Loading

ரோமியோ-10

 

பதட்டத்தோடு தன் அறைக்குள் நுழைந்தான் ஆதர்சன்… ஐயோ அப்படியே விட்டுட்டு வந்தேனே… இப்போ என்ன ஆக போகுதோ என்று அவன் பயந்து கொண்டே வர…  தலை வழியாக மாட்டிய சுடிதார் டாப்ஸ் அப்படியே பாதியில் நின்று…கைகள் இரண்டு மேலே அந்தரத்தில் நிற்க… அப்படியே மெத்தையில் சரிந்திருந்தாள் மிளிர்மதி…

அதை பார்த்த ஆதர்சன் அதிர்ந்து…  வேகமாக உள்ளே சென்று… ஐயோ மதி…சாரி டி… இப்படியா உன்ன விட்டுட்டு போனேன்… என்று அவளது முழு சட்டையையும் போட்டு விட்டவன்… அவள் முகத்தை பார்க்க… அதுவோ அவனை தீயென எரித்து கொண்டிருந்தது…

யோவ்… நீ போய் எவ்வளோ நேரம் ஆச்சு ….

ஆதர்சன் அதிர்ந்து தன் பின்னால் யாரும் உள்ளார்களா என்று பார்க்க.. எவரும் இருக்கவில்லை… என்னையவா டி என்று கண்கள் விரிய கேட்க..

உன்னைய தான் யா… ஒரு பொண்டாட்டிக்கு ஒழுங்க ட்ரெஸ் போட்டு விடாம அம்போன்னு போனவனுக்கு என்ன மரியாதை… என்று கண்களை உருட்டி…தன் ஜெர்ரி பழ உதடுகளால் சுளித்து சுளித்து பேச… அந்த உதட்டின் சூழலில் சிக்கி போனான் ஆதர்சன்…

வேகமாக சென்று அறை கதவு ஜன்னல் கதவுகளை அடைத்தவன்… யாரும் கேட்டுவிட்டார்களா என்று ஒரு முறை பார்த்து வைத்தான்… எவரும் இல்லை என்பதை அறிந்து வேகமாக தன் மனைவியை நெருகியவன்…. சட்டென்று அவள் இடை வளைத்து அவள் இதழோடு தன் இதழை பொறுத்தினான்…

இப்படி ஒரு முத்தத்தை அவள் சற்றும் எதிர்பார்க்க வில்லை.. முதலில் மென்னையாக அவள் உதடுகளை களவாடியவன்…. நேரம் ஆக ஆக வன்மையாக அவள் இதழ்களை கடித்து சுவைக்க ஆரம்பித்தான்…

அவ்வளவு வலித்தாலும்… அவனை விட்டு இம்மியும் நகர வில்லை மிளிர்மதி… தன் கணவனின் சிகையை ஒரு கை பற்றி இருக்க மற்றொரு கையோ அவனது சட்டையை கசக்கி பிழிந்து கொண்டிருந்தது… இதுவரை இல்லாத நெருக்கம் .. வன்மை…காதல்… காமம் என்று அனைத்தும் இன்று சற்று அதிகமாவே இருந்தது…

அவள் இரு உதடுகளும் சிவந்து விட .. ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு விட இயலாது அவள் திணற… அதன் பின்னே தன்னிலை அடைந்தவன் அவளை விட்டு பிரிந்து நின்றான்…

அவளது சிவந்த உதடுகளை பார்த்தவன் தன் சிகையை அழுந்த கோதி…  மதி மா என்று அவள் கன்னங்களை கையில் ஏந்தியவன் .. ரொம்ப கஷ்ட படுத்திட்டேனா டி…என்று தவிப்பாக கேட்க…

இல்லை என்று தலை ஆட்டியவள் .. இந்த ஒரு முத்தத்திலையே உங்களை நான் எவ்வளோ கஷ்ட படுத்தி இருக்கேனு தெரிஞ்சுகிட்டேன் ஆது…

ஹேய்… அதெல்லாம் இல்லை… எனக்கு என்ன கஷ்டம்… அது ஒன்னும் இல்லை டி… உனக்கு குளிக்க வச்சு ட்ரெஸ் மாத்தி விட்டேன்.. நீ வேற உதட்டை சுழிச்சு அழகா பேசுனியா… என்னனு தெரியலை சும்மா கிஸ் பண்ணி பார்ப்போம்னு தான் வந்தேன்… ஆனால் எப்பிடி இவ்வளோ டீப்பா போச்சுன்னு தெரியலை என்று அவளது சிவந்த செவ்விதழை வருடினான்…

பரவாயில்லை ஆது… இதெல்லாம் இனி பழகி தானே ஆகனும்… திருடி குடிச்ச பூனை திரும்ப வருமாம் என்று சிலேடையாக கூற..

இது என்ன டி புதுசா ஆது…எப்பவும் தர்சன்னு தானே கூப்பிடுவ

நான் என் புருஷனை என்ன வேணாலும் சொல்லி கூப்பிடுவேன்.. யாரு கேட்பா…

அதுசரி…

நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே…

என்ன டி புதுசா அனுமதி எல்லாம் கேட்குற…

அது ஒரு மாசம் அப்பறம் நம்ம பர்ஸ்ட் நைட் வைக்கலாம்னு முடிவு பண்ணி இருந்தோம்ல…

ஆமா அதுக்கு இப்போ என்ன டி..

இல்ல அத ஏன் நம்ம அதுக்கு முன்னாடியே எனக்கு கை சரி ஆகவும் வச்சுக்க கூடாது…

ஏன் முடிவை மாத்துன…

இல்ல ப்பா எவ்வளோ நாள் தான் உங்களை காக்க வைக்கிறது..

இங்க பாரு மதி… இன்னைக்கு ஏதோ ஒரு வேகத்துல கிஸ் பண்ணிட்டேன்.. அதுக்காக இந்த பர்ஸ்ட் நைட்டுக்காக தவம் இருக்கல… பொறுமையா நடக்கட்டும்….

ஓஹோ…

அப்போ இன்னும் எத்தனை மாசம் ஆனாலும் காத்துட்டு இருப்பீங்களோ…

நீ கடைசி வரைக்கும் வேணாம்னு சொன்னாலும் பரவாயில்லை…

கண்கள் கலங்கி விட்டது மதிக்கு.. என் கூட வாழனும்னு உங்களுக்கு ஆசையே இல்லையாங்க…

இப்போ ஒரு பெரிய கேஸ் நடக்க போகுது… என் கவனம் எல்லாம் அதுல மட்டும் தான் இருக்கும் மதி..

நினைச்சேன்.. அதுக்கு தான் அப்போவே சொன்னேன்.. இந்த போலீஸ்காரன் மிலிட்டரி காரன் எல்லாம் வேணாம்னு… கேட்டாரா எங்க அப்பா… கட்டுனா இவரை தான் கட்டணும்னு பிடிவாதம் பிடிச்சாரு…

ஓஹோ… அப்போ உங்க அப்பா சொல்லி தான் என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டியா…

ஆமா அதுக்கு இப்போ என்ன..கோபத்தில் அவளும் வார்த்தையை விட..

அப்போ கிளம்பு உங்க அப்பா வீட்டுக்கே போ டி… யாரு வேணாம்னு சொன்னது என்று கூறிய மறு நிமிடம் தன் ஐவிரல்களையும் அவன் கன்னத்தில் பதித்திருந்தாள் மிளிர்மதி….தன் மனைவியை அதிர்ந்து பார்த்தவன் அடக்க முடியாத கோபத்துடன் அறையில் இருந்து வெளியேறினான் ஆதர்சன்…

திருமணத்திற்கு பின்பு வரும் முதல் ஊடல்…. அவன் பேசிய வார்த்தைகளில் மிளிர்மதி உடைந்து போக… அங்கோ ஆடவன் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்தான்…

அவனுக்கு மட்டும் ஆசையா என்ன… தன் ஆசை மனைவியை தன் சொற்களால் வதைத்து விட்டு … தனிமையில் கண் கலங்கி நின்றான்…

தற்போது வர போகும் மாநாட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்க கூடும்… தன் உயிர் போனால் கூட ஆச்சரிய படுத்துவதற்கு இல்லை…. அதன் பின் மிளிர்மதியை அப்படியே விட முடியாதல்லவா… அவள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும் என்று அவளிடம் இருந்து இந்த சிறிது காலம் தனித்து இருக்க முடிவு செய்து இருந்தான்…

ஒருவேளை மாநாட்டில் இருந்து தப்பி வந்து விட்டால் அவள் கை கால்களில் விழுந்தாவது உண்மையை எடுத்து கூறி வாழ்க்கையை நடத்த முடிவு செய்து இருந்தான்… மனம் ரணமாக வலித்தது… ஐயோ கை வேற அடிபட்டு இருந்துச்சே..என்ன செய்யுறானு தெரிலையே என்று நினைத்து கொண்டு திரும்ப…

அடிபட்ட கையில் வலியை பொறுத்து கொண்டு துணிகள் அடங்கிய பையுடன் நின்று கொண்டிருந்தாள் மிளிர்மதி…. ஆதர்சனுக்கு மூச்சே நின்று விட்டது…

******

அவள் காதுகளை அவளாலேயே நம்ப முடியவில்லை…  எது பொண்டாட்டியா ஆக போறேனா என்று வாயை பிளந்து அவனை பார்த்தாள்…

ஆனால்….

என்ன ஆனால்…

என் பொண்டாட்டி ஆகுறதுக்கும் சில தகுதி வேணும்… என்று அவளை கூர்ந்து பார்த்து கொண்டே கூற..

என்ன தகுதி…. என்று அமிர்தா மெல்லிய குரலில் கேட்க.. மனசாட்சி அவளுக்கு மணி அடித்தது… ஏதோ ஏடா கூடமா சொல்ல போறான் அமிர்தா… தப்பிச்சுக்கோ …

அதெல்லாம் எனக்கு தெரியும் நீ உள்ளே போ என்று அடக்கி வைத்தாள்…

காலையில நான் எந்திரிச்சத்துல இருந்து நைட் நான் தூங்குற வரைக்கு என் கூட தான் இருக்கனும்…

கசக்குமா என்ன… உடனே தலையை வேகமாக ஆட்டினாள் அமிர்தா …

இன்னும் நான் முழுசா சொல்லி முடிக்கலை….

ம்ம்ம் சொல்லுங்க… என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டு கேட்க..

நான் எப்போ தூங்குறேனோ அப்போ தான் நீயும் தூங்கனும்… நான் என்ன வேலை செய்யிறேனோ அதை நீயும் செய்யனும்.. என் வேலை செய்யும்போது நீ உன்னோட தனிபட்ட வேலைக்கு போக கூடாது…

அப்போ பாத்ரூம் வந்தா… யோசிக்காமல் கேட்டு விட்டு நாக்கை கடித்து கொண்டாள்…

அவன் பார்த்த பார்வையில் கப்சிப் என்ற வாயை மூடி கொண்டு… இப்போ போன்னு சொல்லுறானா இல்ல போகாதனு சொல்லுறானா.. ஒன்னும் புரியலையே… நம்ம தான் இந்த கண்ண பார்த்தாலே பிளாட் ஆகிடுறோம்…

இப்போ உடனே இந்த ஈர ட்ரெஸ்ஸ மாத்திட்டு வா வேலை இருக்கு.. என்று விரு விரு வென வெளியேறினான் சாம்பல் விழியான்…

அவன் சென்ற பிறகே நிம்மதியாக மூச்சு விட முடிந்தது அவளுக்கு… உலகத்துல யாருக்குமே நடக்காதது தான் எனக்கு நடக்குது… தீவிரவாதி கிட்ட மாட்டிக்கிட்டேன்னு வருத்த படுறதா… இல்ல அவனையே லவ் பண்ணி இனி அவன் கூடவே இருக்க போறேன்னு சந்தோஷ படுறதா…. நாம் ஆள் வர சொல்லிட்டான் சீக்கிரம் போவோம் என்று தன் கை வலியையையும் பொருட்படுத்தாது கிளம்பி கொண்டிருந்தாள்…

குடிலை விட்டு வெளியே வந்தவனின் மனம் ஒரு நிலையில் இல்லை… காதலை சொன்ன கணமே கோபம் தலைக்கேற அவளை ஆற்றில் வீசியவன்…. தன் தலையை அழுந்த கோதி தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு…மறுகணமே அவனும் குதித்திருந்தான்…

நீச்சல் தெரியாத காரணத்தினால் போட்ட கணமே அவள் கீழ் நோக்கி செல்ல .. உள்ளே குதித்த சாம்பல் விழியான்…அவளை கவர்ந்த அவனது விழிகளால் தேடி ஆழத்திற்கு போக… அங்கு அமிர்தாவை பார்த்து வேகமாக  கீழே சென்று அவளை தூக்கி கொண்டு மேலே வந்தான்…

அன்று காற்றின் வேகம் கம்மியாக இருந்ததால் தண்ணீரும் சற்று  மிதமாகவே சென்றது..

அதனால் அவளை சுலபமாக மேலே அழைத்து வர முடிந்தது… மேலே உள்ள கரையில் போட்டு…எப்போதும் போல் அவள் வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியே எடுத்தவுடன் அவளுக்கு முழிப்பு தட்டி விட… ஆனால் கண் விழிக்காமல் பாசாங்கு செய்து கொண்டிருந்தாள் அமிர்தா….

அமிர்தா அடுத்து உன் ஆளு உன்ன கிஸ் பண்ண போறான் டி என்று கற்பனை கோட்டை கட்ட… நான் ஒன்னும் அதுக்காக நடிக்கலை… என்ன தூக்கி உள்ள போட்டான்ல கொஞ்ச நேரமாச்சும் பயப்புடட்டும்… பதறட்டும் …

ஆனால் அவள் செவிகளில் விழுந்ததோ வேறு…

இப்போ  மட்டும் உன்  நடிப்பு நிறுத்திட்டு நீ எழுந்திறிக்கல…. அப்பறம் இதே ஆத்துல மறுபடியும் தூக்கி போட்டு செத்து போன்னு போயிடுவேன்.. என்று பல்லை கடித்து கொண்டு கத்தினான் சாம்பல் விழியன்..

அவ்வளவு தான்… அடித்து பிடித்து எழுந்து நின்றாள் அமிர்தா… குண்டடி பட்ட கைகள் அவளுக்கு வெகுவாக வலித்தது… இதை சொன்னால் கூட நம்ப மாட்டான் என்று அவள் நினைத்திருக்க…

அவள் முக சுருக்கத்தை வைத்தே அவள் வலியை அறிந்து கொண்டவன் முன்னால் நடக்க…அவனை பின் தொடர்ந்தாள் அமிர்தா…

சட்டென்று அவன் நிற்க… இதை எதிர்பாராதவள் அவன் மீதே மோதி நிற்க .. அவளை அப்படியே கைகளில் அள்ளி கொண்டு அவர்களது குடிலை நோக்கி சென்றான்…

சரியாக குடில் அருகில் வரும் பொழுது.. எனக்கு தெரியும் எனக்கு கை வலி.. கால்ல செருப்பு கூட போடலை… அதான் எனக்கு வலிக்க கூடாதுன்னு தூக்கிட்டு போறீங்க… என்று கேட்ட மறு நிமிடம் அவளை அப்படியே கீழே விட…

பொத் தென்று தரையில் கிடந்தாள் அமிர்தா… ஐயோ அம்மா என் இடுப்பு… என்று பிடித்து கொண்டு கத்த…அவனோ எதையும் கண்டு கொள்ளாது உள்ளே சென்று விட்டான்… பின் அவள் அலறலை கேட்டு அங்குள்ளவர்கள் தான் அவளை தூக்கி கொண்டு குடிலுக்குள் விட்டு வலி மருந்தையும் தூக்கத்திற்கு மாத்திரையும் கொடுத்து விட்டு சென்றனர்… ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள் அமிர்தா… எழுந்தவளுக்கு ஆற்றில் போட்டது மட்டுமே நினைவில் இருந்தது…

நான் ரெடி என்று ஒரு சட்டை பேண்ட்டை போட்டு கொண்டு வெளியே வந்தாள் அமிர்தா….

அதே நேரம்… ரெடி சார்… இந்த மாசம் 12 தேதி காலை 7.00 மணிக்கு இங்க இருந்து கிளம்புது சார்… ஏழு நாள் பயணம் …

அப்போ கப்பல் கிளம்ப இன்னும் எவ்வளோ நாள் இருக்கு…

சரியா எட்டு நாள் இருக்கு சார்…

எல்லாம் செக் பண்ணிட்டிங்களா..

Everything is fine sir..

பாய் 12 th மார்னிங் 7.00 am என்று அவனுக்கு தகவல் வர…

I AM WAITING என்று பதில் அனுப்பினான் சாம்பல் விழியான்

சனா💕

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்