பகுதி – 3
வசீ அமிர்தாவை அழைக்க அவள் கல்லூரிக்கு சென்றான்.
அங்கே ஒருவன் வசீயிடம் வந்தான்.
” ஹலோ வசீ “
” வாங்க பாலா எப்படி இருக்கீங்க “
” Fine வசீ நீங்க “
” நான் நல்லாருக்கன் பாலா அப்றம் வேலைலாம் எப்படிபோது வாத்தியாரே “
” நல்லாபோது வசீ மனசுக்கு நிறைவான தொழில் கத்துகுடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிச்ச விசியம் “
” அதான் தெரியுமே எம்பிபிஎஸ் முடிச்சிட்டு பிரபசர் ஆகிட்டீங்களே அப்றம் அமி எப்படி படிக்கிறா என்ன ரேங்க் வாங்குறா “
” அது வசீ அவளை பத்திதான் உங்ககிட்ட பேசனும் “
” அமியா ஏதாவது பிராப்லமா சரியா படிக்கமாட்டிகிறாளா ஏதும் பிரச்சனையா அவளுக்கு ” என்று சட்டென பதறினான்.
” இல்ல வசீம் பிராப்லம்லா இல்லை “
” ஓஓஓ தென் என்ன பாலா “
” பிளீஸ் கோவபடாம நான் சொல்றதை கேளுங்க அப்றம் நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறன்.”
” என்னனு சொல்லுங்க பாலா “
” அது நான் அமிர்த்தா……..நான் அமிர்த்தாவ விரும்புறன் அவளை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறன் அவகிட்ட யார் லவ்வ சொன்னாலும் ஒரே அடிதான் சோ எனக்கு அவகிட்ட சொல்ல கொஞ்சம் தயக்கமா இருக்கு எங்க அடிச்சிட்டா மானம் பொய்டுமோன்னு அவங்க அண்ணன்கிட்ட பேசவே ஒரு மாதிரியா இருக்கு நீங்க அவர்கிட்டயோ இல்ல அமிகிட்டயோ பேசுறீங்களா பிளீஸ் எனக்கு உங்களைதான் தெரியும் அதான் உங்கிட்ட பேசுறன். “
வசீம் சட்டென நிதானித்து இவ்ளோதானா என்று பெருமூச்சுவிட்டான். ” என்ன பாலா நீங்க இவ்ளோ பயப்படுறீங்க அப்றம் எப்படி அமிய கல்யாணம் பண்ணுவீங்க “
” வசீ பிளீஸ் பா ஹெல்ப் பண்ணே “
” பாலா நான் இதைபத்தி தயாகிட்ட பேசுனா என்ன சொல்லுவான்னு தெர்ல நான்வேணா அமிகிட்ட பேசிட்டு சொல்ற “
” தாங்கஸ் வசீ நீங்க பேசுங்க அவ என்ன சொன்னாலும் எனக்கு ஓகேதான்.”
அமி வசீம் காரில்………
” அமி உன்கிட்ட நான் ஒரு விஷியம் கேக்கனும் “
” அமி என்ன வசீம் “
” அது அமி நீ தப்பா எடுத்துக்ககூடாது”
” நீங்க என்ன கேட்டாலும் கேட்டா நான் தப்பா எடுத்துக்க மாட்டேன் வசீம் சொல்லுங்க “
” அது வந்து அமி நீ யாரையாவது விரும்புறியா “
அமிக்கோ இந்த கேள்வி ஏன் இப்போ என்பதைவிட இவனா இதெல்லாம் கேட்கிறான் என்றிருந்தது. ஏனென்றால் வசீம் தனிரகம் தன் அண்ணன் பெண்களை கண்டால் எரிந்து விழுவான். அஜ்ஜூ பெண்களிடம் வழிந்து விழுவான். வசீமோ பெண்களை கண்டால் பத்தடிக்கு ஓடிவிடுவான். அதுவும் அமியிடம் தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட பேசிடமாட்டான். இந்த பத்தாண்டுகளில் அமியிடம் வசீம் பேசிய வார்த்தைகளை மொத்தமாக எண்ணி சொல்ல சொன்னாள் நூறைகூட தொடாது. அவனா தன்னிடம் இந்த கேள்வியை கேட்டது என விழித்துபார்த்தாள். அத்தோடு அவள் மனது பனிசாரலாய் குளிர்ந்தது ஐந்தாண்டுகளாய் அவளது உள்ளதில் உதிர்த்த உணர்வுக்கு இன்று அர்த்தம் கிடைத்துவிடுமோ என்று தோன்றியது.
” அமி நான் ஏதும் தப்பா கேட்டுடனா”
” இல்லை வசீம் “
” சொல்லு அமி யாரையாவது விரும்புறியா “
” ஏன் திடீர்னு இந்த கேள்வி வசீம் ” புன்னைகையோடு கேட்டாள்.
” அது உன் காலேஜ் அனாட்டமி பிரபஸர் பாலாஜி உன்னை விரும்புராறாம் உன்கிட்ட சொன்னா எங்க அடிச்சிடுவியோன்னு தயங்குறாரு அதான் அவர் ஒன்னும் தப்பான எண்ணத்துல கேக்கலை கல்யாணம் பண்ணிக்கதான் கேக்குறாரு நீ பொறுமையா யோசிச்சு முடிவு சொல்லு உனக்கு ஓகேனா நானே தயாகிட்ட இதைபத்தி பேசுறன்.”
அமி வசீமை எரித்துவிடுவதைப்போல பார்த்தாள். அவனோ அதனை கவனிக்காமல் காரை செலுத்துவதிலேயே குறியாய் இருந்தான்.
அமி பட்டென கைப்பேசி எடுத்து பாலாவிற்கு அழைத்தாள். அவள் அழைப்பிற்காகவே காத்திருந்தான் போலும் ஒரே ரிங்கிலேயே எடுத்துவிட்டான்.
” ஹலோ ஸார் “
” ஹலோ அமிர்தா சொல்லுங்க “
” என்னை லவ் பண்றேன்னு வசீம்கிட்ட சொன்னீங்களா ” நேரடியாகவே அவனிடம் கேட்டாள்.
” ஆமா ” தடுமாறித்தான் சொன்னான் பாலா.
” எனக்கு இதுல விருப்பமில்லை நீங்க ஸார்ன்றனால ரொம்ப மரியாதையா சொல்றன் இதை இத்தோட விட்டுடுங்க “
” அது அமி ஏன்னு நான் ரீசன் தெரிஞ்சிக்கலாமா ஏன் நான் அழகா இல்லையா படிச்சில்லையா நல்ல வேலைல இல்லையா ஏன்னு சொல்லு அமி என்னை ரிஜக்ட் பண்றது உன் இஷ்டம் அதோட காரணத்தையாவது நான் தெரிஞ்சிக்கலாமா “
” கண்டிப்பா ஸார் நான் யார்கிட்டயும் ஏன் அவர்கிட்டயும் சொல்லாததை உங்ககிட்டச சொல்ற ” என்றவள் வசீமை ஒரு பார்வை பார்க்க அவனது முகத்திலோ துளிமாற்றமில்லை. கேட்பதை கேட்டுவிட்டேன் இனி அவளாச்சு அவனாச்சு என்ற ரீதியில் காரை அதிதீவிரமாய் ஓட்டிக்கொண்டிருந்தான் அவன்.
இதில் கடுப்பானதென்னவோ அமிதான்.
” சொல்லு அமி என்ன காரணம் “
” நான் ஒருத்தரை விரும்புறன் “
இப்போதும் வசீம் முகத்தில் மாற்றமில்லை.
அங்கே பாலாவிற்கோ இதயமே நின்றுவிட்டது.
” அமி “
” ஆமா ஸார் நான் ஒருத்தரை விரும்புறன். அவர்பேர் வசீம் நீங்க உங்க லவ்வுக்காக தூது அனுப்புன அதே வசீம்தான். “
இப்போது கார் பட்டென சட்டன் பிரேக்போட்டு நின்றது.
” அமி என்ன ஒலர்ற ” அதட்டினான் வசீம்
பச்…..” ரொம்ப அதட்டாத நான் உண்மையதான் சொன்ன என் மனசுல அதான் இருக்கு நான் உன்னதான் காதலிக்கிறன். “
வசீம் கண்களை மூடி பெருமூச்சிவிட்டு மனதில் ஏக இறைவனை நினைத்து நிதானத்தை வரவைத்தான். கிளிபிள்ளைக்கு சொல்வதைப்போல் சொன்னான்.
” அமி இங்கபாரு நீ சின்ன பொண்ணு புரியாம பேசுற நீ இப்படி நினைக்க என்ன காரணம்னு எனக்கு தெரியும் அது எதேர்ச்சியா நடந்தது அதை மறந்திடு இப்போ நீ நினைச்சிருக்கிறது ரொம்ப தப்பு. இந்த எண்ணத்தை மாத்திக்கோ என் நண்பனோட நம்பிக்கைக்கு என்னால துரோகம் பண்ண முடியாது. அதுக்கும்மேல நீ ஹிந்து நான் முஸ்லீம் இது உங்க குடும்பத்துக்கும் சரி எங்க குடும்பத்துக்கும் சரி சரிபட்டுவராது ” நிறுத்தி நிதானமாய் தெளிவாய் உரைத்திட அவள்தான் இதைல்லாம் எனக்கு தெரியாதா என்பதைபோல அவனை ஒரு லுக்குவிட்டாள்.
வசீம் அவள் புரிந்துக்கொள்வாள் என்று காரை எடுத்தான். வீடுவந்து காரை நிறுத்திட அமி இறங்கி சென்றிட வசீம் அவள் புரிந்துக்கொண்டாள் என நினைத்து சொன்னான்.
” குட் அமி இப்படிதான் இருக்கனும் சொன்னதும் புரிஞ்சிகிட்டு உன்மனசை மாத்திகிட்ட இனி நாம எப்பவும்போலவே இருக்கலாம் நான் மனசுல ஏதும் வெச்சிகலை. “
அவள் இறங்கி கதவை சாற்றி அவன் புறமாக சுற்றிவந்தாள்.
வசீம் புன்னகைக்க அவளோ கோபமாக அவன் சட்டையை பற்றி சொன்னாள்.
” என் கோவத்தை ரொம்ப கட்டுபடுத்திட்டு உக்காந்திருந்த எங்க உன்னை பளார்னு அடிச்சிடுவனோன்னு. அதான் வீடுவந்ததும் இறங்குன உடனே நீ நான் மாறிட்டன் புரிஞ்சிகிட்டன்னு கற்பனைலாம் பண்ணாத புரிஞ்சிதா உன் பிரண்டு, ஜாதி, மதம் எது என்காதலுக்கு குறுக்க வந்தாலும் நான் மாறமாட்டன். நான் உன்ன விரும்புறன். என்கிட்டருந்து தப்பிக்க எவளையாச்சும் கல்யாணம் பண்ணனும்னு நினைச்ச மவனே அவ்ளோதான் கன்னம் பழுத்திடும் இந்த அமிர்தா நினைச்சா நினைச்சதுதான் இனி எனக்கு புருஷன்னா அது நீதான் என்றவள் அவனை இழுத்து அவன் நெற்றியின் ஓரத்திலுள்ள மச்சத்தில் முத்தமிட்டு சொன்னாள். உன்கிட்ட நான் விழுந்த காரணத்துல இந்த மச்சமும் ஒன்னுடா என அவன் நெற்றிமுட்டி என் கோவம் இப்ப குறைஞ்சிடுச்சி பாய் டா செல்லம் என சொல்லிவிட்டு அவன் சட்டையை விட்டுவிட்டு சென்றாள்.
வசீம்தான் பேயடித்ததுபோல் அப்படியே உறைந்திருந்தான். அப்போதிலிருந்து இப்போதுவரை.
தயா உலுக்கினான் டேய் என்ன பகல் கனவா போடா அவ வெயிட் பண்ணிட்டு இருக்கா எனக்கு கால் பண்ணிட்டா என்று அவனை அனுப்பிவிட்டு தயா கிளம்பினான்.
________________________________
தயா, தீபன், ரதி , தாத்தா நால்வரும் அவர்கள் நடத்தும் லேப்பிற்கு இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் வாங்க லோன் கேட்டு வங்கிக்கு சென்றனர். ரதி தயா தீபன் மூவரின் டிகிரி சர்ட்டிபிகேட் வைத்து லோன் கேட்க அவர்களும் ஒத்துக்கொண்டனர். தாத்தாவும் அவரது வீட்டை அடமானம் வைக்க அதிலும் கொஞ்ச பணம் கிடைத்தது. ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தனர். ஓரளவிற்கு சிறியதான லேப் நடத்துவதற்கான அனைத்தையும் தயார் செய்துவிட்ட மகிழ்ச்சியில் அந்த காரில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
காரோ ஊர்வலமாய் ஊர்ந்து சென்றது. நடந்து செல்பவர்கள் கூட அவர்களை முந்திசென்றனர். அதனை பார்த்து கடுப்பான ரதி சொன்னாள்.
ரதி ” ஈயம் பித்தளைக்கு போட்டாகூட இதை எவனும் எடுக்கமாட்டான் இதை காருன்னு இவரும் இத்தனை வருஷமா வெச்சிருத்காரு இதை நம்பி நாமலும் ஏறுனோம் பாரு நம்மளை சொல்லனும் ” என தயா காதில் முணுமுணுக்க அவளோ சிரித்தாள்.
தீபன் ” தாத்தா…..”
ம்ம்ம்
” தாத்தா “
” சொல்லுடா பேரா “
” நாம கார்லதான் போறோமா “
” ஏன்டா பேரா உனக்கிந்த சந்தேகம் எங்க தாத்தாவோட கார்லதான் நாம ஜம்முனு போய்ட்டிருக்கோம் “
தயா ” தாத்தா நீங்க என்னவேணா சொல்லுங்க நாங்க தாங்கிக்கிறோம் இதை காருன்னு மட்டும் பொய் சொல்லி எங்களை ஏமாத்தாதீங்க “
தாத்தா ” ஏன்டா தயாமா “
தயா ” தாத்தா அங்க பாருங்க நமக்கு பின்னாடி நடந்துவர ஆரமிச்சவங்க நமக்கு முன்னாடி நடந்துபோறாங்க “
ரதி ” தாத்தா ஆமைமாறி ஓடுதிந்த காரு “
தீபன் ” இந்த கார் ஆமைமாறி போனாகூட ஆமை குட்டிமாறில போகுது “
தாத்தா ” டேய் பேரா எப்படிபோனா என்ன போகுதுல்ல எழுவது வருஷமா நிக்காம ஓடுதிந்த காரு ” என்றவர் சொல்லி வாயை மூடவில்லை டமாஆஆஆஆஆஆல் என்ற சத்ததோடு கார் நின்றது நடுரோட்டில்.
தீபன் இறங்கி பார்க்க டயர் வெடித்திருந்தது. தாத்தாவை ஒரு முறைமுறைத்தவன் ” இதுதான் எழுவது வருஷமா நிக்காம ஓடுன லட்சனமா “
தாத்தா 😂😂😂 ” நின்னு நின்னு நிக்காம ஓடும்டா பேரா “
“இப்ப என்ன பண்றது “எனக் கேட்டான்.
பின்னாலோ ஹாரன் சத்தங்கள் காதை கிழித்தன.
அவர்கள் இருவரும் அந்த காரை நகற்ற அதுவோ நகருவேனா என்றது. கடுப்பான தீபன் ” கிழ இறங்குங்க டி எருமைங்களா. “
ரதி ” ரெண்டுபொன்னுங்களை கார்ல வெச்சி தள்ள முடியலை நீயெல்லாம் ஒரு பொண்ணவெச்சி எப்படிதான் காலம்தள்ளபோறியோ “
” ஏய் குண்டுபூசணி கடுப்புல இருக்கன் இன்னும் கடுப்பேத்தாத ” என்று சொல்ல இருவரும் இறங்கிட நால்வருமாய் சேர்ந்து காரை ஓரமாக தள்ளி நிறுத்தினர்.
தாத்தா மெக்கானிக் ஒருவருக்கு அழைக்க அவன் வரும்வரை காத்திருந்தனர்.
நெடுநேரமாகியும் அந்த மெக்கானிக் வரவில்லை.
தீபன் ” தாத்தா ஏன் இவ்ளோ நேரம் ஆகுது “
தாத்தா ” தெரியலைடா பேரா “
தயா ” தாத்தா நாங்க ரெண்டுபேரும் முன்னாடிபோறோம் நீங்க கார எடுத்திட்டு “
ரதி ” குட்டி ஆமை “
தயா ” ஹான் குட்டி ஆமை எடுத்திட்டு பின்னாடி வாங்க உங்க பேரன் உங்களோட இருப்பான். “
தீபன் ” ஏய் பழக்கபடாத ஊர் வழி தெரியாம எங்க போகபோறீங்க ரெண்டுபேரும் “
ரதி ” அட்ரஸ் தெரியும் நாங்க ஆட்டோல போய்க்கிறோம் “
அப்போது ஒரு வேளையாக அஜ்ஜூவும் தயாவும் தயாளினியும் அவள் நண்பர்களும் நிற்கும் இடத்திற்கு வர யாரோ நால்வர் நிற்பதை பார்த்தான் அஜ்ஜூ. கண்டுகொள்ளாமல் காரை விரட்ட சட்டென ரதியை பார்த்து காரை நிறுத்தினான்.
அஜ்ஜூ ” ப்ப்ஆஆஆஆஆஆ என்னா அழகு டா ” என்று அவளின் பின்னழகை ரசித்தான்.
தயாளன் ” ப்ச்ச்ச் ஆரமிச்சிட்டியா ச்ச்சீ வண்டிய எடு ” நிமிர்ந்து பார்க்காமல் சொன்னான்.
அஜ்ஜூ ” டேய் நீ பார்த்திட்டு சொல்லு” என்று அவன் தலையை திருப்பிவிட அவன் கண்ணில் பட்டதென்னவோ நம்ம தயாளினிதான்.
சாக்லேட் நிறத்தில் இளம்மஞ்சள் வண்ண சுடிதாரில் நின்றிருந்தாள்.
மைதீட்டிட்ட கூர்மையான கண்களும் கலையான முகமும் அவள் கண்களில் தெரியும் தெளிவையும் இமைக்காமல் பார்த்தான் பார்வையை விலக்காமல்.
அவள் அன்று சண்டையிட்டு செல்ல அன்று முழுவதும் அவன் நினைவில் இருந்தாள் அவள் அதன்பின் மறந்துவிட்டான் என அவன் நினைத்திருந்தான். இன்று அவளை பார்த்தும் மனம் அவன் பேச்சை கேட்காது பல்லிளித்து அவளை பார்த்து.
தயாளினிக்கு ஏதோ ஒரு குறுகுறுப்பு தோன்றியது அவளை யாரோ பார்ப்பதுபோலிருக்க சுற்றி முற்றி பார்க்க காரிலிருந்து வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தயா தெரிந்தான்.
அவளுக்கு சுள்ளென கோபம் வந்தது ” நம்மளையே இப்படி பாக்குறான் இன்னும் அழகான பொண்ணா இருந்தா எப்படி பாப்பானோ பொறுக்கி” என மனதில் நினைத்தவள் அவனை முறைக்க தயாளனோ முகத்தை பட்டென திருப்பிக்கொண்டான்.
” ச்சை என்னடா தயா ஒரு பொண்ணை இப்படியா வெச்ச கண்வாங்காம பாக்கிறது அவ நம்மளை பொறுக்கின்னு நினைச்சிறுப்பா ” என்று தனக்குதானே சொல்லிக்கொண்டான்.
அஜ்ஜூவிற்கு பெண்களை பார்த்தாலே மனதில் ஒரு மாதிரியான உந்துதல் பிறக்கும் ரதியை பார்த்ததும் அது வெளிவர அஜ்ஜூவோ இறங்கி செல்ல ” டேய் மரியாதையா வண்டி எடு ” என்றான் தயா.
” இரு மாமே அவங்ககூட ஒரு அழகான பொண்ணு இருக்கு என்ன ஏதுன்னு பாத்திட்டுவரன் என்ன இருந்தாலும் நம்மளோட சண்ட போட்டவங்களாச்சே ” என்றவன் அவன் பதிலுக்கு காத்திராமல் இறங்கி சென்றான்.
அஜ்ஜூ ” ஹாய் கேர்ள்ஸ் எனி பிராப்லம் “
தீபன் அவனை மேலேகீழே பார்த்து “இங்க நிக்கிற ரெண்டு ஆம்பளைங்க உன் கண்ணுக்கு தெரியலையா கேர்ள்ஸ்தான் தெரியுறாங்களா “
அஜ்ஜூ 😂😂 ” பெண்கள் நம் கண்கள் ஜி”
தீபன் ” உங்க வேலையை பார்த்திட்டுபோங்க ஜி”
அஜ்ஜூ ” இல்லை பொண்ணுங்களோட நடுரோட்டில நிக்கிறீங்களே அதான் கேட்டேன் “
தயா ” நாங்க நடுரோட்டில தானே நிக்கிறோம் உங்க வீட்டில இல்ல ல போங்க பேசாம ” பொறிந்தாள் காரிலிருந்தவன் மேலிருந்த கடுப்பில்.
ரதியோ அர்ஜூனையே ஆர்வமாய் பார்த்திருந்தாள். உயரத்திலும் நிறத்திலும் ஹிந்தி நடிகன் வருன்தவான் போல் இருந்தான். இதுவரை சிக்ஸ்பேக் வைத்து அழகாய் அம்சமாய் நடிகனை போலிருக்கும் ஆண்களை கண்டதில்லை. அவனை கண்டதும் அவள் ஆர்வத்தை கட்டுபடுத்த முடியவில்லை.
அஜ்ஜூவோ அவளை பார்த்து ஒரு மயக்கும் புன்னகையை சிந்திட அவளும் சிரித்து வைத்தாள்.
அஜ்ஜூ தயாளினியிடம் “இல்லைங்க சிஸ்டர் பொண்ணுங்க தனியா நிக்கிறீங்களேன்னுதான் கேட்டன் தப்பா எடுத்துக்காதீங்க ஏன் இவ்ளோ கோவம். “
தயா அவன் சிஸ்டர் என்று சொல்லவும் கொஞ்சம் அமைதியானாள்.
ரதியோ முந்திக்கொண்டு சொன்னாள் ” எங்க கார் பஞ்சர் ஆகிடுச்சி அதான் நிக்கிறோம் ஸார்.”
தீபன் முறைத்து உன்னை சொல்ல சொன்னாங்களா என்பதைபோல் பார்க்க ரதி ஈஈஈஈ என்று இளித்து முகத்தை திருப்பிக்கொண்டாள்.
” வாங்க நான் உங்களை டிராப் பண்ணிடுறன். “
தாத்தா ” இல்லங்க உங்களுக்கெதுக்கு சிரமம் எங்க பிரச்சனைய நாங்க பாத்துக்குறோம் பரவால்ல “
அஜ்ஜூவோ ரதியை பார்க்க அவளோ அவனோடு காரில் போவதை விரும்புவதுபோன்று கண்கள் மின்ன நின்றிருந்தாள்.
ரதி தயாவிடம் ” தயா நாம இவரோட போகலாம் டி இவரை பாத்தா நல்லவராதான் தெரியுது. “
தயா ” மூடிட்டு இரு யாரு எவன்னே தெரியலை நம்மளோட சண்டபோட்டவனுங்க இப்ப என்ன பண்ண நினைக்கிறானுங்களோ சும்மா இரு “
அவர்கள் பேசுவதை கேட்ட அஜ்ஜூ ” ஆமா உங்க பிரண்டு சொல்றது கரெக்ட்தான் நான் ரொம்ப நல்லவன். என் பிரண்டுமாறியில்ல அவன்தான் எதுக்கெடுத்தாலும் கோபபட்டு சண்டபோடுவன் நீங்க அன்னைக்கி நடந்ததை மறந்திடுங்க வாங்க போகலாம்”
தீபன் இவன் யாருடா காலங்காத்தால ராங்கிபண்ணிகிட்டு என நினைத்து கைகாட்டி ஒரு ஆட்டோவை நிறுத்தி அதில் இருவரையும் ஏற்றி தாத்தைவையும் ஏற்றிவிட்டான்.
” தாத்தா நீங்க இவங்களோட போங்க நான் காரை ரெடி பண்ணிட்டு கால்பண்ற அட்ரஸ் சொல்லுங்க “
” சரிடா பேரா “
அதற்குள் மெக்கானிக்கும் வந்துவிட்டார்.
தீபன் ” நல்லவரே உங்க உதவி செய்ற எண்ணத்துக்கு ரொம்ப நன்றி நாங்க அன்னெசசரி விஷியத்தைலாம் நியாபகமே வச்சிகிறதில்லை நீங்க கிளம்புறீங்களா காத்துவரட்டும் ” என்று நக்கலாக சொன்னான்.
தயா காரின் ஹாரனை அடித்து “வாடா ” என்று கத்தினான். அஜ்ஜூவும் தோளை குலுக்கிவிட்டு அவனோடு சென்றுவிட்டான்.
அஜ்ஜூ ” மச்சா அந்த பொண்ண பிக்அப் பண்ணலாம்னு நினைச்சா அவ பேர்கூட தெரிஞ்சிக்க முடியாமபோச்சே” என்று சீட்டை குத்தினான்.
தயா ” அடங்குறியா எங்கனாச்சும் எந்த பொண்ண பாத்தாலும் ஊத்திகிட்டு நிக்கிற என்னைகாச்சும் ஒருநாள் நல்லா வாங்கபோற யார்கிட்டயோ “
அஜ்ஜூ ” ஹே ஐ யம் எ பிளே பாய் மேன் “
தயா ” த்தூஉஉஉ அதுல என்னடா பெரும “
அஜ்ஜூ ” பெருமதான் மாமா பின்ன உன்னமாறி பொண்ணுங்களை கண்டாளே எரிஞ்சுவிழ சொல்றியா சரியான ரோபோடா நீ “
தயா ” டேய் ரோபோலாம் இல்லை யாரையாச்சும் பாத்தா தோனனும் இவங்க நமக்குதான்னு எனக்கு இப்பவரை அப்படி தோனலை ” என்றவன் மனதில் சட்டென தயாளினி வந்துபோனால் ஏனோ தெரியவில்லை அன்று அவள் முகத்தைகூட பார்க்கவில்லை காரைத்தான் பார்த்தான் இன்று முழுதாய் ஒரு நிமிடம் மட்டுமே பார்த்தான். அவனறியாமல் அவள் முகம் அவன் மனதில் நன்றாய் பதிந்துவிட்டிருந்தாள்.
அஜ்ஜூ ” அது எப்படி எவளபாத்தாலும் உனக்கு எதும் தோன மாட்டிக்கிது “
தயா ” தோனும் யாரவது ஒருத்தரை பாத்து இவ நமக்கானவன்னு தோனும் எனக்கு தோனுன அடுத்த செகன்ட் அவ என்னோடவளா இருப்பா “
அஜ்ஜூ ” அடபோடா இவனே பாத்தோமா ரசிச்சோமா நல்லா ருச்சோமான்னு போகிடனும் ஏன்னா பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்னு கேள்விபட்டதில்லை ஒருத்தியோடவே காலம் முழுக்க போர் மாமா “
தயா ” இப்படியே எல்லோரடையும் சுத்து நோய்வந்து சாவபோற “
அஜ்ஜூ ” எல்லாரும் ஒருநாள் சாகதான்போறோம் இருக்குறவரை சந்தோஷமா என்ஜாய் பண்ணிட்டுபோய்டனும் அதும் இளமையை தீரதீர அனுபவிச்சிடனும் பின்னாடி வருத்தபட்டா கிடைக்காது மாமே.”
தயா ” இந்த எண்ணம் ரொம்ப தப்புடா இதை நீ உணரும்போது ரொம்ப வருத்தபடுவ “
” நடக்கும்போது பாக்கலாம் “