Loading

                               

 

ஓய் ….

 

செல்லகுட்டி என்ன நீங்க தூங்காம இவ்ளோ நேரம் எனக்கு மெசேஜ் பண்றீங்க அம்மா இல்லையா என்று நாதன் ஆச்சரியமாக கேட்க….

 

அவனது தேவதையான சக்தி…..

 

ஆமா செல்லம்  இன்னிக்கி அம்மா டிவி பார்த்துகிட்டு இருக்காங்க நான் ரூம்ல இருக்கேன் அதனால தான் உன்கிட்ட மெசேஜ் பண்றேன் உனக்கு வேணாம்னு சொல்லு போயிடுறேன் என்று அவனை செல்லமாக மிரட்ட…

 

அடி போடி நீ பேசுறது ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தடவை போயிட்டா நான் என்ன பண்ணுவேன் சொல்லு….

 

தெரியுது இல்ல அப்போ ஒழுங்கா பேசு சரி இன்னிக்கு என்ன பேசலாம் டாபிக் நீ சொல்லு என்று கேட்க…

 

அடிப்பாவி ராட்சசி நம்ம என்ன குரூப் ஸ்டடி ஆப் பண்ண போறோம் லவ் பண்றோம் டி  கொஞ்சம் ஏதாச்சு பீலிங்கா பேசுடி என்று அவன் கெஞ்ச….

 

அதான் சொல்றேன்ல எனக்கு அவ்வளவா லவ் பத்தி ஒன்னு தெரியாது உலக அதிசயம் நீ எல்லாம் லவ் பண்ணவே. னு  நினைச்சு கூட பாக்கல சரி நீயே பேசு என்று அவள் சொல்ல….

 

ஓகே நம்ம ரொமான்ஸ் பண்ணலாமா என்று கெஞ்சலாக கேட்க…

 

உனக்கு இது விட்டா வேற என்ன டாபிக் இருக்கு….

 

நீயே சொல்லு லைஃப் பத்தி பேசுவோம்  என்கிட்ட கேள்வி கேளு அதை விட்டுட்டு எப்ப பார்த்தாலும் ரொமான்ஸ் ரொமான்ஸ் போடா லூசு…

 

என்னடி பண்றது நீ பக்கத்துல இருந்தாலும் பரவாயில்லை நீ சென்னையில இருக்க

 

நானும் உடுமலையில் இருக்கேன் என்ன  பண்றது சொல்லு நான் ஊர்க்காரன் கருவாயன் என்னை எப்படி தான் உனக்கு பிடிச்சது என்று எப்போதும் பாடும் பழைய புராணத்தை பாட ஆரம்பித்து விட்டான்…‌

 

அடக்கடவுளே மறுபடி ஆரம்பிச்சுட்டியா அழகு எல்லாம் ஒரு மேட்டரே இல்ல இதேல்லாம் ஒரு விஷயமே இல்லை எனக்கு நீ உனக்கு நான் மனசார பிடிச்சிருக்கு அப்புறம் என்ன லூசு உன்னை ஏன் புடிச்சது எனக்கே தெரியல நீ பேச ஆரம்பித்து பத்தாவது நாள் உன்னை நேசிக்க ஆரம்பிச்சேன் உன் வாயால நீ சொல்லுவனு நான் எதிர் பார்த்தேன் ….

 

ஆனா மாமா நீ ஒரு மாசத்துக்கு என்ன காய வச்சிட்ட கடைசியா நானே கேட்டேன் உன் மனசுல என்ன இருக்குன்னு அப்பதான் சொன்ன நம்ம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேடி பையா நீ……

 

ஆமாண்டி முதல்ல உன்னோட பெயர் தான் என் மனசை ஏதோ பண்ணுச்சு சக்தி என்னோட மனசுல இருக்கிற சக்தி நீ தான் தோணுச்சு என ஆள போகின்ற சக்தியும் நீ தான் தோணுச்சு அதனால தான் உன்கிட்ட பேச ஆரம்பிச்ச பேசப்பேச உன்னுடைய குணமும் தெரிஞ்சது என் மனசையும் கொள்ளை அடிச்சுட்ட….

 

போதும் மாமா சும்மா என்ன பத்தி பேசாத உனக்கு மட்டும் என்ன குறை நான் இதுவரைக்கும் யாரும் விரும்புவதில்லை இனி விரும்பவும் போறதில்ல எப்படி தான் உன்னை எனக்கு பிடிச்சிருக்கு தெரியல உன்னோட பார்வையா உன்னோட காதலா என்னனு எனக்கு தெரியல சொல்லு….

 

எல்லாம் கடவுளோட விதிதான்  எங்கே இருக்கிற நம்ம சேர்வதற்கான கடவுள் உதவி செஞ்சிருக்கார் தேங்க்யூ காட் என்று பெருமையாக நாதன் சொல்லிக் கொண்டிருந்தான்…

 

ஆமா மாமா  நம்முடைய பேரும் ஒரே மாதிரி இருக்கு நீ நாதன் சிவனோட பெயர் நான் சக்தி பார்வதி பெயர் சிவன் சக்தி சூப்பர்ல…

 

ஆமாண்டி நீ என்னுடைய சக்தி தான் என்னோட உயிர் நீதான் என் அம்மாவுக்கு அடுத்தது உன்ன தான் பாக்குறேன் ..

உன் மடியில் தூங்க ஆசையா இருக்கு மடிய விட உன் மேல சாஞ்சு தூங்கனும் உன்னை இறுக்கி புடிக்கணும் என்ன நீ நல்லா தலையை வருடி விட்டு தூங்க வைக்கணும் இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் செய்வில எனக்கு…

 

 உனக்கு இதெல்லாம் பண்ணாம வேற யாருக்கு பண்ண போற சொல்லுடா மாமா என்று சக்தியும் தனது மனதில் இருப்பதைச் சொல்ல….

 

இப்படி இரண்டு மணி நேரமாக தங்களின் உரையாடலை வளர்த்துக் கொண்டே சென்றனர் அப்போது கடிகாரத்தை பார்த்த சக்தி திடீரென்று….

 

Happy 3rd Month Anniversary My Dear மாமா

குறுஞ்செய்தி அனுப்ப அவன் ஆடி போய் விட்டான் அடிப்பாவி இதுக்கு தான் இவ்ளோ நேரம் தூங்காம பேச்சு கொடுத்து இருந்தியா….

 

அவள் எந்த ஒரு குறுஞ்செய்தியும் அனுப்பவில்லை ஒரு கவிதை மட்டும் அனுப்பினாள்…

 

என் வாழ்க்கையில் என்னையே மறந்து அதிகளவு நேசம் வைத்த ஜீவன் என்றால் அது நீ மட்டும் தான்!!!!!

 

அந்தக் கவிதையை கண்டவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக பதிலுக்கு ஒரு கதல் கவிதை அனுப்ப அவனால் முடியவில்லை எனக்கு அழுகை வருகிறது சக்தி என்று சொல்ல…

 

டேய் லூசு இதுக்காகவா உனக்கு பன்னெண்டு மணிக்கு மெசேஜ் அனுப்புனா நம்ம  சந்தோஷமா இருக்கணும் நம்ம எவ்வளவு சண்டை போட்டிருக்கலாம் பிரச்சினை வந்து இருக்கலாம் நான் அழுது இருக்கலாம் நீ அழுது இருக்கலாம் ஆனா இந்த நாள் ரொம்ப முக்கியமான நாள் ஞாபகம் வச்சுக்கோ இது நம்முடைய நூறாவது நாள் விழா….

 

சரிடி நான் அழ மாட்டேன் ஆனா எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு என்ன பண்றது என்று கேட்க….

 

அடி வாங்குவ ஒழுங்கா ஊர்ல பத்திரமா இரு சரியா நாளைக்கு வேலைக்கு போ..

நான் காலேஜுக்கு போகணும் நாளைக்கு பரிட்சை இருக்கு தெரியுமா…

 

சரி நீ தூங்கு மணி இப்ப பன்னிரண்டரை காலை சீக்கிரம் எந்திரிச்சு நீ காலேஜிக்கு போனா நான்  ஆபீஸ்க்கு போனோம் குட் நைட் என்று போனை அணைத்து விட்டு உறங்கி விட்டான்….

 

மறுநாள் காலை சக்தி சீக்கிரமாக எழுந்து விட்டு கல்லூரிக்கு சென்றாள் தனது பரிட்சை சிறப்பாக எழுதி முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பும் வேலை வீட்டில் யாரும் இல்லை

 

அம்மாவுக்கு கால் செய்து பார்க்க நாங்க சித்தி வீட்டுக்குப் போய் இருக்கோம் நீ சாப்டு வீட்டிலேயே இரு நாங்க நாளைக்கு காலையில சீக்கிரமா வந்துரும் சரியா சாரி செல்லம் உன் கிட்ட சொல்ல மறந்துட்டேன் என்று அவள் அம்மா சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டார்….‌

 

அடக்கடவுளே வீட்ல யாருமே இல்ல தனியா நான் என்ன பண்ணுவேன் ஏதோ எனக்கு கொஞ்சம் சமையல் தெரியும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் இன்னைக்கு நைட் மட்டும் தானே மணியை பார்க்க மணி 2 என காட்டியது சரி டிவி பார்ப்போம் இல்லை இல்லை நான் அவனுக்கு கால் செய்து பேசுவோம் கொஞ்சம் நேரம் நன்றாக இருக்கும் என்று

 

அவனுக்கு போன் செய்ய மொபைல் சுவிட்ச் ஆஃப் ஸ்விட்ச் ஆஃப் என்று சொல்லியது அவளுக்கு கோபம் தலைக்கு ஏறியது….

 

இன்று நான் கால் செய்வேன் என்று அவனுக்கு தெரியாதா நான் மெசேஜ் செய்யும் போது ஏதாவது வேலைக்கு சென்று விடுவது என்று கோபப் படக்கூடாது என்று நினைத்தாள் முதலில் அவளுக்கு கோபம் அவன் மீது சுத்தமாக வராது என்று என்னவோ அவன் அழைப்பை ஏற்கவில்லை என்ற உடன் மனம் துடிதுடித்தது…

 

ஒரு மணி நேரமாக கால் செய்து கொண்டுதான் இருக்கிறாள் ஆனால் அவன் அழைப்பை ஏற்பதாக இல்லை என்ற பதில் மட்டுமே கிடைத்தது இன்றைய பொழுது அம்பேல் என்று மனம் வருத்தத்துடன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள் அப்போது காலிங் பெல் சத்தம் கேட்க யாரென்று வெளியே பார்க்க யாரும் இல்லை வெளியே வரை சென்று யார் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள் யாரும் இல்லை வீட்டிற்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்….

 

 

அமைதியாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவளது அறையில் ஏதோ சத்தம் கேட்க யாராக இருக்கும் இந்த நேரத்தில் என்று மனதில் பயத்துடன் அறைக்கதவை திறக்க அவள் தோழி அர்ச்சனா நின்று சிரித்துக் கொண்டிருந்தாள்…

 

அடிப்பாவி எருமமாடு வந்தா ஒழுங்கா வரமாட்ட இப்படி திருட்டு தனமா ரூம்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்க ஆமா எப்படி நீ உள்ள வந்த என்று கேட்க நீ வெளியே யாருன்னு பார்த்தா நான் படிக்கட்டு வழியே  இருந்த ஒரு ரூமுக்கு போயிட்டேன்

 

எதுக்கு ரூமுக்கு வந்த என்று ரூமை சுற்றி பார்க்க ஒரே அலங்காரமாக இருந்தது அறை….

 

எதுக்கு இந்த ரூமை இப்படி அலங்காரம் பண்ணி வச்சிருக்க இன்னிக்கு என்னோட பர்த்டே கூட கிடையாது எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பண்ற என்று அர்ச்சனாவிடம் சந்தேகமாக கேட்க….

 

அவ கிட்ட கேட்டா எப்படி சொல்லுவா  என் கிட்ட கேளடி செல்லம் என்று ஒரு ஆணின் குரல் கேட்க திரும்பி பார்க்க அதிர்ந்து போய் நின்றாள்…

 

மூன்று மாத காலமாக தொலை தூரத்தில் இருந்தே செல்போன் உதவி மூலம் தன் காதலை வளர்த்துக் கொண்டே இருந்த தன்னுடைய நாதன் அவளின் எதிரே…

 

கண்களில் கண்ணீர் அவளை மீறி வந்தது அதை கீழே சிந்த விடாமல் தன் கை களைத் தாங்கி என்ன சொல்லிட்டு நீங்க மட்டும் அழுகுறிங்க  என்று அவன் கேட்க….

 

அவள் செல்லமாக அவனை அடித்து விட்டு என் கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல தோணவில்லை எப்போ மெட்ராஸுக்கு வந்த என்று கேட்க

 

நான் ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்துட்டேன் எனக்கு தெரியாதா என்னுடைய நூறாவது நாள கொண்டாட  உன்கிட்ட நான் எதுவும் சொல்லல

 

உனக்கு சப்ரைஸ் பண்ணத்தான் ஏதாச்சு ஏற்பாடு பண்ண பார்த்தேன் இன்னைக்கு உங்க வீட்ல யாரும் இல்ல ன்னு கேள்விப்பட்ட அதான் நானும் உன் தோழி அர்ச்சனா எனக்கு உதவி பண்ணா….

 

தனது தோழியை ஓரமாக ஒரு முறை பார்வை பார்த்து விட்டு சரி சரி உங்களுக்கு உள்ள கரடி மாதிரி நான் எதுக்கு நான் போறேன் என்று சொல்ல ..

நாதன்”..

  இல்லை இல்ல வீட்ல எப்படி நாங்க இப்ப தனியா அது தப்பு நாம மூணு பேரும் வெளியே போலாம் வாங்க கொஞ்ச நேரம் உங்க கூட இருக்க ..

அப்றம் நான் ஊருக்கு கிளம்ப போறேன் என்று சொல்லி விட்டான்….

 

அன்றைய மாலை முழுக்க சக்திக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தான் அவருடன் மூன்று மணி நேரம் கழித்தே தெரியாமல் இருந்தாள் பிறகு தனது தோழி அர்ச்சனாவின் வீட்டில் முன் அவளை இறக்கிவிட்டு இருவர் மட்டும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர்…..

 

அப்புறம் சொல்லுங்க மேடம் இன்னிக்கு நாள் எப்படி போச்சு என்ன மாதிரி போச்சு உங்க பேபி உங்க முன்னாடி தான் நிக்குறேன் எனக்கு எதுவுமே தரலை என்று செல்லமாக அவளிடம் கேட்க….

 

எதுவா இருந்தாலும் அப்புறம்  தருவ இப்ப நான் எதுவும் பண்ண மாட்டேன் ஏன்னா நாம ஒன்னு சட்டப்படி கணவன் மனைவியை ஆகணும் சரியா என்று சொல்ல…..

 

அவள் தலையில் நறுக்கென்று ஒரு கொட்டு கொட்டி நான் செல்லமாக கேட்டா எதுவும் தப்பு இல்லை நான் தப்பா எதுவும் கேட்கமாட்டேன் உன்கிட்ட ஒன்னு சொல்லவா இப்ப கூட எனக்கு டைம் இருக்கும் உன் கூட யாருமே இல்ல ஆனா உங்க போர்ஸ் பண்ணி நான் எதுவும் பண்ண விரும்பலை….

 

அப்படி ஒன்னும் வற்புறுத்தி என் ஆசையை தீர்த்துக் கிட்ட எனக்கும் மிருகங்களுக்கும் வித்தியாசமே இல்லை மத்தவங்களும் நானும் ஒன்னு கிடையாது நான் கொஞ்சம் ஸ்பெஷல் என் தேவதைக்காக மட்டும் எத்தனை காலமும் காத்துகிட்டு இருப்பேன்….

 

அவன் தோள்பட்டையில் சாய்ந்தவாறு அவர்களுக்கு பிடித்த ஒரு டூயட் பாடலை கேட்டுக் கொண்டே இருந்தனர்….

 

கண்ணாலதான் கையாலதான் கலந்துகிட்டா சொர்கம்

நானிருந்தேன் சும்மா வாசலிலே மாட்டிகிட்டேன் இப்போ வம்பினிலே

நானே மருதாணி பூசவா ஹோ

நீயே அடையாளம் போடவா

 

‘’மல்லிக மொட்டு மனச தொட்டு இழுக்குதடி மானே’’

‘’வளையல் மெட்டு வயச தொட்டு வளைக்குதடி மீனே’’….

 

இந்தப் பாடல் கொஞ்சம் பழைய பாடலாக இருந்தாலும் இருவருக்கும் அது உயிர் இருவருக்கும் மிகவும் பிடித்த பாடல் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கும்போது இந்த பாடலைத்தான் பாடிக் கொண்டு இருப்பார்கள்….

 

சிறிது நேரத்தில் அவள் இல்லம் வர அவள் கரம் பிடித்து அமர வைத்து கொஞ்ச நாள் வெயிட் பண்ணு கூடிய சீக்கிரம் எனக்கு பிடிச்ச வேலையில ஜாயின் பண்ண பிறகு சீக்கிரமா உன்ன கூட்டிட்டு போற அதுவரைக்கும் பொறுமை உன்னோட படிப்பு முக்கியம் என்னோட கேரியர் எனக்கு முக்கியம் சரியா யாருக்கும் எந்த தப்பும் பண்ண கூடாது நம்ம நம்ம மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் வாழனும் சரியா….

 

அவள் அவன் நெற்றியில் ஒரு முத்தத்தில் அனைத்திற்கும் பதில் சொல்லிவிட்டு அவனை பார்த்து கொண்டு  அவள் வீட்டிற்குச் சென்று விட்டாள் அவன் ஊருக்குப் புறப்பட்டான்….

 

கட்டிலில் படுத்துக் கொண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீரோடு தன் தன்னவனை நினைத்து பெருமை கொண்டாள்…

 

இதுவே மற்றவன் ஆக இருந்தால் இந்நேரம் தனது வெறிகொண்ட ஆசையை தீர்த்து விட்டு விலகி சென்று இருப்பான் ஆனால் இவனோ சற்று வித்தியாசமானவர் நல்லவன் அதனால்தான் இவ்வளவு காதல்….

 

இவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை தேகட்ட  வைக்கிறது….

 

காதலே அழகு அது யாருக்கும் மனசாட்சி விரோதம் துரோகம் செய்யாமல் தன்னுடைய காதலை மேம்படுத்த மன அளவிலும் உடல் அளவிலும் போராடிக்கொண்டிருக்கும் இப்படிப்பட்ட காதலர்கள் குடும்பத்திற்கு நிச்சயம் நற்பெயரை மட்டுமே கொடுப்பார்கள்….

 

இவர்களின் நூறாவது நாள் கொண்டாட்டம் இனிமையாக முடிந்தது அடுத்த நூறு ஆண்டு காலம் இது போலவே இவர்கள் வாழ வேண்டும்…..

 

நன்றி 🙏

 

இப்படிக்கு….

 

நாதனின் ஆருயிர்……

 

 

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்