36. கண்களும் காதல் பேசியதே

Loading

 

காதல் -36

 

மின்னல் இடியுடன் கூடிய மழையில் அந்த குளிரான தருணத்தில் இருவர் மட்டும் சூடாகிக் கொண்டிருந்தனர்.

 

ஏனோ இத்தனை நாளுக்கு பின்பு மன்னவனின் நெருக்கத்தில் மூச்சு முட்டி தன்னை மறந்து அவனுடன் ஒன்றி இருக்கிறாள். இதற்கு முன்பு இருவருக்குள்ளும் இத்தனை நெருக்கமாக என்று கேட்டால்… ஒரே ஒரு இதழ் முத்தத்தோடு அவர்களது அத்தியாயம் அப்போது முடிந்து விட்டது..

 

முடிந்த அத்தியாயத்தை கம்மா போட்டு தொடங்கி வைத்தான் மறவன்… இடுப்பில் கொடுத்த அழுத்தத்தில் பெண்ணவள் முற்றிலும் துவண்டவளாக அவன் மீதே சரிந்து விழ இறுக்கி அணைத்துக் கொண்டான் தன்னவளை…

 

ஒரு வருட தனிமை, அவனது மனைவிக்காக  முற்றிலும் ஏங்க வைத்திருந்தது.. அதன் வெளிப்பாடு தான் இந்த உரசல்.. தம்பதிகளுக்குள் சின்ன சின்ன உரசல், தடவல், கடித்தல் எல்லாம் எல்லை இல்லா இன்பத்தை தரும் … அந்த வழியை தான் மறவன் கையாண்டு கொண்டிருக்கிறான்.

 

தன்னை கட்டிக் கொண்டவளின் கழுத்து வலைவில் முத்தம் பதித்து … சூடான மூச்சு காற்றை கழுத்து பகுதியில் செலுத்த .. கூச்சத்தில் சிலிர்த்து அடங்கினாள் பேதை.

 

“யாழி… ” முனங்களாக அவன் அழைக்க.. ” ம்ம்” என அவளுக்கே கேட்காத குரலில் அவள் முனங்கினாள்.

 

அதையே சாதகமாக எடுத்து கொண்டவன் இடுப்பில் இருந்து கை உயர்த்தி அவனது உரிமையை நிலை நாட்டும் பொழுது பலத்த இடி இடிக்க… திடுக்கிட்டு அவனிடம் இருந்து விலகினாள் சாயாலி…

 

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக மறவன் அவளை பார்க்க.. அவளோ கண்களில் நீருடன் அவனை இயலாமையுடன் பார்த்து வைத்தவள்… வேகமாக கார் கதவை திறந்து வெளியே இறங்கினாள்.

 

நொடியில் நடந்த நிகழ்வில் அவனும் காரில் இருந்து வெளியே இறங்கி.. ” உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு… கொட்டுற மழையில இப்படி இறங்கி நிக்கிற .. உள்ள வா யாழி ” என அவளது கையை பிடித்து இழுக்க..

 

கையையும் அவனையும் மாறி மாறி பார்த்தவள்… ” கார்ல ஏறி ??” என கேள்வி கேட்க..

 

” எதுவா இருந்தாலும் உள்ள போய் பேசிக்கலாம்… முதல்ல வா ”

 

” உள்ள போனாதான் உங்களுக்கு பேச்சே வராதே… ”

 

” ப்ச் என்ன சொல்ல வர எனக்கு புரியலை”

 

” இல்ல உள்ள போனா தான் உங்களுக்கு பேச்சு வர மாட்டிதே, அதோட ஊர் பேர் தெரியாத ஆம்பளை கூட ஒரே கார்ல எறுற அளவுக்கு நான் இன்னும் தரம் கெட்டு போகல.. ஏற்கனவே செய்யாத தப்புக்கு தான் அவுமான பட்டு இந்த ஊருக்கு வந்துருக்கேன்… தயவு செஞ்சு உங்க வழிய பார்த்துட்டு போங்க ” என வார்த்தை அம்புகளை வீரியமாக வீச, மறவனின் முகம் கருத்து போனது.

 

” யாழி அது ஏதோ அன்னைக்கு தெரியாம நடந்தது டி ” என புரிய வைக்க முயற்சி செய்ய…

 

” எது தெரியாம நடந்தது… அன்னைக்கு ராத்திரி குடிச்சுட்டு வந்தது நீங்களா இல்ல நானா… இல்ல முத்தம் கொடுத்தது நீங்களா , நானா.. நல்லா யோசிச்சு பாருங்க ”

 

” தெரியும் நான் தான் எல்லாம் பண்ணேன் ”

 

” ஓ போதை தெரியவும் எல்லா நியாபகம் வந்துடுச்சா… ”

 

” அன்னைக்கு நான் குடிச்சு இருக்கவே கூடாது யாழி தப்பு பண்ணிட்டேன்.. ”

 

” குடிச்சிட்டு வந்த தப்பை விட .. நீங்க என்ன நெருங்கிட்டு வெளிய வந்து எல்லார் முன்னாடியும் நான் உங்க உடம்புக்கு ஆசை படுறேன்னு சொன்னீங்க… இதை விட என்னைய கேவல படுத்த உங்கனால முடியுமா ” என கத்தினாள்.

 

குற்றவுணர்ச்சி மேலோங்க .. கூனி குறுகி அவள் முன்னே நின்று கொண்டிருந்தான். அடைமழை கொட்டிக் கொண்டிருக்க.. அந்த மழையையும் பொருட்படுத்தாமல் அவனிடம் நின்று, அன்று கேட்காமல் விட்ட நியாயத்தை எல்லாம் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தாள் சாயாலி…

 

இந்த ஒரு வருடத்தில் அதை நினைத்து எப்படி எல்லாம் கலங்கி போயிருப்பாள்… ஒரு பெண்ணிற்கு அவளது மானத்தை விட பெரிது வேறெதுவும் இல்லை .. ஆனால் அப்படி கட்டி காத்த மானத்தை எல்லாம் ஒரு நிமிடத்தில் அல்லவா தகர்த்து விட்டான்.

 

எப்படி அவனிடம் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள முடியும்… கணவனாகவே இருந்தாலும் எல்லார் முன்பும் உடம்புக்கு அலைகிறேன் என்று கூறினால் என்ன ஆகும் ..

 

ஆறாத வடுவாக அவள் மனதில் மாறி நிற்க… அதை ஆற்ற வழி தெரியாமல் , மன்னிப்பும் கேட்க முடியாமல் அவனது மனைவியின் முன்பு நிற்கிறான்.. மன்னிப்பு கேட்டால் மன்னித்து விடும் தவறையா அவன் செய்து இருக்கிறான்.

 

” நான் பண்ண தப்புக்கு மன்னிப்பு கேட்டா கூட அது சரி ஆகாது.. இருந்தாலும் கேட்கிறேன்… யாழி… ” என்றதும் கை உயர்த்தி அவனை தடுத்தவள்..

 

” நான் உங்களை என்னைக்குமே மன்னிக்க மாட்டேன்.. ஆனால் அதுக்கு ஈடா ஏதாவது செய்யனும்னா இதோட என் வாழ்க்கைய விட்டு போயிடுங்க மறவன்… ” என கை எடுத்து கும்பிட.. பேச்சற்று போனான் மறவன்.

 

தவறுக்கு தண்டனை கொடுப்பாள் என அவன் நினைத்திருக்க… இப்படி வாழ்க்கையை விட்டு ஒரேடியாக அல்லவா போக சொல்கிறாள்.. எப்படி முடியும் அவனால்.. அருகில் இருந்தபோது அவள் மீது வந்த காதலை விட.. பிரிவின் போது வந்த காதல் மேலும் அவனை வாட்டி வதைக்க.. என்ன நடந்தாலும் அவளை விட்டு செல்ல கூடாது என்ற முடிவில் அவளை பார்த்தான்.

 

” விட்டுட்டு போகவா?”

 

” ஆமா இங்க நான் மரியாதையா வாழ நினைக்கிறேன்.. ”

 

” அந்த மரியாதையை நான் தரேன் யாழி” எப்படியாவது என்னை ஏற்றுக் கொள்ளேன்.. என்றிருந்தது அவனது வாதம்.

 

” இதுவரைக்கும் நீங்க கொடுத்தது போதும்.. இந்த ஊர்ல உங்களை யாருக்கும் தெரியாது.. இங்க வந்து நீங்க என்ன தொந்தரவு பண்ணா தேவையில்லாம பிரச்சனை வரும்.. அதுனால இது போல என்ன சந்திக்க வர வேணாம்.. விவாகரத்து நோட்டீஸ் அனுப்புங்க கையெழுத்து போட்டு அனுப்புறேன் ” என தெளிவாக பேசுபவளை பார்த்து வாயடைத்து போனான்.

 

‘பேசாம இருக்கும் போதே என் வாழ்க்கை ரொம்ப நல்லா போச்சு, இவ இம்புட்டு பேசுவான்னு தெரிஞ்சு இருந்தா ட்ரீட்மென்ட் எடுக்காமையே இருந்திருக்கலாம் ‘ என நேரம் கெட்ட நேரத்தில் மனசாட்சி டியூன் போட, அதை அடக்கி விட்டு ஒரு முடிவோடு அவளை நெருங்கினான்..

 

” சரி நீ சொன்ன மாதிரியே பண்ணுறேன் யாழி ” என மறவன் கூறவும் .. சற்று ஏமாற்றத்துடன் அவனை பார்த்தாள் சாயாலி.. அவனிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள் என்பது இன்னும் அவளுக்கே விளங்காத பொழுது அவனிடம்  என்னவென்று கூறுவாள்.

 

அவன் கூறுவது போல அவனுடன் சேர்ந்து வாழ கூறினாலும் அதை அவள் மனம் ஒப்புக் கொள்ளாது..  இல்லை பிரிந்து செல்கிறேன் என்றாலும் ஏனோ அந்த வார்த்தையே அவளுக்கு அத்தனை கசப்பாக இருந்தது.

 

” என்ன யாழி அமைதி ஆகிட்ட.. ”

 

” ஹான்… அது.. வந்து.. அது ஒன்னும் இல்ல… நீங்க எடுத்த முடிவு நல்லது தான் ”

 

” இரு யாழி இன்னும் என் முடிவை முழுசா சொல்லவே இல்லையே ” என செக் வைத்தவனை புரியாது பார்த்தாள் சாயா.

 

” என்ன முடிவு ”

 

” எல்லா கோர்ட்லையும் கொடுக்கிற அவகாசம் தான் ”

 

” புரியலை.. ”

 

” அப்ளை பண்ணி நம்ம சேர்த்து வாழ டைம் கொடுப்பாங்க.. அதுவும் முடியாத பட்சத்தில தான் விவாகரத்து கொடுப்பாங்க ”

 

” அதுக்கு… ” பாம்பாக சீறுபவளை பார்த்து புன்னகையை அடக்கி கொண்டவன்..

 

” என் கூட தான் நீ இருக்கனும்… அப்போதான் நான் விவாகரத்து கொடுக்க முடியும் ”

 

” அது ஒரு போதும் நடக்காது ”

 

” அப்போ விவாகரத்தும் கிடைக்காது ” என தோளை குலுக்கி கொண்டு கூறுபவனை பார்க்க வெறியாகி போனது சாயாவிற்கு..

 

” அந்த ஊருக்கு என்னால திரும்ப வர முடியாது, இங்க எனக்கு நல்ல வேலை இருக்கு.. இப்போதான் ஒரு நல்ல வாழ்க்கையை என் அம்மா கூட நான் வாழ ஆரம்பிச்சு இருக்கேன்..  என்னால அதை விட்டுட்டு வர முடியாது.. ”

 

” அங்கையும் வந்து வேலையை பாரு… ”

 

” அங்க வந்த வருமானத்தை விட இங்க நாங்க நல்லா இருக்கோம் … அதவிட அந்த ஊருக்கு என்னால திரும்ப வர முடியாது… எப்படியும் விவாகரத்து ஆனதுக்கு பின்னாடி என் வாழ்க்கையை நான் தான் பார்க்கனும்… அதுனால என்னால வர முடியாது ”

 

” அப்போ இந்த ஊர்ல என் கூட இருக்க ஒகேன்னு சொல்லுற ” என நமட்டு சிரிப்புடன் அவன் கேட்க..

 

” இந்த ஊர்ல இருக்கேன்… ஆனால் ஒரே வீட்ல இருக்க மாட்டேன்… ” என மீண்டும் மலை ஏற…

 

” இல்ல நீ சரி பட்டு வர மாட்ட.. ” என அவன் காரை நோக்கி செல்ல… அவசரமாக அவனை தடுத்தாள் சாயாலி..

 

” சரி இருங்க… இந்த ஊர்ல வீடு எல்லாம் பார்த்து செட் பண்ண உங்களுக்கு ஒரு மாசம் டைம் எடுக்கும்ல… அதுக்கு அப்பறம் பார்க்கலாம் ” என கால அவகாசம் எடுக்க அவள் கூற…

 

” அதுக்கென்ன இப்போவே நீ நம்ம சேர்ந்து  வாழ போற வீட்டை பார்க்கலாம் யாழி….”

 

” என்னது… ”

 

” சாரி சேர்ந்து இருக்க போற வீடு ” என திருத்தினான்.

 

” வீடு பாத்தாச்சா ”

 

” பாலே காச்சியாச்சு மா ”

 

” இதை நான் ஒத்துக்க மாட்டேன்.. ”

 

“கார்ல ஏறு நம்ம வீட்டுக்கு போயிட்டே பேசுவோம் ” என அவளை தள்ளி கொண்டே காரில் ஏற்றி தானும் அதில் ஏறி கொண்டு புது வீட்டை நோக்கி சென்றான்.

 

சாயா இன்னும் அதிர்ச்சியில் இருந்து வெளி வரவில்லை… ‘ அப்போ எல்லாம் பிளான் பண்ணி தான் வந்து இருக்காரா ‘ என மனசாட்சி நினைக்க… இது என்ன அதிர்ச்சி… இப்ப கொடுக்கிறேன் பாரு என்பதை போல அவள் வீட்டு முன்பே காரை நிறுத்தினான்.

 

அதில் அவனை முறைத்தவள்… ” என் வீட்ல தங்க நான் கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்.. ” என வீம்பு செய்ய….

 

” முதல்ல கார்ல இருந்து இறங்கு… ” என அவனும் இறங்கி கொண்டு அவள் வீட்டிற்கு எதிர்ப்புறம் இருந்த வீட்டிற்குள் அழைத்து செல்ல .. அதிர்ந்து போனாள் சாயா….

 

அப்போது தான் காலை தேனு கூறியது எல்லாம் நினைவிற்கு வந்தது…  ” அப்போ தனியா தங்க வந்த அந்த ஆம்பளை நீங்க தானா”

 

” இல்ல பொண்டாட்டி கூட தங்க வந்த ஆம்பளை ” என அவளை பார்த்து கண்ணடிக்க .. தலையே சுற்றியது சாயாலிக்கு…

 

சனா💖

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 8

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
7
+1
0
+1
2

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்