Loading

அவனது கிண்டலை ரசித்தவளோ,”ஆமாங்க. நாங்க ரெண்டு பேருமே வேலைக்குப் போயிட்டு இருக்கோம். அப்போ லீவ் நாளில் தானே மீட்டிங்கை வச்சுக்க முடியும்?” என்று அவனிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

“ஹேய்! நான் சும்மா தான் ம்மா அப்படி சொன்னேன்” என்று அவளிடம் சரணடைந்து விட்டான் அற்புதன்.

 

“நானும் நீங்கப் பேசினதை சீரியஸாக எடுத்துக்கலைங்க” என்றதும் தான் அவனுக்குச் சீராக மூச்சு வந்தது.

 

“சரிம்மா. நீ உன் ஃப்ரண்ட்டைப் பார்க்க ஞாயிற்றுக்கிழமை எத்தனை மணிக்குக் கிளம்புவ? நான் உன்னை அங்கே கூட்டிட்டுப் போய் விட்றதுக்காகத் தான் கேட்கிறேன்” என்று அவளிடம் விசாரித்தான் அற்புதன்.

 

“காலையில் சீக்கிரமாகவே எழுந்து போகனும் ங்க” என்றவளிடம்,

 

“நான் வேலை முடிஞ்சு வந்ததும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு உங்க வீட்டுக்கு உன்னைக் கூட்டிட்டுப் போய் விட்டுட்டு வர்றேன்” என்று அவளிடம் சொல்லவும்,

 

“சரிங்க. நான் கிளம்புற நேரத்தை ஃபிக்ஸ் செஞ்சிட்டு சொல்றேன்” என்று உறுதி அளித்தாள் அவனது மனைவி.

 

அதன் பின்னர், தாங்கள் இருவரும் சந்திக்கப் போகும் நாள் மற்றும் நேரத்தை முடிவு செய்து விட்டனர் அந்த இணை பிரியாத தோழிகள்.

 

அதைத் தன் குடும்பத்திடம் உரைத்து விட்டுத், தங்கள் இருவருடைய சந்திப்பு இத்துணை வருடங்கள் கழித்து சந்திக்கப் போகும் தன் ஆருயிர்த் தோழியாகிய நிவேதிதாவிற்கு என்னப் பரிசுக் கொடுக்கலாம் என்பதை யோசித்து அதை வாங்கவும் முடிவெடுத்தவளோ,

 

இப்பொழுதெல்லாம், தன்னுடைய தினசரி நடவடிக்கைகளையும், அழுவல்களையும் கணவனிடம் பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தவளோ, இந்த விஷயத்தையும் அற்புதனிடம் சொல்லி விட்டாள் யக்ஷித்ரா.

 

“உங்களோட ஃப்ரெண்ட்ஷிப்பைப் பார்த்தால் எனக்கே பொறாமையாக இருக்கு ம்மா” என்று அவளிடம் கூறித் தன் இதயங் கனிந்தப் புன்னகையை உதிர்த்தான் அற்புதன்.

 

“ஆஹான்! நாங்களே ரொம்ப வருஷம் கழிச்சு இப்போ தான் ஒருத்தரையொருத்தர் பார்த்துக்கப் போறோம். நீங்க வேற இப்படி கிண்டல்  பண்றீங்களே?” என்று பொய்யான வருத்தத்துடன் கேட்டாள் அவனது மனைவி.

 

“நான் உன்னைச் சும்மா சும்மா கிண்டல் பண்ண மாட்டேன் ம்மா‌‌. இது என்னோட மனசில இருந்து ஆத்மார்த்தமாகச் சொன்னது” என்று அவளுக்குச் சொல்லிப் புரிய வைக்கவும்,

 

“ஓகே ங்க” என்றவளோ,

 

“நான் அவளுக்கு என்னக் கிஃப்ட் வாங்கித் தரப் போறேன்னு நீங்க எங்கிட்ட கேட்க மாட்டீங்களா?” என்று அவனிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

“எங்கிட்ட ஷேர் பண்ணனும்ன்னுத் தோனுச்சுன்னா மட்டும் சொல்லு” என்று கூறியவனிடம்,

 

“நாங்க ஸ்கூல் படிச்ச அப்போ எல்லாம் எங்களுக்கு அவ்வளவாக கிஃப்ட்ஸ் வாங்கத் தெரியாது ங்க‌. ஆனால், நாங்க எங்களோட ஸ்பெஷல் பர்சன் – க்கு அவங்களுக்குப் பிடிச்சதை வாங்கித் தருவோம். இப்பவும் அதைத் தான் செய்யனும்ன்னு நினைக்கிறேன் ங்க” என்று அவனிடம் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவிக்க,

 

“ம்ம். அப்படியே செய் யக்ஷூம்மா. அந்தப் பரிசை நீயும், நானும் போய் வாங்கலாமா?” என்று தன்னிடம் கேட்ட கணவனைப் பார்த்துச் சிரித்து விட்டாள் அவனுடைய மனைவி.

 

அதைக் கண்டு கொண்டவனோ,”என்னாச்சு ?”என்று அவளிடம் வினவினான் அற்புதன்.

 

“நாம ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து சுத்துறதுக்கு உங்களுக்கு ஏதாவது ஒரு காரணம் தேவைப்படுது! அதுக்கு ஏத்த மாதிரியே சூழ்நிலையும் அமைஞ்சிடுது ங்க. அதை நினைச்சா எனக்குச் சிரிப்புத் தான் வருது” என அவனுக்கு விளக்கிக் கூறினாள் யக்ஷித்ரா.

 

“அட! ஆமாம்! எனக்கு இது தோனவே இல்லை பாரேன்!” என்கவும்,

 

அவளது புன்னகை மேலும் விரிந்து மலர்ந்தது.

 

“ஹிஹி! நான் அந்தச் சூழ்நிலையை எனக்கு ஏத்த மாதிரி உபயோகிப்படுத்திக்கிறதை நீ கண்டுபிடிச்சிட்டியா?” என்று தன் குட்டு வெளிப்பட்டதை எண்ணி வெட்கிக் கொண்டே மனைவியிடம் கேட்டான் அற்புதன்.

 

“ஆமாம். நான் அதை எப்பவோ கண்டுபிடிச்சுட்டேன் ங்க” என்று அவனுக்குப் பதிலளித்தாள் யக்ஷித்ரா.

 

“அப்போ நான் அப்படி பண்றதை நிறுத்திட்றேன் ம்மா” என்று அவளிடம் சோகமாக உரைத்தான் அவளுடைய மணாளன்.

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இதுவும் நல்லா தான் இருக்கு. இனிமேல் இப்படியே நடந்துக்கோங்க” என்று தன் கணவனிடம் கூறியவளுக்கு நாணமும், புன்னகையும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்தது.

 

அதை மையலுடன் பார்த்தவன்,”சரி. இது வரைக்கும் உனக்குத் தெரியாமல் பண்ணதை இனிமேல் தெரிஞ்சுப் பண்றேன்” என்று சொல்லிக் கண்ணடித்தான் அற்புதன்.

 

“எனக்கு இப்போ தான், சில விஷயங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியுது ங்க” என்று அவனிடம் இறுக்கமாக உரைத்தவளிடம்,

 

“என்ன யக்ஷூம்மா? ஏன் இப்படி சொல்ற?” என்று அவளிடம் புரியாத பாவனையுடன் வினவினான் அற்புதன்.

 

“என்னோட ஃபேமிலி, ஃப்ரண்ட்ஸ் இவங்க எல்லார் கூடயும் எங்கேயாவது போய் நல்லா என்ஜாய் பண்ணிட்டு, நேரத்தைச் செலவழிச்சிட்டு வந்திருக்கேன். ஆனால், நாம ரெண்டு பேரும் எங்கேயும் போனதே இல்லையே ங்க?” என்று அவனிடம் தன் மனக்குறையைப் பகிர்ந்து கொண்டாள் யக்ஷித்ரா.

 

அதைக் கேட்டதும், அவனுடைய முகமோ, “உங்கிட்ட உண்மையைச் சொல்லியே எனக்குப் பழக்கம் ஆகிடுச்சு ம்மா. நான் இப்போ என்னப் பண்றது?” என்றவனிடம்,

 

“உண்மையவே சொல்லுங்க” என்றாள் அவனது மனைவி.

 

“நீ சொன்ன மாதிரி நாம் எங்கேயும் போனதும் இல்லை, நமக்கான தனிப்பட்ட நேரத்தைச் செலவழிக்கவும் இல்லை” என்று அவளிடம் உண்மையைக் கூறி விட்டான் அற்புதன்.

 

“அப்போ நிவியைப் பார்த்துட்டு வந்ததும் நாம எங்கேயாவது போய்ச் சாப்பிட்டுட்டோ, படம் பார்த்துட்டோ வரலாமா ங்க?” என்று தன்னிடம் தயக்கத்துடன் உரைத்தவளைக் கனிவுடன் பார்த்தவனோ,

 

“இப்போதைக்கு எதுவும் வேண்டாம். இன்னொரு நாள் பார்த்துக்கலாம். நாம கடைக்கு எப்போ போகலாம்ன்னு மட்டும் சொல்லு” என்று கேட்டான் அவளது கணவன்.

 

“நான் இன்னைக்குச் சாயந்தரம் வீட்டுக்கு வர்றேன். நீங்க ஆஃபீஸூக்குப் போகிறதுக்கு இரண்டு மணி நேரம் முன்னாடி போயிட்டு வந்துடலாமா?” என்று அவனிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

“சரிம்மா” என்றவனுக்குத் தன் மனைவி தன்னுடன் இயல்பாகப் பேசிச் சிரிக்கப் போகும் காலம் வெகு தூரமில்லை என்ற நம்பிக்கை பிறந்தது.

 

அதனாலேயே, இனி வரும் காலங்களில் அவளுடன் செல்லப் போகும் பயணங்கள் மற்றும் செலவு செய்யப் போகும் நேரத்தை நினைத்து இப்போதிருந்தே மகிழ்ச்சியுடன் சுற்றத் துவங்கி விட்டவனோ, அதே சந்தோஷமான மனநிலையுடன் வேலைக்குக் கிளம்பிச் சென்றான் அற்புதன்.

 

அதற்குப் பிறகு வந்த நாட்களில், மாலை நேரத்தில் தன்னுடைய வேலை முடிந்து வீட்டிற்கு வந்த யக்ஷித்ராவோ, தனது மாமியாரிடம்,”அவர் கிளம்பிட்டாரா அத்தை?” என்று தன் கணவனைப் பற்றி விசாரித்தாள்.

 

“கிளம்பிட்டு இருக்கான் ம்மா” என்று அவளிடம் உரைத்து விடவும், அவனது வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

 

சில நாழிகைகளுக்குப் பின்னர், தன் அறையிலிருந்து வெளிப்பட்டு,”ஹாய் யக்ஷூ!” என்று அவளைப் பார்த்துப் புன்னகையுடன் கூறினான் அற்புதன்.

 

“ஹாய் ங்க. நீங்க உட்கார்ந்து சாப்பிடுங்க. அதுக்கப்புறம், நாம கிளம்பிப் போகலாம்” என்று அவனுக்கு அறிவுறுத்தினாள் யக்ஷித்ரா.

 

அதைக் கேட்டவுடன்,”நீங்க ரெண்டு பேரும் வெளியே எங்கேயும் போறீங்களா?” என்று கேட்டு விட்டு,

 

“நீ ஆஃபீஸூக்குப் போகலையா டா?” என்று தன் மகனிடம் வினவினார் கீரவாஹினி.

 

“போகனும் மா. அதுக்கு முன்னாடி யக்ஷூ அவளோட ஃப்ரண்ட்டுக்குக் கிஃப்ட் வாங்கனும்ன்னு சொன்னா, அதை நாங்கப் போய் வாங்கிட்டு வந்துடறோம்” என்று அவரிடம் கூறினான் அற்புதன்.

 

“அப்படியா? சரி. போயிட்டு வாங்க” என்று கூறி அவனுக்கு உணவு பரிமாறி உண்ண வைத்தார் அவனது அன்னை.

 

அவருக்குத் தனது மகனும், மருமகளும் ஒன்றாக சேர்ந்து இப்படி வெளியே செல்வது மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. 

 

ஏனென்றால், அவருக்குத் தெரிந்து, அவனும், அவளும் இணைந்து யக்ஷித்ராவின் வீட்டிற்கும், அவளது அலுவலகத்திற்கும் மட்டுமே சென்று வந்திருக்கிறார்கள். இப்போது தான், இருவரும் அந்த இடங்களைத் தவிர்த்து பொதுவான இடத்திற்குச் செல்கிறார்கள் என்பதை அறிந்தவுடன் தான் அவரது மனம் இலேசானது.

 

தான் உணவுண்டு முடித்ததும்,”நீ காஃபி குடிக்கலையா?” என்று தன் மனைவியிடம் கேட்டான் அற்புதன்.

 

“கடைக்குப் போயிட்டு வந்து குடிச்சிக்கிறேன் ங்க” என்று சொல்லி விட்டாள் யக்ஷித்ரா.

 

“ஓகேம்மா” என்ற அற்புதனோ,

 

 தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு அவளுடன் வீட்டை விட்டு வெளியே வந்து, அவனது இரு சக்கர வாகனத்தை இயக்கி விட்டுக் காத்திருக்கப் புன்னகையுடன் அதில் ஏறி அமர்ந்து கொண்டதும்,

 

உடனே வண்டியை இயக்கியவனுடைய தோள்களில் தன்னுடைய விரல்களை அழுத்தமாகப் பதித்துக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

அந்த ஸ்பரிசம் தன்னுடைய முழு சரீரத்தையும் இனிமையான உணர்வால் ஆட்டி வைப்பதை உணர்ந்தவனுக்கு மனைவிக்குத் தன் மேல் பிடிப்பு உருவாக தொடங்கி விட்டது என்பதை அறிந்து கொண்டவனோ,

 

அந்த அழகான தருணத்தை ரசித்தவாறே அவளுடன் பயணம் செய்தான் அவளது கணவன்.

 

அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஒன்றின் முன்னால் தங்களது வண்டியை நிறுத்தி விட்டு, அதிலிருந்து இறங்கி ஸ்டோருக்குள் நுழைந்தனர் அற்புதன் மற்றும் யக்ஷித்ரா.

 

“அவங்களுக்கு என்னப் பிடிக்கும்ன்னு உனக்கு ஞாபகம் இருக்குல்ல?” என்று கேட்டுக் கொண்டே பரிசுப் பொருட்கள் இருக்கும் தளத்திற்கு அவளுடன் நடந்தான் அவளது கணவன்.

 

“அவளுக்கு அதிகமாக சாமி ஃபோட்டோஸ் வாங்குறது தான் பிடிக்கும். அதனால், அது ஒன்னு வாங்கிக்கலாம். அப்பறம், வேற ஏதாவது ஒரு கிஃப்ட் வாங்கனும் ங்க” என்றவளிடம்,

 

“என்ன சாமி ஃபோட்டோவை வாங்கலாம்?” என்க,

 

“அவளுக்கு ரொம்ப பிடிச்ச கடவுள் விநாயகர். அப்பறம், முருகன், கிருஷ்ணன் இந்த ரெண்டு கடவுள்களும் பிடிக்கும்ன்னு சொல்லுவா” என்றாள் யக்ஷித்ரா.

 

“ஓஹ். அப்போ அதையே வாங்கிடலாமா?” என்று அவளிடம் வினவினான் அற்புதன்.

 

“சரிங்க. அதோட சேர்த்து இன்னும் ஏதாவது வாங்குவோம்” என்று சொல்லிக் கொண்டே ஒவ்வொரு பொருளாகப் பார்வையிட்டாள் அவனது மனைவி.

 

அங்கேயிருந்த ஒரு முருகன் சிலை இவளது கண்களை மிகவும் ஈர்த்தது. அதனால், அதை எடுத்துப் பார்த்தவாறே, தன் கணவனை அழைத்து,”இது நல்லா இருக்குப் பாருங்க” என்று அவனிடம் அதைக் காட்டவும்,

 

“ம்ம். நல்லா இருக்கு ம்மா” என்றதும், அந்தச் சிலையைத் தனியாக எடுத்து வைத்து விட்டு, இன்னும் சிலவற்றைப் பார்க்கத் தொடங்கி விட்டாள் யக்ஷித்ரா.

 

அவள் அந்தப் பொருட்களைப் பார்த்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவளுக்கானப் பரிசு ஒன்றை மனைவிக்குத் தெரியாமல் தேர்ந்தெடுத்தவனோ,”எனக்கு ஒரு கால் வருது ம்மா. நான் போய்ப் பேசிட்டு வர்றேன்” என்று அவளிடம் சொல்லி விட்டுப் போய் அந்தப் பரிசுக்கானப் பணத்தைக் கட்டி வாங்கிப் பத்திரமாக ஒளித்து வைத்துக் கொண்டு வந்தச் சமயத்தில்,”இதையும் எடுத்துருக்கேன் ங்க. எப்படி இருக்கு?” என்று அவனிடம் கேட்கவும்,

 

“சூப்பரா இருக்கு ம்மா. இன்னும் ஏதாவது பார்க்கிறியா?” என்றான் அற்புதன்.

 

“இல்லை ங்க. அவ்வளவு தான்” என்று அவனிடம் கூறி விட்டதால், அவ்விருவரும் பணம் கொடுக்கும் இடத்திற்குச் சென்றார்கள். 

 

அந்தப் பொருட்களுக்கானப் பணத்தைச் சொல்லியதும், அதைக் கொடுப்பதற்காகத் தன்னுடைய பணப்பையை எடுத்த அற்புதனிடம்,”இது என்னோட ஃப்ரண்ட்டுக்கு நான் தரப் போற கிஃப்ட். அதனால், நானே பணம் கொடுக்கிறேன் ங்க” என்று அவனிடம் கேட்டுக் கொள்ள,

 

“சரிம்மா” என்றதும், தானே பணத்தைக் கட்டிப் பொருட்களைப் பெற்றுக் கொண்டாள் யக்ஷித்ரா.

 

அதன் பின்னர், அவர்கள் இருவரும் வண்டியில் ஏறித் தங்களது இல்லத்திற்குப் போய்ச் சேர்ந்தனர்.

 

“கிஃப்ட்ஸ் எல்லாம் வாங்கியாச்சா?” என்று அவர்களிடம் விசாரித்தார் கீரவாஹினி.

 

“ஆங்! வாங்கிட்டு வந்துட்டோம் அத்தை” என்றாள் அவரது மருமகள்.

 

“நீ கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு அப்பறம் ஆஃபீஸூக்குக் கிளம்பிப் போடா” என்று தன்னுடைய மகனுக்கு அறிவுறுத்தினார் அகத்தினியன்.

 

“சரிப்பா” என்றவன், தன் மனைவியுடன் அறைக்குப் போனவனோ,

 

கடைக்குப் போவதால், டீ ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து சென்றிருந்ததால், அலுவலகத்திற்குக் கிளம்பும் நேரத்தில் அதற்கேற்ற உடையை எடுத்து மேஜையின் மேல் வைத்தான் அற்புதன்.

 

“இஸ்திரி போடலையா ங்க?” என்று அவனிடம் வினவினாள் யக்ஷித்ரா.

 

“அந்த அளவுக்குச் சுருக்கம் இல்லை ம்மா” என்று கூறியவனோ,

 

அவன் அலுவலகத்திற்குக் கிளம்புவதற்கு இன்னும் அரை மணி நேரம் இருந்ததால், ஹாலிற்குச் சென்று சோஃபாவில் அமர்ந்து கொண்டுத் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்வையிடத் தொடங்கி விட்டான் அற்புதன்.

 

அப்போது, தன் தோழி நிவேதிதாவிற்காக வாங்கிய பரிசுப் பொருட்களைத் தன் அத்தை, மாமாவிடம் காட்டிப் பேசிக் கொண்டிருந்தாள் யக்ஷித்ரா.

 

தன் மனைவிக்காக வாங்கிய பரிசுப் பொருளை அவளிடம் எப்போது கொடுக்கலாம்? என்பதைப் பற்றிய யோசனையில் தான் ஆழ்ந்திருந்தவனோ,

 

அவள் தன்னுடைய தோழியைப் பார்த்து விட்டு வந்ததற்குப் பிறகு அவளிடம் அதைத் தந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்தான் அற்புதன்.

 

  • தொடரும் 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்