Loading

அத்தியாயம் 15

உத்ஷவி ஏதோ கிசுகிசுக்க, அதனைக் கேட்டு நக்கல் புன்னகை வீசிய அக்ஷிதா எழுந்து நீல நிற கோர்ட் ஆசாமியை நோக்கிச் சென்றாள்.

அவனது டேபிளில் சென்று அமர்ந்து ஏதோ பேசிட, அவனும் சிரித்துப் பேசினான்.

பின், இருவருமாக எங்கோ எழுந்துச் செல்ல, சில நிமிடங்களில் மீண்டும் தனது இடத்தில் வந்து அமர்ந்தவள், “ஒரு ஆப்பிள் ஜுஸ் ப்ளீஸ்” என்றாள் திமிருடன்.

சஜித் அவளை முறைத்து, “அதான் பேமெண்ட் குடுத்தாச்சுல்ல. அதுல இருந்து வாங்கிக்க.” என்றான் நக்கலுடன்.

“கஞ்சப்பிசுனாரி. உண்மையை சொல்லுங்க நீங்க மூணு பேரும் ராஜ வம்சத்தை சேர்த்தவனுங்களா, இல்ல எங்களை மாதிரியே திருடிப் பொழைக்குற திருட்டுக் கும்பலா?” என சந்தேகத்துடன் கேட்டதும், ஸ்வரூப்பின் அனல் பார்வை அவளைச் சுட்டது. சஜித்தும் ஜோஷித்தும் அதே கனலுடன் அவளை முறைத்து வைக்க,

“சரி சரி… காண்டாகாதீங்க. நீங்க கேட்டதை எடுத்துட்டேன். இங்கயே தரவா?” எனக் கேட்டு ஜீன்ஸ் பாக்கெட்டினுள் கையை நுழைக்க, ஸ்வரூப் “இங்க வேணாம். ரூம்க்கு போலாம்.” என்று எழுந்தான்.

மற்றவர்களும் அவன் பின்னே செல்ல, அந்த ஹோட்டலின் உள்ளேயே மின்தூக்கி வழியே ஐந்தாம் மாடியை சென்றடைந்தனர்.

அங்கு, ஒரு அறையை தனது ஆக்சஸ் கார்ட் பயன்படுத்தி திறக்க, மூன்று பெண்களும் அந்த நவீன அறையை விழி விரித்துப் பார்த்தனர்.

உள்ளே சென்றதுமே, சில்லென ஏசியின் குளுமை அவர்களை குளுகுளுக்க வைக்க, உத்ஷவி தான், ‘இதே ரூம்ல அடைச்சு வைச்சு, மூணு வேளை சோறு குடுத்தா, இங்கயே செட்டில் ஆகிடலாம் போலயே…’ என்ற தீவிர சிந்தனையில் இருக்க, ஸ்வரூப் அதனைக் கலைத்தான்.

“திருடுனதை குடு.” என அக்ஷிதாவிடம் கேட்க,

அவளும் எடுத்துக் கொடுத்தாள்.

“சுத்த வேஸ்ட் ஸ்வரூப் அவன். பர்ஸ்ல பத்து பைசா இல்ல. வெறும் கார்டா வச்சு இருக்கான். இந்த மாதிரி ஆளுங்கனால தான், என் பிக் பாக்கெட் தொழில்ல பெரிய லாஸே ஆகிடுச்சு.” என பெரியதாக பீல் செய்தவளை சஜித் நொந்துப் பார்த்தான்.

அவளோ மேலும் தொடர்ந்து, “ஆனா, உன் தம்பி அப்படி இல்ல. ரொம்ப நல்லவன். இன்னும் அந்த பர்ஸ்ல இருந்த காசை எண்ணி முடிக்க முடியலைன்னா பார்த்துக்கோ, அதுல எவ்ளோ வச்சு இருந்துருக்கான்னு.” என்று விட்டு, “ஸ்வீட் பாய். அடுத்து நீ பஸ்ல டிராவல் பண்ணும் போது எனக்கு சொல்லி அனுப்பு காட்ஸில்லா.” என்று சஜித்திடம் கோரிக்கை விடுக்க, அவன் கொலைவெறியுடன் நின்றான்.

ஸ்வரூப் அவளது பேச்சுக்களைக் கேட்டபடி, பர்ஸினுள் ஏதோ ஆராய, உத்ஷவி தான், ‘காசே இல்லாத பர்ஸுக்குள்ள எதை நோண்டிட்டு இருக்கான் இவன்…’ என எட்டிப் பார்த்தாள்.

அவன் நிமிர்ந்து அவளைப் புருவம் இடுங்க முறைத்ததில், சட்டென தலையைப் பின்னால் இழுத்துக் கொண்டவள், ‘ரொம்பத்தான்’ என சிலுப்பினாள்.

சில நொடிகள் தேடலுக்குப் பின், அவன் தேடிய பொருள் அகப்பட, அதனைக் கையில் எடுத்தான். சிறிய அளவிலான சிப் அது.

அதனைக் கண்டதும் வெடுக்கென பிடுங்கிய அக்ஷிதா, “என்னது இது? இப்போ எல்லாம் ஏடிஎம் கார்டை கூட மினியேச்சர் சைஸ்ல பண்ண ஆரம்புச்சுட்டாங்களா?” என்றாள் வியந்து.

அவளிடம் இருந்து பட்டென அதனைப் பறித்த சஜித், அவளுக்குப் பதில் சொல்லாமல், அந்த அறையில் இருந்த மடிக்கணினியில் அதனைக் கனெக்ட் செய்தான்.

விஹானா தான், “அதுக்கு பேர் சிப் டார்லிங். கம்பியூட்டர்ல யூஸ் பண்ணுவாங்க.” என்றதும், “ஓ” என்றாள்.

உத்ஷவியும், “மெமரி ஸ்டோரேஜ், சில டேட்டாஸ் இதை எல்லாம் ஸ்டோர் பண்ண யூஸ் ஆகும் டார்ல்ஸ்.” என விளக்கம் கொடுத்ததும், ஸ்வரூப் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“சிப் பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சு இருக்க?” என மெச்சும் பார்வை வீச, அது அவள் மனதை வருடிச் சென்றதோ என்னவோ, “இன்டர்நெட்ல ஹேக்கிங் பத்தி படிக்கும் போது, இதைப் பத்தியும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டேன்.” என்றாள் வேகமாக.

“டெக்னாலஜி தெரிஞ்ச திருடி” ஜோஷித் அவளை வாரி விட்டு,

“அதுசரி, எப்படி பர்ஸை திருடிட்டு வந்த. அவன் ஏதோ நல்லா தெரிஞ்ச மாதிரி உங்கிட்ட பேசுனான்” எனக் கேட்டான் அக்ஷிதாவிடம்.

“அதுவா, அது ஷவி ஐடியா தான். அவனை ஒரு பொண்ணு கூப்பிடுதுன்னு சொல்லி, லேடீஸ் ரெஸ்ட்ரூம்க்கு அனுப்பி விட்டேன். அங்க அவனைப் பார்த்த கேர்ள்ஸ், சத்தம் போட்டு அவனைத் திட்ட ஸ்டார்ட் பண்ண, அவன் கேர்ள் பிரெண்டை பார்க்க வந்தேன்னு சமாளிக்க, இந்த கேப்ல நான் ஆட்டைய போட்டுட்டு வந்துட்டேன்.” என்றாள் காலரை தூக்கி விட்டு.

ஸ்வரூப், உத்ஷவியை அமைதியாக ஏறிட்டு, “அவனோட கேர்ள் ப்ரெண்ட் பத்தி உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டதில்,

“நம்ம ஹோட்டலுக்குள்ள நுழையும் போது தான், அவன் ஹோட்டல் வாசல்ல ஏதோ ஒரு பொண்ணு கூட வழிஞ்சுட்டு இருந்தான். அந்த பொண்ணும் இவன் கூட சண்டை போட்டு, அவனைக் கெஞ்ச விட்டுட்டு இருக்கும் போது, அவன் அவளை ரிதான்னு கூப்பிட்டான்.

அப்பறம் நம்ம உள்ள உட்காரும் போது, அவன் மட்டும் தான் கொஞ்சம் சோகமா உள்ள வந்தான். நீயும் கரெக்ட்டா அவன்கிட்டயே பிக்பாக்கெட் அடிக்க சொன்ன. அதான், இவளை ரிதாவோட பிரெண்டுன்னு போய் பேசச் சொல்லி, அவள் இவனை தனியா மீட் பண்ண வர சொன்னான்னு ஒரு பிட்டை போட்டேன். அந்த லூசும் அதை நம்பி இளிச்சுக்கிட்டே லேடீஸ் டாய்லட்டைக்குள்ள போய் மாட்டிக்கிச்சு.” என நக்கலுடன் கூறியதில், விஹானாவும் அக்ஷியும் சிரித்தனர்.

ஸ்வரூப் தான் விடாமல், “நீ ஏன் அவனை வாட்ச் பண்ணுன?” எனக் கூர்மையுடன் வினவ,

“நான் அவனை மட்டுமா வாட்ச் பண்ணுனேன். ஹோட்டல்க்கு வந்த எல்லாரையும் தான் வாட்ச் பண்ணுனேன். உனக்கு ரைட் சைட் டேபிள்ள, ஒரு யங் கபில் இருந்தாங்க. ஆனா, அவங்க சண்டை போட்டுட்டு, ஏதோ கடமைக்காக பேசிக்கிட்டாங்க.

அப்பறம் எங்களுக்கு பின்னாடி இருக்குற டேபிள்ல ஒரு பெரியவரு உட்காந்துருந்தாரு. அந்தாளுக்கு எப்படியும் 50 வயசு இருக்கும். ஆனா வயசு எல்லாம் உடம்புக்குத் தான் கண்ணுக்கு இல்லைன்ற ரேஞ்சுல, ஹோட்டல்ல இருந்த அத்தனை பொண்ணுங்களோட செஸ்ட்…” எனக் கூறிக்கொண்டே வந்தவள், சட்டென நிறுத்தி, “எல்லா பொண்ணுங்களையும் தப்பா பார்த்துட்டு இருந்தான். பொதுவா நான் யார் வீட்டுக்காச்சும் திருட போனா, ஒரு வாரமாவது அவங்களை பாலோ பண்ணுவேன். டீடெய்ல்ஸ் தெரிஞ்சுப்பேன். அதனால, எங்க போனாலும் எல்லாரையும் வாட்ச் பண்றது எனக்கு பழக்க தோஷமாகிடுச்சு. உன் விஷயத்துல தான், நான் மிஸ் பண்ணிட்டேன்.” என்றாள் முகத்தைச் சுருக்கி.

ஜோஷித்தோ அவளை மேலும் கீழுமாகப் பார்த்து, “நல்ல அறிவோட தான் இருக்க. அதை நல்ல விஷயத்துக்கு யூஸ் பண்ணலாம்ல.” எனக் கூறியதில், “நான் நல்ல விஷயத்துக்கு தான் யூஸ் பண்றேன் ஜோ.” என்றாள் தீவிரமாக.

அவன் சுவாரஸ்யத்துடன் பார்த்ததில், “ஐ மீன், என் நல்லதுக்கு.” என்று அவனுக்கு பல்ப் கொடுத்திட, விஹானா சத்தமாக சிரித்து, ஜோஷித்தின் கடும் சினத்திற்கு ஆளானாள்.

சஜித் மடிக்கணினியிலேயே புதைந்து, பின் எரிச்சலாகி, “இந்த சிப்ல இருக்குறது எல்லாமே க்ராஷ் ஆகி இருக்கு.” என்றதும்,

“அப்போ இந்த திருட்டே தேவையில்லாத ஆணியா?” என விஹானா கேட்டு வைக்க,

“அப்படின்னு சொல்ல முடியாது. கிராஷ் ஆனதை திரும்ப ரெகவர் பண்ணலாம்…” என்று ஜோஷித்தைப் பார்க்க, அந்நேரம் ஸ்வரூப்பின் அலைபேசி அலறியது.

சித்தாரா தான் அழைத்திருந்தார். ஒரு சில நொடி யோசனைக்குப் பிறகு, போனை எடுத்தவன், “சொல்லுங்கம்மா. அப்பா சித்தப்பா எல்லாம் எப்படி இருக்காங்க.” சாதாரணமாகக் கேட்க முனைந்தாலும் குரலில் ஒரு பதற்றம் இழையோடியது.

“உன் சித்தப்பா ரெண்டு பேருக்கும் இப்போ கொஞ்சம் நினைவு திரும்பி இருக்கு. ஆனா, அவருக்கு எப்போ நினைவு திரும்பும்ன்னே தெரியலைன்னு சொல்றாங்கப்பா. மனசே ஆற மாட்டேங்குது.” என்னும் போதே சித்தாராவின் விசும்பல் சத்தம் கேட்டது.

“நீங்க மூணு பேரும் எப்போப்பா வர்றீங்க. உங்களை பார்க்கணும் போல இருக்கு” என்ற சித்தாராவிடம் இருந்து போனை வாங்கிய, சஜித்தின் தாய் உமையாள், “ஸ்வரூ… எப்படிப்பா இருக்கீங்க. இவங்களை இப்படி ஒரு நிலைமைக்கு தள்ளுனது யாருன்னு தெரிஞ்சுதா?” என ஆதங்கடத்துடன் கேட்டிட,

“தேடிக்கிட்டே இருக்கோம் உமாம்மா. கூடிய சீக்கிரம் உங்க கண்ணு முன்னாடி நிறுத்துறோம்.” என்று உறுதிக் கொடுத்திட, கனகரூபிணி போனை வாங்கினார். ஜோஷித்தின் தாயார்.

“நீங்க மூணு பேரும் எங்க கண்ணு முன்னாடி நடமாடுனா போதும்ப்பா. உங்க முகத்தையாவது வந்து காட்டிட்டு போங்க” என்றார் ஏக்கமாக.

“வர்றோம் ரூபிம்மா. கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு வர்றோம். போனை லௌட் ஸ்பீக்கர்ல போடுங்க.” என்றவன்,

“நீங்க தைரியமா இருந்தா தான் எங்களால நிம்மதியா இருக்க முடியும். நம்மளை சுத்தி எதுவும் சரி இல்ல. நமக்கும், நம்மளை நம்பி இருக்குற மக்களுக்கும் பெரிய ஆபத்து இருக்கு. அதை சரி செய்ய தான் இங்க வந்து இருக்கோம். ப்ளீஸ் அம்மாக்களா… எங்களுக்காக இந்த சிட்டுவேஷன தைரியமா பேஸ் பண்ணுங்க. அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் எதுவும் ஆகாது. நாங்க பிரச்சனையை முடிச்சுட்டு ஊருக்கு வரும் போது எங்களை ஜம்முன்னு வரவேற்பாங்க.” என்னும் போது சித்தாரா ஏதோ பேச வர,

“என்மேல நம்பிக்கை இருக்கு தானம்மா?” எனக் கேட்டான் ஆழ்ந்த குரலில்.

அதற்கு மேல் அவரால் எதுவும் பேச முடியாது போக, ரூபிணி தான், “நாங்க இங்க பாத்துக்குறோம் ஸ்வரூ. நீங்க பத்தரமா இருங்க. கூடிய சீக்கிரம், எல்லாமே சரி ஆகிடும். நீ கவலைப்படாத தங்கம். சித்துவும் கொஞ்ச நேரத்தில சரி ஆகிடுவா.” எனக் கனிவுடன் பேசியவர், “ஜோ உன் கூட இருக்கானா?” எனக் கேட்டார்.

“ம்ம் இருக்கான். ஆனா என் கூட இல்ல. பக்கத்து ரூம்ல இருக்கான்.” என்று ஜோஷித்தைப் பார்த்தபடி கூற, ஜோஷித் அவனைக் கண்டுகொள்ளாமல், மறுபுறம் திரும்பிக் கொண்டான்.

“சஜியும் இல்லையா?” எனக் கேட்டவரிடம், “அவனும் இல்ல என் கூட…” என அழைப்பைத் துண்டித்தவனின் கூற்றில், ஆற்றாமையும் சகோதரர்களைப் பிரிந்த வலியும் ஒருங்கே தோன்றியது.

“இவனுக்கு கொழுப்பை பார்த்தியாடி… நம்மளை எல்லாம் பார்த்தா இவனுக்கு ஆபத்து மாதிரி இருக்கு போல.” என அக்ஷிதா உத்ஷவியிடம் முணுமுணுக்க,

அவளும் ஸ்வரூப்பிடம் சண்டைக்கு சென்றாள்.

“டேய் டைனோசர்… ஒரே ஒரு டாக்குமெண்ட் தான திருட வந்தோம். என்னமோ உங்களை போட்டு தள்ள கத்தியோட உங்க முன்னாடி நிக்கிற மாதிரி எங்களை பார்த்து ஆபத்துன்னு சொல்ற.” என முறைத்திட,

அவனோ அத்தனை நேரமும் இருந்த இறுக்கம் மறைய, சிறு கேலி நகையுடன், “கத்தியோட என் முன்னாடி நின்னா ஆபத்து உனக்கு தான். எனக்கு இல்ல விஷா.” என்றான் அமர்த்தலாக.

அவனுக்கு அழகு காட்டியவள், “சரி இப்ப எங்க வேலை முடிஞ்சுதா, நாங்க கிளம்பட்டுமா?” என்று அதிலேயே நின்றாள்.

“முடிஞ்சுதாவா? இப்ப தான ஆரம்பிச்சு இருக்கு. இங்க இன்னும் ஒரு சின்ன வேலை இருக்கு. அதை முடிச்சுட்டு நம்ம வேற இடத்துக்கு போறோம்.” என்றவன், “இந்த சிப்ல இருக்குற டீடெய்ல்ஸ கூடிய சீக்கிரம் டீகோட் பண்ணுங்க…” என்று ஜோஷித்தைப் பாராமல் கூறி விட்டு, வெளியில் நகன்றான்.

அத்தியாயம் 16

சஜித்தும் மடிக்கணினியை அப்படியே வைத்து விட்டு, நிமிர்ந்து பாராமல் அங்கிருந்து சென்று விட, மூன்று பெண்களும் தான், விழித்தபடி நின்றனர்.

அக்ஷிதா, “இன்னும் ஒரு சின்ன வேலையா…? திரும்ப பிக் பாக்கெட் அடிக்க சொல்லுவானுங்களோ.” எனக் கடுப்புடன் கேட்க,

விஹானா, “இருக்கும் டார்ல்ஸ்.” என்னும் போதே, ஜோஷித், “இது என் ரூம். என் அஸிஸ்டன்டை தவிர மத்த ரெண்டு பேரும் வெளில போறீங்களா? 502 அண்ட் 503 ல மத்த ரெண்டு பேரும் இருப்பாங்க.” என்றதும், விஹானா அவசரமாகத் தடுத்தாள்.

“என்னது, இந்த ரூம்ல உன் கூட இருக்கணுமா?” என மிரண்டிட, அவனோ விழிகளை நிமிர்த்தி அர்த்தப்பார்வை வீசினான்.

அதில் ஒரு மிரட்டலும் கலந்திருக்க, “ஹி ஹி… அதுக்கு என்ன தாராளமா இருந்துட்டா போச்சு. டார்ல்ஸ் ரெண்டு பேரும் வெளில போறீங்களா?” என அசட்டுச் சிரிப்புடன் எரிச்சலும் கலந்து கூற, உத்ஷவி அவளை முறைத்து விட்டு, “எங்களுக்கு வழி தெரியல. அப்படியே நீ வந்து ரூம்ல விட்டுட்டு போறியா.” என்றாள் கள்ள நகையுடன்.

“சரி வா…” என்று மூவருமே அறையை விட்டு வெளியில் செல்ல, உத்ஷவி அவசரமாக மின்தூக்கிக்கு சென்றாள்.

விஹானா புரியாமல், “என்னடி செய்ற?” எனக் கேட்க, “பார்த்தா தெரியல தப்பிச்சு போறோம். கையில காசு இருக்கு. அப்டியே ஒரு பஸ் பிடிச்சு சென்னைக்கு போறோம்.” என்றதும், “சூப்பர் ஷவி. இதான் சரியான நேரம்.” என்று அக்ஷிதாவும் அவர்களுடன் இணைந்து கொள்ள, விஹானா திகைத்தாள்.

‘இது மட்டும் தெரிந்தால், ஜோஷித் தன்னை பற்றிய உண்மையைக் கூறி விடுவானோ’ எனத் தயங்கிட, பின் தப்பித்து விட்டால், தன்னைத் தேடியா வரப்போகிறான்… என்ற அசட்டுத் தன்மையுடன், ஹோட்டலை விட்டு வெளியில் செல்லப் போகையில், உத்ஷவியின் தலை முடி ஸ்வரூப்பின் கைகளில் சிக்கி இருந்தது.

“ஆ…” எனக் கத்தியவள், “விடுடா” எனத் துள்ளிட, “உனக்கு எத்தனை தடவை சொல்றது. என்கிட்ட இருந்து தப்பிக்க ட்ரை பண்ணாதன்னு. போடி உள்ள.” என்று கடிந்து விட்டு, மற்ற இருவரையும் காட்டத்துடன் பார்க்க, விஹானாவும் அக்ஷிதாவும் அரண்டு சமத்தாக மீண்டும் உள்ளே சென்று விட்டனர்.

உத்ஷவியைத் தரதரவென இழுத்துச் சென்ற ஸ்வரூப், தனதறைக்குள் தள்ளி, அழுத்தப் பார்வை வீசியவன், “இங்க பாரு திருடி. நான் சில முக்கியமான விஷயத்துக்காக இங்க வந்துருக்கேன். அதே முக்கியமான விஷயத்துக்கு தான் உங்களையும் கூட்டிட்டு வந்துருக்கேன். நான் நினைச்சது நடந்ததும், உங்களை விட்டுடுவேன். தேவை இல்லாம என்கிட்ட இருந்து தப்பிச்சுப் போய், என் கோபத்தை அதிகப்படுத்தி, என் நேரத்தை வேஸ்ட் பண்ணி, நாய்க்கடி பட்டு செத்துப் போக நினைக்காத. புரிஞ்சுதா?” எனப் பல்லைக்கடித்தான்.

அதே நேரம், இங்கு வீரா என்னும் ஒருவன், “பாஸ்! அந்த பொண்ணுங்க மிஸ் ஆகிட்டாங்க. ஸ்வரூப் அவ்தேஷ் அவங்களை நகரவே விட மாட்டேங்குறான் பாஸ்.” என்று அலைபேசியில் பேசிட,

அவனால் ‘பாஸ்’ என அழைக்கப்பட்ட ப்ரீத்தனின் விழிகள் கோபத்தில் சிவந்தது.

“சொன்ன வேலையை செஞ்சு முடிக்காம கதை சொல்லிட்டு இருக்க இடியட்” என்று அவன் கர்ஜிக்க,

“டென்சன் ஆகாதீங்க பாஸ். அந்த பொண்ணுங்களை கொல்றது கூட அவ்ளோ முக்கியமில்லை. அதான் நம்மளை பத்தி எதுவுமே தெரியாதே அவளுங்களுக்கு.” என்று சமன்படுத்தினான்.

“முட்டாள். உனக்கு அவ்தேஷ் வாரிசுகளை பத்தி தெரியாது. சின்னத் துரும்பு கிடைச்சாக் கூட, அதைப் பிடிச்சு மலையவேப் பிரட்டி போடுவானுங்க. ரொம்ப ரொம்ப ஜாக்கிரதையா கையாள வேண்டிய விஷயத்தை அந்த ராகேஷ் முட்டாள், இந்த முட்டாப்பொண்ணுங்களை நம்பி விட்டு, இப்போ இவளுங்களால எல்லாம் கெட்டு போச்சு. நமக்கு தேவைப்படாத அந்த மூணு பொண்ணுங்களும் உயிரோட இருக்கக் கூடாது. ப்ராஜக்ட் நல்ல படியா முடிஞ்சு இருந்தா கூட, அவளுங்களுக்கு இதே நிலைமை தான். முடிஞ்சா, நேரம் பார்த்து அவனுங்களையும் தூக்கிடு. நாகவல்லியை பத்தி எந்த தகவலும் இவங்களுக்கு கிடைக்கக் கூடாது.” என்று ஆத்திரத்தில் பொறுமியவன், கோபத்தை அடக்க இயலாமல் விஸ்கி கிளாஸை எடுத்து மடமடவெனக் குடித்தான். அவனது முகத்தில் வஞ்சத்தின் சாயல் ஜொலித்தது.

தப்பிக்கும் பிளான் சொதப்பி விட்டதில், மூன்று பெண்களும் நொந்தனர். விஹானா மீண்டும் அறைக்குத் திரும்பும் வரைக்கும், மடிக்கணினியில் இருந்து விழி எடுக்காத ஜோஷித், அவளைத் திரும்பிப் பார்க்காமலேயே, “எப்போ பார்த்தாலும் யாரையாவது சீட் பண்ணிக்கிட்டே இருக்கணும் உனக்கு. அப்படித்தான சீட்டர். நைசா எஸ்கேப் ஆக பாக்குறியா?” என்றான் அனல் மூச்சுடன்.

அவளோ உதட்டைக் குவித்து உர்ரென, “நான் வேணும்ன்னு பண்ணல. ஷவி தான் இழுத்துட்டு போய்ட்டா.” என்றிட, அவளது பாவனைகள் அனைத்தும், அவனுக்கு அருகில் சற்று முன்னால் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் பதிந்தது.

அவனது விருப்பமின்றியே, அவன் விழிகள் அவளது இதழ்களில் தங்கிட, ஒரு கணம் தடுமாறிப் போனான்.

சிறிது நேரத்தில், கோர்ட் சூட் சகிதம் மூன்று ஆடவர்களும் கிளம்பிட, “நமக்கு ஒரு டிரஸ் வாங்கித் தர்றானுங்களா?” என்ற புலம்பலுடன் ஸ்வரூப்பை முறைத்தாள் உத்ஷவி.

அப்போது, ரூம் சர்விஸ் பாய் வந்து ஒரு கவரைக் கொடுத்து விட்டுப் போக, அதனை அவளிடம் நீட்டினான்.

“உனக்கு ட்ரெஸ். க்விக்கா சேஞ்ச் பண்ணிட்டு வா. வேலைய முடிச்சுட்டு கிளம்பணும்.” என்றதும், அதனை ஆர்வமாகப் பிரித்தவளுக்கு சப்பென ஆனது. கருநீல நிற சுடிதார் அழகாய் தான் இருந்தது. ஆனாலும், “என்ன இது சுடிதார் வாங்கி இருக்க. எனக்கு ஷர்ட் பேண்ட் தான் கம்ஃபர்ட்டபிள்ளா இருக்கும்” என்றாள் உதட்டைச் சுளித்து.

“ஏன், அதான் நீ திருடுற பொருளை பாக்கெட்ல போட்டு மறைச்சு வைக்க ஈஸியா இருக்குமா?” என நக்கலாகக் கேட்க,

அவளோ சற்று பிசிறில்லாமல், “ஆமா…” என உண்மையை ஒப்புக்கொண்டதில், ஸ்வரூப் தலையில் அடித்துக் கொண்டான்.

—-

கண் முன்னே பலவகையான பலகாரங்கள் வீற்றிருந்ததில் அக்ஷிதாவிற்கு நாவூறியது. அதே ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் தான் அமர்ந்திருந்தனர்.

‘ஐயோ… கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டாது போலயே!’ என எச்சிலை விழுங்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள் அக்ஷிதா.

“பக்கத்துல இந்த சலிச்ச மூஞ்சி மட்டும் இல்லைன்னா, இந்நேரம் இதை நான் காலி பண்ணிருப்பேன் டார்ல்ஸ்…” என விஹானாவிடம் கிசுகிசுத்தாள்.

“அவன் பேர் சலிச்ச மூஞ்சி இல்லடி. சஜித்!” அந்நிலையிலும் பெயர் திருத்தம் செய்தவளை ஓரக்கண்ணில் முறைத்தவள்,

“சஜித்ன்னு பேர் வச்சதுக்கு பதிலா சாசேஜ்ன்னு வச்சு இருந்தா ஸ்நாக்ஸ் ஆவாவது சாப்பிடலாம்.” என முகத்தை சுருக்கினாள்.

அத்தனை மெதுவாக பேசியும், அவளுக்கு பக்கவாட்டில் அமர்ந்திருந்த சஜித் அவ்தேஷ் காதில் அவளது அலட்டல்கள் துல்லியமாக விழுந்தது.

சாம்பல் நிற கோர்ட் அணிந்திருந்தவன், முகத்தில் எப்போதும் இருக்கும்  குடிகொண்டிருக்கும் அசட்டைத்தன்மையுடன், தனது நகத்தில் ஏதோ ஆராய்வது போல பாவித்து, மெல்லிய குரலில் பெண்ணவளிடம் பேசினான்.

“ஸ்நாக்ஸ் – ஆ சாப்பிட்டு எதுக்கு உடம்பை கெடுத்துக்குற கேடி… என்னை ஃபுல் மீல்ஸாவே சாப்டு. நான் ஒண்ணும் கஞ்சம் கிடையாது யூ க்னோ. ஐ ஆம் ஆல்வேஸ் யுவர் மீல்ஸ்.” என இரட்டை அர்த்தம் பொதிந்த தொனியில் அவள் கூறிய வசனத்தையே மாற்றிக் கூறிட, அக்ஷிதாவிற்கு அப்போது தான், அர்த்தமே விளங்கியதில் திருதிருவென விழித்தாள்.

——–

“ஷிட்… இன்னும் எவ்ளோ நேரம் இங்கேயே உட்காந்து இருக்கிறது. பார்ட்டி வருவானா மாட்டானா?” ஜோஷித் அவ்தேஷ் கடுகடுத்தான்.

எரிச்சல் தாளாமல், சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்தவனை, மூச்சிரைக்கப் பார்த்தாள் விஹானா.

“இதோட 19…” என்று பல்லைக்கடித்தவளை அவன் ஏற இறங்கப் பார்த்து, “என்ன 19?” என்றான் புருவம் உயர்த்தி.

“ம்ம்… இங்க வந்ததுல இருந்து நீ குடிச்ச சிகரட் தான். நீ குடிச்சு சாவு. என்னையும் ஏன் சாவடிக்கிற. புகை தாங்க முடியல…” என கையால் மூக்கை மூடினாள்.

அவனோ தோளைக் குலுக்கிக் கொண்டு, “திருட, என் ரூம்குள்ள வரும் போது மட்டும் மூச்சை அடக்கிக்கிட்டு ஆட்டய போட பார்த்த தான. அது மாதிரி அடக்கிட்டு இரு!” என்றவன், வேண்டுமென்றே நன்றாக புகையை இழுத்து அவள் புறம் ஊதி விட்டான்.

புரை ஏற இருமிய விஹானா, “பத்து பைசா கூட திருடல. அதுக்கு ஏன்டா எங்களை இப்படி இம்சை பண்றீங்க?” என்று நொந்து போனாள்.

“அது உன் தலையெழுத்து” என்று நெற்றியில் கை வைத்து காட்டியவன் சிறிதும். பாவம் பார்க்கவில்லை.

“ஐயோ… அந்த சிகரெட்டையாவது ஆஃப் பண்ணி தொலை” என்றவளிடம், “இதை குடிச்சா தான் என் டென்ஷன் போகும்…” என்றான் கூலாக.

“டென்ஷன் போக வேற வழியே இல்லையா?” எரிச்சலுடன் கேட்டு, உதட்டைக் குவித்தவளின் இதழ்கள் மீது பார்வையை படர விட்ட ஜோஷித்,

“இருக்கு. உன் லிப்ஸ்ஸ பார்த்தா டென்ஷன் குறையுது. ஐ டோண்ட் நோ வொய்! சோ, கேன் ஐ டேஸ்ட் தட்?” வெகு தீவிரமாக கேட்டு வைத்தவனைக் கண்டு அதிர்ந்தவள், வேகமாக வாயை பொத்திக் கொண்டாள்.

சிறிது நேரத்திற்கு முன்பு, அவளது இதழ்களின் மீது ஈர்க்கப்பட்டதன் விளைவாக, மனதிலிருப்பதைக் கேட்டு விட்டவன், தன் மீதே கோபமாக, சிகரெட்டை தூக்கி எறிந்தான்.

—–

உத்ஷவிக்கு மட்டும் எரிக்கும் திறமை இருந்திருந்தால், அண்ணன் தம்பி மூவரையும் பார்வையாலேயே எரித்து சாம்பல் ஆக்கி இருப்பாள்.

ஆனால், தான் ஒரு அற்ப மனிதப் பிறவி என்று அவ்வப்போது நினைவு வர, இருப்பினும் முடிந்த அளவு விழிகளில் நெருப்பைக் கக்கினாள்.

“என் ஷாலை விடுடா!” அடிக்குரலில் தனது துப்பாட்டவின் ஒரு நுனியை பிடித்து வைத்து அமர்ந்தபடி மெனு கார்டை நோட்டம் விட்டுக் கொண்டிருந்த ஸ்வரூப்பைக் கண்டித்தாள்.

“நோ வே! எஸ்கேப் ஆகிட்டீனா?” அழுத்தக் குரலில் கேட்டவன், மீண்டும் முதலில் இருந்து மெனு கார்டை ஆராய, அதனைப் பறித்தவள், “எத்தனை தடவை பார்த்தாலும் ஒரே டிஷ் தான் இருக்கும். என் ஷாலை விடு” என்று பிடித்து இழுத்தாள்.

“இன்னொரு தடவை உன்னை நம்ப நான் முட்டாள் இல்ல விஷா. என்னை ஏமாத்திட்டு என்னை தாண்டக் கூட முடியாதுன்னு உனக்குத் தெரியும் தான். ஆனாலும், ஒரு கிக் வேணும்ல. சோ நீயும் உன் ஷாலும் என் கைக்குள்ள தான் இருக்கணும்.” என்றான் திட்டவட்டமாக.

அதில் கடியாகி, ஷாலைக் கழற்றி, “நீயே வச்சுக்க” என சிலுப்பலுடன் அவனிடமே கொடுக்க, துப்பட்டாவையும் அவளையும் ஒரு நொடி அமைதியாகப் பார்த்தவன், இப்போது அதனை விடுத்து, அவளது சுடிதார் நுனியை பற்றிக் கொள்ள, உத்ஷவிக்கு இதயம் தாறுமாறாய் துடித்தது

“என்னடா பண்ற?” எனக் கேட்டவளுக்கு, அர்த்தப் புன்னகையை ஸ்வரூப் பரிசளிக்க, மீண்டும் துப்பட்டாவை அணிந்து அதன் நுனியை அவனிடமே கொடுத்தாள் முகத்தை சுருக்கியபடி.

“ம்ம். இது ஒரு நல்ல திருடிக்கு அழகு!” என அவளது பிபியை ஏற்றும் போதே, அவர்கள் சந்திக்கவிருப்பவன், அவர்களின் எதிரில் வந்தமர்ந்தான்.

“குட்… விஷா, நான் குடுத்த பேக்ல இருந்து அதை எடு.” என்று மொட்டையாய் கூற, எதை எடுக்கணும்ன்னு தெரியலையே… எனக் குழம்பி அவன் கொடுத்த பையில் கையை விட்டவளின் கையில் அகப்பட்டது துப்பாக்கி.

என்ன இது நீளமா இருக்கு. என எண்ணியபடி வெளியில் எடுத்துப் பார்த்தவளுக்கு குலை நடுங்கியது.

அதை விட, நொடி நேரத்தில் அதனைப் பறித்து எதிரில் இருந்தவனை சத்தமில்லாமல் சுட்டு விட்டு இயல்பாக எழுந்த ஸ்வரூப்பை கண்டு பெண்கள் மூவரும் உறைந்து விட்டனர்.

‘நீ சொன்ன சின்ன வேலை இது தானா கோபால்?’ என்ற ரீதியில் உத்ஷவி, ஸ்வரூப்பை மிரட்சியுடன் பார்த்திருந்தாள்.

முதல் நீ முடிவும் நீ!
மேகா

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
15
+1
77
+1
2
+1
4

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. பெண்களின் வாழ்க்கை முறையையும் அவர்கள் கண்ட பல்வேறு அனுபவங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். தெளிந்த எழுத்து நடை. மேலும் சிறக்க வாழ்த்துகள்.

  2. விழுந்து விழுந்து சிரிக்கக் கூடிய கதைக்கரு. மனதிலிருக்கும் பாரம் இறங்குவது போன்றதொரு உணர்வை தரும் எழுத்தாளரின் எழுத்து நடையும், நகைச்சுவைத் திறனும் மிகவும் அசத்தல்.

  3. Indhu Mathy

   😱😱😱😱😱😱 என்னடா பட்டுன்னு போட்டு தள்ளிட்ட… 😰😰😰😰😰

   ப்ரீத்தன் தான் இவனுங்க எதிரியா.. பாவம் நம்ம கேர்ள்ஸ் அவங்களை போட்டு தள்ள பார்க்குறான்… 😡😡😡😡

   மூணு திருடீஸ்ஸும் ராஜ வம்சத்துகிட்ட மாட்டிகிட்டு முழிக்கிறாங்க… 🤪🤪🤪🤪🤪