
அத்தியாயம் 38
“அப்பா எங்கம்மா? சுஜா பாட்டிகிட்ட போகணும். முத்தச்சி எங்க இருக்காங்க?” தினமும் கேள்விக் கணைகளை அடுக்கத் தொடங்கினாள் அமையா.
‘அப்பா ஜெயிலுக்குப் போயிருக்காரு என்று எப்படிச் சொல்வது?’
“இனி உனக்கு அப்பா இல்ல அமையா…” அன்விதாவின் கூற்றில் அவள் விழிகளை உருட்டுவாள்.
பிரணீத் அமையாவைப் பார்க்க வரும்போது அவனிடம் தாவிக் கொள்பவள், “சித்தப்பா, அமையாக்கு அப்பா இல்லையா?” என உதட்டைப் பிதுக்கிட அவனுக்குத் தான் ரணமாக இருக்கும்.
“சித்தப்பா இருக்கேன்லடா…” என்றபடி அவளை வெளியில் அழைத்துச் சென்று மனத்தை மாற்றச் செய்வான்.
சில நேரம் “நீயும் வா சிட்டு” என பிரணீத் அழைக்க, அவள் வேலை இருப்பதாகத் தவிர்த்து விடுவாள்.
உண்மையில் அவளது மொத்த அழுத்தத்தையும் வேலையே விழுங்கிக் கொண்டிருந்தது.
அது புரிந்ததனாலோ என்னவோ, அவளை அதிகம் அவன் தொந்தரவு செய்யவில்லை என்றாலும், அவனுக்கு அவளை எப்படி அணுகுவது என்றே புரியவில்லை.
முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றாலும் புரிய வைக்கலாம். அவளோ வெகு இயல்பாகப் பேசுகிறாள். அகமொழி வீட்டார்களுடனும், அவளது நண்பர்களுடனும் ஒட்டுதலாகிக் கொண்டாள்.
அவளைப் பற்றிய சிந்தனையிலேயே, அவளிடம் மனம் விட்டுப் பேசும் நாளுக்காகக் காத்திருந்தான் பிரணீத்.
அன்று, கிளாம்பிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருக்க அன்விதா மட்டும் அங்குப் போடப்பட்டிருந்த தடுப்புக் கம்பியைப் பிடித்தபடி நின்றிருந்தாள்.
“என்ன சிட்டு… உன்னைச் சுத்தி ஒரு கும்பல் இருக்குமே. அதைக் காணோம்?” கேலியாய் கேட்டபடி அவளிடம் வந்தான் பிரணீத்.
அதில் புன்னகைத்தவள், “இன்னைக்கு அமையாக்கு லீவ். காலைலயே சுஜா அம்மாவைக் கேட்டு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டா. அவள் மனசை மாத்த மூணு பேரும் அவளை அவெஞ்சர்ஸ் படத்துக்குக் கூட்டிட்டுப் போயிருக்காங்க.” என்றாள் பெருமூச்சுடன்.
“விஷ்ணுவும் இப்ப அங்க இல்ல. ஒரு தடவை அங்க போய் எல்லாரையும் பார்க்கலாம்னு நினைச்சா அர்ஜி வேணவே வேணாம்னு சொல்றாரு…”
“ம்ம்… அங்க அம்மா, எல்லாரும் உடைஞ்சிருக்காங்க சிட்டு. இந்த நிலைமைல உங்களை ஃபேஸ் பண்ணவும் அவங்களுக்குத் தைரியம் வேணும்ல.”
“புரியுது. அதுக்காக இன்னும் எவ்ளோ நாளைக்கு இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம்?” அவள் வருத்தமாகக் கேட்க,
“அதே நானும் கேட்குறேன். இன்னும் எவ்ளோ நாளைக்கு என்கூட நீ கண்ணாமூச்சி ஆடப்போற?” என்றான்.
அதில் நிதானமாக அவனை நிமிர்ந்து பார்த்தவள், “நான் உங்கிட்ட பேசணும்னு தான் நினைச்சேன் பிரணீ. இந்த வேலையை எல்லாம் முடிச்சுட்டு ப்ரீயா பேசலாம்னு வெய்ட் பண்ணேன். எனக்கும் கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு…” அவளது நிதானம் அவனைப் பயமுறுத்தியது.
‘கண்ணில் நீரோ, முகத்தில் சலனமோ எதுவும் இல்லை. அதுவே அவனைப் பலவீனப்படுத்தியது. அதிகமாக இறுகி விட்டாளோ? எப்படிக் கரைப்பது? எப்படித் தான் அவளுக்குத் தனது நேசத்தைப் புரிய வைப்பது? தெரியாதவளென்றால் சொல்லிப் புரிய வைக்கலாம். அவளுக்கு, தனது நட்பும் புரியும், நேசமும் புரியும். இதில் அவளை எங்கனம் சரி செய்வது?’ எனக் குழம்பி அழுத்தத்திற்குள்ளானான்.
“இப்ப பேசலாமே?” பிரணீத் தொண்டையைச் சரி செய்து கொண்டு கேட்க, “ம்ம்…” என்றவள் தூரத்தில் தெரிந்த இயற்கையின் கை வண்ணத்தைப் பார்த்தாள்.
“இப்பக் கூட நீ என்னை லவ் பண்றியா பிரணீ?”
அவளது கேள்வியில் முறைத்தவன், “இப்ப இல்ல எப்பவுமே!” என்றான்.
“நான் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறமும் லவ் பண்றது தப்பு இல்ல?”
“என் லவ் உன்னை எந்த விதத்துலயும் பாதிச்சா தான் தப்பு. லவ்வுன்ற ரிலேஷன்ஷிப் தாண்டி நீ என் பெஸ்டி. உன் லைஃப் நல்லாருக்குன்னா அதைப் பார்த்துச் சந்தோஷப்படுற ஆளும் நானா தான் இருப்பேன். உன்னையும் உன் காதலையும் குட்டிச் சிட்டுவையும் என்னைக்கும் நான் பொறாமையாவோ, எரிச்சலாவோ பார்த்தது இல்ல.
சில நேரம் என்னோட தனிமை என்னை முழுங்கும்போது உன் ஞாபகம் அதிகம் வரும், ஒத்துக்குறேன். அந்த நேரத்துல என்னை மீறி அதிகமா குடிச்சுடுவேன். உன்னை மறந்து, என்னை மறந்து தூங்குற வரை…” என்றவனைக் கண்ணெடுக்காது பார்த்தாள்.
“ஒருவேளை, உனக்குன்னு ஒருத்தி வந்திருந்தா இந்த ஃபீலிங் மாறி இருக்கும் பிரணீ…””
“மே பி… மாறிருக்கலாம். ஆனா, உன்னைக் கடந்து இன்னொரு பொண்ணை என் லைஃப்குள்ள, என் மனசுக்குள்ள கொண்டு வர நான் இன்னுமே தயாராகல. இப்ப நீ உன் கஷ்டத்தை மறைக்க வேலைல புதைஞ்சுக்குற மாதிரி தான், உன்னை இழந்த வேதனையை மறைக்க நானும் நைட்டு பகல்னு பார்க்காம மாடு மாதிரி உழைச்சேன்.
உண்மையா அது எனக்கு ஆறுதல் குடுத்துச்சான்னு தெரியாது. ஆனா, ஒரு தன்னம்பிக்கையையும், அந்த வெறுமையான நாள்களை ஈஸியா கடத்துறதுக்கும் ரொம்ப உதவி பண்ணுச்சு. இப்ப அதே தான நீயும் செய்யற. உனக்கு இது ஆறுதல் குடுக்குதோ இல்லையோ, இந்தக் கஷ்டமான சூழ்நிலையைக் கடக்க உனக்கு முழுப் பலமா இருக்கு இந்த வேலை. இந்தப் பலத்தை என் காதலும், நட்பும், கண்டிப்பா தராதுன்னு எனக்குப் புரிஞ்சு தான், உங்கிட்ட எதைப் பத்தியும் நான் பேசிக்கல…” என்றவனைச் சிறு முறுவலுடன் பார்த்தாள்.
அவனது புரிதல் அவளுக்குப் பழக்கம் தான்.
“ரொம்ப கஷ்டப்பட்டியா பிரணீ?” தலை சாய்த்து அவள் கேட்ட விதம், அவன் விழிகளைக் கலங்க வைத்தது.
“இப்ப அதை விட கஷ்டமா இருக்கு சிட்டு. உன் லைஃப் நல்லா இருக்கக் கூடாதுன்னு ஒரு நாளும் நான் நினைச்சது இல்ல. இப்ப உன்னோட இந்த அழுத்தம் அதை விடப் பயமா இருக்கு.” தொண்டை அடைக்க உரைத்தான்.
“நான் என்ன அழுத்தமா இருக்கேன், எப்பவும் போல தான் இருக்கேன்.” அவளது இயல்பில் அவன் தளர்ந்து போனான்.
“சரி, இப்ப என்ன தான் முடிவு பண்ணிருக்க?” மூச்சை இழுத்துப் பிடித்துக் கேட்டான்.
“நீ சொல்லு, உன் முடிவு என்ன?” அவள் கேள்வியைத் திருப்பி இருக்க, விட்டால் அழுது விடுவான் போலும்.
“என்னால இதுக்கு மேல உன்னை இழக்க முடியாது அனு. ப்ளீஸ், என்கிட்ட வந்துடேன். மனசளவுல ரொம்பப் போராடிட்டேன். உன்னையும், குட்டிச் சிட்டுவையும் நான் பத்திரமா பார்த்துப்பேன்… ப்ளீஸ் சிட்டு…” என்றான் கெஞ்சலாக.
அவனை அமைதியாக ஏறிட்டவள், “இது நீயும் நானும் முடிவு பண்ற விஷயம் இல்ல பிரணீ… ஏற்கெனவே என் வீட்ல இருந்து என்னைத் தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க. எந்தக் காரணத்தைக் கொண்டும் அவங்க வீட்டுக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. உன் சைட்ல, உன் தங்கச்சிக்கு இப்ப தான் மாப்பிள்ளை பார்த்திருக்க. அங்கிள் ஆண்ட்டி, வேணி குடும்பம்னு எல்லாருக்கும் மனஸ்தாபம் இருக்கும். அது வேணி வாழ்க்கையையும் பாதிக்கும்.” என்றதில்,
“நான் எல்லார்கிட்டயும் ஏற்கெனவே பேசிட்டேன். உன்னைக் கல்யாணம் பண்ணிக்க வேற எந்த கவுசிக்கும் குறுக்க வரக்கூடாதுன்னு முன்னாடியே என் ஃபேமிலி, வேணி ஃபேமிலின்னு எல்லார்கிட்டயும் பேசிட்டேன். எல்லாரும் முழு மனசோட ஒப்புதல் கொடுத்தாச்சு…” என்றான்.
அதில் சிறு வியப்பு கலந்து பார்த்தாள்.
பின் அவனே, “உன் வீட்ல என்னைக்கு ஒழுங்கா நடந்துக்கிட்டாங்க. ஒருவேளை, அவங்க எதிர்பார்க்குற காசு இல்லாம இருந்திருந்தா என்கிட்ட சண்டைக்கு வந்திருக்கலாம். இப்பக் காசு இருக்குறனால வந்து பேசப் பயப்படுவாங்க. சிலர் வெறும் பணத்துக்குத் தான மரியாதை கொடுக்குறாங்க…” என்றதில், “நானுமா?” என்றாள் சிறு கேலி மின்ன.
“ஏய் அரை லூசு… என்கிட்ட எதுவுமே இல்லாத நேரத்துலயும் உன் கால்ல விழுந்து காதலைச் சொல்லிருந்தா, நீ என்னைக் கண்டிப்பா அக்செப்ட் பண்ணிருப்ப. வாழ்க்கைல எதையும் சாதிக்காம, வெறும் காதலை வச்சு வாய் வார்த்தைல நம்பிக்கை குடுக்குறதுல எனக்கு விருப்பம் இருந்தது இல்ல.”
“அவ்ளோ நம்பிக்கையா நான் ஓகே சொல்லிருப்பேன்னு?”
“ஓகே சொல்லிருக்க மாட்டியா?” அவன் அவளது விழி தீண்டி வினவ, இருவரது பார்வையும் ஒரு கணம் மின்சாரமாய் தீண்டிச் சென்றது.
சட்டெனப் பார்வையை மாற்றிக் கொண்டவள், “நான் ஏன் வேற காலேஜ் போனேன்னு உனக்குத் தெரியுமா?” என ஆரம்பித்தாள்.
“உன் வீட்ல ஃபோர்ஸ் பண்ணுனதுனால தான?”
“ஏன் ஃபோர்ஸ் பண்ணாங்கன்னு தெரியுமா?” என்றதில் அவன் புருவம் சுருக்கினான்.
“உனக்கு சீட் கிடைச்ச காலேஜ்ல, எனக்கும் சீட் கிடைச்சுது. ஆனா, என் சித்திக்கு நான் உன்கூடப் பழகுறது பிடிக்கல. உன்னை ரொம்ப மட்டம் தட்டிப் பேசுனாங்க.” என்றவள், அன்றைய நினைவிற்குச் சென்றாள்.
அவளது சித்தி ரமணி, தந்தையிடம் முறையிட்டதைத் திகைத்துப் பார்த்திருந்தாள் அன்விதா.
“என்ன இருந்தாலும் ஒரு ஆம்பளைப் பையனோட அவள் பழகுறது எனக்குப் பிடிக்கல. நாளைப் பின்ன அவனைப் பிடிச்சிருக்குனு வந்து நின்னா, ஒன்னும் இல்லாதவனுக்குக் கல்யாணம் செஞ்சு வைப்பீங்களா? இங்க பாருங்க, என்னோட கடமையை நான் செய்வேன். அவளுக்கு நாளைக்குப் பிள்ளைப் பேறுன்னு வந்தா நான் பார்த்துக் குடுப்பேன். அவ்ளோ தான். அதைத் தவிர்த்து, சொத்தும் சுகமும் இல்லாதவனுக்குக் கல்யாணம் பண்ணிக் குடுத்து, ஒண்ணொண்ணுக்கும் அவள் இங்க வந்து நிக்கிறதுலாம் எனக்குப் பிடிக்காது. இப்பவே சொல்லிட்டேன். முதல்ல அவளை வேற காலேஜ்க்கு வேற ஊருக்கு மாத்துங்க…”
அன்விதா முகம் இறுகிப் போனாள்.
“கவலைப்படாதீங்க சித்தி. அவனை என்னைக்கும் நான் கூட்டிட்டு வந்து இங்க நிறுத்த மாட்டேன். அவனுக்கு மரியாதை இல்லாத இடத்துல தகுதி இல்லாதவங்க முன்னாடி, அவனை வந்து நிறுத்த எனக்குப் பைத்தியம் இல்ல”
ஒற்றை வார்த்தையில் அவன் மீதிருக்கும் அபார அன்பையும், அவனது தன்மானத்தின் மீதிருக்கும் அழுத்தத்தையும் கொட்டி இருந்தாள்.
“அதுக்கு அப்புறமா தான் நான் திருவனந்தபுரம் வந்தேன்… உன்மேல நட்பைத் தாண்டி ஒரு உணர்வு இருந்துச்சுன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். நீ’ன்னா என் அப்பா அம்மானு எல்லாரையும் தாண்டி ஒரு ஸ்பெஷல். எனக்குன்னு எப்பவும் எந்த நிலைமைலயும் நீ இருப்ப… அந்த நம்பிக்கையை உன் நட்பு எனக்கு எப்பவும் கொடுத்துச்சு ப்ரணீ.
இப்பக் கூட… எனக்கும், விஷ்ணுவுக்கும் சண்டை வந்தப்பவும் நான் அதையே தான் அவன்கிட்ட நிமிர்வா சொன்னேன். ‘இப்ப இதெல்லாம் வேணாம்னு உதறித் தள்ளுனா கூட என்னையும், அமையாவையும் அவன் குடும்பமா நினைச்சுப்பா’ன்னு நான் சொல்லிருக்கேன்…” என்றவளை நெகிழ்வுடன் பார்த்தான்.
பேச்சிழந்த நிலை அவனுக்கு.
அவளே தொடர்ந்து, “ப்ரணீ… இது ரொம்ப காம்ப்ளிகேட். அமையாவுக்கு அப்பான்னு ஒருத்தன் செத்துப் போயிருந்தா கூட அவன் செத்துட்டான்னு சொல்லி மறக்க வச்சுடலாம். ஜெயில் கைதியா போயிருக்கான். அதுக்கு மாறா அவனோட குடும்பமே அவள் மேல அன்பைப் பொழிஞ்சுருக்கு. யாரையும் வெறுக்கத் தெரியாத வயசு அவளுக்கு.
சரி அவளை விடு, நான்… நான் அவனை உண்மையா காதலிச்சேன் ப்ரணீ. எனக்குன்னு ஒரு குடும்பச் சூழ்நிலையை, எனக்குன்னு ஒரு அன்பை அவன் குடுப்பான்னு நம்புனேன். ஆனா, என் பிறந்த வீட்ல யாரோ மாதிரி இருந்த மாதிரி தான், என் புகுந்த வீட்லயும் என்னை இருக்க வச்சுட்டான்…” எனக் கண் சிமிட்டிக் கண்ணீரை உள்ளிழுத்தாள்.
“சிட்டு…” அவன் இடைமறிக்க, “ப்ளீஸ், இடைல பேசாத…” என்று நிறுத்தியதில் அவனும் அமைதி காத்தான்.
“மேரேஜ் லைஃப் இவ்ளோ பயத்தோட, இவ்ளோ அழுத்தத்தோட இருக்கும்னு நான் சுத்தமா எதிர்பார்க்கல. இப்ப கொஞ்ச நாளா தான் நான் நல்லா தூங்குறேன். எந்தப் பயமும் இல்லாம. என்ன இருந்தாலும் நான் அவன்கூட வாழ்ந்திருக்கேன் ப்ரணீ…” எனும்போதே அவன் மீண்டும் பேச வர, “உன்னைப் பேசாதன்னு சொன்னேன்.” என அதட்டினாள்.
“நீ லவ் பண்ண அன்வி நான் இல்ல இப்போ… ஒரு குழந்தைக்கு அம்மா. மறுபடியும் ரிலேஷன்ஷிப் நினைச்சுப் பயந்து வாழ வேண்டிய சூழ்நிலை வருமோனு பயமா இருக்கு…” என்றவளைத் தடுத்தவனை நிமிர்ந்து முறைத்தாள்.
“கொஞ்ச நேரம் அமைதியா இருடா!”
“கஷ்டமா இருக்கு சிட்டு… ப்ளீஸ், என்மேல நம்பிக்கை இல்லையா? உன்னை எந்த விதத்துலயும் நான் கஷ்டப்படுத்த மாட்டேன்.”
“அப்போ என்ன, கல்யாணம் பண்ணிச் சும்மா வேடிக்கை பார்ப்பியா?” அவள் தீயாகக் காய,
அவன் பேசும் முன்னே, “சும்மா பார்த்துட்டே இருந்தாலும் போதும்னு உருட்டாத. உண்மையை மட்டும் பேசு!” என்றாள்.
“உன்மேல எனக்கு அவ்ளோ ஆசை இருக்குடி. உன் கூட நான் ஹேப்பியா வாழனும். நீயும் என்கூட ஹேப்பியா இருக்கணும். ஆனா அது உன்னைக் கஷ்டப்படுத்தாது. நீ கஷ்டப்படுறன்னா நமக்குள்ள எதுவும் நடக்காது.” அவன் திட்டவட்டமாகக் கூற, அவனை ஆதூரமாகப் பார்த்தாள்.
“இப்ப நான் பேசுறதை முழுசா கேக்குறியா?” என்றவள் மேலும் தொடர்ந்தாள்.
“ஒரு கல்யாணம் முடிஞ்ச கையோட இன்னொரு கல்யாணத்தையும் ஏத்துக்குறது வெளி உலகத்துக்குப் பாவப்பட்ட விஷயம். விஷ்ணு என்ன தப்பு செஞ்சான்னு யோசிக்காது… நான் எப்படி மூவ் ஆன் ஆகலாம்னு தான் குற்றம் சொல்லும்.
உடல் ரீதியா, மன ரீதியா ரொம்ப அடிபட்டிருக்கேன் ப்ரணீ. ஒருவேளை உன்னைத் தவிர, உன்னோட உறவே இல்லாம இருந்திருந்தா சத்தியமா இதைப் பத்தி நான் யோசிச்சிருக்கக் கூட மாட்டேன். யோசிக்கக் கூட அருவருப்பா இருந்திருக்கும். என் அடுத்த கட்ட வாழ்க்கைல நட்பாவாவது நீ என் கூட இருப்பன்ற ஒரே ஆறுதல் தான் என்னை இந்த அளவு ஸ்ட்ராங் ஆக்கிருக்கு.
உன் வாழ்க்கைல ஆல்ரெடி நான் தெரியாமலே நிறையக் கஷ்டம் கொடுத்துட்டேன். இப்ப தெரிஞ்சே, உன்னைக் கல்யாணம் பண்ணி ஒரு பாரத்தைக் குடுக்கணுமான்னு ஒரு குற்ற உணர்ச்சி இருக்கு. அப்போ நீ காதலிச்சது வேற. இப்ப நீ காதலிக்கிறதும், கல்யாணம் பண்ண நினைக்கிறதும் வேற…” என்றவளை அடக்கப்பட்ட கண்ணீருடன் பார்த்தான்.
“ஆனால் இதெல்லாம் தாண்டி, இதெல்லாம் ஒதுக்கி வச்சுட்டு, நான் கேட்குறேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா ப்ரணீ…” என அதே அழுத்தம் நிறைந்த குரலில் கேட்டவளை அதிர்ச்சியுடன் ஏறிட்டான்.
“சி… சிட்டு?”
“எனக்கு இந்தக் குழப்பத்தையும் வேதனையையும் மீறி, ஒரு நல்ல வாழ்க்கை வாழணும்னு ஆசையா இருக்கு ப்ரணீ… நியாயமா உன்னை நான் மறுத்திருக்கணும். இது கொஞ்சம் சுயநலமா கூட இருக்கலாம். ஆனா, எனக்கு… எனக்கு நிம்மதியான ஒரு வாழ்க்கை வேணும். அது உங்கிட்ட கிடைக்கும்ன்ற நம்பிக்கைல தான் கேக்குறேன்…”
“என்னடி நீ. சுயநலம் அது இதுன்னு. பைத்தியம்! நிஜமா நீ இந்த முடிவை எடுத்தது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா? உன் நம்பிக்கை என்னோட இத்தனை வருஷக் காதலுக்கும் கிடைச்ச பரிசு அனு… இதெல்லாம் யோசிச்சு நீ என்னை மறுத்திருந்தா, என் அன்புக்கு விழுந்த அடுத்த அடியா இருந்திருக்கும். இப்ப கர்வமா இருக்கு!” என்றவன் சட்டையில் அவன் கண்ணீரைத் துடைத்து கொண்டு, “நிஜ..நிஜமா உனக்குக் கல்யாணம் பண்ணிக்க ஓகேவா அனு?” என்றவனுக்குக் கண்ணீரும் சிரிப்பும் ஒருசேர வழிந்தது.
“உனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லன்னா எனக்கும் இல்ல…” அவள் மெதுவாக உரைத்ததில்,
“போடி… இவளே! நீ ஒரு வார்த்தை சொல்லிருந்தா என்னைக்கோ அந்த விஷ்ணுவைச் செருப்பால அடிச்சு அனுப்பிட்டு உன்னைக் கூட்டிட்டுப் போயிருப்பேன். நீ எனக்கானவள்னா, உன்னோட கடைசி மூச்சும் என்னோடதா தான் இருக்கும். அந்த விதியை யாராலும் மாத்த முடியாது.” என்று தீர்க்கமாக உரைத்தவனை விழி அகலாது பார்த்தாள்.
“விதி ஆல்ரெடி விளையாடிடுச்சு. அதுனால தான் உன் உணர்வோடு நானும் விளையாட விரும்பல.” லேசாய் இதழ் விரித்துக் கூறியதில், “உனக்குப் பரந்த மனசு… கொஞ்ச நேரத்துல எனக்கு மரண பயத்தைக் காட்டிட்ட தெய்வமே!” எனக் கும்பிட்டான்.
அதில் புன்னகைத்தவள், “ஆனா ப்ரணீ… எனக்குக் கண்டிப்பா எனக்குன்னு ஒரு கேரியர் வேணும். நீயா இருந்தாலும் உன்னை பினான்சியலா நம்பி இருக்க எனக்கு விருப்பமில்லை. தப்பா நினைக்காத ப்ரணீ…” எனக் கண்ணைச் சுருக்கிக் கேட்டவளைக் கண்டு சிரித்தான்.
“பட், உன் நேர்மை எனக்குப் பிடிச்சுருக்கு.” எனக் கிண்டல் செய்தவன், “உனக்கு என்ன செய்யணும்னு சொல்லு, அதைச் செஞ்சுடலாம். இல்ல நம்ம சென்னை ஆபிஸ்ல ஒர்க் பண்ணு. அதுவும் இல்லன்னா ரிசார்ட் பிளான் பண்ணலாம். நீயே முடிவு எடுத்துட்டுச் சொல்லு. அதுக்காக என் சிஸ்டர் மாதிரி, நான் தலைகீழா தான் குதிப்பேன். யார் தயவும் வேணாம்னு ஈகோவைப் பிடிச்சுட்டுத் தொங்கிட்டு இருக்காத. நான் உனக்கு பிசினஸ் ரிலேட்டடா என்ன செய்யணுமோ, அதெல்லாம் கண்டிப்பா செய்வேன். அதை டெவலப் பண்றது உன் வேலை, ஓகே வா?” என்றான்.
“நீ தான் செஞ்சாகனும். வேற வழி இல்ல.” அவளும் உதட்டைப் பிதுக்கியதில் இருவரின் முகமும் புன்னகையைத் தத்தெடுத்தது.
இந்த இதமான நிலை, மனம் வருடும் அன்பு… இவை எல்லாம் வெறும் கடந்த காலத்தின் காயத்தையும், சமூகத்தையும் மட்டுமே பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், இழப்பு என்னவோ அவர்கள் இருவருக்கும் தான். இதையே தான் கடந்த மாதங்களாக அவள் சிந்தித்திருந்ததும்!
“ஹோட்டல்ல சாப்பிடப் போகலாமா?” அவளாகவே கேட்டிருந்தாள்.
“போலாமே…” துள்ளிக் குதிக்காத குறையாக அவளை அழைத்துக் கொண்டு உணவகம் சென்றான்.
அவளுக்குப் பிடிச்ச பிரைட் ரைஸையே ஆர்டர் செய்தவன், “நம்ம மேரேஜ் பண்ணிட்டுச் சென்னையே போயிடலாம் தான அனு. இங்க இருந்தா அமையாக்கும் விஷ்ணு ஞாபகம் வரலாம்…” என்றதில்,
“ம்ம்… அதான் நானும் யோசிச்சேன். இங்க கிளாம்பிங் ஒர்க் ஆல்மோஸ்ட் முடிஞ்சுருச்சு. ஹாபிட் ஹவுஸ் தான் டைம் எடுக்கும் போல. ஆனா அகா, ஃபர்ஸ்ட் கிளாம்பிங் லான்ச் பண்ணிடலாம்னு இருக்கா. அதுக்கே இன்னும் ரெண்டு மூணு வாரம் ஆகும் போல… சென்னைக்குப் போய் அமையா உன்கூட செட் ஆகணும். பேமிலி கூட செட் ஆகணும்… நிறைய யோசிக்கும்போது டயர்டாகுது.” என்றவளின் கையைப் பிடித்து அழுத்தம் கொடுத்தவன், “கண்டிப்பா எல்லாமே ஈஸியா இருக்காது சிட்டு. பட் ட்ரஸ்ட் மீ. நீ நினைக்கிற அளவு கஷ்டமாவும் இருக்காது.” என்றான் கண்ணை மூடித் திறந்து.
அதன்பிறகு மீண்டும் பள்ளி, கல்லூரி நாள்களைப் போன்று, ஏதேதோ பேசினர். அவனுக்கென்று அவளும், அவளுக்கென்று அவனும் கிடைத்த ஒரு திருப்தி இருவரின் முகத்திலும் ஒரு நம்பிக்கையைப் படரச் செய்தது.
அன்விதாவின் முதிர்ச்சி அவனை அதிகம் ரசிக்கவும் வைத்தது.
“எப்போ கல்யாணம் பண்ணிக்கலாம் சிட்டு?”
“எப்பனாலும் ஓகே தான். அமையாக்கு இன்னும் ஒரு வாரத்துல ஸ்கூல் முடியுது. அடுத்த அகாடமிக் இயர் சென்னைக்கு பிளான் பண்ணுனா நல்லாருக்கும். இல்லன்னா ஒரு வருஷம் திரும்ப இங்க தான்.”
“அய்யய்யோ… அவ்ளோ நாள் எல்லாம் பாடி தாங்காது சிட்டு. நம்ம அமையாக்கு ஸ்கூல் முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்று பரபரத்தான்.
அதில் தலையாட்டிச் சிரித்தவள், “உனக்கு மெச்சூரிட்டி கொஞ்சம் கூட வரலடா… சரி, அர்ஜி என்ன பிளான்ல தான் இருக்காரு? அவங்களுக்குத் தெரியுமா இதெல்லாம்…” என்றவளுக்கு அதன் பிறகே தனது புகுந்த வீட்டு நினைவும் வந்தது.
“தெரியும் தெரியும். உன்னைக் கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டுப் போனா தான் அவன் அகாவைக் கூப்பிடுவானாம்…” பிரணீத் கடுப்பாய் கூறியதில், அவள் பதறினாள்.
“என்னடா சொல்ற. அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”
“அவன் என்ன நினைப்புல இருக்கான்னே எனக்குப் புரியல சிட்டு. கண்டிப்பா இது மட்டும் காரணம் இல்ல…” எனும்போதே, அகமொழி அமையாவை அழைத்துக் கொண்டு உணவகத்திற்கே வந்தாள்.
சிறிது நேரம் முன் தான் தங்களது இருப்பிடத்தைக் குறுஞ்செய்தியாக அனுப்பி இருந்தாள் அன்விதா.
“எங்களை விட்டுட்டுச் சாப்பிடுறீங்களா?” அகமொழி கண்ணைச் சுருக்கி முறைக்க, அமையாவும் இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“சித்தி… நம்மளும் சாப்பிடலாம். நூடில்ஸ்!” எனக் குதிக்க, “அவள் ஜங்க் ஃபுட் சாப்பிட உன்னைத் தாஜா பண்றா அகா…” எனச் சிரித்தாள் அன்விதா.
“ரூஹியும், ரிஷுவும் எங்க?” பிரணீத் கேட்டதில், “ரெண்டும் ஐஸ்க்ரீம் சாப்பிட போயிருக்குங்க…” என்றவள் இருவர் முகத்தையும் ஊடுருவினாள்.
“என்ன முகமெல்லாம் டாலடிக்குது?” அர்த்தமாகக் கேட்டதில், அன்விதாவின் முகம் உண்மையிலேயே செம்மையுற்றது.
“இனி இந்த சிங்கிளை வச்சுட்டு நீங்கலாம் ரொமான்ஸ் பண்ண முடியாது சிஸ்டர். இப்ப நானும் கமிட்டட்…” என்று பிரணீத் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள,
அன்விதா தலையில் அடித்தாள்.
“கமிட்டடா?” எனத் திருதிருவென விழித்தவள், அன்விதாவை வியப்பாகப் பார்த்தாள்.
“ஹே நிஜமாவா?” உணவகம் என்று பாராது கத்தி விட்டாள்.
“சித்தி, பப்ளிக் பிளேஸ்ல கத்தக் கூடாது… உஷ்” என அமையா கண்களை உருட்டி நூடில்ஸை ஒரு வாயில் போட்டவள், “கமிட்டட்னா என்ன?” எனக் கேட்க, மூவரும் கமுக்கமாகச் சிரித்தனர்.
“அன்வி நிஜமாவேவா?” அகமொழி இன்னும் அழுத்திக் கேட்க,
“எம்மா… நானே அவள் மனசு மாறுறதுக்குள்ள கல்யாணம் பண்ணிடலாம்னு பார்த்தா நீ இத்தனைத் தடவ கேட்டு அவளை யோசிக்க வச்சுருவ போல…” என பிரணீத் நெஞ்சைப் பிடித்ததில் இரு பெண்களும் கலகலவெனச் சிரித்தனர்.
“இது அகன்க்கு தெரியுமா?” அவள் விழி விரித்ததில்,
“எனக்கே இப்ப தான் தெரியும்…” என விவரம் கூறிய ப்ரணீத்திடம், “அப்போ நான் தான் ஃபர்ஸ்ட் சொல்லுவேன்.” என்று அலைபேசியை எடுத்துக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.
அவளையே இருவரும் அர்த்தமாகப் பார்த்துக் கொண்டனர்.
“அகன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!” மகிழ்ச்சியில் அவன் பெயரைக் கூவினாள் குறுஞ்செய்தியாக.
அங்கோ, கண்ணீரில் கரைந்து கொண்டிருந்த சுஜாதாவைச் சமாதானம் செய்தபடி இருந்தான் அர்ஜித் அகன்.
“ஒரு பிராவஸ்யம் (தடவை) அன்வியையும், அமையாவையும் நோக்கணம் கண்ணா… ப்ளீஸ்!”
தாயின் வேதனை அவனையும் தாக்கியது.
“அவள் அப்பப்போ இவிடே வந்தால் அவளுட நிம்மதி தன்னே போகும்மா(அவள் அடிக்கடி இங்க வந்தா அவளோட நிம்மதி தான் போகும்?!”
“எனிக்கு மனசிலாவுந்து(புரியுது). ஒரே ஒரு பிராவஸ்யம் (தடவை) தன்னே சோதிக்கனது…” சுஜாதா வருந்தினார்.
கேசவ நாயரும், “அவளுடே எதிர்காலமெங்கிலும் நந்தாயி (நல்லா) அமையனும் அர்ஜி…” என்றிட,
“அதொக்கே நந்தாயிட்டு தன்னே அமையும்…(அதெல்லாம் நல்லாவே இருக்கும்)” என்றான்.
கோபால கிருஷ்ணனும், கல்யாணியும் நடந்தவற்றை முயன்று ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொண்டிருந்தனர்.
அந்நேரம் தான் அகமொழியின் குறுஞ்செய்தி வந்தடைந்தது.
அதனைக் கண்டு புருவம் சுருக்கியவனின் இதழ்களில் சிறு புன்னகை.
“எந்தா, என்டெ பேரை ஏலம் விடுனது?”
“ஒரு செம்ம ஹேப்பி நியூஸ்…” என்றதும் அவனும் புரியாது, “எந்தாடி?” என்றான்.
“அன்வி, ப்ரணீய மேரேஜ் பண்ணிக்க ஓகே சொல்லிட்டா! யாஹூ! ஐ காண்ட் பிலீவ் திஸ்” என்ற அவளின் துள்ளலில் அவனுக்கும் வியப்பு தான்.
“ஆர் யூ ஷ்யூர்? சத்தியமானோ?” அவனுக்கும் நம்ப இயலவில்லை போலும்.
“மதர் ப்ராமிஸ்…”
“ப்ரணீ அவளை கரெக்ட் செய்யான் மாத்திரம் லவர் பாயா எந்து?(கரெக்ட் செய்ற அளவு லவர் பாயா)” மனத்தில் தோன்றிய கேள்வியை அவன் கேட்டே விட, அவளோ கண்ணில் நீர் வழியச் சிரிக்கும் ஸ்மைலியை அனுப்பி வைத்தாள்.
“ப்ரோவ எல்லாம் நம்புனா, இன்னும் பல வருஷத்துக்குக் கையில ஒத்த ரோஜாவை வச்சுட்டுத் தான் சுத்துவாரு, நீ வேற… இது முழுக்க முழுக்க அன்வியோட சுய முடிவு. நோ ஃபோர்ஸ், நோ லவ் டயலாக்…” என்று வாயைப் பொத்திச் சிரிக்கும் எமோஜி அனுப்பினாள்.
அதில் அவனும் சிரித்து விட, கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்த சுஜாதா அவனைக் கொஞ்சம் முறைப்பாகப் பார்த்தார்.
அதன்பிறகே நடுக் கூடத்தில் அமர்ந்து சிரித்திருப்பது புரிய, தொண்டையைச் செருமிக் கொண்டவன்,
“அன்வியோட எதிர்காலம் ப்ரணீயோட வளரே நந்தாயிரிக்கும். யாரும் இனி அவளைப் பற்றி வேதனைப் படேண்டா.
நடந்த எல்லாற்றினையும் கெட்ட கனவாய் விசாரிச்சு அவள் மறந்து… அதே போல நிங்களும் மறந்து கடந்து வந்தோளு. நிங்கள்டே சங்கடம் போலும் இனி அவளுக்கும், ப்ரணீக்கும் நெகட்டிவ் வைபைக் கொடுக்கான் பாடில்லா! (நடந்த எல்லாத்தையும் கெட்ட கனவா நினச்சு அவள் மறந்துட்டா. அதே மாதிரி நீங்களும் மறந்து கடந்து வந்திடுங்க. உங்களோட வருத்தம் கூட இனி அவளுக்கும் பிரணிக்கும் நெகட்டிவ் வைப் கொடுக்க கூடாது” என்று திட்டவட்டமாக உரைத்ததில், மெல்ல நிம்மதியுற்றது அவர்களது மனம்.
கிளாம்பிங்கின் லான்ச் தேதியையும் முடிவு செய்ய எத்தனித்தாள் அகமொழி.
அந்நிலையில் அமையாவின் பள்ளித் தேர்வுகள் முடிந்திட, பத்து நாள்களிலேயே இருவருக்கும் பதிவுத் திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தான் பிரணீத்.
அர்ஜித், சென்னையிலேயே திருமணத்தை வைக்கச் சொல்லி இருந்தான்.
பதிவுத் திருமணம் முடிந்ததும், மாலையில் சின்னதாக ரிசப்ஷன் வைப்பதாக ஏற்பாடு.
“பார்த்தியா… என் ஆளை என் வலைல விழ வச்சுட்டேன்.” பிரணீத் தற்பெருமையுடன் கூற,
“அவளே பாவம் நோக்கி சம்மதிச்சில்லெங்கில், நீ இனியும் சோக கீதம் தன்னே வாயிச்சிரிக்கும்(வாசிச்சப்ப). மொழி தன்னே நின்டே அருமை பெருமை ஒக்கே அம்பலப்படுத்தி அல்லோ (புட்டு வச்சுட்டாளே…)” என நக்கலடித்ததில்,
“என்னைக் கலாய்க்க மட்டும் புருஷனும், பொண்டாட்டியும் ஒன்னு சேர்ந்துடுங்க.” என நொடித்துக் கொண்டான்.
“சரி, கல்யாணத்துக்கு உன் ஆளையும் கூப்பிடனும். கூப்பிடவா?” பிரணீத் கிண்டலாகக் கேட்டதில், ‘விளிக்காதே இருந்து தன்னே நோக்கு.’ என்ற ரீதியில் முறைத்து வைத்தான் அர்ஜித்.
“ஞான் சென்னைக்குப் போகுந்து. அவிடே குறச்சு (கொஞ்சம்) பணி உண்டு. நிண்டே மேரேஜ் ஒர்க்கை முடிச்சுட்டு, ரெஜிஸ்டர் ஓபீஸில் எல்லாம் ரெடி செய்திட்டு விளிக்காம்(சொல்றேன்). பின்னே நீ அன்வியையும், அமையாவையும் கூட்டி வா…” அர்ஜித் கூறியதில்,
“அர்ஜி… அன்வி உன் வீட்டுல எல்லாரையும் பார்க்கணும்னு சொல்றா…” என்றான் பிரணீத்.
“ம்ம்… எல்லாம் ஃபிக்ஸ் செய்திட்டு பரயாம். சென்னைக்குப் போவனதினு முன்னே நோக்கியிட்டு வரின்(சென்னைக்குப் போறதுக்கு முன்னாடி பார்த்துட்டு வாங்க).
பட்சே அமையா அவிடே இரிக்காமெந்து பரஞ்சால், எந்து செய்யும்? சரி, நீ நோக்கிக்கோ!(அமையா இங்க இருக்கேன்னு சொன்னா என்ன செய்வ. சரி பார்த்துக்கோ)” என்றவனுக்கு வருத்தம் தாக்கியது.
நண்பனின் வருத்தம் அவனுக்கும் வேதனையாய்!
அர்ஜித் சென்னைக்குக் கிளம்பிச் சென்று விட, இங்கோ முடிவடைந்த கிளாம்பிங்கில் மிச்சமிருந்த இன்டீரியர் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
“ரிஷு, அந்தக் கலர்ஸ் மாத்தச் சொன்னேன்ல…” என்று பேசிக் கொண்டிருந்தவள் பிரணீத் வருவதைக் கண்டதும், “வாங்க புது மாப்பிள்ளை சார்…” என்று கிண்டல் செய்தாள்.
அதில் அவன் வெட்கம் வேறு கொள்ள, “ஹையோ, இந்தக் கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டியதா இருக்கு.” என்று நொந்தாள் அகமொழி.
“உன்னை…” என்று அவள் தலையில் அடித்தவன், “சரி இன்னும் ஒரு வாரத்துல எனக்கும் அன்விக்கும் மேரேஜ். நீங்க எல்லாருமே கண்டிப்பா வரணும்…” என்று ரிஷான் ரூஹிக்கும் சேர்த்தே அழைப்பு விடுத்தான்.
“அப்பா, அம்மாகிட்டயும் பேசுறேன்…” என்றதில், “மேரேஜ் எங்க ப்ரோ பிளான் பண்ணிருக்கீங்க?” என வினவினாள் ரூஹி.
“சென்னைல தான்!” என்றபடி அகமொழியை ஓரக்கண்ணில் பார்க்க, அவளோ முகம் வாடிப் போனாள்.
“ப்ரோ… அன்னைக்குத் தான் லான்ச் கூட பிளான் பண்ணிருக்கோம்.” என அகமொழி வேகமாகக் கூற,
“நான் நாளைக்குக் கல்யாணம் பண்றேன்னு சொன்னால் கூட, நீ லான்ச் தேதியை நாளைக்கு மாத்திடுவீல்ல?” என அவன் முறைப்பாகக் கேட்டதில் அகமொழி விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள்.
“இதெல்லாம் நடந்ததே உன்னால தான் அகா… எனக்கும் அன்விக்கும் நீ என்னைக்கும் ஸ்பெஷல் தான். உன் பெர்சனல் ஈகோவை ஒதுக்கி வச்சுட்டு எங்களுக்காக வா… ப்ளீஸ்!” என்றதில், அவளுக்கு ஐயோ என்றிருந்தது.
அர்ஜித்தும் வருவான் தானே? வந்தால், பார்த்தால்… எப்படிக் கடக்க இயலும்? அவன் கண்களைச் சந்திக்க முற்றிலும் துணிவு இல்லை அவளுக்கு. அவளுக்குத் தெரியவில்லை, கண்கள் சந்திக்கும் நேரம் காதலும் துள்ளி விளையாடுமென…
அகன் வசமாவாள்(வான்)
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
111
+1
4
+1
2
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


அன்வி சூப்பர்