன்.. உன்ன தான் எல்லாரும் பார்த்து இருக்காங்க… இப்போ இந்த பெயர் வேணாம்னு சொன்னா என்ன அர்த்தம் ”
” வேண்டாம்னு அர்த்தம்… இப்போவே பிரஸ் மீட் வை… நீதான் தமிழ் காதலன்னு சொல்லுறேன் ” என அசால்ட்டாக தோளை குலுக்கினான் அகரன்..
“அந்த உரிமையை வாங்குறதா இருந்தா நான் எப்பவோ வாங்கி இருப்பேன்… ஆனால் என் ஐடெண்டியை திருடுனது கூட பிறந்த அண்ணன் ” என எரிச்சலாக கூற…
” சோ வாட்… இப்போ அதே அண்ணன் தான் சொல்லுறேன்… பெயர் உனக்கு, பணம் எனக்கு ”
” அப்பா பிஸ்னஸ் எல்லாத்தையும் வர மன்டே ரிஜிஸ்டர் பண்ணலாம்… ஆனால் இதுக்கு அப்பறம் இந்த குடும்பத்துக்கும் உனக்கும் சம்மந்தம் இல்ல… நீ இனிமே எங்களை தேடி வர கூடாது … இந்த முறை என்ன முட்டாளாக்க நினைக்காத அகரா ” என முடிவாக பேச… ” எனக்கும் இந்த குடும்பம் தேவையில்லை ” என போனை எடுத்து கொண்டு கிளம்பினான் அகரன்..
**
“ஏன் முகமே வாடி இருக்கு… வீட்ல உள்ள பிரச்சனை எல்லாம் சரி ஆகிடும் சாயா.. நீ மனசை போட்டு குழப்பாத… இப்போதான் நல்ல வழி உனக்கு கிடைச்சு இருக்கு… அதை தக்க வச்சுக்க ” என அனைத்தையும் அறிந்து கொண்டு தேனு தன் மகளுக்கு அறிவுரை கூறினார்… சாயாலி வந்த சிறிது நேரத்திலேயே நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு மூர்த்தியை பார்த்து விட்டு சிந்தாமணியிடமும் பேசி விட்டு தான் வந்தார்.
மேஜை மீது இருந்த தமிழ் காதலன் புத்தகத்தை எடுத்து நெஞ்சோடு அணைத்தவளுக்கு கண்ணீர் தான் நின்ற பாடில்லை… இதுவரை தன் பாரத்தை போக்கிய இந்த புத்தகமே தற்போது அவளுக்கு பாரமாக வந்து நின்றது.
‘ இதுல உள்ள ஒவ்வொரு வரியும் என் உயிருல கலந்திருக்கு மறவன்… வரிகளை படிச்ச வாசகியாவே இந்த ஆள் மாறாட்டத்தை தாங்கிக்க முடியலை.. உங்கனால எப்படி முடியுது ‘ என மனதிற்குள் ஆயிரம் முறையேனும் கேட்டுக் கொண்டாள் சாயா..
” நீ என்ன முடிவு பண்ணிருக்க சாயா.. ” என தேனு அமைதியாக கேட்க..
” யோசிக்கனும் மா ” என தன் நெஞ்சோடு இருக்கும் புத்தகத்தை பார்த்தாள்… ஏனோ அது புத்தகமாக இல்லாமல் அவள் கண்களுக்கு அது கணவனாக தெரிந்தது.
வாசலில் மறவனது கார் சத்தம் கேட்டதும்… வேகமாக புத்தகத்தை மேஜை மீது வைத்து விட்டு , எதிர் வீட்டை நோக்கி சென்றாள் சாயா.. ” யோசிக்கனும்னு பதில் சொல்லிட்டு இப்போ கார் சத்தம் கேட்கவும் ஓடுறதை பாரு ” என தேனு அவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்.
இனிமேல் அவருக்கு சாயாலியை பற்றி எந்த கவலையும் இல்லை. எல்லாம் தன் மருமகன் பார்த்து கொள்வான் என மன நிம்மதியுடன் கோவிலுக்கு கிளம்பினார்.
காரை விட்டு இறங்கிய மறவன் எதிர்வீட்டில் இருந்து வேகமாக ஓடி வரும் தன் மனைவியை பார்த்து… ” ஹேய் யாழி எதுக்கு இப்ப இவ்வளவு வேகமாக ஓடி வர … என்னாச்சு ” என அவனும் பதட்டமாக கேட்க.. என்ன சொல்வாள் அவனிடம்…
” அது வந்து … வந்து… அத்தை கூப்பிட்ட மாதிரி இருந்துச்சு ” முதல் முறையாக அவள் பேச்சில் தடுமாற்றம்… அவனது கண்களை பார்த்து பேச தைரியம் அற்று தரையை பார்த்து பேச… நமட்டு சிரிப்புடன் தன் மனைவியை பார்த்தவன்… ” சரி வா.. ரொம்ப தலை வலியா இருக்கு .. ஒரு டீ கிடைக்குமா ” என்றதும் வேகமாக தலை ஆட்டி விட்டு நேராக அடுக்களைக்கு சென்றாள்.
சிந்தாமணி மூர்த்தியை கவனித்து கொண்டு அந்த அறையில் இருக்க, சாயா சுட சுட டீயை போட்டு கொண்டு தயங்கிக் கொண்டே மறவனது அறை வாசலில் நின்றாள்..
வாசலில் நிற்கும் சாயாவை பார்த்தவன்.. ” இன்னும் உள்ள வர உன் மனசு இடம் கொடுக்கலையா யாழி … ” என இரட்டை அர்த்தத்தில் கேட்க… அதன் பின்பே டீயை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்..
அவன் கேட்பது எல்லாம் புரியாமல் இல்ல.. எந்த அர்த்தத்தில் அவன் கேட்டாலும் பதில் ஒன்று தானே.. டீயை வாங்கி அங்குள்ள மேஜையில் வைத்தவன்… மெத்தையில் அமர்ந்து அவளையும் அருகே அமர்த்தி கொண்டான்.
அவன் முகம் வாட்டமாகவே இருந்தது…
” என்னாச்சு உங்க முகமே நல்லா இல்ல… எதுவும் பிரச்சனையா .. ??”
” ம்ம் பிரச்சனை இல்லாம எப்படி இருக்கும்… என் பொண்டாட்டியை கட்டிக்க என்கிட்டையே ஒருத்தன் உதவி கேட்குறான்…” என மறவன் கூறியதும் விலுக்கென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள் சாயா.
” ஹேய் நான் ஒன்னும் பொய் சொல்லலை மா… அந்த தினேஷ் உனக்காக தான் காத்துகிட்டு இருக்கான்…நீ லேசா தலை அசைச்சா போதும் தூக்கிட்டு போய் தாலி காட்டுவானாம் ” என்றதும் மூக்கு விடைக்க அவனை முறைத்து வைத்தாள் சாயா..
” அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க ” என தன் கோபத்தை அடக்கி கொண்டு கேட்டாள் சாயா.
” பொறுமையா இரு.. அந்த பொண்ணு கிட்ட பேசி பார்க்கலாம்னு சொல்லிருக்கேன் ” என்றதும் வந்ததே கோபம்… விருட்டென்று மெத்தையில் இருந்து எழுந்து அறையை விட்டு வெளியே செல்ல முயன்றவளை.. கை பிடித்து தடுத்தவன்.. அறை கதவையும் பூட்டினான்.
” என்ன பண்ணிட்டு இருக்கீங்க மறவன்… என்ன விடுங்க ”
” விடுறதுக்கா பிடிச்சுருக்கேன் ”
” அதான் பேசி பார்க்குறேன்னு சொல்லிட்டு வந்திருக்கீங்கல ”
” இனிமே பேசுறதுக்கு வேலையே இல்ல… செஞ்சு பார்த்துடலாம்னு இருக்கேன் ” என பிடித்த கையை இழுக்க.. அவன் நெஞ்சில் வந்து விழுந்தாள் சாயா..
அவனது அதிரடியாக ரொமான்ஸ் காட்சிகளை எல்லாம் தாங்க முடியாமல் அவள் உடல் நடுங்க… ” முடியலை சாயா… நானும் மனுஷன் தான் .. தப்பு பண்ணிட்டேன்.. இல்லனு சொல்லலை.. தப்புக்கு மன்னிப்பு கேட்டு இவ்வளவு தூரம் வந்துட்டோம்.. உன் மனசுல நான் இல்லனு சொல்லு பார்ப்போம், அப்படி நான் இல்லைனா உன் கூட நான் இவ்வளவு நெருக்கமா நிற்க முடியுமா… இல்ல நிற்க தான் விடுவியா.. ”
தலை தாழ்த்தி இருந்தவளின் தாடையை பிடித்து முகம் நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தவன்… ” என் மனசு முழுக்க நீதான் சாயா இருக்க, என்னால நீ இல்லாத ஒரு வாழ்க்கையை நினைச்சு பார்க்க முடியலை… இந்த ஒரு வருஷ பிரிவு நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு கத்து கொடுத்துடிச்சு … இதோ நீ இப்படி நிக்கும் போதும் உன்ன கிஸ் பண்ண தோணுது… நெருங்கி வரும் போது கட்டி பிடிக்க தோணுது, இதெல்லாம் தோணுறது என் தப்பு கிடையாது.. இதெல்லாம் இயற்கை… முதல்ல உன்ன மனசால நெருங்க நினைச்சேன்…. ஆல்மோஸ்ட் நெருங்கிட்டேன் ” என்று அவள் முகம் பார்க்க… அவளோ மகுடிக்கு மயங்கிய பாம்பை போல அவனது கைச் சிறையில் நின்று கொண்டிருந்தாள்.
சனா💖

