Loading

அஷாவை மற்ற இருவரும் புருவம் சுருக்கி பார்த்தனர்.

ஆனால் அவளோ எதையோ யோசித்துக் கொண்டே அமர்ந்திருந்தாள்.

ஆஷிஷ் : என்ன யோசிக்குறிங்கன்னு தெரிஞ்சா‌ நாங்களும் யோசிப்போம்ல??? என்று பேனாவால் டேபிளை தட்டிக் கொண்டே கேட்டான்.

ஆஷா : அது… ஒன்னுல்ல… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… என்று கூறி விட்டு, இவர்களுக்கு பதிலை கூட எதிர் பார்க்காமல் அவள் கிளம்பி விடவும், இருவரும் ஒருவரை ஒராவர் பார்த்துக் கொண்டனர்.

வெளியே வந்த ஆஷா ‘அப்போ  அது யாரா இருக்கும்????’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே நடந்தாள்.

*
*

இங்கு அதிதி காரை ஓட்டிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது, அஷ்மி “ஆன்டி… அந்த ப்ளாக் கலர் கார் நம்ளையே ஃபாலோ பண்ற மாதிரி இருக்கு”. என்று கூறவும், அக்ஷித் வேகமாக திரும்பி பார்த்தான்.

அக்ஷித் : ஆமா ஆன்டி. நான் போன சிக்னல்ல பாத்தப்ப கூட அந்த நம்பர் ப்ளேட் வச்ச கார் நம்ப பின்னாடி தான் இருந்துச்சு. என்று கூறவும், அதிதி “ப்ச்ச்… அது கோ இன்சிடென்டா இருக்கும் பா…” என்று கூறவும், அக்ஷித் மட்டும் அதை நம்பாமல் நொடிக்கொரு முறை அந்த காரை திரும்பி பார்த்துக் கொண்டே வந்தான்.

அவர்களின் கார் ஆளில்லாத இடத்திற்கு வந்ததும், அந்த கார் வேகமாக முன்னால் வந்து நின்றது.

அதை பார்த்த அதிதி அதிர்ந்து போய் ஆஷிஷுக்கு கால் செய்ய முயல, சிக்னல் இல்லாமல் போனது.

இங்கு, மூவரும் முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு வந்து அதிதியின் தலையில் கன்ஐ வைத்து மரட்டி அவளை கீழே இறங்க வைத்தானர்.

அவள் கூடவே மற்றவர்களும் இறங்க, அதே நேரம், வீட்டிற்கு காரில் வந்து கொண்டிருந்த ஆஷா இதை பார்த்து கடுப்பாகி விட்டாள். அவர்களுக்கு தெரியாமல் காரை நிறுத்தி விட்டு, தன் கன்ஐ எடுத்து கொண்டு மெதுவாக கீழே இறங்கினாள். அவர்களோ அவள் வந்ததை அறியாமல், அதிதியை கடத்தும் முயற்சியில் இருக்க, அஷ்மி தன் தாய் வந்ததை பார்த்து விட்டு, அக்ஷித்தின் கையை சுரண்டினாள்.

அவள் ஏதோ சொல்வதை கநிகா பார்த்து விட்டு, அஷ்மியின் பார்வை செல்லும் இடத்தில் பார்த்தவள், தன் கையில் வைத்திருந்த கன்ஐ அஷ்மியின் தலையில் வைத்தாள். அதை பார்த்த ஆஷா “நோ… கன்அ கீழ் போடு…” என்று கூறவும், இவள் “நீங்க கன்ன கீழ் போடுங்க. நான் போடுறேன்.” என்று கூறி விட்டு, கன்னை வைத்து அவள் தலையில் அழுத்தவும், அதை பார்த்த அக்ஷித் கடுப்பாகி, தன் கையில் இருந்த ல்ஞ்ச் பேகில் உள்ள ஃபோர்கை எடுத்து, அவளது தொடையிலேயே குத்தி விட, நொடியில் நடந்த நிகழ்வை பார்த்த கபிலன் “தள்ளி போங்க, இல்லான்னா இவங்கள சுட்ருவேன்.” என்றூ மிரட்டினான்.

ஆஷா : ப்ரச்சன உனக்கும் எனக்கும். அப்போ நேரிடையா வந்து என் கிட்ட மோதனும். அத விட்டுட்டு, உனக்கு ஈசியான ஆளுங்களா பாத்து மோத கூடாது. என்று திமிராக கூறவும், அவன் அவளை தள்ளி விட்டு விட்டு, “கமான்.” என்று கூறவும், அதற்குள் குழந்தைகள் காரில் ஏறி இருக்க, அதிதி வேகமாக காரில் ஏறி காரை களப்பி விட்டாள்.

அவள் செல்வதை பார்த்த கபிலன், ஆஷாவை பார்க்க, அவ்ளோ “வாடா…” என்பது போல் நின்றிருந்தாள். நேற்று தன்னிடம் இவள் தான் அடி வாங்கானாளா என்பது இவனுக்கே கொஞ்சம் சந்தேகமாக தான் இருந்தது. இருந்தும், அவள் தன்னை இழிவு படுத்தியதாக நினைத்தவன், வேகமாக அவளை நோக்கி ஓட, அவளோ அவனின் கையை பிடித்து நிறுத்தினாள்.

இருவரின் முகமும் இறுகி போய் இருக்க, இருவருமே தங்களின் சக்தி மொத்தத்தையும் ஒன்று திரட்ட, அவன் முன் இவளின் பலம் மிக சிறியதாக இருந்தாலும், இவள் மூளையை மட்டுமே அதிகமாக பயன் படுத்தினாள்.

வேகமாக அவனின் தலை முடியை பற்றி இழுக்கவும், அவன் பல்லை கடித்துக் கொண்டு கத்தினான். அதை பார்த்த கநிகா கொஞ்சம் கூட யோசிக்காமல், தன்னிடம் உள்ள கத்தியை குறி பார்த்து வீச முயல, கனியன் அதற்குள், ஆஷாவை மயக்கமடைய செய்தான்.

கனியன் : தூக்கு அவங்கள. அவங்க நமக்கு தேவை படுவாங்க… என்று கூறவும், கபிலன் அவனை புருவத்தை சுருக்கி பார்த்து விட்டு, ஆஷாவை தூக்கி காரில் கிடத்தி விட்டு, காரை உயிர்பித்தான்.

*
*

கார்த்தியோ தன்னவளை கான ஆர்வமாக மும்பை வந்து கொண்டிருந்தான்.

இது வரை அவனுக்குள் இருந்த குற்றவுணர்ச்சி இன்று அதிகமாகி விட்டது. எப்படியாவது அவளிடம் மன்னிப்பை வேண்டிட வேண்டும் என்று நினைத்தவன், மும்பைக்கு கிளம்பி விட்டான்.

அவனுக்கு மும்பையில் அதிதியை தவிர வேறு யாரையும் தெரியாது… அதனால், நேராக அதிதியின் வீட்டிற்கே சென்று விட்டான்.

அங்கோ அதிதி மூச்சு வாங்க உள்ளே நுழைந்து, ஆஷிஷிற்கு கால் செய்து அத்தனையும் கூறினாள்.

அவனும் வேகமாக வீட்டிற்கு வந்து பார்த்தான். ஆஷா இன்னும் வீடு திரும்பவில்லை. அதே நேரம், கார்த்திக்கும் வீட்டிற்குள் நுழைந்தான்.

அனைவரும் பதட்டமாக இருப்பதை பார்த்த அவன், “அதிதி… என்ன ஆச்சு?” என்று கேட்கவும், அவள் அவனை ஓடி வந்து அனைத்துக் கொண்டாள்.

ஆஷிஷ் : அது ஒன்னும் இல்ல… ஆஷாவ காணாம போயிட்டாங்க போல. என்று கூறவும், அக்ஷித் “அம்மாக்கு எதுவும் ஆகி இருக்காது. அவங்க வந்துருவாங்க..” என்று பதட்டமாக கூறினான்.

அதிதி : உங்களுக்கு எப்டி அவங்க நம்ல தான் ஃபாலோ பண்றாங்கன்னு தெரியும்???

அஷ்மி : அது… அம்மா தான் சொன்னாங்க. நம்லோட கார்க்கு பின்னாடி ஒரு கார் ரொம்ப நெரமா வந்தா, அந்த காரோட நம்பர நோட் பண்ணிக்க சொல்வாங்க… என்று கூறவும், ஆஷிஷ் “அந்த கார் நம்பர் என்ன???” என்று அவன் கேட்கவும், இவள் “மறந்துருச்சு… சாரி…” என்று பாவமாக கூறினாள். சொல்ல போனால் அவள் அதுவரை செய்ததே பெரிய விஷயம். அதிதி கூட அதை கவணிக்க வில்லை.

கார்த்திக் : ஆஷாவா??? அவங்க ஃபோட்டோ இருந்தா காமிங்க… என்று கூறவும், அருள் காண்பித்தான். அதை பார்த்தவனுக்கு உயிரே சென்று விடும் போல் தான் இருந்தது. அவள் தானே அவனின் உயிர்.

அதை பார்த்ததும் சிலை போல் நின்றவனை உலுக்கினாள் அதிதி.

கார்த்திக் : அவள யார்நாலையும் கடத்த முடியாது.‌ஷீ இஸ் ஸோ ஸ்ட்ராங்… என்று புருவம் சுருக்கி, கண்கள் கலங்கி கூறியவனை அதிதி ஆராயும் பார்வை பார்த்தான். அதே நேரம், அவர்களுக்கு ஒரு கால் வந்தது.

ஆஷிஷ் அட்டன்ட் செய்து பேசினான். மறுமுனையில் கநிகா “ஹலோ பாஸ். இவங்கள நாங்க கொஞ்ச நாள் வச்சுட்டு அனுப்பிடுவோம். அது வைரைக்கும் வேயிட் பண்ணுங்க. அன்ட், இந்த நம்பர ட்ரேஸ் பண்ண ட்ரை பண்ணாதிங்க.” என்று கூறி விட்டு வைத்து விட்டாள்.

ஆஷிஷ் : அருள் இந்த நம்பர ட்ரேஸ் பண்ணு… என்று கூறி விட்டு அவனிடம் ஃபோனை கொடுத்தவன், கார்த்திக்கிடம் திரும்பி “ஆஷா உங்களுக்கு என்ன வேணும்?.” என்று கோபமாக கேட்டான்.

கார்த்திக் : ஆஷா என்னோட ஃபைஃப்… என்று அவன் கண்ணீருடன் கூற, அதிதி அதிர்ந்து போனாள்.

*
*

இங்கு ஆஷாவை ஒரு நாற்காலியில் அமர வைத்து கட்டி வைத்திருந்தனர்.

கனியன் : இங்க இருந்து தப்பிச்சு போக ட்ரை பண்ணாதிங்க. என்றான்.

ஆஷா : நீங்க பாக்க சின்ன பசங்க மாதிரி இருக்கிங்க. அப்றம் ஏன் இதெல்லாம்??? என்று யோசனையுடன் கேட்டாள்.

கபிலன் : சின்ன பசங்க தான். ஆனா, எங்களுக்கு வலி அதிகம். சின்ன வயசுலையே எங்க அப்பா அம்மாவ கொண்ணுட்டாங்க. அப்பா அம்மா பாசமே இல்லாம வளந்தவங்க நாங்க.

ஆஷா : அப்போ எப்டி உங்க கிட்ட கன்ஸ் வந்துச்சு? அதுவும் ஸ்கூல் ட்ரெஸ்ல இருக்கிங்க.

“நான் தான் குடுத்தேன்…” என்று கூறிக் கொண்டே வெளியே வந்தான் ஒருவன். அவனை பார்த்த இவள் “நம்ப வச்சு ஏமாத்திட்டல்ல…” என்று கூறிக் கொண்டே கட்டை அவிழ்க்க முயன்று தோற்றாள்.

கநிகா : நடந்தது உங்களுக்கும் தெரியனும்… சொல்றோம்… என்று கிறியவள், நடந்ததை கூறி முடித்தாள்.

அதை கேட்டவளுக்கு மனம் கனத்தாலும், வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தான் என்ன நினைக்கிறோம் என்பதை வெளியே காட்டும் அளவிற்கு அவள் முட்டாள் அல்ல.

கனியன் : உங்க எமோஷன்ச என் கிட்ட இருந்து மறைக்க முடியாது… ஐ கேன்… என்று ஆரம்பித்தவனை தீயாய் முறைத்தாள் ஆஷா.

ஆஷா : ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ என் கிட்ட அடி வாங்க தான் போற‌. அப்போ உனக்கு என்ன பத்தி தெரியும். என்று முறைப்புடனையே கூறினாள்.

அதை கேட்ட கநிகா “என்ன மேடம்… சின்ன பசங்க கூடலாம் போட்டி போடுறிங்க…” என்று ஏளனமாக கேட்டாள்.

ஆஷா : சின்ன பசங்க சின்ன பசங்க மாதிரி நடந்துக்குட்டா நான் ஏன் மா இப்டி பேச போறேன். என்று கூறியவளின் கழுத்தை நெறித்தான் கபிலன். அவனது முகம் கோபத்தில் இறுகி போய் இருந்தது. கண்கள் இரத்த சிவப்பில் இருக்க, அவனது கண்களை இமைக்காமல் பார்த்தாள் ஆஷா.

*
*

   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்