Loading

 

மனையாளின் முத்தத்தில் கிறங்கிய தீரன், “பிரின்ஸஸ் யூ மேட் மீ க்ரேஸி!” என்றவாறே இறுகித் தழுவிக் கொள்ள, அவனுடன் மேலும் ஒன்றினாள்.

அவனோ தனது கட்டுப்பாட்டை இழந்து கொண்டிருக்க, மெல்ல விலகிய சஹஸ்ரா, கன்னங்கள் ஏந்திய வெட்கப் பூச்சை மறைத்தவாறே, தலை குனிந்து நிற்க, அவனுக்கோ பைத்தியம் பிடிக்காத குறை தான்.

“சஹி…” கண்களில் மிதந்த மோகத்துடன் அவன் அழைக்க, அக்குரலிலேயே ஆடவனின் நிலை புரிந்தாலும் அதற்கு எதிர்வினை காட்டத் தெரியாமல் நின்றிருந்தாள் சஹஸ்ரா.

மீண்டும், பொங்கி வழியும் கிறக்கத்துடன் அவன் “சஹி’ என அழைத்து, அவளை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள, அவள் எதிர்க்கவில்லை.

ஆனாலும், மேனி நடுங்கியது. கண்கள் வேறு கலங்க தொடங்க, அதனை உணர்ந்த தீரன், அவளின் முகத்தை நிமிர்த்தி அவளையே ஆராய்ந்தான்.

“என்னை பிடிக்கலையாடி?” அவன் கேட்ட மறுநொடி, பாவை மறுப்பாக தலையாட்டிய விதமே, அவளின் பிடித்தத்தை உணர்த்த, மெலிதாய் புன்னகைத்தவன்,

“இப்போ நம்ம நல்லா புருஞ்சுகிட்ட ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ஆ இருக்கோமா?” எனக் கேட்டான் குறும்பாக.

அவளோ பேந்த பேந்த விழித்ததில், சிரிப்பை அடக்கியவன், “நீ தானடி சொன்ன… நமக்கு கல்யாணம் ஆனதும் முதல்ல நம்ம ஒரு அண்டர்ஸ்டாண்டிங்க்கு வந்துக்கலாம். அப்பறமா டச்சிங் டச்சிங் பாத்துக்கலாம்ன்னு…” என்றான் அவளின் தோள்களின் மீது கரங்களை மாலையாக்கி.

அப்போதும் அவளுக்கு புரியவில்லை. “உங்களுக்கு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சா என்ன?” எனக் குழப்பமாக கேட்க, அவனோ “சுத்தமா இல்ல.” என்றதில்,

“அப்பறம் ஏன் இப்படி கேக்குறீங்க?” புருவம் சுருக்கி கேட்டாள்.

“நான் எப்போடி கேட்டேன். நீ தான, நம்ம ஏன் மேரேஜ் முடிஞ்சு தள்ளி இருந்தோம்ன்னு கேட்டப்ப இந்த உப்பு பெறாத காரணத்தை சொன்ன!” என அவள் நெற்றியில் முட்டியதில் தான் அவளுக்கும் இப்படி பொய்யுரைத்தது நினைவு வந்தது.

வாய்க்கு வந்ததை சொல்லி வச்சு இருக்கோமே என நொந்தவள், ஆமோதிப்பாக புன்னகைக்க முற்பட்டு, எச்சிலை விழுங்கினாள்.

அவனின் ஆறடி உயரத்தை நிமிர்ந்து பார்த்திருந்தவளின், தொண்டைக் குழியி்ன் வடிவை பார்வையால் அளந்தவன், “எல்லாத்தையும் நீயே வேஸ்ட் பண்ணிடாத சஹி. எனக்கும் வேணும்” என்றான் மொட்டையாக.

“என்ன வேணும்?” முற்றிலும் குழம்பி சஹஸ்ரா கேட்க,

குறும்புப் புன்னகை பூத்தவன், “அதான் இப்போ கஷ்டப்பட்டு முழுங்குனியே எச்சில். அத சொன்னேன்.” என்று விரல்களால் இதழ்களை அளக்க, நொடியில் அவள் தேகம் சிவந்து விட்டது.

“நீங்க ரொம்ப டர்ட்டியா பேசுறீங்க தீரா…” பெண்ணவள் கூச்சத்தில் சிணுங்க, “மனுஷக்குரங்குன்னா இது கூட பண்ணலைன்னா எப்படி பிரின்சஸ்” எனக் குழைந்தான்.

அவளுக்கோ உள்ளுக்குள் அபாய மணி அடித்தது. ஏற்கனவே இந்த வார்த்தையை கூறி அவன் கடித்து வைத்தது நினைவு வர, நாசுக்காக பேச்சை நிறுத்தி அமைதி ஆகி விட்டாள்.

அதனை கண்டு கொண்ட கள்ளனோ, “என்னடி அமைதியா இருந்து எஸ்கேப் ஆகிடலாம்ன்னு பிளான் பண்றியா? அதுவும் என்கிட்ட அது நடக்காது பட்டுக்குட்டி…” எனக் கொஞ்சியவன் அவள் இதழ் நோக்கி குனிய, சவிதாவின் அறைக் கதவு திறக்கப்பட்டதில் இருவருமே விலகினர்.

‘ச்சே, சவி வீட்ல இருக்கிறதை மறந்துட்டேனே…’ என தலையில் அடித்துக் கொண்ட சஹஸ்ராவிற்கு, அம்னீஷியா அவனுக்கா அல்லது தனக்கா என்றே சந்தேகம் எழுந்து புன்முறுவலையும் கொடுத்தது.

“அக்கா ஏன் தனியா சிரிச்சுட்டு இருக்க?” சவிதா அவளை உலுக்கி கேட்க, தீரனோ கேலி நகையுடன் அவளை தான் ரசித்திருந்தான்.

‘அய்யோ… இப்படி மாட்டிக்கிட்டோமே’ என நெளிந்தவள், “நீ கரெக்ட் டைம்க்கு கிளம்ப மாட்டியா? ஸ்கூலுக்கு லேட் ஆச்சுல கிளம்பு.” என்றாள் பதற்றத்தை மறைத்துக் கொண்டு.

இவ என்ன லூசா என்பது போல பார்த்து வைத்த சவிதா, “இன்னும் டைம் இருக்கேக்கா. சொல்ல போனா நான் இன்னைக்கு சீக்கிரம் கிளம்பி இருக்கேன்” என்று முறைத்தாள்.

‘கிராதகி… இவன் முன்னாடி அசிங்க படுத்துறாளே!’ எனப் பல்லைக் கடித்தவளின் அவஸ்தைகள் எல்லாம் அவனுக்கு கவிதையாய் மனதில் பதிய, விழிகளை அவளிடம் இருந்து அகற்றினான் இல்லை.

அவனைக் காண தயங்கி அவள் வேறு புறம் பார்க்க, சவிதா தான் தீரனின் கையை பிடித்து “மாமா…” என கிசுகிசுப்பாக அழைத்தாள்.

அவனும் பார்வையை சஹஸ்ராவிடம் இருந்து திருப்பி என்னவென கண்ணாலேயே கேட்க, அவளோ தமக்கையை கண் காட்டினாள்.

இருவரின் ஜாடைகளை கண்டு சஹஸ்ரா,
“என்னடி” எனக் கேட்க, அவளோ “அக்கா இந்த வாரம் ஸ்கூல்ல டூர் கூட்டிட்டு போறாங்கன்னு சொன்னேன்ல. நானும் போறேன்க்கா” என்றாள் கெஞ்சலாக.

“நோ சவி. இப்போதைக்கு நீ எங்கேயும் போக வேணாம். இதை பத்தி நம்ம  ஏற்கனவே பேசிட்டோம்.” எனக் கண்டிக்க,

அவள் தீரனைப் பாவமாக பார்த்தாள்.

ஒரு வாரம் முன்பே, தீரனிடம் கூறி தமக்கையிடம் அனுமதி வாங்கி தர கூற, இடையில் அவள் வயது வந்ததில் இதனைப் பற்றி இருவரும் பேசவில்லை.

இப்பொழுது தான் அவனும், “அவள் தான் ஆசைப்படுறாள்ல. போய்ட்டு வரட்டுமே சஹி” என்க,

“விளையாடுறீங்களா. என்னால அவள தனியா எல்லாம் அனுப்ப முடியாது.” என முடிவாக கூற,

“தனியா எங்க போறா. ஸ்கூல் பிரெண்ட்ஸ் கூட தான போறா. அதுவும் இல்லாம டீச்சர்ஸ் இருப்பாங்க தான”  தீரனும் வாதாட,

“முடியாது தீரா. எனக்கு அவளை அனுப்ப மனசு இல்ல. ஸ்கூல் டூர் போற அளவுக்குலாம் அவள் மெச்சூர் ஆகல.” என்றாள் மறுப்பாக.

“ஸ்கூல் டூர் கூட்டிட்டு போறதே ஒரு எக்ஸ்பீரியன்ஸ்க்காக தான். ஃப்ரெண்ட்ஸ் கூட இந்த வயசுல போகாம, வயசானதுக்கு அப்பறமா போக முடியும்.” என்றதில்,

“என்ன பேசுறீங்க தீரா. பக்கத்துலன்னா பரவாயில்ல. கேரளா கூட்டிட்டு போறாங்க.
அவ்ளோ தூரம் எப்படி தனியா அனுப்ப?” என முறைத்தாள்.

இதுவரை டூரை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தவன் எங்கு அழைத்து செல்கிறார்கள் எனக் கேட்கவே இல்லை.

‘கேரளாவா?’ தனக்குள் ஏதோ கணக்கு போட்டுக் கொண்டவன், மர்ம முறுவலுடன்
“சவி… உனக்கு கண்டிப்பா கேரளா போகணுமா?” எனக் கேட்க,

“ஆமா மாமா. என் பிரெண்ட்ஸ் எல்லாரும் வர்றாங்க. பிளீஸ். நான் சேஃப் – ஆ போய்ட்டு வருவேன். ஜஸ்ட் ரெண்டு நாள் தான.” என்றாள் கெஞ்சலாக.

‘ஓ! ரெண்டு நாளா!’ இதழ்களை கடித்துக் கொண்டு தீரன் சிரித்து வைக்க,

“ரெண்டு நாள் தீரா. அதான் வேணாம்ன்னு சொன்னேன். த்ரீ நைட்ஸ் ஆம். ஏன் ஸ்கூல்ல இப்படி லாங் டூர் கூட்டிட்டு போறாங்க. முதல்ல ஸ்கூலை மாத்தணும்.” எரிச்சலாக பள்ளிக்கூடத்தை திட்டிக் கொண்டாள்.

“விடு சஹி. நீ சொன்னதையும் நான் அக்செப்ட் பண்ணி தான் ஆகணும்…” என யோசனையாக கூற, சவிதாவோ “மாமா” என்றாள் காலை உதறி.

“வெயிட் சவி. நான் உனக்கும் உன் அக்காவுக்கும் ஃபேவரா தான் முடிவு எடுப்பேன்” என அவள் தலையை கலைக்க, “என்ன முடிவு?” எனக் கேட்டாள் சஹஸ்ரா.

“இப்போ உன் பிரச்சினை என்ன? இவள தனியா விட முடியாது. அதான…” எனக் கேட்க, “ஆமா” என்றதும்,

“அப்போ ஒன்னு பண்ணலாம். நம்மளும் அவள் கூட கேரளா போகலாம்” என்றான் புன்னகை முகத்துடன்.

இரு பெண்களும் புரியாமல் விழிக்க, தீரனே தொடர்ந்தான்.

“சவி அவ ஆசைப்பட்ட படி, அவள் ஃப்ரெண்ட்ஸ் கூட கேரளாக்கு ஸ்கூல் பஸ்ல போகட்டும். நம்ம ரெண்டு பேரும் பின்னாடி கார்ல போலாம். அவள் ஃப்ரெண்ட்ஸ் கூட ஸ்கூல்ல அரேஞ்ச் பண்ணிருக்குற ஹோட்டல்ல தங்கி ஊர் சுத்தட்டும். நம்மளும் அதே ஹோட்டல்ல ரூம் புக் பண்ணி, இருந்துக்கலாம். சோ அவளும் ஃப்ரெண்ட்ஸ் கூட என்ஜாய் பண்ணுன மாதிரி இருக்கும். உனக்கும் அவள் தனியா போறதை பத்தி பயம் இருக்காது…” என்று கூறி விட்டு இரு புருவத்தையும் உயர்த்தினான்.

சஹஸ்ராவோ பேயறைந்தது போல நிற்க சவிதா குஷியில் துள்ளினாள்.

“வாவ்… மாமா செம்ம ஐடியா. இப்படியே பண்ணலாம்.” என்று ஹைஃபை கொடுக்க, அவன் கண்ணை காட்டி, ‘நீ கிளம்பு உன் அக்காவை நான் பாத்துக்குறேன்’ என்று சைகை கொடுத்ததில் அவள் சத்தமில்லாமல் பள்ளிக்கு கிளம்பி விட்டாள்.

திருதிருவென அவள் முழித்த முழியைக் கண்டு சிரிப்பை அடக்கியவன், “என்ன சஹி, நான் எவ்ளோ பெரிய சொலியூஷன் சொல்லி இருக்கேன். நீ என்னன்னா இப்படி ஸ்டன் ஆகி நிக்கிற” என வார,

“அது… நான் நான் கேரளாவுக்கு வரல. இங்க வேலை இருக்கு” என்றாள் வேகமாக.

“ஆமா பெரிய வெங்காய பிசினஸ் பண்றா. இருந்தது ஒரு கிளையன்ட் அவனும் ஹாஸ்பிடல்ல இருக்கான்” என்று அவளுக்கு கேட்கும் படியே முணுமுணுக்க, 
அவளோ பார்வையிலேயே கனலை கக்கினாள்.

“வேணாம் என் வேலையை பத்தி கிண்டல் பண்ணாதீங்க” என்று முறுக்கிக் கொள்ள,

“சரி பண்ணல. அப்போ கேரளாவுக்கு வா. நான் என்ன உன்ன ஹனிமூன்க்கா கூப்பிடுறேன். ஜஸ்ட் ஃபார் சவி.” என்று மடக்கினான் நயமாக.

அவன் கூற்றின் உள் அர்த்தம் புரிந்தவள், “நான் வரல” எனக் கூறும் போதே வெட்கம் பிடுங்கித் தின்றது.

“ஏண்டி படுத்துற? என் மேல நம்பிக்கை இல்லையாடி” அவன் இடுப்பில் கரம் பதித்து முறைத்தான்.

“சத்தியமா இல்ல.” சொல்லி முடிக்கும் முன்பே, அவள் இதழ்கள் சிரிப்பில் விரிந்தது.

“அடிப்பாவி… என் மேல நம்பிக்கை இல்லை அப்படி தான…!” அவனுக்கு இப்போது உண்மையாகவே கோபம் வந்தது.

அவள் உணரும் முன்பே, அதே கோபத்துடன் அலுவலகத்திற்கு கிளம்பி சென்று விட, அவளுக்கு தான் மனம் சுணங்கி விட்டது.

பின் அவளும் அலுவலகத்திற்கு செல்ல, தேவிகா தான், “என்ன சஹா. முகம் எல்லாம் வாடி போய் இருக்கு. கவலைப்படாத ராவ் நமக்கு ஃபுல் அமௌண்ட்டும் குடுத்துடுவாரு” என்றாள் கிண்டலாக.

அவள் ஏதோ பேச வரும் முன்னே, “குட் மார்னிங் கைஸ்” எனக் கூறியபடி நிக்கோலஸ் அங்கு வந்தவன்,

“சஹா… பாஸ் – ஓட ஃபைல் ஒண்ணு அவர் ரூம்ல இருக்காம். அதை எடுத்துட்டு வர சொல்லி இருக்காரு.” என்றான் பரபரப்பாக.

அங்கு தீரனுக்கும் தனி அறை இருக்க, அங்கும் சில கோப்புகள் வைத்திருந்தான்.

“எடுத்துக்கோங்க அண்ணா.” என்றவள், “உங்க பாஸ் எப்ப இருந்து இங்க வர்றதா இருக்காரு? நீங்களாவது பார்ட்னர்ஷிப்ப ஞாபகப்படுத்துங்க” என்றாள்.

“பாஸ் இப்ப தான் கொஞ்சம் ரெகவர் ஆகி வர்றாரு சஹா. அவரோட பிரதர் விட்டுட்டு போன பிசினஸ் டீலிங்க்ஸ் நிறைய அவரை சுத்தல்ல விடுது. அதான் அவரோட பிசினஸ்ல கவனம் செலுத்த முடியல. பட் ஹீ வில் பீ பேக் சூன்.” என்றதும்,

“அய்யோ நிக்கி… இவள் பிசினஸ்க்காக அண்ணாவை தேடல. மேடம்க்கு ஆபிஸ்லயும் அண்ணாவை பார்த்துகிட்டே இருக்கணுமாம்” என அவளை இடித்தப்படி நக்கலடித்தாள்.

சஹஸ்ராவோ சங்கடத்துடன் நிக்கோலஸ் – ஐ பார்க்க, அவனும் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தான்.

அந்நேரம் தேவிகாவிற்கு போன் வந்ததில் வெளியில் சென்று விட, நிக்கி,

“சஹா… இப்ப கூட ஒண்ணும் குறைஞ்சடல. உனக்கு அவன் மேல லவ் இருக்குன்னு எனக்கு தெரியும். முன்னாடி எப்படியோ இப்போ அவனும் உன்ன ரொம்பவே லவ் பண்றான். இப்பவாவது இந்த அக்ரிமெண்ட் மேரேஜ் கான்செப்ட் – அ ஓரம் கட்டிட்டு ரெண்டு பேரும் சேர்ந்து வாழலாமே.” என அறிவுறுத்தினான்.

“அவருக்கு எதுவுமே ஞாபகம் வராம எப்படி நிக்கி அண்ணா? நாளைக்கு என்னை தான தப்பு சொல்லுவாரு.” அவளுக்கும் அழுகை தான் வந்தது.

“நாளைக்கு நடக்குறதை பத்தி நாளைக்கு யோசிக்கலாம் சஹா.” என கடிந்தவன் தேவிகா வரும் அரவம் கேட்டு வாயை மூடிக் கொண்டான்.

இருவரையும் பார்த்தவள், “சீரியஸ் டிஸ்கஷன் போல. என்னை பார்த்ததும் ஸ்டாப் பண்ணிட்டீங்க” என நிக்கோலஸை முறைத்தபடி கேட்க,

அவனோ, “ஆமா தேவ். சீரியஸ் டிஸ்கஷன் தான். ஆபிஸ்ல சில தேவை இல்லாத ஜந்துலாம் இருக்கு. அதை வேலையை விட்டு தூக்கலாமா இல்ல உப்புக்கு சப்பாணியா இங்கேயே இருக்கட்டுமான்னு பேசிட்டு இருந்தோம்” என நேரடியாக அவளை கேலி செய்து, அவளின் தீப்பார்வைக்கு ஆளானான்.

தேவிகாவை வாரிய மன நிம்மதியில் தோன்றிய புன்னகையுடன் தீரனின் அறைக்குள் நுழைந்த நிக்கியின் முகம் இப்போது தீவிரமானது.

அவசரமாக எதையோ தேடியவனின் சில நிமிட தேடலுக்குப் பின் அந்த கோப்பு கையில் பட, அதனை கையில் எடுத்ததும் தான் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

ஆனால் அது சில நிமிடத்தில் காணாமல் போனது போல அவனுக்கு முன்னால் நின்றாள் தேவிகா.

“இந்த ஃபைலையா உங்க பாஸ் எடுத்துட்டு வர சொன்னாரு. இது ரெண்டு நாள் முன்னாடி எடுத்த பிராஜக்ட் ஓட அக்ரிமெண்ட் பேப்பர் தான?” எனக் கேட்டாள் புருவம் சுருக்கி.

தீரன் அலுவலகத்திற்கு வரவில்லை என்றாலும், ஆட்கள் வைத்து பிராஜக்ட்களை எடுத்துக் கொடுத்துக் கொண்டு தான் இருந்தான்.

நிக்கியின் முகத்தில் ஒரு பதற்றம் தென்பட்டாலும் அதனை அழகாக மறைத்து, “ஆமா தேவ். இதுல ஒரு சின்ன கரெக்ஷன் இருக்கு. அதான் பாஸ் கேட்டாரு.” என சமாளிக்க,

“என்ன கரெக்ஷன்? குடுங்க பாக்கலாம்.” என எதார்த்தமாக அந்த கோப்பை பிடுங்க, அவனோ சட்டென அதனை நகற்றினான்.

“இதுல நீ என்ன பாக்க போற? கரெக்ட் பண்ணிட்டு நானே இங்க கொண்டு வந்து வைக்கிறேன்.” என்றவனை, கூர்ந்து பார்த்தவள்,

“ஏன் நீங்க இவளோ பதட்டப்படுறீங்க? நான் இப்ப இந்த பைலை பார்த்தே ஆகணும்” என்றாள் பிடிவாதமாக.

“எனக்கு பாஸ் கூட மீட்டிங் இருக்கு தேவ். வழி விடு. நான் போகணும்” என அவன் அவளைத் தாண்டி நகர முயற்சிக்க, அவனை வழிமறித்தவள், “இப்ப தர போறீங்களா இல்லையா?” என்றதில், தலையை அழுந்தக் கோதியவன்,

“சரி தரேன்.” என்றான் கடுப்பாக.

அவள் முகத்திலோ வெற்றி மிதப்பு. ஆனால், அது நொடியில் மாறி விடுவது போல, நிக்கி அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, “குடுத்துட்டேன் போதுமா?” என்று கேட்டு விட்டு, அவள் பதிலுக்கு காத்திராமல், மின்னல் வேகத்தில் கடந்து விட்டான்.

தேவிகா தான், நடந்ததை நம்ப இயலாமல் அதிர்ந்து நின்றாள்.

இங்கு சஹஸ்ராவிற்கு இருப்பு கொள்ளவில்லை. மீண்டும் அவனது கோபம் அவளை வெகுவாய் தாக்கிட, போன் செய்ய தான் எண்ணினாள்.

பின், அன்று அவன் திட்டியதை நினைவு கூர்ந்து, அந்த முயற்சியை கை விட்டவள், மாலை பொழுது வரை நேரத்தை கடத்தி விட்டு, வீட்டிற்கு சென்றாள்.

தீரன் அவளுக்கு முன்பே வந்திருக்க, இன்னும் அவனிடம் கோபத்தின் மிச்சம் இருந்தது.

பேசவும் பயமாக இருந்ததில் அவள் அமைதி காத்து, பால்கனியில் சென்று ஒளிந்து கொள்ள, பொறுத்து பொறுத்து பார்த்தவனுக்கு கோபமாக வந்தது.

அதில் விறுவிறுவென அவள் அருகில் சென்றவன், காற்றில் பறந்து கொண்டிருந்த அவளின் கூந்தலை உள்வாங்கியபடியே,

“ஒருத்தன் கோபமா போனானே… அவன் கோபத்தை சரி பண்ணுவோம்ன்னு கொஞ்சமாவது தோணுதாடி உனக்கு. அட்லீஸ்ட் ஒரு போன் ஆச்சு செஞ்சியா?” மூச்சிரைக்க அவன் கேட்க,

“போன் பண்ணுனா நீங்க திட்டுவீங்க, நசநசன்னு போன் பண்ணிக்கிட்டே இருக்கேன்னு. அதான் பண்ணல.” என அவள் உர்ரென கூற,

சற்று தணிந்தவன், “திட்டுனா போன் பண்ண மாட்டியா? சமாதானம் பண்ண மாட்டியா? மக்கு உன்ன போய் லவ் மேரேஜ் பண்ணிருக்கேன் பாரு… என்ன சொல்லணும். ஆமா… உனக்கு தான் என் மேல நம்பிக்கையே இல்லையே. அப்பறம் எதுக்கு லவ்வ பத்தி பேசி டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு…” என சலிப்புடன் ஆதங்கத்தை கொட்டி விட்டு நகரப் போக அவள் அவனின் கரத்தைப் பற்றினாள்.

“கைய விடுடி!” தீரன் கடுப்படித்ததில்,

கண்ணீர் துளிகள் கண்களை நிறைக்க, “நான் நம்பிக்கை இல்லைன்னு சொன்னது என் மேல தீரா. நிஜமா எனக்கு என் மேலயே நம்பிக்கை இல்ல. என் மனசு முழுக்க நீங்க தான் இருக்கீங்க. நீங்க என் பக்கத்துல வந்தா, என்னால இயல்பா இருக்க முடியல. எல்லாமே மறந்துடுது. உங்க அரவணைப்பில இருந்து நகர முடியாம நான் தான் தடுமாறுறேன். உங்க மேல எனக்கு இருக்குற பீலிங்க்ஸ் – அ என்னால கண்ட்ரோல் பண்ண முடியல தீரா. நீங்க வெளிப்படையா காட்டிடுறீங்க. என்னால… என்னால காட்ட முடியல. ஐ மேட்லி லவ் வித் யூ. ஆனா… நமக்குள்ள என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சா, நீங்க என்னை…” என முழுதாக பேசி முடிக்கும் முன்னரே, அவள் இதழ்கள் அவன் வசம் இருந்தது.

விழிநீர் பட்டு எழுந்த உவர்ப்பு சுவையும், அவனுக்கு தேனாக இனித்தது போலும்.

சிறிதும் இடைவெளி கொடுக்காமல், அவ்வதரங்களை வன்மையாக சுவைத்தான்.

மூச்சு வாங்க சிரமப்பட்டவள், அவனது இந்த அதிரடியில் திகைத்து, பின் அவ்வின்பத்தில் திழைக்க, அதற்கு மேல் முடியாமல் அவனை தள்ளி விட்டு மூச்சு வாங்கினாள்.

“சாரி பிரின்ஸஸ். இனிமே, என் மூச்சை கடன் வாங்கி தான் நீ ப்ரீத் பண்ணனும்…” என காதல் பொங்க கூறியவன், இம்முறை சொன்னது போன்றே அவன் மூச்சை அவளுக்கு கடன் கொடுத்தான்.

இருவரின் முத்தப்போரும் சில நிமிடங்கள் கழித்தே முடிவுக்கு வர, “கேரளா போலாமா பிரின்ஸஸ்?” எனக் கேட்டான் கிசுகிசுப்பாக.

ஏற்கனவே மயக்கத்தில் இருந்தவள், இளநகையுடன், “ம்ம்” என தலையாட்ட, “பட் டூர்க்கு தான் கூப்பிடுறேன். ஹனிமூன்லாம் இல்லப்பா” என்றான் குறும்பாக.

அதில் அவளுக்கும் சிரிப்பு வர, “நானும் டூர்க்கு தான் சொன்னேன்.” என்றதில்,

“நானும் அதான் சொன்னேன்” என அவனும்,

“நானும் அதான் சொன்னேன்” என அவளும் மாறி மாறி வாதம் செய்து கொள்ள, இறுதியில் இரு இதழ்களும் இணைந்த பிறகே, குரல் தேய்ந்தது.

இப்போது அவன் உரிமையை நிலைநாட்ட எண்ணினாலும் அவள் தடுக்கப்போவது இல்லை தான். ஆனால், ஏனோ அந்த ஒரு வாரம் முழுக்க அவளை அத்தனை காதலித்தான்.

ஒருவர் தன் மீது காட்டும் அன்பில் உருகிப் போவது தான் எவ்வளவு அழகானது!

அந்த அழகான நிமிடங்களை அவள் ரசித்து ருசித்தாள்.

இருவரும் ஒருவரை ஒருவர் ஒட்டியபடி நிறைய ஸ்வீட் நத்திங்ஸ் பேசிக் கொள்ள, மௌனம் உறவாடும் நேரங்களில் எல்லாம் இதழ்கள் மௌனமாக உறவாடும்.

“தீரா… கேரளா போறதுக்கு முன்னாடி, டாக்டர்கிட்ட ஒரு தடவ செக் பண்ணிக்கலாமா? இன்னும் கொஞ்சம் கட்டு பிரிக்காம இருக்கு.” என்றாள் வருத்தமாக.

நெற்றியை சுற்றி இன்னும் கட்டிடப்பட்டு தான் இருந்தது அவனுக்கு. அத்தனை தூரம் அலைய வேண்டுமே என்ற கவலை அவளுக்கு.

“ஐ ஆம் பெர்ஃபக்ட்லி ஆல்ரைட் சஹி.” அவன் கண் மூடித் திறந்து ஆறுதல் அளிக்க, “அட்லீஸ்ட், ட்ரைவர் போட்டாச்சு போலாம் தீரா. யூ காண்ட் ட்ரைவ். 12 மணி நேரத்துக்கு மேல போகணும். கஷ்டமா இருக்கும்” என அவன் தலையை வருடினாள்.

அவனோ அவள் கையை எடுத்து விட்டு, அவளின் மடியில் படுத்துக் கொண்டு, “எனக்கு உன் கூட தனியா போகணும் சஹி…” எனக் கொஞ்சியவன், சொன்னது போன்றே அவளுடன் சீண்டியபடி கேரளா நோக்கி சென்றான்.

பள்ளிக்கூட பேருந்தில் சவிதா முன்னால் செல்ல, இவர்கள் இருவரும் காரில் சென்றனர்.

காரை எடுத்ததில் இருந்தே அவளுக்கு மனம் உறுத்தியது. “தலை எதுவும் வலிக்குதா தீரா? லாங் டிராவல் கஷ்டமா இருக்கும். நான் கொஞ்ச நேரம் ஓட்டவா?” அவனுக்காக அவள் இதயம் பரிதவித்தது.

“உஷ்… நான் உன் கூட இந்த லாங் டிராவல என்ஜாய் பண்ணனும் சஹி. பிளீஸ்…” மூக்கை சுருக்கி அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு மறுக்கவே தோன்றவில்லை. அதே போன்றே அனைத்தையும் சாதிக்கப் போகிறான் என்றும் புரியவில்லை.

உண்மையில் 12 மணி நேரத்திற்கு மேலான பயணம் அவளுக்கு கனவு போன்று நகர்ந்தது.

அவனோ பேசியே சிரிக்க வைத்தான். ரசிக்க வைத்தான். அவளை கரைய வைத்தான். அவ்வப்பொழுது செல்ல முத்தங்களால் திருடினான்.

அந்த பயணத்தை அழகாக்க, காதலையும் அள்ளித் தெளித்தான்.

வம்படியாக, சஹஸ்ராவும் காரை சில நேரங்கள் ஓட்டிச் செல்ல, இருவருக்கும் அப்பொழுதுகள் இனித்தது.

கேரளாவிற்குள் நுழைந்து, அறை இருக்கும் ஹோட்டல் நோக்கி காரை செலுத்த, அப்போது எதிரில் லாரி ஒன்று வந்தது.

அதனைக் கண்டதும், ஏதேதோ காட்சிகள் அவனுக்குள் உருவாக, அனைத்தும் அவன் கவனத்தை சிதற வைப்பதாக இருந்தது.

சற்றே தடுமாறியவனின், நெற்றியில் வியர்வைப் பூக்கள் பூத்திட, சஹஸ்ரா தான், “தீரா பார்த்து லாரி வருது” என்று அவனை உலுக்கினாள்.

அதன் பிறகே, தான் நேராக லாரியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தவன், வெடுக்கென ஸ்டியரிங்கை திருப்பி சடாரென நிறுத்த, லாரி வளைந்து சென்றது.

சஹஸ்ராவிற்கும் இப்போது தான் மூச்சே விட முடிந்தது. அருகில் இருந்தவனின் முகமோ வெளிறி இருக்க, ஸ்டியரிங்கை பிடித்து இருந்த கரங்கள் நடுங்கியது அவனுக்கு.

அவனிடம் இப்படி ஒரு நடுக்கத்தை கண்டிராதவள், “தீரா… என்ன ஆச்சு. ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க.” என அவன் கையை பற்றிக் கேட்க, அவனிடம் பதிலே இல்லை.

இன்னும் சிறிது தூரத்தில் தான் ஹோட்டல் இருக்க, அவனை இடம் மாறி அமர செய்து, அவளே ஹோட்டல் சென்று அடைந்தாள்.

அறைக்கு செல்லும் வரையிலும் கூட, அவன் எங்கோ வெறித்தபடியே இருக்க, அவளுக்கு தான் பயம் ஆர்ப்பரித்தது.

அறைக்குள் சென்றதுமே, அவன் கையை பிடித்துக் கொண்டவள், “ஆர் யூ ஆல்ரைட்? தலை எதுவும் வலிக்குதா தீரா.” என கேட்க அப்போதும் மௌனம் காத்தவனைக் கண்டு கலக்கம் தோன்றியது.

முதல் வேலையாக, அவனுக்கு சாப்பாடை ஆர்டர் செய்து வர வைத்தவள், “முதல்ல சாப்பிட்டு டேப்லெட் போடுங்க தீரா.” என்று தட்டை அவன் முன் நீட்டினாள்.

அதனை வாங்காமல், அவள் நெஞ்சில் முகத்தை புதைத்துக் கொண்டவனின், கண்கள் கலங்கியது.

“சஹி… நான்… நான் தப்பு பண்ணிட்டேன். ஆனா நான் வேணும்ன்னு பண்ணல சஹி. அவன் தான் ஸ்டியரிங்கை திருப்பி விட்டான். அன்னைக்கு… அன்னைக்கு நான் தான் கார் ஓட்டுனேன். நான் ஓட்டிருக்க கூடாது சஹி… நான் நான் அன்னைக்கு அவனை பாத்துருக்கவே கூடாது.” எப்போதும் கம்பீரமாய் ஒலிக்கும் ஆண்மகனின் குரல் இன்று நலிந்திருந்தது.

முதலில் அவன் பேசியதே புரியாமல் விழித்தவள், அதன் பிறகே இருவருக்கும் நிகழ்ந்த விபத்தை பற்றிப் பேசுகிறான் எனப் புரிந்து கொண்டு, “ரிலாக்ஸ் தீரா. அது ஒரு ஆக்ஸிடென்ட் அவ்ளோ தான். நடக்கணும்ன்னு விதி இருக்கும் போது அதை யாராலும் தடுக்க முடியாது.” மென்மையுடன் அவனை மெல்ல இறுக்கி, கேசத்தை கோதி விட்டாள்.

விழிகளை நிமிர்த்தியவன், “ஆனா நான் நினச்சு இருந்தா தடுத்து இருக்கலாம் சஹி. அன்னைக்கு அவன் குடிச்சது தெரிஞ்சும் நான் ஆர்கியூ பண்ணிருக்க கூடாது. அடிச்சுருக்க கூடாது. இப்போ… இப்போ அவன்… இல்ல சஹி… என்னால தான… நான் அவனை எப்பவும் போல அந்த விஷயத்திலயும் கண்டுக்காம இருந்து இருக்கணும். தப்பு பண்ணிட்டேன்.” என தேம்பியவனுக்கு தற்போது தான், தம்பியுடன் இறுதியாக பயணம் செய்ததும், இருவருக்குள் நிகழ்ந்த பிரச்சனையும், அவன் குடித்து இருந்ததால், இவனே காரை ஓட்டியதும், அப்போதும் அவனுடன் சண்டையிட்டதில், கோபத்தில் அவன் ஸ்டியரிங்கை வெடுக்கென திருப்பி விட்டதும், அந்நேரம் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியில் மோதி தான் சுயநினைவு இழந்ததும் சிறிது சிறிதாக நினைவிற்கு வரத் தொடங்கியது.

ஆடவனின் கண்ணீரும் அழுகையும் அவளை வருந்தச் செய்தாலும், “அப்படி என்ன பிரச்சினை உங்களுக்குள்ள. ஏன் அவனோட ஆர்கியூ பண்ணீங்க தீரா. எல்லாமே ஞாபகம் வந்துடுச்சா.” இறுதிக் கேள்வியை மட்டும் ஏக்கத்துடன் கேட்டாள்.

இடவலமாக தலையாட்டியவன், “அந்த ஒரு இன்சிடென்ட் மட்டும் தான் ஞாபகம் இருக்கு. அதுவும் இப்போ கார்ல வரும் போது தான்… ரொம்ப வலிக்குது சஹி.” மொத்த வலியையும் வார்த்தையில் தேக்கி, அவளை மேலும் இறுக்கிக் கொண்டான்.

பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவள், “அவனுக்கு தேவை தான். அவனா அவனோட முடிவை தேடிக்கிட்டான். ஒருவேளை நீங்க இல்லாம தனியா போய் இருந்தா கூட நடக்க வேண்டிய ஆக்ஸிடென்ட் கண்டிப்பா நடந்து இருக்கும் தீரா. ரொம்ப யோசிச்சு ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதீங்க.” என்று பேசிப் பேசி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தவள், உணவையும் கொடுத்து உறங்க வைத்தாள்.

அவளின் அரவணைப்பில் சற்றே தெளிந்து, அவளை விட்டு இம்மி அளவும் நகராமல் அணைத்தபடியே தீரன் உறங்கிட, அவளுக்கோ கடும் குழப்பம்.

‘ரெண்டு பேருக்கும் அப்படி என்ன ஆர்கியூமெண்ட் நடந்து இருக்கும்? ஒருவேளை சொத்து தகராறா இருக்குமோ? இல்லன்னா, அவன் அக்காவ கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு சண்டை போட்டு இருப்பாரோ. என்ன காரணம்ன்னு புரியவே இல்லையே.’ எனக் குழம்பிப் போனவளுக்கு சிறிதும் தோன்றவில்லை, இருவரின் வாழ்க்கை திசை மாறியதற்கும் காரணம் இவள் மட்டுமே என்று.

யாரோ இவள்(ன்)
மேகா…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
26
+1
123
+1
3
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments