Loading


அதிதி : ஆஷா… உங்களுக்கு வயிரு எதும் வலிக்குதா? என்று அவளின் கை பிடித்து வினவவும், அவள் இவளை திரும்பி இவளை பார்த்தவள், “பெட்டர்…” என்று முனுமுனுத்தவள், மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அரை மணி நேரம் கடந்தது. அவள் அசையவில்லையே. வெளியே குழந்தைகள் அழும் சத்தத்தை கேட்டே அது அவளது பிள்ளைகள் தான் என்பதை கண்டு கொண்டவள், வாசலை பார்க்க, அங்கு இவளது தோழியும், இவளது பிள்ளைகளும் பதட்டத்துடன் வந்து கொண்டிருந்தனர்.

அஷ்மி : ம்மாஆஆஆஆ… என்று அவள் அழவும், அக்ஷித், “உன்ன அழ கூடாதுன்னு சென்னேனா இல்லையா??? அமைதிய இரு. அப்றம் அம்மாவும் அழுவாங்க.” என்று தன் தங்கையை அதட்டியவன், தனது தாய்க்கு அருகே சென்று, “வலிக்குதாம்மா???” என்று பாசமாக வினவினான். அதை கேட்டவளின் இதழ் தானாக விரிந்தது.

அஷ்மி : நீ போடா… அம்மாக்கு வலிக்கும்ல… என்று அவளின் வலியையும் தன் வலியாக நினைத்து கூறுபவளை பார்க்கும் போது தன்னவனின் முகம் வரவும், அவளது முகம் இறுகி போனது.

அதை உணர்ந்த அக்ஷித், “அழாத டி…” என்று திட்டயவன், “ம்மா.. அவ அழ மாட்டா‌. நீயும் அழாத.” என்று அவளது கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்தான். இது வரை தனது தாயின் கண்ணீரையே பார்த்திராத அஷ்மி தேம்பி தேம்பி அழவும், அக்ஷித் தான் அவளை அனைத்துக் கொண்டு சமாதானம் செய்தான்.

அதை பார்த்த ஆஷிஷ், “ஓய்… குட்டி பையா…” என்று அக்ஷித்தை அழைக்கவும், அவன், ” நான் ஒன்னும் குட்டி பையா இல்ல. என்னோட பேர் அக்ஷித்.” என்று முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு கூறினான்.

ஆஷிஷ் : ஓஓஓ… உங்க பேர் அக்ஷித்தா??? சரி சரி… ஆனா, எனக்கு நீ குட்டி பையா தான்… என்று அவனை வம்பிழுக்க நினைத்து கூறவும், அவன் சினுங்கினான்.

அதிதி : ப்ச்ச். சின்ன பையன் கூடலாமா சண்ட போடுவிங்க. அமைதியா இருங்க. என்று கோபமாக கூறினாள்.           

ஆஷிஷும் அமைதியாகி விடவும், இங்கு ஆஷாவின் தோழியான ‘Jenifer’ கோபத்துடன் அவளிடம் கத்திக் கொண்டிருந்தாள்.

ஜெனி  : கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டி உனக்கு??? இந்த மாதிரி சீரியசான கேஸ் எடுக்காதன்னு எத்தன தடவ சொன்னாலும் உன் புத்தில ஏறாதா? உனக்கு எதாவது ஆச்சுன்னா இவங்கள யார் பாத்தப்பா. என்று கேட்பவளிடம் எதையோ செல்ல வந்தவளை தடுத்தவள், “இன்னொரு தடவ அவன் வருவான்னு சொன்ன பளார்னு அறைஞ்சுரேவேன் பாத்துக்கோ. அவன் தான் உன்ன விட்டுட்டு போயிட்டான்ல. அப்றம் எந்த…” என்று அவள் ஆரம்பித்தவள், வாயை மூடிக் கொண்டாள்.

ஆஷா அமைதியாக அமர்ந்திருக்கவும், இவள் “என்ன பாத்தா உனக்கு இளிச்சவாச்சி மாதிரி தெரியுதா டி. நான் பாட்டுக்கு பைத்தியகாரி மாதிரி கத்துறேன். நீ என்னடான்னா கூலா உக்காந்துட்டு இருக்க. உன் கூட அர மணி நேரம் பேசுனா psychologist ஆன நானே ஒரு psychologistஅ தேடி போகனும் போலயே… விட்டா என்னையே பைத்தியம் ஆக்கிருவ போலையே…” என்று புலம்பினாள்.

அதற்கும் ஆஷா அமைதியாக இருப்பதை பார்த்து விட்டு அவள், “போடி… உன் கூடலாம் மனுஷன் இருப்பானா??” என்று‌ அழுகாத குறையாக கூறவும், யாரோ உள்ளே நுழையும் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

அனைவரும் வாசலை பார்த்தனர். மருத்துவர் தான் அவளை பரிசோதிக்க வந்திருந்தார்.

அதனால் அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றனர்.

“நீங்க வீக்கா இருக்கிங்க. சாப்பாடு சாப்பட்ரிங்களா இல்லையா??? இவங்க சாப்பட்ராங்களான்னு யாராச்சும் பாத்துக்கோங்க.” என்று அவள் கூறியதை கேட்டும் கேட்காதது போல் அமர்ந்திருப்பவளை பார்த்த அவள் “இவ ரோபோட்டா? இவ கூட மனுஷன் பேச முடியாது. என்னத்தையோ பண்ணி தொலைய சொல்லு. சொன்னா கேட்டுட்டு தான் மறு வேலை பாப்பா.” என்று சலித்துக் கெண்டாள்.

ஜெனி : நீ வேற மது. இத்தன நேரமா நானும் இதையே தான் சொல்லிட்டு இருந்தேன். செவுடன் காதுல சங்கூதுன மாதிரி உக்காந்துட்டு இருக்கா.

மதுவோ அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு, “நான் போறேன்… அவ சொன்னா கேக்க மாட்டா. இன்னிக்கே வீட்டுக்கு போகனும்னு ஒத்த கால்ல நிப்பா. கூட்டிட்டு போயிடு. ஒழுங்கா பாத்துக்கோ.” என்று கூறி விட்டு அவள் அங்கிருந்து சென்று விட்டாள்.

ஜெனி : அவ கிட்ட பேசலாம்ல. என்று கூறவும், அவள் எப்போதும் போல் அவளை திரும்பி பார்த்து விட்டு மீண்டும் திரும்பிக் கொண்டாள்.

அதை பார்த்தவள், பெருமூச்சொன்றை விட்டு விட்டு, ஆஷிஷிடம் திரும்பி, “இவள காப்பாதுனதுக்கு தேங்க்ஸ். இனி இவள இந்த கேஸ்ல…” என்று அவள் ஆரம்பிக்கவும், ஆஷா “நீ கொஞ்சம் வாய மூடுறியா???” என்று அவளிடம் தமிழில் கூறியவள், ஆஷிஷிடம் “இந்த கேஸ நானே எடுத்துக்குறேன். எந்த ப்ராப்ளமும் இல்ல. ஆனா, எனக்கும் என்னோட பசங்குளுக்கும் பாதுகாப்பு வேணும். நீங்க எவ்ளோக்கு எவ்ளோ என் கிட்ட நேர்மையா எல்லாத்தையும் சொல்றிங்களோ, அவ்ளோக்கு அவ்ளோ உங்கள காப்பாத்த முடியும். டீல் எப்டி???” என்று ஹிந்தியில் கேட்டாள்.

ஆஷிஷ் : குட். கண்டிப்பா உங்களுக்கு பாதுகாப்பு இருக்கு. அதுவும் எங்க வீட்டுலையே… என்றவனை புருவம் சுறுக்கி பார்த்தாள். அதை புரிந்து கொண்டவனோ, “இல்ல… எப்போ என்ன நடக்கும்னு தெரியாதுல்ல. அதான்…. நீங்களும் பயமில்லாம ஒரே ஒரு சைட் மட்டும் கான்சன்ட்ரேட் பண்டுவிங்க. அதுக்கும் மேல, எங்க ஃபேமிலிய விட, உங்களுக்கு கண்டிப்பா உங்க பசங்க தான் முக்கியம். சப்போஸ் உங்க பசங்களுக்காக என்னோட ஃபேமிலிய நீங்க பலி குடுத்துட்டிங்கன்னா என்ன பண்றது???” என்று புன்னகையுடன் வினவினயவனை பார்த்தவளின் இதழ்களும் தானாகவே விரிந்தது.

ஆஷா : ஆஷா… என்று தன் கையை நீட்டினாள். அவனும், “ஆஷிஷ் ஷர்மா…” என்று கூறி அவளின் கையை பட்டும் படாமலும் பற்றி குலுக்கினான்.

அஷ்மி : அம்மா. நம்ம எங்க போக போறோம்? என்று தன் பாவமாக கேட்டாள் அவள்.

அதற்கு ஆஷா பதில் சொல்லும் முன், அதிதி அவளை தூக்கிக் கொண்டு “அது… உன்ன மாதிரியே இன்னும் ரெண்டு குட்டி பசங்க இருக்காங்க. அவங்கள மீட் பண்ண போறோம்…” என்று குழந்தையாகவே மாறி கூறவும், அவள் புன்னகைத்துக் கொண்டாள்.

சிறிது நேரத்தில் உஷாவை டிஸ்சார்ஜ் செய்து விடவும், இவளை ஆஷிஷ் அவன் வீட்டிற்கே அழைத்து சென்றான். எல்லாம் அதிதியின் வேலை தான். ஏனோ அவளுக்கு ஆஷாவை பிடித்து விட்டது. அவளின் இழப்பு சிறியது அல்லவே. அவளை பற்றி ஆஷிஷ் கூறியதை அவன் கேட்டிருக்கிறான். அது போக, ஜெனி கூறியதை வைத்து அவளை பற்றி அவர்கள் ஓரளவு யூகித்திருந்தனர். இருந்தும் முழுவதுமாக இருவரும் அறியவில்லை.

அடுத்த நாள் காலை :

ஆஷா இன்னும் எழவில்லை‌. அஷ்மியை அக்ஷித் எழுப்பி விட்டு, தனது தாயையும் எழுப்ப போராடிக் கொண்டிருந்தான். காலையில் நேரத்தில்  எழுவது மட்டும் ஆஷாவிற்கு அவ்வளவாக பிடிக்காது.

வெளியே அதிதி கூட ஆஷிஷை வசைபாடிக் கொண்டே தான் சாப்பாட்டை எடுத்து வைத்தாள். “காலைல நேரத்துல எந்திரிக்குறது கூட இல்லை. இந்த சின்ன பசங்க கூட எந்திரிச்சிருச்சுங்க.” என்று முனுமுனுத்துக் கொண்டிருக்கும் அதே நேரம், ஆஷா வேகவேகமாக தயாராகி வைளியே வந்தாள்.

அவர்களின் உடையெல்லாம் காலையிலையே ஆஷிஷ் அருளிடம் எடுத்து வர சொல்லி விட்டான்.

அவனும் ஜெனியிடம் கூற, அவள் புலம்பிக் கொண்டே எடுத்து வந்து கொடுத்து விட்டு சென்றிருந்தாள்.

ஆஷா : அக்ஷித்… சாப்டியா டா??? என்று கேட்கவும், அவன் “ம்ம்ம்… சாப்டேன் மா.” என்றான்.

அதிதி : பசங்கள நானே ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டர்ரேன்… என்று கூறவும், அவள் ஏதோ சொல்ல வாயெடுக்கும் நேரம் ஆஷிஷ் கீழே இறங்கி வந்து “உங்க கிட்ட சில விஷயங்கள் பேசனும்…” என்று கூறினான்.

அதிதி : நீங்க போய் பேசுங்க. நான் கூட்டிட்டு போறேன். இவங்க எல்லாரும் ஒரே ஸ்கூல் தானாம். நான் பாத்துக்குறேன். நீங்க போங்க. என்று கூறவும், இவள் ஒரு தயக்கத்துடனையே தான் ஆஷிஷின் பின்னால் சொன்றாள்.

அங்கு அவினாஷும், அருளும் அமர்ந்திருந்தனர்.

ஆஷிஷ் : நீங்க இங்க சும்மா தங்கல மிஸஸ்.ஆஷா. நீங்க எங்கள தாக்க வர்ரது யாருன்னு கண்டு பிடிச்சு குடுத்திங்கன்னா, நாங்க உங்களுக்கு தர்ர பணத்துல நீங்க இங்க தங்குற பில் கான்சல் ஆகிடும். இந்த அகரீமென்ட்ல நீங்க சைன் பண்ணனும். நீங்க‌ இந்த கேஸ தவற வேற எதுவும் எடுக்க கூடாது. இந்த கேஸ பத்தி யாரு கிட்டையும் சொல்ல கூடாது….” என்று பல ரூல்ஸ் அவன் சொல்லவும், இவளும் அதை படித்து பார்த்து விட்டு கையெழுத்து போட்டு கொடுத்தாள்.

ஆஷிஷ் : ம்ம்ம்… சொல்லுங்க. அதூ யாரு. இங்க வரதுக்கு முன்னாடியே அது யாருன்னு கொஞ்சம் டீட்டைல்ஸ் கலெக்ட் பண்ணிருக்கிங்க போல. என்றான்.

ஆஷா : சிம்பில் மிஸ்டர்.ஆஷிஷ். நீங்க எப்டி என்னோட ப்ரொஃபைல் செக் பண்ணிங்களோ அதே மாதிரி நானும் நீங்க யாருன்னு எல்லா டீடைல்ஸும் கலெக்ட் பண்ணிட்டேன். அதுல ஒன்னு தான் நான் இங்க வந்ததுக்கு முக்கிய காரணம். என்று உதட்டை வைத்து கூறினாள்.

ஆஷிஷ் : குட்… அப்போ, அது யாருன்னு சொல்லுங்க… என்றான்.

ஆஷா : மிஸ்டர்.ஆஷிஷ்… உங்களுக்கு இன்னும் இந்த கேஸோட சீரியஸ்னெஸ் புரியல. நீங்கள் விதைத்த விதையொன்று வளர்ந்து மரமாகி இருக்கிறது. என்று தமிழில் கூறவும், அவனுக்கும் அது புரிந்தது. ஆனால், அவினாஷிற்கு தான் பாவம் அவள் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் போனது.

ஆஷிஷ் அவளை கேள்வியுடன் பார்க்கவும், அவள் “அதாவது… நீங்க யாருக்காச்சும் எதாவது பண்ணி கூட உங்களுக்கு எதிரி உருவாகி இருக்கலாம்னு சொன்னேன்.” என்றாள்.

அதை கேட்டவனுக்கு இன்னும் சந்தேகம் அதிகமாகியது.

*
*

 
 
 
 
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

  உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

  4 Comments

  1. Sangusakkara vedi

   1. மொத்த ஸ்டோரிலயும் கார்த்திகேயனோட ஃபீலிங் ரொம்ப பிடிச்சுருந்தது.

   2. கதை நடை அழகா இருந்தது.

   3. ஆஷிஷ் ஃபேமிலி ஆஷாக்கு குடுக்குற பாதிகாப்பு சூப்பர்..

   குறைன்னு பார்த்தா

   1. ஸ்டோரில நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க. அதவிட என்னன்னா எல்லார்க்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பெயர்களா வர்றது யார் என்ன கேரக்டர்னு டக்குனு ஐடென்டிஃபை பண்ண முடியல.. திரும்ப திரும்ப ஓ இந்த கேரக்டர் ரா ஓ இந்த பையனான்னு திரும்ப திரும்ப செக் பண்ற மாதிரி இருக்கு..

   2.முதல்ல ஒரு இன்ட்ரோ குடுத்துட்டு டக்குன்னு வருசத்த மாத்துனதும் என்னடா நடந்தது இங்கன்னு தோண வைக்குது. ஃப்ளாஷ் பேக் உண்டுன்னு நினைக்கிறேன்.

   3. கொஞ்சம் ஸ்பெல்லிங் எரர்ஸ்….

   யூடி ரெகுலர் ரா குடுத்தா நல்லா இருக்கும்…

  2. Oosi Pattaasu

   ‘காதல் கரை சேர்ந்தது’ ஒரு லவ் கம் ஆக்‌ஷன் ஸ்டோரி.
   இதோட பாசிட்டிவ்ஸ்,
   1.கேரக்டர் நேம்ஸ் எல்லாம் அழகா இருக்கு.
   2. ஆஷா, ஆஷிஷ் குடும்பத்துக்காக யோசிக்கிறதும், ஆஷிஷோட ஃபேமிலி, ஆஷாக்காக யோசிக்கிறதும் செமையா இருக்கு.
   3. அதிதியோட கேரக்டர் செம ஸ்வீட்டா இருக்கு.
   நெகட்டிவ்ஸ்னா,
   1. அங்கங்க நிறைய ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குப்பா.
   2. ஸ்டோரி நிறைய இடத்துல நான் சின்கா இருக்க மாதிரி தோணுது. சில இடத்துல ஏதோ டீசர் படிக்குற ஃபீல்.
   3. சின்ன இன்ட்ரோ தான் குடுத்தீங்க. அதோட இயர் சேஞ்ச் பண்ணிட்டீங்க. அது கொஞ்சம் கன்ஃபியூஷனா இருக்கு. பட், போகப் போகப் புரியும்னு நெனைக்கிறே. ஓவர் ஆலா ஸ்டோரி நல்லாருக்கு. இன்னும் போகப் போக இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்னு நெனைக்கிறேன்.