Loading

கருப்பு ஹூடி போட்டுக் கொண்டு ஒருவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான். அவனது முகத்தில் அப்படி ஒரு கோபம் இருந்தது.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவனாய், வேகமாக சுவற்றை குத்த, அதுவோ சுக்குநூறானது. அதை தூரத்தில் இருந்து பார்த்த இன்னொருவன் அவனுக்கு அருகில் வந்து “இருந்தாலும் நீ இவ்ளோ கோவ பட கூடாது.  அந்த பொண்ணு என்ன பண்ணுச்சுன்னு அந்த பொண்ண நீ அடிச்ச? என்று கோபமாக கேட்டான்.

“என் வழில குறுக்க வரவங்க எல்லாரையும் அடிப்பேன்.” என்று கோபத்தில் அவன் கத்தவும், இதற்கு மேல் பேசினால் அவன் இன்னும் கோபப்படுவான் என்பதை உணர்ந்தவனாக அமைதியாகி விட்டான்.

அதே நேரம் ஒரு பெண் உள்ளே நுழைந்து “கபிலா… இருந்தாலும் இது தப்பு டா.” என்று பொறுமையாக அவளிடம் எடுத்துரைக்க முயன்றாள்.

கபிலனோ, “என்ன தப்பு டி…” என்று கேட்டவன் ஏதோ கூறவும், அதை கேட்ட மற்ற இருவரும் “என்னது???” என்பது போல் பார்த்தனர்.

கபிலன் : இப்போ சொல்லுங்க நான் பண்ணது தப்பா??? என்று முகம் இறுக கூறியவனிடம் இதற்கு மேல் பேசுவது வீன் என்று இருவரும் உணர்ந்திருந்தாலும், கனியன் (கபிலனின் தம்பி) “டேய்… நீ பண்றது தப்பொன்னு தோனுது.” எண்டு கூறியவனை முறைதான் அவன்.

கநிகா : இது ரொம்ப பெரிய தப்பு டா. அப்டி என்ன உனக்கு ஒரு கோவம்? அவங்க கூட நம்ல உயிரோட விட்டாங்க. ஆனா நீ… என்றவள் இடைவெளி விட்டு விட்டு தொடர்ந்தாள் “நம்ம சக்தி மத்தவங்களுக்கு நன்மையா தான் இருக்கனும். தீமையா இருக்க கூடாது. அத புரிஞ்சுக்கோ. உன்னோட கோவம்…” என்று அவள் ஆரம்பிக்கவும், இவன் அவளை தடுத்து நிறுத்தினான். கண்களில் இருந்து வழிந்தோடிய நீர் அவனது கழுத்தை தொட்டது.

அவன் இப்படி தான். அவனுக்கு உணர்ச்சிகள் அதிகம். அது பாசம், கோபம், அழுகை… என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

கநிகாவிற்கு தான் பேசியது அவனுக்கு எவ்வளவு வலித்திருக்கும் என்பதை உணர்ந்தாலும், அவனிடம் எப்படி பேசினால் வேலைக்காகும் என்பதை உணர்ந்தவளாய் தன் குற்றவுணர்ச்சியை அவள் வெளிக்காட்டவில்லை.

கபிலன் : பரவால்ல விடு… நீ பேசுனது எனக்கு அவ்ளோ பெருசா இல்ல. வாழ்க்கைல எவ்ளவோ பாத்துட்டேன். என்று கூறியவனை எப்போதும் போல் தோளில் தட்டி விட்டு “நான் என்ன நினைக்குறேன்னு பாக்காதன்னு எத்தன தடவ உன் கிட்ட சொல்றது.” என்று கூறி விட்டு கனியனை பார்த்தாள். அவன் எப்போதும் போல் இவர்களின் சண்டையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

கபிலன் : போடி… நீ ஒன்னும் அவ்ளோ பெரிய சீக்ரெட் மெயின்டைன் பண்ண மாட்டியே… என்று அவளின் தோளில் தட்டவும், அவள் வலியில் தோளை பிடித்துக் கொண்டாள்.

கநிகா : வலிக்குது டா… இனி அடிக்குற வேலையில்லாம் வச்சுக்காத. அப்றம் நீ விளையாட்டுக்கு அடிக்க போய், என்னோட கை கால் ஒடஞ்சுருச்சுன்னா நீங்க ரெண்டு பேர் தான் என்ன பாத்துக்கனும். என்று வலியில் முகத்தை சுருக்கி கூறினாள்.

கனியன் : டேய்… இவள நீ விளையாட்டுக்கு அடிச்சதுக்கே வலிக்குதுன்னு சொல்றா‌. அந்த பொண்ண நீ அவ்ளோ வேகமா எட்டி ஒதச்ச. ஆனா, அந்த பொண்ணு கண்ல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரல பாத்தியா??? என்று கூறியவனின் தலையிலேயே ஒரு போடு போட்டாள் கநிகா.

“நீ கொஞ்சம் மூடிட்டு வரியா??? இவன் ஒரு பொண்ண லவ்….” என்று அவள் ஆரம்பிக்கவும், கபிலன் முறைக்கவும், இவள் அமைதியாகி விட்டாள்.

கனியன் கபிலனை ஆராய்ச்சி பார்வை பார்க்க, அவன் அவனை தவிர்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

அவன் அங்கிருந்து நகரவும், கனியன் தன் தங்கையான கநிகாவிடம் என்னவென்று விசாரித்தான்….

*
*

ஆஷிஷ் : அப்போ உனக்கு அவங்கள பத்தி ஏதோ தெரிஞ்சிருக்கு. அப்படி தான?

ஆஷா : தெரியும் தான். ஆனா, அவங்க ரொம்ப நல்லவங்க. அவங்க எதுக்கு உங்கள பகைச்சுக்கனும். அப்போ நீங்க ஏதோ தப்பு பண்ணிருக்கிங்க. இருந்தாலும் நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு காரணம், அவங்க யாருன்னு எனக்கு தெரியனும். அவ்ளோ தான். என்று கூறி விட்டு அமைதியானாள்.

அவினாஷ் அவளை வித்தியாசமாக பார்த்து வைக்கவும், அருளுக்கு அவளை எங்கையோ பார்த்தது போல் தோனாறியது. இருந்தும் அதை அவன் வெளியே கூறவில்லை.

ஆஷிஷ் : எங்களுக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நாங்க கிளம்பறோம். நீங்க உங்க வேலைய பாருங்க. உங்களுக்குன்னு ஒரு கார் கூட வெளிய இருக்கு. அதுல உங்களுக்கு தேவையான எல்லாமே இருக்கு. ஆல் தி பெஸ்ட். என்று கூறி விட்டு இவன் நகர்ந்து விட்டான்.

ஆஷா அவன் சென்ற திசையையே ஒரு நொடி பார்த்து விட்டு திரும்பினால், அருளும் அவினாஷும் இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தனர். இவள் அவர்களை பார்த்து புருவத்தை உயர்த்தவும் இருவரும் அங்கிருந்து அகன்று விட்டனர்.

*
*

ஆஷா ஜிம்மில் வர்கௌட் செய்து கொண்டிருந்தாள். வியர்வை துளிகள் அவளின் மேனியை நினைத்து இருக்க, அவளது முகமோ சிவந்திருந்தது.

எப்படியாவது கபிலனை கண்டு பிடித்து விட வேண்டும் என்று அவள் நினைத்து கொண்டு தான் இருந்தாள். அதற்கு முக்கிய காரணம், அவளின் பிள்ளையை கொன்ற பாவியல்லவா அவன்.

மனம் வேதனையில் இருந்தாலும், அவனை எதிர்க்க தனக்கு சக்தி வேண்டும் என்று நினைத்தவளுக்கு ஏனோ அவளையே அறியாமல் கண் கலங்கி விட்டது.

அவளுக்கு அருகில் ஒரு பெண்ணும் வர்க்கௌட் செய்து கொண்டிருந்தாள். அவளது பார்வை ஆஷாவிடமே இருந்தது. அதை ஆஷா உணரவில்லை.‌ எப்போதும் தன்னை சுற்றி ஒரு கண்ணை வைத்திருக்கும் ஆஷா இன்று அப்பெண்ணை கவணிக்க தவறியது அவளது குற்றமா அல்லது விதியின் விளையாட்டா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆஷா தனது பையை எடுத்துக் கொண்டு ஜிம்ஐ விட்டு வெளியேறவும், அவளும் ஆஷாவை பின் தொடர்ந்து வெளியேறினாள்.

ஆஷா நேராக ஆஷிஷின் வீட்டிற்கு செல்லாமல், அவனின் ஆஃபிசிற்கே சென்று விட்டாள்.

அங்கு அருளும், ஆஷிஷும் ஏதோ முக்கியமான வேலையில் ஈடு பட்டிருந்தனர்.

அதே நேரம், ஆஷா வந்திருப்பதாக கால் வரவும், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு, அவளை வர சொல்ல, ஆஷா கண்களில் ஒரு வித குழப்பத்துடன் உள்ளே நுழைந்தாள்.

அருள் : என்ன ப்ராப்ளம்??? என்று முகத்தை சுழித்து அவன் கேட்டான்.

ஆஷா : உங்களுக்கு யாராச்சும் எதிரி இருக்காங்களா என்ன? அதுவும் சின்ன பசங்களா? ஏன்னா, அன்னிக்கு வந்தவன் ஒன்னும் அவ்ளோ மெச்யூரிடி இருக்குறவனா தெரியல. கோவத்த கட்டு படுத்த தெரியாம என்ன அடிச்ச மாதிரி தான் இருந்துது. கோவத்த காட்டுறதுக்கும், கோவத்த போக்க அடிக்குறதுக்கும் வித்தியாசம் இருக்கு. என்று யோசனையுடன் கூறினாள்.

ஆஷிஷ் : அப்போ அது சின்ன பையன்னு சொல்ல வரியா??? அப்டி யாரும் எங்களுக்கு எதிரி இருக்க மாதிரி தெரியலையே…

ஆஷா : அப்போ உங்க அப்பாக்கு??? அவங்களோட பசங்களா கூட அவங்க இருக்கலாம். இப்போ உங்கள பழி வாங்க வந்துருக்கலாம்.

அருள் : அது எதுக்கு பண்ணனும்??? இவங்க அப்பா தப்பே பண்ணிருந்தாலும், தண்டனை அவங்க தான அனுபவிக்கனும். எங்கள ஏன் பழி வாங்கனும்???

ஆஷா : உங்களுக்கு புரியுதா இல்லையா? அவங்களுக்கு மெச்யூரிடி இல்ல. அவங்களா யோசிக்கவும் இல்ல.

ஆஷிஷ் : அப்போ அவங்கள யாரோ தூண்டி விடுறாஙகன்னு சொல்ல வரிங்களா?

ஆஷா : அப்படியும் இருக்கலாம்னு சொல்ல வரேன். எல்லாமே ஒரு கெஸ் தான். நான் முன்னாடியே சொன்னது தான். என் கிட்ட மறைக்காம எல்லாத்தையும் சொன்னா கண்டு பிடிக்க ஈசியா இருக்கும். என்று நாற்காலியில் நன்றாக சாய்ந்து அமர்ந்தவாறு கூறினாள்.

ஆஷிஷ் : எனக்கே இன்னும் முழுசா புரியல. சின்ன பையன்னு சொல்றிங்க. அப்போ எப்டி அவ்ளோ ஸ்ட்ரெந்த் இருக்கும். அதுவும் மூனு பேர ஒத்த ஆளா சமாளிக்குற அளவுக்கு??? சம்திங் ராங் இல்ல? என்று முகத்தை சுழித்து கேட்டான்.

ஆஷா : அதே தான். அவனோட ஸ்ட்ரெந்த் ரொம்ப அதிகம். அவன் என்ன உதைக்கும் போது எனக்குள்ள இருந்து கூட ஏதோ ஒன்னு வெளிய வந்துச்சு. ஐ கேன் ஃபீல் தட். என்று எதையோ கண்டு பிடித்த மகிழ்வில் கூற, மற்றவர்களுக்கோ தலையை பிய்த்துக் கொள்வது போல் இருந்தது.

*
*

இங்கு அக்ஷிதும், அஷ்மியும் வகுப்பறையில் பாடத்தை கவணித்துக் கொண்டு அமர்ந்திருந்தனர். மற்றவர்களோ, “எப்போது பெல் அடிக்கும்??” என்று காத்திருந்தனர். அவர்களின் நினைப்பை பொய்யாக்காமல், பெல் அடிக்கவும், அனைவரும் புத்தகங்களை பையில் தினித்து விட்டு, வெளியே வந்தனர்.

அங்கு ஏற்கனவே ஆருஷி தனது தமையனான அர்ஷத்துடன் இவர்களுக்காக காத்திருந்தாள். அதை பார்த்த அஷ்மி மகிழ்வுடன் ஆருஷியை நோக்கி ஓட, அதே நேரம் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு நெடியவனின் கால் பட்டு அவள் கீழே விழுந்தாள்.

அந்த நெடியவனோ, “சாரி பாப்பா. நீ ஒடி வருவன்னு தெரியாது..” என்று கூறிக் கொண்டே அவளை தூக்கி விட்டான்.

அதை பார்த்த அக்ஷித் கடுப்பாகி, “பாத்து வர மாட்டிங்களா நீங்க???” என்று தன் தங்கைக்கு அடி பட்டு விட்டதே என்று நினைத்துக் கொண்டு கூறவும், அவன் “சாரி குட்டி பையா… தெரியாம நடந்துருச்சு.” என்று கூறவும், இது வரை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அர்ஷத் “சரி விடுங்க. வாங்க போவோம். அம்மா நமக்காக வேய்ட் பண்ணுவாங்க…” என்று கூறி விட்டு அவர்களை அழைத்து சென்று விட்டான்.

இங்கு அதிதி இவர்களுக்காக காத்திருக்கவும், அது அதிதி என்பதை அறிந்து கொண்ட கபிலன்😉 வேகவேகமாக கனியனையும், கநிகாவையும் அழைத்து நடந்தவற்றை கூற, அவர்களும் அதிதியையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தனர்.

கபிலன் : அது அந்த பொண்ணோட பசங்கன்னு நினைக்குறேன்… என்று ஆஷாவை மனதில் வைத்துக் கொண்டு கூற, மற்ற இருவருக்கும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்தது.

கநிகா : சின்ன பசங்கலாம் இருக்காங்க. இப்போ எதுவும் பண்ண வேண்டாம். அதுவும் அந்த ரெண்டு பொண்ணுங்க ரொம்ப க்யூட்டா இருக்காங்க… என்று கூறியவளை இருவரும் முறைக்க, இவள் “அது சின்ன பசங்க. அவங்க மேலலாம் நமக்கு வன்மம் இருக்க கூடாது. அது தப்பு…” என்று கூறவும், கபிலன் அவளின் நெற்றியில் ஒற்றை விரல் கொண்டு சுண்டி விட்டு செல்ல, இவள் கடுப்பாகி அவன் பின்னாலையே சென்றாள்.

(மொளச்சு மூனு இலை விடல, அதுக்குள்ள பழிவாங்க வந்துட்டாங்கப்பா🤐🤐)

*
*
   

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்